Friday, November 30, 2012

தீக்குச்சியை கிழித்தால் நெருப்பு வரும்......... அத வச்சு வேறென்னத்த கிழிக்க முடியும் அப்படின்னு இனிமேலும் கேட்கமாட்டீங்க!!

நாம் தினமும் நெருப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளை பயன்படுத்தினாலும், [நகர்புற ஜனங்க அடுப்பு பற்ற வைக்க லைட்டரை உபயோகிக்கலாம்!!] அதில் ஒன்னும் பெருசா கலைநயத்தை பார்ப்பதில்லை.  ஆனால், சிலர் அதிலும் வியத்தகு கைவினைப் பொருட்களை உருவாக்க முடியும் என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.  அவர்கள் உருவாக்கிய சில வடிவங்களைத்தான் நாம் இன்னைக்கு பார்க்கப் போறோம்,  அந்த வடிவங்கள் நம்மை ஆச்சரியத்தில் பிரமிக்கச் செய்கின்றன!!

இதில் முதலில் வருபவர் திரு.பேட்ரிக் ஆக்டன் [Patrick Acton, 59] அவர்கள். இவர் ஒரு வட அமரிக்கர்.  1977 ஆம் ஆண்டு ஒரு பொழுதுபோக்காக தீக்குச்சிகளில் சிற்பங்களை வடிக்கும் கலையில் ஈடுபட்ட இவர் 35 ஆண்டுகளாக  அதைத் தொடர்கிறார்.  ஆரம்பத்தில் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள கடைகளில் தீப்பெட்டிகளை வாங்கிவந்து அதன் நுனியில் உள்ள மருந்தை நீக்கிவிட்டு அதில் வடிவங்களை உருவாக்கினாராம்.  பின்னர் யாரோ ஒரு வியாபாரி இவருக்கு மருந்துகள் தடவப் படாத வெறும் குச்சிகளை மட்டும் தேவையான அளவுக்கு வழங்க முன்வந்திருக்கிறார்.  ஆரம்பத்தில் தனது சிற்பங்கள் நேர்த்தியாக வர பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் கோந்து, craft கத்தி, உப்பு காகிதம் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கிறார். இவரது சமீபத்திய சாதனை பாரிஸ் நகரில் அமைந்துள்ள பழமையான கட்டிடக் கலைக்குப் பெயர் பெற்ற நோட்ரே டேம் [Notre Dame] தேவாலயத்தின் மாதிரியாகும்.


7.5 அடி நீளமும் 5 அடி உயரமும் உள்ள இந்த தேவாலயத்தின் மாதிரியை உருவாக்க, 2,98,000 [தோராயமாக மூன்று லட்சம்] தீக்குச்சிகளையும், 55 லிட்டர் மரத்தை ஒட்டும் பிசினையும்,   2000 பல்குத்தும் குச்சிகளையும் பேட்ரிக் ஆக்டன் பயன்படுத்தினாராம்.  ஒவ்வொரு குச்சியையும் சிரத்தையோடு அடுக்கி உண்மையான கட்டிடத்தின் அத்தனை விபரங்களும், வடிவமும் இதில் வருமாறு உருவாக்கியுள்ளாராம். இதை உருவாக்க 2000 மணி நேரங்கள் பிடித்தனவாம்.  [இந்த நேரம் இதில் ஈடுபட்டது மட்டும், சாப்பாடு, தூங்கும் நேரமெல்லாம் கணக்கில் வராது!!].  இந்த மாதிரியின் நிஜக் கட்டிடம் கட்டி முடிக்க 180 வருடங்கள் ஆனது என்பது கூடுதல் தகவல்.

பேட்ரிக் ஆக்டன், பணியில் முமுரமாக ஈடுபட்டிருக்கிறார்  யாரையும் தனக்கு உதவிக்கு வைத்துக் கொள்வதில்லையாம் ஏனென்றால் இவரது கலை நயத்தோடு அவர்களால் பணியாற்ற முடியாது, அது இவரது ஆக்கத்தைப் பாதிக்கும் என்பதால்!!

இவர் இந்த வடிவமைப்பை உருவாக்கியது குறித்து அனைத்து தகவல்களும் அறிய

சுட்டி 1.

சுட்டி 2.


திரு.பேட்ரிக் ஆக்டனின் மற்றுமொரு படைப்பு, Minas Tirith என்னும் வரலாற்றுக் கற்பனைக் கோட்டை இதை முடிக்க மூன்று வருடங்கள், 4,20,000 தீக்குச்சிகள் பயன்படுத்தப் பட்டன.  
மேலதிகத் தகவல்களுக்கு சுட்டி. 


அடுத்து நாம் பார்க்க இருப்பவர் திரு.ரொனால்டு D ரெம்ஸ்பெர்க் [Ronald D. Remsberg].  இவர் ஒரு Aerospace எஞ்சினியர், பல விமான வடிவமைப்புகளை உருவாக்கியவர்  அதெல்லாம் போராடிக்கிறது, கிரியேடிவாக எதையாவது செய்யலாம் என்று தீக்குச்சி வடிவங்களுக்கு தாவியவர். உலக அதிசயங்கள் பலவற்றை இவர் தீக்குச்சிகளைக் கொண்டு செய்து காண்பித்திருக்கிறார்.










 திரு.ரொனால்டு D ரெம்ஸ்பெர்க் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு சுட்டி. 



உலகிலேயே தீக்குச்சிகளால் செய்யப்பட்ட மிகப்பெரிய ஈஃபில் டவர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இதை வடிவமைத்தவர் லெபனானைச் சேர்ந்த திரு.டோபிக் டேகர் [Tofic Daher], இவர் ஒரு மாற்று திறனாளி எனினும் திறமையான கைவினைஞர் [Craftsman ] என்பது குறிப்பிடத் தக்கது.  நான்கு வருடங்களில்  2,316 மணி நேரம் செலவழித்து இதை உருவாக்கி இருக்கிறார்.  இதன் உயரம் ஆறரை மேட்டர் அறுபது லட்சம் தேக்குச்சிகளைப் பயன்படுத்தி இதை செய்து முடித்திருக்கிறார்.   இதை அலங்கரிக்க 6,240 சிறிய விளக்குகளையும் 23 சிமிட்டும் விளக்குகளையும் போட்டிருக்கிறார். 5,50,000 ரூபாய் இதற்க்கு செலவானதாம். பெய்ரூட் நகரிலுள்ள சிடி மாலில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் இது பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப் பட்டதாம்.

இணையத்தில் என்னைக் கவர்ந்த தீக்குச்சி சிற்ப்பங்கள் சில:


The 600,000 matchstick model of the Hogwarts School of Witchcraft and Wizardry by Patrick Acton  is on permanent display at the museum The House of Katmandu in Majorca, Spain.

லண்டன் டவர் பிரிட்ஜ்

ஸ்பேஸ்  ஷட்டில்
 
இரயில் எஞ்சின்





Thursday, November 29, 2012

நம்ம படத்தை இப்படியெல்லாம் நோண்டுவானுங்கன்னு டைரக்டர் ஷங்கர் கனவிலும் நினைச்சு பார்த்திருக்க மாட்டார்!!

நண்பர்களே, "சொப்பனசுந்தரி வச்சிருந்த காரை இப்ப நாம வச்சிருக்கோம், அந்த சொப்பனசுந்தரிய யாரு வச்சிருக்காங்க" என்று கவுண்டமணி ஆராய்ச்சி செஞ்ச மாதிரி நாம இப்போ சமுதாயத்துக்கு ரொம்ப தேவையான ஆராய்ச்சி ஒன்றில் இறங்கப் போறோம்!!  நாமெல்லாம் சமூகத்துக்கே நம்மை அற்பணிச்சுகிட்ட  தியாகிகள்  தானே!!

டைரக்டர் ஷங்கர், சொல்லவே தேவையில்லை பிரமாண்டத்துக்கு பெயர் போனவர், [சொந்தப் பணமா என்ன?] வெற்றிப் பட இயக்குனர், எடுத்த படங்களில் ஒன்றைத் தவிர [Boys ] மற்றவை சூப்பர் டூப்பர் ஹிட். இவர் மற்ற இயக்குனர்கள் மாதிரி ஆங்கிலப் படங்களை காப்பியடிக்கிறவர் இல்லை, தன்னோட முந்தைய படங்களையே அப்படியும், இப்படியும் உல்டா பண்ணி எடுக்கிறதுக்கு போயி எதுக்கு காப்பியடிக்கணும்!!  [Boys மட்டும் விதிவிலக்கு, ஒரு நாள் ஏதோ ஒரு இங்கிலீஷ் படம் TV -யில கிளைமேக்ஸ் மட்டும் பார்க்க நேர்ந்தது, பார்த்தா சர்ச்சில் ஒரு கல்யாணப் பொண்ணு கடைசி நேரத்தில் மணமேடையில் இருந்து ஓடி வந்து ஒரு பையனை துரத்தும் சீன்,  இதை எங்கேயோ பார்த்திருக்கோமேடான்னு யோசிச்சேன், அப்புறமாத்தான் விளங்குச்சு, அடடா எவனோ ஒரு வெள்ளைக்கார பய ஷங்கரோட Boys படத்த சுட்டு பத்து வருஷத்துக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டான் என்று!!]

சரி அதெல்லாம் போகட்டும்.  எந்திரன் அப்படின்னு ஒரு படம், ஒரு பெண்ணை கதாநாயகனும், வில்லனும் காதலிக்கும், யாருமே எடுக்காத கதையை வைத்து ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி  எடுத்தாங்க.  இருவது  வருஷத்துக்கு முன்னாடி அமேரிக்கா காரன் எடுத்த கிராபிக்ஸை  அவன்கிட்டேயே  போயி காசு குடுத்து செய்யச் சொல்லி, இங்க வந்து ரிலீஸ் பண்ணி, நாங்க அமேரிக்கா காரனுக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்திட்டோம்னு பெருமைப்பட்டுக் கொண்ட படம் அது.  இதில் பயன்படுத்தப் பட்ட கேமரா, சும்மா சொல்லப் படாது மிகத் துல்லியமாக படங்களைப் பதிவாக்கக் கூடியது. படத்தை அப்படியே பார்த்துக் கொண்டு வரும்போது ஒரு காட்சியில் ரஜினியுடன் காதல் ரத்து செய்யும் ஐஸ்வர்யா ராய் ஒரு பத்திரத்தை எடுத்து வருவார், அதில் பல பக்கங்கள் இருக்கும். முதல் பக்கம் ஸ்டாம்ப் பேப்பர், பார்க்க அழகாய் பளிச்சென இருந்தது.  இது படத்தில் வினாடிக்கும் குறைவான நேரமே வரும்.  முன்பெல்லாம் அப்படி ஒரு பேப்பரை  படத்தில் காட்டினா அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், சட்டென காட்சி மாறுவதால் விரும்பினாலும் அதில என்ன இருக்குன்னு படிக்க முடியாது.  ஆனாலும் தொழில்நுட்பம் முன்னேறிடுச்சே, நாம சும்மா இருப்போமா!! அதில என்னதான் எழுதியிருக்கு படிக்கலாமேன்னு முயற்சி செய்தோம்.  அதில் பல அறிய பெரிய தகவல்கள் அடங்கியிருந்துச்சு.  இதோ நீங்களே பாருங்க!!


இதில்  அடங்கியிருக்கும் தகவல் பொக்கிஷங்கள் 

சனாவோட முழுப் பெயர்          :   சஞ்சனா
அப்பா பேரு                                    :    கிருஷ்ணகுமார்
முகவரி                                           :    Everest Apartments குடியிருப்பு,
                                                                     4 வது குறுக்குத் தெரு,
                                                                      Anna Nagar.

[ஐயா கண்ணுங்களா, இதெல்லாம் சினிமாவில் சும்மா கொடுத்தது, ஐஸ்வர்யா ராய் அங்கதான் இருப்பாங்கன்னு யாரும் அந்த அட்ரசைத் தேடி நேர்ல போயிடாதீங்க ராசா!!]

அடுத்து, ரஜினி, டாக்டர். வசீகரன் இவர் வசிப்பது பெசன்ட் நகரில்.  இவரது அக்கறையின்மையால் காதலை ரத்து செய்து அதை சட்டப் படி ஆவணமாக்கி பதிவு செய்யும் புதுமையான முயற்சியில் தான் சனா இறங்கி தோற்றுப் போய் காதல் வலையில் மீண்டும் விழுந்துவிட்டார்.

எப்பேற்பட்ட தகவல் இது,  ஐயா........  கீழே குனியாதீங்க.........   இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு, இதுக்கே கல்லைத் தூக்கினா எப்படி!!

அடுத்து காற்றில் அந்த பேப்பர் அசையுது, அடுத்த பக்கம், கீழே இருந்து படிப்படியாக மேலே தெரிகிறது.  அதில் என்னென்ன தகவல்கள் அடங்கியிருக்கு தெரியுமா?  அது தான் கொடுமையே, எவனோ வாடகை  வீட்டு சொந்தக்காரன் குடியிருப்பவரிடம் எழுதி வாங்கும்  சட்ட திட்டங்கள்!!  [Terms & Conditions].  படத்தில் இதெல்லாம் தெரியாது, ஆனால் நாம சும்மா விட்டுவிடுவோமா, உங்களுக்காக படம் பிடிச்சு காட்டுறோம்.  சும்மா பாருங்க!!

ஸ்டாம்ப் பேப்பருக்கு கீழே: வாடகைக்கு குடியிருப்பவர் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி தனி மீட்டர் கணக்குப் படி தண்ணீர் கட்டணம் செலுத்த வேண்டுமாம்!!






எல்லாம் பார்த்துட்டீங்களா, இது இன்றைய மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க உதவும் பதிவுதானே?  ஹேய்.......  ஹேய்.........  மிஸ்டர்.....நோ   பேட்  வேர்ட்ஸ்..............ஐயாம் டீசன்ட் பேமிலி யு நோ .  ............. ஐயையோ.........  காதில இரத்தம் வருது................  ஐயோ சாமி இதுக்கு மேல தாங்காது நான் எஸ்கேப்.....................!!

Wednesday, November 28, 2012

இந்தப் படங்களைப் பார்த்தா வேற மாதிரி தோணிச்சுன்னா, தப்பு பார்வையில்தான். [பெண்கள் Not allowed]!!

உங்கள் பார்வை எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு சின்ன டெஸ்ட்.  இங்கே சில படங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப் படும்.  சாதாரணமான, மரங்கள் பழங்கள், பாறைகள் ........ அம்புட்டுதேன்.  அதை பார்க்கும்போது மரங்கள் பழங்கள், பாறைகளாகவே உங்களுக்குத் தெரிய வேண்டும்.  அப்படின்னா நீங்க வெள்ளந்தி.  இல்ல வேற எதாச்சும் கசாமுசான்னு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோங்க உங்க பார்வையே மோசமானதுன்னு அர்த்தம்.  இதை நான் சொல்லலைங்க, எனக்கு மெயிலில் இதை அனுபிச்ச உகாண்டா காரன் சொல்றான்.  [நாம் தான் இன்டர்நேஷனல் ஆச்சே...!!].  அவன் அனுப்பியதை நானே இன்னமும் சோதிச்சுப் பார்க்கவில்லை, ஏன்னா நான் ரொம்ப பிசி.  [நிறைய ஆணி புடுங்குவேன்னு தான் உங்களுக்கே தெரியமே!!].  அதனால இங்க பதிவில ஏத்திட்டேன், நேரம் கிடைக்கும்போதுதான் பார்ப்பேன்.

இந்த பரிசோதனை ஆண்களுக்கு மட்டும்தான் என்பதால், பெண்கள் யாரும் பார்க்கக் கூடாதுன்னு இப்பவே எச்சரிக்கிறோம்.  ஏன்னா உங்க பார்வை  எப்போதும் நேர்மையானதாக இருப்பதால் உங்களுக்கு இது தேவையில்லை.  எனவே இதுக்கு மேல போக உங்களுக்கு அனுமதி கிடையாது.

அடுத்து இந்த விவசாயக் கல்லூரியில ஆசிரியரா வேலை பார்த்தவர்களுக்கு  இது வேலை செய்யாது, ஏன்னா அவங்க நிறைய மரங்கள், பாறைகள், பழங்கள் என்று பாத்து, பாத்து இருப்பதால அவங்களுக்கு வித்தியாசமா எதுவும் தெரியாது, அவங்களும் இதுக்கு மேல போக வேண்டாம்.

மற்ற நண்பர்களே, நானே இன்னமும் இதை பரிசோதிக்கவில்லை , ஆக்சுவலி, நான் ஒரே ஒரு படம் தான் பார்த்தேன், எனக்கு அதில ஒன்னும் வித்தியாசமா தெரியல. மரம் தான் தெரியுது.  அத மாட்டும் பார்த்திட்டு அப்பீட்டு ஆகிக்கோங்க.  முழுவதும் பரிசோதிச்சு உங்களுக்கு தகவல் சொல்றேன், அப்போ வந்தீங்கன்னாவே போதும்.

அப்புறம் நாங்கல்லாம் ரொம்ப நல்ல பிள்ளைகள் என்பவர்களும் இதற்க்கு மேல் போகவேண்டாம்.

:

: :

: :

: :

: :

: :

: :

:
 :
:

: :

:
:
:

:
 :
:

: :

:

எனக்கு வெறும் மரம் மட்டும்தான் தெரியுது, வேற என்ன இருக்கு இதில!! இலைகள் கூட கொட்டிப் போச்சு.....  ம்ம்......  ஒன்னும் விளங்கல!!


நான் பார்த்திட்டு சொன்னதுக்கப்புறம் இன்னொரு நாள் வந்து, இந்த பவர் பாயிண்டு  Presentation ஐப் பாருங்க, தொடர்ந்து கீழே உள்ள சில சுட்டிகளையும் பாருங்க.  உங்க பார்வை எப்படிப் பட்டதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!!  





 ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாடி இந்த சுட்டிகளையும் பார்த்திடுங்க!!

சுட்டி 1


சுட்டி 2


சுட்டி3

சுட்டி 4

சுட்டி 5

Tuesday, November 27, 2012

என்பதுகளில் எப்படி இருந்த திரை நட்சத்திரங்கள்.......இப்படி ஆயிட்டாங்களே!!.

மறைந்த மக்கள் திலகம் டாக்டர் MGR அவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.  திரையுலகினர் சும்மா விடுவார்களா.  பாராட்டு விழா நடத்திவிட்டனர்.  அந்த சமயத்தில் தொலைகாட்சி ஒளிபரப்புகள் அவ்வளவாக தமிழகத்தில் இல்லை, சென்னையில் மட்டுமே இருந்தது.  நம்மில் பலருக்கு இதைப் பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது.

கீழே அவற்றின் காணொளிகள் உள்ளன.  இன்றைய நட்சத்திரங்கள், அவர்களது குழந்தைகளின் தற்போதைய வயதில் தோன்றுகிறார்கள்.  பாரதிராஜாவும், பாக்கியராஜும் சின்ன பசங்க மாதிரி டி-சர்ட் போட்டுக் கொண்டு வருகிறார்கள், MGR-க்கு செல்லப் பிள்ளைகள் போல இருந்திருக்கிறார்கள்.  ஷோக்காக ரஜினியும் ஸ்ரீதேவியும் தோன்றுகிறார்கள்.  ரேவதி நளினி போன்றோர் மிகவும் ஸ்லிம்மாக அழகாக உள்ளனர்.  நடிகர் திலகம் ஆரோக்கியமாகவும், பிரபு உடம்பு கச்சிதமாகவும் உள்ளனர்.  இளையராஜா, மலேசியா வாசுதேவன் போன்றோர் கச்சேரி செய்கின்றனர்.

திரையுலக நட்சத்திரங்கள், டிரக்குகளில் மவுன்ட் ரோடில்  உலா வந்து புரட்சித் தலைவருக்கு வணக்கம் செலுத்திய படியே செல்கின்றனர், அதை அவர் கையசைத்து ஏற்கிறார்.

விழாவில் நடிகர் திலகம், சிவக்குமார், ஜெமினி, ஜெயசங்கர், டி .இராஜேந்தர், விஜயகுமார், விஜயகாந்த்  உட்பட பலர் பேசுகின்றனர், இறுதியில் புரட்சித் தலைவர் பேசுகிறார்.  தற்போது போல அந்த காலகட்டத்தில் முதலமைச்சர்களை நேரிலோ தொலைக்காட்சியிலோ காணும் வாய்ப்பு கிட்டாது.  [சென்னை விதிவிலக்கு].  MGR படங்களில் நிறைய தோன்றியிருந்தாலும் அரசியல் வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் ஆவணப் படங்கள் அதிகமில்லை. அந்த வகையில் இவை அறிய காணொளிகள் தான்.



திறந்த வண்டிகளில் நடிக நடிகைகள் ஊர்வலம்.  [யாரையும் விட்டுவைக்காம வண்டியில ஏத்திட்டாங்க!!].  இளையராஜா கச்சேரியும் உண்டு!!


தமிழ்த் தாய் வாழ்த்தோடு விழா துவங்குகிறது.  ரஜினி பாக்கியராஜ் [அப்போ அவருக்கும் முக்கியத் துவம் இருந்திருக்கு!] ஆளுயர மாலை போட, சிவாஜி புரட்சித் தலைவனை கட்டிப் பிடிக்க, பாரதிராஜா பேச்சைத் துவக்குகிறார். தொடர்ந்து நம்பியார், பாலசந்தர் பேசுகின்றனர்.  இதில் ஸ்ரீதேவி-ரஜினி என்னா ஷோக்காக்கீராங்கப்பா.....!!



இதில் படு இளமையான ஜெமினி பேசுகிறார், அவர் டாகடர் என்பதற்கு ஒரு விளக்கம் தர்றார் பாருங்க, எங்கேயோ போயிட்டாரு!!  கேட்டா செத்தீங்க!!  தொடர்ந்து விஜயகுமாரி, ஜெய்சங்கர், மனோரமா, விஜயகுமார், நளினி, நாகேஷ், சிவாக்குமார் [கவிதை நடையில் பேச்சு.....  சகிச்சுக்கணும்!!], ரேவதி [ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காங்க], வினுசக்ரவத்தி [ஹா..ஹா..ஹா....],  விஜயகாந்த் [ஆனா கட் பண்ணிட்டாங்கப்பா!!], ஏவிஎம் சரவணன், பிரபு [அப்பா சிவாஜி, பெரியப்பா எம்ஜியார் என அன்போடு அழைக்கிறார்!!]



இதில் தான் ஹிட்டே!!  T . இராஜேந்தர் வெளுத்துக் கட்டுகிறார்!!  ...... தொடர்ந்து அழகான ஸ்ரீதேவி, ரஜினி [நடிகனுக்கு பெண்ணையே  குடுக்க மாட்டாங்க ஆனா எம்ஜியாருக்கு நாட்டையே குடுத்திருக்காங்க.... அப்படியே பேச்சு ஆங்கிலத்தில் போகுது],  அடுத்து கமலஹாசன் [என்னத்த சொல்ல], அப்புறம் பாக்கியராஜ்.  [ஐயோ சாமி........  ஆளை விடுங்கடா ...] 



இதில் சிவாஜி பேசுகிறார்.  [செத்தீங்கடா மவனுங்களா.......!!]  இறுதியில் புரட்சி தலைவன் பேசுகிறார்.  கேளுங்க, நான் சஸ்பென்சை உடைக்கக் கூடாது!!






இதில் பாடகர் TMS பேசுகிறார், தனது பெயருக்கு உண்டான பெருமையை வழங்கியவர் MGR  என்று சொல்கிறார்.  எல்லோருக்கும் பாடினேன், ஆனால் என்னைக் காட்டிக் கொடுத்தவர் [?!] MGR  அவர்கள் தான். சிவாஜி அவர்கள், என் பாட்டை தன் பாட்டாக மாற்றிக் கொண்டார் அதனால் எனக்குப் பெயர் கிடைக்கவில்லை!! [என் பாட்டால் தான் இவங்க ரெண்டு பேருக்குமே பேருன்னு இவர் பலமுறை சொன்னதுண்டு!!]

Sunday, November 25, 2012

கல்யாணம் பண்ணிக்க வேற இடமே இல்லீங்க அதான்...... இங்க வச்சிகிட்டோம்!!


மனிதனுக்கு வினோதமான ஆசைகள் வருவதுண்டு.  சிலர் தாங்கள் கல்யாணம் செய்யும் இடத்தை வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  எப்படி இவங்களுக்கு இப்படியெல்லாம் ஐடியா வருது!! இதெல்லாம் ரூம் போட்டு யோசிச்சா கூட நமக்கு வராதே என்று தோன்றுகிறது.  பாருங்கள்!!



காலில் கயிற்றைக் கட்டிக் கொண்டு தலைகீழாகக் குதிக்கும் பங்கி ஜம்பிங் செய்யும்போது நடந்த திருமணம்......

கடலின் நீருக்கடியில் நடந்த திருமணம் ............

இராட்சத பறக்கும் பலூனில் நடந்த திருமணம்.....
கார்பொரே ஷன் குப்பை கொட்டும் இடத்தில் நடந்த திருமணம்.  [தங்க முடியலைடா சாமி!!]
நடுக்காட்டில் முதுகில் அலகு குத்திக் கொண்டு தொங்கிய படியே டும்....டும்.டும்....... [அடப் பாவிங்களா வலி உசிரு போயிடுமேடா!!]

பறக்கும் விமானத்தின் மேலே நின்றபடி....  கரணம் தப்பினால்......??

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மேலே திருமணம்.

 எடையற்ற நிலையில் [ஜீரோ கிரவிடி] திருமணம்.
 எடையற்ற நிலை [ஜீரோ கிரவிடி] என்றால் எங்கே இருக்கும்?  நமது பதிவைப் பார்க்க சொடுக்கவும்.

குருவிக்கூடு மாதிரி செய்து அங்கே மோதிரம் மாற்றிய ஜோடி.
கயிற்றில் தொங்கிய படியே வாழ்க்கையைத் துவங்கிய ஜோடி.  இவங்க இருவருமே கயிற்றில் தொங்கிய படி [பெயிண்டரைப் போல] உயரமான கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகளைத் துடைக்கும் பணியில் இருப்பவர்களாம்.
டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா என கேட்டபடி காதலியைக் கரம்பிடிக்கிறார்.
பைலட்டையே புரோகிதராக்கிட்டீங்களாடா......

வால்மார்ட் கடைக்குள்ளே..... ஒருவேளை இருவரும் ஷாப்பிங் வந்தபோது மீட் பண்ணி காதலில் விழுந்திருப்பார்களோ!!

இதுதான் டாப்பு.... இமயமலை உச்சியில நடந்த இந்தியத் திருமணம்.

 வாழ்க பல்லாண்டு!!

Saturday, November 24, 2012

சைவ உணவு பற்றி பேச உயர்ந்த சாதியில் பிறக்காத எனக்கு உரிமையில்லையா?

நாம்  சிலதினங்களுக்கு முன்னர் சைவ/அசைவ உணவுகளில் மனிதனின் உடலமைப்புக்கு ஏற்றது எது என்ற பதிவை வெளியிட்டிருந்தோம்.  சுட்டி.  இதன் பின்னூட்டத்தில் பலர் பல எதிர் கேள்விகளை எழுப்பியிருந்தனர், எல்லாவற்றுக்கும் மேலே நமது நண்பர் ஒருவர் இதுகுறித்து ஒரு பதிவையும் போட்டுள்ளார். நம் மீது சில கேள்விகளைக் கேட்டுள்ளார்கள், அதற்க்கு நம் தரப்பில் இருந்து சில விளக்கங்களைத் தருவது நமது கடமையாகிறது.

எதிர் தரப்பு: சைவ உணவு உண்ணும் வகையில் தான் மனிதன் உடலமைப்பு உள்ளது என்பது உயர் சாதிக்காரர்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம்.

நமது பதில்:  சைவ உணவுதான் மனிதனுக்கு ஏற்றது என்ற உண்மையை உணர்ந்தோர் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும், மதங்களிலும் மொழிகளும் இனங்களிலும் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் உயர்சாதிக்காரர்களா?  தாவர உணவு என்பது உயர்சாதிக்காரனுக்கே நேர்ந்துவிட்ட உரிமையா? மற்றவர்கள் அதை ஆதரிக்கவோ, பின்பற்றவோ கூடவே கூடாதா?  அப்படி மீறிச் செய்தால் அவன் உயர்சாதிக்காரன் என்று அவன் மீது தார் பூசுவீர்களா?  உயர்சாதியில் பிறக்காத எனக்கு சைவ உணவு முறையைப் பின்பற்றவும், அதன் பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் உரிமை இல்லையா?

எதிர் தரப்பு: என்னோட குடலில்  Hydrochloric Acid சுரக்குது, மனிதனுக்கு  செல்லுலாக்  இல்லை, [இது என்ன புலாசுலாக்கியோ தெரியலை!!], மனிதன் ஒரு பல்லுணவு உண்ணி தான்.  [நாட்டமை தீர்ப்பை வாசிச்சிட்டாரு.]

நமது பதில்:  புலிக்கு உண்டான உணவு மாமிசம் மட்டுமே, அதனால் புல்லை தின்று வாழ முடியாது, பசுவுக்கு உண்டான உணவு புல், இலை தலைகள் தான், அதால் இறைச்சியை உண்டு வாழ முடியாது.   இரண்டும் உண்ணும் ஜீவன்களும் இருக்கு.  கரடிகள் அந்த வகையைச் சார்ந்தவை.  அவை மீனையும் சாப்பிடும், பழங்கள் கொட்டைப் பருப்புகளையும் சாப்பிடும். இப்போ நீர் சொல்ல வருவது, மனிதன் மூன்றாவதாகச் சொன்னது போல ரெண்டும் உண்ணத் தகுந்தவன் என்பதே.  

 

புலி, பசு, கரடி உண்பது என்ன உணவாக இருந்தாலும் சரி அதைத் தயாரிக்க வேண்டிய தகவமைப்பும் அதன் உடலிலேயே இருக்கும், இது மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவன்களும் இன்றைக்கும் பின்பற்றுகின்றன.  புலி கசாப்புக் கடைக்குப் போய் எவனாச்சும்  ஆட்டை வெட்டி சுத்தம் பண்ணி  வச்சிருப்பான் அதை வாங்கி வந்து உண்ணலாம்னு  நினைக்காது.  அதற்க்கு நகங்கள் இருக்கு, பதுங்கியிருந்து பாஞ்சு மானைப் பிடிக்கும் அதன் பற்களாலேயே கொன்று அப்படியே இரத்தத்தைக் குடிக்கும், மாமிசத்தையும் சாப்பிடும். அதை அதன் ஜீரண உறுப்புகள் ஜீரணிக்கும், ஆரோக்கியமாகவே வாழும்.  மாடும் அப்படித்தான் புல்லை உண்ணும்.  ஒரு கரடி மீனை கடையில் வாங்கி உண்ணாது, ஆற்றுக்குப் போகும், ஓடும் தண்ணீரில் குதிக்கும் மீன்களை லாவகமாகப் பிடிக்கும், அப்படியே கடித்து சுவைத்து உண்ணும்.  அப்புறம் பழங்கள் கொட்டை பருப்புகளையும் தேடிப்  பிடித்து உண்ணும். ஒரு வேலை பழங்கள்   நாலு நாளைக்கு இல்லாவிட்டால் அது மாண்டுவிடாது, மீனைக் கொண்டே அது போஷாக்கைப் பெற முடியும் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள முடியும்.  பழங்களை உண்டே பல நாட்களையும் கழிக்க முடியும்.  இதுதான் கரடி பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்பதற்கான நிரூபணம்.  மேற்கண்ட எதுவும் தமக்கு கிடைக்கும் உணவை நெருப்பிலிட்டோ, உப்பு சேர்த்தோ உணவை mutilate செய்வதில்லை, உணவை சேகரிக்க தமது உடலில் உள்ள உறுப்புகளைத் தவிர வேறு ஆயுதங்களைப் பிரயோகிப்பதில்லை.  அவை எதுவும் பல் டாக்டரிடம் செல்வதில்லை ஆனாலும் வாய் நாறுவதில்லை கண்ணாடி போடுவதில்லை பிரசவ ஆஸ்பத்திரிக்குப் போவதில்லை.  ஆகையால் அவை உண்ண வேண்டியதை உண்கின்றன எனபது இதிலிருந்து தெரிகிறது.

மனிதன் உடல் புலால் உணவை உண்ணும் வகையில் வடிவமைக்கப் பட்டது என்பது உமது வாதம், அப்படி இல்லை என்பது எமது வாதம்.  யார் சொல்வது சரி, உண்மை என்பதற்கு ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாம்.  இருவரையும் தனித்தனி அறையில் வைத்து ஒரு மாதத்திற்கு எமக்கு எம் நாட்டில் விளையும் வாழை, கொய்யா போன்ற பழங்களையும், தேங்காய் போன்ற nuts களையும் தினமும் வழங்கட்டும்.  உமக்கு  உயிருடன் உள்ள முழு கோழி, ஆடு, மீன் எல்லாம் அப்படியே வழங்கப் படும்.  இருவரும் சமைக்காம, உப்பு சேர்க்காம, நமது உடலில் உள்ள உறுப்புகளை மட்டுமே பயன்படுத்தி அவற்றை கொண்டு உணவை தயாரித்து உண்ண வேண்டும்.  ஏனெனில் புலி, பசு, கரடி மட்டுமல்ல மற்ற எல்லா ஜீவன்களும் தங்கள் உணவை அவ்வண்ணமே தயாரித்து உண்கின்றன. மாமிசமும் உமது உணவு என்றால் நீரும் அதே முறையில் உண்டு நிரூபிக்க வேண்டும். பார்த்து விடுவோமா ஒரு மாதத்திற்கு?  இதில் நீர் தாக்குப் பிடித்துவிட்டால்  மனிதன் தாவரம் + மாமிசம் இரண்டும் உண்ணத் தகுதியானவன், அவன் ஒரு  பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

லண்டனில் பன்றியின் குடலை வறுத்து பதப் படுத்தி மாட்டுக்கு காட்டயமாக்கி உண்ண  வைத்தார்கள், அவை உண்டான, [பின்னர் Mad Cow disease வந்தது.]
அதற்காக பசுவை பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்று சொல்லிவிட முடியுமா?  எவனாச்சும் ஆட்டை/கோழியை வெட்டி சுத்தப் படுத்தி வைத்திருப்பான், நோகாமல் நொங்கு சாப்பிடுவது போல காசை கொடுத்து வாங்கி வந்து,  நன்றாக வேக வைத்து,  நாற்றம் போவதற்கு மசாலாவைத் தூவி, சுவையே இல்லாத அதற்க்கு உப்பைப் போட்டு தின்று விட்டு அது எனக்கான உணவு என்பது சுத்த பேத்தல்.  

என் குடலில் ஆசிட் இருக்கு, புலாசுலாக்கி இல்லை என்பதெல்லாம் படித்தவன் என்ற முறையில் செய்யும் மாய்மாலம்.  அதில் துளியும் உண்மையில்லை. என்னோட உடல் உறுப்புகள், ஜீரண உறுப்புகள்  மாமிசத்தையும் deal பண்ணும் என்பதை நீர் நிரூபிக்க வேண்டுமானால் எல்லா ஜீவன்களும் மாமிசத்தை உண்பது போலவே நீரும் உன்ன வேண்டும். அது உம்மால் முடியுமா?  முடியாவிட்டால் உமக்கு மாமிசம் தின்னும் ஆசையை, மற்றவர்கள் மேல் திணிக்கலாமா?   அதற்க்கு உம்முடைய படித்த அறிவை துஷ் பிரயோகம் செய்யலாமா?  அதற்க்கு சாதிச் சாயம் பூசும் தார் டப்பாவை கையில் எடுக்கலாமா?  புலால் மறுப்பு பற்றி ஒரு அதிகாரத்தில் பத்து குறள்களை எழுதிய திருவள்ளுவர் என்ன முட்டாளா?  நீர் ஒருத்தர் மட்டுமே அறிவாளியா?

எதிர் தரப்பு:  எஸ்கிமோக்கள் வாழும் சூழ்நிலையில் அசைவம் தின்னாம வாழ முடியாது.  அதனால நானும் தின்பேன்.

நமது பதில்:  ஏன் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர் சிலர் பிணத்தை வேகவச்சி சுத்தியும் உட்கார்ந்துகிட்டு பிச்சு பிச்சு தின்றாங்க, ஆகையால் நீரும் தின்னலாமே?  எஸ்கிமோக்கள் வாழும் சூழ் நிலையிலா நீர் இருக்கிறீர்?  அவர்கள் மாமிசம் உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக எல்லோரும் தின்ன வேண்டுமென்று சட்டமா?   அப்படியே எஸ்கிமோக்கள் தின்னுவதால் அது மனித உடலுக்கு ஏற்றதாகிவிடுமா?  எஸ்கிமோக்கள் உண்ணுகிறார்கள் என்றாலும் அவர்கள் மனிதன்  உடலுக்கு ஒவ்வாத ஒன்றை உண்ணுகிறார்கள் என்று அர்த்தமே தவிர அது மனிதன் உடலமைப்புக்கு ஏற்றதென்று ஆகிவிடாது.



[இந்தக் காணொளியை ஒரு முறை எங்கோ பார்த்தேன், இன்னொரு முறை பார்க்க வில்லை மெல்லிய மனதுள்ளவர்கள் பார்க்க வேண்டாம். ]

எதிர் தரப்பு: என்னோட உடம்பில B 12 விட்டமின் குறைச்சு போச்சு, மினரல் காலி,  உடல் ஆரோக்கியப் பிரச்சினை பல வருது. எங்க பரம்பரை மாமிசம் சாப்பிடாததால் தான் இத்தனை பிரச்சினையும்.  அதனால நான் இப்போ மாமிசம் சாப்பிட்டு தெம்பா இருக்கேன்.

நமது பதில்:  உம்மோட உடம்பில எங்கோ ஒரு மினாராலும், விட்டமினும் காணாம போனதுக்கே இப்படி பதருகிறாயே, அவற்றை ஈடுகட்ட நீர்  போட்டுத்தள்ளிய மீனு, ஆடு, கோழி , நாயி இன்னும் என்னன்னவோ யாருக்குத் தெரியும், அத்தனையும் தங்கள் வாழ்நாளை பாதியில் முடித்துக் கொண்டனவே அது குறித்து நீர் கொஞ்சமாவது நினைத்துப்  பார்த்தீரா?  உலகில் நீர் ஒருத்தர் மட்டும்தான் வாழ வேண்டும் மற்றவை உமக்காகச் சாக வேண்டுமா?  என்ன சுய நலம் இது...........??  அதாவது மனுஷன் எல்லோரும் ஆரோக்கியமா வாழ்ந்தா போதும்னு நீராக ஒரு வட்டம் போட்டு முடிவுகட்டிவிட்டீர்.  இன்னொரு உயிர் வாழ வேண்டுமா சாக வேண்டுமா எனத் தீர்மானிக்க நீர் யார்?  உம்மைப்போலவே அவையும் வாழ்ந்து இயற்கையாக மடியக் கூடாதா?


 உமக்கு எந்தெந்த ஜீவன்களையெல்லாம் கட்டுப் படுத்த முடியுமோ, எதிர்த்து கேள்வி கேட்காதோ, கையாலாகாத நிலையில் உள்ளனவோ அவை அத்தனையையும் உம்மோட சுகத்துக்காக, நலனுக்காக கொல்லலாம் என்று அர்த்தமாகிறது.  இதை நானும் தாவரங்களைக் கொல்வதால் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.  நீர் மனிதன் எல்லோரும் நலமுடன் வாழ்ந்தால் போதும், மற்ற உயிர்கள் உம்  நலனுக்காக செத்தாலும் பரவாயில்லை என்று ஒரு வட்டம் போட்டு  நினைக்கும்போது, ஒருத்தன் தன்னுடைய சாதி என்ற வட்டம் போட்டு அது மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் அதை நீர் ஏற்றுக் கொள்வீரா?  ஒரு நாட்டில் ஒரு இனத்தை அரசே கொன்று தீர்த்தது, அவர்கள் செத்தால் தான் என்னுடைய இனம் வாழும் என வட்டம் போட்டு நினைத்தது சரியா?  அமரிக்கா தான் நலமாக இருந்தால் போதும் என அமரிக்க மக்கள் என்ற வட்டத்தைப் போட்டு மற்ற நாடுகளை அடிக்கிறதே அதை எற்ப்பீரா?  அப்படியானால் நீர் போட்ட வட்டம் சரி, மற்றவர்கள் போடும் வட்டம் தவறு என்று நீர் எப்படி சொல்கிறீர்? மனிதனுடைய உயிர் மாத்திரமே முக்கியம் மற்றவை வாழவே தேவையில்லையா?  இன்பம், துன்பம் என்பது உமக்கு இருப்பது போலவே அவற்றுக்கும் இருக்காதா?  உணவுக்காக இன்னொரு உயிரை கொல்லுவது என்பது  தவிர்க்க முடியாதது, ஒரு ஜீவன்தான் இன்னொரு ஜீவனுக்கு உணவு என்பது இயற்க்கை நியதி, என்னுடைய உடலுக்கு தாவர உணவு மட்டுமே பொருந்துவதால், அதைக்  கொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்கிறேன்.  மாமிசத்தை உண்டு ஜீரணிக்கும் தகுதி வாய்ந்த ஜீவன்கள் அவற்றைக் கொன்று உண்ணட்டும் வேண்டாமென்று சொல்லப் போவதில்லை, இதிலென்ன தவறு?


வெள்ளை  பேக் கிரவுண்டில், கருப்பு எழுத்துகளில் கண்ணை உறுத்தாமல் பதிவு எழுதினால் மட்டும் போதாது, அதில் விஷத்தையும், விஷமத்தையும் கலக்காமல் எழுதவு ம் வேண்டும்.  பொய்யை, இல்லாதததை, சொல்லாததை சொன்னதாக பித்தலாட்டம் செய்ய உன்னை போல படித்தவன் தேவை இல்லை.  பஸ்ஸில் பிக் பாக்கெட் அடிப்பவன் செய்வான்.  நீர்  படித்தவர் அதற்கேற்ற தரத்தோடு நடந்து கொள்ளும்.  

 எதிர் தரப்பு:  தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாயிட்டான்.

நமது பதில்:  உன் உடலுக்கு ஏற்றதை உண்ணுங்க, மற்ற ஜீவன்களை அனாவசியமா கொல்லாதீங்க என்று சொல்பவன் தடிஎடுத்தவனாக ஆயிட்டானா? என்ன கொடுமை சார் இது?  மனிதன் வாயில் சுரக்கும் உமிழ்நீர், குடலில் சுரக்கும் அமிலம், குடலின் நீளம் அரைக்கும் வகையில் இயங்கும் தாடைகள், தோலில் உள்ள ஆயிரமாயிரம் வியர்வைத் துளைகள் என்று இத்தனை ஆதாரத்தோடு, இவை அத்தனையும் மனிதன் தாவர உணவை உண்ணுபவன் என்று சொல்லும்போது, இல்லை இல்லை மாமிசத்தையும் தின்னலாம் என்ற பித்தலாட்டம் செய்யும் நீர்  தான் தடியை கையில் எடுத்த தண்டல் காரன், கருத்தை திணித்தவன், படித்த கல்வியை துஷ்பிரயோகம் செய்தவன்.  நாம் இல்லை.

 எதிர் தரப்பு:   யாரோ ஒருவர் எமக்கு அறிவியல் தெரியாது என்று எல்லாம் உளறி வருகின்றார்.

 நமது பதில்: \\அரைவேற்காடுகள் எல்லாம் இணையத்தில் அறிவியல் ( உயிரியல் ) பேச வந்துவிட்டன .. !\\  இது நமக்கு வந்த ஒரு நண்பரது பின்னூட்டம்.  ஆனாலும் நாம் யாரையும் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை.  ஒருவேளை அப்படிச் சொன்னவர்கள் இருந்தால் அவர்கள் பதிலளிக்கட்டும்.  மேலும், ஒரு விஷயம் தெரியவில்லை என்பதை இழிநிலையாக நாம் கருதவில்லை.

சைவ உணவு சிறந்ததா, அசைவ உணவு சிறந்ததா என்பதை தீர்மானிக்க நீர் ஒன்றும் நாட்டமை இல்லை, உன்னால் கொல்லப் படும் உயிர்களுக்கும் வாழும்  உரிமை இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

மொத்தத்தில், ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு உணவு என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.  உம்முடைய உடலுக்கு ஏற்ற உணவை எடுத்துக் கொண்டு மற்ற உயிர்களை வாழ விடு என்பது நமது பாலிசி.  ஜீவகாருண்யம் என்ற பெயரில் புலிகளை பிஸ்கட் தின்னச் சொல்லப் போவதில்லை.  மானை புலி அடித்துத் தின்னட்டும் ஆட்டை ஓநாய் அடித்துத் தின்னட்டும், அவற்றின் உடல் அதற்க்கு ஏற்றது.  நீ மனிதன் ஆறறிவு படைத்தவன் நாகரீகம் தெரிந்தவன், அப்படி இருந்தும் நாய், ஓநாய் இவற்றுக்கு தகுதியான உணவை நீ பிடுங்கித் தின்னலாமா?

இறுதியாக நாம் சொல்ல வருவது:  மாமிச  உணவு மனித உடலுக்கு ஏற்றது இல்லை.  இதையேதான் திருவள்ளுவரும் பத்து குறள்களில் சொல்லுகிறார்.  எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.  இது கட்டாயம் இல்லை.  முடிவு செய்ய வேண்டியது வாசகர்களாகிய நீங்கள் மட்டுமே.

Friday, November 23, 2012

காதல் சின்னமும், இந்தியாவின் பழைய அதிகார மையமும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆக்ரா சென்றிருந்தேன், அப்போது தாஜ்மஹாலையும், ஆக்ரா கோட்டையையும் சுற்றிப் பார்த்தோம், அப்போது எடுத்த சில படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

நீங்கள் தாஜ்மஹாலைப் எத்தனை சினிமாவில்,  புகைப் படங்களில், பத்திரிகைகளில் பார்த்திருந்தாலும் சரி,  நண்பர்களிடம் சொல்லக் கேட்டிருந்தாலும் சரி, தாஜ் மஹாலின்  பல்வேறு நுழைவு வாயில்களைக் கடந்து உள்ளே நுழைந்து அந்த பிரமாண்டமான பளிங்கு அற்புதத்தைப் பார்க்கிறீர்கள் அல்லவா, அந்த அனுபவத்திற்கு ஈடு இணையே கிடையாது.  பிரமிக்க வைக்கும் தோற்றம்.  பார்க்காதவர்கள் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று வரலாம்.

தாஜ்மஹாலைப் பொறுத்தவரை நிறைய காதலர்கள் அதைச் ஜோடி ஜோடியாக வெவ்வேறு 'அன்பான' போஸ்களில் நின்று படமெடுத்துக் கொள்கிறார்கள்.  இது காதலுக்கான கோவில் என்ற தீராத நம்பிக்கை இருக்கும் போல!! இதோ படங்கள்.








இவை நிஜமான கல்லறைகள் இல்லையாம், அவை இவற்றுக்கு நேர் கீழே  ஆழத்தில் பாதாள அறையில் உள்ளனவாம், இவை just symbolic!!





ஷாஜஹான்-ஔரங்கசிப் காலத்தில் அவர்கள் ராஜ்ஜியமான பரந்த இந்தியாவை ஆக்ராவில் இருந்துதான் ஆட்சி புரிந்திருக்கிறார்கள், ஒரு காலத்தில் தலைநகரமாக பரபரப்பாக இயங்கிய ஒரு கட்டிடத்திலா இன்று இவ்வளவு அமைதியாக இருக்கிறது என்ற வியப்பு மேலிட்டது.  இந்த கட்டிடங்கள் பல காலத்தால் அழிந்து போய்விட்டன.  10-20% கட்டிடங்களே எஞ்சியுள்ளனவாம்.  அதற்கே நாம் பிரமித்துப் போய் விடுகிறோம்.

சகோதரர்களை போட்டுத் தள்ளி ஆட்சியைப் பிடித்த ஔரங்கசிப் தனது தந்தையை இந்த கோட்டையில் தான் சிறை வைத்திருக்கிறார், அவர் இருக்கும் இடத்தில் இருந்து தனது பிரியமான காதலிக்கு கட்டிய தாஜ்மஹாலை பார்த்த வண்ணமே தனது மிச்ச நாட்களை கழிக்குமாறு வசதி செய்து கொடுத்திருக்கிறார்!!  எவ்வளவு நல்ல மனசு!!

இந்த இடத்தின் இன்னொரு முக்கியமான விஷயம், மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி இங்கேதான் சிறைவைக்கப் பட்டிருக்கிறார்.  இங்கிருந்துதான் பழக்கூடையில் ஒளிந்து தப்பிச் சென்று பின்னர் மாபெரும் படையைத் திரட்டி தனது எதிரிகளை மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார்!!  ஆஹா...  எப்பேர்பட்ட இடம் இது!!



இந்த அகழியில் முதலைகளை விட்டிருப்பாங்களோ !! 

இதில தாஜ்மஹாலைக் கண்டுபிடிச்சிட்டா உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுதுன்னு அர்த்தம்!!





ஒரே கல்லில் செய்யப்பட்ட தொட்டி..........



தூரத்தில் தாஜ்மஹால்...........




தாஜ்-ஆக்ரா கோட்டை பற்றி எளிய தமிழில் சுருக்கமாக பல தகவல்களை மேலும் அறிந்து கொள்ள சுட்டி.