Friday, November 30, 2012

தீக்குச்சியை கிழித்தால் நெருப்பு வரும்......... அத வச்சு வேறென்னத்த கிழிக்க முடியும் அப்படின்னு இனிமேலும் கேட்கமாட்டீங்க!!

நாம் தினமும் நெருப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளை பயன்படுத்தினாலும், [நகர்புற ஜனங்க அடுப்பு பற்ற வைக்க லைட்டரை உபயோகிக்கலாம்!!] அதில் ஒன்னும் பெருசா கலைநயத்தை பார்ப்பதில்லை.  ஆனால், சிலர் அதிலும் வியத்தகு கைவினைப் பொருட்களை உருவாக்க முடியும் என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.  அவர்கள் உருவாக்கிய சில வடிவங்களைத்தான் நாம் இன்னைக்கு பார்க்கப் போறோம்,  அந்த வடிவங்கள் நம்மை ஆச்சரியத்தில் பிரமிக்கச் செய்கின்றன!!

இதில் முதலில் வருபவர் திரு.பேட்ரிக் ஆக்டன் [Patrick Acton, 59] அவர்கள். இவர் ஒரு வட அமரிக்கர்.  1977 ஆம் ஆண்டு ஒரு பொழுதுபோக்காக தீக்குச்சிகளில் சிற்பங்களை வடிக்கும் கலையில் ஈடுபட்ட இவர் 35 ஆண்டுகளாக  அதைத் தொடர்கிறார்.  ஆரம்பத்தில் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள கடைகளில் தீப்பெட்டிகளை வாங்கிவந்து அதன் நுனியில் உள்ள மருந்தை நீக்கிவிட்டு அதில் வடிவங்களை உருவாக்கினாராம்.  பின்னர் யாரோ ஒரு வியாபாரி இவருக்கு மருந்துகள் தடவப் படாத வெறும் குச்சிகளை மட்டும் தேவையான அளவுக்கு வழங்க முன்வந்திருக்கிறார்.  ஆரம்பத்தில் தனது சிற்பங்கள் நேர்த்தியாக வர பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் கோந்து, craft கத்தி, உப்பு காகிதம் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கிறார். இவரது சமீபத்திய சாதனை பாரிஸ் நகரில் அமைந்துள்ள பழமையான கட்டிடக் கலைக்குப் பெயர் பெற்ற நோட்ரே டேம் [Notre Dame] தேவாலயத்தின் மாதிரியாகும்.


7.5 அடி நீளமும் 5 அடி உயரமும் உள்ள இந்த தேவாலயத்தின் மாதிரியை உருவாக்க, 2,98,000 [தோராயமாக மூன்று லட்சம்] தீக்குச்சிகளையும், 55 லிட்டர் மரத்தை ஒட்டும் பிசினையும்,   2000 பல்குத்தும் குச்சிகளையும் பேட்ரிக் ஆக்டன் பயன்படுத்தினாராம்.  ஒவ்வொரு குச்சியையும் சிரத்தையோடு அடுக்கி உண்மையான கட்டிடத்தின் அத்தனை விபரங்களும், வடிவமும் இதில் வருமாறு உருவாக்கியுள்ளாராம். இதை உருவாக்க 2000 மணி நேரங்கள் பிடித்தனவாம்.  [இந்த நேரம் இதில் ஈடுபட்டது மட்டும், சாப்பாடு, தூங்கும் நேரமெல்லாம் கணக்கில் வராது!!].  இந்த மாதிரியின் நிஜக் கட்டிடம் கட்டி முடிக்க 180 வருடங்கள் ஆனது என்பது கூடுதல் தகவல்.

பேட்ரிக் ஆக்டன், பணியில் முமுரமாக ஈடுபட்டிருக்கிறார்  யாரையும் தனக்கு உதவிக்கு வைத்துக் கொள்வதில்லையாம் ஏனென்றால் இவரது கலை நயத்தோடு அவர்களால் பணியாற்ற முடியாது, அது இவரது ஆக்கத்தைப் பாதிக்கும் என்பதால்!!

இவர் இந்த வடிவமைப்பை உருவாக்கியது குறித்து அனைத்து தகவல்களும் அறிய

சுட்டி 1.

சுட்டி 2.


திரு.பேட்ரிக் ஆக்டனின் மற்றுமொரு படைப்பு, Minas Tirith என்னும் வரலாற்றுக் கற்பனைக் கோட்டை இதை முடிக்க மூன்று வருடங்கள், 4,20,000 தீக்குச்சிகள் பயன்படுத்தப் பட்டன.  
மேலதிகத் தகவல்களுக்கு சுட்டி. 


அடுத்து நாம் பார்க்க இருப்பவர் திரு.ரொனால்டு D ரெம்ஸ்பெர்க் [Ronald D. Remsberg].  இவர் ஒரு Aerospace எஞ்சினியர், பல விமான வடிவமைப்புகளை உருவாக்கியவர்  அதெல்லாம் போராடிக்கிறது, கிரியேடிவாக எதையாவது செய்யலாம் என்று தீக்குச்சி வடிவங்களுக்கு தாவியவர். உலக அதிசயங்கள் பலவற்றை இவர் தீக்குச்சிகளைக் கொண்டு செய்து காண்பித்திருக்கிறார்.


 திரு.ரொனால்டு D ரெம்ஸ்பெர்க் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு சுட்டி. உலகிலேயே தீக்குச்சிகளால் செய்யப்பட்ட மிகப்பெரிய ஈஃபில் டவர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இதை வடிவமைத்தவர் லெபனானைச் சேர்ந்த திரு.டோபிக் டேகர் [Tofic Daher], இவர் ஒரு மாற்று திறனாளி எனினும் திறமையான கைவினைஞர் [Craftsman ] என்பது குறிப்பிடத் தக்கது.  நான்கு வருடங்களில்  2,316 மணி நேரம் செலவழித்து இதை உருவாக்கி இருக்கிறார்.  இதன் உயரம் ஆறரை மேட்டர் அறுபது லட்சம் தேக்குச்சிகளைப் பயன்படுத்தி இதை செய்து முடித்திருக்கிறார்.   இதை அலங்கரிக்க 6,240 சிறிய விளக்குகளையும் 23 சிமிட்டும் விளக்குகளையும் போட்டிருக்கிறார். 5,50,000 ரூபாய் இதற்க்கு செலவானதாம். பெய்ரூட் நகரிலுள்ள சிடி மாலில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் இது பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப் பட்டதாம்.

இணையத்தில் என்னைக் கவர்ந்த தீக்குச்சி சிற்ப்பங்கள் சில:


The 600,000 matchstick model of the Hogwarts School of Witchcraft and Wizardry by Patrick Acton  is on permanent display at the museum The House of Katmandu in Majorca, Spain.

லண்டன் டவர் பிரிட்ஜ்

ஸ்பேஸ்  ஷட்டில்
 
இரயில் எஞ்சின்

7 comments :

 1. அற்புதமான படைப்புகள்.

  ReplyDelete
  Replies
  1. திரு பழனி கந்தசாமி அவர்களே. உங்கள் வலைத்தளத்தை திறக்க முடியவில்லை. கீழ்க்கண்ட தகவல் வருகிறது.

   This blog is open to invited readers only
   http://swamysmusings.blogspot.com/

   It doesn't look like you have been invited to read this blog. If you think this is a mistake, you might want to contact the blog author and request an invitation.

   ஜெயதேவ் தாஸ் மன்னிக்கவும்.

   Delete
  2. சார், திருவிழாவில் காணாமல் போன குழந்தை அப்பா.... அம்மா......... என்று அழுமே அந்த மாதிரி உங்கள் வாசகர்களை செய்துவிட்டீர்களே சார்??!! விஜய் , திடீரென ஒரு நாள்,

   \\விடை பெறுகிறேன்
   by noreply@blogger.com (பழனி.கந்தசாமி)
   இந்தப் பதிவுலகிற்கு நான் வந்ததன் நோக்கம் இதிலுள்ள நுட்பங்களை தெரிந்து கொள்ளத்தான்.

   அந்த நுட்பங்களையும் இதிலுள்ள அரசியலையும் நன்கு கற்றுக்கொண்டேன்.

   என் பதிவுகளைத் தொடர்ந்து வந்து எனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்தியவர்களுக்கும், என் பதிவுகளை வாசித்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   எனக்கு சலிப்பு வந்து விட்டது. என்னால் இனி தொடர முடியாது. விடை பெற்றுக்கொள்கிறேன்.\\

   என்று சொல்லிவிட்டு அவரது பிளாக்குக்கு பூட்டு போட்டோவிட்டார். தற்போது அவரால் அனுமதிக்கப் பட்டவர்கள் மட்டும் அவரது பிளாக்கைப் படிக்க முடியும் எனுமாறு செய்து விட்டார். தங்களுக்கு அவருடைய பழைய பதிவுகள் ஏதாவது வேண்டுமாயின் சொல்லுங்கள் உங்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கிறேன். ஏனென்றால் யார் வேண்டுமானாலும் அவரது படைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று WHOLESALE அனுமதி தந்திருக்கிறார்.

   அவரது முடிவு UNFORTUNATE, அவர் தொடர்ந்து எழுத வேண்டுமென்பது என்னைப் போன்ற நூற்றுக கணக்கானோரின் விருப்பம். வருகைக்கு நன்றி

   Delete
 2. அசர வைக்கும் படைப்புகள்... சேமித்துக் கொண்டேன்...

  நன்றி...

  ReplyDelete