சமையல் என்பது ஒரு கலை, எல்லோருக்கும் சுவையாக சமைக்க வரும் என்று சொல்ல முடியாது. சிலரது கைப்பக்குவம் அவங்க எது செய்தாலும் சுவையாக வந்துவிடும், சிலர் என்ன செய்தாலும் அவ்வளவாக சுவையாக வராது. இந்த மாதிரி அல்லாது யார் செய்தாலும் சுவையாக இருக்கும் என்னும் ஒரு செய்முறையைத்தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். இந்த செய்முறையை சரியாகப் பின்பற்றினாலே போதும், சுவைக்கு கியாரண்டி!! நாம் இன்றைக்கு செய்ய இருப்பது எங்கும் பிரபலமான பக்கோடா.
தேவையான பொருட்கள்:
[நான் இங்கே 1 கிலோ கடலை மாவுக்கு குறிப்பு கொடுக்கிறேன், நீங்கள் உங்கள் தேவைக்கு செய்து கொள்ளலாம், எல்லா பொருட்களையும் அதே அளவுக்கு கூட்டியோ, குறைத்து கொண்டோ செய்யலாம்].
கடலை மாவு 1 கிலோ.
வெங்காயம் 1/2 கிலோ.
பச்சை மிளகாய் 200 கிராம்.
பூண்டுப் பற்கள் 25
சீரகம் ஒரு சாம்பார் கரண்டி அளவு.
கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி.
கடலை எண்ணெய் 1 லிட்டர்.
கடலை மாவை சல்லைடையில் சலித்து சுத்தப் படுத்தி ஒரு பேசன் வடிவப் பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும். |
வெங்காயத்தை வழக்கமான முறையில் துண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும், சிலர் நீளவாக்கில் வெட்டுவார்கள், அதைத் தவிர்க்கவும். |
பச்சை மிளகாயை இந்த மாதிரியே வெட்டிக் கொள்ளவும். |
சீரகத்தை அம்மியில் வைத்து நுணுக்கி எடுத்துக் கொள்ளவும், மிக்சியில் என்றால் கவனமாக இதே மாதிரி அரைத்து எடுக்கவும், கொஞ்சம் விட்டாலும் தவிடு போல ஆகிவிடும், அது சரிப்படாது. |
பூண்டின் சருகுகள், வேண்டாத நடுத் தண்டு, வேர் மட்டும் நீக்கி தோலுடன் பற்களை எடுத்து நசுக்கிக் கொள்ளவும். |
முன்னர் சலித்து வைத்திருந்த கடலை மாவை எடுத்து நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் பரப்பவும். |
பச்சை மிளகாய் மேல் நசுக்கிய பூண்டை பரப்பி, பூண்டின் மீது அரைத்த சீரகத்தையும் தூவவும். |
எல்லாவற்றுக்கும் மேல், சுத்தம் செய்த கறிவேப்பிலையை பரப்பவும். |
ஒரு பாத்திரத்தில் 750 மிலி நீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு பெரிய கைப்பிடி அளவுக்கு கல் உப்பை போடுங்கள். [50 மிலி கப் இருந்தால் ஒரு கப் உப்பு போடலாம், பாக்கெட்டுகளில் வரும் சுத்தீகரிக்கப் பட்ட உப்புகளை இதற்க்கு பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அளவு தெரியாது!! ]. பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சமையல் சோடாவையும் போடுங்கள். இரண்டையும் நன்கு கரையும் படி கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
தற்போது கடலை எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி சூடு படுத்தவும், எண்ணெய் நன்கு சூடேறி கொதிக்கும் நிலை வந்த பின்னர் ஒரு கரண்டியை எடுத்துக் கொண்டு சூடான எண்ணெயை முகர்ந்து மேலே உள்ள பிரமிடில் உச்சியிலும் அதைச் சுற்றியும் கறிவேப்பில்லை, அதன் கீழேயுள்ள சீரகம், பூண்டின் மீது படும் வண்ணம் ஊற்றவும், அவை பொரிந்து வாசனை வரும்!! மீண்டும் இன்னொரு கரண்டி எண்ணையை அதே மாதிரி ஊற்றவும். [அரை கிலோவுக்கு ஒரு கரண்டி எண்ணெயே போதும்!!]. ஊற்றிய பின்னர் அடுப்பின் தீயை பக்கோடா செய்யும் அளவுக்கு குறைத்துக் கொள்ளலாம்.
எண்ணெய் ஊற்றிய பின்னர் எல்லா பொருட்களையும் சீராகக் கலந்து வைத்துக் கொள்ளவும். |
மேற்கண்ட கலவையில் நீங்கள் ஒவ்வொரு முறையும் எண்ணெயில் எவ்வளவு போடப் போகிறீர்களோ அந்த அளவு மட்டும் கலவையை ஒரு ஓரத்தில் ஒதுக்கி எடுத்துக் வைத்துக் கொண்டு, உப்பு நீர் பாத்திரத்தில் இருந்தது நீரை கையால் கொஞ்சமாக எடுத்து இந்த மாவில் மட்டும் தெளித்து விரல்களால் பக்குவமாக கிளறி எண்ணெய்யில் போடும் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தண்ணீரை தெளித்தாலே போதும், ஒரு போதும் ஊற்றி விட வேண்டாம். நீர் குறைந்த பட்சமே இருக்க வேண்டும், ஆனாலும் கடலை மாவும் ஈரமாகியிருக்க வேண்டும், எண்ணெயில் தூவும் போது எளிதாக விழும் வண்ணம் இருக்க வேண்டும், அவ்வளவு நீரை தெளித்தாலே போதும், அதற்கும் மேல் வேண்டாம். மாவு மிகவும் கெட்டியாகவே இருக்கட்டும். அதை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் தூவி வேகவைத்து பொரித்தெடுக்கவும். பொரித்த பின்னர் பக்கோடா கிட்டத் தட்ட கடலை மாவு நிறத்தில் தான் இருக்கும், கடையில் உள்ளது மாதிரி பழுப்பாக ஆகாது.
இந்த முறையில் செய்யும் பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும், சுவைப்பவர்கள் அனைவரும் உங்களை பாராட்டத் தயங்க மாட்டார்கள்!! செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று எழுதுங்கள், மிக்க நன்றி!!
//டேய் அப்பாவோட லினக்ஸ் டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை என்னோட அக்கவுண்டில் இருந்து எப்படிடா பார்ப்பது?" என்பது போல கம்பியூட்டர் டிரிக்ஸ்களை ஒன்னாம் கிளாஸ் படிக்கும் எங்கள் பையனிடம் கற்றுக் கொள்கிறார்,//
ReplyDeleteபசங்க கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. நீங்க லினக்ஸ்தான் யூஸ் பண்ணரீங்களா?ட்யூயல் பூடிங் வச்சுருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்க மிசசுக்கு பக்கோடா செயக் கத்துக் கொடுத்தது நீங்கதான?
ஆண்களுக்கான சிறப்பு பதிவா?
///உங்க மிசசுக்கு பக்கோடா செயக் கத்துக் கொடுத்தது நீங்கதான?///
Deleteமுரளி நீங்க தப்பா கொஸ்டின் கேட்டிங்க கேள்வி இப்படி இருக்கனும்
உங்க மிஸ்ஸஸுக்கு பக்கோடா செய்து கொடுத்தது நீங்கதான என்று கேட்டு இருக்கணும்
@ T.N.MURALIDHARAN
Deleteகரெக்ட்டா கண்டுபுடிசிட்டீங்களே.........!!
ரொம்ப அருமையா விளக்கமா சொல்லிக்கொடுத்திருக்காங்க! வீட்டம்மா கிட்டே சொல்றேன்! நன்றி!
ReplyDeleteவீட்டம்மா கிட்டே சொல்லாதிங்க நீங்களே செஞ்சு பாருங்க
Deleteஆஹா! மிகவும் சுவையாக இருக்கும்போல் இருக்கிறதே! உங்க பதிவை படித்ததுமே உடனே செய்து சாப்பிடவேண்டும்போல் இருக்கிறது. ம்ம்ம் மிக அருமையான விளக்கங்கள் துவும் படதுடம் சபாஷ்!
ReplyDeleteநீங்களே சமையல் செய்வதில் கில்லாடியாச்சே, இதையும் செய்து பாருங்க!!
Deleteவீட்டில் குறித்துக் கொண்டாயிற்று... நன்றி...
ReplyDeleteபடத்துடன் இவ்வளவு விளக்கமாக...! வாழ்த்துக்கள்...
@திண்டுக்கல் தனபாலன்
Deleteவீட்டில் செய்து சாப்பிட்டு பார்த்து விட்டு பதில் போடுங்க சார்!!
கிச்சன் கில்லாடி என்ற பட்டத்தை தம்பதிகளான உங்கள் இருவருக்கும் வழங்குகிறேன். மாறுபட்ட முறையில் தந்த குறிப்பை மிக விரைவில் செய்து பார்க்கிறேன். ஒரு வேளை சொதப்பினால் உங்கள் விட்டிற்கு வருவதை தவிர வேறு வழியில்லை
ReplyDelete@ Avargal Unmaigal
Deleteஎங்க சார்பா நிறைய பதில் சொன்னதுக்கு நன்றி. எங்களுக்கு விசாவும் விமான டிக்கட்டும் அனுப்புங்க, நாங்களே உங்க வீட்டுக்கு வந்து செய்து குடுத்துட்டு செல்கிறோம்!!
இதில் உப்பு கரைசல் பண்றது தாங்க டிரிக், மத்ததெல்லாம் fail லே ஆகாது........!!
பேஷ் பேஷ் பக்கோடா குறிப்பு சூப்பர் செய்வது தெரியும் ஆனாலும் அந்த உப்பு குறிப்பு ஸ்பெஷல்தான் நன்றி
ReplyDelete@ malar balan
Deleteகண்டிப்பாகச் செய்து பாருங்கள், வருகைக்கு நன்றி.
நல்லாத்தான் இருக்கும்போல இருக்கு. ஆண்டவன் எப்ப கருணை செய்வானோ?
ReplyDeleteஇங்க ஆண்டவன்கிறது யாருன்னு சொல்லவேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்.
அடடா.....2 பேரும் சேர்ந்து எழுதுறீங்களா... இது எப்போதிலிருந்து:-)
ReplyDeleteநான் கூட எடம் மாறி வந்துட்டேனோன்னு குழம்பிட்டிருந்தேன்...
பக்கோடா செய்முறை நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி ஆமீனா!! எங்கே கடைப் பக்கம் ரொம்ப நாளா வரக் காணோம்?!!
DeleteThanks.அருமையான முறையாக இருக்கும் போல தெரிகிறது. கட்டாயம் செய்து பார்த்து , எப்படி வந்தது என்று எழுதுவேன்.
ReplyDeleteவெற்றிமகள்.
http//www.dreamspaces.blogspot.in
http://www.gardenerat60.wordpress.com
நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது
ReplyDeleteநான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன்
என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது
உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது
பதில் ஏதும் சொல்லாமல் எஜமன் கடந்து சென்றார்.
ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார்
என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,
உமக்கு திராட்ச ரசம் ஊற்றித்தருவேன்
நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன்
என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு!
நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும்.
எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார்
தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு
கடக்க முற்பட்டவ்ரை, எஜமனே நான் இங்கே இருக்கிறேன்"
எல்லா மனிதர்களும் பர்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும்
நான் அலங்கரமாயிருப்பேன் என்றது "
எஜமனே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம்.
எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும்
பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது
எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார்
சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "
என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "
பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது
எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார்
கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவரற்ற நிலையில் கிடந்தது
எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த
எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம்
இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்
இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன்
பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை
அலமாரியில் அலங்காரமய் இருப்பதும் எனக்கு தேவையில்லை
பெரிய வாயோடு பெருமை பராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை
தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை
களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார்.
தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார்.
" நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு
நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று"
AnonymousMarch 17, 2013 at 11:39 PM
ReplyDeleteஉங்க பின்னூட்டம் நல்லாத்தான் இருக்கு, ஆனா பதிவுக்கு சம்பந்தப் பட்டதா இல்லியே?!
அது டெம்ளேட் கமென்ட் :-)
Deleteஎன் ப்ளாக்கிலும் போட்டிருக்காக :-)
பொறியியல் படித்தவரை, பொரியல் செய்யச் சொல்லி சாப்பிட்டதோடு நில்லாமல், எழுதவும் வைத்துவிட்டீர்கள். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம், என்ற தங்களின் எண்ணத்தை, பரந்த மனப்பாண்மையை எண்ணி வியக்கிறேன். விளக்க படத்தோடு, வாசகர்களுக்கு பக்கோடா செய்வதை விளக்கியதற்கு பாராட்டுக்கள் ! 1 கிலோ கடலை மாவுடன், 1 ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்துப் பாருங்கள், இன்ணும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். தொடரட்டும் தங்கள் பணி !
ReplyDeleteஆமாம் சார், கூட கொஞ்சம் மிளகாய் பொடியும் சேர்க்கலாம்......... ஆனாலும், மேலே சொன்ன முறை பக்காவாக இருக்கும், அதற்கும் மேல் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
Deleteம்ஹூம் இதெல்லாம் நல்லா இல்ல.. இப்படி எல்லாம் எங்களை வேலை வாங்க கூடாது. இந்தாங்க நான் செஞ்சது எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணி பாருங்கன்னு பார்சல் அனுப்பனும். 'செப் 'பா மாறி ஜட்ஜ் பண்ணுவோம்ல..! என்னமோ போங்க இப்பல்லாம் நீங்களே(ஆண்கள்) நல்லா சமைக்க ஆரம்பிச்சிட்டிங்க.. நாங்கல்லாம் கோவம் வந்து பெட்டியை தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனா கூட இனி கெஞ்சி கூப்பிடறதெல்லாம் நடக்காது போலிருக்கே! its too bad. இனிமே உங்களுக்கு கோவம் வராம நாங்கதான் பார்த்துக்கனும்.. பின்ன.. எங்களுக்கு லீவு நாள்ல இப்படி எல்லாம் வாய்க்கு ருசியா சமைச்சி தர்றவங்க மேல கோச்சுக்க முடியுமா?
ReplyDeleteஉஷா........!! உங்க வீட்டுக்கரரே எல்லா வேலையும் முடிசிடறாரா!! நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க, என் நிலைமை ரொம்ப மோசம்...... ம்ம்ம்ம்....... என்ன பண்றது!!
Deleteஉங்க கடையில பக்கோடா வா ? (ஜஸ்ட் பார் ஜோக் !)தொடருங்கள் இந்திரா ஜெயதேவ்...
ReplyDelete@ கலாகுமரன்
DeleteThank you sir.
இருங்க நான் எங்கே வந்துட்டேன் ஜலீலா கமால் வலை தளத்துக்கா அல்லது எங்க ஊர்காரர் வைகோ சார் வலை தளத்துக்கா.
ReplyDeleteபகோடா படிக்க நல்லா இருந்துச்சு மேடம்,அரபு நாடுகளில் வாழும் எங்களைப்போல சமைக்கதெரியாத பேசுலர்களுக்கு இதைப்போல பதிவுகளை படித்து பெருமூச்சுதான் விட முடியும்.
சாரோட பக்தி பரவசம் பதிவுகளுக்கு இடையே இது இண்டர்வல்லா.
அரபு நாடுகளில், இந்த பொருட்கள் கிடைக்காதா................?! இல்லை மாவு விலை ஜாஸ்தியா?! அடடே!!
ReplyDeleteஹி ஹி செய்து பார்க்க பொறுமையில்லை.
Deleteஆமா! நீங்க பாட்டுக்கும் 'தேமேன்னு பக்கோடா சுடப் போய்ட்டீங்கன்னா யார் சார்வாகனுக்கும் வவ்வாலுக்கும் தீனி போடறது அப்புறம் டீ ஆத்தறது..!
ReplyDeleteசட்டு புட்டுன்னு சீக்கிரம் வாங்கோன்னா...!
கீழே உள்ள படம் தான் என்னை பின்னூட்டம் இட வைத்தது! படமும் போஸும் அருமை..! இனிமேல், ஐம்பதிலும் ஆசை வரும் என்று சொல்வதை விட என்பதிலும் ஆசை வரும் என்று சொல்லவேணும்...! இது நியாமனா ஆசையும் கூட...!
பாட்டி சொல்லைத் தட்டாதே!
@நம்பள்கி
ReplyDeleteஎங்க ஹவுஸ் பாஸ் சமையல் பகுதியும், முடிந்தால் மேலும் சில பதிவுகளும் எழுதுவார். நாம \\தீனி போடறது அப்புறம் டீ ஆத்தறது..!\\ எல்லாம் தொடருவோம்.
ஃ போட்டோவை ரசித்தமைக்கு நன்றி நம்பள்கி!!
ஜெயதேவ்,
ReplyDeleteதனி வலைப்பக்கத்தை குடும்ப வலைப் பக்கமாயதற்கு நன்றி.
அடுத்து மாஸ்டர், மிஸ் ஜயதேவிடமிருந்து பதிவு வருமா? :))
இதென்ன 'பக்கோடா பதிவு' என்று யாரும் (பெரியார் பாணியில்) சொல்லி விடாதிருக்க கண்ணனை வேண்டிக் கொள்ளுங்கள்..
@ | * | அறிவன்#11802717200764379909 | * |
Deleteஉங்க பேருக்கு பின்னாடி என்ன நம்பர் சார் அது!! எங்க பசங்க என்னை மாதிரி இல்லை சார், அவங்க advanced ஆக எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்!! வாசித்தமைக்கு நன்றி...........
பகோடா பதிவு அருமை.
ReplyDeleteவிரைவில் செய்து பார்க்கிறேன்.
@ ஸ்ரவாணி
Deleteசெய்து பார்த்திட்டு பதில் எழுதுங்க மேடம்!!
Madam also has arrived to blog world? Good ! Good !!
ReplyDeleteஎல்லாம் உங்கள் ஆசீர்வாதம்!!
Deleteநீங்க உஜாலாவுக்கு மாறிட்டீங்க போலன்னு நினைச்சேன்...
ReplyDeleteஹவுஸ் பாஸ்ட்ட தாங்க்ஸ் சொல்லிருங்க...Yummy...
அப்படியே கொஞ்சம் பார்சலும்...வித் கட்டி சட்னி....-:)
@ ரெ வெரி
ReplyDeleteநாங்க அனுப்ப ரெடி சார், ஆனா உங்களுக்கு வந்து சேரும்போது மெரீனா படத்தில் வர்றது மாதிரி கெட்டி சட்டினி கெட்ட சட்டினியாயிடுமே!!
That is a nice simple Explanation it helps beginners to make this recipe easily
ReplyDeletehttp//www.sharpprints.blogspot.com