Wednesday, November 14, 2012

For all practical Purposes!! மாணவர்களுக்கு சரியான உதாரணம் தந்த ஆசிரியர்!!



ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் இயற்பியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டாலும் அது சூரியனை வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றி வந்தாலும் For all practical Purposes பூமி நிலையாக இருப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

அடுத்து, புவிஈர்ப்பு விசை, பூமியின் மையத்திலிருந்து தூரத்தைப் பொறுத்து மாறுபட்டாலும்,  For all practical Purposes அதன் மதிப்பு 9.8 மீ/வினாடி^2 என்ற மாறாத மதிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

இப்படியே எதற்க்கெடுத்தாலும்  For all practical Purposes என்ற சொற்றொடரை ஆசிரியர் பயன்படுத்த ஆரம்பித்தார்.  மாணவ/மாணவிகளுக்கு அது கொஞ்சம் விளங்கவில்லை.  அதனால், ஆசிரியரிடம், சார் இந்த சொற்றொடருக்கு அர்த்தம் விளங்கவில்லை. கொஞ்சம் புரியும்படியா சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ஆசிரியர் அப்படியே யோசிச்சார், இதுங்களுக்கு எப்படிடா புரிய வைக்கலாம்னு.........  டக்குன்னு ஒரு யோசனை வந்தது.  வகுப்பைப் பார்த்துச் சொன்னார்.  இங்க பாருங்கப்பா, யாருமே இல்லாத ஒரு ரூம்ல எதிரெதிர் சுவத்தில ஒரு பையனையும், ஒரு பொண்ணையும் நிற்க வச்சிட்டதா நினைச்சுக்கோங்க.   அவங்களுக்கு இடையே என்ன தூரம் இருக்கோ அதில பாதி தூரத்தில அவங்க ஒவ்வொரு முறையும் நெருங்கி வருவாங்கன்னு வையுங்க.  அதாவது முதலில் இருவரும் இருபது அடி தூரத்தில் இருந்தால், அடுத்து பத்தடி தூரத்தில் இருப்பாங்க அதற்கடுத்து, ஐந்தடி தூரம் இப்படி படிப்படியா குறைஞ்சுகிட்டே போகும்.  தூரம் குறைந்து கொண்டுதான் போகிறதே, கணக்குப் படி பார்த்தால் இவர்கள் இருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் தொட முடியுமா?  முடியாது.  ஆனால், ஒரு ஐந்தாறு தடவை இவர்கள் இப்படி ஒருத்தரை ஒருத்தர் நெருங்கி வந்தால், They are close enough For all practical Purposes!! என்றார்.  ஆஹா, இப்போ புரிஞ்சது சார், என்றார்கள் எல்லோரும்!!


2 comments:

  1. ஹா.... ஹா.... நல்லாவே புரிஞ்சி போச்சி...!

    ReplyDelete
  2. close enough For all practical Purposes - இப்படி விளக்கமா பேராசிரியர்களால் மட்டுமே விளக்க முடியும். நமக்கு (என்னை சொன்னேன்)இப்படி சொன்னாதானே புரியுது.

    ReplyDelete