Wednesday, May 7, 2014

தமிழ் படங்களில் காப்பியா......எவன் சொன்னான்?

வணக்கம் மக்கள்ஸ்!!

தமிழ் சினிமாக்கள் சிலவற்றின் கதைகள் ஆங்கிலப் படங்களைப் பார்த்து காப்பியடிக்கப் படுகின்றன என்ற தவறான குற்றச் சாட்டு அப்பாவி சினிமாக்காரர்கள் மீது சில பொறாமை பிடித்தவர்களால் இணையத்தில் பரப்பப் பட்டு வருகிறது.  பதிவுலகில் பெயரும் புகழும் சம்பாதித்து அதை வைத்தே நூறு கோடி பணம் சேர்க்கலாம் என்ற பேராசை பிடித்த பதிவர்கள் செய்யும் பித்தலாட்டம் அது.  ஆனால் அது உண்மையல்ல. 

 

உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த "தெய்வத் திரு(ட்டு)மகள்" என்ற படம்  ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை I am Sam என்ற ஆங்கிலப் படத்தைப் போலவே இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அது காப்பி என்ற அபாண்டமான பழியைச் சுமத்தி இருக்கிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மையை தெளிவு படுத்த விரும்புகிறேன், அந்த படம் காப்பியெல்லாம் இல்லை.  எப்படி தெரியுமா?  கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள்.


ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் குழந்தைக்கு பலூன் வாங்கப் போகும் காட்சியில் எல்லா பலூன்களும் ஒரே நிறத்தில் இருக்கின்றன, இடது புறமாக இருந்து வலது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள்.  குழந்தை கதாயகனின் கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறது.
அதே தமிழ் படத்தில், பல வண்ண பலூன்கள், வலது புறமாக இருந்து இடது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள்.  குழந்தை தனியாக முன்னால் நடக்கிறது.
இது மாதிரியெல்லாம் உத்து உத்து பார்த்தால் I am Sam படத்துக்கும், தமிழில் வந்த படத்துக்கும் ஆறு வித்தியாசமாச்சும் நிச்சயம் கண்டு பிடிச்சிடலாம்.  சாமர்த்தியசாளிகளால் அது சாத்தியம்வே!!  மூணு மணி நேரப் படத்துக்கு ஆறு வித்தியாசம் போதாதா?  அப்புறம் எப்படி காப்பியடிச்சான்னு விவரமில்லாம சொல்றீங்க?

சிலர் இதோட மட்டுமல்ல பல படங்களுக்கும் இதே குற்றச் சாட்டை வைக்கின்றனர்.  அவை அனைத்துமே தவறு.

இந்திரன் சந்திரன் Moon Over Parador படத்தோட காப்பியம்.  அட மக்குங்களா, அந்த படத்தில மீசையை ஒட்டுவான், இதில மேசையை ஷேவ் பண்ணுவான், போதாதா?  ரெண்டும் வேற வேறப்பா!!

ராஜபார்வை கிளைமேக்ஸ் பார்த்தால் The Graduate படத்தோட கிளைமேக்ஸ் மாதிரியே இருக்காம்.  அட குருட்டு பசங்களா, ஆங்கிலப் படத்தில் அவனுக்கு கண்ணு தெரியுது, தமிழ் படத்தில் தள்ளிகிட்டு போறவனுக்கு கண்ணு தெரியாது, ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லாதீங்கப்பு!!


அதே மாதிரி எனக்குள் ஒருவன் Reincarnation of Peter Proud மாதிரியே தான்  தோணும்,அது  வெறும் மனப் பிராந்தி.  தெளிவா இருங்க, ரெண்டும் வேற!!


என்னய்யா இது ரெண்டும் ஒரே மாதிரி இருக்கேன்னு நீங்க வம்புக்கு வருவீங்க.  அதுக்கும் நாங்க ரெடியா பதில் வச்சிருக்கோம்.  உதாரணத்துக்கு, ரெண்டு பேர் லவ் பண்ற மாதிரி படமெடுத்தா அது, "ஏக் துஜே கே லியே"  மாதிரியே இருக்குன்னு சொல்வீங்களா?  அப்போ லவ் பண்ற மாதிரி யாருமே இனி படமே எடுக்கவே முடியாதே!!  அப்படின்னு கிடிக்கி பிடியா போடுவோம், உங்க பதில் என்ன ?  [ஆஹா........ மாட்டிகிட்டீங்களா.......... மாட்டிகிட்டீங்களா..........!!].

அப்போ என்னவெல்லாம் செய்தால் ஒரு படம் இன்னொரு படத்தில் இருந்து காப்பியடிச்சதுன்னு சொல்லலாம்?  ஒரிஜினல் கதை தான் என்று  எப்படிச் சொல்வது?


எந்த கட்டத்தில் ஒரு படம் இன்னொரு படத்தின் காப்பி என்று சொல்ல முடியும்?

இது யார் வழுக்கைத் தலையன், யார் இல்லை என்று சொல்வது போல கஷ்டமான கேள்வி.  என்ன வழுக்கைத் தலையனா, அதுக்கு இங்க என்ன சம்பந்தம்ன்னு புரியவில்லை தானே!!  பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்!!   ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம்.  அவனை வழுக்கைத் தலையன் என்போம்.  அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள்.  இப்போ அவன் வழுக்கைத் தலையன்  இல்லை என்போமா?  கிடையாது!!  சரி இன்னொரு முடியை சேர்ப்போம். அவன் தலையில் ரெண்டு முடி உள்ளன. இப்போ?  ஹி .......ஹி ....... இப்பவும் அவர் வழுக்கைத் தலையன் தான்.  இப்படியே அவர் தலையில் முடிகளை அதிகரித்துக் கொண்டே செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போ கேள்வி: எந்த ஒரு முடியை அவர் தலையில் சேர்க்கும்போது அவரை வழுக்கைத் தலையர் இல்லை என்போம்?  [இதையே ரிவர்சிலும் சொல்லலாம்.  தலை முழுக்க முடி உள்ளவனிடம் இருந்து ஒவ்வொரு முடியாக நீங்க வேண்டும்.  எந்த ஒரு ஒரு குறிப்பிட்ட முடியில் அதை நீக்கும் பொது அவர் வழுக்கை என்ற பெயர் பெறுவார்?  இது ஏதோ ஒரு லஜிக்காம், எனக்கும் முழுசா தெரியலை]

அப்படி இருக்கு இந்த காப்பியடிச்ச கதை!!  காப்பி என்றால் இருவர் காதலிக்கும் காட்சியைக் கூட இன்னொரு முறை எடுக்க முடியாது.  அப்படியே ஒரு படத்தில் இருந்து ஒன்னொன்னா சேர்த்துகிட்டே போனா எப்போ அது காப்பின்னு சொல்லலாம்?  எதுவரை காப்பி இல்லை?
 
சரி இப்போ சில தமிழ் படங்கள் கதை உருவாவது எப்படி என்று பார்த்தால், இது பற்றி செய்தி  தாட்கள் மூலம் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.  வடிவேலு, "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்று சொன்னது போல இதற்கென்று ஏதாவது நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு சம்பந்தப் பட்டவர்கள் கதையைப் பற்றி விவாதிப்பார்கள்.  "ஸ்டோரி டிஸ்க ஷன்" என்று இதற்குப் பெயர். அந்த ரூமில் அப்படி என்னதான் நடக்கும்?  ஆங்கிலப் பட வீடியோ கேசட்டுகள் [தற்போது சி.டிக்கள்] எடுத்து வந்திருப்பார்கள், அவற்றில் நாலஞ்சு படத்தைப் பார்த்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று பிச்சு போட்டு, நம்ம கலாச்சாரத்துக்கு [அப்படின்னு ஒன்னு முன்ன இருந்தது, இப்போ சீரழிஞ்சு போச்சுங்கிறது வேற விஷயம்!!] ஏற்ற மாதிரி அங்கங்க கொஞ்சம் டிங்கரிங் பண்ணுவார்கள்.  அதாவது ஆங்கிலப் படத்தில் கதாநாயகி, நாயகன் மற்றும் வில்லன் இருவருடனும் கசாமுசா செய்வதாக இருக்கும்.  இங்கே நாயகனுடன் மட்டும் தான் அது நடக்கும், வில்லனைப் பார்த்ததும், "நீங்க ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டிருந்தா பரவாயில்லை, ஒரு தாயைப் பார்த்து ஆசைப் படலாமா?" என்பது போல மாற்றி விட வேண்டும், அவ்வளவு தான் கதை ரெடி.

 இதையெல்லாம் காப்பி என்று சொல்வது தவறு.  இதற்கு வேறு பெயர் இருக்கிறது.

உடல் ஊனமுற்றவர்கள்-மாற்றுத் திறனாளிகள்
விபச்சாரம் செய்வோர்-பாலியல் தொழிலாளிகள்
இலவசம்-விலையில்லா பொருள்
இரண்டு இனத்துமல்லாதவர்கள்-திருநங்கைகள்
புட்டுகிட்டான்-வைகுண்டப் பதவியை அடைந்தார்.

இப்படியெல்லாம் கண்டுபிடிச்ச நாம் காப்பியடிப்பதை மட்டும் சும்மா விடுவோமா?

காப்பியடித்தல் - இன்ஸ்பிரே ஷன்.

எங்க ஆளுங்களுக்கு வருவது இன்ஸ்பிரே ஷன் !!   God Father படத்தை காப்பியடிக்கவில்லை, இன்ஸ்பிரே ஷன்ஆகி Xerox செய்தார் அம்புட்டுதேன்!!

தொடர்புடைய பதிவுகள்:

சினிமா கதைகள்- எங்கேயிருந்து உருவப் பட்டன? -லிஸ்ட்.

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

 கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

தமிழ் சினிமாவில் ‘அதிபுத்திசாலிகள்’ : எ காப்பி ஸ்டோரி

"கொலாப்ஸ்" வருண்: நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........??

வணக்கம் மக்கள்ஸ்!!

இது ஒரு வம்பிழுக்கும் பதிவு, வேண்டாமென்பவர்கள் ஒரு ஸ்டேப் பேக் ஆகிக்கோங்க.  இந்தப் பதிவை படிக்க நீங்க கொஞ்சம் அதிகம் படித்திருக்க வேண்டும்.  எவ்வளவு தெரியுமா?  அது ரொம்ப ஜாஸ்தி!!  எட்டாம் கிளாஸ்!! அதில் வரும் அறிவியலும் கணிதமும் தெரிந்திருக்க வேண்டும்.  ஹி .......ஹி .......ஹி .......  [நம்ம கொலாப்ஸ் இதுக்கே  நாறிப் போய் கிடக்கிறார் என்பது தான் காமடி!!].

பதிவர்கள் வீண் சண்டை போடக்கூடாது என்று நமது நலன் விரும்பும் சில மூத்த பதிவர்களின் ஆதங்கம் நமக்கும் புரிகிறது.  ஆனாலும் ஒரு சிலவற்றை பாக்கி வைக்காமல் முடிக்க வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றது.  அவை, நெருப்பு, கடன், நோய், கொடிய எதிரி- இவற்றையெல்லாம் மிச்சம் வைக்காம காலி செய்துவிட வேண்டும், மிச்சம் வச்சா அது பின்னாடி நம்மையே காலி செய்துவிடும்.

அந்த வகையில் கொலாப்சின் உண்மையான ரூபத்தை தோலுரித்துக் காட்டுவதில் இறங்கிய நாம் அதை முடிக்காமல் நிறுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,  ஆனால் இது தொடராது நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்போம் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்!!

"கொலாப்ஸ் பிளீஸ்........!!" மாமா வருண் அவர்களுக்கு தமக்கே எல்லாம் தெரியும் மற்றவன் அத்தனை பேரும் மடையர்கள் என்ற எண்ணம் வெகு காலமாகவே இருந்து வருகிறது.  இதை நாட்டு வெடி வைத்து தகர்த்தெறிந்தவர் பதிவர் வவ்வால்.  அதை தொடர்ந்து செய்தும் வருகிறார்.  இதனால் பல வலைப்பூக்களில் கொலப்சின் டவுசர் கிழிக்கப்பட்டது.   வவ்வால் போடுவதில் தனது டவுசரை கிழிக்கும் பின்னூட்டங்களை தடுக்க தன்னுடைய தளத்திற்கு "கமண்டு மாடரேஷன்" வைத்தார், தனது கேனத்தனம் வெளிப்படுத்தும் வவ்வாலின் பின்னூட்டங்களை வெளியிடாமலேயே தவிர்த்தார்.  இப்படியே தினமும் டவுசர் கிழிந்ததால் ஏற்பட்ட அவமானத்தால் கூனி குறுகிப் போன "கொலாப்ஸ்" வருண் உள்ளுக்குள்ளயே புழுங்கி புழுங்கி மனோவியாதிக்கு ஆளாகிப்போனார். வவ்வாலை நேரடியாக எதிர்கொள்ள வழியில்லாமல் ஒரு கள்ள பெயரில் ஐ.டி . யை உருவாக்கி சொந்த பதிவிலேயே பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறார்.  அத்தோடு நில்லாமல் தனியாக வவ்வாலை தாக்குவதற்கென்றே ஒரு பிளாக்கையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  சுட்டி.

படித்தவன் சூதும் வாதும் செய்யலாமா?  செய்தால் அவன் கதி .......  என்னவாகும் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

"எதற்கெடுத்தாலும் விக்கிபீடியாவைப் படித்து அதைப் புரிந்து கொள்ளாமலேயே சும்மா அடித்து விடுகிறவர்" என வவ்வாலை இவர் குற்றம் சுமத்துகிறார்.   வவ்வாலை "விக்கிநக்கி" என்ற ஒரு தரங்கெட்ட புது வார்த்தையைப் பயன்படுத்தி அழைக்கிறார்.  ஆனால் உண்மையில் யார் விக்கிநக்கி என்பதைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


கொலாப்ஸ் தன்னை விஞ்ஞானத்தில் எக்ஸ்பெர்ட் என்று சொல்லிக் கொள்கிறார்.   அப்பேற்பட்டவர்,

உயிர் வாழ எது முக்கியம்?  ஹைட்ரஜனா,  ஆக்சிஜனா இல்லை தங்கமா?

என்று கேள்வி கேட்டு பதிவு போட்டிருக்கிறார்.  இதை வச்சு ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்கப் போறாராமாம்.

"ஏன்யா முதலில் ஆக்சிஜன் இல்லாம உயிரினம் தோன்றியிருக்குமா?  வெறும் ஹைட்ரஜன் Gas ஐ மட்டும் வச்சிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா?  அதே மாதிரி ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு பயன்பாடு இருக்கிறதல்லவா?  எனவே, எந்த மடையனாச்சும் இப்படி ஒரு ஒப்பீடு செய்வானா?"  என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.  ஆனால்  இப்படி கேனத் தனமாக சிந்திப்பது தான் கொலாப்ஸ் வருணின் ஸ்பெஷலே!!  அதையும் படிச்சிட்டு ஆஹா....... என் அறிவுக்கண்ணை திறந்து உட்டுட்டீங்கன்னு சொல்லி பின்னூட்டம் போடும் மாங்கா மடையனுங்களும் இருக்கானுங்க என்பது தான் உச்சகட்ட காமடி.

சரி ஒரு கருத்தை விளக்குவதற்கு கற்பனை கதைகள் தேவை தான், அவை லாஜிக்குக்கு அப்பாற்பட்டவை என்றே எடுத்துக் கொள்வோம்.  ஆனால் அடுத்து எது பெரிசுன்னு தீர்ப்பை சொல்ல ஒரு அறிவியல் பாடம் எடுத்திருக்காரே, அதை ஒரு எட்டாம் கிளாஸ் பையனை கூப்பிட்டு காண்பித்தாலும் கைகொட்டி சிரிப்பான், காரி துப்புவான்.  சுட்டி.

சரி இதுக்கு அப்படி என்னதான் தீர்ப்பு என்ன சொல்ல வருகிறார்?  ஹைட்ரஜன் தான் இருப்பதிலேயே முக்கியமாம்.  காரணம்?  ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்து Atomic Fusion ஆவதால் தான் சூரியனில் இருந்து வெளிச்சம் வருதாம். அதனால் தான்.  நமக்கு தூக்கிவாரிப் போட்டுடிச்சு.  என்னடா இது ஹைட்ரஜன் ஹீலியமா மாறுவதால் தானே சூரியன் போன்ற நட்சத்திரங்களில் வெளிச்சம் உருவாகுதுன்னு எட்டாம் கிளாசில் படிச்சோம்,  வெறும் ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்தா எப்படி ஹீலியமா மாறும், எதை வச்சு இந்த எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் இந்த அடி அடிக்கிறாருன்னு குழம்பிடுச்சு.

அவரு அதுக்கு போட்டிருந்த படத்தை பார்த்த அப்புறமா விளங்குச்சு. அதை  விக்கிபீடியாவில இருந்து எடுத்திருக்கார் !!  சரி எடுத்தாரு போட்டாரு, அங்கே சொல்லியிருப்பதை இவரு புரிஞ்சிகிட்டாரா என்றால் அங்கதான் இடிக்குது.   ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் சுழற்சிக்குப் பெயர், proton–proton chain reaction.

The proton–proton chain reaction is one of several fusion reactions by which stars convert hydrogen to helium.

இதில் proton–proton என்ற வார்த்தையை படித்த இந்த மாங்கா ரெண்டு புரோட்டான் சேர்ந்து ஹீலியமா மாறுதுன்னு அதுவாவே அர்த்தம் பண்ணிகிச்சு, அப்படியே பதிவும் போட்டுடுச்சு. 
இந்த படத்தில் மொத்தம் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் [சிவப்பு வண்ணம்] ஈடுபட்டுள்ளன, வினையின் முடிவில் அவற்றில் நான்கு ஹீலியம் அணு உருவாவதற்கு போக  இரண்டு ஹைட்ரஜன்அணுக்கள் மீதம் உள்ளது.   எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் உண்மையில் ஒன்னு ரெண்டு எண்ணுவதிலேயே ஃ பெயில்!!  எதையும் யோசிப்பதில்லை, அல்லது பொறுமையாகப் படிப்பதும் இல்லை.  சும்மா அடித்து விடுவது.  இத்தனையும்  செய்துவிட்டு தான் எழுதுவதை படிக்க வரும் இளிச்சவா பயல்களை [Gullible] தான் எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் என்று நம்ப வைப்பதில் கைதேர்ந்தவர் கொலாப்ஸ்!!விக்கிபீடியாவில் படிச்சிட்டு அந்த படத்தை அப்படியே எடுத்து பதிவில் போட்டுவிட்டு, அவன் சொல்லியிருப்பதை புரிந்துகொள்ளாமல் கேனத்தனமாக அர்த்தம் செய்துகொண்டு, தன்னுடைய முட்டாள் மண்டையில் பட்டதை எழுதும் மாமா கொலாப்ஸ் பிளீஸ்.......  வருண் தான் உண்மையிலேயே விக்கிநக்கி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர், அவரை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது.

இந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு அடுத்தவர்களை விக்கிபீடியாவை மட்டும் படித்தவன் என்று ஏளனம் செய்வது சரியா? ஆனால், கொலாப்ஸ் வருண் அதையும் செய்வார், அதுமட்டுமல்ல தவறை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார், தான் சொன்னது அத்தனையும் சரிதான்..... சரிதான்.........  என்று சப்பை கட்டும் கட்டுவார்.  அதுசரி, நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........?? எல்லாம் ஒன்னு தானே!!

Tuesday, May 6, 2014

பதிவர் வருனுக்கு வந்திருப்பது "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" என்னும் மனச்சிதைவு நோய்.

வணக்கம் மக்கள்ஸ்!!

கொலாப்ஸ் பிளீஸ்.................  வலைப்பூவை நடத்தி வரும் பதிவர், மாமா, கொலாப்ஸ் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப் படும் திரு. வருன் [நல்லா கவனிங்க நான் போட்டிருப்பது வருன், கடைசி எழுத்து "ன்", உச்சரிப்பில் இதே பெயரை வச்சிக்கிட்டு கொள்ளை பேரு நாட்டில் இருக்கலாம், அதற்கு நான் பொறுப்பல்ல!!] அவர்களுக்கு ஏதாவது மன வியாதி இருக்கலாம் என நாம் யூகித்தோம், அது உண்மைதான் என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.

கொலப்சுக்கு வந்திருப்பது "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" என்னும் மனச்சிதைவு நோய். இதை வேலூரைச் சார்ந்த டாக்டர். கியூட்டி பிகாசோ [Dr.Cutie Picasso] என்ற மனோதத்துவ நிபுணர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.  இது என்ன நோய், என்ற விவரங்கள் குறித்து நாம் டாக்டர். கியூட்டி பிகாசோஅவர்களைக் கேட்டு புரிந்து கொண்டோம்.  அதை இங்கே உங்களுக்குத் தருகிறோம்.


நீங்கள் அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்.  அதில் மெல்லிய மனம் படைத்த அம்பியாக விக்ரம் இருப்பார்.  சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து அந்நியனாக உருவெடுப்பார்.  ஆனால் இங்கே கொலப்சுக்கு அப்படியே தலை கீழ்.

நடைமுறையில் அவர் அந்நியன் போல கொடூரமான கேரக்டர்.  தளிர் சுரேஷில் இருந்து, தமிழ் இளங்கோ, வீடு திரும்பல் மோகன் குமார் வரைக்கும்  எல்லோரையும் காரணமேயில்லாமல் இம்சை பண்ணுவார், ஆனால் மனதுக்குள் நாமும் நல்லவனாக வாழக் கூடாதா என்ற ஏக்கமும் அவருக்கு இருக்கிறது.

இதுதான் கொலாப்ஸ் பிளீஸ்........ வருனின் நிஜ கேரக்டர்...................

இந்த கேரக்டரா ஆகனும்னு மனசுக்குள் ஆசை...............

ஆனால் அவரால் நல்ல கேரக்டராக மாற முடியவில்லை.  இருந்தும் அவரது ஆள் மனதுக்குள் அந்த ஆசை தீவிரமாக வளர்ந்து மென்மையான "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" ஆக மாறுகிறார்.  இதன் விளைவாக அந்த மென்மையான குணம் வரும்போது அனானி பெயரில் அவரது வலைப்பூவிலேயே பின்னூட்டங்கள் போடுவார்.  அப்புறம் அடாவடி வருனாக வந்து பதிலும் போட்டுக் கொள்வார்.  ஆனால் படிப்பவர்களுக்கு ரெண்டு பின்னூட்டமும் ஒருத்தருடையது மாதிரியே இருப்பதாகத் தோன்ற, இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா என்று காரி உமிழ ஆரம்பித்தனர்.  உடனே அனானி ஆப்ஷனையே தனது பதிவில் இருந்து நீக்குகிறார் அடாவடி கேரக்டரில் இருந்த கொலாப்ஸ்.

ஆனாலும், நல்ல கேரக்டராக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவே இல்லை.  அதன் விளைவாக புது கேரக்டர் ஒன்று உருவானது.  அதன் பெயர்தான் அனந்து ராமகிருஷ்ணன்!!  இந்த சாப்ட் கேரக்டர் என்ன பண்ணும் தெரியுமா?  கொலப்சுக்கு எதிராக  பதிவு போட்டால் அங்கே போய் அனானி பெயரில் லந்து பண்ணும், ஆனால் சொந்தப் பதிவில் அனந்து ராமகிருஷ்ணன் என்ற பெயரிலேயே பின்னூட்டம்  போடும்.  அதில், ஐயா நீங்க நேர்மையானவர், வல்லவர், நல்லவர் என்று கொலாப்சை புகழும், எதிரியாகக் கருதுபவர்களை வசை பாடும்.  அதற்கு அடாவடி கேரக்டர் ஒரிஜினல் ஐ.டி யிலேயே வந்து, "ஆமாம் பாத்தியா?"  என்று பதிலும் போடும். 

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, அனந்து ராமகிருஷ்ணன் என்ற ஒரு  "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" கேரக்டர் இருப்பதே கொலப்சுக்குத் தெரியாது, ஆனால் அனந்து ராமகிருஷ்ணனுக்கு கொலாப்ஸ் கேரக்டர் இருப்பது தெரியும்.  இதனால், கொலாப்ஸ் "நான் அனானி பெயரிலோ, சாப்டு கேரக்டர் அனந்து ராமகிருஷ்ணன் பெயரிலோ எங்கும் பின்னூட்டம் போடுவதில்லை" என்றே சொல்லிக் கொண்டிருக்கும்.  அது பொய் என்று மற்றவர்கள் நினைக்கக் கூடும்.  ஆனால் அது உண்மையே.  அப்படி ஒரு கேரக்டர் இருப்பதே அவருக்குத் தெரியாது, ஆகையால் அவரைத் தெரியாமலேயே இதெல்லாம் நடப்பதால் அவர் மறுக்கிறார்.  எனவே அவர் மீது தப்பேயில்லை, யாரும் சந்தேகப் படாதீர்கள்.

இந்த வியாதிக்கு தீர்வுதான் என்ன என்பதையும் டாக்டர். கியூட்டி பிகாசோ விடம் கேட்டோம்.  அதற்கு சக பதிவர்களாகிய நாம் தான் உதவ வேண்டுமாம்.  என்ன செய்ய வேண்டும்?  அந்த அடாவடி கொலாப்ஸ் கேரக்டர் எல்லோரையும் வம்பிக்கிழுக்கும்,  திட்டி பின்னூட்டம் போடும்.  நாம் ஐயோ பாவம், மனோ வியாதி என்று விட்டு விட்டால் அது ஆபத்து [நமக்கில்லைங்க, அவருக்கு!!].  வியாதி இன்னும் முத்திப் போகும்.  பதிலுக்கு லூசு, மெண்டல்...........   என்று என்னென்ன மட்டமான வார்த்தைகள் தெரியுமோ அத்தனையும் கொண்டு அவரைத் திட்ட வேண்டும்.  ஆள் குஷியாயிடுவார், வியாதியும் படிப்படியாகக் குறையும்!!  எல்லோரும் இதைக் கடை படித்தால் கொலாப்சிடம் அவர் விரும்பும் மென்மையான பண்பு வளர்ந்துவிடும்!!

பின் குறிப்பு:  இந்தப் பதிவுக்கும் இன்னொரு பதிவில் வெளியான பின்னூட்டங்களுக்கும் [சுட்டி] எந்த சம்பந்தமுமில்லை.  அவ்வாறு நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Monday, May 5, 2014

கொலாப்ஸ் பிளீஸ்.........!! புலித்தோல் போர்த்திய பூனை!!

வணக்கம் மக்கள்ஸ்!!

இந்தப் பதிவில் நம்மை வம்பிக்கிழுத்த ஒருத்தருக்கு கணக்கு செட்டில் செய்யப் போகிறோம்.  வம்பு சண்டை வேண்டாம்பா என்பவர்களும், மென்மையான உள்ளம் கொண்டவர்களும் ஒரு ஸ்டெப் பேக் ஆகிக்கோங்க.....  டென்ஷனாகாதீங்க "ரிலாக்ஸ் பிளீஸ்............!!"

முதலில் பிரச்சினையின் பின்னணி என்ன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.  [வரலாறு முக்கியம் அமைச்சரே!!]

"கொலாப்ஸ் பிளீஸ்............!!"  என்ற வலைப்பூ உங்களில்  தெரிந்திருக்கும்.  நாம் வலைப்பூ ஆரம்பிப்பதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பே அதற்கு வாசகராக இருந்துள்ளோம், பல பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டுள்ளோம்.  அதன் ஓனர் "கொலாப்ஸ்" அவரும் நம் கடைக்கு அவ்வப்போது வருவார்.


நாம் ஆத்தீகர், அவர் நாத்தீகர் [அப்படின்னு சொல்லிக்கிறார்!!].  எனவே நமக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள்  தவிர்க்க முடியாதவை.

ஆனாலும் பொதுவாகவே,

  • அவர்  கருத்துக்கள் அத்தனையும் வெளியிட்டிருக்கிறோம், ஒருபோதும் எதையும் நீக்கியதில்லை.
  • முடிந்தவரை நமது பதிலை, நிலைப்பாட்டை, அவை அவருக்கு ஏற்கத் தக்கதாக இல்லாவிடினும், சொல்லியே வந்திருக்கிறோம்.
  • அவரை எதிர்த்து ஒருபோதும் கடுஞ் சொற்களைப் பயன்படுத்தியதில்லை.

மொத்தத்தில் அவரது கருத்துகளை  நமது பதிவில் வெளியிட முழு சுதந்திரம் கொடுத்தே வந்துள்ளோம்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நாம்,

‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகளுக்கு பதில்கள்...............

என்று  ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம்.  அதில் "கொலாப்ஸ்" பின்னூட்டமிட்டிருந்தார்.  நாமும் வழக்கம் போல பதிலும் தந்தோம்.  என்ன ஆயிற்றோ தெரியாது.  குடு.....குடுன்னு... அவரது கடைக்கு ஓடினார், நம்மை கன்னா........பின்னாவென்று கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி ஒரு எதிர் பதிவைப் போட்டார்.  சுட்டி.

நல்லா கவனிக்கணும், இவர் இந்த மாதிரி வேலை செய்வது இது முதல்முறை அல்ல, மேலும் இவர் சண்டையிடுபவர்கள் எல்லோரும் வம்பிழுப்பவர்களும் அல்ல.  நமக்கு முன்னாடி வீடு திரும்பல் மோகன் குமாரிடம் சண்டைபோட்டு அவருடைய பதிவில் போட்டிருந்த பின்னூட்டங்கள் அத்தனையும் அழித்துவிட்டு "உன் கூட கா.........." என்று திட்டிவிட்டு ஓடி வந்திருக்கிறார்.  மோகன்குமார் யாரிடமும் வம்புசண்டைக்கு போகாதவர், அன்பானவர், புதியவர்களை ஆதரிப்பவர்.  ஏதோ நாம் தான் வம்பிழுக்கிறோம் சண்டை போட்டார், ஆனால் மோகன்குமார்?

நமக்குப் பின்னும் இவர் இன்னொருத்தரை நொந்து போக வைத்திருக்கிறார்.  அவரோ இன்னமும் வெள்ளந்தி, பதிவர் தமிழ் இளங்கோ. என்னதான் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பின்னூட்டமிட்டாலும் பொறுமையாகவே பதில் சொல்லுவார்.  அவரையே பொறுமையிழக்கச் செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!  கொலாப்ஸ் பதிவிற்கு சுட்டி.  இந்தப் பதிவிற்கு மெண்டல், லூசு போன்ற வார்த்தைகளை தனது பதிவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்திய பெருமை கொலப்சையே சாரும்.  தமிழ் இளங்கோவின் பதிவு சுட்டி.

பதிவர் தமிழ் இளங்கோ நொந்து போய் பதிவு போட்டதும் கொலாப்சுக்கு ரொம்ப சந்தோசம்.  அப்படி மகிழ்ச்சியா கொலாப்ஸ் போட்ட பதிவு சுட்டி.

ஒருவரது எழுத்துக்களை வைத்தும் அந்த நபரைப் பற்றி சில குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.  அன்பர் கொலப்சின் எழுத்துக்களைப் படிக்கும் போது அவர் வம்புசண்டைக்குப் போகக் கூடிய ஆள் இல்லை.  மென்மையானவர், ஆனால் வடிவேலு "நானும் ரவுடி தான்" என்பது போல, வம்பு சண்டைக்காரன் என்ற பிம்பத்தை வெளிப்படையாக உருவாக்க நினைக்கிறார்.  அது ஏன் என்பது மட்டும்  விளங்கவில்லை. ஒரு பூனை புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயமுறுத்த நினைக்கிறது, ஆனால் அதனால்  புலி போல கர்ஜிக்க முடியவில்லை, "மியாவ்..........மியாவ்.........." என்றே கத்தி காமடி செய்கிறது!!


இதையெல்லாம் வச்சிப் பார்க்கும் போது ஒன்னு மட்டும் தெளிவா புரியுது.  அன்பர் கொலப்சுக்கு இருப்பது ஒருவித மனோ வியாதி.  எங்கேயாச்சும் போய் தினமும் வம்பு சண்டை இழுக்க வேண்டும்.  அது யாராக இருந்தாலும் கவலையில்லை.  சாதுவா இருக்கிறவங்களை கீழ்த்தரமான வார்த்தைகளை பேச வைக்க வேண்டும்.  உடனே இவருக்கு ரொம்ப சந்தோசம்.  இதற்கு காரணம் பதிவர் வவ்வாலு சொன்னாரு, அமரிக்காவில் வேலை செய்யும் கொலாப்சை அவரது முதலாளி வெள்ளைக்கார துரை  போட்டு வறுத்தெடுக்கிறார் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை இங்கே பதிவுலகில் வந்து கொட்டுகிறார்".  எனக்கென்னவோ இது கூட சரியாத்தான் இருக்கும் போலத் தோணுது.

ஐயா, மனோ தத்துவ நிபுணர்களே இந்த வியாதிக்கு பேரு என்ன, அதுக்கு தீர்வு என்ன?  கண்டுபிடிச்சு இந்த கொலப்சை சரி பண்ணுங்கப்பா..........  தொல்லை தாங்க முடியவில்லை!!

Friday, May 2, 2014

உயிர் வாழ முக்கியம் எது ? நாட்டாமை கொலாப்ஸ் பிளீஸ்.............தீர்ப்பு!!

வணக்கம் மக்கள்ஸ்!!

கிராமங்களில் ஒரு கதை சொல்வார்கள்.  ஒரு பெண் எப்போதும் ஒரு கூடையை தலையில் சுமந்து செல்வாளாம்.  அதில் என்ன விசே ஷமாக இருக்கும்?  ஒரு விளக்குமாறும் ஒரு முறமும் இருக்கும்.  எதுக்கு இதெல்லாம்?  அவருக்கு வம்பு சண்டை போடுவதென்றால் ரொம்ப விருப்பம்.  சண்டை போடத் தேவையான "ஆயுதங்களை" எந்த நேரமும் அவருடைய கூடையிலே தயாராக வைத்திருப்பார்.   சண்டை போடாவிட்டால் தலையே வெடித்துவிடும்.  இதையறிந்து அவ்வூர் பெண்கள் அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டனர்.  அந்நிலையில் ஒரு நாள் அவருக்கு யாரும் சண்டைபோட கிடைக்கவில்லை.   அன்றைக்கு யாரோ ஒரு அம்மா, ஊருக்கு புதியவர், தெரியாமல் அவரைப் பார்த்து, "ஏம்மா எப்போ பார்த்தாலும் அந்த கூடையை தலையிலேயே சுமந்துகிட்டு இருக்கீங்க, இறக்கி வச்சிட்டு கொஞ்ச நேரம் உட்காருங்களேன்?" என்று தெரியாமல் சொல்லிவிட்டார்களாம்.  "ஆஹா.....  வந்துதடி சண்டை, இறக்கடி கூடையை" என்று கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, "என்னைப் பார்த்து கூடையை எதுக்கு சுமக்கிறாய்ன்னு நீ எப்படிடீ கேட்கலாம்?" என்று ஆரம்பித்து கூச்சல் போட்டு வீதியில் உருண்டு புரண்டு சண்டையை போட்ட பின்னர் தான் அன்றைக்கு தூக்கமே வந்ததாம்!!

இப்படி ஒரு பதிவர் இருந்தா எப்படி இருக்கும்?!!  அவர் தான் கொலாப்ஸ் பிளீஸ்........... என்ற வலைப்பூவின் ஓனர்,  எல்லோரையும் ரிலாக்ஸ் பிளீஸ்........ன்னு சொல்லிட்டு இவரு எப்ப பாத்தாலும் டெண்ஷானவே திரியறாரு.  சில தினங்களுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்காரு.  அதுக்கு பதிவர் வவ்வால் வந்து வேண்டிய குடைச்சலை குடுத்திட்டு போயிருக்காரு, அதிலேயே ஆள் ஒரு வழியாயிட்டாரு.  ஏன்னா எழுதியது அவ்வளவு மரண மொக்கை அத்தனையும் உண்மைக்குப் புறம்பானவை.  சரி நம்ம பங்குக்கு எதாச்சும் பண்ணணுமில்லையா, அதான் இந்த பதிவு.

இவரு ஒரு படத்தை போட்டிருக்காரு.  சூரியனின் வெளிச்சம் உண்டாவது எப்படி என்பதுதான் இவரு விளக்கியிருக்காரு.  இதோ அந்த படம்.

இரண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேந்து நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன்.

படத்துக்கு கீழே எழுதியிருப்பது நானில்லைங்க, அவரேதான்.  [சூரியனில் இருந்து ஒளி எவ்வாறு உருவாகிறது என்பதை இந்தப் படத்தை வச்சு இவரு விளக்குகிறாராம்!! ]  இரண்டு ஹைட்ரஜன்அணுக்கள் சேர்ந்து ரியாக்சன் நடக்குதாம்.  ஆனால் சரியாக கவனித்தால் இரண்டுக்கும் மேலே ஹைட்ரஜன்அணுக்கள் உள்ளன என்பது புரியும். சிவப்பு வண்ணத்தில் உள்ளவை ஹைட்ரஜன் அணுக்கள் என்றால் மொத்தம் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் மேற்கண்ட வினையில் ஈடுபட்டுள்ளன.  ஆனால் இந்த முண்டம் ரெண்டு என்று சொல்கிறது.

சூரியனில் வெளிச்சம் உருவாவது ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுவாக மாறுவதால் தான் என்று எடுத்துக் கொண்டால்  கூட நான்கு ஹைட்ரஜன்அணுக்கள் சேர்ந்து ஒரு ஹீலியமாக மாறுகிறது என்று தான் பொருள்படும்.  எதை வச்சு இந்த முண்டம் ரெண்டுன்னு சொல்லுதுன்னுதான் புரியலை.

சரி அது போகட்டும், அடுத்து ஹைட்ரஜன் சொல்லிச்சாம்,

 " நாந்தான் ஹைட்ரஜன். என்னை அழித்துக்கொண்டுதான் நான் ஒளி உருவாக்குறேன்."

இங்க தான் கவனிக்கணும்.  ஹைட்ரஜன் எங்கே அழிந்தது?  ஹைட்ரஜன் அணுக்கருவில்  இருந்தது புரோட்டன் மட்டுமே, அவை ஹீலியத்தில் புரோட்டான்களாகவும், நியூட்ரான்களாகவும் அப்படியேதானே இருக்கின்றன, எங்கே அழிந்தன?

இது எப்படி இருக்குன்னா,

"மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை குடிக்காதீங்க"  என்றானாம் ஒருத்தன்.

"ஏன்?"

"அந்த தண்ணீரில் இருந்து மின்சாரம் எடுப்பதால் அந்தத் தண்ணீரில் இருந்த மினரல்ஸ் எல்லாம் போயிடுச்சு, அதனால் குடிக்காதீங்க"  என்றானாம்.

இவரு விடும் கதையும் அப்படித்தான் இருக்கு!!

அடுத்தது இவரு கருத்து கந்தசாமியாகும் முக்கிய பார்ட்.

உலகில் எது முக்கியம்?  ஹைட்ரஜனா, ஆக்சிஜனா அல்லது தங்கமா?

"சூரியனில் உண்டாகும் ஒளிக்கு காரணம் நான் எனவே நானே பெரியவன்"-ஹைட்ரஜன்.

"உயிர் வாழ பிராண வாயு நான் தானே முக்கியம், அதனால் நான்"-ஆக்சிஜன்.

"உங்க எல்லோரையும் விட அழகு நான் தான், மக்கள் எனக்குத்தான் முக்கியத்துவம் தர்றாங்க, எனவே நான் தானே முக்கியம்?"- இது தங்கம்.

சரி நாட்டமை கொலாப்ஸ் கொடுக்கும் தீர்ப்பு என்ன?

"ஒளி இல்லாட்டி மத்த இரண்டும் இருந்தும் பிரயோஜனம் இல்லை, எனவே ஹைட்ரஜனே பெரியவன்!!"

ஐயையோ ......... என்ன கீழே உருண்டு புரண்டு சிரிக்கிறீங்க?  அவரு இதோட நிறுத்தவில்லைங்க, இதை வச்சு இன்னொரு வாழ்க்கை தத்துவத்தையும் சொல்லியிருக்கார்!!  அது என்னன்னு சொல்லும் அளவுக்கு நமக்கு மசாலா இல்லீங்க.

ஆனா ஒன்னு,  இந்த சூரியனில் ஒளி எப்படி வந்துச்சு, அதுக்கு அடிப்படை ஹைட்ரஜன் தான் என்பதைக் கண்டுபிடிச்ச இந்த மாங்கா, ஆக்சிஜன், தங்கம் இதெல்லாம் எதிலிருந்து வந்துச்சுன்னு ஆராய்ச்சி பண்ணாம போயிடுச்சு, அப்படி யோசிச்சு இது பதிலை தேடியிருந்தா மேலே மூணு அணுக்களுக்கும் நடுவில சண்டையே வந்திருக்காதே!!

சரி, இந்த மொக்கை பதிவை படிச்சதுக்கு ஒரு பயனுள்ள தகவல்:

ஹைட்ரஜன் அணுக்கள் சேர்ந்து ஹீலியம் அணுவாக மாறுவதால் உண்டாகும் காமா கதிர் வடிவிலான ஆற்றல் ஒளியாக சூரியனின் மேற்ப்பரப்பை அடைய ஆகும் காலம் எவ்வளவு?

10,000 வருடங்கள் முதல் 1,70,000 வருடங்கள் வரை!!

சூரியனின் மேற்ப்பரப்பில் இருந்து நம்மை அடைய?

எட்டே நிமிடங்கள்!!

எனவே தற்போது நம்மீது விழும்சூரிய ஒளி குறைந்த பட்சம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவானது!!

இந்த வினாடியில் சூரியனை எடுத்து விட்டாலும் அடுத்த எட்டு நிமிடங்களுக்கு நம்மால் சூரியனைப் பார்க்க முடியும்!!