Sunday, July 21, 2013

உண்மையைச் சொன்னேன் by களவாணி பய [நீங்க கிளீன் போல்டு.....!!]

நன்றி:
உண்மைய சொன்னேன்
1.ஃபேஸ்புக் கம்பனியின் வெற்றிக்கு காரணம் அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை இருக்கும்..!

2.பெண்சிசுக்கள கொல்லாதீங்க........பெண்ணினம் பெருகட்டும்..அடுத்த தலமுற பசங்களுக்காவது ஈசியா பிகர் செட்டாகட்டும்..!!

3.அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சி கூவுறது சேவல் பேரு வாங்குறது கோழி.."கோழி கூவுது "
4.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை ..
5. நம்முடைய சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை நாம் வரி என்ற பெயரில் அரசியல்வாதிகளின் ஆடம்பராங்களுக்காக செலவழிக்கிறோம் ...

6. பல பேர் திருடுகிறார்கள்.மாட்டிக்கொண்டவர்கள் திருடர்கள் என அறியப்படுகிறார்கள்‍‍‍‍‍‍‍ ..

7. முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து பேர் அண்ட் லவ்லி அல்ல Adobe Photoshop..

8.நிம்மதியாக வாழ்வதற்காக நிம்மதி இல்லாமல் அலைவது தான் வாழ்க்கை.

9.ஆவின் நஷ்டம்ன்றதால பால் விலை உயர்த்தப்பட்டதைப் போல டாஸ்மாக்குகள் லாபத்தில் இயங்குவதால் குவாட்டர்விலையை குறைபதில்லை.

10. எல்லா ஆம்பளைகளுக்கும் கல்யாணமான பின்னாடிதான் தெரியுது...இந்த "லவ் செண்டிமெண்ட்" எல்லாம் எவ்வளவு கேனத்தனம்'னு.

11.யார் கூட இருந்தா நல்லா இருப்போம்னு நினைப்பது பொண்ணுங்க மனசு...
யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைப்பது பசங்க மனசு...
12.”காதலிக்க யாரும் கற்றுக்கொள்வதில்லை!.. காதலித்த பின்புதான் கற்றுக்கொள்கிறார்கள்.... தக்காளி இனி காதலிக்கவே கூடாது ...

13.உலகத்துலேயே நல்ல அம்மா நம்மகிட்ட இருக்காங்க.. ஆனா அழகான காதலி மட்டும் அடுத்தவன் கிட்ட தான்இருக்கு..

14.
வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்க்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..

15."ஓடு கொசுவே ஓடு"னு தான் விளம்பரம் வருது,"சாவு கொசுவே சாவு", ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே.

16.லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இருக்கும் வித்தியாசம் அடுத்தவரிடம் இருந்து வாங்கினால் லஞ்சம்...!!
நீயே எடுத்துகிட்டா ஊழல்.!

17.ஏழைக்கு வயிற்றை நிரப்பவும் பணக்காரனுக்கு கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது -கஞ்சி.
18. மாட்டை அடக்கினால்தான் பெண் என முன்னோர்கள் ஏதோ சூசகமாக சொல்லி இருக்கிறார்கள்.
19.முதல் கோணல் முற்றிலும் கோணல் ..... தோல்விதான் வெற்றிக்கு முதல் படி - ஒரே குழப்பமா இருக்கு.
20. பிச்சை எடுப்பவனுக்கு ஒரு ருபாய் போடும் முன் பலமுறை யோசிக்கும் நாம், எந்த கேள்வியும் இல்லாமல் டிவி சேனல்களுக்கு SMS அனுப்புகிறோம்.
 
உங்களுக்கும் களவாணிப் பயலைப் பிடித்திருந்தால் Facebook கில் அவரைப் பின் தொடரலாமே!!
 

Sunday, July 14, 2013

பாம்புகள் பின்னிப் பிணைந்து ஆடுவது எதற்கு?

வணக்கம் மக்கள்ஸ்!!

இன்றைய  தினமலரில் ஒரு படத்துடனான செய்தியைப் படித்தேன்.  அது பாம்புகளைப் பற்றியது.  கீழே படமும் செய்தியும்.

விளையாடிய பாம்புகள்:
திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஜம்மனை பள்ளத்தில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி, பிணைந்து விளையாடிய காட்சியை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

இந்தச் செய்தியில் பாம்புகள் "விளையாடி"யாதகச் சொல்லியுள்ளார்கள். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அவை இரண்டும் காதல் போதையில் களிநடனம் செய்து கொண்டிருக்கின்றன என்றுதான் நினைக்கிறோம்!!  காரணம் அவை ஒன்றோடொன்று சுற்றி பிணைதல், அப்படியே உயரே எழுப்புதல் பின்னர் தரையில் விழுதல் என ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருக்கும்.  இதை எங்கள் ஊரில் நாங்கள் நேரில் காண வாய்ப்பு கிடைத்தது.  இருபது பேருக்கும் மேல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தாலும் அவை தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே கண்டுகொள்ளவேயில்லை.  இதையெல்லாம் வைத்து அவை சல்சா செய்து கொண்டிருக்கின்றன என தப்புக் கணக்கு போடுகிறோம்.  அது நிஜம்தானா?


இல்லவே  இல்லை!! உண்மையில் அந்த இரண்டு பாம்புகளில் ஒன்று கூட பெண் பாம்பு இல்லை, இரண்டுமே ஆண் பாம்புகள்தான்!! அடக் கருமமே......  அப்போ....  அவனா நீயி.... வேலையிலா அவை ஈடுபட்டிருக்கின்றன?  அதுவும் இல்லை!!  அவை இரண்டும் ஒரு பெண் பாம்புடன் யார் இணைவது என்று தீர்மானிப்பதற்கான வீர விளையாட்டில் ஈடுபட்டுள்ளன.  அதுசரி, இதில் வெற்றி தோல்வி எப்படி தீர்மானிக்கப் படும்?  இவ்வாறு உடலை பிணைத்து உயரே எழும்பும் போது எந்தப் பாம்பின் தலை மேலே இருக்கிறதோ அதுவே வெற்றி பெற்றதாகும்.  இது பல ரவுண்டுகளுக்கப்புரம் தீர்மானிக்கப் படுமோ என்னவோ!!  பின்னர் தோல்வியடைந்த பாம்பு, நேர்மையாக தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இடத்தை காலி செய்யும், வெற்றி பெற்ற பாம்பு ஒளிந்திருக்கும் பெண் பாம்பை சொந்தம் கொண்டாடி அதனுடன் இணைந்து இனவிருத்தியில் ஈடுபடும்.  சிங்கம், யானை, மான், ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகத்தில் இருந்து அலிகேட்டர் [மனிதன்.......  ஹி........ஹி........ஹி........] வரை இதே கதை தான் போல!!



மேலும் படிக்க:

1. Rat snakes' combat dance

2. Male snakes' charming 'mating ritual'


Friday, July 5, 2013

நியூட்டனின் வாழ்வில் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை கருண்!!

இன்று

 நியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா?

 இதில் நியூட்டன்  கார் ஓட்டிக் கொண்டு சென்றதாக சொல்லப் படுகிறது.  இதே கதையை ஐன்ஸ்டீனை  வைத்தும் பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  இது நிஜமாகவே நடந்ததா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏதோ சுவராஸ்யமான கற்பனை கதை தோன்றினால் அதை வரலாற்றில் புகழ் பெற்றவர்கள் பெயரைப் போட்டு கதையாக்குவதை பலர் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை என்று நாம் பார்க்க வேண்டியிருக்கிறது!! அப்படி யோசித்த போது கருணின் கதையில் நமக்கு ஒரே ஒரு லாஜிக் ஓட்டை மட்டும் தெளிவாகத் தெரிகிறது.  நியூட்டன் வாழ்ந்த காலம் 1642-1727.  ஆனால், வணிக ரீதியான கார்கள் 1888-ல் தான் பென்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதாகவும், அதற்க்கு முன்னர் நியூட்டன் மறைந்து 50 வருடங்கள் ஆன பின்னர் 1700 களின் பிற்பாதியில் தான் நீராவி வண்டிகளே இருந்ததாகவும் வரலாற்றுப் பக்கங்கள் சொல்கின்றன.  அப்புறம் எப்படி நியூட்டன் காரில் போயிருப்பாரு?

ஆனால் கருண் கொஞ்சம் ஜாக்கிரதையாவே எழுதியிருக்கார்.  கார் என்று ஆங்கிலத்தில் எழுதினாலும், ட்ரைவரை கடைசி வரை சாரதி என்றே குறிப்பிட்டிருக்கிறார்.  கேட்டால் குதிரை வண்டியில் போனார் என்று சொல்லிவிடலாம்.  அதுவும் கார் தானே!!  ஹா..........ஹா..........ஹா..........

முழு  கதை:




நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம். அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் ...! புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு.

ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார். தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார் மிக நீண்ட தூர பயணம் .. இடம் நெருங்கி வந்த போது நியூட்டன் சாரதியிடம் சொன்னார் நான் கார் ஓடுகிறேன் நீ பின்னுக்கு இரு ..சாரதி தயங்கினாலும் இறுதியில் சம்மத்தித்து இருந்தார்.

பல்கலைக்கழகம் வந்தது ..நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் .. விழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க .. நியூட்டன் மேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் ...மேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் .... அப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சாரதி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்க்கிச்சென்றார்.

பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே ...