Sunday, April 28, 2013

ஹார்ட் அட்டாக்: எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது...........

வணக்கம் மக்கள்ஸ்!!

எங்கள் ஊரில் ஒரு பையன், வயது முப்பதுக்குள்தான் இருக்கும்.  திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருக்கிறது.  ஒருநாள் திடீரென மாரடைப்பு, அகால மரணம்.  இவனுக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இருக்கிறது.  எங்கள் ஊரில் வாரம் இரு முறை ஆடு கசாப்பு போடுவார்கள், புதன், ஞாயிறு.  இரண்டுநாளும் இவன் வாங்குவான், இவன் மட்டுமே அரைக்கிலோ உள்ளே தள்ளுவான்.  அது மட்டுமல்ல கோழியும் அவ்வப்போது முழுதாகத் தள்ளுவான்.  ஆனால், உடல் உழைப்பு அவ்வளவாகக் கிடையாது, துணிக்கடையில் உட்கார்ந்தபடியே கஷ்டமர்களுக்கு துணியை கட் பண்ணி விற்பது தான் இவரது வேலை.  சின்ன வயசில் செத்துட்டனே என்ற வருத்தம் இருந்தாலும் இவ்வளவு சின்ன வயதில் இவனுக்கு ஏன் மாரடைப்பு வந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆக தவறான உணவுப் பழக்கம், தேவைக்கு மீறி கொழுப்பு வகைகளை உண்ணுதல் போதிய உடலுழைப்பு இல்லாமை -இவைதான் மாரடைப்பு இளவயதில் வருவதற்கான காரணம் என்று நானும் வெகு நாட்களாக நம்பியிருந்தேன்.  ஆனால் இந்த நினைப்பைத் தவறு என்று உணர்த்துகின்ற வகையில் சமீபத்திய சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் செய்தித் தாள்களில் படித்த ஒரு செய்தி வியப்பாக இருந்தது. 45 வயதை நெருங்கும் யோகா சொல்லித் தரும் மாஸ்டர் ஒருவருக்கு மாரடைப்பு.  இவர் யோகா கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாது தானும் தீவிரமாக பயிற்சி செய்பவர், அசைவம் உண்ணுவதில்லை, வெஜிடேரியன் உணவை பிராச்சாரமும் செய்பவர்.  இப்படிப் பட்ட ஒருத்தருக்கு மாரடைப்பா....??  இது எதைக் கொண்டும் புரிந்துகொள்ள முடியாத விந்தையாகப் பட்டது.

இந்த குழப்பத்தில் இருந்து மீழும் முன்னர் இதே மாதிரி ஒரு சம்பவம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் எங்கள் அலுவலக முன்னால் ஊழியர் ஒருவருக்கும் நடந்திருக்கிறது.  வயது முப்பதை நெருங்குகிறார்.  தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  நல்ல வருமானம், சுத்த சைவம், ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய பையன், திருமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள், சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.  இது எதனால் நடந்திருக்கக் கூடும் என்று எங்களால் இன்னமும் யூகிக்கவே முடியவில்லை.

புவனேஷ்- எங்கள் அலுவலக முன்னாள் ஊழியர், சில தினங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்தார், காரணம் மாரடைப்பு.   இவரைப் பார்த்தால் மாரடைப்பு வந்து பொசுக்கென்று போயிடுவார் என்பது போலவா தெரிகிறது? 

எனவே, மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் கண்மணிகளே, ஹார்ட் அட்டாக் என்பது எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வந்திட்டா ஒன்னும் பண்ண முடியாது.  நான் சைவம்தானே சாப்பிடறேன், நல்லா எக்சர்சைஸ் எல்லாம் பண்றேனே, எங்க வீட்டில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையே..........  இதெல்லாம் மறந்திடுங்க. உங்கள் இதயம் நலமாக இருக்கிறதா என்பதை வருடத்திற்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது, உங்களில் 99.99% பேர் நலமுடன்தான் இருப்பீர்கள், இருப்பினும்  யாரவது ஒருத்தருக்கு பிரச்சினை இருந்தால் தவிர்க்கக் கூடிய நிலையிலேயே அதை சரி செய்து கொள்வது நல்லது.

மீண்டும் சந்திப்போம் வணக்கம் மக்கள்ஸ்!!

Friday, April 26, 2013

பால்வினை நோய்கள் வராமல் தவிர்க்க மருந்து கட்டிப் பிடி வைத்தியமா?

வணக்கம் மக்கள்ஸ்!!

சமுதாய நன்மைக்காக இராத்திரி பகலா உழைக்கும் நம் நடிகர்கள், நாட்டில் எயிட்ஸ் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும், அந்நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவத்திற்கு நிதி திரட்டவும் தங்களால் முடிந்த முயற்சியைச் செய்கிறார்கள்.  அந்த மாதிரி ஒரு  நிகழ்ச்சிக்கு ரிச்சர்ட் கெரே அப்படின்னு ஒரு வெள்ளைக்கார நடிகரை பாலிவுட் நடிகை [பேரு ஷில்பா ஷெட்டி], அழைத்து வந்தார்.  விழா மேடைக்கு அந்தாள் கையைப் பிடிச்சு ஷில்பா அழைத்துச் சென்றார் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கலாலாம், உடனே ஷில்பவின் கையைப் பிடிச்சு லைட்டா ஒரு கிஸ் வச்சான், அந்தம்மா ஒன்னும் சொல்லலை புன்னகையோட இருந்தாங்க, பொது மேடைன்னு கூட பார்க்காம மெல்ல கட்டிப் பிடிச்சான், அதுக்கு புன்னகைதான் பூத்தாங்க அந்தம்மா.  அப்புறம் அவனுக்குள் இருந்த மிருகம் ஆவேசமா புறப்பட்டிருக்கும்னு நினைக்கிறேன்.  பிடிச்சு நாய் கவ்வுரா மாதிரி ஷில்பாவை ஒரு கவ்வு கவ்வுனான்.  இஷ்டத்துக்கும் கிஸ்ஸோ  கிஸ்தான்......  [ஐயா..... புண்ணியவான்களே, பல் இருக்கிறவன் பக்கோடா சாபிடுறான் உனக்கென்ன அப்படின்னு ஒரு தத்துவத்தை மட்டும் பொழிய ஆரம்பிச்சுடாதீங்க, காது புளிச்சு போச்சு இங்க அது மேட்டரே இல்லை, பிரச்சினை வேற........].எய்ட்ஸ் போன்ற பால் வினை நோய்கள் வரக்காரணம் என்ன?  கண்ட கண்டவங்க கூட தகாத உறவு வைப்பதால் தானே?  அது குறித்த விழிப்புணர்வு என்றால், "அடேய் கல்யாணம் என்ற பந்தத்திற்குள் மட்டும் பெண்ணோடு தொடர்பு வைத்திருங்கள் வெளியில் வேண்டாம்" என்று புத்திமதி சொல்வீர்களா, இல்லை அதே மேடையில் நாய் மாதிரி நடந்து கொள்வீர்களா? இதுவா விழிப்புணர்வு?இப்போ விஜய் தொலைக்காட்சியிலும் அதே மாதிரி ஒரு கேம் ஷோ, அதில் வெல்லும் பணம் கேன்சர் மற்றும் எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவச் செல்லும்.   இங்கேயும் ரெண்டு பெண்களோட கட்டிப் பிடி வைத்தியம் + ஒரு கிஸ்.  அதில் தப்பர்த்தம் எதுவும் இல்லை, அன்பின் வெளிப்பாடு என்பதாக வைத்துக் கொள்வோம், அதே கட்டிப்பிடி வைத்தியம்+ கிஸ் இரண்டையும் ரெண்டு ஆண்களை அழைத்து செய்திருக்கலாம், அது ஏன் பெண்களுக்கு மட்டும்?  ஐயா உங்களுக்கு ஸ்ட்ராங்கா பல்லு இருக்கு, பக்கோடாவை சாப்பிடுங்க, ஆனா பப்ளிக்கா நாலு பேர் பார்க்கிற மாதிரி மொறுக்...... மொறுக்குன்னு சாப்பிடாதீங்க.  உங்க சொந்த வாழ்க்கையைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால், "என் பெட் ரூமை ஏன் எட்டிப் பார்க்கிறீங்கன்னு" நீங்க கேள்வி கேட்க்கிறீங்க நியாயம் தான், ஆனா நீங்க உங்க பெட் ரூமுக்குள்ள என்ன பண்றீங்கன்னு மேடை போட்டு சொல்லாமல் தவிர்க்கலாமே?ஒரு பெண் ஒரு ஆணுடன் வசிக்கிறாள்,  வீட்டு வேலைகளை இருவரும் பங்கிடுகிறார்கள், இரவில் உடல் ரீதியாக உறவு........  இப்படி வாழ்நாள் முழுவதும் இருந்தா அது திருமண பந்தம் தான்......  திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும்.

இதே செயல்பாடுகளை அப்பப்போ ஆட்களை மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தால் அதற்குப் பெயர் விபச்சாரம், சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.  இதற்க்கு நட்பு/Living together அப்படின்னு வேறெந்த பெயரில் சொன்னாலும் அது உண்மையல்ல.

நாங்கள் நட்பாக இருக்கிறோம் திருமணம் செய்யாமல் வாழ்கிறோம் என்பதெல்லாம் டுபாக்கூர். அப்படியெல்லாம் பார்த்தால் நாமக்கல் லாரி டிரைவர்கள் எல்லாம் வட இந்திய மாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டிச் செல்லும் பொது சாலை ஓரத்தில் பெண்களுடன் நட்பாகவும், இரண்டு மணிநேர Living Together  செய்தோம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.  ஆனால் பால்வினை நோய்கள் வருவது அந்த மாதிரி செயல்களால் தான்.  பெண்ணைத் தொடுதல், கிஸ் பண்ணுதல் இத்யாதி....... இத்யாதியெல்லாம் அவளை மணமுடித்தவன் செய்யட்டும், மற்றவன் ஒதுங்கி இருப்பது தான் பால்வினை நோய்கள் வராமல் தவிர்க்கும்.  மனித மனம் ஒரு குரங்கு, அதன் கையில் வாழைப் பழத்தைக் கொடுத்து எட்டு மணி நேரம் வேடிக்கை பார் என்றால் அது சும்மா இருக்காது.  அதையெல்லாம் தூண்டுவதைப் போல பொதுவில் செய்யாமல் இருப்பதே பால் வினை நோய்களைத் தவிர்க்கும்.  அது நடந்தால் நீங்க எந்த நிதியும் திரட்ட வேண்டியதில்லை.

Wednesday, April 24, 2013

இறந்தவர் உடலை தகனம் செய்யும் முன்னர் குளிப்பாட்டுவது எதற்கு?


மதுரை மாவட்டம், திருமங்கலம்
அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர்
அசோகன் (வயது 45).
இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள்
உள்ளனர். அசோகன் தி.மு.க. கிளைச்
செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில
நாட்களுக்கு முன்பு அசோகனுக்கு திடீர
மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே உறவினர்கள் அவரை மதுரையில்
உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்
சிகிச்சை பலனின்றி அசோகன்
நேற்று மதியம் இறந்து விட்டதாக
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்
கூறினர்.
இதையடுத்து உறவினர்கள்
அவரது உடலை சொந்த
ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்
ஏற்பாடுகளை செய்தனர் அசோகனின் உடல்
ஊர்வலமாக
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதில் உறவினர்கள், கட்சியினர்
கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட
அவரது உடலை தகனம்
செய்வதற்கு முன்பு அசோகனின் உடல்
மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.
அப்போது அவரது உடல் அசைந்தது.
சிறிது நேரத்தில் அவர்
எழுந்து அமர்ந்தார். இதைப்பார்த்த
அவரது உறவினர்கள்
அங்கிருந்து அலறியடித்துக்
கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் அவரது மனைவி கணவர்
உயிரோடு தான் இருக்கிறார்
என்று மிகவும் சந்தோஷப்பட்டு ஆனந்த
கண்ணீர் வடித்தார். பின்னர் அவர்
அசோகனுக்கு பழச்சாறு கொடுத்தார்.
அதைக் குடித்த அவர் தான் நன்றாக
இருப்பதாக கூறினார்.
இதையடுத்து உறவினர்கள்
அசோகனை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
டாக்டர்களால் இறந்து விட்டவர்
என்று கூறப்பட்டவர்
உயிரோடு எழுந்து உட்கார்ந்த அதிசயம்
அப்பகுதியில்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள து.
கடந்த சில
நாட்களுக்கு முன்பு இதே போல்
டி.கல்லுப்பட்டி ,
மீனாட்சி புரத்தை சேர்ந்த நடராஜன்
மாரடைப்பால் இறந்து விட்டதாக
அதே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள்
கூறினார்கள். ஆனால் அவருக்கும்
இறுதி சடங்குகள் செய்த போது, மீண்டும்
உயிர் பிழைத்தார்.
நன்றி:
என்ன ராக்கம்மா,மாமனுக்கு அஞ்சு ஆறு கஞ்சி கிஞ்சி உதுறது ?!?
 [Facebook]
 

Tuesday, April 23, 2013

[மொக்கை] வௌவாலுக்கு எந்த ஊர்.......!!

வௌவாலுக்கு எந்த ஊர்......??        பதில்: புனே, மகாராஷ்டிரா.

அன்புள்ள மக்கள்ஸ்!!

இந்தப் பதிவு மரண மொக்கை, [மத்த பதிவு மட்டும் என்ன வாழுதா....அப்படின்னு நீங்க கேக்குறீங்க, நியாயம்தான்!!]. இதன் நோக்கம் திருமதி தமிழ் படத்தை விட மொக்கையா ஒரு பதிவு போடணும் என்பதே.  மொக்கை வேண்டாம்னு நினைச்சா இதற்க்கு மேல் தயவு பண்ணி படிக்காதீங்க, மீறிப் படிச்சா ஏற்ப்படும் டேமேஜுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


கரகாட்டக்காரன் படத்தில் ஒரு சீன்.  கோவை சரளாவும், செந்திலும் கவுண்டமணிக்கு ஆப்பு வைப்பது எப்படி என்று பேசிக் கொண்டிருப்பார்கள், அதை கவுண்டர் ஒளிந்துகொண்டு கேட்டுக் கொண்டிருப்பார். கோவை சரளா செந்திலிடம் சொல்வார்,

"அந்தாளுகிட்ட ஜாக்கிரதையா இருங்க, உங்க மூஞ்சியில ஆசிட் ஊத்திடுவான்!"

இதைக் கேட்டதும், கவுண்டமணி மறைவிலிருந்து வெளியே வந்து இருவரையும் பிடித்துக் கொண்டு சொல்லுவார்,  "ஏன்டி இந்த மூஞ்சப் பாருடி, எவனாச்சும்  இந்த மூஞ்சி மேல ஆசிட் ஊத்துவானாடி.  இது ஏற்கனவே நாலு வாட்டி ஆசிட் ஊத்தினா மாதிரி இருக்கேடி, இதுல ஆசிட் ஊத்திடுவேன்னு சொல்லி ஆசிட்டுக்கான மரியாதையே கெடுத்துட்டியேடி..." என்று கலாய்த்துத் தள்ளுவார்.  தமாஷாக இருக்கும்.

நிஜ வாழ்க்கையிலும் நம் மூஞ்சி மேல ஆசிட் யாராச்சும் ஊத்த மாட்டானா, அதன் மூலமா  "தோ பார்டா.......இவர்தான் ஆசிட் ஊத்தின மூஞ்சிக்காரர்" அப்படின்னு நாலு பேரு பெருமையா பேச மாட்டாங்களா என்று ஏங்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அப்படி ஒருத்தர் தான் நம்ம வவ்வால்!!
அவர் ஏங்குவது எதற்காக?  அவரோட சமீபத்திய பதிவு ஒன்றில் தான் சொன்னதெல்லாம் நடக்கிறது என்று சொல்லி [பார்ப்பதற்கு] தன்னையே மட்டம் தட்டிகொண்டது  போல எழுதியிருக்கிறார், இது ஏன் என்று கேட்டால்,

"நம்மளை நக்கல் விடுறளவுக்கு வட்டாரத்திலே ஆளே லேது, அதான் நமக்கு நாமே திட்டம் :-))"

இது பார்ப்பதற்கு சவால் போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளாகப் பார்த்தால் என்னை யாரும் நக்கலடித்து பதிவு  போட மாட்டார்களா என்ற ஏக்கம் இதனூடாகத் தெரிகிறது!!  இந்த ஏக்கத்திற்க்குக் காரணம் என்ன?  பொதுவாக பதிவுகளை திரட்டிகளில் இணைக்கிறோம், நம்ம கடைக்கும் நாலு சனம் வருது.  அப்படி இவர் திரட்டிகள் எதிலும் இணைப்பதில்லை.   அப்புறம் கடை வியாபாரம் படுத்திடுமே?!  அதற்க்கு பல்வேறு வழிகளைக் கண்டுபிடித்தார்.  அவை, பிரபல பதிவர்கள் பதிவுகளுக்குப் போய் பின்னூட்டங்களில் அவர்களை வாருவது,  அல்லது இளிச்ச வாயன் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுவது என்று பல்வேறு திட்டங்கள் மூலம் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள வேண்டிய நிலை.  இவரது பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் "ஆஹா அருமையா வாருறாரே", "ஓஹோ, அடுத்தவன் பிழைப்பில் சூப்பரா மண்ணை அள்ளிப் போடுறாரே" என்று நாலு சனம் இவரை நினைத்து பெருமிதப் பட்டு இவரோட கடைக்கு   வரமாட்டாங்களா என்ற எண்ணம் தான் இவரை இப்படிச் செய்ய வைக்கிறது.  அப்படியும் சிலர் எங்க கடைப் பக்கமே இனிமே வராதேன்னு விரட்டியடிசிட்டாங்க.  அப்போ விளம்பரத்துக்கு என்னதான் வழி?  தன்னை யாராச்சும் கலாய்த்துப் பதிவு போடனும்.   இதுதான் அவரது ஏக்கத்திற்க்கான காரணம்!!

நாம் அவருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறோம்,  அண்ணன் கவுண்டமணி சொன்ன மாதிரி ஆசிட் ஊத்தரதுக்கும் மூஞ்சுக்கு ஒரு தகுதி வேண்டும்.  ஆசிட் ஊற்ற வருபவன் கூட அட சீ இந்த மூஞ்சி மேலேயாடா ஆசிட் ஊத்தணும்னு வெட்கப் பட்டு ஓடிவிடுவது போல மூஞ்சி இருந்தா என்ன பண்ணுவது?  அது மாதிரி, உம்மை யாரும் கலாய்க்க வில்லை, அதற்க்கு காரணம் தைரியம்  இல்லை என்பதல்ல அதற்க்கு நீர் ஒர்த் இல்லை என்பதாகக் கூட இருக்கக்கூடும்.


ஆனால் நாம் இவரையும் மதிக்கிறோம், இவரது ஏக்கத்தைத் தீர்க்கும் வண்ணம் முன்னரே நாம் ஒரு பதிவு போட்டிருக்கிறோம், சுட்டி.   முடிஞ்சா நீங்களும் ஒரு மொக்கை பதிவு போட்டு இவரது ஏக்கத்தைத் தீர்த்து வையுங்க!!  மீண்டும் இன்னொரு மொக்கை பதிவில் சந்திப்போம் வணக்கம் மக்கள்ஸ்!!
Monday, April 22, 2013

"என்னை திருமணம் செய்துகொள் என்று கட்டயபடுத்தவில்லை... அவள் ரொம்ப நல்லவ.........."

வணக்கம் மக்கள்ஸ்!!

நாமெல்லாம் கம்பியூட்டர், ஐ-பாட், டச் ஸ்கிரீன் செல்போன் அப்படின்னு மாடர்ன் ஆகிகிட்டோ வரோம், அந்த முன்னேற்றம் எல்ல விதத்திலும் பிரதிபலிக்கணும் இல்லையா?  குறிப்பா, இந்த கல்யாணம் பண்ணிக்கிறது, புள்ளைகுட்டி பெத்துகிறது இருக்கு இல்ல, அந்த மேட்டரில் முக்கியமா முன்னேற்றம் தேவை.  என்ன முன்னேற்றம் அது?  கல்யாணமே பண்ணிக்காம ஒரே வீட்டில் இருந்துகிட்டு கல்யாணம் பண்ணியவங்க செய்யும் அத்தனையும் செய்வது.  அதுதான் அந்த முன்னேற்றம்.  அய்யய்யோ.......  அது இடுப்பில் இலை கொடிகளை சுற்றிக் கொண்டு, சிக்கி முக்கி கல்லை ஒன்றோடு ஒன்று அடித்து நெருப்பு பற்ற வச்சுகிட்டு இருந்தவங்க செய்த வேலையாச்சே?  திரும்பவுமா?  ஆமாம். அதுதான் இப்போ ஃ பேஷன், சீக்கிரம் நாடே ஜொலிக்கப் போவுது.

தமிழ் சினிமாவுக்கு ஐம்பது வருஷமா கலைச்சேவை பண்ணி, ஆஸ்கார் வாங்காம ஓயாமாட்டேன்னு சொல்லி, அது செத்தாலும் வேலைக்காகாதுன்னு தெரிஞ்சதும், வெள்ளைக்கார பயலுவ நம்மூருக்கு வந்து அவார்டு வாங்கிட்டு போயி அவங்க நாட்டில் பெருமையா சொல்லிக்கிற மாதிரி செய்யப் போறேன் அப்படின்னு பிளேட்டை திருப்பி போட்டு சொல்லிக்கிட்டு திரியும் ஒருத்தர் தான் இதற்க்கு முன்னோடி.  அவரோட சொந்த வாழ்க்கையை ரொம்ப கிளற வேண்டாம், நறுமணம் கம...கம.......... என்று வரும்.  அவரு சமீபத்தில விட்ட ஒரு ஸ்டேட்மன்ட் ரொம்ப டச்சிங்கா இருக்கும்.  அது:

"இப்போ என் கூட இருக்காளே, அவ என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒரு போதும் சொன்னதேயில்லை.  அதனால, அவ ரொம்ப நல்லவ!!"

திருமணம் என்ற வார்த்தையையே அருவருக்கத் தக்கது என்ற வகையில் இவர் மாற்றி வைத்திருக்கிறார் அத்தோடு நில்லாமல் அதைத் தொடர்ந்து பிரசாரமும் செய்துவருகிறார்.  எனக்கு ஒரு விஷயம் மட்டும் இன்னமும் விளங்கவேயில்லை.   ஒரு பெண்ணுடன் முறைப்படி திருமணம் செய்து வாழ்வதற்கும், லிவிங் டுகதர் செய்வதற்கும்  என்ன தான் வேறுபாடு?  "ஒரு பெண்ணோடு இணைந்து வாழ்தல் பிரச்சினை, அதை நான் தவிர்க்க விரும்புகிறேன்" என்றால் அது தனி விஷயம்.  ஆனால் நடப்பது அதுவும் இல்லை.  ஒரு பெண் மனைவி என்ற முறையில் ஆற்றும் சேவைகள் அத்தனையும் எனக்குத் தேவை, ஆனால் அதே சமயம் அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.   ஹி ........ஹி .......ஹி ........  கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.........ரொம்ப நல்லாத்தான் இருக்கு!! 

பின்வரும் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒரு பெண் உங்கள் வீட்டில் உங்களுடன் வசிக்கிறார், வீட்டில்  உங்கள் பிள்ளைகளை [அவர்கள் அவருக்கு பிறக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்] கவனித்துக் கொள்கிறார் , சமையல் செய்கிறார், அப்புறம் இரவில் இத்யாதி விஷயங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறார்.  இதெல்லாம் செய்யும் அந்த பெண்ணுக்கு , நீங்க என்ன முறை ஆகிறது?   அதுக்கு பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனாலும் டெக்னிக்கலி பார்த்தால் அவர் உங்கள் மனைவியாகத்தான் செயல்படுகிறார்.  என்னுடன்  இன்னார்  மேற்க்கண்ட முறையில் வாழ்கிறார் என்பதை பிறருக்குத் தெரியப் படுத்துகிறோம் அல்லவா?  அதற்க்கு பெயர் தான் திருமணம்.  ஒரு வேலை அப்படித் தெரியப் படுத்தா விட்டால், அந்தப் பெண்ணை வேறு யார் வேண்டுமானாலும் வந்து திருமணம் செய்து கொள்ள கேட்கலாம் அல்லது இவர் செய்தது போல என்னுடனும் லிவிங் டுகதர் பண்ணு என்றும் கேட்கலாம்.  இந்த மாதிரியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்க்காத்தான் முன்னோர்களாகப் பார்த்து திருமணம் என்று வரையறுத்திருக்கிறார்கள்.


அந்த பெண்ணை பொருத்தவரை திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும், அவருடைய செயல்பாடு ஒரு மனைவியாகத்தான் இருக்கிறது.  ஆனால் திருமணம் செய்யாவிட்டால், இருவருக்குமிடையே பிணக்கு ஏற்ப்பட்டு பிரிய நேரிடும்போது அந்தப் பெண் ஜீவனாம்சம் என்று எதையும் கேட்க முடியாது.  அப்படியே போக வேண்டியாதுதான்.  "என்னை திருமணம் செய்துகொள் என்று கட்டயபடுத்தவில்லை... அவள் ரொம்ப நல்லவ.........."  இதன் அர்த்தம்  "அவளை நான் எப்போது வேண்டுமானாலும் எளிதாக கலட்டி விட்டு விடலாம் ஆகையால் அவ ரொம்ப நல்லவ........" என்பதுதானோ?  என்ன இழவோ போங்க...... 

எது எப்படியோ, மக்களே லிவிங் டுகதர் ஒரு விஷம்.  இப்போ ஒன்னும் தெரியாது, ஆனால் பரவிவிட்டால் பேராபத்து.   எல்லாம் பண்ணிட்டு கடைசியாக நம்ம கலாச்சாரம்தான் இருப்பதிலேயே சிறந்தது என்று தெரியவரும்.  சூடு பட்டுத்தான் இதை தெரிந்து கொள்ளணும்னு அவசியமில்லை.  இது பணக்காரனுக்கு ஒத்து வரலாம் நம்மைப் போன்ற சாமான்ய மனிதனுக்கு அது ஒத்துவராது.  இந்த விஷம் பரவும் முன்னர் எண்ணத்தில் இருந்தே இதை நீக்கி விடுவது நலம்.

Tuesday, April 9, 2013

தமாஷாக சச்சின் வீழ்த்திய 52 விக்கட்டுகள்.

அன்புள்ள மக்கள்ஸ்!!

கிரிக்கெட் வியாபாரமானதிலும், சச்சின் வியாபாரியானதிலும் நமக்கு வருத்தம்தான்.  இருந்தாலும் நாமும் ஒரு காலத்தில் காலை முத்தால் மாலை வரை TV முன்னாடி உட்கார்ந்துகிட்டு இந்தியா ஜெயிக்கணும்னு உசிரை கையில் புடிச்சிகிட்டு மேட்ச் பார்த்தவன்தான் என்பதையும் இங்க ஒப்புக்கணும்!!இன்னைக்கு ஒரு காணொளி பார்த்தேன்.  சச்சின் எடுத்த விக்கட்டுகளில் 52-ன் தொகுப்பு.  இதில் பலமுறை, பிரையன் லாரா, இன்சாமாம் போல எதிரணி கேப்டன்களின் தலையையே சச்சின் உருட்டியிருக்கிறார்.  மேலும்  இக்கட்டான சூழ்நிலைகளில் நங்கூரம் பாய்ச்சியது போல ஸ்திரமாக நின்று கண்ணா பின்னா என்று விளாசித் தள்ளிக்கொண்டு இருந்தவர்கள் பலரை சச்சின் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்.  பேட்டில் பட்டு கீழே விழுந்த பந்து, பேட்ஸ்மன்  எங்கே......எங்கே ...... என்று தேடிக்கொண்டிருக்க, அது அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவரது  கால்களுக்கு நடுவே நுழைந்து எலி போல ஓடி விக்கெட்டை சாய்ப்பது வேடிக்கை.  பல முறை இறுதி ஓவர்களில் பேட்ஸ் மேன் பிட்சில் இறங்கிவந்து அடிக்க, அதை முன்கூட்டியே உணர்ந்து பந்தை வைடாகப் போட்டு விக்கெட்டை காலி செய்கிறார்.  அம்பயர் இரண்டு கைகளையும் அகல விரித்து wide  சிக்னல் காண்பித்துக் கொண்டிருக்க பேட்ஸ் மேன் ஸ்டம்பை விக்கட் கீப்பர் பதம் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.  பிரையன் லாராவின் கிளீன் போல்டாவது, ஸ்டம்படு ஆவது எல்லாம் கண்கொள்ளா காட்சி!!

சச்சின் உருட்டிய எதிரணித் தலைகள்!!

 Inzamam-ul-Haq-          7
B C Lara                          4
N Hussain                        1
A Ranatunga                   3
S R Waugh                      3
M E Waugh                     2
S P Fleming                     2
W J Cronje                      1
R T Ponting                    1
          
 1 66 
 2 19
 3 8
 4 4
 5 2

சுனில் கவாஸ்கர் சச்சின் தன்னிடம் கிரிக்கெட் pad ஐப் பரிசாகப் பெற்றதையும், அதற்க்கு நன்றி தெரிவித்து கார்ட் ஒன்றை கவாஸ்கருக்கு கொடுக்க சச்சின் அவர் வீட்டுக்குச் சென்றதையும் நினைவு கூர்கிறார்.  சச்சின் கையொப்பமிட்ட அந்த கார்டு இன்றைக்கு தன் மகன் ரோஹானின் அறையில் எங்கேயோ உள்ளது, ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை, இன்றைக்கு அது என் கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று வியக்கிறார் சுனில் கவாஸ்கர் !!

நன்றி:   கிரிக்கெட் அரசன் டெண்டுல்கர் Monday, April 8, 2013

நாணயங்கள்: வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இன்று வரை........


"மூன்று பைசாவுக்கு தெரு முனை கடைக்காரன் கை நிறைய அள்ளி கொடுக்கும் கொடுக்காபுளி " நன்றி:
பழைய ஞாபகந்தான் பேராண்டி

இப்படியெல்லாம் ஏங்கும் நல்ல உள்ளத்துக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

புரட்சித் தமிழனின் யோசனையை ஏற்று அண்ணன் கவுண்டமணிக்கு ஃபோன் போட்டு வாங்கிய ஓட்டை காசு!!


IPL: [நம்மை] இளிச்சவா பசங்களாக்கும் லீக்.

அன்புள்ள மக்கள்ஸ்!!

ஏதோ ஒரு படத்தில் ஒரு வில்லன் சொல்லுவான், "கிரிக்கெட் ஆட்டத்தில் ஜெயிப்பவன், தோற்ப்பவன் ரெண்டு பேரையுமே எனக்குப் பிடிக்கும், ஆனா உட்கார்ந்துகிட்டு பார்க்கிறானே, அவனை மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது, ஏன்னா அவன் அத்தனை பேரும் சோம்பேறிங்க".

நாம் இப்போதெல்லாம் கிரிக்கெட் மேட்சுகளைப் பார்த்து நேரத்தை வீணடிப்பதில்லை.  ஆனாலும் கிரிக்கெட் என்றால் ஏதோ ஒரு ஈர்ப்பு மனதுக்குள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஈர்ப்பு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது அண்டை நாடுகளான இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தானில் உள்ளோரிடமும் புரையோடிப் போய்க் கிடைக்கிறது. ஆனால், ஜப்பான், சீனா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில்  இதற்க்கு எந்த முக்கியத் துவமும் கொடுப்பதில்லை.  இந்த மாதிரி மக்கள் மனங்களில் குறிப்பிட்ட விஷயத்தின் மேல் நாட்டம் ஏற்ப்படுவது ஏன், அது இடத்துக்கு இடம் மாறுவது ஏன் என்று காரணம் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம், அதனால் அதை விட்டு விடுவோம்!!

வெள்ளைக்காரன் இங்கிலாந்தில் வருஷத்தில் இரண்டு மாதம் மட்டுமே வெயிலைப் பார்ப்பான் மற்ற மாதங்களில் வெறும் பனி பனி பனி........ தான்.  சூரியனைப் பார்த்து  நமஸ்காரமெல்லாம் பண்ணவே முடியாது.  அவங்களுக்கு சூரியன் தெரியும் போதெல்லாம்  சும்மனே வெயிலில் படுத்திருந்தாலே போதும் அதுவே சொர்க்கம் என்ற நிலை.  நாள் பூராவும் சும்மா இருக்க முடியுமா?  எதாச்சும் எங்கேஜ்மென்ட் வேணுமில்லையா!! அந்த சீதோஷ்ண நிலைக்கு அவன் கண்டுபுடிச்ச விளையாட்டு இந்த கிரிக்கெட்.  ஆனால் நம்மூரில் அப்படியா?  பகலில் வெளியில போனா மனுஷன் செத்தான் என்ற நாட்டில் நாள் முழுவதும் வெயிலில் நின்று ஆடும் ஆட்டம் சரிப்பட்டு வருமா?  வராது.  அதனால் 11 பேர் ஆடுறான், மிச்ச பேரெல்லாம் உட்கார்ந்துகிட்டு வேடிக்க தான் பார்க்கிறான், பந்து அப்படி போச்சு இப்படி போச்சு, வளைஞ்சு போச்சு, நெளிஞ்சு போச்சுன்னு ............. விவாதிச்சுகிட்டு இருக்கான்.  எனக்கு இப்போ மேலே வில்லன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது!!

இந்தியாவில் கபில் தேவ் .......... கபில் தேவ் .......... அப்படின்னு ஒரு நல்ல மனுஷன்.  அவர் காலத்துல நிஜமாவே நாட்டுக்காக கிரிக்கெட் ஆடிகிட்டு இருந்தாங்க  1983 -ல் உலகக் கோப்பையை ஜெயிச்சாங்க. அதன் பின்னர் தான் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் விஷம் போல மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.  காதில் டிரான்சிஸ்டர் வைத்துக் கொண்டு   எந்நேரமும் நேரடி வர்ணனை கேட்டவர்கள் பின்னர் சேட்டிலைட் சேனல்களின் வருகையால், நேரடியாக பார்க்க ஆரம்பித்தனர்.  ஆனால் அந்த சமயத்தில் கபில்தேவ் & Co ரிட்டயர்ட் ஆகிப் போனது.  அவர்களில் பலருக்கும் ஒரு வீடோ அல்லது நிரந்தர வருமானமோ கூட இல்லாத நிலை.  ஆனாலும் அவர்கள் 1983 உலகக் கோப்பையில் ஈட்டிய வெற்றியின் பலனை அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் ருசி பார்க்க ஆரம்பித்து இன்றைக்கும் ஜெகஜோதியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சில நூறு கோடிகளை  தங்கள் வாழ்நாளில் தேற்ற முடிகிறது,  கிரிக்கெட் வாரியம் சில ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக உள்ளது   ஆனாலும் இதற்க்கு விதை போட்டவர்கள் வறுமையிலேயே இருந்தனர், இதைப் பார்த்த கபில் தேவ் ICL என்ற அமைப்பை ஏற்ப்படுத்தி தன்னுடைய சகாக்களுக்கு உதவ நினைத்தார்.  அந்த யோசனையை லவட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்  ICL என்பது ICC யால் அங்கீகரிக்கப் பட்டது அல்ல, பொறம்போக்கு என்ற பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்ப்படுத்தி ICL -க்கு ஆப்பு வைத்து விட்டு, தானே IPL-ஐ உருவாக்கியது.  இதில் உண்மை என்னவென்றால் ICC என்பதே உலக அளவில் எந்த விளையாட்டு அமைப்பாலும் ஏற்கப் படாத ஒரு பொறம்போக்கு, அதில் BCCI என்பது இந்திய அளவில் ஒரு பொறம்போக்கு என்பதே!!  ஆனாலும் நம்மாளுங்க  11 கிரிக்கெட் ஆட்டக்காரனும் இராணுவ வீர்கள் மாதிரியும் அவங்க கையில் இருப்பது துப்பாக்கி என்றும் இது ஏதோ நம்ம நாட்டை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற ஏற்படுத்தப் பட்ட அமைப்பு என்றும் சந்திரமுகி ஜோதிகா மாதிரி கற்பனை செய்து வாழ ஆரம்பித்து விட்டனர்.  பாகிஸ்தானுடன் ஏதாவது ஒரு மேட்சில் ஜெயித்தால் அது பாகிஸ்தானையே போரில் ஜெயித்த மாதிரியும், இந்திய மண்ணில் இந்தியர்களுக்கு சாதகமான சூழ்நிலையில் உலகக் கோப்பையை ஜெயித்தாலோ, அல்லது வெறும் 20-20 மேட்சில் உலகக் கோப்பையை ஜெயித்தாலோ இந்தியா "ON TOP OF THE WORLD" என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்து கற்பனையில் அற்ப சுகத்தை காண ஆரம்பித்து விட்டனர்.

 IPL வந்த பின்னர், அதன் அணிகளைப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.  அவற்றுக்கு பெயரைத் தேர்ந்தெடுத்தில் தான் குள்ளநரித் தனம் செய்துள்ளனர்.  உதாரணத்துக்கு சென்னை அணியில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்?  ரெண்டோ மூனோதான்.  பாக்கி எல்லாம் வேற மாநிலம் அல்லது அவங்க நாட்டு அணிக்கு லாயக்கில்லை என்று விரட்டியடிக்கப் பட்ட வெளிநாட்டு கிழட்டு பசங்க.  ஆனாலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அப்படின்னு பேரை வச்சதாலேயே தமிழ்க்காரன் எல்லோரும் உசிரை கையில் பிடிச்சுகிட்டு மேட்சை பார்க்கிறான்.   இந்த மாதிரி ஒவ்வொரு பகுதிக்கும் வலிய திணிக்கப் பட்ட ஒரு அணி.  ஆட்டக்காரன் கண்ணை மட்டும் விட்டுவிட்டு மத்த எல்லா இடத்தலும் ஏதாவது ஒரு விளம்பரம், ஆடுகளத்திலும்,  மைதானத்தைச் சுற்றியுள்ள பவுண்டரி ஒரு இடம் பாக்கி இல்லை.  இதில் எந்நேரமும் சிக்சர் சிக்ஸரா பார்வையாளர்கள் மேல பந்து பறந்துகிட்டே இருக்கணும்.  [அதுக்காக ரெண்டு ஸ்டம்பையும் சுத்தி ஒரு வட்டத்தைப் போட்டு அதுதான் பவுண்டரி என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை!!]. 

IPL  அணிகள் சிலவற்றின் ஒனர்களைப் பார்க்கணுமே......  அடேங்கப்பா கண்கொள்ளா காட்சிதான்.
நாட்டு நலனுக்காக தங்கள் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் இழக்க தயாரா இருக்கிறவங்க தான் IPL அணிகளின் ஓனர்கள் என்பதை இப்போ புரிஞ்சிகிட்டு இருப்பீங்க அப்படின்னு நினைக்கிறேன்!!

 நாட்டுக்கே உழைச்சு ஓடா தேஞ்சுபோன பலர் இப்போ IPL அணிகளை எடுத்து மேலும் தேய காத்திருக்காங்க என்பது மேலே உள்ள படங்களைப் பார்த்தாலே தெரியுமே!!

வெள்ளைக்காரன் கிரிக்கெட் ஆடுறான், ஆனாலும் வெயில் சீசன் ரெண்டு மாசத்துல ஆடிட்டு அப்புறம் அதை மூட்டை கட்டி வச்சிட்டு வேற வேலையைப் பார்க்கப் போயிடறான்.   ஆனா நம்மாலும் அப்படியில்ல.  முன்பெல்லாம் ஒரு நாள் மேட்ச், ஐந்து நாள் மேட்ச் என அவ்வப்போதும் வரும், சில மாதங்களுக்கு ஒன்னும் இருக்காது.  அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு பார்த்தான்.  நம்மாளு அசரவில்லை எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சான்.  APL, BPL, CPL........... இப்படியே போயி இன்னைக்கு IPL வரைக்கும் வந்திட்டானுங்க ZPL வரைக்குமே பார்க்க ரெடியா இருக்கானுங்க.  இந்திய அணியினர் நூறு மேட்ச்சில் பல்லு பகுடு உடைஞ்சாலும் சரி அடுத்த ஒரு மேட்சை பங்களாதேஷ் மாதிரி ஒருத்தன் கிட்ட ஜெயிச்சா போதும் உடனே நம்மாலு உச்சி முகந்து ஏத்துக்கறான்.  நீ போற இடத்தில் கில்மாவோட சுத்துனியா, சூதாட்டத்துல நாட்டை காட்டிக் குடுத்தியா...... ம்ஹும்   ........ நம்மாலு அசர்ர மாதிரியே தெரியலை.  அடுத்த ஏதோ  ஒரு PL வந்தா போதும், TV முன்னாடி உட்கார்ந்திடறான், கூட்டம் போட்டு விவாதிக்கிறான்.  இப்படி ஒரு இளிச்சவா கும்பல் உலகத்துல வேறெங்கேயும் கிடைக்காதுன்னு மற்ற நாட்டு அணியினர் எல்லா பயல்களும் இங்க வந்து கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டானுங்க.  சிலர் அவங்க சொந்த அணியில் இருந்து சீக்கிரமே ரிடையர் ஆகி IPL ஆட வந்திடறாங்க. வாழ்நாள் முழுவதும்  சொந்த நாட்டுக்கு ஆடியும் கிடைக்காத பணம், இங்க ஒரே சீசனில் கிடைக்குதே வேறென்ன வேணும்?!  நியாம்தான் தானே.

இவரு நல்லா ஆடுவாரு....[கிரிகெட்டை சொன்னேங்க!!]

இவங்களுக்கு கிரிக்கெட் அப்படின்னா உசிரு.........

அதுசரி இத்தனை ஆயிரம் கோடிகள் பணம் எங்கேயிருந்து வருகிறது?  வேற எங்கே, தொலைக் காட்சி விளம்பரங்களில் இருந்து தான்.  விளம்பரக்க்காரன் எப்போ பணம் கொடுப்பான்?  ஒரு நிகழ்ச்சி அதிகம் பேரால் பார்க்கப் பட்டால் மட்டும் தான் கொடுப்பான்.  உதாரணத்துக்கு பல தமிழ் தொலைக் காட்சி சீரியல்கள், நிகழ்சிகள் சில காலம் ஓடுகின்றன பின்னர் தூக்கப் படுகின்றன.  அதற்க்கு ஒரே காரணம் அவை மக்களால் பார்க்கப் படுகிறதா இல்லையா என்பது மட்டுமே.  மக்கள் பார்க்கா விட்டால் ஸ்பான்சர்ஷிப்  கிடைக்காது அந்நிகழ்ச்சி தூக்கப் படும்.  இங்கும் அதே கதை தான்.  நாம் இளிச்சவா பயல்கள் இவனுங்க நடத்தும் குதிரை ரேசை உட்கார்ந்து பார்க்கிறோம், அதனால் அவனுங்களுக்கு விளம்பரதாரர்களிடம் இருந்து ஆயிரம் கோடிகளில் பணம் கொட்டுகிறது.  அதில் ரேஸ் குதிரைகளுக்கு சில கோடிகளை வீசி எறிந்துவிட்டு மிச்சத்தை போர்டுக்காரன் லவட்டுகிறான்.  விளம்பரக்காரன் சும்மா குடுப்பானா?  அந்த விளம்பரம் மூலம், அவனுடைய குப்பை PRODUCT நம் தலையில் கட்டப் படும்.  நான் அப்படி எதுவும் வாங்கவேயில்லையே என நீங்கள் நினைக்கலாம் ஆனால் இன்னைக்கு நீங்க வாங்கும் ஒவ்வொன்னும் இந்த மாதிரி விளம்பரங்கள் மூலமே உங்களை வந்தடைந்தன, மேலும் அவற்றில் பல தேவையே இல்லாதவை என்பதையும்  மறக்க வேண்டாம்.  அந்தப் பணம் மற்ற விளையாட்டு மேம்பாட்டுக்கோ, மக்கள் நலத் திட்டங்களுக்கோ செலவிடப் படுகிறதா?   ஹி .............ஹி .............ஹி ..........  எனக்குத் தெரிஞ்சு இல்லீங்க.  இன்னைக்கும் இந்த குதிரை ரேசை பார்ப்பதை நிறுத்திவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போய் விட்டால் APL ........ லில் இருந்து ZPL வரிக்கும் எல்லா பயல்களும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு அவனவன் நாட்டுக்கு ஓடுவான், எந்த கிரிக்கெட் மேட்சும் TV இல வராது. ஊருக்கு ஊர் கில்மாவோட சுத்தும் கிரிக்கெட் ஆட்டக்காரனுங்க கோடியில் புரள முடியாது.  நம்ம ஹாக்கி வீரர்கள் மாதிரியே உலகக் கோப்பையை வென்றாலும் ரெண்டு மூணு லட்சங்களை மட்டுமே பெற முடியும்.

ஒரு நாள் நான் கடவுளை நினைச்சுகிட்டு இருந்தேன், வானத்தில இருந்து ஒரு ஒளி இறங்கி வந்து என் வயித்துக்குள்ள நுழைஞ்சது.  அப்படியே நான் கற்ப்பமாயிட்டேன்.  [டேய்....   ஜீசஸ் பொறந்தப்போ வானத்துல அதிசயம் தோன்றுச்சாம் அப்படி இப்போ எதாச்சும் தெரியாதுன்னு பாருடா......]