Wednesday, November 7, 2012

ரத்த அழுத்தம் சில தகவல்கள்............

கீழே இருக்கும் படங்களைப் பாருங்க  எல்லா படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு..............  முடிஞ்சா கண்டுபுடிங்க!! 









பாத்துடீங்களா?  படங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்னன்னு கண்டுபுடிச்சீங்களா?  முடியலையா!!  சரி நானே சொல்லிடறேன்.  எல்லா படத்திலும் இரத்த அழுத்தத்தை கையில் முழங்கைக்கு சற்று மேலே தான் அளக்கிறார்கள்.  ஹி ...........ஹி ...........ஹி ...........ஹி ...........  அது சரி ஏன் அந்த இடத்தையே மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்?  ஊசியை கையில் போடுறாங்க, இடுப்பில் குத்துறாங்க, ஏன் இரத்த அழுத்தத்தை காலில் அல்லது  கழுத்தில் அளக்கக் கூடாது?  இதுக்குப் பின்னாடி இயற்பியல் இருக்கிறது!!   [ஆஹா..........  வந்துட்டான்யா........வந்துட்டான்!!]

வெவ்வேறு வடிவங்கள் [Shapes], அளவுகள்[Sizes] கொண்ட  களன்களை ஒன்றாக இணைத்து, அதில் திரவத்தை நிரப்பும்போது, திரவத்தின் மட்டம் எல்லா களன்களிலும் ஒரே உயரத்தில் இருக்கும்.
நமது உடலில் இரத்த அழுத்தம் கால் முதல் தலைவரை உயர்ந்துகொண்டே போகிறது.  காலில் அதிகமாகவும் தலையை நோக்கி செல்லச் செல்ல குறைந்து கொண்டே செல்லும்.  ஆகையால் கண்ட கண்ட இடங்களில் இரத்த அழுத்தத்தை அளக்க முடியாது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அளக்க வேண்டும்.  ஏன் கையைத் தேர்ந்தெடுத்தார்கள்?  அந்த உயரத்தில் உடலின் எந்த உறுப்பு இருக்கு அப்படின்னு கொஞ்சம் யோசிங்களேன்!!  இன்னும் தெரியலையா?  இதயமுங்க...... இதயம்!!  இதயத்தில் என்ன இரத்த அழுத்தம் இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா அதே உயரத்தில் இருக்கும் கையில் தானே அளக்கனும் அதான்!!



வால்நட் பருப்புகள் இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும், குறைந்த இரத்த அழுத்தம் இருக்கிறவங்க, இதைத் தொட்டுடாதீங்க!!
உயர் இரத்த அழுத்தம் அப்படின்னா என்ன, வராம தடுப்பது எப்படி, வந்தா சமாளிப்பது எப்படி, அதற்க்கான உணவு முறைகள் உடற்ப் பயிற்சிகள் என பல நண்பர்கள் விரிவா எழுதியிருக்காங்க.  அவற்றில் எனக்குப் பிடித்த கட்டுரைகள் சில இதோ:


 இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?

 உயர் ரத்த அழுத்தம் – சமாளிப்பது எப்படி?

உயர் இரத்த அழுத்தம் [பாட்டி வைத்தியம்]

இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த அழுத்தம் வராமல் தடுக்க

உயர் இரத்த அழுத்தம் - ஓர் அமைதிக் கூற்றுவன்

 

5 comments:

  1. அறியாத தகவலை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும்
    சொல்லிப்போனவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எளிமையா சொல்லிருக்கீங்க

    எனக்கும் எட்டி பார்த்தார் இவர். ஓடி ஓடியே வழிக்கு கொண்டு வந்துட்டேன் :)

    ReplyDelete

  3. உடற்கூறு பற்றிய செய்திகளை படிக்கவே பயமாயிருக்கு. உடலில் ஏதாவது உபாதை வந்தால் இதுவோ அதுவோ என்று எண்ணத் தொடங்குகிறது. இந்த விஷயத்தில் அறியாமை ஒரு வரமோ என்று கூடத் தோன்றுகிறது. பெங்களூரில் எங்கிருக்கிறீர்கள். முடிந்தால் சந்திக்கலாமே.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமாக இருத்தது பகிர்வு...

    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete