Sunday, November 11, 2012

கல்லூரி மாணவனை அவன் வழியிலேயே மடக்கிய ஸ்வாமிஜி!!

மும்பையில் ஒரு  சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்லூரிக்கு ஒரு சாது பகவத் கீதை உபன்யாசம் செய்யப் போகிறார்.  அவர் பேச்சை முடித்த பின்னர் கேள்வி நேரம் வந்தது.  ஒரு மாணவன் எழுந்தான்,

"ஸ்வாமிஜி நீங்க சொன்னது அத்தனையும் வேஸ்ட்,  உங்க பேச்சை கேட்டுட்டு எல்லோரும் ஸ்வாமியாயிட்டா, யார் விவசாயம் செய்யுறது? யார் மிலிடரிக்கு போய் நாட்டை காப்பத்துவது? யார் அரசாங்கத்தைப் ஆள்வது? யார் வியாபாரம் செஞ்சு விவசாயப் பொருட்களை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வது?  அதனால நீங்க சொல்வது எதுவும் வாழ்க்கைக்குப் பயன்படாது, சுத்த வேஸ்ட்."

இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த மாணவர்கள் அத்தனை பேருக்கும் குஷி, ஓ .........  வென கூச்சலுடன் பலத்த கைதட்டல், ஏன்னா வாத்தியாரை மடக்கும் மாணவன் என்றாலே மத்த மாணவர்களுக்கு சந்தோசம் தானே.  அதுவும் மும்பையைப் பற்றி சொல்லவா வேணும்.  மொத்த கூட்டமும் அந்த கேள்வி கேட்ட மாணவன் பக்கம், கூச்சல் அடங்கவே ரொம்ப நேரம் ஆனது.

ஸ்வாமி ஆரவாரம் அடங்கட்டும் என்று சற்று பொறுத்தார்.  அமைதியானது.  அவர் என்ன பதில் தரப் போகிறார் என கேட்கும் ஆர்வம் எல்லோருக்கும்.  முதலில் ஸ்வாமி இந்தக் கேள்விக்கு பதில் தரும் வல்லமையைத் தாருங்கள் என தனது பிரார்த்தனைகளை தனது குருவுக்கும் இறைவனுக்கும் செலுத்துகிறார்.  பின்னர் கூட்டத்தை நோக்கி தனது பேச்சை துவக்குகிறார்.  

"உங்கள் கேள்விக்கு பதிலாக நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்"  கூட்டத்தில் எல்லோருக்கும் வியப்பு.  என்னடா இது பதில் வரும்னு பார்த்தா கேள்வி வருதேன்னு!!  ஸ்வாமி தொடர்ந்தார்.

"ஒரு கற்பனை பண்ணிப் பாருங்க, உலகத்தில் உள்ள அத்தனை பேரும் சார்டர்ட் அக்கவுண்டன்ட்  ஆயிட்டா என்ன ஆகும்?  யார் விவசாயம் பண்ணுவாங்க?  யார் நாட்டை ஆள்வது?  யார் மிலிடரிக்குப் போய் நாட்டை காப்பாத்துவாங்க?  யார் வியாபாரம் பண்ணுவாங்க?  சொல்லப் போனா எல்லோரும்  சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக இருப்பதால் ஒருத்தருக்கும் சார்டர்ட் அக்கவுண்டன்டே தேவைப் படாது, அதனால அத்தனை பேரும் வேலையத்தவங்களாப் போயிடுவாங்களே!!"

இதைக் கேட்டதும், அந்த மாணவனுக்கு எழுந்ததை விட பல மடங்கு கரகோஷம், கூட்டம் இப்போது ஸ்வாமியின் பக்கம் திரும்பிவிட்டது. ஸ்வாமி மேலும் தொடர்ந்தார்.

நம் உடலில் பல உறுப்புகள் உள்ளன.  இதயம், நுரையீரல், லிவர், மூளை என ஒவ்வொன்றும்  வெவ்வேறு நிறம், வடிவம், செயல்பாடுகள்.  இருந்த போதிலும் அவை அனைத்திற்கும் ஒரே நோக்கம் இந்த  உடல்  ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதே. அத்தனை உறுப்புகளும் ஒருங்கிணைந்து உடலுக்காக உழைக்கின்றன.  அதைப் போல இந்த சமுதாயம் ஒரு உடல் என்றால், அது ஆரோக்கியமாக இருக்க, ஆட்சி செய்பவர்கள், மிலிடரிக்காரர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சார்டர்ட் அக்கவுண்டன்ட் என அத்தனை பேருக்கும் தேவை இருப்பது போல பகவத் கீதையை போதிக்கும் ஸ்வாமிகளுக்கும் தேவை இருக்கிறது.  நீங்கள் உங்கள் கடமையைச் சமுதாயத்தைக்குச் செய்வது போல நாங்களும் எங்கள் கடமையை சமுதாயத்திற்குச் செய்கிறோம்.  இறுதியில் அனைவரின் நோக்கமும் சமுதாய நலன், சமுதாய மேம்படுதானே!!  கேள்வி கேட்ட மாணவன் உட்பட அத்தனை பேரும் ஸ்வாமியின் இந்த பதிலை ஒப்புக் கொண்டனர்!!  அந்த ஸ்வாமியின் பெயர்: தவத்திரு ராதாநாத் ஸ்வாமி!!

 

தவத்திரு ராதாநாத் ஸ்வாமி மேலதிகத் தகவல்கள்:

அமெரிக்க ஜனாதிபதியுடன்.......
இயற்பெயர் ரிச்சர்ட் ஸ்லேவின் [Richard Slavin], 1950 -ல் சிகாகோவில் பிறந்த அமெரிக்கர்.  தனது பத்தொன்பதாம் வயதில், ஏற்றத் தாழ்வுடன் மக்கள் நடத்தப் படுவதைக்  கண்டு சகிக்க முடியாமலும், நகர வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவும் வீட்டை விட்டு வெளியேறி, வாழ்வின் அர்த்தமென்ன, இறைவன் யார் என்ற கேள்விகளுடன் கிழக்கு திசை நோக்கி [கையில் பணமே இல்லாமல்!!] தனது நண்பர் கேரி [Gary ] என்பவருடன் கிளம்பினார்.  வழியில் அவர் நண்பர் வேறு திசையில் பிரிந்து விட,  இந்தியா நோக்கிச் செல் என்ற உள்ளுணர்வு  சொன்னதால் ரிச்சர்ட் ஸ்லேவின், கிரீஸ், துருக்கி, இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இறுதியில் இந்தியாவை அடைந்தார்.  [நாம் வழியில் செல்லும் பொது யாரிடமாவது லிப்ட் கேட்டு போகிறோமே அது மாதிரி விமானத்தில் கையில் காசே இல்லாமல் வந்தடைந்திருக்கிறார்!!].  இமயமலைப் பகுதியில் பல யோகிகளுடன் வசித்ததோடு, இந்தியா நேபாளம் முழுவதும் சுற்றி எல்லா விதமான ஸ்வாமிகள், யோகிகள், புத்த மதத்தினரையும் சந்தித்திருக்கிறார்.  கல்கத்தாவில் அன்னை தெராசா, Art of Living ரவிசங்கரின் குரு மகேஷ் யோகியின் ஆஸ்ரமத்திலும் இருந்திருக்கிறார்.  [மகேஷ் யோகி அச்சமயம் அங்கு இல்லை]. இறுதியில் 1970 ஆம் ஆண்டு மும்பைக்கு வந்த போது, ஹரே கிருஷ்ண இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்று மும்பை கிராஸ் மைதானத்தில் நடைபெற அங்கே இவர் செல்கிறார்.  அங்கு பக்தி வேதாந்த ஸ்வாமி [1896-1977, ஹரே கிருஷ்ண இயக்க நிறுவனர், ஆச்சாரியர்] அவர்களைச் சந்தித்து அவர் பால் ஈர்க்கப் பட்டு சிஷ்யாரானார்.  பின்னர் 31 வயதில் சன்யாசம் ஏற்று தற்போது உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தியை பரப்பி வருகிறார்.  இவரது வழிகாட்டுதலின் பேரில் மும்பை சேரிகளில்  தினமும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு  மதிய உணவும், பக்தி வேதாந்தா மருத்துவமனை, கண் சிகிச்சை முகாம்கள், இயற்க்கை விவசாயம் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடை பெற்று வருகின்றன. 

இந்திய ஜனாதிபதியுடன்......

தலாய் லாமாவுடன்.....

அன்னை தெரசாவுடன்.........யோகா குரு BKS ஐயங்காருடன் ...........
பக்தி வேதாந்தா மருத்துவமனை சுட்டி.

12 comments :

 1. மாணவனுக்கு ஸ்வாமிஜி கொடுத்த பதில் அருமை!

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  http://ranjaninarayanan.wordpress.com/
  http://pullikkolam.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. @ Ranjani Narayanan

   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 2. பணம் இருந்தால்... எல்லாமும் வரும்...

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு சார்..நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆதரவுக்கு நன்றி செங்கோவி!!

   Delete
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. புதிய விஷயங்கள் வித்தியாசமான பதிவுகள்

  ReplyDelete
 6. இவரை பற்றி இப்போதான் கேள்விப்படுறேன் நன்றி

  ReplyDelete
 7. நல்ல பதில்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. ரிச்சர்ட் ஸ்லேவின் அவர்களின் மேலதிக தகவல்களுக்கு நன்றி ஜெயதேவ்.

  இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. @மாதேவி
   @பட்டிகாட்டான் Jey
   @திண்டுக்கல் தனபாலன்

   தீபாவளி வாழ்த்து தெரிவித்த இந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி...........

   Delete