Thursday, November 29, 2012

நம்ம படத்தை இப்படியெல்லாம் நோண்டுவானுங்கன்னு டைரக்டர் ஷங்கர் கனவிலும் நினைச்சு பார்த்திருக்க மாட்டார்!!

நண்பர்களே, "சொப்பனசுந்தரி வச்சிருந்த காரை இப்ப நாம வச்சிருக்கோம், அந்த சொப்பனசுந்தரிய யாரு வச்சிருக்காங்க" என்று கவுண்டமணி ஆராய்ச்சி செஞ்ச மாதிரி நாம இப்போ சமுதாயத்துக்கு ரொம்ப தேவையான ஆராய்ச்சி ஒன்றில் இறங்கப் போறோம்!!  நாமெல்லாம் சமூகத்துக்கே நம்மை அற்பணிச்சுகிட்ட  தியாகிகள்  தானே!!

டைரக்டர் ஷங்கர், சொல்லவே தேவையில்லை பிரமாண்டத்துக்கு பெயர் போனவர், [சொந்தப் பணமா என்ன?] வெற்றிப் பட இயக்குனர், எடுத்த படங்களில் ஒன்றைத் தவிர [Boys ] மற்றவை சூப்பர் டூப்பர் ஹிட். இவர் மற்ற இயக்குனர்கள் மாதிரி ஆங்கிலப் படங்களை காப்பியடிக்கிறவர் இல்லை, தன்னோட முந்தைய படங்களையே அப்படியும், இப்படியும் உல்டா பண்ணி எடுக்கிறதுக்கு போயி எதுக்கு காப்பியடிக்கணும்!!  [Boys மட்டும் விதிவிலக்கு, ஒரு நாள் ஏதோ ஒரு இங்கிலீஷ் படம் TV -யில கிளைமேக்ஸ் மட்டும் பார்க்க நேர்ந்தது, பார்த்தா சர்ச்சில் ஒரு கல்யாணப் பொண்ணு கடைசி நேரத்தில் மணமேடையில் இருந்து ஓடி வந்து ஒரு பையனை துரத்தும் சீன்,  இதை எங்கேயோ பார்த்திருக்கோமேடான்னு யோசிச்சேன், அப்புறமாத்தான் விளங்குச்சு, அடடா எவனோ ஒரு வெள்ளைக்கார பய ஷங்கரோட Boys படத்த சுட்டு பத்து வருஷத்துக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டான் என்று!!]

சரி அதெல்லாம் போகட்டும்.  எந்திரன் அப்படின்னு ஒரு படம், ஒரு பெண்ணை கதாநாயகனும், வில்லனும் காதலிக்கும், யாருமே எடுக்காத கதையை வைத்து ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி  எடுத்தாங்க.  இருவது  வருஷத்துக்கு முன்னாடி அமேரிக்கா காரன் எடுத்த கிராபிக்ஸை  அவன்கிட்டேயே  போயி காசு குடுத்து செய்யச் சொல்லி, இங்க வந்து ரிலீஸ் பண்ணி, நாங்க அமேரிக்கா காரனுக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்திட்டோம்னு பெருமைப்பட்டுக் கொண்ட படம் அது.  இதில் பயன்படுத்தப் பட்ட கேமரா, சும்மா சொல்லப் படாது மிகத் துல்லியமாக படங்களைப் பதிவாக்கக் கூடியது. படத்தை அப்படியே பார்த்துக் கொண்டு வரும்போது ஒரு காட்சியில் ரஜினியுடன் காதல் ரத்து செய்யும் ஐஸ்வர்யா ராய் ஒரு பத்திரத்தை எடுத்து வருவார், அதில் பல பக்கங்கள் இருக்கும். முதல் பக்கம் ஸ்டாம்ப் பேப்பர், பார்க்க அழகாய் பளிச்சென இருந்தது.  இது படத்தில் வினாடிக்கும் குறைவான நேரமே வரும்.  முன்பெல்லாம் அப்படி ஒரு பேப்பரை  படத்தில் காட்டினா அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், சட்டென காட்சி மாறுவதால் விரும்பினாலும் அதில என்ன இருக்குன்னு படிக்க முடியாது.  ஆனாலும் தொழில்நுட்பம் முன்னேறிடுச்சே, நாம சும்மா இருப்போமா!! அதில என்னதான் எழுதியிருக்கு படிக்கலாமேன்னு முயற்சி செய்தோம்.  அதில் பல அறிய பெரிய தகவல்கள் அடங்கியிருந்துச்சு.  இதோ நீங்களே பாருங்க!!


இதில்  அடங்கியிருக்கும் தகவல் பொக்கிஷங்கள் 

சனாவோட முழுப் பெயர்          :   சஞ்சனா
அப்பா பேரு                                    :    கிருஷ்ணகுமார்
முகவரி                                           :    Everest Apartments குடியிருப்பு,
                                                                     4 வது குறுக்குத் தெரு,
                                                                      Anna Nagar.

[ஐயா கண்ணுங்களா, இதெல்லாம் சினிமாவில் சும்மா கொடுத்தது, ஐஸ்வர்யா ராய் அங்கதான் இருப்பாங்கன்னு யாரும் அந்த அட்ரசைத் தேடி நேர்ல போயிடாதீங்க ராசா!!]

அடுத்து, ரஜினி, டாக்டர். வசீகரன் இவர் வசிப்பது பெசன்ட் நகரில்.  இவரது அக்கறையின்மையால் காதலை ரத்து செய்து அதை சட்டப் படி ஆவணமாக்கி பதிவு செய்யும் புதுமையான முயற்சியில் தான் சனா இறங்கி தோற்றுப் போய் காதல் வலையில் மீண்டும் விழுந்துவிட்டார்.

எப்பேற்பட்ட தகவல் இது,  ஐயா........  கீழே குனியாதீங்க.........   இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு, இதுக்கே கல்லைத் தூக்கினா எப்படி!!

அடுத்து காற்றில் அந்த பேப்பர் அசையுது, அடுத்த பக்கம், கீழே இருந்து படிப்படியாக மேலே தெரிகிறது.  அதில் என்னென்ன தகவல்கள் அடங்கியிருக்கு தெரியுமா?  அது தான் கொடுமையே, எவனோ வாடகை  வீட்டு சொந்தக்காரன் குடியிருப்பவரிடம் எழுதி வாங்கும்  சட்ட திட்டங்கள்!!  [Terms & Conditions].  படத்தில் இதெல்லாம் தெரியாது, ஆனால் நாம சும்மா விட்டுவிடுவோமா, உங்களுக்காக படம் பிடிச்சு காட்டுறோம்.  சும்மா பாருங்க!!

ஸ்டாம்ப் பேப்பருக்கு கீழே: வாடகைக்கு குடியிருப்பவர் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி தனி மீட்டர் கணக்குப் படி தண்ணீர் கட்டணம் செலுத்த வேண்டுமாம்!!


எல்லாம் பார்த்துட்டீங்களா, இது இன்றைய மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க உதவும் பதிவுதானே?  ஹேய்.......  ஹேய்.........  மிஸ்டர்.....நோ   பேட்  வேர்ட்ஸ்..............ஐயாம் டீசன்ட் பேமிலி யு நோ .  ............. ஐயையோ.........  காதில இரத்தம் வருது................  ஐயோ சாமி இதுக்கு மேல தாங்காது நான் எஸ்கேப்.....................!!

37 comments :

 1. குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க வாடகை ஒப்பந்தம் தானே போட முடியும் ,வேற என்ன போடணும் :-))

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாம், நான் இந்த ஆங்கிளில் தின்க் பண்ணவே இல்லியே!!

   Delete
 2. ஆஹா..என்ன ஒரு ஆராய்ச்சி..!

  தான் குடியிருக்கும் போர்சனை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்-னு போட்டிருக்கே..அப்போ அது காதலுக்காக போடப்பட்ட மூலப்பத்திரமா இருக்கும் சார்..நல்ல முறையில பராமரிக்காததுனால, இப்போ காதல் டைவர்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. ஹா...........ஹா.............ஹா.......... நன்றி செங்கோவி!!

   Delete
 3. //வவ்வால்November 29, 2012 12:58 PM

  குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க வாடகை ஒப்பந்தம் தானே போட முடியும் ,வேற என்ன போடணும் :-))
  Reply//

  கல்யானம் ஆனபிறகும் எப்படியா குமரியாகவே இருக்காங்க எனக்கு கொஞ்சம் புரியலை

  ReplyDelete
 4. //நாமெல்லாம் சமூகத்துக்கே நம்மை அற்பணிச்சுகிட்ட தியாகிகள் தானே!!

  // சரியா சொன்னீங்க

  ReplyDelete
 5. நல்லதொரு ஆராய்ச்சி..

  ReplyDelete
 6. படத்துல முதல் பக்கம் தானேய்யா தெரியும் எங்கிருந்து அடுத்தடுத்த பக்கத்தை பிடிசீன்களோ

  இதை ஷங்கர் படிச்சா உங்களை அசிஸ்டன்ட் டைரக்டர் வேலைக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவார் ( அசிஸ்டன்ட்
  டைரக்டர்க்கு மிக அதிக சம்பளம் தர்றது அவர் தானாம்)

  ReplyDelete
  Replies
  1. \\எங்கிருந்து அடுத்தடுத்த பக்கத்தை பிடிசீன்களோ\\ டெக்னாலஜி ............டெக்னாலஜி ............டெக்னாலஜி ............

   \\இதை ஷங்கர் படிச்சா உங்களை அசிஸ்டன்ட் டைரக்டர் வேலைக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவார் ( அசிஸ்டன்ட்
   டைரக்டர்க்கு மிக அதிக சம்பளம் தர்றது அவர் தானாம்)\\ ஐயோ சாமி சாகிற வரைக்கும் இவரு ஒரே கதையவே எடுத்துகிட்டு இருப்பாரு, நம்மால ஆகாது. அதுசரி, கதையை மாத்தாம திரும்பத் திரும்ப எடுக்கிறதுக்கு எதுக்கு இவருக்கு அசிஸ்டண்டுங்க?

   Delete
  2. இது நல்ல காமெடி.

   Delete
 7. நாமெல்லாம் சமூகத்துக்கே நம்மை அற்பணிச்சுகிட்ட  தியாகிகள்  தானே!! பதிவர்கள் என்றாலே தியாகிகள்தானே. சொப்பனசுந்தரி விலாசம் தெரியுமா பாஸ்?

  ReplyDelete
 8. @pulsepazhani

  \\சொப்பனசுந்தரி விலாசம் தெரியுமா பாஸ்?\\ உங்க சொப்பனத்துல வர்ற சுந்தரியோட அட்ரசை எங்கிட்டா கேட்டா எனக்கெப்படி பாஸ் தெரியும்!!

  ReplyDelete
 9. Replies
  1. @ பாவா ஷரீப்
   muthal varugaikkum, paaraattukkum, nanri!! Thank You!!

   Delete
 10. நீங்கள் ஒரு அப்பாடக்கர்!!!!!!!!---செழியன்

  ReplyDelete
 11. @செழியன்

  \\நீங்கள் ஒரு அப்பாடக்கர்!!\\ சத்திய சோதனை.

  ReplyDelete
 12. ***நம்ம படத்தை இப்படியெல்லாம் நோண்டுவானுங்கன்னு டைரக்டர் ஷங்கர் கனவிலும் நினைச்சு பார்த்திருக்க மாட்டார்!! ***

  உண்மைதான்.

  ஷங்கர் மட்டுமில்லைங்க, நானும்தான்! என்ன ஒரு மைரோ- அனாலிசிஸ்!! யப்பா! :)))

  ReplyDelete
 13. Replies
  1. முதல் வருகைக்கு நன்றி முரளிகண்ணன்!!

   Delete
 14. I THINK YOU HAVE LOT OF FREE TIME.

  ReplyDelete
  Replies
  1. @AYISHA

   சமுதாய சேவை பண்ணனும்னு தியாக மனப்பான்மை இருந்தாலே போதும் நேரம் கிடைக்கும். இப்ப பாருங்க உங்களுக்கும் நான் ஒரு சேவை செய்யுறேன், உங்க புரபைலில் இப்படி போட்டிருக்கீங்க,

   \\Please conduct my personal Id ayishaistimeva@gmail.com for free consultation.\\

   இதில conduct என்னும் வார்த்தைக்குப் பதிலா contact அப்படின்னு போட்டீங்கன்னா இந்த வாக்கியம் அர்த்தமுள்ளதா இருக்கும்னு தோணுது, நீங்களும் நான் சொன்னது சரிதானான்னு ரூம் போட்டு யோசிங்க. அப்படியே நம்ம பதிவு,

   http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_15.html

   இதை ஒரு தடவை படிங்க.

   Delete
  2. நிஜமாவே உங்களுக்கு நிறைய ப்ரீ டைம் இருக்கு , ஆயிஷா ப்ரோபைல் போய் தப்பு கண்டு பிடிச்சு இருக்கிங்க.

   Delete
  3. @ அஜீம்பாஷா

   நான் செய்யுறது சமூக சேவை, பதிவர்கள் என்றாலே தியாகிகள் தானே........... இது போன்ற ஆங்கிளில் நீங்க பார்க்காதது எனக்கு ரொம்ப ஃ பீல் ஆகுது சார்!! வருகைக்கு நன்றி!!

   Delete
 15. // இவர் மற்ற இயக்குனர்கள் மாதிரி ஆங்கிலப் படங்களை காப்பியடிக்கிறவர் இல்லை, தன்னோட முந்தைய படங்களையே அப்படியும், இப்படியும் உல்டா பண்ணி எடுக்கிறதுக்கு போயி எதுக்கு காப்பியடிக்கணும்!! // அருமை பாஸ்....

  ReplyDelete
  Replies
  1. @ப.சுஜிந்தன்

   Thanks dear!!

   Delete
 16. Awesome is the only word that can be used to describe this post.........

  ReplyDelete
  Replies
  1. @ SathyaPriyan

   வால்மார்ட் பத்தி நீங்க எழுதிய கட்டுரையை படித்தேன். உங்களுக்கு முன்னாடி நாமெல்லாம் எங்கே!! என்னோட இந்த முழு பதிவுக்கும் உங்களோட இந்த வார்த்தையே எனக்குப் போதும்!! முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சத்யபிரியன்!!

   Delete
 17. ////அடடா எவனோ ஒரு வெள்ளைக்கார பய ஷங்கரோட Boys படத்த சுட்டு பத்து வருஷத்துக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டான் என்று!!]///

  ஹா ஹா ஹா ரொம்ப நேரம் சிரித்தேன் சகோ

  ReplyDelete
  Replies
  1. @ஹைதர் அலி

   மிக்க நன்றி சகோ!!

   Delete
 18. இன்றுதான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன் இவ்வளவு ஜாலியான ஆளா நீங்க ஹா ஹா

  ReplyDelete
 19. இடுகைத்தலைப்பு:
  நம்ம படத்தை இப்படியெல்லாம் நோன்டுவானுங்கன்னு டைரக்டர் ஷங்கர் கனவிலும் நினைச்சு பார்த்திருக்க மாட்டார்!!

  உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!
  எப்பூடி ஆதாரம்
  தமிழ்மண ஓட்டு 9

  ReplyDelete
 20. எனக்கு வாகுகள் குறைவாத்தான் வருது சகோ, நானும் கேட்டுப் பாத்தேன் போடா மாட்டேங்கிறாங்க!! ஹா....ஹா..ஹா... உங்கள் வாக்குக்கு நன்றி!!

  ReplyDelete
 21. Jayadev Das/// ரிப்ளே பதில் கருத்துகளுக்கும் நம்பர் வர்ற மாதிரி வையுங்க 17a இப்படி வரப்பிடாது

  அப்படி வந்தால் நமது பதிவில் 40 கருத்துரைகள் 50 கருத்துரைகள் என்று காட்டாது சோ ராசதந்திரத்தை பயன்படுத்துங்கள். ஹா ஹா ஹா

  ReplyDelete
 22. அதான் முன்னணி பதிவர்கள் என்னை மாத்தச் சொன்னாங்களா? பய புள்ளைங்க காரணத்தை சொல்லலியேப்பா!!

  ReplyDelete
 23. இது தான் நோண்டி நொங்கெடுக்கிறதா ? ஹா...ஹா

  ReplyDelete
 24. ஆஹா! இப்படி அம்பலப் படுத்திவிட்டீங்களே!:-)

  செம பதுவு பாஸ், வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. @semmalai akash
  @கலாகுமரன்

  Thank you very much for your appreciation!!

  ReplyDelete