Thursday, December 20, 2012

மேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3

அந்தமான் டூர் பகுதி 1 , பகுதி 2
அந்தமானில் மூன்றாவது நாளாக எங்களை அழைத்துச் சென்ற  இடம்  பாரா டங் [Bara Tang] எனப்படும் பகுதியாகும்.  இது போர்ட் பிளேரில் இருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ளது.  இங்கே செல்லும் வாகனங்கள் அதிகாலை நான்கு மணிக்கே புறப்படும்.    

இங்கு காணவேண்டிய இடங்கள்:

சுண்ணாம்பு கல் குகை [Limestone Caves]
சேற்று எரிமலை [Mud Volcano]
கிளிகள் தீவு [Parrots Island]- [நாங்கள் இங்கு செல்லவில்லை.  நீங்கள் சென்றால் தவற விடாதீர்கள் சண்டையிட்டு இங்கேயும் காண்பிக்கச் சொல்லுங்கள்!!]

போர்ட் பிளேரில் இருந்து பாரா டங் செல்லும் வழியில், ஜராவா என்னும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது.  இவர்கள் அந்தமானில் வசிக்கும் 7 பழங்குடியினரில் ஒரு இனமாவர்.  இவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து தற்போது வெறும் 350 பேர்களே எஞ்சியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   புறப்படும் முன்னர் வழிகாட்டி,  "ஜராவா மக்களைப் பார்க்க முடியும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை சார், ஏமாந்து போனால் எங்களை திட்டாதீர்கள்" என்று Disclaimer Clause ஐப் போட்டார்.  ஏனெனில், அங்கு செல்பவர்கள் பலர் பார்க்காமலேயே ஏமாந்து வந்தாதாகச் சொன்னார்.  இதைக் கேட்கும்போதே மனதில் சற்று கலக்கமாக இருந்தது, சரி நமது அதிர்ஷ்டம் என்று புறப்பட்டோம். 


இதற்க்குச் செல்லும் வழியில் சாலையைத் தவிர மற்றவை மனிதன் கைப்படாத இயற்கையாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.  இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் காணப் படுகின்றன.


இதில் முதல் 50 கி.மீ. கடந்த பின்னர் ஜிர்கா டங் [Jirka  Tang] என்ற இடத்தில் ஒரு செக் போஸ்ட் உள்ளது, இங்குதான் ஜராவா என்னும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி ஆரம்பமாகிறது.  இந்த இடத்தில் எல்லா வாகனங்களும் வரிசையாக நிறுத்தப் பட்டு 6:00 AM, 9:00 AM, 12:00 PM [மதியம்], மற்றும் 2:30 PM ஆகிய நேரங்களில் அனுப்பப் படுகின்றன.  திரும்ப வருவதும் இதே போல குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப் படும். முதலிலும் கடைசியிலும் காவல் துறையினர் வண்டி இருக்கும்.  எங்கும் நிறுத்தக் கூடாது.  ஜராவா மக்களை  [ஒருவேளை உங்களுக்கு Luck  இருந்து பார்த்தால்]  புகைப் படம் எதுவும் எடுக்கக் கூடாது, [மீறினால் ஜாமீனில் வெளியே வர இயலாத வகையில் கைது செய்யப் படுவீர்கள்], அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் எதுவும் வழங்கக் கூடாது.  [அவ்வாறு உண்ட சிலர்  இறந்து போனதே இதற்க்குக் காரணமாம்]. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முக்கியமான தகவல், சிவப்பு வண்ணம் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது, உங்களை சிவப்பு ஆடையுடன் பார்த்துவிட்டால் அவற்றை பீய்த்து எடுத்து விடுவார்கள்


ஜராவா இனக் குழந்தைகள்.  இதே நிறத்தில் தான் எல்லோரும் இருக்கின்றனர்.   இந்தியாவில் வேறெங்கும் நாம் பார்த்திராத கலப்பே இல்லாத 100% கருமை நிறம்.  இது போல நிறத்தினரை சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அரசு விருந்தினர்களாக எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது மட்டுமே பார்த்திருக்கிறேன்.  எப்படி இந்தத் தீவில் மட்டும் இவர்கள் வசிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.  இவர்கள் ஆண்/பெண் எல்லோருக்கும் இதே போல சுருட்டையான குட்டையான கரிய முடி, யாருக்கும் கண்ணுக்குத் தெரியுமளவில்  தாடி இல்லை.  [தாடி பற்றிய தகவல் திருத்தம் Courtesy : நம்பள்கி !!]
ஜராவா மக்கள் வாழும் பகுதியில் காலையில் செல்லும்போதும், மாலையில் திரும்ப வரும்போதும், ஆண்/பெண் இருபாலரிலும் கிட்டத் தட்ட ஐம்பது பேரைக் கண்டோம்.  [எங்களுக்கு நிறையவே அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது !! ].  இடுப்பில் மட்டுமே உடை அணிந்திருந்தனர், [அதுவும் சிவப்பு வண்ணத்தில் ஒரு மாதிரி பட்டை பட்டையாக தொங்கும் துணி].


உடலில் லேசான மஞ்சள்/பழுப்பு  நிறத்தில் ஏதோ பூசியிருந்தனர்.  தலையில் BAND எல்லோருக்கும் இருக்கிறது.  இளம் பெண்கள் நைட்டி போல உடை அணிய ஆரம்பித்துள்ளனர், ஆனால் நடுத்தர வயதினர்/அதற்க்கு மேல் வயதானவர்கள் தங்கள் பாரம்பரியப் படியே வாழ்கின்றனர்.  நம்மைப் பார்த்தாலும் அவர்கள் முகத்தில் எந்த வித ரியாக்ஷனும் காட்டாமலேயே இருக்கின்றனர்!!  இந்தப் பெண்களை விட்டால் மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் கூட வெல்லுவார்கள் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு வித நளினமாக இருக்கிறார்கள்.  இவர்களுடைய படங்கள் இணையத்தில் எக்கச் சக்கமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இதே சாம்பிளுக்கு சில.  சுட்டி1  சுட்டி2  சுட்டி3  சுட்டி4  சுட்டி 5 சுட்டி 6 சுட்டி 7  சுட்டி 8

சில டூரிஸ்டு நிறுவனங்கள் இவர்கள் இருக்கும் இடத்திற்கு காவல் துறையினர் உதவியோடு ஆட்களை அழைத்துச் சென்று வேடிக்கை காட்டி காசு பார்த்ததாக பாராளுமன்றத்தில் குற்றச் சாட்டு எழ, அது குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க ப.சிதம்பரம் உத்தரவிட்டார்.  தற்போது இந்தப் பாதையே மாற்றிவிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம்.


பாரா டங்கை அடைந்தவுடன், இந்த கப்பலில் ஐந்து நிமிடப் பயணத்தில் பாரா டங் ஜெட்டி என்ற இடத்திற்க்குச் செல்ல வேண்டும். இது ஒரே சமயத்தில் இரண்டு பேருந்துகள், இரண்டு டாடா சுமோ, பத்து பைக்குகள்  மற்றும் முன்னூறு ஆட்களை ஏற்றிச் செல்லத் தக்கது.

பாரா டங் ஜெட்டி இது தான்.  இங்கிருந்து மோட்டார் படகில் Lime Stone Caves க்குச் செல்ல வேண்டும், 25 நிமிட உல்லாசப் பயணம் அது.

Lime Stone Caves க்குச் செல்லும் மோட்டார் படகு, எல்லோருக்கும் மிதவை மேலாடை [Life Jacket]  வழங்கப் படுகிறது.


Lime Stone Caves க்குச் செல்லும் வழியில் இடது புறம் மாங்குரூவ் காடுகள்.

வலதுபுறம் ஓங்கி வளர்ந்த மாரங்கள்.



பயண முடிவில் மாங்குரூவ் காடுகளில் நுழைந்து...........

இந்த இடத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள்.  இங்கேயிருந்து 15 நிமிடம் நடந்து  Lime Stone Caves-ஐ அடையலாம்.


Lime Stone Caves க்குச் செல்லும் வழியில்.............


   காட்டிற்கு  நடுவில் பயணம், இங்கு நின்றால் எப்படி இருக்கும் என்பதை அடுத்த காணொளி காட்டுகிறது.








Lime Stone Caves அருகில் செல்லச் செல்ல......
இதோ இவைதான் சுண்ணாம்புக் கல் குகைகள்.
குகையின் சுவற்றில்...........

சுவற்றிலிருந்து தொங்கும் விளக்குகள் போல.......  சுண்ணாம்புப் படிவம்.


தரையில் சொட்டும் நீரால் கீழேயிருந்து எழும்பும் படிவம், மேலேயிருந்து இறங்கும் ஒன்றுடன் சேர்ந்து தூண் போல......!!  மேற்கண்ட அத்தனையும் எளிதல் உருவானவை அல்ல, ஒரு இன்ச் உருவாகவே நூறு ஆண்டுகள் பிடிக்குமாம்!!



இவை எவ்வாறு தோன்றுகின்றன?  ஆங்கிலத்தில் படிக்க சொடுக்கவும்.  அங்கே கொடுக்கப் பட்டிருந்த விளக்கப் பலகைகளின் படங்களை பதிவின் இறுதியில் பார்க்கவும்.




Limestone Caves லிருந்து திரும்பும் போது.

அங்கேயிருந்து Mud Volcano பார்க்க அழைத்துச் சென்றனர்.  பூமிக்குள் இருந்து சேறு கொப்பளிக்கிறது.  இது இருக்கும் இடமே உருப்படதாம்!! [அதுக்கு ஏன்டா எங்களை கூட்டி வந்தீங்க!!]

சேற்று எரிமலை.




Limestone Caves விளக்கப் பலகைகள் [எனக்கு இது புரியவில்லை,யாருக்காச்சும் இது புரிஞ்சா பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!!!]






சேற்று எரிமலை பகுதியில் இருந்த தகவல் பலகைகள்.





22 comments:

  1. உங்க நண்பர் பிலாசபி இப்போது அந்தமானில் தான் இருக்கார் .
    அது வந்து எத்தனை பதிவு போட்டு கொள்ள போகுதோ ......
    உலகம் நாளைக்கு அழிஞ்சா நல்லா இருக்கும் ...........

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் நாங்க ஏற்கனவே பாத்துட்டோமேன்னு பிலாசபி மூஞ்சி மேலேயே எல்லோரும் குத்தப் போறாங்க!! ஹெ ..... ஹே ..............ஹெ ..... ஹெ .....ஹே.......

      Delete
    2. தல... இப்பதான் உங்களுடைய அந்தமான் கட்டுரைகள் ஐந்தினையும் படித்தேன்... ஐ மீன் பார்த்தேன்... எனக்கு முன்பே எழுதிவிட்டீர்கள் என்ற சிறு பொறாமை இருப்பினும், இரண்டு விஷயங்கள் உறுத்தியது... 1. பாராடங் கட்டுரையில் நீங்கள் எழுதிய அதையேதான் நானும் எழுத முடியும். 2. நான் கேமராவே எடுத்துச் செல்லவில்லை. மொபைலில் சுமார் பத்து, பதினைந்து புகைப்படங்கள் எடுத்திருப்பேன் அவ்வளவுதான்...

      மற்றபடி, எனக்கென தனி நடை இருக்கிறது... அதன்படி உங்களிடமிருந்து வேறுபட்டு எழுதுவேன்...

      Delete
    3. ஆதிவாசிகளைப் பார்க்க முடிந்ததா? Parrot Island சென்றீர்களா?

      Delete
    4. ஆதிவாசிகளை பார்த்தேன்... Parrot Island செல்லவில்லை...

      Delete
  2. //யாருக்கும் தாடி இல்லை.//ஆச்சர்யம் தான்

    ReplyDelete
  3. பயணக் கட்டுரையும் படங்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. சுவாரஸ்யம். அடிக்கடி நெட் கட் ஆகி வர்றதால கருத்து அனுப்ப முடியலை

    ReplyDelete
  5. பயணக் கட்டுரையும் படங்களும் அருமை.

    ReplyDelete
  6. பயணம் பற்றிய விளக்கமும் படங்களும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா, மேலும் தொடர்ந்து வந்து ஊக்கப் படுத்த வேண்டி கேட்டுக் கொள்கிறேன்!!

      Delete
  7. You are competing with Mr. வீடு திரும்பல்! I think you would eventually beat him in this..Good Luck!

    தாடியில் இரு வகை; ஒன்று மேல் தாடி; இரண்டு கீழ் தாடி...டோட்டலா பார்க்காம தாடி இல்லை என்று எதையும் ஆணித்தரமாக எழுதக்கூடாது அன்பரே!

    அப்புறம் இந்த சாரு மோரு எல்லாம் வேண்டாம்; என்னை டேய்..என்றும் கூப்பிடலாம்; காரணம் எனக்கு தோல் தடித்தோல்..உறைக்கவே.. உரைக்காது...!

    ReplyDelete
    Replies
    1. @ நம்பள்கி

      தாடி பத்தி கலாகுமாரன் பின்னூட்டம் போட்டப்போதான் நானே நாக்கை கடித்துக் கொண்டேன், தப்பு செய்து விட்டோமோ என்று, தற்போது நீங்க சொன்ன மாதிரியே திருத்திவிட்டேன். மேலும், வண்டி வேகமாய்ச் செல்லும்போதே அவர்கள் எங்காவது தென்படுவார்களா என்று பார்க்க வேண்டும், கண்டவுடன் ஒரு Excitement வந்து விடும், எதைக் கவனிப்பது எதை விடுவது என்றே தெரியாது!! அவங்க முகமெல்லாம் பார்க்கிறதுக்கு மொழு மொழுவென்று தான் இருந்தது. Anyway, தகவலுக்கு நன்றி.

      Delete
    2. \\You are competing with Mr. வீடு திரும்பல்! I think you would eventually beat him in this..Good Luck!\\ பயணம் சென்றோம், அதை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான் இப்பதிவுகளை இடுகிறேன், மற்றபடி பிளான் பண்ணி எதுவும் செய்யவில்லை. மோகன் குமார் உயரத்தை என்னால் ஒருபோதும் தொட முடியாது!!

      Delete
    3. உங்களுக்கும் மோகன் குமாருக்கும் ஒரு போட்டி இருக்கணும் அதுதான் நல்லது, நீங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பல ஊர் சுற்றிபாருங்கள், நாங்கள் நோகாமல் நொங்கு தின்பதை போல பல சுற்றுலா தளங்களின் புகை படங்களை பார்த்து ரசிக்கிறோம்

      Delete
    4. @ mubarak kuwait

      அந்தமான் டூருக்கு டிக்கெட் புக் பண்ணிட்டு இந்தப் பேச்சா!! நொங்கு நீங்க மட்டும் சாப்பிட்ட போதுமா? என்னோட கடைக்கு நிறைய சனத்தை அனுப்பி வைங்க சாப்பிடட்டும்!!

      Delete
  8. படங்கள் அருமை, பயண அனுபவம் அசத்தல்..

    ReplyDelete
  9. அந்தமானின் பயண கட்டுரையுடன் படங்களும்,வீடியோ பதிவும் நன்று

    ReplyDelete
  10. முதல் வருகைக்கும் , பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சார்!!

    ReplyDelete