Wednesday, November 14, 2012

சர்.சி.வி. இராமன் கையில் பரிசு வாங்கிய பெருந்தகை நம்ம கடைக்கு வந்தாருங்கோவ்.....!! மின்னலும், இடியும் ஒரே சமயத்தில் தான் தோன்றுகிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.  ஆனாலும் மின்னல் முதலில் நமக்குத் தெரிகிறது, இடியோசை கால தாமதமாகத்தான் கேட்கிறது?  இதற்க்குக் காரணம் என்ன?  யோசியுங்கள் பதில், பதிவின் இறுதியில்!!


கீழே உள்ள படத்தைப் பாருங்கள், அதில் ஒருவர் சர் சி.வி. இராமன், இன்னொருவர் யார்?

சர் சி.வி.இராமன் கையில் இருந்து "சைமன்ஸ்" பரிசு பெறுபவர் பெயர் Dr .பசுபதி அவர்கள். அது சரி, யார் இந்த Dr .பசுபதி ஐயா?


நம்முடைய பதிவு கார்டூனிஸ்ட் RK லக்ஷ்மனை நேரில் பார்த்த அனுபவம் [1996]    க்கு ஐயா வருகை புரிந்திருந்தார்கள், தனது வலைப்பூவின் லிங்கை கொடுத்திருந்தார்கள், நான் முதலில் சீரியசாக எடுத்துக் கொள்ள வில்லை, பின்னர் தான் அவர் எமிரடஸ் பேராசிரியர் என்று தெரிய வந்தது.  பின்னர் அவரது வலை தளத்தின் லிங்கையும் கொடுத்தார்கள்.  சுட்டி.


அதைப் பார்த்த பின்னர் மிரண்டு போனேன்.  1963-67 ஆண்டுகளில் தற்போது அண்ணா பல்கலைக் கழகம் எனப்படும் College of Engineering, Gunidy யில் B.E.(Telecom.) முடித்திருக்கிறார், பின்னர் IIT யில் M.Tech. எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் First Rank.  இந்த பட்டமளிப்பு விழாவிற்கு சர் சி.வி. இராமன் வந்திருக்கிறார்.   "என்னப்பா பரிசு ரொம்ப ஹெவியா இருக்கும் போலிருக்கே" என்று இராமன் கமென்ட் அடிக்க, முதலில் அவர் பேசுவாரா என்று எதிர்பார்க்காத Dr .பசுபதி, சுதாரித்து "ஆமா சார், கல்வியறிவு சில சமயம் வெயிட்டா இருக்கும் போல" என்று பேசி சமாளித்திருக்கிறார். 

ஐயா அவர்கள் நமது பதிவு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் இந்த மாதிரி பதிவு போடுங்கள் என்று தமது Facebook நண்பர்களுக்கு பரிந்துரைத்ததாகவும் பின்னூட்டத்தில் குறிப்பிடிருந்தார்.  இதை விட வேறெந்த பாராட்டும் பரிசும் நமக்குத் தேவையில்லை என்ற மன நிறைவை ஐயாவின் பாராட்டு தந்துள்ளது.  அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.  வாசகர்கள் அவரது வலைப் பக்கத்திற்குச் செல்லலாம் அவருடன் இ-மெயில் தொடர்பு கொண்டு, அவர் விருப்பப் பட்டால் Facebook -ல் நட்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.

சரி, இப்போது பதிவின் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்குப் பதில்:

நம் கண்கள் ரெண்டும் முன்னால இருக்கு, அதனால வெளிச்சத்தை முதலில் பார்த்துவிடுகிறது, காதுகள் சற்று பின்னால் இருப்பதால், சத்தம் போய்ச் சேர நேரமாகுது!!

[நீங்க நினைச்ச பதில்]:  ஒளியின் வேகம், ஒலியின் [sound ] வேகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம்.  ஒளியின் [Light ] வேகம்=வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர்கள், ஒலியின் [sound ] வேகம் வினாடிக்கு 330 மீட்டர்கள். [~ஒரு கிலோ மீட்டரில் மூன்றில் ஒரு பங்கு !!].  நீங்க நினைச்சதுதான் சரியான பதில், நான் விட்டது கடி!!  ஹி .............ஹி .............ஹி .............


10 comments :

 1. //நம் கண்கள் ரெண்டும் முன்னால இருக்கு, அதனால வெளிச்சத்தை முதலில் பார்த்துவிடுகிறது, காதுகள் சற்று பின்னால் இருப்பதால், சத்தம் போய்ச் சேர நேரமாகுது!!//

  இந்தக் கண்டுபிடிப்பிற்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கலை?

  ReplyDelete
  Replies
  1. நமக்கு இந்த விளம்பரம்னாலே ஆகாது சார், ஆயிரக்கணக்கில் மெயில்கள் வரும் பரிசு வாங்க சுவிட்சர்லாந்துக்கு கூப்பிடுவாங்க, எக்கச் சக்கமான பாராட்டு விழா எல்லாம் நடக்கும். நாம நம்ம கடைமையைச் செய்ய இதெல்லாம் இடையூரா இருக்கும், அதான் அடக்கமாவே இருக்கோம். ஹி ...... ஹி ...... ஹி ......

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 2. வாழ்த்துக்கள்...

  சுட்டிற்கு நன்றி... ஒரு பாட்டு :

  அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்...
  எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்...
  சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...
  சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...
  தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்...

  முதல் வரி :....

  படம் : அடிமைப்பெண்

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் பாட்டு நல்லாத்தான் இருக்கு, ஆனா அதோட அர்த்தம் பயமா இருக்கு, ஏன்னா இப்ப இதை எழுதினாலும் உள்ள தள்றானுங்க, கன்மயி, பன்மயின்னு ஏதேதோ பேரு சொல்லி பயமுறுத்துறாங்க. உள்குத்து இருந்தா சொல்லிடுங்க............

   Delete
  2. அதனால தான் நான் இப்போல்லாம் கண்மாயைப் பத்திக்கூட எழுதறது இல்லை சார்.

   அப்புறம், நல்லதொரு தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.

   Delete
  3. ஹா...ஹா....ஹா....... நன்றி செங்கோவி!!

   Delete
 3. கேள்வி சாதாரணமானது தான் பதிவிற்குள் பதிவு அதில் உள்ள தகவல்கள் கனமானது.

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு.

  கடி...ஹா..ஹா.

  ReplyDelete