Thursday, March 28, 2013

பரிணாமம்: நாரத்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்டா..........


அன்புள்ள மக்கள்ஸ்!!

இன்னைக்கு இரண்டு முக்கிய [அவங்க ஏன் முக்கணும்? Constipation ஆ? அப்படின்னுல்லாம் கேட்கப் படாது!!] தமிழ்ப் பதிவர்களைப் பத்தியும், அவர்கள் நம் அறிவுக் கண்களைத் திறக்க செய்துவரும் மொள்ளமாறித் தனங்களைப் பத்தியும் பார்க்கப் போகிறோம். இவங்க தமிழ்ப் பதிவர்கள் என்றாலும் International லெவலில் எழுதுவதால் தங்கள் பெயர்களை கொஞ்சம் மாத்திகிட்டாங்க, ஆனாலும் நாம் விட்டுவிடுவோமா?  அதை திரும்பவும் தமிழ்படுத்தி விட்டோம்!!

பதிவர் 1:  Mac Paul Kelvin [நம்ம மொழி பெயர்ப்பு : மக்குபால் கள்வன்], Go Donkey அப்படின்னு ஒரு வலைப்பூவை ஆரம்பிச்சு அழகு தமிழில் பித்தாலாட்டத்தை விதைத்து வருகிறார். [Go Donkey -அப்படின்னா, கோ டாங்கி அதாவது "போ ....... கழுதை" அப்படின்னு அர்த்தம்.  இதற்க்கு காரணம், "கழுதை கெட்டா குட்டிச் சுவரு"-ன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இவரோட பதிவுக்கு கெட்டு போன கழுதைங்க  நாலு போய் விழுந்து கிடக்கும், அந்த கழுதைகளைப் பார்த்து சொல்வது போல  சிம்பாலிக்கா இப்படி பேர் வச்சிருக்காரு.]

பதிவர் 2: Charcoal Wagon [சார்கோல் வேகன், சுருக்காமா சார்வாகன் அப்படின்னு வச்சுக்கலாம்.  நம்ம தமிழாக்கம் கரி வண்டி.]  இவரு எங்க மாமு தான்.  சாதாரண மாமு இல்லை மாமூல் மாமு!! மீன் பிடிக்கிற தொழிலை பரம்பரை பரம்பரையா செய்துகிட்டு வர்றாரு.  கடலுக்கோ ஏரிக்கோ போய்த்தான் மீன் புடிக்கணுமா என்ன?  இருந்த இடத்திலேயே குட்டையை குழப்பி எல்லோரையும் கன்ஃபியூஸ் பண்ணிவிட்டு மீன் பிடிப்பாரு!!  இவரு "பிதற்றல் அரசு"-என்கிற பேர்ல வலைப்பூவை நடத்திகிட்டு வர்றாரு.

இது மக்குபால் கள்வனின் தளத்தில் உள்ள தமிழ்மண வாக்குப் பட்டை.  அது இருக்கு ஆனா இல்லை!!  இதுல டுவிட்டர் பட்டனுக்குகீழே நீல நிறத்தில் தெரிவது தமிழ்மண வாக்குப் பட்டை, கொஞ்சம் பார்க்க முடியும், ஆனாலும் ஓட்டு போட முடியாது.  இப்படி வச்சிருப்பதற்க்கான காரணம் என்னன்னு எனக்கு இன்னமும் விளங்க வில்லை!!மாமுவின் வலைப்பூவில் தமிழ்மண ஒட்டு பட்டை வேலை செய்யாது.   மக்குபால் கள்வனின் வலைப்பூவில் அது இருக்கும், ஆனா இருக்காது.  யாரும் ஓ ட்டு போட முடியாது.  ஆனாலும் இதுங்க பதிவுகள் ஒவ்வொன்னுக்கும்  இருபதுக்கும் குறையாம ஓட்டு விழுது.  இரகசியம் வேற எதுவும் இல்லை, கிராமங்களில் சில இழவு வீடுகளில் செத்தவருக்காக அழ ஆள் இருக்க மாட்டார்கள், அழாமல் இருந்தால் நன்றாக இருக்காது, அக்குறையை நீக்க கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து மாரடிக்க வைப்பார்கள்.  இவங்களுதும் அதே டெக்னிக் தான்.  கள்ள ஒட்டு போட தனி டீமையே  வைத்திருக்கிறார்கள்.  ஜகஜ்ஜால கில்லாடிங்க தான் போங்க!!இந்த ரெண்டு பேரும் சேர்ந்து பரிணாமம் என்னும் பட்டை நாமத்தை......... ஸாரி ....... பித்தலாட்டத்தை கண்ணும் கருத்துமா இளிச்சவாயர்கள் நெத்தியில்........ மறுபடியும் ஸாரி ......... மத்தியில் பரப்பிக்கிட்டு வராங்க.  அதென்ன பரிணாமம் டார்வின் புளுகிவிட்டு போனதா?  அது தான் இல்லை.  இது வேற!!  ரோட்டில் ஓடும் ஆட்டோ ரிக்ஷாக்களின் பரிணாமம்.  அது  ஒரு  நிறுவனத்தின்  தொழிச்சாலையில் தயாரிக்கப் பட்டது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அது தான் இல்லை, அது வந்த விதமே வேறு என்று ஆதாரப் பூர்வமாக நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.


இவங்களோட கொள்கைப் படி, முதலில் மிதிவண்டி எனப்படும் சைக்கிள் தான் உருவாச்சு.  எப்படி அது உருவாச்சு?  யாராச்சும் செய்தார்களா?  அதுதான் இல்லை!!  ஒரு பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் விற்ப்பவன் வீட்டில் அவன் வியாபாரம் செய்து சேகரித்த இரும்பு, இரப்பர் சாமான்கள் எல்லாம் ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்திருந்தான்.  ஒரு நாள் சூறாவளிக் காத்து வந்து அவன் வீட்டைத் தாக்கியது, அந்த சாமான்கள் எல்லாம் காற்றில் பறந்து போயின, அவை கசாமுசா வென்று ஒன்றோடொன்று கலந்து கீழே விழும் போது சைக்கிளாக மாறிவிட்டது.  இதுதான் சைக்கிளின் பரிணாமம்.


அது அப்படியே இருந்துச்சா?  அதுதான் இல்லை, Natural Selection நடக்க ஆரம்பித்தது.  மனுஷன் சைக்கிளை கஷ்டப்பட்டு மிதிப்பதையும், அடிக்கடி வழியில் டயர் பஞ்சர் ஆவதையும் பார்த்து அந்த சைக்கிளுக்கே பேஜார் ஆகிப் போச்சு.  பழைய இரும்பு பக்கம் சைக்கிளை கொண்டுபோகும்போதேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இரும்பை தன்னோடு சேகரிக்க ஆரம்பித்தது, அப்படியே என்ஜினானது, பின்னாடி ஒரு வீலையும் ஏற்றிக் கொண்டது. இது  Natural Selection என்பது ஒருத்தருக்கும் விளங்க வில்லை, அப்படியே ஒரு நாள் ரேஷன் கடைப் பக்கம் போனபோது அங்கே  மண்ணெண்ணெய் வாங்கிய ஒருத்தர் இந்த பரிணாம வளர்ச்சி அடைந்த சைக்கிளின் மேல் தவறிப் போய் கொட்டி விட்டார், அதே சமயம் அங்கே நின்று பீடி குடித்துக் கொண்டிருதவர் தீக்குச்சியை தவறி வீச நின்று கொண்டிருந்த வண்டி தானாக ஓட முதல் ஸ்கூட்டர் பரிணாமம் அடைந்தது. 

 ஸ்கூட்டரை நம்மாளு சும்மா விட்டானா?  ரெண்டு பேரு போயிருந்தா பரவாயில்லை, ரெண்டு பேரை ஏற்றும் வண்டியில் நம்மாளுங்க ஒரு ஊரையே ஏத்த ஆரம்பிச்சாங்க.  
Natural Selection  என்பது தேவைக்கேற்ப வடிவமைப்பில் மாறுவது என்பதை நீங்கள் உணரவேண்டும்.  இப்போது அதிகம் பேர் பயணிக்க வேண்டிய தேவையை உணர்ந்த ஸ்கூட்டர் பரிணாமம் அடைய ஆரம்பித்தது, பின்னால் வைத்திருந்த ஸ்டெப்னி வீல் கழண்டு கீழே வந்து மூன்று சக்கரங்களாகியது. உதைக்கும் ஸ்டார்ட்டர் லிவராக மாறி கையால் மேலே இழுத்தால் ஸ்டார்ட் ஆகும் ஷேப்புக்கு மாறியது, ஹெட்லைட் கீழே போனது, rear view கண்ணாடிகள் அப்படியே ஓரம் போயின, நீங்கள் இன்றைக்கு பார்க்கும் ஆட்டோ ரிக்ஷா உருவானது!!

இன்றைக்கும் பாருங்க ஸ்கூட்டருக்கும் ஆட்டோ ரிக்ஷாவுக்கும் எஞ்சின் சப்தம், சக்கரங்களின் வடிவமைப்பு என நிறைய தொடர்புகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுமட்டுமல்ல, பைக்குகளும் ஸ்கூட்டரில் இருந்து கிளைத்து வந்தவைதான் என்பதையும் இவர்கள் இருவரும் ஆணித்தரமாக அடித்து உதைத்து கூறுகின்றனர்.  எனவே இன்றைக்கு நீங்கள் பார்க்கும் ஆட்டோ, பைக்குகள் இரண்டுக்கும் பொது மூதாதையர் ஸ்கூட்டரே, அவை தானாகவே உருவானவை, யாரும் செய்யவில்லை என்பதே இவர்களின் வாதம்.  

இதையடுத்து, இவர்கள் உயிர்களின் பரிணாமத்திற்கும்  தொண்டு செய்து டார்வினுக்கு நன்றிக் கடன் செலுத்த இருக்கின்றனர்.  இவர்களின் ஆராய்ச்சியில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு மூட்டை இராசாயனப் பொருட்கள் இருந்தால் போதும், [தற்போது மனித உடலில் உள்ள அதே இராசாயன மதிப்பு!!] அதிலிருந்து ஒரு ஆளையே உருவாக்கி விடலாம்.   ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு code நம்பரை உருவாக்குவார்கள், அதை இவர்கள் இயந்திரத்தில் கொடுத்தால் போதும், அந்த 200 ரூபாய் இரசாயனப் பொருட்களும் உங்களுக்கு வேண்டிய நபராக மாறிவிடும்.  வேண்டாத போது மீண்டும் கெமிக்கல்களாகப் பிரித்து போட்டு விடலாம். ரொம்ப சுளுவு.எதை எடுத்தாலும் 200 ரூபாய்.....
உங்களுக்கு எந்த ஃபிகர் வேண்டும், அல்லது எந்த நட்சத்திரம் வேண்டும்?  இனி நீங்கள் ஏங்கி ஏங்கி வாழ் நாள் முழுவதும் நொந்து சாக வேண்டியதில்லை வெறும் 200 ரூபாய் போதும்.  இரவில் உருவாக்கிக்கலாம், விடிஞ்சதும், பிரிச்சு போட்டு விடலாம், கல்யாணம் கருமாதி, பிள்ளை குட்டி என எந்தவித சுமையுமில்லை, விவாகரத்து, ஜீவனாம்சம் என பிரச்சினையும் இல்லை.  வெறும் மஜா......மஜா..... மஜாதான்.  இந்த ஆராய்ச்சி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.  ஹி ...........ஹி ...........ஹி ...........

அடுத்து சமுதாயத்திற்கு சில அறிவுரைகளை இவர்கள் வழங்க இருக்கிறார்கள்: 

மனுஷனுக்கு மட்டும்தான் வலிக்கும், மத்த ஜீவன் எதுக்கும் வலி என்பதே கிடையாது.  அதனால மனுஷனுக்கு எதாச்சும் ஒன்னு என்றால் கூவோ கூவுன்னு கூவனும், நாய் மாதிரி ஊளையிடனும், மத்ததெல்லாத்தையும் அடிச்சு திண்ணனும். 

ஆண், பெண் இவர்கள் தான் இணையனுமா?   ஏன்யா இப்படி பழைமை வாதின்களா இருக்கீங்க?  ஒரு ஆம்பளைக்கு இன்னொரு ஆம்பளையை பிடிச்சிருந்தா ரெண்டு பேரும்  சேர்ந்து வாழலாம், அதனால என்ன தப்பு?  ஒரு பொம்பளைக்கு இன்னொரு பொம்பளையோட குடும்பம் நடத்தினா என்ன தப்பு?  கொஞ்சம் விசாலமா சிந்திங்கையா.........

கல்யாணம் பண்ணாமலேயே குடும்பமும் நடத்தலாம், முடிஞ்சவரைக்கும் சந்தோஷமாய் இருக்கலாம், முடியாட்டி கலட்டிகிட்டு போய்கிட்டே இருக்கலாம்.  இண்டர்நேஷனல் லெவலுக்கு வாங்கையா....... 

உங்க பொண்ணு பையன் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே டேஸ்டு பண்ணப் போவாங்க, இதெல்லாம் தப்புன்னுகிட்டு பழைய காலத்திலேயே இருக்காதீங்க, கம்பியூட்டர் காலத்துக்கு வாங்க.  கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ரிகர்சல் பார்க்கிறதை நீங்க ஏத்துக்கணும், அதனால என்ன தப்பு? அதற்க்கேற்ப நீங்க மன முதிர்ச்சியடையனும். 

இப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சமூக சீர் திருத்தங்களையும் சமுதாயத்தில் ஏற்ப்படுத்தும் இவர்களுக்கு நோபல் பரிசு குடுக்கணும்  அதாவது ஒரு கொரடாவை எடுத்து இவங்க பல்லை புடுங்கனும்.  அது தான் நோ -பல்.  

இன்னொரு மொக்கை பதிவில் சந்திப்போம், வணக்கம் மக்கள்ஸ்!!

Monday, March 25, 2013

நோய்களில் இருந்து நம்மை காக்க இயற்கை வழி விவசாய விலை பொருட்கள்-வழி கட்டும் இளைஞர்.

அன்புள்ள மக்கள்ஸ்,

இன்று Facebook கில் உலாவிய போது மன நிறைவைத் தரும் ஒரு செய்தி கண்ணில் பட்டது. சுட்டி.  கைநிறைய சம்பளம் வாங்கும் இளைஞர் ஒருவர் மன நிறைவு கிடைக்காமல் விவசாயத்திற்கு திரும்பிய கதை.  அதுவும், பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் போடாத விவசாயம்!! நிலங்களை பிளாட்டு போட்டு விற்கும் இக்காலத்தில் இப்படி ஒருவர்.  இவர் மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா எப்படி இருக்கும்!!  நம்ம நாடே சொர்க்கமாயிடும். அவர் பெயர் ரூசோ.  ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளியவர் இன்றைக்கு மாதம் 15 லட்சம் சம்பாதிக்கிறார், 40 பேருக்கு வேலை தருகிறார், மக்களுக்கு விஷமற்ற உணவுப் பொருட்களையும் தருகிறார்!


லட்சம் டன்களில் கொட்டப் படும் பூச்சி மருந்துகளும், ரசாயன உரங்களும் தான் இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம்  பரவியிருக்கும் சர்க்கரை, கேன்சர், உயர் இரத்த அழுத்தம் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணமாகும்.  இதை எந்த டாக்டரும் வெளியில் சொல்ல மாட்டான், சொன்னா அவன் பிழைப்பில் மண் விழும்.   பல கொடிய நோய்கள் வருவதற்கு நாம் உண்ணும் விஷ உணவே காரணம். இவற்றுக்கு மாற்று வழி இயற்க்கை வழியில் விளைவிக்கப் பட்ட உணவுகளை வாங்கிப் பயன்படுத்துவது தான்.  அந்த புனித பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மாதிரி நல்ல ஆத்மாக்க்களை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம், நம்மையும் நாட்டையும் காத்துக் கொள்ள முடியும்.  


இவரைப் பற்றி படித்தவுடன் இவரது வலைத்தளம் இருக்கிறதா எனத் தேடித் பார்த்தேன், இருக்கிறது:  சுட்டி.
" Raasi Eco Organic Pvt Ltd "
Rousseau

1275 6th main road, thiruvalluvar nagar,
thiruvanmiyur,Chennai - 41.

Phone : 0454 - 45018540
Mobile : +91 8939915767

Email : thairuso@gmail.com
Website : www.thenaturalstore.org

சென்னையில் உள்ளவர்கள் திருவான்மியூரில் உள்ள இவரது கடைக்கு நேரில் சென்றோ, வீட்டு டெலிவரி கேட்டோ பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  தமிழகத்தின் பிற பகுதிகளில் இவரைத் தொடர்பு கொள்ள: சுட்டி.
 
ரூசோவின் தோட்டத்தில் இயற்க்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

கீழே இந்தியா டுடேயில் வந்த கட்டுரை.

 மேலே உள்ளது ரூசோவின் விவசாயப் பண்ணைகள், ரூசோக்கு நமது சல்யூட்!!


Saturday, March 16, 2013

மிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.


சமையல் என்பது ஒரு கலை, எல்லோருக்கும் சுவையாக சமைக்க வரும் என்று சொல்ல முடியாது.  சிலரது கைப்பக்குவம் அவங்க எது செய்தாலும் சுவையாக வந்துவிடும், சிலர் என்ன செய்தாலும் அவ்வளவாக சுவையாக  வராது.  இந்த மாதிரி அல்லாது யார் செய்தாலும் சுவையாக இருக்கும் என்னும் ஒரு செய்முறையைத்தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம்.  இந்த செய்முறையை சரியாகப் பின்பற்றினாலே போதும், சுவைக்கு கியாரண்டி!!  நாம் இன்றைக்கு செய்ய இருப்பது எங்கும் பிரபலமான பக்கோடா.

தேவையான பொருட்கள்:

[நான் இங்கே 1 கிலோ கடலை மாவுக்கு குறிப்பு கொடுக்கிறேன், நீங்கள் உங்கள் தேவைக்கு செய்து கொள்ளலாம், எல்லா பொருட்களையும் அதே அளவுக்கு கூட்டியோ, குறைத்து கொண்டோ செய்யலாம்].

கடலை மாவு 1 கிலோ.
வெங்காயம் 1/2 கிலோ. 
பச்சை மிளகாய் 200 கிராம்.
பூண்டுப் பற்கள் 25
சீரகம் ஒரு சாம்பார் கரண்டி அளவு.
கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி.
கடலை எண்ணெய் 1 லிட்டர்.


கடலை மாவை சல்லைடையில் சலித்து சுத்தப் படுத்தி ஒரு பேசன் வடிவப் பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தை வழக்கமான முறையில் துண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும், சிலர் நீளவாக்கில் வெட்டுவார்கள், அதைத் தவிர்க்கவும்.
பச்சை மிளகாயை இந்த மாதிரியே வெட்டிக் கொள்ளவும்.


சீரகத்தை அம்மியில் வைத்து நுணுக்கி எடுத்துக் கொள்ளவும், மிக்சியில் என்றால் கவனமாக இதே மாதிரி அரைத்து எடுக்கவும், கொஞ்சம் விட்டாலும் தவிடு போல ஆகிவிடும், அது சரிப்படாது.


பூண்டின் சருகுகள், வேண்டாத நடுத் தண்டு, வேர் மட்டும் நீக்கி தோலுடன் பற்களை எடுத்து நசுக்கிக் கொள்ளவும்.


முன்னர் சலித்து வைத்திருந்த கடலை மாவை எடுத்து நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் பரப்பவும்.


அதற்க்கு மேலாக பச்சை மிளகாயை பரப்பவும். [நான் பதிவுக்காக செய்ததாலும், குழந்தைகள் காரம் உண்ணுவதில்லை என்பதாலும் பச்சை மிளகாயைக் குறைத்து விட்டேன், நீங்கள் உங்கள் சுவைக்கேற்ப முன்னர் சொன்ன அளவில் சேர்த்துக் கொள்ளலாம்!!


பச்சை மிளகாய் மேல் நசுக்கிய பூண்டை  பரப்பி,  பூண்டின் மீது அரைத்த சீரகத்தையும் தூவவும்.

எல்லாவற்றுக்கும் மேல், சுத்தம் செய்த கறிவேப்பிலையை பரப்பவும்.     
எல்லாம் ஆயிற்று உப்பு பற்றி நாம் எதுவுமே சொல்ல வில்லையே!!  உப்பை நேராக நீங்கள் சேர்க்கப் போவதில்லை, உப்புக் கரைசாலாகத்தான் சேர்க்கப் போகிறீர்கள்!! இது தயாரிக்கும் முறை மிகவும் முக்கியம்.  நீங்கள் எவ்வளவு செய்தாலும் இக்கரைசலின் அளவு இது மாறப் போவதில்லை.  மேலும், இதில் பெரும் பகுதியை நீங்கள் பயன்படுத்தப் போவதும் இல்லை!!

ஒரு பாத்திரத்தில் 750 மிலி நீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு பெரிய கைப்பிடி  அளவுக்கு கல் உப்பை போடுங்கள்.  [50 மிலி கப் இருந்தால் ஒரு கப் உப்பு போடலாம், பாக்கெட்டுகளில் வரும் சுத்தீகரிக்கப் பட்ட உப்புகளை இதற்க்கு பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அளவு தெரியாது!! ].  பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சமையல் சோடாவையும் போடுங்கள்.  இரண்டையும் நன்கு கரையும் படி கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.


தற்போது கடலை எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி சூடு படுத்தவும், எண்ணெய் நன்கு சூடேறி கொதிக்கும் நிலை வந்த பின்னர்  ஒரு கரண்டியை எடுத்துக் கொண்டு சூடான எண்ணெயை முகர்ந்து மேலே உள்ள பிரமிடில் உச்சியிலும்  அதைச் சுற்றியும் கறிவேப்பில்லை, அதன் கீழேயுள்ள சீரகம், பூண்டின் மீது படும் வண்ணம்  ஊற்றவும், அவை பொரிந்து வாசனை வரும்!! மீண்டும் இன்னொரு கரண்டி எண்ணையை அதே மாதிரி ஊற்றவும். [அரை கிலோவுக்கு ஒரு கரண்டி எண்ணெயே போதும்!!].    ஊற்றிய பின்னர் அடுப்பின் தீயை பக்கோடா செய்யும் அளவுக்கு குறைத்துக் கொள்ளலாம்.

எண்ணெய் ஊற்றிய பின்னர் எல்லா பொருட்களையும் சீராகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட கலவையில் நீங்கள் ஒவ்வொரு முறையும் எண்ணெயில் எவ்வளவு போடப் போகிறீர்களோ அந்த அளவு மட்டும் கலவையை ஒரு ஓரத்தில் ஒதுக்கி எடுத்துக் வைத்துக் கொண்டு, உப்பு நீர் பாத்திரத்தில் இருந்தது நீரை கையால்  கொஞ்சமாக எடுத்து இந்த மாவில் மட்டும் தெளித்து விரல்களால் பக்குவமாக கிளறி எண்ணெய்யில் போடும் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.  தண்ணீரை தெளித்தாலே போதும், ஒரு போதும் ஊற்றி விட வேண்டாம்.  நீர் குறைந்த பட்சமே இருக்க வேண்டும், ஆனாலும் கடலை மாவும் ஈரமாகியிருக்க வேண்டும், எண்ணெயில் தூவும் போது எளிதாக விழும் வண்ணம் இருக்க வேண்டும், அவ்வளவு நீரை தெளித்தாலே போதும், அதற்கும் மேல் வேண்டாம்.  மாவு மிகவும் கெட்டியாகவே இருக்கட்டும். அதை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் தூவி வேகவைத்து பொரித்தெடுக்கவும்.   பொரித்த பின்னர் பக்கோடா கிட்டத் தட்ட கடலை மாவு நிறத்தில் தான் இருக்கும், கடையில் உள்ளது மாதிரி பழுப்பாக ஆகாது.


இந்த முறையில் செய்யும் பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும், சுவைப்பவர்கள் அனைவரும் உங்களை பாராட்டத் தயங்க மாட்டார்கள்!!  செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று எழுதுங்கள், மிக்க நன்றி!!

Tuesday, March 12, 2013

நாத்திகரின் மூடநம்பிக்கை

 அன்புள்ள மக்கள்ஸ்!!

தமிழகத்தில் தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தாங்கள் எதையெதையெல்லாம்  மூடநம்பிக்கை என்றார்களோ அதையெல்லாம் அவர்களே வேறு விதத்தில் செய்தார்கள் என்ற குற்றச் சாட்டை சில இறைநம்பிக்கையாளர்கள் நாத்தீகர்களுடன் நடந்த விவாதத்தில் வைக்கிறார்கள்.   "நாத்திகரின் மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் இந்த விவாதம் சில வருடங்களுக்கு முன்னர் கும்பகோணத்தைச் சேர்ந்த சில நாத்திக அன்பர்களுக்கும் சென்னையைச் சேர்ந்த சில இஸ்லாமிய இறை நம்பிக்கையாளர்களுக்குமிடையே  சென்னையில் நடந்தது.  இதை YouTube-பில் பகிர்ந்துள்ளனர், தற்செயலாக நாம் ஒரு சிறுபகுதியைக் காண நேர்ந்தது, அது மிகவும் சுவராஸ்யமாகத் தெரியவே அது சம்பத்தப் பட்ட அனைத்து காணொளிகளையும் கண்டோம்.  அவற்றில் நாம் முக்கியமாகக் கவனித்த சில கருத்துக்களை இங்கே பகிர்கிறோம்.

இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நாத்தீகர்கள் செய்தது தனிப்பட்ட முறையில் சரியா, தவறா? என்பது இங்கே விவாதமல்ல.   அவர்கள் எதையெல்லாம் தவறு என்று பிராச்சாரம் செய்தார்களோ, எதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொன்னார்களோ அதை அவர்களே செய்தார்கள்- இது தான் பிரச்சினை!!

1. இந்த விவாதத்தில் முதலில் எடுத்துக் கொண்ட பாயிண்ட் பெரியார் போதித்த பெண் சுதந்திரம் அவர் கருத்துப் படி:

பெண்களுக்கு திருமணமே கூடாது.
பெண்களும் ஆண்கள் மாதிரியே கிராப் வெட்டி பேன்ட் சட்டை  போட்டுக் கொள்ள வேண்டும்.
பெண்கள் நகை ஸ்டேன்ட் ஆகிவிட்டார்கள் எனவே அவர்கள் இனி நகையணியக் கூடாது.
கர்ப்பப் பை இருப்பதால் தானே ஆண் அவளை கர்ப்பமாக்கி அடிமைப் படுத்து கிறான்?  எனவே அவள் கர்ப்பப் பையை வெட்டிப் போட வேண்டும்.
பெண்ணை இனிமேல் பெண் என்றே அழைக்க கூடாது, ஆண் என்று தான் அழைக்க வேண்டும்!!

ஆத்தீகர்களின் குற்றச் சாட்டு:  இதை பெரியார் கட்சிக் காரர்களே யாரும் பின்பற்றவில்லை நடைமுறைக்கு ஒவ்வாதது.  மனோதத்துவ டாக்டர் ஷாலினியின் வாக்குப் படியும் திருமணமில்லாத வாழ்க்கை பெண்ணிற்கு உகந்ததல்ல. பெரியாரே பல திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார், அவரே இரண்டாவதாகவும் திருமணம் செய்திருக்கிறார்.  பெண் சுதந்திரம் என்ற அவர் திருமணம் புரிந்து ஒரு பெண்ணை தனக்கு பணிவிடை செய்யும் அடிமையாக்கி இருக்கிறார். இது முரண். எப்பேர்பட்ட கொலைகாரனாக, கொள்ளைக் காரனாக  இருந்தாலும் அவனுக்கும் என்று ஒரு வக்கீல் வந்து ஆஜராவான், அதுமாதிரி கூட இந்த கொள்கைக்கு பெரியார் உட்பட ஒருத்தரும் ஆதரவாக இல்லை.

 1. http://www.youtube.com/watch?v=WNlPbvPfg_E
 2. http://www.youtube.com/watch?v=Cp_x78ieVBY
 3. http://www.youtube.com/watch?v=oGTbaa3uwyk
 4. http://www.youtube.com/watch?v=cMHyG6DQbRE
 5. http://www.youtube.com/watch?v=GFC_-yuEyj4
 6. http://www.youtube.com/watch?v=yjEdmEpKjKE

2.  தீபாவளி, ஹோலி, நவராத்திரி என எல்லாம் வட நாட்டவர் பண்டிகைகள்.  அவற்றைத் தவிர்க்க வேண்டும்.  பொங்கல் என்னும் தமிழன் பண்டிகையை கொண்டாட வேண்டும். இது  திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு சமைக்கக் கற்றுக் கொடுக்க ஒரு வாய்ப்பாக அமையும்.  நாம் வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் சூரியனை வணங்கலாம்.

குற்றச் சாட்டு:  மூட நம்பிக்கை என்றால் எல்லாவற்றையும் மறுக்க வேண்டும்.  தமிழன் செய்வதால் அவனது மூட நம்பிக்கை ஏற்கத் தக்கதாகிவிடாது.  பெண்ணடிமை என்று சொல்லிவிட்டு தற்போது அவர்களுக்கு பொங்கல் பண்டிகை சமையல் கற்க  ஒரு வாய்ப்பு என்பது முரண்.  நாத்தீகர் கணக்குப் படி சூரியன் என்பதும் ஜடம் தான், அதற்க்கு அறிவெல்லாம் கிடையாது, அது எப்படி வணங்கத் தக்கதாகும்?
 1. http://www.youtube.com/watch?v=vF9khroYDmo
 2. http://www.youtube.com/watch?v=5yPsJNYJv_s
 3. http://www.youtube.com/watch?v=G2U3fAzezkA
 4. http://www.youtube.com/watch?v=dej3a4Q6-sQ
 5. http://www.youtube.com/watch?v=q6slJSMGMcQ
 6. http://www.youtube.com/watch?v=iMapN9lSFxI
 7. http://www.youtube.com/watch?v=ZIGVlxJUvKg
 8. http://www.youtube.com/watch?v=WNxxw5iG5YU
 9. http://www.youtube.com/watch?v=s3DWVDBMvp8
 10. http://www.youtube.com/watch?v=76ymhd5S3no
3. கோவிலில் உள்ள சிலை வெறும் கல், அதற்க்கு மாலை போட்டு வணங்குதல் காட்டு மிராண்டித் தனம், முட்டாள்தனம் என்று போதித்துவிட்டு பெரியாருக்கு ஊர் ஊருக்கு சிலை வைத்து அதற்க்கு மாலை போட்டு வணங்குதல். பெரியார் சிலைக்கு மரியாதை செய்தல், அதை நோக்கி பேசுதல், நினைவு நாட்களில் தலைவர்களின் சமாதிக்குச் சென்று மாலை மரியாதை செலுத்துதுதல்.


குற்றச் சாட்டு: பெரியார் சிலையானாலும் எருமை மாட்டு சிலையானாலும் ரெண்டும் கல்லுதான் ரெண்டில் எதற்கு மாலை போட்டாலும் ஒரே எபக்ட்டுதான்.  ஒரு நபர் என்றால் நேரில் மாலை அணிவித்தால் அது மரியாதை செய்ததாகும் அவருடைய சிலைக்கு மாலையைப் போடுவது எவ்விதத்தில் அந்த நபருக்கு செய்த மரியாதையாகும்?  ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை புதைத்த இடம் எப்படி மரியாதைக்குரியதாகும்?  அந்த இடத்தில் அவர் இன்னமும் உள்ளாரா?  அங்கே மாலையை வைத்து மவுனமாக நிற்ப்பது எதற்கு?  இதெல்லாம் உங்கள் மனதுக்கு ஒருவித ஊக்கத்தைத் தருகிறது, என்றால் கோவிலுக்கு ஒருத்தன் போய் சிலைக்கு மாலையைப் போடுவதால் அவனுக்கும் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதை மூட நம்பிக்கை என்று நாத்தீகர்கள் ஏன் தடுக்க வேண்டும்? ஒருவர் பிறந்தால் அது அன்றோடு முடிந்தது அடுத்த வருடம் அதே தேதி வருவதால் அது அவரது பிறந்த தினமாகவோ நினைவு தினமாகவோ ஆக முடியாது.  அது ஒரு முறைதான் வரும் மீண்டும் வராது.
[நண்பர்களே தாங்கள் எல்லா காணொளிகளையும் பார்க்க முடியாவிட்டாலும் கீழே உள்ளவற்றில் முதல் நான்கைந்தையாவது கண்டிப்பாகப் பாருங்கள் !!]
 1. http://www.youtube.com/watch?v=iHJVX679w2k
 2. http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk
 3. http://www.youtube.com/watch?v=VBmzX252gSM
 4. http://www.youtube.com/watch?v=pSoGCt28tMM
 5. http://www.youtube.com/watch?v=ZHvzheWcW7Q
 6. http://www.youtube.com/watch?v=YV0853sm-gQ
 7. http://www.youtube.com/watch?v=pSoGCt28tMM
 8. http://www.youtube.com/watch?v=ZHvzheWcW7Q
 9. http://www.youtube.com/watch?v=lB1Jmp7XCDw
 10. http://www.youtube.com/watch?v=y-nqTDVIPas
 11. http://www.youtube.com/watch?v=u5_7DJa0gXQ
 12. http://www.youtube.com/watch?v=gFAOYpBlEl4
 13. http://www.youtube.com/watch?v=hw-VUjVaoI0
 14. http://www.youtube.com/watch?v=RbMWa9J_vog
 15. http://www.youtube.com/watch?v=LjS4WnE_VRo
 16. http://www.youtube.com/watch?v=962WrfOmqsA
 17. http://www.youtube.com/watch?v=x-cnKMhKbnM
 18. http://www.youtube.com/watch?v=4GIBN9Kw26I
 19. http://www.youtube.com/watch?v=YEmvPGVSqag
 20. http://www.youtube.com/watch?v=cSJzAA1ExJw
 4.  கறுப்புச் சட்டை அணிதல்.

"உனக்கு ஏன்டா குடுமி என்ற அடையாளம்? உனக்கு ஏன் குல்லாய், லுங்கி?" என்று அடுத்தவர் தங்களை அடையாள படுத்திக் கொள்வதை நாத்தீகர்கள் கேள்வி  கேட்கிறார்கள் இவ்வாறு கேட்கும் இவர்கள் அதற்க்கு உதாரணமாக தங்களை அடையாள படுத்திக் கொள்ளாமல் அல்லவா இருக்க வேண்டும்?  அதென்னது கூட்டமா கருப்பு சட்டை போட்டுக்கிட்டு நிற்ப்பது?  உங்க கொள்கைகளைப் பரப்ப உங்களை நீங்கள் அடையாள படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், ஆத்தீகன் தனது கொள்கைகளை பரப்ப தன்னை அடையாள படுத்திக் கொண்டால் தப்பென்ன?5.  அனைவரும் அர்ச்சகராக வேண்டும்/ தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

 கோவில் என்பது உங்கள் கொள்கைப் படி மூடநம்பிக்கை என்று ஆகிவிட்டது அப்புறம் எதற்கு அதற்குள் இன்னொருத்தரை பிடித்துத் தள்ள வேண்டும்?   கடவுளே இல்லை, இல்லாத எழவுக்கு எதில் அர்ச்சனை செய்தால் தான் என்ன? கடவுள் இல்லை என்றவர்கள் அதன்படி இல்லை என்று நிற்காமல்  மற்றவர்கள் அதனுள் போய் விழ போராடுவது முரண்.

Sunday, March 10, 2013

ஒரு டம்ளர் பால்....... செய்நன்றி மறவாத மருத்துவர்.

அன்புள்ள மக்கள்ஸ்,

எனக்கு என்னுடைய நண்பர் அனுப்பிய மெயில் இது.  பிடிடித்திருந்ததால் தங்களுடன் பகிர்கிறேன்!!