Wednesday, November 21, 2012

தினமணிக்கு என்ன ஆச்சு?

இன்று தினமணி இணைய தளத்தைப் பார்த்துக் கொண்டு வரும் போது ஒரு கவனத்தை ஈர்க்கும் செய்தி கண்ணில் பட்டது, ஆனால் குழப்பியது.


இதில் குழம்ப என்ன இருக்கிறது?

சூரிய குடும்பத்தில் வியாழனை விட 13 மடங்கு பெரிய கோள் இருந்திருந்தால் இத்தனை நாள் கண்டுபிடிக்காமல் விட்டு விட்டிருப்பார்களா?

அப்படியே இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க நாலு வருடம் எதற்கு?

அந்தக் கிரகம் வியாழனை விட 13 மடங்குதான் பெரிசு என்றால் சூரியனை விட இரண்டரை மடங்கு பெரிதாக எப்படி இருக்க முடியும்?  ஏனெனில் சூரியன் வியாழனை விட உருவத்தில் பத்து பங்கும், எடையில் ஆயிரம் மடங்கும் பெரியது. அப்படிப் பார்த்தால் உருவத்தில் இந்த வியாழனை விட இருபத்தைந்து மடங்கு பெரிதாக இருக்க வேண்டும்.  எடையை ஒப்பிட்டால் இன்னும் எங்கேயோ போகும். அப்படியே ஒருவேளை இருந்தா, அந்த கிரகம் சூரியனை சுற்ற வேண்டியதில்லை சூரியன் தான் அதைச் சுற்ற வேண்டியிருக்கும், அல்லது ஒரே வயசுள்ள குழந்தைகள் கைகோர்த்து கண்ணா மூச்சி சுத்துவது போல இரண்டும் சுற்ற வேண்டும். 

அந்த கிரகத்துக்கும் வியாழன் என்றே பெயர் வைத்து விட்டால், ஏற்கனவே இருக்கும் வியாழனை என்னவென்று அழைப்பது?

தலை முடியை பிச்சுக்காததுதான் குறை.

மக்கள் மதிப்பை எவ்வளவு சம்பாதித்திருக்கும் ஒரு  செய்தித் தாள், ஏன் இவ்வளவு  பொறுப்பேயில்லாம ஒரு தகவலைத் தரவேண்டும்?  அஞ்சாம் கிளாஸ் பையன் கூட இந்த மாதிரி தகவல்களைத் தர மாட்டான்.  செய்திகளை சேகரித்து வெளியிட கொஞ்சம் தலையில் சரக்கு இருக்கும் ஆட்களை போட மாட்டார்களா?  

இது வேலைக்காதுன்னுட்டு  கூகுலார்கிட்ட ஓடினேன்.

அப்புறம் பார்த்தாதான் உண்மைச் செய்தி வேற இருக்கு.  சுட்டி.  



பூமியில் இருந்து 170 ஒளி ஆண்டுகள் தொலைவில், κ[கப்பா]-ஆண்ட்ரோமேடா [κ-Andromedae] என்னும் நட்சத்திரத்தை இந்த கிரகம் சுற்றி வருகிறது.  கப்பா ஆண்ட்ரோமேடவின் சைஸ் சூரியனைப் போல இரண்டரை மடங்கு, அதைச் சுற்றி வரும் கிரகம் நமது வியாழனைப் போல 13 மடங்கு பெரியது.  அதற்க்கு சூப்பர் ஜூபிடர் [சூப்பர் வியாழன்] என்று பெயரிட்டுள்ளார்கள்.   கப்பா ஆண்ட்ரோமேடா உருவாகி மூன்று கோடி ஆண்டுகள் மட்டுமே ஆகின்றது.  [நமது சூரியன் உருவாகி 500 கோடி ஆண்டுகள் ஆகின்றது].
சூப்பர் ஜூபிடர் 

ஹாவாயியில் மௌனா கே [ Mauna Kea ] என்னும்  மலை உச்சியில் அமைக்கப் பட்டுள்ள,  ஜப்பானில் தயாரிக்கப் பட்ட   8 மீட்டர் விட்டமுள்ள தொலைநோக்கியின் மூலம் இதன் படத்தை எடுத்திருக்கிறார்கள். அகச் சிவப்பு அலை நீளத்தில் κ-ஆண்ட்ரோமேடாவின்  Glare ஐ நீக்கி, சூப்பர் வியாழனைப்  படமாக்கியுள்ளனர்.  சூரிய குடும்பத்துக்கு வெளியே 800-க்கும் மேற்பட்ட கிரகங்களை கண்டுபிடித்திருந்தாலும் சிலது மட்டுமே பூமியில் இருந்து நேரடியாக படமாக்கப் பட்டுள்ளன. Astrophysical Journal Letters இதழில் இந்தக் கண்டுபிடிப்பு வெளியிடப் படும்.

*ஒளி ஆண்டு: ஒரு வருடத்தில் ஒளி [Light ] பயணிக்கும் தூரம்.  ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கி.மீ.

=3 லட்சம் கி.மீ X 60 X 60 X 24 X 365


15 comments:

  1. எதோ நினைத்து வந்தேன்...

    தகவலுக்கும் சுட்டிற்கும் நன்றி...

    ReplyDelete
  2. "கேழ்வரகில நெய் ஒழுகுதுன்னா கேக்கறவனுக்கு மதி எங்க போச்சு" அப்படீன்னு பழமொழி ஒண்ணு உண்டு. இல்லை,மதி இருக்குன்னு நிரூபிச்சுட்டீங்க.

    ReplyDelete
  3. தவறான தகவலை திருத்தி, நல்லதகவலையும் பகிர்ததுக்கு மிக்க நன்றி. தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆகாஷ்!!

      Delete
  4. நல்ல பகிர்வு..

    அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.

    இதை மிகவும் இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. @ முனைவர்.இரா.குணசீலன்

      மிக்க நன்றி, அப்பப்போ நம்ம கடைக்கும் வாங்க!!

      Delete
  5. சரியான தகவலை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.

    மகிழ்ச்சி..வாழ்த்துகள்

    ReplyDelete
  6. கனடாவில் மொராண்டோ பலகலைகழகம் என்று ஒன்றில்லையே. டொராண்டோ பல்கலைகழகம் தான் இருக்கு. தினமணியை படித்தால் நாடு ரொம்ப விளங்கிடும். பல சூரிய மண்டலங்கள் இருப்பதைக் கூட தினமணி காரங்களுக்கு தெரியாது போல. என்னவோ போங்க.

    ReplyDelete
    Replies
    1. @ இக்பால் செல்வன்

      \\கனடாவில் மொராண்டோ பலகலைகழகம் என்று ஒன்றில்லையே. டொராண்டோ பல்கலைகழகம் தான் இருக்கு.\\ அந்த பேரைக் கூட ஒழுங்கா போடலியா. சுத்தம். எனக்கு அதுவும் தெரியலை. நியூஸ் எடிட்டருக்கு ரொம்ப கம்மியாயன சம்பளத்தில் ஆள் போட்டிருப்பானுங்க போல!! தவலுக்கு நன்றி இக்பால் செல்வன்!!

      Delete
  7. பத்திரிகை படித்தால் அறிவை வளர்க்கலாம் என்பார்கள்...அது எல்லாப் பத்திரிகைக்கும் பொருந்தாது போலும்.
    பத்திரிகைச் செய்தி- உண்மைச் செய்திக்கு நன்றி!

    ReplyDelete
  8. ஒருவேளை வேறு கலக்ஸியில் வெளியிடும் செய்தியை தவறுதலாக இங்குவெளியிட்டுவிட்டார்கள் போலும்..ஹி ஹி

    ReplyDelete
  9. அறிவு ஜீவிகள் ? இல்லேன்னா ஏலியன்ஸ் அனுப்பிய தகவலா இருக்குமே ?

    ReplyDelete
  10. தகவலுக்கு நன்றி. நானும் தினமணி வாங்கறேன். படிச்சுட்டுத் தாண்டிகிட்டுப் போயிட்டேன்!

    ReplyDelete