வணக்கம் மக்கள்ஸ்!!!
அப்போது நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் விடுதி அறிவிப்பு பலகையில் ஒரு தகவல். அது கீழ்க் கண்டவாறு இருந்தது:
Who are you?
Where are you coming from before birth?
Where will you go after death?
Who is God? what is your relationship with Him?
What is your duty in Life?
To answer to these questions please attend a lecture @ Ganesh Temple!!
சுவராஸ்யமான தலைப்பு, ஞானிகள் பலர் இந்த கேள்விகளுக்கு பதில் தேடிகிட்டு இருக்காங்கன்னு பல இடங்களில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது, செத்த பின்னாடி என்ன ஆகும் என்பது போல கேள்விகளை பற்றி நாமும் யோசித்ததுண்டு!! சரி யாரு பேசுறாங்கன்னு பார்த்தா ஒரு இஸ்லாமியரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது!! பேசும் இடம் கல்லூரி வளாகத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோவில்!! கொஞ்சம் குழப்பத்துடனே தான் அங்கே சென்றேன், பின்னர் தான் புரிந்தது நடப்பது பகவத் கீதை உபன்யாசம், சொற்பொழிவாற்றியவர் பகவத் கீதையை பயின்ற பின்னர் அதன் பால் ஈர்க்கப் பட்டு கிருஷ்ணா பக்தரான ஒரு இஸ்லாமியர்!!
அதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிறன்றும் வெவ்வேறு பக்தர்கள் வந்து கீதை பற்றி பேசுவார்கள், இறுதியில் சுவையான பிரசாதமும் உண்டு. என்னுடைய ஈடுபாடு வார வாரம் அதிகமானது, இதை நண்பர்கள் கவனிக்கத் தவறவில்லை!! இச்சூழ்நிலையில் ஒரு நாள் தி.நகருக்கு சக மாணவருடன் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு கால் சற்றே வலுவற்றது. பேருந்தில் ஏறிய பின்னர் ஒரு இடம் உட்காரக் கிடைத்தது. அதில் அவர் என்னை அமரச் சொன்னார், ஆனால் நான் மறுத்தேன், அவர் இரண்டு முறை பிடிவாதமாய் சொல்லியும் நான் ஏற்காமல் அவரையே அமர வைத்தேன். வேண்டா வெறுப்பாய் வாயில் ஏதோ முனகிக் கொண்டே உட்கார்ந்தார். அவர் முகத்தில் எதற்காக வெறுப்பு? எனக்கு ஒன்றும் புரியவில்லை. இறங்கிய பின்னர் கல்லூரியில் நுழைவாயிலில் அவருடைய மிதிவண்டியை எடுத்துக் கொண்டு உள்ளே இரட்டையராய் செல்ல வேண்டும். அவர் பின்னால் உட்காருங்கள் நான் மிதிக்கிறேன் என்றார், அதற்கும் நான் ஒப்புக் கொள்ளவில்லை, நான் தான் ஓட்டுவேன், நீங்கள் அமர்ந்து வாருங்கள் என்றேன். இப்போது அவர் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. நீங்கள் செய்வது கொஞ்சமும் சரியில்லை என்றார். எனக்கோ மேலும் குழப்பம். என்ன என்று புரியாமல் கேட்டேன். அதற்கு அவர் "என்னை வைத்து நீங்கள் சொர்க்கம் போகப் பார்க்கிறீர்களா?" என்று வெடித்தார். இதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. எனக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் என வினவினேன். பேருந்தில் நீங்கள் என்னையே அமர வைத்தீர்கள், இங்கும் என்னை உட்கார வைத்து சைக்கிளை நானே செலுத்துவேன் என்கிறீர்கள். உங்கள் எண்ணம் எனக்குத் தெரியும், இந்த மாதிரி புண்ணியத்தை வாழ்நாள் முழுவதும் சேர்த்து செத்த பின் சொர்க்கம் போகலாம் என்று தானே செய்கிறீர்கள்? இது சரியில்லை என்று பொரிந்து தள்ளினார். அன்று அவரது ஆத்திரத்துக்கு காரணம் புரிந்தாலும், அவர் சொல்வதெல்லாம் விந்தையாகப் பட்டது!! இப்படியெல்லாம் கூட பிளான் பண்ணி சொர்க்கத்து போக முடியுமா? என்ற கேள்வியும் எனக்குள் அன்று எழுந்தது. எனது உண்மையான நோக்கம் கால் வலுவற்றவரை நாம் சித்தரவதை செய்யலாமா என்ற எண்ணம் மட்டுமே, அதை அவருக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை, போகட்டும் என்று அந்த நிகழ்வை அதற்கும் மேல் பெரிது படுத்தாமல் விட்டு விட்டேன்.
இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, திருமணமான புதிதில் நான் அவ்வப்போது ஜப மாலையில் கிருஷ்ணா நாம ஜபம் செய்து கொண்டிருப்பேன். இதைக் கவனித்த எனது மாமனார் ஒருமுறை, "நீ சொர்க்கத்துக்கு போவதற்கு இவ்வளவு பாடு படுகிறாயா?" என்று நக்கலாக கேட்டார். இது மட்டுமல்ல பதிவுலகிலும் சில அன்பர்கள் அதே குற்றச் சாட்டை வைத்தனர். சிலர் நீ மன அமைதி தேடித்தானே கோவில் செல்கிறாய், அதை வீட்டிலேயே தியானம் செய்து பெறலாமே?- என்றும் கேட்க ஆரம்பித்தனர். ஆனாலும் எனக்கு ஒவ்வொரு முறையும் சொர்க்கம், Peace of Mind என்று எதற்காக இவர்கள் சொல்கிறார்கள், ஆன்மீகத்துக்கும் இவற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் என் பின்புலமே. அப்பா கிட்ட எது கேட்டாலும் கிடைக்கும் என்ற வகையில் அமைந்தது எனது மாணவ பருவம். [அப்பா கஷ்டம் எனக்கு அப்போது தெரியாது!!]. வாழ்வில் கஷ்டத்தைப் பார்க்காமல், கல்வியிலும் தோல்வி என்பதே என்னவென்று தெரியாது வளர்ந்தேன். நினைச்சதெல்லாம் நடந்தது ஆனாலும் வாழ்வில் இனம் புரியாத வெறுமையே மிஞ்சியது. இந்த வெறுமை பலருக்கு வயதன பின்னர் வரலாம், சிலருக்கு இளமையிலேயே வரலாம், எனக்கு பின்னது நடந்தது. பள்ளியில் படிக்கும்போதே ஒரு சிந்தனை அடிக்கடி என்னைத் தாக்கும். "தாய் தந்தை, சகோதரிகள் மற்றும் எந்த உறவுகளும் நிலையானது அல்ல, மரணம் நம்மை நிச்சயம் ஒரு நாள் அவர்களிடமிருந்து நம்மை பிரிக்கப் போகிறது, இது தவிர்க்க முடியாதது" என்ற உண்மை ஒரு நாள் என்னைச் சுட்டது. அப்படியானால் வாழும் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் தான் உண்டா என்ற கேள்வி எழ விடையை பல வழிகளில் தேட ஆரம்பித்தேன். தினமணியில் வரும் ஆன்மீக பகுதி சற்று ஆறுதல் தந்தது. இறைவனின் நாமத்தை ஜபம் செய்வது கலி யுகத்தின் ஒரே ஆன்மீக வழி என்பது பல்வேறு கட்டங்களில் தினமணியில் படித்திருந்தேன். ஆனாலும் மனம் மட்டும் நிலைகொள்ளாத படியே இருந்தது.
அதைத் தொடர்ந்து ஒரு திரைப் படப் பாடகரின் அர்த்தமுள்ள....... தொடர் புத்தகங்களின் பகுதிகள் சிலது கிடைக்க அவற்றை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவையோ அவ்வளவு தரமான நூல்கள் இல்லை என்பது ஒருமிருந்தாலும், உள்ளே இருந்த வேட்கையை அது கொஞ்சமும் தீர்க்கவில்லை. அதன் பின்னர் சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் சேர அட்மிஷன் கிடைத்தது. ஒருவேளையாக கல்லூரியில் சேர்ந்தாயிற்று, ஆனால் இன்னொரு புறம் விரக்தி........விரக்தி........விரக்தி..... அந்த சமயத்தில் தான் மேலே சொன்ன தகவல் பலகையில் பகவத் கீதை உபன்யாசம் பற்றி செய்தி வந்தது. தேடலுக்கான பதில் அங்கே கிடைத்தது, மனம் நிம்மதியானது. அன்று ஆரம்பித்த ஞாயிறு கொண்டாட்டம் இன்றும் தொடர்கிறது!! நமக்குள் எழுந்த வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் போகையில் அது கீதையில் கிடைக்கிறது என கண்டுணர்ந்து நாம் கீதையை பின்பற்றுகிறோம் அவ்வளவே. சொர்க்கம், நரகம் நமது செயல்திட்டதில் இல்லவேயில்லை!!
இணையத்திற்குள் வந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சில விஷயங்கள் தெளிவாக ஆரம்பித்தன. சில மத போதகர்கள், "நீ என் மதத்திற்கு வந்தால் சொர்க்கம் உனக்கு கியாரண்டி இல்லா விட்டால் உனக்கு மீளா நரகம் நிச்சயம்" என்றும், வேறு சிலர், "கடவுள் சொல் படி வாழ்ந்து விட்டால், செத்த பின்னர் சொர்க்கம் என்ற ஒரு இடத்திற்குப் போவோம் அங்கே 40 கன்னிப் பெண்களும், குடிக்கக் குடிக்க தீராத சோம பான பீப்பாய்களும் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன, ஒருவேளை இதை நீ ஏற்க்கா விட்டால், உன்னை நரகத்தில் நிரந்தரமாக தள்ளி விட்டு பூட்டு போட்டு விடுவார்கள், நீ எக்காலத்திலும் மீள முடியாத துன்பத்தில் அங்கேயே உழலுவாய், ஒருபோதும் வெளியில் வரவே முடியாது" என்றெல்லாம் பல மேடைகளிலும், இணைய தளங்களிலும் நடக்கும் பிரசாரமே இறை வழிபாட்டில் ஈடுபடுவது சொர்க்கம் செல்வதற்கே என்ற தோற்றத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது என்பது மெல்லப் புரிய வந்தது!! துன்பங்களில் இருந்து விடுபட வழி தேடும்போது இறைவனை நாடுகிறோம், ஆனால் அது துவக்கம் மட்டுமே, ஆனால் அதற்கும் மேலே, எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவன் மீது வைக்கும் அன்பே பக்தி!!
சரி தற்போது திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களுடைய கேள்விக்கு வருவோம். செல்லப் பிராணிகள் சொர்க்கம் செல்லுமா? [இதற்க்கு பதில் தனக்குக் கிடைக்க வில்லை என்கிறார்!!]. இளங்கோ ஆத்தீகரா, நாத்தீகர என்று தெரியவில்லை. சொர்க்கம் என்பதை நம்புவதால் அவரை ஆத்தீகராகவே எடுத்துக் கொள்வோம். இறை நம்பிக்கை உடையவர்கள் ஏதாவது இறைநூலில் இருந்தே விடையைத் தேட வேண்டும். நாம் இங்கு தரவிருக்கும் பதில்கள் அனைத்தும் சனாதன தர்மத்தின் வேத இலக்கியங்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கும். [இந்து மதம் என்பது சரியான சொல்லாக்கம் அல்ல, சனாதன தர்மம் என்பதே சரி, இதன் பொருள் மனிதன்,விலங்குகள், தாவரங்கள் என எல்லோருக்கும், புவியில் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் வேறு எந்த இடத்தில் வாழும் ஜீவனுக்கும், என்றைக்கும் பொருந்தும் இறைவனின் சட்ட திட்டங்கள் என்பதாகும்.]
கேள்வி 1: சொர்க்கம் நரகம் என்பது உள்ளதா?
பதில்: ஆம், இருக்கிறது. ஆனால் ஒன்றோ இரண்டோ அல்ல, பல!! [கீழே குறிப்பு 1-ஐ பார்க்கவும்]
கேள்வி 2: சொர்க்கம்/நரகம் நிரந்தரமானதா?
பதில்: இல்லை, தற்காலிகமானதே. [கீழே குறிப்பு 2-ஐ பார்க்கவும்]
கேள்வி 3: பிராணிகள் சொர்க்கம்/நரகம் செல்லுமா?
பதில்: சொர்க்கம்/நரகம் எது கிடைக்கும் என்பதைத் தீர்மானிப்பது நமது செயல்களால் விளையும் கர்ம பலன்களே. மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, சொர்க்கம்/நரகம் என்று செல்ல வாய்ப்பில்லை. அவற்றுக்கும் மனிதப் பிறவி கிடைத்த பின்னர் செயல்பாட்டைப் பொறுத்து சொர்க்கம்/நரகம் செல்லலாம்.[கீழே குறிப்பு 3-ஐ பார்க்கவும்]
கேள்வி 4: சொர்க்கம்/நரகம் தற்காலிகமானது என்றால், வாழ்வின் குறிக்கோள் தான் என்ன?
பதில்: இறைவன் மீது பிரியம் வைக்க வேண்டும். 24X 7 அவனையே நினைத்திருக்க வேண்டும். இறைவன் மீது பிரியம் வந்துவிட்டால் எந்நேரமும் அவனையே நினைத்திருப்போம். கலி யுகத்தில் அதற்க்கான வழி [நமது அதிர்ஷ்டம் எழிய வழி!!] அவனது திருநாமங்களை எந்நேரமும் உச்சரித்து வருவதே. அவ்வாறு செய்து வந்தால் 14 லோகங்களில் மேலும் கீழுமாக பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து வெளியில் வந்து என்னை அடைவாய் என பகவான் வாக்குறுதி கொடுத்திருந்தாலும், பக்தன் அதை பொருட்டாக நினைப்பதில்லை. நான் உனது சேவகன், உன்னை நேசிப்பதையன்றி வேறொன்றும் தேவையில்லை என்ற நிலையே மிக உன்னதமான நிலை.
[கீழே குறிப்பு 4-ஐ பார்க்கவும்].
முதலாளி ஒருவன் மட்டுமே மற்ற எல்லோரும் தொழிலாளிகளே!!
பிரபஞ்சத்தில் மொத்தம் 14 லோகங்கள் [Planetary Systems] உள்ளன. அவையாவன:
1) சத்ய லோகம்
2) தப லோகம்
3) ஜன லோகம்
4) மஹர் லோகம்
5) ஸ்வர் லோகம்
6) புவர் லோகம்
7) பூலோகம் [இங்கதாங்க நாம் இருக்கோம்!!]
8) அதல லோகம்
9) விதல லோகம்
10) சுதல லோகம்
11) தலாதல லோகம்
12) மகத லோகம்
13) ரசாத்தள லோகம்
14) பாதாள லோகம்
இந்த பதினான்கு லோகங்களில் நாம் மத்தியில் பூலோகத்தில் உள்ளோம். சத்ய லோகத்தில் சுகபோகம் இருப்பதிலேயே அதிகம், அங்கிருந்து கீழே வர வர குறைந்து கொண்டே வரும், பூலோகம் மையப் பகுதி,இன்ப துன்பம் இரண்டுமே மிதமான இடம். அதற்கும் கீழே உள்ள அனைத்தும் நரக லோகங்கள். பூலோகத்தில் செய்யும் செயல்களின் பாவ புண்ணிய கணக்குப் படி மேலுள்ள லோகங்களுக்கோ, கீழேயுள்ள நரகங்களுக்கோ அனுப்பப் படுவோம். ஆனாலும் இரண்டுமே நிரந்தரமில்லை. சொர்க்க லோகங்களுக்குச் செல்பவனும் புண்ணிய கணக்கு தீர்ந்த பின்னர் கீழே வருவான், நரக லோகங்களுக்கு போனவனும் தண்டனையை அனுபவித்த பின்னர் மேலே வருவான்.
"Lord Sri Krishna said: When they have thus enjoyed vast heavenly sense pleasures and the results of their pious activities are exhausted, they return to this mortal planet (earth) again. Thus those who seek sense enjoyments by adhering to the principles of the three Vedas achieve only repeated birth and death."
ஆக ஈரேழு பதினான்கு லோகங்களுக்குள் எங்கே போனாலும் பிறப்பு, வயோதிகம், நோய்நொடி, இறப்பு என்ற சுழற்சியில் இருந்து தப்பவே இயலாது.
நீரில் 9 லட்சம் உயரினங்கள், 20 லட்சம் மரங்கள் செடி வகைகள், 11 லட்சம் வகை பூச்சிகள், 10 லட்சம் வகை பறவைகள், முப்பது லட்சம் விலங்கு வகைகள் மற்றும் 4 லட்சம் வகை மனிதர்கள் என 84 லட்சம் வகை உயரினங்கள் உண்டு.[பத்ம புராணம்]
சனாதன தர்ம நூல்களின் படி தாவரங்கள், விலங்குகள்,பறவைகள், விலங்குகள் மனிதன் என எல்லோருக்கும் உயிர் உள்ளது, ஆன்மா உண்டு. ஆனாலும் சுதந்திரம் மனிதனுக்கு மட்டுமே வழக்கப் பட்டிருக்கிறது. இறைவனுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு. மனித பிறவி என்பது கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. கோடான கோடி பிறவிகள் மற்ற ஜீவன்களாகப் பிறந்து மடிந்த பின்னரே மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பு அமைகிறது. [மற்ற உயிரினங்களும் பின்னர் மனிதனாகும் வாய்ப்பு உண்டு!!]. மனிதனைத் தவிர மற்ற உயிர்களுக்கு பவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. ஏனெனில் அவற்றுக்கு சுதந்திரம் கொடுக்கப் படவில்லை. அவற்றின் உள்ளுணர்வின் உந்துதலாலேயே அவை செயல்படுகின்றன. NGC, Animal Planet போன்ற தொலைக் காட்சி நிகழ்சிகளைப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். ஆகாரம், தூக்கம், ஆபத்திலிருந்து காத்துக் கொள்ளல் மற்றும் இனப்பெருக்கம் - எந்த மிருகத்தை எடுத்துக் கொண்டாலும் கூர்ந்து கவனித்தால் இந்த நான்கு செயல்களைத் தவிர வேறு எதிலும் அவை ஈடுபடுவதில்லை. மனிதனைப் பிறந்து ஆறறிவு படைத்து நீயும் அவ்வாறே வாழ்ந்து மடியாதே என்று சனாதன தர்மம் கூறுகிறது.
Eating, sleeping, sex, and defense—these four principles are common to both human beings and animals. The distinction between human life and animal life is that a man can search after God but an animal cannot. That is the difference. Therefore a man without that urge for searching after God is no better than an animal.-From Hitopadesha.

குறிப்பு 1:

குறிப்பு 2:

"te tam bhuktva svarga-lokam visalam
ksine punye martya-lokam vishanti
evam trayi-dharmam anuprapanna
gatagatam kama-kama labhante"
"Lord Sri Krishna said: When they have thus enjoyed vast heavenly sense pleasures and the results of their pious activities are exhausted, they return to this mortal planet (earth) again. Thus those who seek sense enjoyments by adhering to the principles of the three Vedas achieve only repeated birth and death."
ஆக ஈரேழு பதினான்கு லோகங்களுக்குள் எங்கே போனாலும் பிறப்பு, வயோதிகம், நோய்நொடி, இறப்பு என்ற சுழற்சியில் இருந்து தப்பவே இயலாது.
From the highest planet in the material world down to the lowest, all are places of misery wherein repeated birth and death take place. But one who attains to My abode, O son of Kuntī, never takes birth again. [B.G. 8.16] |
குறிப்பு 3:
jalaja nava-laksani sthavara laksa-vimsati
krmayo rudra-sankhyakah paksinam dasa-laksanam
trimsal-laksani pasavah catur-laksani manusah
krmayo rudra-sankhyakah paksinam dasa-laksanam
trimsal-laksani pasavah catur-laksani manusah
நீரில் 9 லட்சம் உயரினங்கள், 20 லட்சம் மரங்கள் செடி வகைகள், 11 லட்சம் வகை பூச்சிகள், 10 லட்சம் வகை பறவைகள், முப்பது லட்சம் விலங்கு வகைகள் மற்றும் 4 லட்சம் வகை மனிதர்கள் என 84 லட்சம் வகை உயரினங்கள் உண்டு.[பத்ம புராணம்]
சனாதன தர்ம நூல்களின் படி தாவரங்கள், விலங்குகள்,பறவைகள், விலங்குகள் மனிதன் என எல்லோருக்கும் உயிர் உள்ளது, ஆன்மா உண்டு. ஆனாலும் சுதந்திரம் மனிதனுக்கு மட்டுமே வழக்கப் பட்டிருக்கிறது. இறைவனுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு. மனித பிறவி என்பது கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. கோடான கோடி பிறவிகள் மற்ற ஜீவன்களாகப் பிறந்து மடிந்த பின்னரே மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பு அமைகிறது. [மற்ற உயிரினங்களும் பின்னர் மனிதனாகும் வாய்ப்பு உண்டு!!]. மனிதனைத் தவிர மற்ற உயிர்களுக்கு பவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. ஏனெனில் அவற்றுக்கு சுதந்திரம் கொடுக்கப் படவில்லை. அவற்றின் உள்ளுணர்வின் உந்துதலாலேயே அவை செயல்படுகின்றன. NGC, Animal Planet போன்ற தொலைக் காட்சி நிகழ்சிகளைப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். ஆகாரம், தூக்கம், ஆபத்திலிருந்து காத்துக் கொள்ளல் மற்றும் இனப்பெருக்கம் - எந்த மிருகத்தை எடுத்துக் கொண்டாலும் கூர்ந்து கவனித்தால் இந்த நான்கு செயல்களைத் தவிர வேறு எதிலும் அவை ஈடுபடுவதில்லை. மனிதனைப் பிறந்து ஆறறிவு படைத்து நீயும் அவ்வாறே வாழ்ந்து மடியாதே என்று சனாதன தர்மம் கூறுகிறது.
āhāra-nidrā-bhaya-maithunaṁ ca
sāmānyam etat paśubhir narāṇām
dharmo hi teṣām adhiko viśeṣo
dharmeṇa hīnāḥ paśubhiḥ samānāḥ
sāmānyam etat paśubhir narāṇām
dharmo hi teṣām adhiko viśeṣo
dharmeṇa hīnāḥ paśubhiḥ samānāḥ
Eating, sleeping, sex, and defense—these four principles are common to both human beings and animals. The distinction between human life and animal life is that a man can search after God but an animal cannot. That is the difference. Therefore a man without that urge for searching after God is no better than an animal.-From Hitopadesha.
குறிப்பு 4:
mam evaishyasi yuktvaivam
Engage your mind always in thinking of Me, become My devotee, offer
obeisances to Me and worship Me. Being completely absorbed in Me, surely
you will come to Me. [பகவத் கீதை 9.34]
[ஸ்ரீமத் பாகவதம் 12.3.51] மகாராஜா பரீக்ஷிதிடம் சுகமுனி கூறுகிறார்:
kirtanad eva krishnasya
கலியுகத்தில் தோஷங்கள் கடலென இருந்தாலும், இந்த யுகதிற்க்கென்று மற்ற யுகங்களில் இல்லாத ஒரு சிறப்பியல்பும் உண்டு. அது, ஸ்ரீ கிருஷ்ணனின் நாமங்களை சொல்லி வந்தாலே போதும் இந்த எளிய வழியாலேயே பௌதீக விலங்கிலிருந்து விடுபட்டு இறைவனை அடையலாம்.
// இளங்கோ ஆத்தீகரா, நாத்தீகரா என்று தெரியவில்லை. சொர்க்கம் என்பதை நம்புவதால் அவரை ஆத்தீகராகவே எடுத்துக் கொள்வோம்.//
ReplyDeleteசகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு வணக்கம்! நமக்கும் மேலே ஏதோ ஒன்று நம்மை வழி நடத்திச் செல்வதாகவே உணர்கின்றேன். எனவே ஏதோ ஒரு சக்தி உள்ளது என்ற, இறை நம்பிக்கை உள்ளவன் நான். என்னை நீங்கள் ஆத்திகராகவே எடுத்துக் கொள்ளலாம். (பெயரில் தமிழ் என்று இருந்தாலே அவர்களை திராவிட கட்சிகளோடு தொடர்புபடுத்தி நாத்திகராக நினைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது) விவாதம் வாசகர்கள் பார்வையில் தொடர்ந்து செல்லட்டும்.
பாகவதரே,
ReplyDelete//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, //
இதை யார் சொன்னது?
கண்டிப்பாக எந்த விலங்கும், மற்ற உயிரும் சொல்லி இருக்காது அவ்வ்!
மனிதன் என எழுத தெரிஞ்ச விலங்கே எழுதி வச்சால் உண்டு!
#//இறைவன் மீது பிரியம் வைக்க வேண்டும். 24X 7 அவனையே நினைத்திருக்க வேண்டும். //
அந்த இறைவன் யார்? பெயர் என்ன? இதில் தானே சிக்கலே அவ்வ்!
அல்லா மீது பிரியம் வைக்கணும் அல்லாவை நினைக்காதனை கொல்லலாம் என்று சொல்லி வைத்தால்,அல்லா மீது பிரியம் வைத்தவன் ,நினைத்துக்கொண்டே இருப்பவன் உம்மை கொல்லலாம் தானே!!!
# அந்த இறைவனை தொழ அனைவருமே கோயில் உள் செல்லலாமே, இறைவனை சதா நினைத்து பிரியப்படுவன் கோயில் உள் செல்ல தடை இருக்கா? அதை இறைவனே விதிக்கிறானா? இறைவனுக்கு ஒரே ஒரு மொழி மட்டும் தான் தெரியுமா?
# நீர் அரைவேக்காடுனு தெரியும், ஆனால் இவ்ளோ பெரிய அரைவேக்காடுனு இப்பத்தான் தெரியுது அவ்வ்!
//சனாதன தர்மம் என்பதே சரி, இதன் பொருள் மனிதன்,விலங்குகள், தாவரங்கள் என எல்லோருக்கும், புவியில் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் வேறு எந்த இடத்தில் வாழும் ஜீவனுக்கும், என்றைக்கும் பொருந்தும் இறைவனின் சட்ட திட்டங்கள் என்பதாகும்.]//
sana +tani =sanatani
இதன் நேரடி பொருளே மனிதர்தகளுக்கானது என்றே வரும்(சமஸ்கிருத எடிமாலாஜிப்படி)
அப்புறம் எங்கே இருந்து விலங்குகள்,தாவரங்கள் என எல்லா ஜீவனுக்கும் என சொல்லிக்கிட்டு இருக்கீர்?
மனிதனுக்கு கர்மா இருக்குனா ,விலங்கிற்கும் கர்மா இருக்கும், விலங்கிற்கு இல்லைனா ,மனிதனுக்கும் இல்லை,ஏன் எனில் மனிதனும் விலங்கே!

அதெல்லாம் சரி தான். ஒரு இடத்தில் கூட வாழும் பொழுதே உன் அருகில் சொர்க்கம் உள்ளது. அதை உன் அன்றாட வாழ்க்கையிலேயே பார்க்க முடியும். அடுத்தவனுக்கு உதவி செய்கின்றாயோ இல்லையோ உபத்திரம் செய்யாமல் முடிந்தவரைக்கும் நேர்மையாக உண்மையாக வாழ முயற்சித்தாலே சொர்க்கம் என்பது உன் செயல்பாடுகள் உணர்த்தும் என்று சொல்லியிருப்பீங்கன்னு முழுசா படிச்சா உங்க விபரம் எனக்கு தலை சுத்த வச்சது.
ReplyDelete/// இந்த வெறுமை பலருக்கு வயதான பின்னர் வரலாம்... /// சரி தான்... வந்தும் பிரயோசனமில்லை...
ReplyDelete4வது உன்னதமான நிலை விளக்கம் நல்லாத்தான் இருக்கு - சிலருக்கு...!
பொதுவாக சிந்தனை வளர்ந்தால் பேச்சே வராது... எழுதுவது பிறகு...! ஹா... ஹா...
இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :
ReplyDelete4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!
இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html
நன்றி...
//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, சொர்க்கம்/நரகம் என்று செல்ல வாய்ப்பில்லை. //
ReplyDeleteமனிதனுடைய இறப்பிற்க்கு பின்னர் அவனுடைய பாவ புண்ணியத்தைப் பொறுத்து அவனுக்கு அடுத்த ஜென்மம் அமையும். Logic ஓகே.
ஆனால், மற்ற உயிர்களுக்கு பாவ புண்ணியம் இல்லை என்பதால், அதனுடைய இறப்பிற்கு பின்னர் அதற்கு அடுத்தது என்ன ஜென்மம் கொடுக்க வேண்டும் என்று எதை வைத்து decide பண்ண படுகிறது?
//அவற்றுக்கும் மனிதப் பிறவி கிடைத்த பின்னர் செயல்பாட்டைப் பொறுத்து சொர்க்கம்/நரகம் செல்லலாம்//
ReplyDeleteபிறந்து 2 நாள் ஆனா குழந்தை ஆஸ்பத்திரியில் பெருச்சாளி கடித்து சாகிறது.
1) 2 நாள்ல சாகப்போகிரதற்க்கு பிறக்காமலே இருந்திருக்கலாமே?
2) இப்போது இந்த இறந்த குழந்தை பாவ புண்ணியம் எதுவும் செய்யவில்லை. இது நரகத்து செல்லும்மா அல்லது சொற்கத்துக்கா என்பது எதை வைத்து decide பண்ணப்படுகிறது?
3) இப்போது இந்த குழந்தைக்கு மனித பிறவி கிடைத்து என்ன பிரயோஜனம்?
பாகவதரே,,
ReplyDeleteசனாதன நியதியில் "கிருஸ்ணாவுக்கே இடமில்லைனாவது தெரியுமா?
சனாதனிகள் முக்தியடைந்து பிரம்மனை தான் சென்றடைவார்கள். அதனால் தான் பிராம்மணர் என்கிறார்கள்.
பிரமனிடம் இருந்து தோன்றி பிரமனையே அடைவார்களாம்.
கிருஸ்ணா என்றப்பெயரே எந்த வேதத்திலும் இல்லை,அப்புறம் எப்படி அந்த பேர சொன்னா முக்தி கிடைக்கும்?
----------------------
வேற்றுகிரவாசி,
//ஆனால், மற்ற உயிர்களுக்கு பாவ புண்ணியம் இல்லை என்பதால், அதனுடைய இறப்பிற்கு பின்னர் அதற்கு அடுத்தது என்ன ஜென்மம் கொடுக்க வேண்டும் என்று எதை வைத்து decide பண்ண படுகிறது?//
இப்படிலாம் சிக்கலா கேட்டா எப்படி?
விலங்குகளுக்கும் நற்பயன், அதனால் புண்ணியம் ,முக்திலாம் உண்டு ,ஆனால் பாகவதர் ஒரு அரைவேக்காடு என்பதால் ,வாய்க்கு வந்தப்படி உளருகிறார்,
கஜேந்திர மோக்ஷம் என ஒரு புராணமே உண்டு,முதலை வாயில் சிக்கிய யானை நாரயணானு கூப்பிட்ட புராணம் படிச்சிருக்க மாட்டாரு.
சிரிமுஷ்ணம் என்ற ஊருக்கு ஏன் அந்த பேருனு கூட தெரியாது.
முஷ்ணம் என்றால் காக்கா ,அது பெருமாளை சேவிச்சு சொர்க்கமே போச்சாம்,அதனால் தான் மரியாதையா சிரிமுஷ்ணம் தமிழில் திருமுட்டம் என்கிறார்கள்.
இது போல சிலந்தி,யானை,குரங்கு ,அணில் எல்லாம் சொர்க்கம் போயிருக்கு அவ்வ்!
எந்த உயிரினமா இருந்தாலும் , அது பெருச்சாளியா இருந்தாலும் பகவானை சேவிச்சா சொர்க்கமாம், பிராய்லர் கோழிலாம் யாரையும் சேவிக்கலை அதான் சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் ஆகிடுது :-))
இவற்றை புரிந்து கொள்ள ஓர் வாழ் நாளளவு பொறுமை மற்றும் அதீத நம்பிக்கையும் வேண்டும். ஒரு மாறுதலுக்காக, நீங்கள் இவற்றை பற்றி எதிர்பதமாக சிந்திக்காமல், இவை அனைத்தும் உண்மை என்ற கோணத்தில் சில மாதங்களாவது நம்பிக்கையுடன் யோசித்து பாருங்கள். தெளிவு பிறக்கும். எல்லாம் விளங்கியவுடன் இவற்றை எதிர்க்க மாட்டீர்கள். அவசரக்குடுக்கைத்தனமும், குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புத்தியும் இருக்கும் வரை உங்களுக்கு இவை புரியாது.
Delete//இவை அனைத்தும் உண்மை என்ற கோணத்தில் சில மாதங்களாவது நம்பிக்கையுடன் யோசித்து பாருங்கள். தெளிவு பிறக்கும்.//
Deleteஅனானி,
இவை அனைத்தும் பொய் என்ற கோணத்தில் சில மாதங்களாவது நம்பிக்கையுடன் யோசித்து பாருங்கள். தெளிவு பிறக்கும்.
//குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புத்தியும் இருக்கும் வரை//
குற்றம் இருக்கிறதினால் தானே நாங்கள் கண்டுபிடிக்கிறோம். அப்போ குற்றம் இருக்கிறது என்று நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
For 40 years, I was also like you people only. In fact, more aggressive. Suddenly, one day my intuition commanded me to take a different approach and do self-evaluation so as to find out what was really right or wrong. Is it me or what was said? After a few years of rigor, the pot broke and truth struck me. Before that, I always wanted proof, clear cut explanation for everything due to westernized education - material education which limited my ability to look into some thing at a very broad and deep level before coming to conclusions. There are things which one cannot understand just by using the 6 senses and remember(realize) that there is something beyond that. Whatever fault you are finding, is based on your acquired knowledge which is from others ( parents, teachers, friends, society, media etc.) . When will your own knowledge awaken you and enlighten you? For that, be a calm observer of what your knowledge says, what others ( people, religions, ethics, etc..) say, for a some time ( may be a few months or years ). Thats all, done. You will KNOW like i did.
Deleteஅனானி,
ReplyDelete//அவசரக்குடுக்கைத்தனமும், குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புத்தியும் இருக்கும் வரை உங்களுக்கு இவை புரியாது./
இத ஏன்யா என்னிடம் சொல்லுறீர்? இந்தப்பதிவே அடுத்தவரிடம் குற்றம் கண்டுப்பிடிக்கும் நோக்கில் அவசரக்குடுக்கையா தானே எழுதப்பட்டிருக்கு :-))
#//I always wanted proof, clear cut explanation for everything due to westernized education - material education which limited my ability to look into some thing at a very broad and deep level before coming to conclusions.//
ஆமாம் தான், இதை சொல்லவே "மேற்கத்திய கல்வி" கொடுத்த ஆங்கிலம் தானே உமக்கு தேவைப்படுது :-))
#//When will your own knowledge awaken you and enlighten you? For that, be a calm observer of what your knowledge says, what others ( people, religions, ethics, etc..) say, for a some time ( may be a few months or years ). Thats all, done. You will KNOW like i did.//
ஆமாம் எனக்கு இன்னும் அறொவு விழிக்கலைனு சொல்லுர அளவுக்கு உமக்கு எப்போ அறிவி விழிச்சுது? இல்லை அதுக்கான தகுதி உமக்கு எங்கே இருந்து வந்துச்சு?
நீர் முதலில் "calm observer " ஆக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலையே , ஓட்டை வாய் நாரயணன் போல உபதேசம் செய்ய கிளம்பிட்டீர்,அப்போ இன்னும் அறிவு விழிக்கலையா அவ்வ்!
என்லைட்மென்ட் பத்திலாம் பேசுற ஆளப்பாரு, ஓசியில புளியோதரை கிடைச்சா போதுமே ,வாங்கி தின்னுட்டு ,ஆன்மீகம் , அறிவு விழித்தல் ,ஞானம்னு உபதேசிக்க கிளம்பிடுவானுங்க அவ்வ்!
சுவையான விவாதங்களுக்கு வழிவகுக்கின்ற பதிவை எழுதியிருக்கிறீர்கள். பேசாமல் இரண்டு தரப்பினரின் கருத்து மோதல்களைப் படித்துக்கொண்டிருந்தாலேயே போதும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபதிவும் சுவாரஸ்யம். பின்னூட்டங்களும் சுவாரஸ்யம்.
ReplyDelete@ ஸ்ரீராம்.
Deleteதங்கள் வருகைக்கும், சில பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட்டமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம், தொடர்ந்து வாருங்கள்!!
#//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, //#
ReplyDeleteஇதைப் படித்ததும் நான்கு நாட்களுக்கு முன் நான் எழுதியது நினைவுக்கு வந்தது அது இதுதான் >>ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா !
''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குமாங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ நினைக்கிறதையே கண்டுபிடிக்க முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க ?''
ஆரறிவு உள்ளவன்தான் சொர்க்கம் நரகம் என்று புரூடாவிட்டுக் கொண்டிருக்கிறான் !
@ Bagawanjee KA
Deleteநாம் பெரும் தகவல்களின் நம்பகத் தன்மை அது எந்த மூலத்திலிருந்து வருகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. வருகைக்கு நன்றி சார்.
ஆமாம் உமக்கு என்ன ஆதி மூலமே வந்து தகவல் கொடுத்தாரா?
Deleteஶ்ரீமத் பாகவதத்திலேயே , கஜேந்திர மோட்சம் இருக்காம், அப்போ ,அதை வச்சு தான் கிருஸ்ணாவாதாரமே, இப்போ விலங்குகளூக்கு மோட்சம் இல்லைனு எதை வச்சு சொல்லூறீர்?
புராணமே சொன்னாலும் பொருந்த சொல்லுய்யா, அதிலவும் கதைய திரிச்சு சொன்னா எவன் நம்புவான்?
சோத்துல உப்பு போட்டு தின்னுறவனா இருந்தால் "கஜேந்திர மோட்சம்" பற்றி உண்மைய சொல்லுய்யா வெண்ணை!
...அவ்வளவு தரமான நூல்கள் இல்லை என்பது ஒருபுறமிருந்தாலும், உள்ளே இருந்த வேட்கையை அது கொஞ்சமும் தீர்க்கவில்லை... http://dharmapuramadheenam.org/#/login
ReplyDelete