முதல் நாள் Corbyn's Cove பீச்சில் நாங்கள் பார்த்த கடை. இங்க தான் முத்து மாலை இரண்டு வாங்கினோம். இங்கே பவள மாலைகளும் உள்ளன. பீச்சில் பார்க்கும் எல்லா கடைகளிலும் நீங்கள் முத்து, பவள மாலைகளை வாங்கலாம். ஹேவ்லாக் பீச்சில் நாங்கள் வாங்கத் தவறி விட்டோம், அங்கும் நன்றாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.
முத்து மாலைகள் இரண்டின் விலை 200 ரூபாய்!!
கடைசி நாளன்று ஒரு பெரிய கடைக்கு அழைத்துச் சென்றார்கள். எதுவும் வாங்கவில்லை. எங்க கூட வந்தவங்க வாங்கினாங்க, நான் கருமமே கண்ணாகி பதிவில் போட படம் மட்டும் எடுத்தேன், ஹி ......ஹி ....ஹி........
அந்தமானில் பல இடங்களில் பாக்குத் தோப்புகளைப் பார்க்க முடிகிறது. பாக்கு காய்களை முற்றிலும் பழுக்க வைத்து செக்கச் செவேல் என ஆன பின்னர் பறிக்கின்றனர். தோலுரித்த பின்னர் கொட்டை பாக்கு எலுமிச்சை சைசுக்கு இருக்கு!!
அந்தமானில் செவ்விளநீர், சாதா இளநீர் மற்றும் வெள்ளை நிற இளநீர்க் காய்களும் கிடைக்கின்றன. தண்ணீர் சுவையோ சுவை, நிரப்பினால் ஒரு லிட்டர் வரும்!!
தங்குமிடம்
நாங்கள் தங்கியிருந்த விடுதி. நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.1000/- [தங்குதல், உணவு, சுற்றிப் பார்த்தல், ஆங்காங்கே நுழைவுக் கட்டணங்கள் எல்லாமும் சேர்த்து. Havelock செல்ல கட்டணம் ரூ.800/- தனி, Vegetarian மட்டுமே வழங்கப் படும், உங்களுக்கு வேறு உணவுகள் வேண்டுமென்றால் வெளியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.]
விடுதியில் எங்கள் அறை, A /c அறைகளுக்கு கட்டணம் கொஞ்சம் அதிகம்.
விடுதியின் சாளரம் வழியே எட்டி வெளியே பார்த்தால்.......
Darrshan Tours & Travels: இங்கே சவுகரியமாக இருக்கிறது, உணவு பரவாயில்லை, பெரும்பாலும் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் அங்கேயே உணவு வழங்கினர், அவை சுத்த மோசம். இவர்களின் வண்டியிலும் [பதினைந்து பேர் செல்லும் Mazda மாதிரி வண்டிகள்] ஆயில் நாற்றம். Tata சுமோ/கார் போல தேர்ந்தெடுத்துக் கொள்வது நலம். அந்தமானை ஆசை தீரப் பார்க்க குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது தங்க வேண்டும்.
Mr.Raghu
Darrshan Tours & Travels
The contact numbers are: 993208 2266 /2966 /3066 /3166
9933281533, Landline: 03192-235484
நாங்கள் பார்க்கத் தவறிய முக்கிய இடங்களில் சில:
1. Jolly buoy பீச். Scuba Diving சுட்டி. 2. Parrot Islands [Bara Tang] 3. உள்ளூர் அருங்காட்சியகங்கள் [Museums] & மீன் காட்சியகங்கள் [Aquarium] . அந்தமான் சுற்றுலாவை அழகாக படம் பிடித்து 6 பகுதிகளாக YouTube-ல் பதிவேற்றியுள்ளார்கள், அவசியம் பாருங்கள். Part 1Part 2Part 3Part 4Part 5Part6
அந்தமானில் நான்காம் நாள் நாங்கள் சென்ற இடம் ஹேவ்லாக் [Havelock] கடற்கரை. இது போர்ட் பிளேரில் இருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு தீவு. இதற்க்கு படகில் செல்ல இரண்டு மணி நேரம் பிடிக்கும். இங்கு செல்ல காலை ஐந்து மணிக்கே புறப்பட வேண்டும். இங்கே சென்று வர டிக்கெட் ஏஜென்டே தயார் செய்துவிடுவார், நம்மால் முடியாது!! போய்வர 250 ரூபாய், ஆனால் அது இது என்று நம்மிடம் ரூ.600 -800 வாங்குகிறார்கள்.
ஹேவ்லாக் செல்லும் படகுகள் இங்கிருந்துதான் புறப்படுகின்றன.
ஹேவ்லாக் செல்லும் வழியில் தொலைவில் நார்த் பே [North Bay] தீவு. இதன்
படம் தான் 20 ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ளது என டூர் பகுதி 1-ல்
சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.
அரசுப் படகு என்பதால் சுதந்திரமாக நீங்கள் மேல் தளத்திற்க்குச் செல்லலாம். மையத்தில் உள்ள கதவு வழியாகச் சென்றால் கேப்டனையும் அவரது குழுவையும் சந்திக்கலாம், கப்பல் எப்படி செலுத்துவது என்று முடிந்தால் நீங்கள் அவர்களுக்கு சில டிப்ஸ் கொடுத்துவிட்டும் வரலாம்!!
இவர்தான் நாங்கள் சென்ற படகின் கேப்டன். இங்கிருந்து சற்று முன்னாள் சென்று டைட்டானிக் படத்தில் வருவது போல ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்!!
ஹேவ்லாக் படகுத் துறையை அடைந்த பின்னர் எங்களுக்கு பின்னால் வந்த இன்னொரு படகு.
ஹேவ்லாக் தீவு தங்களை அன்புடன் வரவேற்கிறது.
ஹேவ்லாக் படகுத் துறையில் காலை உணவை முடித்துக் கொண்டு கார்கள் மூலம் ஹேவ்லாக் ராதாநகர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். இது தான் கடற்கரையின் நுழையும் பகுதி. அடர்ந்த மரங்கள் நிறைந்துள்ளது, வெயில் ஊடுருவ இயலாத அளவுக்கு மர நிழலே முற்றிலும் சூழ்ந்த ரம்மியமான இடம்!!
ராதாநகர் கடற்க்கரை....!! இதன் அழகைப் பார்த்தவுடன் என்னால் ஒரு படத்தோடு நிறுத்திக் கொள்ள முடியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக கடைகரையை நெருங்கும் போது ..........
நீரைத் தொட்டபோது...... முதலில் தெளிந்த நீர்...[Transparent], அப்படியே சற்று நிறம் மாறி பச்சை வண்ணம், இன்னமும் தூரத்தில் பார்த்தால் நீல வண்ணம்!!
இந்தக் கடற்கரையில் தூய்மையான நீர் என்பது மட்டுமல்ல, அலைகள் மிகவும் மென்மையாக உள்ளன. நீச்சலே தெரியாவிட்டாலும் உங்கள் கழுத்துவரை நீர் இருக்கும் ஆழம்வரை கூட நீங்கள் சென்று நின்று கொண்டு விளையாடலாம், ஒன்றும் செய்யாது!! இந்தப் பகுதிகளில் இரண்டு நாள் முதல் வாரக்கணக்கில் கூட சிலர் தங்கி என்ஜாய் செய்கிறார்கள். தோலைக் கருப்பாக்க [Tanning] Sun Bath செய்யும் வெளிநாட்டவர்களையும் காண முடிந்தது.
இராதாநகர் கடற்கரையில் நான் எடுத்த காணொளி.
அதற்க்கு முதல் நாள் ஜர்வா ஆதிவாசிகளைப் பார்த்த விளைவு!! இங்கு பீச் மணல் வெண்மை என்பதும் சிறப்பு!!
NDTV ஒரு கில்மாவை அழைத்துப் போய் இந்த பீச்சில் Scuba Diving போக வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகளோடு பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டுமாம். பார்க்கும்போது பெரிய துணியை கையில் வைத்துக் கொண்டேன். [வேறெதற்கு அவ்வப்போது வாயைத் துடைத்துக் கொள்ளத் தான்!!]
கடற்கரையில் அழகிய கொட்டகை.
இம்மாதிரி கொட்டகைகளின் கூரை இப்படித்தான் உட்புறத்தில் இருக்கும்.
இந்த மாதிரி செடிகள் அந்தமானில் திரும்பிய புறமெல்லாம் உள்ளன. இவற்றைக் கொண்டே அவர்கள் கொட்டகைகள் வேய்கிறார்கள்.
ஹேவ்லாக் இராதாநகர் கடற்கரையில் இருந்து திரும்பும்போது.........
படகுக்காக ஹேவ்லாக் படகுத் துறையில் காத்திருக்கும்போது......... இந்தச் செடிதான் சேப்பங்கிழங்கு செடியாம் அந்தமானில் இதுவும் நிறைய காணப் படுகின்றன.
ஹேவ்லாக்கில் இருந்து போர்ட் பிளேருக்கு படகில் ஏறும் போது சூரியன் அஸ்தமனம். அப்போது மணி 5 தான் இருக்கும்!!
போர்ட் பிளேர் படகுத் துறை.
அடுத்த நாள் விமானத்தில் அந்தமானில் இருந்து புறப்பட்ட போது.
சென்னையில் தரையிறங்கும் முன்னர்.
சென்னை விமான நிலையம்.
சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது!!
இத்தோடு அந்தமான் பயணக் கட்டுரை முடிகிறது. இந்தப் பதிவுடன் ஷாப்பிங் பற்றிய படங்களையும் சேர்க்கலாம் என நினைத்திருந்தேன், பதிவின் நீளம் கருதி அதை அடுத்த பதிவில் வெளியிட நினைத்துள்ளேன். சற்றே பொறுத்துக் கொள்ளவும்!!
அந்தமான் டூர் பகுதி 1 , பகுதி 2
அந்தமானில் மூன்றாவது நாளாக எங்களை அழைத்துச் சென்ற இடம் பாரா டங் [Bara Tang] எனப்படும் பகுதியாகும். இது போர்ட் பிளேரில் இருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே செல்லும் வாகனங்கள் அதிகாலை நான்கு மணிக்கே புறப்படும்.
இங்கு காணவேண்டிய இடங்கள்:
சுண்ணாம்பு கல் குகை [Limestone Caves] சேற்று எரிமலை [Mud Volcano] கிளிகள் தீவு [Parrots Island]- [நாங்கள் இங்கு செல்லவில்லை. நீங்கள் சென்றால் தவற விடாதீர்கள் சண்டையிட்டு இங்கேயும் காண்பிக்கச் சொல்லுங்கள்!!]
போர்ட் பிளேரில் இருந்து பாரா டங் செல்லும் வழியில், ஜராவாஎன்னும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இவர்கள் அந்தமானில் வசிக்கும் 7 பழங்குடியினரில் ஒரு இனமாவர். இவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து தற்போது வெறும் 350 பேர்களே எஞ்சியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புறப்படும் முன்னர் வழிகாட்டி, "ஜராவா மக்களைப் பார்க்க முடியும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை சார், ஏமாந்து போனால் எங்களை திட்டாதீர்கள்" என்று Disclaimer Clause ஐப் போட்டார். ஏனெனில், அங்கு செல்பவர்கள் பலர் பார்க்காமலேயே ஏமாந்து வந்தாதாகச் சொன்னார். இதைக் கேட்கும்போதே மனதில் சற்று கலக்கமாக இருந்தது, சரி நமது அதிர்ஷ்டம் என்று புறப்பட்டோம்.
இதற்க்குச் செல்லும் வழியில் சாலையைத் தவிர மற்றவை மனிதன் கைப்படாத இயற்கையாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் காணப் படுகின்றன.
இதில் முதல் 50 கி.மீ. கடந்த பின்னர் ஜிர்கா டங் [Jirka Tang] என்ற இடத்தில் ஒரு செக் போஸ்ட் உள்ளது, இங்குதான் ஜராவாஎன்னும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி ஆரம்பமாகிறது. இந்த இடத்தில் எல்லா வாகனங்களும் வரிசையாக நிறுத்தப் பட்டு 6:00 AM, 9:00 AM, 12:00 PM [மதியம்], மற்றும் 2:30 PM ஆகிய நேரங்களில் அனுப்பப் படுகின்றன. திரும்ப வருவதும் இதே போல குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப் படும். முதலிலும் கடைசியிலும் காவல் துறையினர் வண்டி இருக்கும். எங்கும் நிறுத்தக் கூடாது. ஜராவாமக்களை [ஒருவேளை உங்களுக்கு Luck இருந்து பார்த்தால்] புகைப் படம் எதுவும் எடுக்கக் கூடாது, [மீறினால் ஜாமீனில் வெளியே வர இயலாத வகையில் கைது செய்யப் படுவீர்கள்], அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் எதுவும் வழங்கக் கூடாது. [அவ்வாறு உண்ட சிலர் இறந்து போனதே இதற்க்குக் காரணமாம்]. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முக்கியமான தகவல், சிவப்பு வண்ணம் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது, உங்களை சிவப்பு ஆடையுடன் பார்த்துவிட்டால் அவற்றை பீய்த்து எடுத்து விடுவார்கள்
ஜராவாஇனக் குழந்தைகள். இதே நிறத்தில் தான் எல்லோரும் இருக்கின்றனர். இந்தியாவில் வேறெங்கும் நாம் பார்த்திராத கலப்பே இல்லாத 100% கருமை நிறம். இது போல நிறத்தினரை சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அரசு விருந்தினர்களாக எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது மட்டுமே பார்த்திருக்கிறேன். எப்படி இந்தத் தீவில் மட்டும் இவர்கள் வசிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இவர்கள் ஆண்/பெண் எல்லோருக்கும் இதே போல சுருட்டையான குட்டையான கரிய முடி, யாருக்கும் கண்ணுக்குத் தெரியுமளவில் தாடி இல்லை. [தாடி பற்றிய தகவல் திருத்தம் Courtesy : நம்பள்கி !!]
ஜராவா மக்கள் வாழும் பகுதியில் காலையில் செல்லும்போதும், மாலையில் திரும்ப வரும்போதும், ஆண்/பெண் இருபாலரிலும் கிட்டத் தட்ட ஐம்பது பேரைக் கண்டோம். [எங்களுக்கு நிறையவே அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது !! ]. இடுப்பில் மட்டுமே உடை அணிந்திருந்தனர், [அதுவும் சிவப்பு வண்ணத்தில் ஒரு மாதிரி பட்டை பட்டையாக தொங்கும் துணி].
உடலில் லேசான மஞ்சள்/பழுப்பு நிறத்தில் ஏதோ பூசியிருந்தனர். தலையில் BAND எல்லோருக்கும் இருக்கிறது. இளம் பெண்கள் நைட்டி
போல உடை அணிய ஆரம்பித்துள்ளனர், ஆனால் நடுத்தர வயதினர்/அதற்க்கு மேல் வயதானவர்கள் தங்கள்
பாரம்பரியப் படியே வாழ்கின்றனர். நம்மைப் பார்த்தாலும் அவர்கள் முகத்தில்
எந்த வித ரியாக்ஷனும் காட்டாமலேயே இருக்கின்றனர்!! இந்தப் பெண்களை விட்டால் மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் கூட வெல்லுவார்கள் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு வித நளினமாக இருக்கிறார்கள். இவர்களுடைய படங்கள் இணையத்தில் எக்கச் சக்கமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இதே சாம்பிளுக்கு சில. சுட்டி1சுட்டி2சுட்டி3சுட்டி4சுட்டி 5சுட்டி 6சுட்டி 7சுட்டி 8
சில டூரிஸ்டு நிறுவனங்கள் இவர்கள் இருக்கும் இடத்திற்கு காவல் துறையினர் உதவியோடு ஆட்களை அழைத்துச் சென்று வேடிக்கை காட்டி காசு பார்த்ததாக பாராளுமன்றத்தில் குற்றச் சாட்டு எழ, அது குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க ப.சிதம்பரம் உத்தரவிட்டார். தற்போது இந்தப் பாதையே மாற்றிவிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம்.
பாரா டங்கை அடைந்தவுடன், இந்த கப்பலில் ஐந்து நிமிடப் பயணத்தில் பாரா டங் ஜெட்டி என்ற இடத்திற்க்குச் செல்ல வேண்டும். இது ஒரே சமயத்தில் இரண்டு பேருந்துகள், இரண்டு டாடா சுமோ, பத்து பைக்குகள் மற்றும் முன்னூறு ஆட்களை ஏற்றிச் செல்லத் தக்கது.
பாரா டங் ஜெட்டி இது தான். இங்கிருந்து மோட்டார் படகில் Lime Stone Caves க்குச் செல்ல வேண்டும், 25 நிமிட உல்லாசப் பயணம் அது.
Lime Stone Caves க்குச் செல்லும் மோட்டார் படகு, எல்லோருக்கும் மிதவை மேலாடை [Life Jacket] வழங்கப் படுகிறது.
Lime Stone Caves க்குச் செல்லும் வழியில் இடது புறம் மாங்குரூவ் காடுகள்.
வலதுபுறம் ஓங்கி வளர்ந்த மாரங்கள்.
பயண முடிவில் மாங்குரூவ் காடுகளில் நுழைந்து...........
இந்த இடத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள். இங்கேயிருந்து 15 நிமிடம் நடந்து Lime Stone Caves-ஐ அடையலாம்.
Lime Stone Caves க்குச் செல்லும் வழியில்.............
காட்டிற்கு நடுவில் பயணம், இங்கு நின்றால் எப்படி இருக்கும் என்பதை அடுத்த காணொளி காட்டுகிறது.
Lime Stone Caves அருகில் செல்லச் செல்ல......
இதோ இவைதான் சுண்ணாம்புக் கல் குகைகள்.
குகையின் சுவற்றில்...........
சுவற்றிலிருந்து தொங்கும் விளக்குகள் போல....... சுண்ணாம்புப் படிவம்.
தரையில் சொட்டும் நீரால் கீழேயிருந்து எழும்பும் படிவம், மேலேயிருந்து இறங்கும் ஒன்றுடன் சேர்ந்து தூண் போல......!! மேற்கண்ட அத்தனையும் எளிதல் உருவானவை அல்ல, ஒரு இன்ச் உருவாகவே நூறு ஆண்டுகள் பிடிக்குமாம்!!
இவை எவ்வாறு தோன்றுகின்றன? ஆங்கிலத்தில் படிக்க சொடுக்கவும். அங்கே கொடுக்கப் பட்டிருந்த விளக்கப் பலகைகளின் படங்களை பதிவின் இறுதியில் பார்க்கவும்.
Limestone Caves லிருந்து திரும்பும் போது.
அங்கேயிருந்து Mud Volcano பார்க்க அழைத்துச் சென்றனர். பூமிக்குள் இருந்து சேறு கொப்பளிக்கிறது. இது இருக்கும் இடமே உருப்படதாம்!! [அதுக்கு ஏன்டா எங்களை கூட்டி வந்தீங்க!!]