Wednesday, August 28, 2013

மைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்!!

அன்புள்ள மக்கள்ஸ்,

இன்றைக்கு மைதாவைப் பத்தி ஒரு பதிவில் பார்த்தோம்.  [சுட்டி] நாமும் கிட்டத்தட்ட இதே விபரங்களோடு ஒரு பதிவும் போட்டிருக்கிறோம்.   நாட்டில சில நல்ல உள்ளங்கள் இருக்கு.  அதுங்க என்ன பண்ணும்னா அப்படியே "குறு....குறுன்னு ........" கம்பியூட்டரையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருக்கும்.  எதாச்சும் உடல் நலனுக்கு கெடுதல்னு பதிவு வந்தா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லதுதான், அமரிக்காவில் அப்படி, ஆப்பிரிக்காவில் இப்படின்னு போட்டு படிக்கிறவங்களை குழப்பிவிட்டு, சரி ஒண்ணுமில்லை போலிருக்குன்னு நினைக்கிற நிலைக்கு தள்ளி விட்டு விடுவார்கள்.  பதிவோட நோக்கத்தையும் கெடுத்த மாதிரி ஆச்சு, நாலு பேரு நாசமா போனாங்கலேன்னு மனசுக்குள்ள ஒரு குரூர சந்தோசம். அது போகட்டும், கழுதை.  நாம இப்ப விஷயத்துக்கு வருவோம்.  இன்னைக்கு நாம் படிச்சதில் மைதா தயாராவது எப்படி என விளக்கியுள்ளார்கள்.  அதை இங்கே தருகிறோம்.  அதுசரி, மேட்டர் என்னன்னு நீங்க கேட்பீங்க!!  [என்னது கேட்க மாட்டீங்களா?!  அதானாலென்ன, கேட்டீங்கன்னே வையுங்களேன்!!]  அதில்தான் நமக்கு தீராத சந்தேகம் ஒன்னு இருக்கு, கொஞ்சம் பொருங்க!!

 ------------------------------------------------------------------------------------
 மைதா தயாரிப்பு முறை:

முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது. 

         இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது. 

               சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும். 

              இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல. 
----------------------------------------------------------------------------------------
சரி இப்போ நம்ம சந்தேகத்துக்கு வருவோம்.  [இதை தீர்த்துட்டா ஆயிரம் பொற்காசு தருவியான்னு கேட்டுடாதீங்க, ஆயிரம் பைசா வேணா தாரேன்!!].  மேலே உள்ள வரிகளில் இருந்து சில [விஜயகாந்த் மாதிரி] சில புள்ளி விவரம்!!
முதலில் கோதுமை அரைக்கப் படுகிறது- அரைக்க செலவு ஆகும்.
அதுக்கப்புறம் அதில்  பென்சாயில் பெராக்சைடு கலக்கிறாங்க என்றால், அந்த கெமிக்கலை எவன் சும்மா தருவான், அதுக்கும் பணம் செலவாகும்.
மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.-  ஹி ....... ஹி ....... ஹி .......  உங்களுக்கே புரிஞ்சிருக்கும், அல்லோக்சான் நம்ம மாமனோ மச்சானோ ஃபேக்டரியில் தயார் பண்ணமாட்டன், அதை வாங்கித்தான் பயன்படுத்தணும். அதுக்கும் காசு செலவாகும்.
அது மட்டுமா,
செயற்கை வண்ணங்கள், 
தாது எண்ணெய்கள், 
சுவையூட்டிகள், 
 பதனப்பொருட்கள், 
வெள்ளை சீனி, 
சாக்கரின், 
அஜினோமோட்டோ 
என மேலும் அரை டஜன் அயிட்டங்கள் சேர்க்கிறாங்கலாம்.  எம்புட்டு செலவாகுமோ!!
இத்தனையும் படித்த பின்னர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது.  கீழே உள்ள படத்தை பாருங்க.

அப்படியே அரைச்சு விற்கப்படும் கோதுமை கிலோ 47 ரூபாய்,  ஆனால் அத்தனை கெமிக்கல்கள் [அது நல்லதோ கேட்டதோ] சேர்த்து, அரைத்தல் பிரித்தல் என என்னென்னமோ பிராசஸ் பண்ணி வரும் மைதா அதை விட விலை குறைவாய் கிலோ ரூ.36 -க்கே கிடைப்பதெப்படி?  விளங்கலையே?


 

25 comments:

  1. பாகவதரே,

    உம்மை எப்பூடி ஐஐடில சேர்த்துக்கிட்டாங்கனு இப்போ டவுட்டா கீது அவ்வ்!

    //செயற்கை வண்ணங்கள்,
    தாது எண்ணெய்கள்,
    சுவையூட்டிகள்,
    பதனப்பொருட்கள்,
    வெள்ளை சீனி,
    சாக்கரின்,
    அஜினோமோட்டோ //

    இதெல்லாம் மைதா மாவுல சேர்த்து இருக்க மாட்டாங்க, பரோட்டா செய்யும் போது சேர்க்கக்கூடும்.

    மைதா மாவு என்பது சுத்திகரிக்கப்பட்ட "ஸ்டார்ச்" எனவே கோதுமையில இருந்து மட்டும் தயாரிப்பதில்லை, இந்தியாவில் பெரும்பாலும் "மரவள்ளிக்கிழங்கு மாவில்" இருந்தே மைதா தயாராகுது, சிலர் கொஞ்சம் போல கோதுமை ஸ்டார்ச் சேர்த்து பிளன்டட் ஆக விற்பார்கள், நான் மைதா பற்றி எழுதியப்பதிவில் சொல்லி இருக்கேன்ம் நீரும் பின்னூட்டம் எல்லாம்ம் போட்டீர், சிலர் குத்து மதிப்பா எழுதும் பதிவை மட்டும் வச்சுக்கிட்டு கேள்வியை கேளும்.

    எனவே மைதா மாவின் பிளன்டட் செய்யப்படும் மாவை பொறுத்து விலை குறையும்,எனவே தான் கோதுமை மாவை விட மைதா மாவு விலை கம்மியா இருக்கு.

    அமெரிக்கா,கனடா, யுகே போன்ற மேலை நாடுகளில் கடுமையான தரக்கட்டுப்பாடு இருப்பதால், மரவள்ளிக்கிழங்கு மாவு கலப்பது குறைவு,எனவே கோதுமை மாவுக்கும், மைதா மாவுக்கும் ஒரே விலை தான் இருக்கும். அங்கேலாம் எல்லா மாவும் " aLl purpose flour" எனப்போட்டு , அதில் உள்ள புரோட்டின் (gluten)சதவீதம், மென்மை தன்மை வைத்து தரம் பிரித்துக்கொள்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வவ்வால் சொன்னது போல மைதா வரவள்ளிகிழங்கில் இருந்து தயாராவதால் மலிவு. சுத்தமான கோதுமைமா என்றால் பொன்னிறமாக நல்ல வாசத்துடன் இருக்கும். பிசையும் போதே தெரிந்துவிடும். மைதா கலந்த கோதுமை அதிகமாக ஒட்டிக்கொண்டு வரும். பொதுவாக உணவகங்களில் பூரி, ரொட்டி போன்றவற்றிற்கு மைதா அ மைதா கலந்த கோதுமைமாவையே பயன்படுத்துகின்றனர்.

      …மேலை நாடுகளில் புரோட்டின் குறைந்த மென்மையான ஆல் பர்பஸ் மாவை கேக், பிஸ்ஸா, பஸ்ட்ரி செய்ய பயன்படுத்துகிறார்கள். ஓல்/மோர் க்ரெய்ன் மாவில் புரோட்டின் அதிகம் இருக்கும்.

      Delete
    2. @வவ்வால்

      \\

      //செயற்கை வண்ணங்கள்,
      தாது எண்ணெய்கள்,
      சுவையூட்டிகள்,
      பதனப்பொருட்கள்,
      வெள்ளை சீனி,
      சாக்கரின்,
      அஜினோமோட்டோ //

      இதெல்லாம் மைதா மாவுல சேர்த்து இருக்க மாட்டாங்க, பரோட்டா செய்யும் போது சேர்க்கக்கூடும்.\\

      மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. நானும் எத்தனையோ பரோட்டா கடைகளை பார்த்திருக்கேங்கண்ணா, கடையில இருந்து வரும் மாவை அப்படியே தண்ணீர் ஊத்தி பிசையுரானே தவிர எவனும் காசு போட்டு இந்த அரை டஜனுக்கும் அதிகமான அயிட்டங்களை சேர்ப்பது போலத் தெரியல. அந்த குறிப்பிட்ட பதிவில் அவங்க சொல்ல வருவது மைதா கடைக்கு வரும்போதே எல்லாம் சேர்க்கப் பட்டுள்ளது என்பதே, அது நெஜமா இல்லியா என்பது எனக்கும் தெரியாது.

      Delete
    3. //நான் மைதா பற்றி எழுதியப்பதிவில் //
      Vovval,
      Your post's link please!

      Delete
    4. வேற்றுகிரகவாசி,

      பரோட்டா ரகசியம் என்றப்பெயரில் கடந்தாண்டு எழுதியது,

      http://vovalpaarvai.blogspot.in/2012/05/blog-post_31.html

      ---------------

      பாகவதரே,

      அதெல்லாம் மாவுல சேர்த்தா அது மாவாக இருக்காது கட்டியாகிடும் :-))

      சாதாரணமாக ரோட்டுக்கடையில் சோடா உப்பு மட்டுமே சேர்ப்பார்கள், மற்ற ஐடெம் சேர்ப்பதில்லை, ஆனால் சில பெரிய ஹோட்டல்களில் சுவை மற்றும் மென்மைக்காக சேர்ப்பார்கள்.

      என்னோட சந்தேகம் என்னனா ,நீங்க சொன்னப்பதிவு ஏதோ ஒரு ஆங்கில தளத்தைப்பார்த்து காப்பி அடிச்சி இருக்கும், அதில் ஃப்ரோசன் பரோட்டா தயாரிப்பில் என்ன சேர்க்கிறார்கள் என கொடுத்திருக்கலாம்,அதனையே மைதாவில் உள்ளது என எழுதி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

      நான் தெரியாமத்தான் கேட்கிறேன் மைதாவில் என்ன நிறமி சேர்க்கிறாங்கனு சொல்லுறிங்க?

      அதை வெள்ளையாக்க ப்ளீச் செய்றாங்க :-))

      மைதாவில் ப்ளீச்சிங் ஏஜண்டின் எச்சம்,மற்றும் ஸ்டோரேஜ் பெஸ்ட் தாக்கம இருக்க பெஸ்டிசைட் ஃபுமிகேஷன் செய்ததன் எச்சம் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

      ஃபுமிகேஷன் பொதுவாக எல்லா மாவு, தானியத்துக்கும் செய்வார்கள் எனவே மைதாவை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லை.

      மினரல் எண்ணை,அஜினோ மோட்டோ ,சர்க்கரை, தயிர், வெண்னை என எல்லாம் பரோட்டா மாவு பிசையும் போது சேர்ப்பதுண்டு.

      அல்லாக்சன் என்பதை எல்லாம் யாரும் தனியா சேர்க்கலை, ப்ளீச் செய்யும் போது குளோரின் டை ஆக்சைடு ஸ்டார்ச்சுடன் வினைப்புரிந்து உருவாகுது.

      Delete
    5. \\அல்லாக்சன் என்பதை எல்லாம் யாரும் தனியா சேர்க்கலை, ப்ளீச் செய்யும் போது குளோரின் டை ஆக்சைடு ஸ்டார்ச்சுடன் வினைப்புரிந்து உருவாகுது.\\ ஆக "அல்லாக்சன்" அப்படிங்கிற சர்க்கரை வியாதி உண்டு பண்ணும் அயிட்டம் மைதாவில இருக்கு. இது ஒன்னு போதுமே, அந்த கன்றாவி வேணாம்னு முடிவு பண்ண!! நன்றி.............

      Delete
  2. மாப்ளே தாசு,
    ஒரு விடயம் எழுதும் முன் கொஞ்சம் விக்கிபிடியா பாரும். பாருங்கள் தென் இந்தியாவில் மைதா மரவள்ளிக் கிழங்கில் [ tapioca ] இருந்து தயாராகிறது என தெளிவாக சொல்கிறான்.
    http://en.wikipedia.org/wiki/Maida_flour
    In south India where there are no wheat farms. Flour from tapioca is converted into maida, rava, vermicelli, sabudhana/javvarisi, etc. """"This is generally cheaper than those made with wheat"""". Salem, Erode, Dharmapuri region is very famous for this industry called "Sago" manufacturing.

    நீர் முதல் நாலு வரி படித்து விட்டு ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என முடிவு செய்து விட்டீர்.

    இருந்தாலும், மைதாவில் வெண்மையாக்கும் வேதிப்பொருள்கள் கெடுதல் விளைவிக்கும் வாய்ப்பே அதிகம் என நானும் ஏற்கிறேன்.
    மலையாளத்தில் இது கப்பைக் கிழங்கு என அழைக்கப் படுகிறது.
    உமக்காக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் இருந்து " வாடி என் கப்பக் கிழங்கே" பாடலை சமர்ப்பிக்கிறேன்.
    http://youtu.be/gIzvRNw_tb8

    கேட்டு மகிழவும்!!

    வாழ்க வளமுடன்!!!.
    நன்றி!!!

    ReplyDelete
  3. விக்கியில் காணும்படி மரவள்ளிக்கிழங்கில் இருந்து செய்யப்படும் ஜவ்வரிசியான Sagoவை கலப்படம் செய்வது தென்னாட்டில் மட்டுமே, அதுவும் குறிப்பாக இத்தொழில் சேலத்தில் பிறந்து தமிழ்கூறும் நல்லுலகில் மட்டுமே கொடிகட்டி பறக்குது. ஆனால் வடக்கில் இன்னமும் மைதா கோதுமை மாவிலிருந்து செய்யப்படுகிறது.

    அப்புறம் எப்படி மைதாவின் விலை இத்தனை பிராச்சிங் செய்த பிறகு கம்மியாக இருக்குது?

    இந்த ஒப்பிடு தவறு. மைதாவின் விலை கோதுமை மாவின் விலையை விட அதிகம்.

    இந்து பத்திரிக்கை செய்தி http://tinyurl.com/ov5f36k திண்டுக்கல் ரேசன் கடையில் One kg enriched atta is sold at Rs.11 a kg and maida at Rs.16 a kg.
    பாகிஸ்தானில் மைதா 100 ருபாய் அதிகம் (78 KG) http://tinyurl.com/okbxr2k

    அப்புறம் நீங்க கொடுத்த லிங்கு?

    நீங்கள் ஒப்பிட எடுத்துக் கொண்ட விடயங்களின் தரம் வேறு. ஆசிர்வாத் இருவித தரம் கொண்ட கோதுமை மாவுகளை விற்கிறது. ஒன்று சாதா ரகம் விலை 5 kg - ரூ 135, ஆசீர்வாத் செலக்ட்- உயர்ரக கோதுமை மாவு 5 கிலோ விலை 200 ரூபாய். http://tinyurl.com/q7t2d5m

    இங்கு உயர் ரக ஆசிர்வாத் செலக்ட் (http://www.aashirvaad.com/Products.aspx) மற்றும் சாதா மைதா மாவை நீர் ஒப்பிட்டதால் மைதா விலை குறைவு போல் தெரிகிறது.ஆனால் உண்மையில் ஒரே ரக கோதுமையில் செய்யப்பட்ட மைதா விலை கோதுமை மாவினை விட அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. @ நந்தவனத்தான்

      எனக்குத் தெரிஞ்சவரைக்கும் மைதா ரொம்ப Cheap-புங்க.............!! தகவல்களுக்கு மிக்க நன்றி!!

      Delete
  4. எப்படியோ மைதா குறித்த தகவல்களை பதிவுகள் பின்னுட்டங்கள் மூலமும் அறிந்து கொண்டேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  5. மைதாவை நீங்க விடுறாப்ல இல்லையா? ஒரே விவாதமாத்தான் போகுது. நல்லாதா? இல்லைனா உண்மையிலேயே கெடுதியானு தெளிவாக, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு இதுவரை சொல்ல முடியவில்லை என்பது வருத்தத்துக்குரியது!

    மைதா பராசஸ் செய்து தயாரிப்பதால், அதனுடைய "half-life" அதிகமாக இருக்காலாம். (நான் இருக்கலாம்னுதான் சொல்லுறேன் :) ) அதனால அதை அதிக நாட்கள் "புழுவராமல்" குளிர்சாதன பொட்டியில் வைக்காமல் ஸ்டோர் பண்ணி வைக்கலாம் னு ஒரு பாஸிபிலிட்டி இருக்கு. அதிகமான நாள் ஸ்டோர் பண்ணி வைக்க முடிவதால் அதை ப்ராஸஸ் பண்ணுவதற்கான ஆன செலவை திரும்பப் பெற்று விடலாம் (விலை அதிகமாக வைத்து) னு ஒரு தியரி விடலாம்னு நெனைக்கிறேன்.

    கோதுமை மாவுனா 6 மாதம்தான் ஸ்டோர் பண்ணலாம்னு இருக்குனு வைச்சுக்குவோம். பராஸஎஸ்ட் மைதாவை 18 மாங்கள் ஸ்டோர் பண்ணலாம்னு வச்சுக்குவோம். மைதா விலையை கூட்டுவதில் ஒரு அர்த்தம் இருக்கு. இல்லையா?

    அப்புறம் இந்த மரவள்ளிக்கிழங்கு மாவுவை கலந்தா.. நம்ம கோதுமை, மைதாவோட இன்னொரு மூனாவது மாவை (மரவள்ளி மைதா) பத்தி பேசுறோம். க்லப்படம் செய்த மைதாவை ஒதுக்கி வச்சுடுறதுதான் நல்லது.

    You need to compare carefully. You have to show the SAME BRAND and same good quality and see the price difference.

    ஒரு பக்கம் ப்ராண்ட் நேம் உள்ளதும், இன்னொரு பக்கம் அட்ரெஸ் இல்லாத ஒருமைதாவையும் போட்டு கம்பேர் பண்ணுறதெல்லாம் தப்பு ஜெயதேவ்!

    இதெல்லாம் உங்களுக்கு நான் சொல்லணுமா?? :)

    ReplyDelete
    Replies
    1. \\ஒரு பக்கம் ப்ராண்ட் நேம் உள்ளதும், இன்னொரு பக்கம் அட்ரெஸ் இல்லாத ஒருமைதாவையும் போட்டு கம்பேர் பண்ணுறதெல்லாம் தப்பு \\மைதா மாவு அயிட்டாமா மூக்கு புடிக்க தின்னு, சர்க்கரை வந்து மூட்டை கணக்கா சர்க்கரை மாத்திரை தின்னு உடம்பு பூராவும் இன்சுலீன் ஊசியை தினமும் ஏத்தியும் வேலைக்காகாம பின்னாடி டாக்டர் வந்து கை காலு எல்லாம் கட் பண்ணனும்னு சொன்னதுக்கப்புறம்தான் ஆமாம் மைதா கெடுதல்னு நம்புவேன்- அப்படின்னு ஒரு பாலிசி உங்களுக்கு இருந்தா சாரி....... நீங்க வச்சுக்குங்க, எனக்கு அது வேணாம். முசப் புடிக்கிற நாயை மூஞ்சப் பாத்தே கண்டு புடிச்சிகிறது தான் புத்திசாலித் தனம். உங்க வழியில உண்மை தெரிய வரும் போது ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாடி போக முடியாது......... அம்புட்டுதேன்..........

      Delete
    2. சும்மா அள்ளிவிடாதீங்க. எவனாவது சட்டப்படி உங்கமேலே ஆக்ஷன் எடுத்துடுவான், இதுமாரி எல்லாம் உளறினால். மனிதர்களுக்கு அல்லாக்ஸானால் டயப்பட்டிஸ் வருது எந்தக் கேணையன் உங்களுக்கு சொன்னான்? சும்மா எதையாவது அறிவிய்ல சாட்சிய்னக்கள் இல்லாமல் உளறவேண்டியது! சும்மா வாய்கிழ்யப் பேசுவதால் மைதாவால் மனிதர்களுக்கு டயபடிஸ் வருதுனு ஆயிடாது! நீங்க வாய்கிழிய பேசுறீங்கனு வேணா புரிஞ்சுக்குவாங்க!

      Delete
    3. Human islet tissue is exceedingly resistant to the degenerative effects of alloxan. Alloxan diabetes differs strikingly from other types of experimental diabetes in the course and nature of the lesions which are developed. As yet, there is no evidence that alloxan-induced diabetes mellitus is related to human diabetes mellitus.[7]

      ------------

      It is also understood that alloxan-induced diabetic model does not exactly simulate the human type 2 diabetes mellitus.

      http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3062136/

      அறிவியல் ஒரு பக்கம் இருக்கட்டுன், நீங்க ஒளறு ஒளறுனு ஒளறித்தள்ளுங்க, ஜெயதேவ்!

      Delete
  6. Some times some items will be on SALE. It is possible maida is on Sale but wheat flour is NOT ON SALE. You could see a price difference. It all depends on how old the flour is! If you want to analyze and find a real solution, you need to be very careful in anlayzing.

    சும்மா எங்க ஊர்ல இப்படித்தான்.. நாங்க வான்கோழியை மயிலுனுதான் சொல்லுவோம்னு ஏதாவது அரைகுறையா அனலைஸ் செய்தால், சும்மா பேசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. வருண், மைதா விர்க்கிரவனே பேரை போட்டுக்க வெட்கப் படுரான்னா பாத்துக்குங்க!! ஹி ..........ஹி .ஹி ...................

      Delete
    2. உங்களோட இது பத்தி விவாதம் செய்றதுல அர்த்தமே இல்லை. எதையும் கவனிச்சுப் பாருங்கனு சொன்னால் என்னத்தையோ சொல்றீங்க!

      Delete
  7. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் மைதா ரொம்ப Cheap-புங்க.............!!//


    மறுபடியும் முதல்ல இருந்தா? வவ்வால் மற்றும் எனது பின்னூட்டத்தை சேர்த்தாலே இதுக்கு விடை தெரிஞ்சுடுமே சார்!

    நீங்க சொல்லுற மைதா மரவள்ளிக்கிழங்கு மாவு!

    வடக்குல விக்கற ஒரிஜினல் மைதாவோ அல்லது கோதுமையில் செய்த அணில், நாகா மாதிரி பிராண்டட் மைதா வாங்கினால் விலை கம்மிவெல்லாம் இருக்காது! உதாரணமாக நாகா மைதா மாவு ஆன்லைனில் ரூ 46/ 1 கி-க்கு விற்கிறது.

    மேற்படி விபரங்களுக்கு பார்க்கவும் http://tinyurl.com/o8gffyp இதே கேள்விய மாத்தி கோதுமை மாவின் விலை குறைவு ஏன்-ங்கறார் ஒருத்தர்,கோதுமை மாவு மைதாவினை விட குறைந்த விலைக்கு தான் விற்பதாக சொல்லுகிறார் இன்னொருவர், வேணும்னா வாங்கிக்குங்க!

    ReplyDelete
  8. Different varieties of Wheat used for each Flour. So, Maida and Wheat flour are obtained from different varieties of Wheat. For e.g, Samba ravai, Patna ravai(Vella ravai) and Paeni ravai are obtained from different Wheat varieties. As Processing is also different, the cost is not same.
    - Rajaram.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி ராஜாராம்..........

      Delete
  9. மைதாவில் என்ன சேர்க்கிறார்களோ ! இப்போதும் எனக்கு மைதா ஒவ்வாமையே !

    ReplyDelete
  10. Today inorder to increase the softness of chappati we are moving towards wheat that has high gluten content. The result can be autoimmune diseases which includes indigestion. The increase celiac disease can be seen with our own eyes.

    Even in the western world where they are used to eating wheat for generations they are being gluten intolerant and are going for gluten free diets.Famous being miley cryus.

    What happens is your body needs excessive to energy to break down gluten. Some bodies just cant cope with that and when that happens your body treats gluten as an antigen.

    Villi in your intensinal wall will also get destroyed if you abuse it gluten.That is not good news and you will have digestion problems

    Ignorance is a bliss. The more you dont know about your own body the less you worry but more harm you do. The more you know about your body the more you worry but less harm you do. Choose what every you want to do in life.

    Let there be peace.

    ReplyDelete
  11. இன்றைய வலைச்சரத்தில் உங்களுடைய தளத்தை பாராட்டியிருக்கிறேன்.
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/6.html
    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  12. மிக்க நன்றி மேடம் .................!!

    ReplyDelete