Friday, November 14, 2014

வட்டத்தை விட சதுரம்தான் புத்திசாலி எப்பிடி தெரியுமா?

இன்னைக்கு ஒரு ஜோக் படிச்சேன்.

வட்டத்தை விட சதுரம்தான் புத்திசாலி எப்பிடி தெரியுமா?
,
,
,
தெரியலையா?
,
,
,
ஏன்னா வட்டத்துக்கு மூலை கிடையாதே சதுரத்திக்குதான் நாலு மூலை இருக்கு!!

ஆஹா.......   ஜோக் நல்லாயிருக்கேன்னு சொல்லி இதை மொழி பெயர்த்து வெள்ளைக்காரன் ஒருத்தனுக்கு அனுப்பினேன். 


A Square is more intelligent than a Circle, do you know how?
.
.

You don't !! OK. I will tell you the answer.
 .
.

The square is more intelligent than a circle because the square has got four corners whereas the circle has got none !!படிச்சுப் பாத்துட்டு எப்படியும் நம்மள மாதிரியே விழுந்து விழுந்து சிரிக்கப் போறான்,  அவன் ஃபிரண்டு சர்க்கிளில் நாம ஃ பேமஸ் ஆகப் போறோம்னு மிதப்பில இருந்தேன்.  அவன்கிட்ட இருந்து பதில் வந்தது.  சிரிப்பே வரலை, இது ஜோக்கே இல்லைன்னு அந்த வெள்ளைக்காரன் எழுதியிருந்தான்.   ஆனாலும் நான் அவனை சிரிக்க வைக்கனும்னு நினைச்சேன் இல்லையா, அதுக்காக பதிலுக்கு அவன்  அவங்க ஊர் ஜோக் ஒன்னை எழுதி அனுப்பினான்.  ஜோக்னா இது மாதிரி இருக்கனும்யா, பாத்துக்கோன்னான்.

Do you Know why fishermen are selfish?
.
.

You don't !! OK. I will tell you the answer.
 .
.

The fishermen are selfish because they sell "fish".


அடடா!!  வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்யா!!  அருமையா யோசிக்கிறான்!!  சரி இந்த ஜோக்கை தமிழில் எழுதி முதல் ஜோக்கை சொன்ன நண்பருக்கு அனுப்பலாம்னு முயற்சி பண்ணினேன்.

மீனவர்கள் எல்லாம் ஏன் சுயநலக்காரர்களாக இருக்கிறாங்கன்னு தெரியுமா?
 ,
,
,
ம்........  தெரியாது தானே!!  உன்னாலே  பதில் கண்டுபிடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும், நானே பதிலை சொல்லிடறேன்.
,
,
,

ஏன்னா அவங்க மீன் விற்கிறாங்க, அதான்!!

இதை நண்பருக்கு மெயிலில் அனுப்பினேன்.  படிச்சுப் பார்த்த அவர், க்ர்ர்ர்ர்ர்ர்ர்.............. தூ.........  ன்னு துப்பிட்டுப் போயிட்டார்..........


ஏம்பா, ஒரு ஜோக் எழுதி சிரிக்க வச்சு பேர் வாங்கலாம்னு பார்த்தா ஒருத்தரும் நம்மல விட மாட்டேங்கிறாங்களேப்பா............   ம்.......  இப்போ புரியுது, இதில் அமரிக்கா காரன் வேலை எதுவும் இல்லை.  எங்கே நான் போட்டியா வந்துடுவேனோன்னு கவுண்டமணியும், வடிவேலுவும்  பண்ற உள்நாட்டு சதி தான் இது..............  இது பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது, எப்படியும் காமடி பண்ணி சிரிக்க வச்சே தீருவேன்.  ஹா........   ஹஹா......ஹா............


Thursday, November 13, 2014

பாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா?

சமீபத்தில் நம்ம நண்பர் ஒருத்தர் தன்னோட நிறைவேறாத ஆசைகள் என்னென்ன என்று ஒரு பெரிய லிஸ்டு போட்டு ஒன்னொன்னா சொல்லிகிட்டே வந்தார்.

கமலஹாசன் தன்னுடைய பேச்சை கேட்பவர்களுக்குப் புரியும்படியா பேசணும்.

முருகதாஸ் ஆங்கிலப் படங்களை கப்பியடிகாம படமெடுக்கணும்.

விஜய் தன்னுடைய படங்களில் நடிக்கவும் செய்யணும்.

இப்படியெல்லாம் ஏடாகூடமா சொல்லிகிட்டே போனார். என்னடா இது மனுஷன் இவ்வளவு hopeless ஆக இருக்கறேன்னு பார்த்தேன்.  பேசிகிட்டே வரும் போது இன்னொரு நிறைவேறாத ஆசை

"பாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா இருக்கு!!" அப்படின்னு சொன்னார்.

இதப் போய் எதுக்கு இந்த மனுஷன் நிறைவேறலைன்னு சொல்றாருன்னு யோசிச்சேன். நான் அவருக்கு ஒரு ஐடியா சொன்னேன்,

"இது ரொம்ப ஈசியாச்சே. இப்பவும் ஷகீலா குளிக்கிற சீனு நிறைய படத்தில இருக்கு, அதுல ஒரு சி டி எடுத்து போடுங்க. அவங்க படத்துல குளிக்கிற சீனு வர்றப்போ நீங்க பாவாடை கட்டாம இருங்க. சிம்பிள்......"

இதை கேட்டதும் மூஞ்சி அஷ்ட கோணலா மாறிடுச்சு, ஏன்னு எனக்கு விளங்கல. அடுத்து என்னோட சந்தேகத்தையும் அவர்கிட்டே கேட்டேன்,

"அதுசரிப்பா, பாவாடையெல்லாம் நீ எதுக்கு கட்டிக்கிட்டு இருக்கே?"

அப்படியே என்னை எரிக்கிறா மாதிரி முறைக்கிறாரு.  நான் தப்பா எதாச்சும் சொன்னேனா?  விளங்கலே...............

Saturday, November 8, 2014

கருப்பு பணம் திரும்ப வருமா? வரும்........ ஆனா வராது...........!!


 நம்ம திரைப்படங்களில் காலம் காலமாக கிளைமேக்ஸில் அடிக்கடி இடம் பெரும் காட்சி ஒன்று உண்டு.  கதாநாயகன் வில்லனை அடித்து துவைத்து போட்டுவிட்டு கடைசியாய் பிழைத்துப் போ என்று உயிர் பிச்சை கொடுத்து விட்டு அந்த இடத்திலிருந்து ஒரு பத்தடி திரும்பிப் பார்க்காமல் நகர்ந்திருப்பார்.  அடி வாங்கி இரணகளத்தில் இருக்கும் வில்லன் அப்போதும் அடங்க மாட்டார்.  தன்னிடமுள்ள ஆற்றல் அனைத்தையும் திரட்டி எப்படியோ எழுந்து ஹீரோவைத் தாக்க அவர் பின்னால் ஓடுவார்.  ஓடும்போது சும்மா ஓடமாட்டார்.   "ஏய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ............."  என்று பக்கத்து ஊருக்கே கேட்கும்படி காட்டு கத்தலாக கத்திக் கொண்டே ஓடுவார்.  இவர் கத்தும் சத்தம் கேட்ட ஹீரோ திரும்பிப் பார்ப்பார்.  அதுக்கப்புறம் வில்லன் உசிரு மிஞ்சுமா என்ன?  இதில் நம்மில் பலருக்கும் புரியாத ஒரு விஷயம், வில்லன் ஏன் அவ்வளவு பெரிய கூச்சலை எழுப்பிக் கொண்டே ஓட வேண்டும், சப்தம் போடாமல் போனால் ஹீரோவை எளிதில் போட்டுத் தள்ளிவிடலாம் அல்லவா?  ஆனால் ஒரு வில்லனும் அவ்வளவு புத்திசாலியாய் செயல்படுவதில்லை, குறைந்த பட்சம் தமிழ்ப் படங்களில் இது நடக்காது!!


கறுப்புப் பணத்தை மீட்கப் போன நமது அரசின் செயலும் கிட்டத் தட்ட இப்படித்தான் இருக்கிறது.  "கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப் போகிறோம்" என்று சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பிக்கப் பட்ட கோஷம் இதோ....... அதோ........என்று வருடக் கணக்கில் இழுத்தடிக்கப் பட்டது.  இப்போ அறுநூறு சொச்சம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் சிக்கியிருக்கின்றன.  அதில் பாதிக்கும் மேல் பணமேயில்லையாம்.  இவ்வளவு வருடங்கள் எச்சரிக்கை விட்டும் எந்த மடையனாவது பணத்தை அங்கே வச்சிருப்பானா?  அப்படி வச்சிருந்தா, அவனை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளனும், பணத்தை போட்டதுக்காக அல்ல, இவ்வளவு எச்சரிக்கை பண்ணியும் பணத்தை பத்திரமான இடத்துக்கு மாத்தாம இருந்ததுக்காக!!


ஆனா, நம்ம பிரதமர் கடந்த தேர்தலில் என்னென்ன வாக்குறுதி எல்லாம் குடுத்தாரு, அதை நம்பி நாமெல்லாம் என்னென்ன கனவில் மிதந்தோம்!!


 • வெளிநாடுகளில் 80 லட்சம் கோடி இந்திய பணம் சட்டத்திற்குப் புறம்பாக பதுக்கி வைக்கப் பட்டுள்ளது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மொத்த கறுப்புப் பணத்தையும் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம். 
 • அதைக் கொண்டு வந்தால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்து, நாடு முழுவதையும் சிங்கப்பூர் போல மாற்றி, ஆளுக்கு கையில் மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முடியும். 
 • அடுத்த முந்நூறு வருஷத்துக்கு வரியில்லாத பட்ஜெட் போடுவோம்.
 • எல்லா சாலைகளும் மூஞ்சியைப் பார்க்கும் கண்ணாடி மாதிரி மாத்திடுவோம்.
 • ஊருக்கு ஒரு அப்போலோ ஆஸ்பத்திரி கட்டுவோம்.  கருணாநிதி மாதிரியே குப்பனும் சுப்பனும் கூட அந்த ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கலாம்.
 • பதுக்கியவர்கள் பெயர்களை காங்கிரஸ் அரசு வெளியிட மறுத்து, காப்பாற்றி வருகிறது, நாங்கள் அவர்களை வெளிச்சதுக்கு கொண்டு வருவோம்,
மோடி பேசுவதைக்  கேட்டவர்கள், அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியா சொர்க்கமாகிவிடும் என்றே நம்பினார்கள்.  அவ்வாறே ஆட்சியையும் மாறியது, மோடியும் வந்தார்.  நடந்தது என்ன? 
 
நேத்து NDTV -யில் இது குறித்து ஒரு விவாதத்தைப் பார்த்தேன்.  அப்பத்தான் கறுப்புப் பணம் மேலிருந்த கறுப்பு சாயம் வெளுத்தது.  உண்மை என்ன?

 • வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் சிலர் பெயர்கள் மட்டுமே இவர்களுக்கு கிடைத்திருக்கிறது, அதுவும் நேரிடையாக அல்ல, ஜெர்மானிய அரசுக்கு எப்படியோ கிடைத்த தகவலை நம் அரசோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அதிலும் பலரது கணக்குகள் சட்டபடியானதாகவும் இருக்கக் கூடும். 
 • அவர்கள் எவரது பெயரையும் இவர்களால் வெளியிட முடியாது காரணம் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக பணத்தை பதுக்கியுள்ளனர் என்று நிரூபிக்கப் படும் முன்னர் அவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது அவர்களது தனிநபர் உரிமையில் மூக்கை நுழைப்பதாகும்.
 • இன்னும் எவ்வளவு பேர் எங்கெங்கெல்லாம் ஒழித்து வைத்திருக்கிறாகள் என்ற தகவல் எதுவும் அரசிடம் இல்லை. 
 • ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கில் உள்ள பணம் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபணம் அரசிடம் தற்போது இல்லை.  அவ்வாறே நிரூபித்தாலும் பணத்தை கொடு என்று நேரிடையாக அந்த வங்கியை நாட முடியாது.  எனவே மிகப் பெரும் கேள்வியே, பணத்தை எப்படி மீட்பது என்பது தான்.  [இதுவே தெரியாமல் தான் அத்தனை வாக்குறுதிகளையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்!!]
 • பதுக்கியுள்ள பணம் 80 லட்சம் கோடி என்றவர்கள் தற்போது வெறும் 14,000 கோடி மட்டுமே என்கிறார்கள்.   இது தமிழகத்தில் ஒரு வருடத்திய TASMAC சாராய விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் பாதி.  அதிலும் கள்ளப் பணம் என்று பார்த்தால் இன்னமும் குறையும்.  இதைப் பிரித்துக் கொடுத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கப் போவது என்ன தெரியுமா?  பிதாமகன் படத்தில் சூர்யா கொடுப்பாரே அது தான்!!

கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி அன்பே வா...... படத்தில் பயன்படுத்திய சோப்பு டப்பா, ஒவ்வொரு குடிமகனுக்கும்............


பணத்தை எப்படி இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள்?  மொரிஷியஸ் நாட்டுக்கு கடத்தி அங்கிருந்து மும்பை பங்கு சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதன் மூலம் உள்ளே வருகிறது.  மொரிஷியஸ் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதால் அங்கிருந்து வரும் பணத்தைப் பற்றி எந்த கேள்வியும் எழுப்பப் பட மாட்டாது என்ற சலுகை வழங்கப் பட்டுள்ளது!!

 பணத்தை எப்படித்தான் மீட்பது?

கறுப்புப் பணத்தில் இரண்டு வகை.  ஒன்று நேர்மையாக சம்பாதிக்கப் பட்டு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது. இரண்டாவது, அந்த பணமே சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஈட்டப் பட்டது.  இது எந்த வகையாய் இருந்தாலும் யார் எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எந்தத் தகவலும் இல்லாத பட்சத்தில் நேரிடையாக வங்கியை நாட முடியாது.  [இதிலும் கூட, அமரிக்க அரசு சிலருடைய கணக்குகளை கேட்டுப் பெற்று பணத்தை மீட்டுள்ளதகச் சொல்கிறார்கள்].

நடைமுறையில் என்னதான் செய்தால் பணத்தை மீட்க முடியும்?  முதலில் இந்தியர்கள் இந்தியாவில் வசிப்போர்  மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் [NRI] அனைவரையும் தாங்கள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பணம் வைத்துள்ளோம் என்று முழுத் தகவலையும் இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.  இதனடிப்படையில், இந்த லிஸ்டில் இல்லாத அத்தனை கணக்குகளில் உள்ள பணம் அனைத்தும் கறுப்பு பணமே என்று சொல்லி அதை திருப்பித் தர கோர முடியும், அதற்கான வழிமுறைகளை ஐக்கிய நாடுகள் [United Nations] ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மனமிருந்தால் மார்க்க பந்து..........   இல்லையில்லை.......... மார்க்கமுண்டு.   மனது வைப்பார்களா?

Saturday, November 1, 2014

கத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ

கத்தி படம் வெளிவருமா வராதா என்று மாதக்கணக்கில் ஊடகங்களில் விவாதிக்கப் பட்டு அதன் மூலமே படத்தின் பெயர் பிரபலமாகிவிட்டிருந்தது.  இறுதியில் மம்மிக்கு தொலைகாட்சி உரிமை கொடுக்கப் பட்டதால் படம் வெளியாகும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டும் அடுத்த நாளே படம் ரிலீசும் ஆனது.  ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸுக்கு தலைவலி தான் தீர்ந்தபாடில்லை!!  படத்தின் கதை என்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.  இவரை கதாரிசியராகப் போட்டு எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டதாகக் கோர்ட்டு படி ஏறியிருக்கிறார்.   கதைக்கு சன்மானமாக ஏதாவது கொடுத்தாரா என்றால், "இந்த ஒன்னறை வருஷத்தில் நாலே நாலு இட்லி. ஒரு டீ அவ்வளவுதான் வாங்கிக்கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூரு ரூபாய் மட்டும் கொடுத்தார்.  அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார்." என்று வேதனையோடு வெதும்புகிறார்.

மீஞ்சூர் கோபி

கதை இவருடையது என்றால் காட்சிகளை வேறு ஆங்கிலப் படங்களில் இருந்து முருகதாஸ் களவாடியிருப்பதாக இணையங்களில் தகவல்கள் உலவுகின்றன.

காட்சிக்கு காட்சி அடிசிருக்காருய்யா..........!!
ஆத்தீ .........பாடல்.


இது மட்டுமல்ல, படத்தில் மின் விளக்கை ஆன் செய்தும், ஆ ஃப் செய்தும் வில்லன்களைப் பந்தாடும் காட்சியும் அப்பட்டமான காப்பியம்.முருகதாஸுக்கு இந்த வேலைகள் புதிதல்ல.  ஆனால், கதையின் உரிமையாளர் கோபிக்கு தரவேண்டிய இடத்தை கொடுத்திருந்தால் அது வாழ்வில் அவருக்கு ஒரு திருப்பு முனையாகக் கூட இருந்திருக்கும்.  கீழ்க் கோர்டில் வழக்கை சரியாக எடுத்துரைக்கத படியால் தள்ளுபடியாகி தற்போது உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.  இதுபோன்ற வழக்குகள் வருடக் கணக்கில் இழுத்தடிக்கும், பத்து வருடங்கள் கூட ஆகலாம், இறுதியில் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வரக்கூடும்.  மலையைத் தோண்டி எலியைப் பிடித்த கதைதான், போட்ட முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்காது.  எனினும், எனக்கு பணம் இரண்டாம் பட்சம் கதை என்னுடையது தான் பெயர் கிடைத்திருந்தால் அதுவே போதும் என்கிறார்.

தங்கள் கதை களவாடப் பட்டு இந்தியா போன்ற நாடுகளில் படமாவது குறித்து வெள்ளைக்கார பயலுவ ஒருபோதும் கவலைப் பட மாட்டானுங்க, பலமுறை அது தெரியாமல் கூட போகலாம்.  ஆனா நம்மூரில் உள்ள ஒரு அறிமுக படைப்பாளிக்கு அது பெரும் மனவலியாக இருக்கிறது.  முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ தெரியவில்லை.................


மீஞ்சூர் கோபி என்பவர்