Saturday, December 20, 2014

பகவத் கீதையை தேசிய நூலாக்கலாமா? சோ இராமஸ்வாமிக்கு பதில்.

பத்திரிகையாளர் திரு.சோ இராமஸ்வாமி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில், 17-12-14 தேதியிட்ட அவரது துக்ளக் வார இதழில் "சுஷ்மா ஸ்வராஜ், ‘பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருப்பது உள்ளிட்டவை குறித்து  அவர் வெளியிட்டுள்ள தலையங்கத்தைப் பகிர்ந்துள்ளார். 

துக்ளக் தலையங்கம் (17-12-14) வாசிக்க: சுட்டி

அவரது தலையங்கத்தில் இது பற்றி முக்கியமான கருத்துகள்:

 ‘பகவத் கீதை ஒரு மதச்சார்பற்ற நூல்’ என்று சிலர் வாதிடுகிறார்கள். இது, ஏற்கவே முடியாத வாதம்.

கிருஷ்ணரின் அல்லது விஷ்ணுவின் மேன்மையை விளக்குகிற நூலை முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ எப்படி ஏற்பார்கள்? 

இந்த கருத்துக்கள் கருத்துக்கள் சரிதானா என்பதை அலசுவதே இந்த பதிவு.


பகவத் கீதையை பா.ஜ.க வில் எத்தனை பேருக்கு ஆழமாகத் தெரியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. திருவாளர் சோ அவர்களுக்கும் ஒன்னும் தெரியாது என்பதே வெகுநாட்களுக்கு முன்னர் நான் அறிந்து கொண்ட உண்மை. இன்னொரு பக்கம் பகவத் கீதையை புரிந்து கொள்ள வெறும் சமஸ்க்ருதம் மட்டும் தெரிந்தால் போதும், சோ வுக்கு அம்மொழி மிக நன்றாகத் தெரியும் ஆகையால் அவருக்கு பகவத் கீதையைப் பற்றி பேச எழுத தகுதி இருப்பதாகப் பலர் நினைக்கக் கூடும், அது சரியா? உதாரணத்துக்கு ஆங்கிலம் பிரமாதமாகத் தெரிந்தவனை அழைத்து வந்து ஆங்கிலத்தில் மெடிக்கல், எஞ்சினியரிங், கம்பியூட்டர் சயன்ஸ் புத்தகங்களைக் கொடுத்து படித்து விளக்கம் கொடு என்றால் கொடுத்து விடுவானா? மாட்டான். காரணம் மொழி வேறு விஞ்ஞானம் வேறு.   ஒரு துறையைப் பற்றி பேச அந்த துறையில் பாண்டித்தியம் [expertise] பெற்றிருக்க வேண்டும்.  ஒரு மொழியை தெரியும் என்பதாலேயே அதில் எழுதப் பட்டுள்ள அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்பது அறியாமை.   ஒரு வேலை நாடறிந்த நகைச்சுவை நடிகன் பிரமாதமா எழுதுவார், பேசுவார் என்று அவரிடம் மேற்கண்ட அதே புத்தகங்களை கொடுத்து விளக்கச் சொன்னால் என்ன செய்வார்? அவரும் ஞே...... என்று தான் விழிப்பார். இங்கே இது தான் நடந்து கொண்டிருக்கிறது. 

பா.ஜ.க வினருக்கு மட்டுமல்ல, உயர்திரு சோ இராமசாமிக்கும் விஞ்ஞான ரீதியாக பகவத் கீதையைத் தெரியாது. ஏனென்றால் இவர்கள் யாரும் பகவத் கீதை சொன்னபடி அதைக் கற்றவர்கள் இல்லை. தகுதியுடைய குருவை சரணடைந்து, சேவை செய்து, அவரிடம் கேள்விகள் கேட்டு இந்த விஞ்ஞானத்தைக் கற்றுக் கொள்வாயாக என்று கீதையில் சொல்லப் பட்டுள்ளது.  இவர் அதைப் பின்பற்றியாகத் தெரியவில்லை.  இவருக்கு சமஸ்க்ரிதம் தெரியும், இவரே படித்தார், இவருக்கு என்ன தோன்றியதோ அதை அதற்ககு வியாக்யனமாக கொடுக்கிறார். "சர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று சொன்னவரையே ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமானவர் என்று சொல்லியிருப்பதே இதற்குச் சான்று.  

sarva-dharman parityajya 
mam ekam saranam vraja 
aham tvam sarva-papebhyo 
moksayisyami ma sucah 
BG-18.66

TRANSLATION
Abandon all varieties of religion and just surrender unto Me. I shall deliver you from all sinful reaction. Do not fear.


"சர்வ யோனிசு கவுந்தேயா" என்று எல்லா உயிர்களுக்கும் தந்தை நானே என்று பகவான் சொல்கிறார், என்றால் மத பாகுபாடின்றி அனைவரையும் படைத்தவர் அவர் அல்லவா? அவரை குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே சொந்தம் என்பது அறியாமை அல்லவா?  
sarva-yonisu kaunteya 
murtayah sambhavanti yah 
tasam brahma mahad yonir 
aham bija-pradah pita-BG 14.4
 
TRANSLATION It should be understood that all species of life, O son of Kunti, are made possible by birth in this material nature, and that I am the seed-giving father.
 


ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை வணங்கியே தீர வேண்டுமென்றா சொல்கிறார்? நான் உண்மையைச் சொல்லிவிட்டேன், அதை ஏற்பதும் மறுப்பதும் உனது விருப்பம் என்றல்லவா சொன்னார்? அப்புறம் கீதை எங்கே வற்புறுத்துகிறது?  

 iti te jñānam ākhyātaḿ
guhyād guhyataraḿ mayā
                                                           vimṛśyaitad aśeṣeṇa
                                                         yathecchasi tathā kuru BG-18.63

Thus I have explained to you knowledge still more confidential. Deliberate on this fully, and then do what you wish to do.

இதையெல்லாம் மெத்தப் படித்த அறிவாளி சோ ஏன் இந்த தவறைச் செய்ய வேண்டும்? முன்னர் சொன்னபடி வெறும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர் கணினி புத்தகத்தைப் படித்தால், விண்டோஸ் என்பது ஜன்னல் என்று, ஆப்பிள் ஒரு பழம் என்றும், வைரஸ் ஒரு நோய்க் கிருமி என்றும்........ வியாக்யானம் தருவார். இப்போது சோ அவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.  


இறுதியாக:

பகவத் கீதை இந்துக்களுக்கோ, இந்தியர்களுக்கோ மட்டுமல்ல மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானது.

ஸ்ரீ கிருஷ்ணரே கடவுள், அவரே இந்த பிரபஞ்சத்தை படைத்து, காத்து அழிக்கிறார். [இது பொய் என்றால் அதை பைபிள், குரானை வைத்து நிறுவலாம்]

ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும் என்று பகவத் கீதை கட்டாயப் படுத்தவில்லை.

பகவத் கீதை மதச் சார்பற்ற நூல், ஏனென்றால் எல்லா மதங்களையும் விட்டொழித்து என்னை மட்டுமே சரணடைவாக என்கிறார் பகவான், விட்டொழிக்கும் லிஸ்டில் இந்து மதமும் அடக்கம்.

 
குருவை நாடி சரணடைந்து, சேவை செய்து பகவத் கீதையை பயில வேண்டும். அப்படி பயிலாதவர் பகவத் கீதை இதைத்தான் சொல்கிறது அதைத்தான் சொல்கிறது என்று சொல்லும் தகுதியை இழக்கிறார். தகுதிக்கு மீறிய செயலை யாரும் செய்யக் கூடாது, துக்ளக் ஆசிரியர் சோ வும் இதற்க்கு விதி விலக்கல்ல.
 
 

Monday, December 15, 2014

சாவி திருடும் காட்சியின் ஒரிஜினல் ஸீன்