Sunday, November 25, 2012

கல்யாணம் பண்ணிக்க வேற இடமே இல்லீங்க அதான்...... இங்க வச்சிகிட்டோம்!!


மனிதனுக்கு வினோதமான ஆசைகள் வருவதுண்டு.  சிலர் தாங்கள் கல்யாணம் செய்யும் இடத்தை வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  எப்படி இவங்களுக்கு இப்படியெல்லாம் ஐடியா வருது!! இதெல்லாம் ரூம் போட்டு யோசிச்சா கூட நமக்கு வராதே என்று தோன்றுகிறது.  பாருங்கள்!!காலில் கயிற்றைக் கட்டிக் கொண்டு தலைகீழாகக் குதிக்கும் பங்கி ஜம்பிங் செய்யும்போது நடந்த திருமணம்......

கடலின் நீருக்கடியில் நடந்த திருமணம் ............

இராட்சத பறக்கும் பலூனில் நடந்த திருமணம்.....
கார்பொரே ஷன் குப்பை கொட்டும் இடத்தில் நடந்த திருமணம்.  [தங்க முடியலைடா சாமி!!]
நடுக்காட்டில் முதுகில் அலகு குத்திக் கொண்டு தொங்கிய படியே டும்....டும்.டும்....... [அடப் பாவிங்களா வலி உசிரு போயிடுமேடா!!]

பறக்கும் விமானத்தின் மேலே நின்றபடி....  கரணம் தப்பினால்......??

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மேலே திருமணம்.

 எடையற்ற நிலையில் [ஜீரோ கிரவிடி] திருமணம்.
 எடையற்ற நிலை [ஜீரோ கிரவிடி] என்றால் எங்கே இருக்கும்?  நமது பதிவைப் பார்க்க சொடுக்கவும்.

குருவிக்கூடு மாதிரி செய்து அங்கே மோதிரம் மாற்றிய ஜோடி.
கயிற்றில் தொங்கிய படியே வாழ்க்கையைத் துவங்கிய ஜோடி.  இவங்க இருவருமே கயிற்றில் தொங்கிய படி [பெயிண்டரைப் போல] உயரமான கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகளைத் துடைக்கும் பணியில் இருப்பவர்களாம்.
டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா என கேட்டபடி காதலியைக் கரம்பிடிக்கிறார்.
பைலட்டையே புரோகிதராக்கிட்டீங்களாடா......

வால்மார்ட் கடைக்குள்ளே..... ஒருவேளை இருவரும் ஷாப்பிங் வந்தபோது மீட் பண்ணி காதலில் விழுந்திருப்பார்களோ!!

இதுதான் டாப்பு.... இமயமலை உச்சியில நடந்த இந்தியத் திருமணம்.

 வாழ்க பல்லாண்டு!!

10 comments :

 1. இப்படியெல்லாம் பதிவு போட்டா எங்க மூளையை எப்படி வளத்துக்குறது?

  நாங்களும் புத்திசாலி ஆகணும்ல.
  கொஞ்சம் லூசுத்தனமா பதிவு போட்டா எல்லாரும் வருவம்ல.!
  :))))))

  ReplyDelete
  Replies
  1. அதான் வந்திட்டீங்கல்ல, அப்புறமென்ன? லூசு என்ன கணக்கு, அது எங்க வேணுமின்னாலும் மேஞ்சிகிட்டு கிடக்கும். இதோ இந்த மாதிரி சூப்பர் பதிவுக்கு வந்திருக்கு, அப்புறம் லூசுத் தனமான பதிவு இருந்தா அங்கேயும் போகும், பாத்து போங்க!!

   Delete
  2. \\இப்படியெல்லாம் பதிவு போட்டா எங்க மூளையை எப்படி வளத்துக்குறது?\\ அடடா மூளை வளர்ச்சியில்லாத புள்ளை, அதோட புரோபைல் படத்த பார்த்தப்பவே நினைச்சேன்.......... ஏழுமலை தேவுட யார் பெத்த புள்ளையோ கொஞ்சம் நல்ல வழி காட்டு.

   Delete
 2. இதில் மூன்று அறிந்துள்ளேன்... மற்றவையெல்லாம் வியப்பு... எப்படியோ நல்லா வாழட்டும்...

  நன்றி...

  ReplyDelete
 3. வினோதங்கள் வியப்பா இருக்கு! வித்தியாசமா ரிஸ்க் எடுத்துகிட்ட அவங்களை வாழ்த்திடுவோம்!

  ReplyDelete
 4. அடுத்து முதல் இரவிலும் கொஞ்சம் புதுமையை காட்டட்டும்

  ReplyDelete
  Replies
  1. @Ibrahim Sheikmohamed

   கண்ணுக்குத் தெரிஞ்சே செய்வதற்கு எப்படி எப்படியெல்லாமோ இவங்களுக்கு ஐடியா ஓடியிருக்கு. அது கதவைச் சாத்திக்கிட்டு பண்றது........ அய்யய்யோ நினைக்கவே பயங்கரமா இருக்கு!! ஹா.....ஹா.....ஹா.....ஹா..... Thanks for coming Ibrahim Sheikmohamed!!

   Delete
 5. ஹா ஹா ஹா !!!

  இதெல்லாம் ஆடம்பர வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே வளர்ந்து வருகிறது, கல்யாணம் மண்டபத்தில் என்றால், ரிசப்சன், கடலில்/கப்பலில் என்று கலைகட்டுகிறது.

  ஹீ ஹீ ஹீ ! நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 6. ஒரு வேளை கல்யாணம் என்பது இதை விட ஆபத்தானது என்பதை விளக்குவதற்காக இந்த முயற்சியோ? ஹி ஹி

  ReplyDelete