Friday, April 25, 2014

தமிழகத்தில் 73% வாக்குப் பதிவு, சூட்சுமம் என்ன?

வணக்கம் மக்கள்ஸ்!!


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 73% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.  வழக்கமா 58% அல்லது 65% என்று தான் வாக்குகள் பதிவு ஆகும்.  தற்போது ஏன் இந்த மாற்றம்?  தேர்தலுக்கு முன்னர் பணம் யார் எடுத்துச் சென்றாலும் விரட்டி விரட்டி கண்டுபிடித்து பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன் கடைசி ரெண்டு நாள் எந்த கெடுபிடியும் காட்டவில்லையாம்!!  அந்த ரெண்டு நாட்களில் இரவு மின்வெட்டு வேறு.  போக வேண்டிய தொகை போய்ச் சேரவேண்டியவங்களுக்கு போயிடுச்சு, அவங்க வந்து தங்களது "ஜனநாயக" கடமையை ஆத்து ......... ஆத்து ......... என்று ஆற்றிவிட்டார்கள்.

நன்றி: தினமலர்
 ஓட்டு போடுறேன்னு காசு வாங்குபவர்கள் மாற்றி ஓட்டுப் போடுவதில்லை.  அதற்கு காரணம் அவர்கள் நேர்மையானவர்கள், மனசாட்சிக்குப் பயந்தவர்கள், அரசியவாதிங்க மாதிரி சொல்வது ஒன்று செய்வது வேறு என்று செயல்படத் தெரியாத அப்பிராணிகள் என்று இது நாள் வரை தப்புக் கணக்கு போட்டிருந்தேன்.  அதற்க்கு காரணமே வேறு என்று நண்பர் ஒருத்தர் சொல்கிறார்!!

முகநூலில் பார்த்தது:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பணம் வாங்கியவர்கள் ஏன் வாக்களிப்பதில் ஏமாற்றுவதில்லை ? இதன் சைக்காலஜி சுவையானது . நேர்மைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை . ஒரு சிஸ்டத்தை குலைக்க யாரும் விரும்புவதில்லை . காசு வாங்கிவிட்டு மாற்றி வாக்களித்தால் , காசு கொடுப்பது என்ற சிஸ்டமே அழிந்து விடும் அல்லவா ? இந்த முறை அழிவதை எதிர்கட்சியும் விரும்புவதில்லை . அதிமுக எதிர்கட்சியாக இருந்தபோதும் அவர்கள் மொண்ணையாகவை எதிர்ப்பு தெரிவித்தனர் . இப்ப திமுகவும் ஃபார்மலாக எதிர்க்கும் .
 ++++++++++++++++++++++++++++++++


ஆஹா........  நம்மாளுங்களும் வெவரமாத்தான்யா இருக்கிறாய்ங்க!!  ஆனா, எல்லாமே திருமங்கலம்  ஆயிபோச்சே..............!!

பத்திரிகைகளில் பார்த்த வேடிக்கையான சில செய்திகள்:

தேர்தல் பிரச்சாரத்தின் போது, குஷ்பு ஒரு உண்மையை போட்டு உடைச்சிருக்காங்க.

"பித்தலாட்டத்தில் திமுகவை மிஞ்சிவிட்டது அதிமுக " என்று பேசியிருக்கிறார்.   இவர் என்னதான் சொல்ல வருகிறார்?  பித்தலாட்டம் செய்வதில் திமுக சாம்பியன்,  அப்பேர்பட்டவர்களையே அதிமுக மிஞ்சி விட்டது என்கிறாரா?  ஆக மொத்தத்தில் திமுக பித்தலாட்டம் செய்கிறது என்பது மட்டும் இவரது பேச்சில் இருந்து தெரிகிறது!!  

விஜயகாந்த் ஓட்டுப் போடத் தடுமாறியதாகவும் அவரது மனைவி உதவியதாகவும் செய்தி!!  ஓட்டுப் போடவே தடுமாற்றமா?  ஒன்னும் புரியலை.  எங்கேயோ இடிக்குதே..........


நல்ல வேலையா ஆள்காட்டி விரலில் மை வச்சாங்க, நடுவிரலில் வச்சிருந்தா மேலே இருக்கும் படம் எந்த மாதிரி வந்திருக்கும்?  நம்ம பொழப்பு நாறியிருக்கும் போலிருக்கே!!

ஓகே...... மக்கள்ஸ், இப்போ எனக்கு ஒரு டவுட்டு .....  இது ரொம்ப நாளைய டவுட்டு......

வலதுசாரி, இடதுசாரி என்று கட்சிகளைச் சொல்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன?  தெரிந்தால் சொல்லுங்களேன்!!

Wednesday, April 16, 2014

லாட்ஜில் "பலான தொழிலை" ஒழிக்க மொக்கை பதிவர்கள் செய்த முயற்சி .........

வணக்கம் மக்கள்ஸ்!!

தகுஸ்தான் நாடு முழுவதும் பலான தொழில் லாட்ஜ்களில் விமர்சையாக நடந்து வந்தது.  இதைத் தடுக்க அந்நாட்டு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.  அதைப் பார்த்து கொதித்தெழுந்த சில சமூக சிந்தனையுள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று திரண்டு போராட திட்டம் தீட்டினார்கள்.
அந்தப் பதிவர்களும் அவர்களது வலைப்பூக்களும் பின்வருமாறு:

வலைப்பூ 1: "மிளகு இரசம் ஊற்றும் இடமே"
பதிவர்: பிதற்றல் அரசு [ஆங்கிலப் பெயர் Charcoal Wagon] 
இவரது வலைப்பூவின் பஞ்ச் டயலாக்: "மூக்கு சிந்தவே மாட்டீர்களா"
   இவர் தான் போராட்டக் குழுவின் தலைவர். 

வலைப்பூ 2: சீ .....போ..... கழுதை [Go Donkey-கோடாங்கி]
பதிவர்-மக்குபால் கள்வன் [Mac Paul Kelvin]
வசிப்பிடம்: Scarborough, Ontario, Canada.

இவர் தான் போராட்டக் குழுவின் துணைத் தலைவர், தளபதின்னு கூட சொல்லலாம்.  [சார்கோல்வாகன் மூஞ்சிக்கு இவரை விட்டா வேற எந்த இளிச்சவா பய கிடைப்பான்??!!  ஹி .....ஹி .....ஹி .....]

இவர்கள் இருவரும் சேர்ந்து போராட்டக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வேளையில் களமிறங்கினார்.   தமிழ் மொழிப் புலமை, ஆர்வம், கடைசி வரை போராடும் குணம் இதெல்லாம் இருக்கும்படியான ஒரு ஆளைப் பிடிச்சு உறுப்பினரா போடணும்னு யோசிச்ச இவங்களுக்கு ஞாபகம் வந்தவர் திருவாளர் வௌவால்.

பதிவர் 3. வௌவால்.
இவரது வலைப்பூ:   "தலைகீழா தூக்கு மாட்டிகிட்டு சாவு" [ஐயையோ இது சாபமில்லைங்க, வலைப்பூ பேரே அதான்!!  ஹி .....ஹி .....ஹி .....]

வௌவால் அவர்களை போனில் தொடர்பு கொண்டார் சார்கோல்வாகன்.  "நண்பரே ஒரு உதவி வேண்டும், எங்கே இருக்கீங்க?" 

மறுமுனையில், " சார் நான் பாண்டிச்சேரி போய் சரக்கடிச்சிட்டு வரும் வழியில் ஒரு ஊர்ல மட்டையாகிப் போய் கிடக்கிறேன் சார்."  என்று ஹீனஸ்வரத்தில் பதில் வந்தது.

"ஏன் என்ன ஆச்சு?"

"ஒரு வாரமா திருக்குறளைப் படிச்சிட்டு, கள்ளுண்ணாமை தலைப்பில் ஒரு போஸ்டு ரெடி பண்ணினேன்.  ரொம்ப டயர்டாயிடுச்சு.  அதான் இங்கே வந்து கொஞ்சம் ஏத்திகிட்டு போகலாம்னு....  ஹி ....ஹி ....ஹி ...."

"அதுசரி, அடுத்த வாரம் தகுஸ்தான் போகணும், நீங்க பிஸியா?"

"அப்படியா, இப்பத்தான் திருக்குறளில் கொல்லாமை அதிகாரம் பத்தி எழுதி பதிவு ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்.  அது கொஞ்சம் முடிக்க முடியலை"

"ஏன் என்ன ஆச்சு?"

"ஒன்னுமில்ல, எழுதும் போது நாய் லெக் பீஸ் நாலாச்சும் இருக்கனும், அது தீர்ந்து போச்சு, நாய் புடிக்கிற ஆளுங்க லீவுல போயிட்டாங்களாம்.  நாய் பிரியாணி திரும்ப ரெடியாக ஒரு வாரம் ஆகும்ன்னு கடைக்காரன்  சொல்லிட்டான், அதான்!!"

நீ அடிக்கடி அவ் .......அவ் .... அப்படின்னு எதுக்கு கத்துறேன்னு இப்பத்தான்யா புரியுது என்று மனசுக்குள் நினைத்த சார்கோல்வாகன் தொடர்ந்தார். "அதுசரி, இன்னமும் வேற ஏதாவது வேலை பாக்கி இருக்கா?"

அதிகமா ஒண்ணுமில்லை, "பிறன்மனை நோக்காமை" பத்தி வள்ளுவர் சொல்வதை ஒரு போஸ்டா போடலாம்னு இருக்கேன்.  அதெல்லாம் காலைல மட்டும்தான் எழுத முடியும்."

"ஏன் அப்படி?"

"அப்பத்தான் எங்க ஏரியாவுக்கு தண்ணீர் லாரி வரும், தண்ணீர் பிடிக்க வர கிழவிங்க வருவாங்க, சேலை விலகும், அவங்க இடுப்பை பார்த்துகிட்டே எழுதுவேன்.  எழுத்து...... கழுதை.......  சீ ........கவிதை....கவிதை..... வந்து அருவியா கொட்டும்.   அதான்.  ஹி ........  ஹி ........  ஹி ........ "


 "தமிழ் கலாசாரத்தை திருவள்ளுவர் வழியில் நின்று காப்பாத்தும் ஒரே ஆள் நீதான்யா, நீ வந்தாத்தான் நம்ம போராட்டம் ஜெயிக்கும், வந்துடறீங்களா?"


"போராட்டத்துக்கு  நான் கண்டிப்பா வந்துடறேன் கவலைப் படாதீங்க, ஆனா ஒரு கண்டிஷன்" என்று நிறுத்தினார் வௌவால்.

"என்னது?"

"எனக்கு ஜால்ரா அடிக்க ஒரு ஆள் வேணும்?"

"ஐயையோ , என்னது என்னோட தொழிலையே மாத்துறீங்க......??!!  அதெல்லாம் என்னால முடியாது......"  பதை பதைக்கிறார் சார்கோல்வாகன்.

"ஒய்....கவலைப் படாதீரும்.........  அதெல்லாம் நான் பாத்துக்கறேன், ஆளை நானே கூட்டியாந்துடறேன், உமக்கு தகவல் மட்டும் சொன்னேன்.  சரி கண்டிப்பா வந்துடறேன்" என்ற உறுதிமொழியோடு போனை கட் செய்தார் வௌவால்.

இதையடுத்து வாய்ச் சண்டை போடுவதில் கில்லாடியான ஒரு பதிவரை யோசித்தார் சார்கோல்வாகன்.  அவருக்கு உடனடியாக ஞாபகம் வந்தவர் தான் நான்காவது போராளி!!

பதிவர் 4. பெயர்: கொலாப்ஸ் [மேனகா-சஞ்சய் காந்தியின் மகன் பெயரே தான் இவர் பெயர்]
வலைப்பூ:  கொலாப்ஸ் ப்ளீஸ்.......Collapse Please
வசிப்பிடம்: St Loius, Missourri, USA

சார்கோல்வாகன் கொலாப்ஸ்அவர்களைத் தொடர்பு கொள்கிறார்.  ரிங் டோன் கேட்டதும் யார்டா இந்த நேரத்தில என்று கொலாப்ஸ் பார்க்கிறார், சார்கோல்வாகன் என்று தெரிந்ததும் குஷியாகிறார்.  "ஹாய் மச்சான், என்ன மேட்டர் இந்த அர்த்த இராத்திரியில போனு?"

"சாரி, இங்க பகலுன்னா அங்க நைட்டுன்னு மறந்து போச்சு" என்று வருத்தம் தெரிவித்த மாமூல் மாமா விஷயத்தை தெரிவிக்கிறார், போராட்டத்திற்கு வர அவரும் சம்மதிக்கிறார்.

விபச்சாரத்தால் வரும் கெடுதியை உணர்த்த ஒரு டாக்டர் இருந்தால் பரவாயில்லையே என எண்ணிய சார்கோல்வாகன், அமரிக்காவில் தங்கியிருக்கும் Dr. பிரகாஷை [பதிவர் 5] அழைக்கிறார்.  அதற்க்கு, "நிம்பள் கூப்பிட்டான், நம்பள் வர்றான்" என்று மறுப்பே சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொள்கிறார்.  தமிழைக் காப்பாற்ற இந்த மாதிரி தெளிவா தமிழ் பேசறவந்தான்யா வேணும் என மகிழ்கிறார் சார்கோல்வாகன்.

இந்த ஐந்து பேரும் நல்ல நாள் பார்த்து தகுஸ்தான் பயணமானார்கள்.  அங்கே விசாரித்து போராட்டத்தை ஆரம்பிக்க கனஜோராக "தொழில்" நடக்கும் பிரபலமான ஒரு லாட்ஜை தேர்ந்தெடுத்தனர்.

அதன் முன்னர் நின்று கொண்டு கோஷம் போட்டனர்.  லாட்ஜில் இருந்து கேசுகள் ஜன்னல் ஓரத்தில் நின்று என்னாடா இது என்று புரியாமல் திரு....திரு.. என விழித்த வண்ணம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

லாட்ஜில் தொழில் நடத்தும் அம்மா கொஞ்சம் விவரமானவர்.  போராட்டம் அவருக்கு புதிதல்ல.  அனைத்தையும் சமாளித்தவர்.  போராடுபவர்களின் வீக்னஸ் என்ன என்று நொடியில் கண்டுபிடித்து தீர்த்து போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்து விடுவார்.  உடனடியாக ஐந்து பதிவர்களையும் உள்ளே அழைத்தார்.   முதலில் Dr .பிரகாஷை அவரிடமுள்ள ஐட்டம் ஒருத்தியை அழைத்து பேச விட்டார்.  அவள், "நிம்பள் நம்பள்கிட்ட வர்றான், மஜா பண்றான், கம்முனு போறான்" என்று பேச ஆரம்பித்தாள்.  அவள் பேசுவது மற்ற நான்கு பேருக்கும் சுத்தமாகப் புரியவில்லை.   ஆனால் Dr .பிரகாஷுக்கு மட்டும் தெளிவாகப் புரிந்தது.  இவரும் அவருடன் பேச ஆரம்பித்தார், இருவருடைய பாஷையும் அச்சு அசலாக ஒன்றாக இருந்தது.  ஒரு விக்கட்டு டவுன்.


அடுத்து ஒரு அயிட்டத்தை கூப்பிட்டு வௌவாலை ஆள் எப்படிப் பட்டவர் என்று நோட்டமிடச் சொன்னார்.  அந்தப் பெண் பார்த்துவிட்டு,   "He is not ugly" என்றார்.  இது வௌவ்வாலின் காதில் விழுந்தது.  உடனே ஆள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தார்.   சார்கோல்வாகனும், மக்குபால் கள்வனும் ஒன்றும் புரியாமல் " என்ன ஆயிற்று?" என்று கேட்டனர்.

"அவ என்னை அழகான வாலிபன்னு சொல்லிட்டாய்யா!!"  என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

"அப்படி எப்ப சொன்னா?"

உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?  ரெண்டு நெகடிவ் சேர்ந்தா பாசிடிவ் ஆகும்யா!!  not ஒரு நெகடிவ், ugly இன்னொரு நெகடிவ்.  not ugly என்றால் அழகான மன்மதராசான்னு தானே அர்த்தம்?!!  இதைக் கேட்ட இருவரும் திகைத்துப் போய் நிற்க மீண்டும் அந்த ஆயிட்டத்திடம் ஓடினார் வௌவ்வால்.

அவர் முன் சென்றதும் சற்று மூச்சிரைக்க நின்றார்.  இன்னொருத்தனையும் கவிழ்திடலாம் என்ற மகிழ்ச்சியில் அந்தப் பெண் கையை handshake செய்ய நீட்டினார், பதிலுக்கு வௌவ்வாலும் நீட்டினார்.  அப்போது அவர் கையைப் பார்த்த அந்தப் பெண் தலை சுற்றி மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.  இதைப் பார்த்த ஓனரம்மா அங்கே ஓடி வந்தார்.

"என்னய்யா ஆச்சு?" என்று அவர் கத்த, விஷயத்தை சொன்னார் பதிவர்.

"அப்படியா, எங்கே உம்ம கையை காட்டும்" என்று பார்த்தார்.  அவருக்கே தலை கிறுகிறுக்க ஆரம்பிக்க ஒரு வழியாய் சுதாரித்துக் கொண்டார்.

"யோவ், என்னைய்யா இது கையில ஒரு ரேகையைக் கூடக் காணோம்?  சுவடே தெரியாம அழிஞ்சு போயிருக்கே, இது எப்படிய்யா சாத்தியம்?"  என்று அவர் நடுங்கும் குரலில் கேட்கிறார்.

" நான் பிசின் ரசிகன்" என்று மேட்டரை புட்டு புட்டு வைக்கிறார் வௌவ்ஸ்.

இதைக் கேட்ட அந்தம்மா, "ஏய் இந்த பார்டிகிட்ட புதுசா வந்திருக்கும் பிசின் போட்டோ ஒன்னு கையில குடுத்து ஒரு ரூமுக்குள்ள தள்ளி கதவை, சாத்துங்கடி, மேட்டர் குளோஸ்" என்று அனுப்பி வைக்கிறார்.  இரண்டாவது விக்கெட் காலி.

பாக்கி மூணு பேரு.  அதில நம்ம "கொலாப்ஸ் ப்ளீஸ்........"  பார்ட்டி ரொம்பவும் சவுண்டு குடுக்க ஆரம்பித்தார்.  கண்ணா பின்னாவென்று திட்ட ஆரம்பித்தார்.  தலைவி பார்த்தார், இவரை வழக்கமான முறையில் டீல் பண்ண முடியாது என்பது மட்டும் புரிந்தது.  என்ன செய்யலாம் என்று யோசித்தார்.  பேசாமல் இருந்தால் ஆள் சைலண்டாகி விடுவாரோ என நினைத்தார்.  ஆனால் போகப் போக ஆள் இன்னும் மோசமாகவும் சப்தமாகவும் வசவுகளை அள்ளி வீச ஆரம்பித்தார்.  எதற்கும் அடங்குவது போலத் தெரியவில்லை. தற்போது தலைவிக்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது.  கொலப்ஸ் ப்ளீசைப் பார்த்து பதிலுக்கு கண்டமேனிக்குத் திட்ட ஆரம்பித்தார்.

"போடா லூசு, மெண்டல், காயிதே.........கஸ்மாலம்...... உன் டங்குவாரை அறுத்திடுவேன்டா........... போடா..........ஈனம் ....மானம் இல்லாதாவனே........" என்று வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார். இதைக் கேட்டு கொலாப்ஸ் பொங்குவார் என்று அனைவரும் எதிர்பார்க்க, அவர் முகத்திலோ கோபம் குறைய ஆரம்பித்தது.  ஒரு கட்டத்தில் சந்தோஷமும் தெரிய ஆரம்பித்தது.  அவர் மேலும் திட்டுவதைத் தொடர, இவர் லைட்டாக சிரிக்கவும் ஆரம்பித்தார்.

"இதான், இதான் எனக்கு வேணும்னேன்.  இது போதும் இன்னும் மூணு மாசத்தை இதை வச்சே ஓட்டிடுவேன்.  இப்போ நான் சந்தோஷமா போறேன், நீ என்ன வேணுமின்னாலும் நடத்திகிட்டு போங்க, வராட்டா........ஹி ...ஹி ...ஹி ..." என்று அடுத்த பிளைட் பிடிக்க ஓடினார் கொலாப்ஸ் பிளீஸ்..........  அடக் கன்றாவியே, இப்படியுமா ஒரு வியாதிஇருக்கும், இது மாதிரி எங்கேயுமே பார்த்ததேயில்லையே என்று  சார்கோல்வாகனும், மக்குபால் கள்வனும் திகைத்து நின்றனர்.

இப்போ இந்த ரெண்டு பேரையும் சரிக்கட்டினா போதும்!!  தலைவி இவர்களை கூப்பிட்டு தனியாகப் பேசினார்.  தன்னிடமுள்ள அயிட்டத்தில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  ஆனால் மக்குபால் கள்வன் மறுத்தார்.  என்ன காரணம்?

"சகோதரியுடன் புணர்ந்தால் தப்பா ரைட்டான்னு ஒரு புது விஞ்ஞானி கேள்வி கேட்டிருக்காரு.   நான் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கேன்" என்றார் மக்குபால்.  இதைக் கேட்ட லாட்ஜ் தலைவிக்கே கோபம் சுர் .....என்று ஏறியது.  "க்ர்ர்ர்ர்ர்............ தூ............."  என்று மக்குபால் கள்வன் மூஞ்சியிலேயே துப்பினார்.  "நீயெல்லாம் மனுஷனே இல்லாடா......." என்று திட்டித் தீர்த்தார்.

மாமூல் மாமு மட்டும் எதற்கும் அசைய வில்லை.  சரி, முடிவாக என்ன தான் வேண்டும்? எனக் கேட்டார்.

"நீங்கள் தகுஸ்தான் நாட்டின் வட மாநிலங்களில் இருந்து அயிட்டங்களை அழைத்து வந்து தொழில் செய்கிறீர்கள் அல்லவா?"  என்றார் சார்கோல்வாகன்.

"ஆமாம், அங்க தான் சூப்பர் பிகருங்க கிடைக்குது, அதிலென்ன தப்பு?" புரியாமல் கேட்டார் தலைவி.

"அது தான் தப்பே, அதை நிறுத்த வேண்டும்"

"யோவ், என்ன என்னோட பிழைப்பில் மண்ணை வாரிப் போடறீங்களா?" வெடித்தார் தலைவி.

"இல்லை"

"அப்போ வேறென்ன?"

"நீங்க தொழில் பண்ணுங்க, ஆனா உள்ளூர்  பெண்களையே வச்சு தொழில் பண்ணுங்க, அது போதும்"

"அட நாறப் பசங்களா, விபச்சாரம் தப்பு என்பது தானே உங்க கொள்கை, அப்புறம் என்ன உள்ளூரு, வெளியூரு வேண்டிக் கிடக்கு?  தப்புன்னா தப்புன்னு ஸ்டெடியா நிப்பீங்களா, அதை விட்டுட்டு உள்ளூர் காரியை வச்சு தொழில் பண்ணுன்னு சொல்லுவீங்களா?  தப்புன்னு வந்த பின்னாடி எந்த ஊர்க்காரியா இருந்தா உங்களுக்கென்ன?"  பொரிந்து தள்ளினார் தலைவி.

அதுக்கு விளக்கம் கொடுத்தார் சார்கோல்வாகன்.  "விபச்சாரம் தப்புதான், ஆனாலும் அதில் ஈடுபடுபவர்கள், மனிதர்கள் தானே, அவர்களுடைய மனித உரிமை நசுக்கப் படும்போது நாங்க ஓடிவந்து நிப்போம்.  உள்ளூர் காரப் பயலுவ இங்க வந்து மஜா பண்ணும் போது ஆயிட்டத்துகிட்ட பேசிகிட்டே மஜா பண்ணுவாங்க, ஆனா இப்போ உள்ளூர் பாஷை தெரியாதவ  தொழில் செய்யுறா, அவ தகுஸ்தான் நாட்டின் வடமொழியில் பேசுறா,  அது புரியாம இங்கே மஜா பண்ண வரும் உள்ளூர் காரன் தவிக்கிறான், அவன் மனித உரிமை நசுக்கப் படுது.  அதான் அதை  நிலைநாட்ட நாங்க வந்துட்டோம், விபச்சாரம் ஆகாது என்பது தான் எங்க கொள்கை, ஆனாலும் விபச்சாரம் நடக்கும் வரை மனித உரிமை பாதிக்கப் பாட்டால் அதைப் பார்த்து நாங்க பொறுத்துகிட்டு இருக்க மாட்டோம்.  மஜா பண்ணும் ஆயிட்டத்திடம் தாய்மொழியில் பேசுவது ஒருத்தனின் மனித உரிமை, அது பாதிக்கப் படுவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  அதனால ஒழுங்கா உள்ளூர் மொழி தெரிஞ்சவங்களை வச்சு தொழில் பண்ணுங்க.  "


இதைக் கேட்டதும் தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்தார் லாட்ஜுக்கு சொந்தக் காரம்மா!!

Thursday, April 10, 2014

மக்களை பரதேசிகளாக்கும் விஞ்ஞான வளர்ச்சி

வணக்கம் மக்கள்ஸ்!!

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்"- இது தமிழகத்தின் சில அறிவாளி கட்சிகளின் பஞ்ச் டயலாக் என்பது பலருக்கும் தெரிந்ததே. அவன் முன்னேற்றத்துக்கு இவர்கள் ஏதாவது செய்திருப்பார்களா என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது.  மக்களை தெனாலி இராமன் குதிரை மாதிரியே வைத்திருப்பது தான் இவர்களது இராஜ தந்திரமே!!  ஏனெனில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தாலோ பொருளாதார தன்னிறைவு பெற்றாலோ இவர்களால் அரசியல் நடத்த முடியாது.

ஒரு உதாரணத்துக்கு காக்கா கூட்டத்தைப் பார்த்தோம்னா அது எல்லாத்துக்கும் உணவு, இருப்பிடம், துணை, வாரிசுகள் என அனைத்தும் கிடைக்கும்.  நாலு பணக்கார காக்கா, பத்து ஏழை கக்கா,  ரெண்டு பட்டினி கிடக்கும் கக்கா, துணை இல்லாமல் தவிக்கும் காக்கா அதற்குக் காரணம் வசதியின்மை என்றெல்லாம் பார்க்கவே முடியாது.  இத்தனைக்கும் காக்காவுக்கு ஐந்தறிவுதான். ஆனால் மனிதன்  சிந்திக்கத் தெரிந்தவன், ஆறறிவு படைத்தவன், பகுத்தறிவு படைத்தவன் அது.... இது......... என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறான்.  இத்தனை அறிவு இருப்பவன் கஷ்டப் படாமல் சவுகரியாமாக அல்லவா இருக்க வேண்டும்?    ஆனாலும் பிழைப்புக்காக இவன் படும் பாடு காக்கையை விட மோசமாக இருக்கிறதே?  காரணம் என்ன? 

அறிவு இருந்தால் மட்டும் போதாது, அதை சரியாகப் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். மனிதன் அதைச் செய்தானா?

 இன்றைக்கு உலகப் பொருளாதாரம் குறித்து ஒரு காணொளியைப் பார்த்தேன்.  அதில் சில பாயிண்டுகள் நம்மை கிறுகிறுக்க வைத்து விட்டன.  இதோ அவை உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும் வைக்கிறேன்.


உலகில் கிடைக்கும் பணம் தோராயமாக 223 ட்ரில்லியன் டாலர்கள்.  [ட்ரில்லியன்அப்படின்னா என்ன?  அப்படின்னெல்லாம் கேள்வி கேட்டு நம்மளை ஆந்தை மாதிரி முழிக்க விடப் படாது, அது எதுவோ இருந்துட்டு போகட்டும், இப்போ அது முக்கியமில்லை!!]

மொத்த உலகச் சொத்தில் 43% பணம்,  மக்கள் தொகையில் வெறும் 1% மட்டுமேயுள்ள பண முதலைகள் கைவசத்தில்  உள்ளதாம்.

பாதிப் பணம் [50%] எனக் கணக்கிட்டால் அது 2% பேரிடமும், அப்படியே அதிகரித்து 94% பணம் யாரிடம் என்று கணக்கிட்டால் அது 20% பேரிடம் உள்ளதாம்.

அப்படின்னா, உலக மக்கள் தொகையில் 80% பேரிடம் உள்ள பணம் 6% மட்டுமே.


இதில் இன்னொரு கணக்கு:  உலகின் கடைசி முன்னூறு கோடி எழைகளிடமுள்ள மொத்த பணத்திற்குச் சமமான பணத்தை டாப் முன்னூறு பணக்காரர்கள் வைத்திருக்கிறார்களாம்!!அதுசரி, நாம சொத்து சேர்த்திட்டோம், கஷ்டப்படுற ஏழைகளைப் பார்த்து சும்மா இருக்கலாமா?  மனுஷன்னா அடுத்தவங்களுக்கு உதவனும்யா.  இப்படி யோசித்த பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் 130 பில்லியன் அமரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கி வருகின்றன.

[1 பில்லியன் அமரிக்க டாலர் இன்றைய மதிப்பில் 6000 கோடி ரூபாய்.
1000 பில்லியன் =1 டிரில்லியன்].

அப்படிப் பார்த்தால் 130 பில்லியன் அமரிக்க டாலர் [ஏழு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய்!!] இது நல்ல தொகைதான் அல்லவா?  ஆனாலும் ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்குமான மேற்சொன்ன பாகுபாடு விகிதம் என்னவோ அதிரிக்கிறதே தவிர இறங்கி சமமாவதாகத் தெரியவே இல்லை!!   என்னதான் நடக்கிறது?நம்மூரில், ஒருபுறம் இலவசம் குடுத்து இன்னொரு பக்கம் அதற்கும் பல மடங்கு மேலாக சாராய கடைகள் மூலம் திரும்பப் பிடுங்கிக் கொள்வதைப் போல, ஒரு பக்கம் நிதியுதவின்னு குடுத்தாலும் குடுத்த காசுக்கு வட்டி அது இதுன்னு வெவ்வேறு வழிகளில் ஏழை நாடுகளிடம் இருந்து பணக்கார நாடுகள் பலமடங்கு அதிகமாக கறந்து விடுகின்றன.

கொடுத்தது 130 பில்லியன், திரும்பப் பிடுங்குவது 2 டிரில்லியன் [2000 பில்லியன்!!].


உலக வரலாற்றின் கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட ஏழை- பணக்கார நாடுகளுக்கிடையேயான ஏற்றத் தாழ்வு அவ்வளவு அதிகமாக இருந்ததில்லை.

 200 வருடங்களுக்கு முன்னர்,

பணக்கார நாடுகள் சொத்து =  ஏழை நாடுகள் போல மூன்று மடங்கு மட்டுமே. 


1960 வாக்கில் இது 35 மடங்காக ஆகியிருக்கிறது, ஆனால் இன்றைக்கு அது 80 மடங்காகிவிட்டது.

இந்த காலகட்டத்தை அப்படியே அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடர்பு படுத்திப் பாருங்க.  அது வளர வளர பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைப் போல பல மடங்கு பெருப்பதும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது.  இந்த மாதிரி இயலாதவனை கட்டி வச்சு பிடுங்குவது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியே காரணம் என்பது எனது கருத்து.


Tuesday, April 8, 2014

கிரிக்கெட் இரசிகர்களின் கோபம் சரியா?

வணக்கம் மக்கள்ஸ்,

ரெண்டு நாளா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீடு ரசிகர்களால் தாக்கப் பட்டது குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  மேலும் T20 இறுதியாட்டத்தில் அவர் ஆட்டம் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.  அவர் தான் தோல்விக்கே காரணம் என்பது போலவும் பேசப் படுகிறது, ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஏன்னா நாம்தான் ஒரு மேட்ச் கூட பார்க்கவே இல்லையே!!  இத்தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாத ரசிகர்கள் யுவராஜ் சிங் வீட்டை தாக்கும் அளவிற்குச் சென்றிருக்கிறார்கள்.  மேலும், கிரிக்கெட் வீரர் ஒருவரது வீடு தாக்கப் பட்டது இது முதன் முறையல்ல. முன்னர் தோனிக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது.  அது மட்டுமல்ல, வெவ்வேறு கால கட்டங்களில் இரசிகர்கள் தங்களது கோபங்களை வெவ்வேறு விதங்களில் வெளிக்காட்டியே வந்திருக்கிறார்கள்.  இதில் கொல்கத்தா இரசிகர்கள் நம்பர் ஒன் எனலாம்.  ஈடன் கார்டனில் நான் இனி ஒருபோதும் விளையாடவே மாட்டேன் என்று கவாஸ்கர் சொல்லுமளவுக்கெல்லாம் இரசிகர்கள் நடத்தை இருந்திருக்கிறது.

கிரிக்கெட் இரசிகர்களின் இந்தக் கோபம் நியாயம் தானா?  இதை நாம் சற்றே யோசிக்க வேண்டியிருக்கிறது.  

"எத்தனையோ மேட்ச் ஜெயிச்சிருக்கோமே, இப்போ தோத்திட்டோம்,  after all இது ஒரு விளையாட்டு தானே, அதைப் போய் பெரிசா எடுத்துக்கலாமா?  இதே இலங்கை கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை இறுதிப் போட்டி வரை வந்த பின்னர் தோற்றுப் போய் நாடு திரும்பியிருக்கிறது, அங்கே இரசிகர்கள் இப்படியெல்லாம் ஆர்பாட்டம் செய்யவில்லை, இந்திய இரசிகர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்க வேண்டும்?"  என்றெல்லாம் ஊடகங்களில் ஒப்பாரி வைக்கப் படுகிறது.  அதுசரி, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வாழ்வில் அதிக பட்சம் எவ்வளவு சம்பாதிப்பார்கள்,  அதே இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களின் வருவாய் என்ன என்பது குறித்து மட்டும் யாரும் பேசமாட்டார்கள்!!

இவர்களுக்கெல்லாம் நாம் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது.  இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான கிரிக்கெட் ஆட்டம் கபில்தேவோடு போய்விட்டது.  அவர் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஜெயித்ததன் பலனை அதில் ஆடிய வீரர்கள் அனுபவிக்க வில்லை,  அவர்கள் பலருக்கு சொந்த வீடு கூட இல்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு,  நேற்றைக்கு வந்த "விரட்டிய கோழி", "ரொட்டி குருமா" எல்லாம் கோடியில் புரள்கிறது.  அதுமட்டுமல்ல போகிற இடமெல்லாம் இவர்களுடன் பைக்கில் சுற்றுவதற்கு ஒரு சினிமாக்காரி கிடைக்கிறாள்.  சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருத்தர் நூற்றுக் கணக்கான கோடி சொத்து சேர்க்க முடிகிறது, இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிற்கும் இது சாத்தியமே இல்லை.  ஹாக்கி வீரர்கள் ஆசிய கோப்பை வென்றால் கிடைப்பது தலா மூன்று இலட்சம் மட்டுமே.


அப்படியானால் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே எப்படி பணம் கூரையைப் பிச்சுகிட்டு கொட்டுது?  ஏன்னா இவர்கள் எஞ்சின் ஆயில், கார் டயர், மைசூர் சாண்டல் சோப்பு என சொரி, படைக்கு விற்கும் லோஷனைத் தவிர மற்ற அனைத்து நுகர்பொருள் நிறுவனங்களுக்கும் விளம்பர தூதுவராக ஆகிறார்கள், அவர்களது விளம்பரங்களில் தோன்ற கோடிக்கணக்கில் பெறுகிறார்கள்.  இவர்களுக்கு காசு கொட்டுகிறது.

அதுசரி, விளம்பரதாரர் இவர்களுக்கு சும்மா குடுத்திடுவானா?  இவனுங்க கோலாக்கள் எதையும் குடிப்பதில்லை, குடித்தால் கிரிக்கெட் ஆடமுடியாது,  ஆனால் இவர்கள் விளம்பரங்களில் சொல்கிறார்களே என்று கிரிக்கெட் ரசிகன் கோலாவை உள்ளே தள்ளுகிறான், அது அவனுடைய உடல்நலனுக்கு விளைவிக்கும் தீங்கை உணராமலேயே.  இவர்களை விளம்பரத்தில் போட்டால் கழுதை மூத்திரமும் பாட்டிலில் அடைத்து விற்று ஊருபட்ட காசு அல்ல முடியும் என்பதால் தானே அவன் காசு குடுக்கிறான்?

எனவே கிரிக்கெட் ஆட்டக் காரனுக்கு கிடைக்கும் பணமும் புகழும் அந்தஸ்தும் கடைக்கோடி இரசிகன் "தொல்லை"காட்சி முன்னர் உட்கார்ந்து வெறித்தனமாக எல்லா உருப்படாத கிரிக்கெட் மேட்சுகளையும் பார்ப்பதால் தான்.  அவன் அந்த ஆட்டத்தை சீரியசாக எடுத்துக் கொண்டதால் தான் கிரிக்கெட் ஆட்டக் காரனுக்கு பணம் கொட்டுகிறது.

இவர்கள் சொல்வது போல அவன் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் விட்டிருந்தானேயானால் நம்மைப் போல அவனும் வெறும் 8 மணிச் செய்தியில் பார்த்து விட்டு அப்போதே மறந்திருப்பான்.  கிரிக்கெட் ஆட்டம் பார்க்கப் படுவதில்லை என்ற தகவல் விளம்பரதாரருக்குப் போகும், அவன் எல்லா ஸ்பான்சர்ஷிப்பையும் பிடுங்கி விடுவான், இன்றைக்கு கோடியில் புரளும் கிரிக்கெட் ஆட்டக் காரன் மற்ற எல்லா விளையாட்டு வீரர்களையும் போலவே ஆண்டியாகவே இருக்க வேண்டியிருந்திருக்கும்.

கிரிக்கெட் வாரியத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் பண வருவாயை பெற்றுத் தந்தவன் இந்த இரசிகன்.

பல வருடங்களாக மேட்ச் பிக்சிங் செய்து நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்தும் தொடர்ந்து கிரிக்கெட் மேல் நம்பிக்கையை இழக்காது உங்கள் வருவாயை காத்து வந்தவன் இந்த இரசிகன்.

வருடக் கணக்கில் ஓரிலக்க எண்ணிலேயே ரன் குவித்தவனையும் பொறுத்துக் கொண்டு அவனை நூறாவது சதம் அடிக்க வைத்து அழகு பார்த்தவன் இந்த இரசிகன்.

வீட்டில் புலி, வெளியில் எங்கே போனாலும் எலி என்று வெளிநாட்டு ஆட்டங்கள் பலவற்றில் பல்லு பகுடு உடைந்து வந்தாலும் அடுத்த ஆட்டத்திலேயே அதையெல்லாம் மறந்து இந்தியா........இந்தியா........ என்று கோஷம் போட்டு ஆதரித்தவன் இந்த இரசிகன்.

தொலைக்காட்சியில் ஆட்டத்தின் நடுவே எப்போதாவது விளம்பரம் என்பது போய் ஒவ்வொரு ஓவருக்கும் முடிவில் என்றாகி, தற்போது ஒவ்வொரு பந்துக்கும் நடுவே விளம்பரம் என்றாலும், பொறுத்துக் கொண்டவன் இந்த இரசிகன்.

கண்ணில் ரெண்டு ஓட்டையை விட்டு விட்டு உடம்பு பூராவும் விளம்பரங்களை ஒட்டிக் கொண்டு ஒரு விளம்பர வாகனம் போல ஆட வந்தாலும் ஏற்றுக் கொண்டவன் இந்த இரசிகன்.  கிரிக்கெட் மைதானத்தின் ஒவ்வொரு  அங்கமும் விளம்பரம், வர்ணனையாளர் வார்த்தைகளில் விளம்பரம்.  4,6 அடித்தாலும், கேட்ச் பிடித்தாலும் அவற்றுக்கெல்லாம் விளம்பரக் கம்பனி பேரு வச்சதையும் பொறுத்துக் கொண்டவன் இந்த இரசிகன்.

கிரிக்கெட் ஆட்டக் காரனையும், கிரிக்கெட் வாரியத்தையும் கோடியில் புரள வைத்திருப்பது ரசிகனின் கிரிக்கெட் மீதான அளவிலடங்கா பற்றுதலேயாகும்.  அதுவே  நீங்கள் சொதப்பும்  போதும், உப்பு சப்பில்லாத ஏனோ தானோ ஆட்டம் ஆடி தோற்கும் போதும் கோபமாக மாறி வெளிப்படுகிறது.  இந்த கோபத்துக்கும், உங்கள் பணம் புகழ் இரண்டுக்கும்  மூல காரணம் ஒன்றே.  எனவே கிரிக்கெட் இரசிகனின் மூலம் கிடைத்த கோடி கணக்கான பணம் வேண்டும், ஆனால் அவன் கோபப் படக்கூடாது என்பதில் துளியும் நியாயம் இல்லை, காரணம் இரண்டும் தோன்றுவது ஒரே மூலத்தில், எனவே ஒன்றில்லாமல் மற்றொன்று சாத்தியமேயில்லை.  அவனது கோபத்தை வெளிப் படுத்திய விதம் தவறாக இருக்கலாம், ஆனால் அது தான் உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ஆனால் பதிலுக்கு அவனை கோலா குடிக்கச் சொல்லி அவனது உடல் நலத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் செய்துவரும்  இச்செயல் மாபெரும் நம்பிக்கைத் துரோகம்  என்பதை கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், கிரிக்கெட் வாரியமும் மறக்க வேண்டாம்.Friday, April 4, 2014

மான் கராத்தே...... படம் பார்க்காமலேயே ஒரு விமர்சனம்!!

வணக்கம் மக்கள்ஸ்!!


சற்று முன்னர் தான் கவிதை வீதி சௌந்தர் எழுதிய மான் கராத்தே சினிமா விமர்சனம் 

படித்தேன்.  அவர் கதை என்ன என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கும் போது எனக்கு நூறு வருஷத்துக்கு முன்னாடி சார்ளி சாப்ளின் நடித்த "சிட்டி லைட்ஸ்" என்ற படத்தின் ஞாபகம் தான் ப்ளாஷ் ஆகியது. 

அந்தப் படத்தில் கண் பார்வையற்ற தனது காதலியின் ஆபரேஷன் செலவுக்கான பணத்தை சம்பாதிக்க குத்துச் சண்டையில் பங்கேற்க சார்ளி சாப்ளின் ஒப்புக் கொண்டு முரட்டு வீரர்களுடன் அந்த உடம்போடே போட்டியிட்டு சிலரைத் தோற்கடிப்பார். ஆனால் இறுதியில் ஒருவரிடம் தோற்றுப் போவார்.
 இருப்பினும் இரவில் குடிபோதையில் மட்டுமே இவரை நினைவு கொண்டும், பகலில் மறந்து விட்டும் இருக்கும் ஒரு பணக்கார நண்பர் மூலம் பணத்தை பெற்று காதலிக்குத் தந்து விட்டு, அதே நண்பரின் கொலைக்கு இவரே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டு ஜெயிலுக்குச் சென்று விடுவார்.  காதலிக்கு இவர் முகம் தெரியாது. கிளைமேக்சில் இவர் தான் தனக்கு கண் பார்வை கிடைக்கச் செய்தவர் என்று தெரிய வரும் காட்சியைப் பார்த்து கண்ணீர் விடாதவர் யாரும் இருக்க முடியாது.

இந்த படத்தின் கண்ணு தெரியாத காட்சி கன்சப்டை எடுத்து  இயக்குனர் எழில் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தை எடுத்தாரு.

கிளைமாக்ஸ்

இப்போ குத்துச் சண்டை காட்சிகள் "மான் கராத்தே" ஆகியிருக்கு!!

 ஏ.ஆர். முருகதாஸ் அப்படின்னாலே ஆங்கிலப் பட காப்பிதானே!!  ஹி ...........ஹி ...........ஹி ...........

சிட்டி லைட்ஸ் முழுப் படம் 

Tuesday, April 1, 2014

இதை எந்த மெய்ஞானி சொன்னார்? சொல்லுங்க ஜோதிஜி...........!!

வணக்கம் மக்கள்ஸ், 

திரு.ஜோதிஜி, திருப்பூர்  ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்? என்ற பெயரில் தனது ஆன்மீகப் பயண தொடரின்  இறுதிக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்.   "ஆத்தீகம், நாத்தீகம் ஆகிய ரெண்டு டீமும் வேணாம், கிரவுண்டுக்கு வெளியே உட்கார்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியாதா?" என்று முன்னர் கேட்ட இவர் இதில் நாத்தீகம், நவீன அறிவியல், திருமூலர் அப்படின்னு எல்லா டீமுக்கும் விளையாடி கோல் போட்டிருக்கார், கட்டுரையை முழுசா படிச்சும் இவர் எந்த டீமுக்குத்தான்யா ஒரிஜினலா விளையாடுராருன்னு கண்டுபிடிக்க முடியலை!!

இவர் இக்கட்டுரையில் சொன்னது யாவும் பொதுவாக தி.க.வினர் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து வீசும்  குற்றச் சாட்டுகளே, புதிது ஏதும் இல்லை.


அறிவியலால் கிடைத்த சாதனங்களால் தான் 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதே  புரிந்தது என்கிறார்.  ஐயா, அறிவியல் சில வசதிகளைக் கொடுத்துள்ளது, ஆனால் அதற்கான விலையோ எக்கச் சக்கம்.  கண்ணை விற்று ஓவியம் வாங்குவது புத்திசாலித் தனமோ?  கேரளத்திலிருந்து   தமிழகம் வழியாக கர்நாடகம்  செல்லும் எரிவாயுக்  குழாய் நம்மை எப்பாடு படுத்தும், கர்நாடகத்தில் தூய்மையாக வரும்  காவிரி தமிழகம் வந்தததும் எப்படி சின்னா பின்னமாகிறது என்பது குறித்தெல்லாம் அவர் அலசி ஆராய்ந்து தள்ளியுள்ள ஜோதிஜி அவர்களே, அறிவியல் கண்டுபிடிப்புகள் சுற்றுப் புறச் சூழலை எந்த அளவுக்கு நாசப் படுத்தியிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?

கணினி வந்த பின்னர் தான் நாம் எழுதுவது காக்கப் படுகிறதா?  எப்படி திருக்குறள், கம்பராமாயணம் எல்லாம் நமக்குக் கிடைத்தன?

பகுத்தறிவுவாதி என்று தங்களை சொல்லிக் கொண்டு திரியும் கூட்டத்தை வைத்து அவர்கள் சொன்னது தான் பகுத்தறிவு என்று யாராவது நினைத்தால் மன்னிக்கணும்.  இவர்கள் போல ஒன்னாம் நம்பர் மூடநம்பிக்கையாளர்கள் வேறு யாரும் இல்லை, பகுத்தறிவு என்ன சாதா அறிவு கூட இவர்களுக்கு குறைவு, கேள்வி கேட்காமல் ஓடும்  ஆட்டு மந்தைகள்,  போலிச் சாமியார்களுக்கு எப்படி அடிப்படை இல்லையே அதே போல இவர்கள் கொள்கைக்கும் அறிவியல் ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ எந்த அடிப்படையும் கிடையாது. பகுத்தறிவுக்கும் இந்த கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பகுத்தறிவு என்பதை  கெட்ட வார்த்தையாக்கிய பெருமை இந்த பகுத்தறியாவதிகளையே சாரும்.

ஒருவர் இறை நம்பியாளராக வேண்டுமா இல்லையா என்பது அவரவரது விருப்பம், யாரும் திணிக்க முடியாது.  கடவுள் உங்களை யூனிபார்ம்  போடச் சொல்லாவிட்டாலும், சடங்குகளைப் பின்பற்றச் சொல்லா விட்டாலும், எதாவது ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்வதும், சில சடங்குகளைப் பின் பற்றுவதும் யாராலும் தவிர்க்க இயலாது.


அடுத்து தன் கட்டுரையில் ஆங்காங்கே முத்து முத்தா தத்துவத்தையும் பொழிஞ்சிருக்காரு!!


"உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது.

நம் கேள்வி:  இதற்க்கு ஆதாரம் என்ன?  எந்தெந்த மதங்களில் எங்கே இவை சொல்லப் பட்டுள்ளன?

"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட.  

 நம் கேள்வி: இந்த சூத்திரத்தை எழுதியது யார்?  ஆதாரம் என்ன?


"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். 

இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். எந்த சித்தர் சொன்னார், எந்த ஞானி சொன்னார், எங்கே சொன்னார்? மனது தெய்வமா?  [மண்டையை பிச்சிக்க வைக்குதே!].  அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட உண்மை என்ன?  பொய் என்ன?


மேற்கண்ட தத்துவங்களைப் படித்ததும் ஏனோ எனக்கு நீயா ....... நானா.......  வில் பார்த்த காட்சி ஒன்று நினைவில் வந்தோடியது!!   நானும் அதில் வருவது மாதிரி, "எந்த மதத் தத்துவம் சொல்லிச்சு,  எந்த நூல் சொல்லிச்சு?" என்று திரும்பத் திரும்ப கேட்டாலும் ஜோதிஜியிடமிருந்து பதில் வருமா என்று தெரியவில்லை!!   இது பொதுவாக காணப் படுவதுதான்.  தத்துவமாகப் பொழிவார்கள், ஐயா இதை எங்கே படித்தீர்கள், சொன்னது யார்? என்று  கேட்டால் பதில்  கிடைக்காது. எல்லாம் அந்தரத்தில் காற்றிலேயே தொங்கிக் கொண்டிருக்கும், எதற்கும் அடிப்படையே இருக்காது.