Monday, October 1, 2012

காதல் - காமம் : என்ன வேறுபாடு? [18-,18,18+, தமிழ் தெரிந்த ஆண்கள், பெண்கள் & திருநங்கையர்கள் மட்டும்]

காதல்.........  ஜாக்கிரதையாகச் செல்லவும்!!

திருமணத்துக்கு முன்னாடி காதலிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு கொஞ்ச காலம் பார்க், பீச்சுன்னு ஒண்ணா ஊரைச் சுத்திகிட்டு இருந்து கல்யாணம் செய்தவர்களிடம்,  "நீங்க இன்னும் லவ் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா" -ன்னு கேட்டா, "இல்லீங்க, கல்யாணம் பண்ணிகிட்டோம்" -ன்னு சொல்லுவாங்க.  ஒரு பையன் தன்னோட நண்பனை லவ் பண்றேன்னு சொன்னா, "அவனா, நீயி......." ன்னு அவனை பார்த்து ஏரிச்சே கொன்னுடுவோம்.  ஒரு தந்தை தனது மகளை லவ் பண்றேன்னு சொல்லவே முடியாது, காமூகன்னு சொல்லி கல்லாலேயே அடிச்சு கொன்னுடுவோம்.  நம்முடைய அகராதியில் தெரிஞ்சோ தெரியாமலோ லவ் அப்படின்னா சட்ட ரீதியாக பாலியல் உறவு கொள்ள வேண்டிய ஒரு ஆணும் பெண்ணும் காத்திருக்கும் காலம் [வெயிடிங் பீரியட்] என்று அர்த்தம் கற்ப்பித்து விட்டோம்.




ஆங்கிலத்தில் லவ் என்று சொல்லும் வார்த்தைக்கு பிரியம், பாசம், அன்பு செலுத்துதல், பற்று வைத்தல்  என்ற பலவிதமான அர்த்தம் கொள்ளலாம்.  அப்படிப் பார்த்தால் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் மேல் லவ் இருக்கிறது.  நம் நண்பர்கள் மேல் அன்பு செலுத்துகிறோம்.  திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீர்கள் மேல் அவர்களது ரசிகர்களுக்கு கொள்ளைப் பிரியம் இருக்கத்தான் செய்கிறது.  அரசியல் கட்சிகள் மேல் அதன் அடிமட்டத் தொண்டர்களுக்கு அதீத பற்று இருக்கிறது.  இவை அத்தனயுமே லவ் தான்.  ஆனால், அவை 100% சுத்தமானவையா என்பதுதான் கேள்வி.  சுத்தம், அசுத்தம் என்பதை எதை வைத்து தீர்மானிப்பது?  நாம் பலமுறை செய்திகளில் படித்திருப்போம், காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் காதலன் ஆசிட் ஊற்றினான், கத்தியால் கழுத்தை வெட்டினான் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  அல்லது ஒரு பெண்ணை வலுக்கட்டாயப் படுத்தி தன்னை காதலிக்க வைக்க முயலும் இளைஞர்கள், அல்லது அவள் காதலிக்கும் வேறொருவனை மிரட்டுதல், ஆள் வைத்து தாக்குதல் போன்ற வேலைகளிலும் சிலர் ஈடுபடவே செய்கின்றனர்.  இவர்கள் அந்தப் பெண் மீது கொண்டுள்ளது காதல் என்று சொல்ல முடியுமா? 

எங்கள் உறவினர் ஒரு பெண்மணி, அவரைப் போல கணவர் மீது பற்று வைத்திருப்பவரை நாங்கள் பார்த்ததே இல்லை.  வீடு திரும்ப சற்று தாமதமானாலும் அலறிப் போய் விடுவார், நேரம் தவறாமல் சமைத்துப் போடுவார், அவர் உடல் நலனுக்கு சிறு குந்தகம் நிகழ்ந்தாலும் இரவு பகலாக கண்விழித்துப் பார்த்துக் கொள்வார்.  அவருக்கு வயதான காலத்தில் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் வந்த போதெல்லாம், மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை வேளா  வேளைக்கு கவனமாகக் கொடுத்ததோடு நில்லாமல், ஒரு நாளுக்கு நாலு விதமான உணவுகளைச் சமைத்துப் போடுவார்.  நாங்கள் அவருக்கு சாவித்திரி-சத்யவான் என்றே பெயரே வைத்துவிட்டோம்.  எங்களை அந்த அளவுக்கு வியக்க வைத்த உறவு அது!!  சில வருடங்களுக்கு முன்னர் அவர் கணவர் நோய் வாய்ப் பட்டு மரணிக்கும் தருவாய், கை கால்கள் எல்லாம் இழுத்துக் கொண்டிருந்தது, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.  அவர் சில காலம் உடல் நலமில்லாமல் இருந்து வந்தார், மருத்துவ மனைக்கு சென்றாலும் செலவு சில ஆயிரங்கள் ஆகலாம், ஆனால்  குணமடைவார் என்று சொல்ல முடியாது.  இது எதிர் பார்த்ததுதான். அப்போது அந்தம்மா வந்தார், மிகத் தெளிவாகப் பேசினார், "இங்க பாருங்கப்பா, ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா சரியாகும்னா கொண்டு போங்க, செலவானாலும் ஆள் பிழைக்க மாட்டார்ணா, இங்கேயே போட்டுடுங்க, வீண் செலவு வேணாம்"- அப்படின்னு ஒரு போடு போட்டார்.  அதுக்கப்புறம், ஆள் அப்படிக் கிடந்தாலும், பக்கத்து வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்திருந்தார்கள்  உள்ளே போய் பசிக்கு வயிராற ஒரு பிடி பிடித்தார்.  அப்புறம் அவர் கணவர் உசிரும் பிரிந்தது, எல்லோரும் பிணத்திடம் அழுது கொண்டிருந்தாலும் இவரைக் காணோம்.  திருமண நாளில் இருந்து இதுவரையிலும் இரவு பகலாக கணவனுக்காக உழைத்த அவர் உள்ளே ஒரு அறைக்குள் போய் விடியும் வரை நிம்மதியாகத் தூங்கிவிட்டு காலை வெளியே வந்தார்.  அவர் செய்தது அத்தனையும், என் விமர்சனத்துக்கு அப்பாற்ப்  பட்டது, மேலும் பிராக்டிகலாகப் பார்த்தல் மிகச் சரியே.  ஆனாலும், எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புலப்பட்டது.  அவர் இத்தனை நாளும் கணவன் மீது காட்டிய அக்கறை அத்தனையும், அவர் தன்னைக் காலம் பூராவும் வைத்து காப்பாற்றுபவர், அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் நம் கதி என்னாவது என்ற பயத்தால்தானே தவிர, அவர் மீது கொண்டிருந்த அன்பால் அல்ல.

நாம் வாழ்வில் பார்க்கும் லவ் ஒவ்வொன்றின் பின்னாலும் சுயநலம் இருக்கக் கூடும். ஒருத்தரிடமிருந்து நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவர் மீது அன்பு[?] செலுத்துவது உண்மையான லவ் அல்ல.  அதற்குப் பெயர் காமம்  [Lust].  [மீண்டும், லவ்வைப் போலவே இந்த வார்த்தைக்கும் நாம் கொண்டுள்ள பொருள்,  தவறானதாகும். ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்வதற்கு காரணமும் காமம்தான், ஆனால் அது மட்டும்தான் அதன் முழுப் பொருள் என தவறாக எண்ணுகிறோம்.  உண்மை அதுவல்ல!].  நாம் விரும்புபவருக்கு  நம்மால் என்ன தர முடியும், அவரிடமிருந்து எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பது தான்  உண்மையான அன்பு.  பிரதிபலன் எதிர்பார்த்தால் அது அன்பு இல்லை காமம்.

நான் லவ் பண்ணிய பெண் என்னை புடிக்கல, வேற ஒருத்தனோட செட்டில் ஆயிட்டேன்னு சொல்லிட்டா சார்,  இப்போ நான் அந்தப் பெண்ணை மட்டும் இல்லை அவங்களோட லவ்வையும் சேர்த்து லவ் பண்றேன் சார்......  எப்பாடு பட்டும் அவங்க லவ்வை சேர்த்து வைப்பேன் சார், ஏன்னா அந்தப் பெண் மேல இருக்கும் லவ் அவ்வளவு ஆழம்!!


ஒரு தாய் தன்  குழந்தை மீது வைத்திருப்பது, உயிரையும் கொடுத்து நாட்டைக் காக்கும் வீரர்கள் நாட்டின் மீது வைத்திருப்பது, சில திரைப்பட நடிகர்கள்/விளையாட்டு வீரர்கள் மீது அவர்களது இரசிகர்கள் வைத்திருப்பது, அரசியல் கட்சிகள் மீது  அடிமட்டத் தொண்டர்கள் வைத்திருப்பது எல்லாம் கிட்டத் தட்ட உண்மையான லவ் தான்.  அதே சமயம், நடிகன் அரசியலுக்கு வந்தால் நாம் ஆதாயம் பார்க்கலாம், அரசியல் கட்சிகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இருக்கும் வரை கொள்ளையடித்து விட்டு, தகுந்த நேரத்தில் கட்சி தாவுவது போன்றவற்றையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.  குழந்தைகள் பெரியவர்களானால், நாம் வயதான காலத்தில் பார்த்துக் கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் பெற்றோருக்கு மனதில் ஒரு மூலையில் இருக்கத்தான் செய்கிறது.  

எனவே, உற்றுப் பார்த்தால் பார்த்தால் நாம் இங்கே காணும் லவ் எதிலும் உண்மை இல்லை.  ஏன்?  உண்மையில் அவை பிம்பங்கள் மட்டுமே.  உதாரணத்திற்கு, குளத்தின் கரையில் ஒரு மாமரம் இருக்கிறது, அதில் சுவையான கனிகள் இருக்கின்றன.  குளத்தில் உள்ள நீரில் மரத்திலுள்ள பழங்களின் பிம்பங்கள் தெரியும், ஆனால் அவற்றைப் பறித்து சுவைக்கலாம் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். 

 
நீரில் மரத்தின் பிம்பம் தெரியும் ஆனால்.........

நீரில் தெரியும் மாமரத்தின் பிம்பத்தில் உள்ள மாங்கனிகளைப் பறிக்க முடியாது!!

அப்போ, 100% சுத்தமான லவ் இங்கே எங்குமே இருக்காதா?  அதை யார் கிட்ட தான் எதிர் பார்க்கலாம்?  நாம் ஒரே ஒருத்தர் கிட்ட மட்டும் எதிர் பார்க்கலாம்.  நாம் அவரை லவ் செய்ய மாட்டோமான்னு எதிர்பார்த்து எத்தனயோ மில்லியன் கணக்கான வருடங்கள் காத்திருக்கார்.  அவர் நம் இருதயத்தில் குடியிருக்கார்.  இந்நேரம் உங்களுக்கே புரிந்திருக்கும் அவர் வேற யாருமல்ல இறைவன் தான்!!  அவர் கிட்ட மட்டும் தான் 100% அன்பு செலுத்த முடியும், அதற்க்கு தகுதியானவர் அவர் ஒருத்தர் மட்டுமே, மற்ற அன்புகள் எதுவும் 100% தூய அன்பு இல்லை, அப்படியே ஓரளவுக்கு தூய அன்பானாலும் ஒரு கட்டத்தில் அது நீர்த்துப் போகும், அல்லது காலம் நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கும், நிலைக்காது.

மரத்தின்  வேருக்கு ஊற்றப் படும் நீர் எவ்வாறு அதன் கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாவற்றுக்கும் எவ்வாறு போய்ச் சேருகிறதோ, வயிற்றுக்கு அளிக்கப் படும் உணவு கைகள், கால்கள், கண்கள் என எல்லா உறுப்புகளுக்கும் போய்ச் சேருகிறதோ, அதே போல அச்சுதனை வணங்கினாலே போதும் மற்ற எல்லா தேவர்களுக்கும் அது போய்ச் சேரும். ஸ்ரீமத் பாகவதம்-4.31.14

இறைவன் மேல் அன்பு செலுத்துவதில் முதலிடம் வகிக்கும் ஸ்ரீ ராதை.


இறைவன் ஒருவனை நேசித்தால் போதும், அது பிரபஞ்சத்தில் உள்ள எல்லோரையும் நேசித்ததற்க்குச் சமமாகும்.

இந்தப் பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ் மணத்தில் வாக்களிக்க சொடுக்கவும்.

15 comments:

  1. இறைவன் மீதான அன்பிலும் சுயநலம் இல்லையா என்ன? தொடர்ந்து வாழ்வில் உங்களுக்குத் துன்பமே வந்தாலும் அதே அன்பைச் செலுத்த இயலுமா? வேலை போய் விட்டது, விபத்து நடந்துவிட்டது, உற்ற உறவினர் மறைந்துவிட்டார், நோய் பீடித்து விட்டது, இப்படி தொடர்ச்சியான துன்பங்கள் வந்த நிலையிலும் அதே அன்பைச் செலுத்துவது ப்ராக்டிகலானதா?

    அப்புறம் சுயநலம் தப்புன்னு எல்லாம் நினைக்கற ஆளில்லை நான். அது இயல்பானது. அதனால் எந்த வகையான காதலிலும் பரஸ்பரம் கொஞ்சம் சுயநலம் இருந்தால் தவறில்லை. ஆனால் முழுக்க சுயநலத்துடன் மட்டுமே ஒரு உறவை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

    நீங்கள் உங்கள் வயிற்றுக்குக் போக மீதியை உங்களுக்கென சேமித்து வைப்பது வசதியான வாழ்க்கை வாழ்வது எல்லாமே சுயநலத்தினால் தான். அது மற்றவர்களை பாதிக்காதவாறு இருந்துவிட்டால் நல்லது.

    ReplyDelete
  2. இது முற்றிலும் அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது என்று நான் கருதிகிறேன். மனிதர்கள் தங்கள் உறவுகள் அல்லது பழகியவர்கள் மேல் அன்பு செலுத்துவது ஒரு இயற்கைத் தேவை. அவனுக்கு அது ஒரு முழுமையைத் தருகிறது. இதில் உடலுறவு சம்பந்தம் இல்லை.

    உடலுறவு சம்பந்தப்பட்ட அன்பு வேறு வகையானது என்று நான் கருதுகின்றேன். காதல், காமம் என்று பாகுபடுத்துவது சிரமம்.

    அன்பு பல சமயங்களில் பலவிதமாக வெளிப்படுகிறது. இது ஒரு பெரிய மனோதத்துவ சமாசாரம்.

    ReplyDelete
  3. சுதந்திரம் என்பதற்கும் விடுதலை என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதைப் போலே அன்பு வேறு - பாசம் வேறு... இதில் எப்படி, எங்கே, எவ்வாறு, ஏன்,.... காமம் வருகிறது...?

    ReplyDelete
  4. //எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புலப்பட்டது. அவர் இத்தனை நாளும் கணவன் மீது காட்டிய அக்கறை அத்தனையும், அவர் தன்னைக் காலம் பூராவும் வைத்து காப்பாற்றுபவர், அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் நம் கதி என்னாவது என்ற பயத்தால்தானே தவிர, அவர் மீது கொண்டிருந்த அன்பால் அல்ல.///

    அவர் மீது கொண்டிருந்த அதீத அன்பால்தான் அவர் மேலும் கஷ்டப்பட்டு சிரழியக் கூடாது என்றுதான் அவர் செய்திருப்பார் .அவர் நிலையில் நான் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்து இருப்பேன். இப்படி எல்லோராலும் முடிவு எடுக்க முடியாது காரணம் பலர் சமுகம் என்ன சொல்லும் என்பதால்தான். சமுகத்திற்கு பயப்படாமல் அன்புக்கு மட்டும் அடிமையாக இருப்பவர்களால் இப்படி முடிவு எடுக்க முடியும் என்பது என் கருத்து.



    இப்போது நான் வசிக்கும் நீயூஜெர்சியில் ஒரு புதிய சட்டம் கோண்டுவர தீர்மானித்து இருக்கிறார்கள் அதன்படி ஒரு உடல் நலம் குன்றி 6 மாதம் மேல் அவர் வாழ மாட்டார் என்றால் அவர் விரும்பினால் டாக்டர்கள் அவர் சாக மருந்தை எழுதி தருவார்கள் அதன்படி அவர் அந்த மருந்தை அவர் சாப்பிட்டு தன் வாழ்வை முடித்து கொள்ளலாம். இது இன்னும் இங்கு சட்டம் ஆகவில்லை அது ஆவதற்கு முயற்சிகள் எடுக்கிறார்கள், இந்த சட்டம் அமெரிக்காவில் வேறு 2 மாநிலங்களில் அமுலில் இருக்கிறது

    ReplyDelete
  5. /கடவுளிடம் அன்பு செலுத்த யாராலும் முடியும் ஆனால் நம் இந்தியாவில் மட்டும்அவரின் அருகில் செல்ல அதிக பணம் வேண்டும் நம்

    ReplyDelete
  6. யப்பா சாமி.. எப்படிங்க இப்படி? எல்லா தளத்திலும் அடித்து ஆடறீங்க? பிரமாதம்..

    ReplyDelete
  7. அந்த பெண்மணி கணவரிடம் வைத்திருந்த அன்பு பாசம் உண்மையானதே அதை மற்றவர்களால் எடை போட முடியாது. அவர் மனதை பக்குவப்படுத்தும் கலை தெரிந்தவர் என்றே கருதுகிறேன். அல்லது வயதின் முதிர்ச்சி எவ்வளவு பெரிய இழப்பையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆண்களை விடவும் பெண்களின் மனது வலிமையானது. இதற்கும் அவர் கடவுள் பக்திக்கும் சம்பந்தம் இல்லை. காமம் வேறு;பாசம் வேறு காதல் வேறு; மயக்கம் வேறு; கடவுள் பக்தி வேறு. எல்லாம் ஒன்றே என்பது ஏற்றுக்கொள்ள சிரமமே.

    சித்தரின் மனநிலையும் ; ஓசோ வின் மனநிலையும் ஒன்றா ?

    ReplyDelete
  8. காதலின் வகைகள். காதல் வருவதற்கான காரணங்கள், இங்கே ஆராயப்பட்டுள்ளன.

    http://tamiljatakam.blogspot.com/2011/08/1.html

    ReplyDelete
  9. // அவர் கிட்ட மட்டும் தான் 100% அன்பு செலுத்த முடியும், அதற்க்கு தகுதியானவர் அவர் ஒருத்தர் மட்டுமே, மற்ற அன்புகள் எதுவும் 100% தூய அன்பு இல்லை,//

    சும்மா காமெடி பண்ணாதிங்க.

    ReplyDelete
  10. || அவர் கிட்ட மட்டும் தான் 100% அன்பு செலுத்த முடியும், அதற்க்கு தகுதியானவர் அவர் ஒருத்தர் மட்டுமே, மற்ற அன்புகள் எதுவும் 100% தூய அன்பு இல்லை, அப்படியே ஓரளவுக்கு தூய அன்பானாலும் ஒரு கட்டத்தில் அது நீர்த்துப் போகும், அல்லது காலம் நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கும், நிலைக்காது.||

    ஏன்னா கடவுள் கிட்ட இருந்து அப்ஸ்ட்ராக்டா நமக்கு என்ன கிடைக்கும் என்பது தெரியாமல் இருப்பதால் கூட இந்த கற்பிதம் உருவாகியிருக்கலாம் இல்லையா?

    கடவுளை அன்பிற்காக மட்டும் அணுக விரும்பிய வெறியான அடியார்கள் இப்போது அருகி விட்டவர்கள்..எனவே எவரும் இதை நம்பத் தகந்த கூற்று என்று சொல்ல மாட்டார்கள்.

    ராதையின் அன்பு காதலின் வழி வந்ததல்லவா? எனக்கென்னவோ அப்பர்,சம்பந்தர்,மாணிக்கவாசகர்(சுந்தரர் இறைவனை நெகோஷிசேஷன் சர்வீஸ் எல்லாம் பண்ண வச்சார்!,துளசிதாஸ்,புரந்தரதாசர் போன்றோர்களே சரியான எடுத்துக்காட்டு என்று தோன்றுகிறது...!

    ReplyDelete
  11. Appa un family,friends ellarayum vittuttu straight a kadavulkitta poga vendiyathu thana....,

    ReplyDelete
  12. @Gokul k kumar

    முதற்க்கண் தங்கள் முதல் வருகைக்கு நன்றி நண்பரே!!

    \\Appa un family,friends ellarayum vittuttu straight a kadavulkitta poga vendiyathu thana....,\\

    நம்மோடு குடும்பம் நண்பர்கள் எல்லோரையும் பகவான் பக்கம் இழுத்துச் சென்று விடலாமே நண்பரே!! எதையும் விட வேண்டியதில்லை!! இன்னொரு விஷயம், நீங்க என்ன பண்ணினாலும் குடும்பம் நண்பர்களுடன் நிரந்தரமாக இருக்க முடியாது நண்பரே, அது இரயில் சிநேகிதம் மாதிரிதான், கொஞ்ச நேரம் நம்முடன் இருப்பார்கள், அவரவர் நேரம் வந்ததும் அவரவர் வழியில் பிரிந்து போய்க் கொண்டே தான் இருப்பார்கள், மீண்டும் ஒரு போதும் நாம் அவர்களைச் சந்திக்கப் போவதில்லை!! அவர்களைப் பிரிவது என்பது உறுதியாகிப் போனது, அடுத்து எந்த சூழ்நிலையில் நாம் பிறக்கப் போகிறோம் என்பதையாவது நல்ல இடமாகப் பார்த்து முடிவு செய்யலாம் அல்லவா? அதை இன்னொரு நிழலை தேடித் பிடிக்காமல் நிஜத்தை தேடித் பிடித்துக் கொள்ளலாம் என்பதே நமது நெறி நூல்கள் எல்லாம் கூறுகின்றன. அந்த நிஜம் பகவான் ஒருத்தர் மட்டுமே, அதை அடைவது மனிதனாய்ப் பிறந்தபோது மட்டுமே, எனவே இந்தப் பொன்னான வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பது எனது எண்ணம், வருகைக்கு நன்றி, மீன்றும் வாருங்கள்.

    ReplyDelete
  13. அற்புதமான இடுகை. உயர்வான சிந்தனை. களங்கமில்லாத நல்ல ஆத்மாவால் மட்டுமே இப்படி எழுத முடியும். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  14. @Swami

    பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete