Wednesday, August 28, 2013

மைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்!!

அன்புள்ள மக்கள்ஸ்,

இன்றைக்கு மைதாவைப் பத்தி ஒரு பதிவில் பார்த்தோம்.  [சுட்டி] நாமும் கிட்டத்தட்ட இதே விபரங்களோடு ஒரு பதிவும் போட்டிருக்கிறோம்.   நாட்டில சில நல்ல உள்ளங்கள் இருக்கு.  அதுங்க என்ன பண்ணும்னா அப்படியே "குறு....குறுன்னு ........" கம்பியூட்டரையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருக்கும்.  எதாச்சும் உடல் நலனுக்கு கெடுதல்னு பதிவு வந்தா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லதுதான், அமரிக்காவில் அப்படி, ஆப்பிரிக்காவில் இப்படின்னு போட்டு படிக்கிறவங்களை குழப்பிவிட்டு, சரி ஒண்ணுமில்லை போலிருக்குன்னு நினைக்கிற நிலைக்கு தள்ளி விட்டு விடுவார்கள்.  பதிவோட நோக்கத்தையும் கெடுத்த மாதிரி ஆச்சு, நாலு பேரு நாசமா போனாங்கலேன்னு மனசுக்குள்ள ஒரு குரூர சந்தோசம். அது போகட்டும், கழுதை.  நாம இப்ப விஷயத்துக்கு வருவோம்.  இன்னைக்கு நாம் படிச்சதில் மைதா தயாராவது எப்படி என விளக்கியுள்ளார்கள்.  அதை இங்கே தருகிறோம்.  அதுசரி, மேட்டர் என்னன்னு நீங்க கேட்பீங்க!!  [என்னது கேட்க மாட்டீங்களா?!  அதானாலென்ன, கேட்டீங்கன்னே வையுங்களேன்!!]  அதில்தான் நமக்கு தீராத சந்தேகம் ஒன்னு இருக்கு, கொஞ்சம் பொருங்க!!

 ------------------------------------------------------------------------------------
 மைதா தயாரிப்பு முறை:

முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது. 

         இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது. 

               சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும். 

              இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல. 
----------------------------------------------------------------------------------------
சரி இப்போ நம்ம சந்தேகத்துக்கு வருவோம்.  [இதை தீர்த்துட்டா ஆயிரம் பொற்காசு தருவியான்னு கேட்டுடாதீங்க, ஆயிரம் பைசா வேணா தாரேன்!!].  மேலே உள்ள வரிகளில் இருந்து சில [விஜயகாந்த் மாதிரி] சில புள்ளி விவரம்!!
முதலில் கோதுமை அரைக்கப் படுகிறது- அரைக்க செலவு ஆகும்.
அதுக்கப்புறம் அதில்  பென்சாயில் பெராக்சைடு கலக்கிறாங்க என்றால், அந்த கெமிக்கலை எவன் சும்மா தருவான், அதுக்கும் பணம் செலவாகும்.
மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.-  ஹி ....... ஹி ....... ஹி .......  உங்களுக்கே புரிஞ்சிருக்கும், அல்லோக்சான் நம்ம மாமனோ மச்சானோ ஃபேக்டரியில் தயார் பண்ணமாட்டன், அதை வாங்கித்தான் பயன்படுத்தணும். அதுக்கும் காசு செலவாகும்.
அது மட்டுமா,
செயற்கை வண்ணங்கள், 
தாது எண்ணெய்கள், 
சுவையூட்டிகள், 
 பதனப்பொருட்கள், 
வெள்ளை சீனி, 
சாக்கரின், 
அஜினோமோட்டோ 
என மேலும் அரை டஜன் அயிட்டங்கள் சேர்க்கிறாங்கலாம்.  எம்புட்டு செலவாகுமோ!!
இத்தனையும் படித்த பின்னர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது.  கீழே உள்ள படத்தை பாருங்க.

அப்படியே அரைச்சு விற்கப்படும் கோதுமை கிலோ 47 ரூபாய்,  ஆனால் அத்தனை கெமிக்கல்கள் [அது நல்லதோ கேட்டதோ] சேர்த்து, அரைத்தல் பிரித்தல் என என்னென்னமோ பிராசஸ் பண்ணி வரும் மைதா அதை விட விலை குறைவாய் கிலோ ரூ.36 -க்கே கிடைப்பதெப்படி?  விளங்கலையே?


 

Sunday, August 25, 2013

வங்கி கொள்ளையர் கதையில் வாழ்க்கைத் தத்துவங்கள்.
தகுஸ்தான் என்ற நாட்டில் [தயவு பண்ணி உலக மேப்பில் இந்த நாட்டை தேடாதீங்க கிடைக்காது!!] ஒரு வங்கிக் கொள்ளை.  நாலு கொள்ளையர்கள் நவீன துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.  வங்கி ஊழியர்களைப் பார்த்து கொள்ளையர் தலைவன் உரக்கச் சொன்னான்,

"யாரும் அசையக் கூடாது. நல்லா யோசிங்க, உங்க கல்லாப் பெட்டியில இருக்கும் பணம் நாட்டுக்குச் சொந்தமானது, உசுரு உங்களோடது,  எத காப்பத்திகனும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..........."  என்று பேசி நிறுத்தினான்.  உடனே அத்தனை பயல்களும் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் தரையில் படுத்தனர்.  [இதற்க்கு பேருதான், பேசியே மனதை மாற்றும் யுக்தி.  வித்தியாசமா பேசி கேட்பவர்களை "மாத்தி யோசிக்க" வைத்தல்!!].

எல்லோரும் தரையில் கிடந்தாலும், ஒரு பெண் ஊழியர் மட்டும் 'ஒரு மாதிரியாக' ஏடாகூடமாக டேபிளின் மேல் படுத்திருந்தாள்.  அவளைப் பார்த்து, கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருத்தன் கத்தினான், "கொஞ்சமாச்சும் நாகரீகமா நடந்துக்க, இங்க நாங்க அதுக்கு வரல.........."  [இதுக்கு பேர்தான் தொழில் சுத்தம்.  நாம வந்த வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமா இருக்கணும்!!  அதில இதிலன்னு கவனம் சிதறக்கூடாது!!] 


ஒரு வழியா கொள்ளையடிசிட்டு பணத்தையெல்லாம் மூட்டை கட்டிக்கிட்டு நால்வரும் வீடு வந்து சேர்த்தார்கள்.  அதில ஒருத்தன் பொடியன், தொழிலுக்கு புதுசு, MBA படிச்சிருக்கான்.  இன்னொருத்தன் அனுபவசாலி  ஆறாம் கிலாஸ் ஃ பெயில்.  பொடியன் கேட்டான்,

"அண்ணே எவ்வளவு அடிசிருக்கோம்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு, பணத்தை எண்ணலாமா?"

அதற்க்கு அவன் சொன்னான், "இதை எவன்டா கஷ்டப் பட்டு எண்ணிகிட்டு இருப்பான், கொஞ்சம் பொறு, கொஞ்ச நேரத்துல வங்கிக் கொள்ளைன்னு டிவில நியூஸ் வரும், எவ்வளவுன்னு அவனுங்களே சொல்லிடுவானுங்க, தெரிஞ்சுக்கலாம்" என்றான்.


[இதுக்கு பேருதாங்க அனுபவம்ங்கிறது!!  இந்த காலத்தில, வெறுமனே படிச்சிட்டு ஏட்டு சுரைக்காயாய்  இருப்பதை விட செயல் அனுபவம் இருப்பது முக்கியம்கிறது இதுல இருந்து தெரியுது தானே!!]

கொள்ளைக் காரர்கள் போனதும், வங்கி மேனேஜர் சூப்பர்வைசரிடம், "யோவ், போலீசுக்கு போனைப் போட்டு வரச் சொல்லுய்யா" என்றார்.


அதுக்கு சூப்பர்வைசர் சொன்னார், "கொஞ்சம் பொறுங்க சார், நாமும் ஒரு கோடியை எடுத்து வச்சுக்குவோம், இதுக்கு முன்னாடி ஏழு கோடி கணக்கை மாத்தி எழுதி அடிச்சோமுல்ல,  அதையும் சேர்த்து எல்லாம் திருட்டு போச்சுன்னு சொல்லிடுவோம்!!" என ஐடியா குடுத்தார். 

 [இதற்க்கு பேரு, "நீரோடும் திக்கில் நீயும் ஓடி, நெருக்கடியான சூழ்நிலையையும் உனக்கு சாதகமா பயன்படுத்திக் கொள்" என்ற வாழ்க்கைத் தத்துவம்.] 

"ஆஹா இது மாதிரி மாசம் ஒரு கொள்ளை நடந்தா எப்படி இருக்கும்!!   நாம் பண்ணும் அத்தனை ஃ பிராடையும் மறைச்சிடலாம்" [இதுதான் நம்ம சந்தோஷமே முக்கியம், வேலையெல்லாம் அப்பறம் தான்!! என்ற தத்துவம்!! ]

அடுத்த நாள்
TV செய்தியில், "பிரபல வங்கியில் கொள்ளை, 10 கோடி மாயம்" என அறிவிக்கப் பட்டது. 


இதைப் பார்த்து திகைத்த கொள்ளையர்கள் பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணினர். வெறும் இரண்டு கோடி மட்டுமே இருந்தது!! 

"என்னடா இது உசிரக் குடுத்து கொள்ளையடிச்ச நமக்கு வெறும் ரெண்டு கோடிதான், ஆனா அந்த பேன்க் மேனேஜர் விரல் சொடுக்குற நேரத்தில எட்டு கோடியை அடிச்சிட்டானேடா.............  சே!  இதுக்குத்தான் சொல்றது நாமும் நாலு எழுத்து படிக்கணும்னு!! திருடனா இருக்கிறத விட படிச்சவனா இருந்தா நிறைய அடிக்கலாம்" என்ற முடிவுக்கு வந்தனர்.  "Knowledge is worth as much as gold!"

பேன்க் மேனேஜரைப் பொறுத்தவரை, காணாமப் போன எல்லா பணத்துக்கும் கணக்கு காட்டியாச்சு!!  இதற்குப் பேர்தான், " ரிஸ்க் எடுப்பதை ர
ஸ்க் சாப்பிடுவதைப் போல நினைத்து வரும் சந்தர்ப்பத்தை சரியாப் பயன்படுத்திக்கோ" என்ற வாழ்க்கைத் தத்துவம்.
 
சார், உங்க பணத்தை எங்க இன்வெஸ்ட் பண்ணலாம்னு நாங்க ஆலோசனை தர்றோம், வாங்க சார்!!

அதுசரி, இதில யாருங்க நிஜமான திருடன்?!!

Friday, August 16, 2013

சூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்!!


இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதிவர் அமுதவன் சாரிடமிருந்து ஒரு மெயில்- பெங்களூரில் நடக்கவிருக்கும் அவரது மகள் திருமணத்திற்கு வருகை தரும்படி அழைப்பு!!  இது ஒரு கௌரவம் என்பதால் நிச்சயம் வருகிறோம் என உறுதி செய்து பதில் அனுப்பினேன்.  பின்னர் தான் நடிகர் சிவகுமார் குடும்பத்தினரும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அமுதவன் சார் தெரிவித்தார். மாலை 7 மணி முதல் அரை மணி நேரம் இருப்பார்கள் என்றும் அதற்கு தகுந்தவாறு பிளான் செய்து வாருங்கள் என்றும் சொல்லியிருந்தார். [அவர்கள் வருகை திருமணத்திற்கு வந்தவர்களில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதை பின்னர் அறிந்துகொண்டோம்!!]

சிவகுமார் குடும்பத்தினர் என்றால் சூர்யாவும் வரக்கூடும் என நினைத்தோம், ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.  தங்கமணி சூர்யாவின் தீவிர ரசிகை, அவர் இந்தச் செய்தியைக் கேட்டதும் பயங்கர குஷியானார்.  எனது குழந்தைகள் இரண்டும் சூர்யா அங்கிளைப் பார்க்கப் போகிறோம் என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தனர். [அதுங்களுக்கு எப்படி தெரிஞ்சதோ, அதுங்க சொன்ன மாதிரியே சூர்யாவும் வந்து கலந்து கொண்டார்!!] திருமண நாள் வரவேற்புக்கு ஒரு மணி நேரம் முன்னர் கிளம்பி மாலை 6:30-க்கு மண்டபத்தை அடைந்தோம்.  அங்கே யாரையும் தெரியாததால் கொஞ்ச நேரம் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தோம்.

திடீரென தங்கமணி, "என்னங்க, இவங்க தாங்க சிவகுமாரோட மிஸஸ்" என உற்சாகமான குரலில் கூறவும், சட்டென திரும்பிப் பார்த்தேன்,  திருமதி லக்ஷ்மி சிவகுமார், மணமக்களை சந்தித்து விட்டு கீழே சென்று கொண்டிருந்தார்.  [அவரை நான் அதற்க்கு முன் பார்த்ததில்லை!!]  "வாங்க நாமும் கீழே போகலாம்" என தர தரவென தங்கமணி நம்மை இழுத்துக் கொண்டு கீழ்த் தளத்திற்க்குச் சென்றார்.  அங்கே திருமதி லக்ஷ்மி சிவகுமார் மற்றும் சிலர் நின்று கொண்டிருக்க, தங்கமணி நேராக  அவரிடம் சென்று "நீங்க சூர்யாவோட அம்மாதானே" என்று கேட்க, அவரும் ஆமாம் என்று ஆமோதிக்க, தங்கமணி தன்னையும் குழந்தைகளையும் அறிமுகப் படுத்திக் கொண்டார்!!  நான் சற்று எட்டவே நின்று கொண்டிருந்தேன்.  தங்கமணி கிட்ட ஓடி வந்து,

"என்னங்க அமுதவன் சார் உங்களுக்குத் தானே ஃ பிரண்டு, யார்னு கண்டுபுடிச்சு ஹலோ சொல்லுங்க" என்றார்.

நான் அவரது படத்தை அவரது வலைப்பூவில் பார்த்திருக்கிறேன், தற்போது லக்ஷ்மி சிவகுமார் முன்னர்  நின்று பேசிக் கொண்டிருந்தார்.  வி.ஐ.பி யுடன் பேச வேறு யாரால் முடியும் !!  இதுதான் அமுதவன் சாராக இருக்க வேண்டும் என 90% உறுதி செய்துகொண்டு நெருங்கிச் சென்று கையை நீட்டி,

"ஹெலோ சார் என்றேன்", அவரும் கை குலுக்க, "நான் ஜெயதேவ்"- என்றேன்.

முகத்தில் மகிழ்ச்சியுடன் "ஓ ........  அப்படியா!!  ரொம்ப சந்தோசம் சார் !!"  என்றவர் உடனே திருமதி லக்ஷ்மி சிவகுமார் அவர்களிடம்,

"இவர் ஜெயதேவ், ஐ.ஐ.டி யில் பயின்றவர், 'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்'" என அறிமுகப் படுத்தியதும்,நமக்கு லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது!!  அதைக் கேட்ட அவரும், " அப்படியா!" என புன்னகைத்தார்.  உடனே தங்கமணி கொண்டு வந்திருந்த கேமராவை என்னிடம் தந்து புகைப் படம் எடுக்கச் சொன்னார், ஒன்றிரண்டை கிளிக்கினேன்.  பின்னால் மின்விளக்கு இருந்ததால் படம் சரியாக வரவில்லை, எனவே எதிர் திசையில் நின்றால் பரவாயில்லை எனவும், மறுப்பேதும் சொல்லாமல் எங்களுடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார் !!

திருமதி லஷ்மி சிவகுமார், பக்கத்தில் இருப்பவர் அவரது மகள், சூர்யாவின் தங்கை பிருந்தா சிவகுமார் என தங்கமணி  சொன்னார்,   பின்னூட்டத்தில் ஒரு நண்பரும் இதை உறுதி படுத்தியிருக்கிறார்.  [ இணையத்தில் கிடைக்கும் அவரது திருமண படத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு!!]  

அவர் கிளம்பிச் சென்ற பின்னர், அவ்வளவு பிசியான நேரத்திலும், அமுதவன் சார் நான் எழுதியவற்றில் சிலதை நினைவு கூர்ந்து அவற்றைப் பாராட்டிய போது, நம்மை இவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று வியப்பாய்  இருந்தது!  தங்கமணியின் சமையல் குறித்த பதிவு நன்றாக இருந்ததாக பதிவை பெயருடன் சொல்லி அசத்தினார்!!  பலரது பதிவுகளை படிப்பதோடு, என்னைப் போல சாதாரண பதிவர்களுக்கும் அவர் தரும் முக்கியத்துவம் இவற்றை பார்க்கும்போது, "அமுதவன் சார், யு ஆர் ரியலி கிரேட் உங்களுக்கு சல்யூட்".சிவகுமாருடன் அமுதவன் சார்!!
சற்று நேரத்துக்கெல்லாம் சிவகுமார், பாடலாசிரியர் அறிவுமதி, ராமராஜன் காட்டன் அதிபர் என பல முக்கிய புள்ளிகள் வந்து சேர்ந்தனர். அமுதவன் சார் அனைவரையும் வரவேற்று மணமக்களை அறிமுகப் படுத்தி பேசினார்.  மணமகள் எலிசபெத் மில்கியோ TCS -ல் பணிபுரிவதாகவும், திருமணம் முடிந்தது பணி நிமித்தமாக அமரிக்காவில் ஹியூஸ்டன் நகரில் குடியேறப் போவதாகவும் சொன்னார்.  மணமகன் திரு.ஜான்கிளாட்ஸன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முன்னர் NDTV யில் கேமராமேன் ஆகப் பணி புரிந்து வந்ததாகவும், தற்போது  Bloomberg TV என்னும் அமரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பணி புரிவதாகவும் தெரிவித்தார். அவரை அடுத்து சிவகுமார் பேசினார்.

சிவக்குமார் மணமக்களை வாழ்த்தி பேசுகிறார், பின்னால் அமுதவன் சார்.

சிவகுமார் பேசும்போது, 31 ஆண்டுகளுக்கு முன்னர் அமுதவன் சார் திருமணத்துக்கு இதே பெங்களூருக்கு கோயம்பத்தூரில் இருந்து பல வி.ஐ .பி களுடன் வந்து கலந்து கொண்டதாகச் சொன்னார்.  கண்ணதாசனின் பாடல், "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல............... எனத் தொடங்கி, நீ இல்லாமல் நானும் நானல்ல........ என முடித்து, "நீங்கள் தலை முடி முழுதும் நரைத்து கிழமானாலும் இந்த பாடலுக்கேற்றவாறு வாழுங்கள்" என வாழ்த்தி, "இன்னும் சில நிமிடங்களில் சூர்யா வந்துவிடுவார், தள்ளு முள்ளு செய்யாமல் ஓரிரு படங்களை எடுத்துக் கொண்டு எங்களை விட்டால் நாங்கள் சரியான நேரத்துக்கு விமான நிலையத்தை அடைவோம்" என்ற வேண்டுகோளுடன் கீழே இறங்கினார்.அடுத்த சில நிமிடங்களுக்கு நுழைவு வாயிலில் அனைவரும் விழி வைத்துக் காத்திருக்க, பரிவாரங்களோடு வந்து சேர்த்தார் சூர்யா!!  தங்கமணிக்கு குதூகலம் தாங்கவில்லை.  மேடைக்கு மற்றவர்கள் வரவேண்டாம் என தடை இருந்தாலும் தங்கமணி எதையும் கண்டுகொள்ளவில்லை, எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு மேடைக்கே போய் மணமக்கள், திருமண வீட்டார் பலர் என சூழ்ந்திருந்த கூட்டத்தில் நுழைந்து, " ஹெலோ சார், நான் உங்க ரசிகை" எனச் சொல்லி கை குலுக்கினார், உங்களுடன் படமெடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்க, அதற்க்கு சிரித்துக் கொண்டே "சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், முதலில் திருமண வீட்டார் படமெடுத்துக் கொள்ளட்டும், பின்னர் நீங்களும் எடுத்துக் கொள்ளலாம்" என அவர் சொல்ல, நடுவில் ஒரு கருப்பு பூனை பாய்ந்து நீங்க யார் எனக் கேட்க, அவரை சமாதானப் படுத்தி பின்னர் வாய்ப்பு கிடைக்கும் என தங்கமணி எதிர்பார்க்க................  ஹி ..........ஹி ..........ஹி ..........  சூர்யா கிளம்பிச் சென்று விட்டார்!! 

இருந்தாலும், சில படங்களை நான் கீழேயே நின்று எடுத்திருந்தேன்.  தன்னுடைய நட்சத்திரத்தின் பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொள்ளா விட்டாலும், அதே பிரேமில் தோன்றுவதே போதும் என தங்கமணிக்கு மகிழ்ச்சி.  சுவையான திருமண விருந்தை உண்டு வீடு திரும்பினோம்.தினமும், "புத்திகெட்ட மனுஷா தண்டத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்துகிட்டு பதிவு ...பதிவுன்னு போட்டு நேரத்தை வீனடிக்கிரியே,  இதனால பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா? நீ சாதிச்சது என்ன?" அப்படின்னு கரிச்சுக் கொட்டிக் கொண்டிருந்த தங்கமணி இனிமே அப்படி ஒருபோதும் கேட்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்!!  ஏன்னா சென்னையில் பிறந்திருதும் நிறைவேறாத அவரது வாழ்நாள் லட்சியம் பதிவுலகம் மூலம் நிறைவேறிடிச்சே!!  பதிவர்களுக்கு அமுதவன் சார் தரும் முக்கியத்துவம் குறித்து என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது!!  நாம் எல்லோரும் இந்த விஷயத்தில் அவரைப் பின் பற்றலாம்!!   புதுமணத் தம்பதிகள் சீரோடும் சிறப்போடும் வாழ்க பல்லாண்டு............!!

Thursday, August 15, 2013

தலைவா: ஆத்தா உனக்கு ஆப்பு வச்சிடுவேன்டா...........!!முன்னாடி விஸ்வரூபம்னு ஒரு பாடாவதி படம்.  விட்டிருந்தா அதுவே ஊத்தி  மூடியிருக்கும்.  எல்லோரும் சேர்ந்து உசுப்பேத்தி ஓட வச்சிட்டாங்க.  அப்போ உலகநாயகன் வீட்டு முன்னாடி நின்னுகிட்டு, படம் வெளியாகலைன்னா இந்த வீடு முழுகிடும், நான் ஊரை [நாட்டை] விட்டே போகலாம்னு இருக்கேன்....... அது இதுன்னு சீனைப் போட்டு, படத்தை ரிலீஸ் பண்ணி நல்ல காசும் பாத்திட்டாரு!!  இப்போ அதே வரிசையில இன்னொரு படம்.  ரிலீஸ் ஆகாம மாட்டிகிட்டு முழிக்கிது.  தாமதமாகும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படலாம், காரணம் திருட்டு சி.டி.க்கள்.  இந்த சமயத்தில் படத்தின் நாயகன் ஒரு வீடியோவில் தோன்றி, படம் ரிலீஸ் ஆகாத பிரச்சினையால் தங்கள் பட யூனிட்டே ஆடிப் போயிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.  இதில நிறையவே ஆங்கில வார்த்தைகளை கலந்துகட்டி பேசியிருக்கார், காரணம் சரியான தமிழ் வார்த்தைகள் அவருக்கு கிடைக்கல போல!!  [உதாரணத்துக்கு: சின்ன request, சில Unidentified persons-(தயவு பண்ணி இதுக்கு தமிழில் என்னன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க!!), morally also it is wrong, one or two days ]  இந்தச் செய்தியை சொல்லும் போது கைகட்டி இருக்கும் அவரது பவ்யம், ஆங்காங்கே அவரது குரல் உடைவது, பரிதாபமாக முகத்தை வைத்திருப்பது........  எல்லாத்துக்கும் மேல தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்கத்தான் ஆத்தா கொட நாட்டில் அடிக்கடி போய் கேம்ப் போட்டு உழைக்கிறாங்கன்னு சொன்னது......  [சிரிக்காதீங்க மக்கள்ஸ்!!] இது எல்லாம்  எதற்காக ?  சந்திக்கவே மறுத்து திருப்பியனுப்பிய ஆத்தாவின் காதுகளுக்கு இது குறித்த செய்தி போனால் கொஞ்சம் ஈவு இரக்கம் காண்பிக்க மாட்டாரா என்ற ஏக்கம் தான்.  ஆனால் இதையெல்லாம் பார்த்து நம்மால் தான் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.  காரணம் படங்களில் அவர் பேசிய பொறி பறக்கும் பன்ச் டயலாக்குகள்.  உதாரணத்துக்கு சில......


உன்கிட்ட ஆளு,  அதிகாரம்,பதவின்னு சகலமும் இருக்கலாம்.......என்கிட்ட நேர்மை இருக்கு. நெஞ்சில தில் இருக்கு..........எல்லாத்துக்கும் மேல எனக்கு ஒண்ணுன்னா உயிரைக் குடுக்க ஒரு [இளிச்சவா] கூட்டமே இருக்கு!! மோதனும்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் மந்திரின்னும் பாக்கமாட்டேன், மன்னருன்னும் பாக்கமாட்டேன்.........  மோதிப் பாத்துடுவேன்..........   [இந்த சமயத்துக்கு இது ஏடா கூடமா இருக்குமே]

நீ அடிச்சா அடி விழும்...........  நான் அடிச்சா இடி விழும்............

கில்லிடா....................


அணைய கட்டி தடுக்கறதுக்கு நான் ஒன்னும் கால்வாய் இல்லடா..........காட்டாறு.........

உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா......... வேற.........    வேற.........   வேற.........    வேட்டைக்காரன் தாண்டா வேணும்.......

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா.............


ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்..............

நீ சொல்லுவ..........  நான் செய்வேன்.......... நான் அடுத்தவன் பிரச்சினைய தொடறது கூட இல்ல...........  ஆனா ஆட்டம், கோதா, போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்பேன்..........கில்லி.......கில்லி மாதிரி.......  முடிவு பண்ணி இறங்கிட்டேன்........ஃபீல் பண்ண மாட்டேன் back-கும் அடிக்க மாட்டேன்........ once பிக் அப் ஆனா......... ஆனது தான் போய்கிட்டே இருப்பேன்...........  ஜாக்கிரதை.........

பூமிக்குள்ள போனவன் புழுதிக்குள்ள இருந்து வர்றானேன்னு  பாக்கிறியா?!  புயல்........  எப்பவுமே புழுதியோடத்தாண்டா வரும். டிஷ்யூம்..........!! [ஒரு அடியாள் பறந்து போய் விழுகிறார்].

ஆம்பிளைன்னா அர்த்தம் தெரியுமாடா உனக்கு ?  இப்படி அஞ்சடி கேப்ல ஆறடி அல்லக்கைங்களோட வர்றது இல்லடா......... ஹூம் டிஷ்யூம்..........!!  [ஒரு தடியன் பத்தடி பறந்து போய் விழுகிறார்...!!!] எங்கயும் எப்போதும் எது நடந்தாலும் கண்ணுல நெருப்போட, கையில முறுக்கோட, நெஞ்சில தில்லோட ஒத்தையா நின்னே சமாளிக்கிறான் பாரு......... [கையால் தன்னையே காட்டியபடி.........]  அவன் ஆம்பிளை..........!!
ஏய்.........  நம்ம பேச்சு மட்டும்தான்டி சைலண்டா[?!] இருக்கும் ...  ஆனா அடி........சர்ர்ர்ர்ர்ர்ர்ர  வெடி.........  [அதுசரி சைலண்டா எப்படி பேசுறது.......  யாராச்சும் சொல்லுங்கப்பா!!]

டேய்.......  நாங்க அப்பன் பேச்சை கேக்க மாட்டோம்........ அது வய்ய்ய்யசு.......... ஆனா அதே அப்பனுக்கு எதாச்சும் பிரச்சினைன்னு வய்யி......எவன் பேச்சையும் கேக்க மாட்டோம்.......டிஷ்யூம்..........!!  [தீர்ந்தான் இன்னொருத்தன்!!].  பிரிச்சு மேஞ்சிடுவோம்.......... [நிஜத்துல அப்பன் பேச்சை கேக்காம இருந்திருந்தா தான் பிரச்சினையே இல்லியே!!]நான் யார் தெரியுமா ?

வில்லன்: நீ ACP [SAC ?!] யோட புள்ளையா ?   

புள்ளை  இல்லடா.......  புலி.......புலி.......புலி.......

காடுன்னா நான் சிங்கம்........  வானம்னா இடி.........  கடல்னா சுறா.........  காத்துன்னா....... சூசூசூசூசூசூசூசூறாவளி......... சும்மா.........சுத்தீதீதீ .......சுத்தி ...அடிக்கும்.......!!


தொடமாட்டேன்.......தொட்டா விட மாட்டேன்........  உண்டு.....உண்டு.....உண்டு..... இல்லைன்னு ஆக்கிடுவேன்.......!!

இப்படியெல்லாம் பேசிய பஞ்ச் வீரன், பஞ்ச வீரனாகலாமா?  சென்னை ரவுடிங்க அத்தனை பேரையும் ஒத்த கையாள ஒழித்துக் கட்டி தங்கையை வாழ வைத்து, காதலியின் உள்ளத்தையும் கவர்ந்த கள்வன் இன்னைக்கு தப்பு பண்ணிட்டு டீச்சர் முன்னாடி பேந்த பேந்த  முழிச்சிகிட்டு நிற்கும் பையனைப் போல  அப்பாவியா மூஞ்சிய வச்சிக்கிட்டு நிற்கலாமா?  எனக்கென்னவோ இராதா மோகனின் "பயணம்" படத்தில் ப்ரித்விராஜை பார்த்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர் கலாய்க்கும் காட்சிகள் தான் மனக்கண் முன்னே ஓடுகிறது.  நிழல் வேறு........நிஜம் வேறு!!  தலைவா...........  எங்கே போச்சு இத்தனை வீர வசனங்களும்?  

ஒன்று மட்டும் நிச்சயம், படம் ரிலீஸ் ஆவது நிரந்தரமாக தடுக்கப் படப் போவதில்லை, "என்னை பகைத்துக்கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?" என்ற பாடம் சிலருக்கு கற்ப்பிக்கப் படும், அவர்கள் கற்றவுடன் படம் ரிலீசாகும், அவ்வளவுதான்!!  

ஆனா, இந்த நேரத்துக்கு ஒரு வசனம் மிகப் பொருத்தமா இருக்கும்:

"ஆத்தா மனசுல அத இதன்னு நினைக்க வச்சு....... நாளைக்கு என்ன ஏமாத்துன..........  ஆத்தா உனக்கு ஆப்பு வச்சிடுவேன்!!"

"ஆத்தா...........  ஆப்பு வைக்குதா..??!!"

எந்த ஆத்தா? இந்த காணொளியைப் பாருங்க!!Tuesday, August 6, 2013

கொஞ்சம் ஓவராப் போனா என்னவெல்லாம் ஆகும்?

1. தமிழன் ஃ பாஷன் மோகம் புடிச்சா என்ன பண்ணுவான்?
 
வேட்டிக்கு ஜிப்பு வைப்பான்.
 
 
2. சீக்ரெட் ஏஜென்ட் தன்னைப் பத்திய இரகசியத்தை எப்படியெல்லாம் மறைச்சு வைப்பான்?
 
விசிடிங் கார்டைக் கூட Blank-காத்தான் குடுப்பான்.

3. உரிச்ச வாழைப் பழ சோம்பேறி என்பவன் யார்?
 
காலை வாக்கிங் போறேன்னு கிளம்பி போயிட்டு திரும்ப வர்றதுக்கு லிப்ட் கேட்டுகிட்டு நிப்பான்.
 
4. யார் கரார் மேனேஜர்?
 
டாக்குமெண்ட் எதைக் குடுத்தாலும் அதோட ஜெராக்சில் நம்மை கையெழுத்து போடச் சொல்லி வாங்கி வச்சிகிறவர் அப்படின்னு நீங்க நினைக்கலாம், அதான் இல்லை. வெள்ளை பேப்பர் ஓசி குடுத்தாலும்
கூட அதை ஜெராக்ஸ் எடுத்து அதில் நம்மை கையெழுத்து போடச் சொல்லி வாங்கி வச்சிகிறவர் தான் ரார் மேனேஜர்!!

5. தி மாணிக்கம் யார்?
 
கண்ணாடி முன்னாள் நின்னுகிட்டு இந்த மூஞ்சியை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கிறேன்னு அரை மணி நேரமா முழிக்கிறவர்!!

6. வடிகட்டின கூமுட்டை ராமசாமி யார்?
 
கண்ணாடி கதவுகிட்ட போனாலும் சாவித் துவாரம் வழியா பார்ப்பவர்.

7. நேர்மையின் உச்சகட்டம் எது?
 
கர்ப்பிணியாக இருப்பதால் ஒன்னரை டிக்கெட்டை கேட்டு வாங்குவது!!

8. கொடூரமான தற்கொலை முறை எது?
 
அபூர்வ சகோதரர்கள் கமலஹாசன் நண்பர்கள் பிளாட்பாரத்தில் இருந்து ரோட்டில் விழுவது.

9. தண்ணீர் பஞ்சம் ரொம்ப மோசமானதை எப்போது தெரிந்து கொள்ளலாம்

மாடு பால் பவுடராகவே கறந்தால்........ அது உண்மையிலேயே கொடூரமான பஞ்சம் தான்!!
 
10.  "மாந்தோப்பு கிளியே" சுருளிராஜனையும் மிஞ்சும் கஞ்சன் யார்?
வீடு எரியும்போது தீயணைப்பு படைக்கு மிஸ்டு கால் குடுத்து விட்டு உட்கார்ந்திருப்பவன்!!
 

Friday, August 2, 2013

இறை நம்பிக்கையை பிரச்சாரம் செய்வது சரியா?

வணக்கம் மக்கள்ஸ்!!

நாட்டில் சில Mr .கிளீன் எனப்படும் "ரொம்ப நல்லவங்க" இருக்காங்க.  ஊர் உலகத்துல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருந்தாலும், இறைநம்பிக்கை என்ற ஒன்று மக்கள் மத்தியில் இருப்பது இவர்கள் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கும், அதில் ஓட்டைகள் உள்ளதாகச் சொல்லி அவற்றை எண்ணுவதையே தொடர்ந்து குல தொழிலாக செய்து வருவார்கள்.  உதாரணத்துக்கு உலகில் பல மத நம்பிக்கைகள் இருப்பதால் தான் சண்டை சச்சரவுகள் வருகிறது அது இல்லாவிட்டால் எல்லோரும் அண்ணன் தம்பிகளாகி ஒற்றுமையாகி விடுவார்கள் ஆகையால் இறைநம்பிக்கை  இருக்கக் கூடாது என்பது இவர்களது இவர்களுடைய நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு.    அப்படியே ஒருவேளை இறை நம்பிக்கை இருந்தாலும், அதைப்பற்றி வெளியில் எந்த விதத்திலும் வாயைத் திறக்கக் கூடாது, நாலு சுவத்துக்குள்ள வச்சு கமுக்கமா முடிச்சிடனும். 

இந்த மாதிரி கூறுகெட்ட குக்கர்கள் நாத்தீகர்களா என்றால் அதுவும் இல்லை.  இறைவன் இருப்பதையும் ஒப்புக் கொள்வார்கள், ஆனால் இறைவனைப் பற்றி எதுவும் பேசக்கூடாது.  ஏன் பேசக்கூடாது?  அப்படி பேசினால் உன் கடவுள், என் கடவுள் என சண்டை வந்துவிடும்.  ஆகையால் பேசக்கூடாது.  சரி, எதைப் பத்திதான் பேசுவது?  சூதாடி கிரிக்கெட் ஆட்டத்தைப் பத்தியும், எந்த நடிகை யார் கூட இப்போ இருக்கிறாள் என்பது பத்தியும் எவ்வளவு வேண்டுமானாலும் பொதுவில் பேசி மகிழலாம்.  இந்த மாதிரி முற்போக்கு சிந்தனையாளர்கள்[?] இப்போ  சந்துக்கு சந்து பெருகி சமுதாயத்தைக் காக்கக் கிளம்பிவிட்டார்கள், என்பது தான் துரதிர்ஷ்டம்.

கடவுளைப் பற்றி யாரும் பேசக் கூடாது.  அப்போ எனக்கு அவரைப் பத்தி தெரிஞ்சுக்க என்னதான் செய்வது?  இறைவனை அடைய யார் உதவியும் உனக்குத் தேவையில்லை. ஞானம் எல்லாம் உனக்குள்ளேயே இருக்கிறது.  உள்ளேயே தேடு.  ரூம் போட்டு யோசி, சீக்கிறமே ஞானியாகி விடுவாய்.  எந்த புத்தகத்தையோ மனிதரையோ பின்பற்ற வேண்டியதில்லை. [அதுசரி, அதுதான் அவனுக்குள்ளேயே எல்லாமே இருக்கே, அப்புறம் உங்க பிரச்சாரம் எதுக்கு? ]

அறிவுஜீவிகளே, யார் அறிவுரையும் கேட்க கூடாது என்பதே உங்கள் கொள்கை, ஆனால் உங்களின் இந்த அறிவுரையை எல்லோரும் ஏற்று நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்,  இது முரண் அல்லவா?  உங்க அறிவுரைப் படி பார்த்தால், முதலில் நீங்க சொல்வதைத்தான் நிராகரிக்க வேண்டும்!!  யார் பேச்சையும் கேட்க வேண்டியதில்லை என்பதைக் கூட இன்னொருத்தர் எடுத்துச் சொல்லித் தானே புரிய வைக்க  வேண்டியிருக்கிறது?  ஆக, அடிப்படையிலேயே இது கூமுட்டைத் தனமான வாதம்.

இந்த மாதிரி அரைவேக்காடுகள் பிரசாரத்தை கேட்டால் புதைகுழியில் விழுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.  நமக்கு வழிகாட்டி பகவத் கீதை.  அதில் பகவான் என்ன சொல்கிறார்?  குருவிடம் சரணடைந்து, பணிவிடை செய்து, கேள்விகள் கேட்டு கீதையின் ஞானத்தை கற்றுக் கொள்ளச் சொல்கிறார்.

tad viddhi pranipatena
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darsinah
[B.G: 4:34]

அதுமட்டுமல்ல, கீதையைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவரே தனக்கு மிகவும் பிரியமானவர் என்றும், அவரை விட பிரியமானவர் வேறொவர் ஒருபோதும் இல்லை என்றும் பகவான் கூடுகிறார்.


na ca tasman manusyesu
kascin me priya-krttamah
bhavita na ca me tasmad
anyah priyataro bhuvi  [B.G: 18:69]


உனக்குள் எல்லாம் இருக்கிறது, ஆனால் அதை நீ உணர ஒரு ஆசானின் உதவி நிச்சயம் தேவை.   நாம் உண்மையான குருவைப் பின்பற்ற வேண்டும், ஏன்?  பகவான் கீதையில் சொல்வதால்.  அதைப் போலவே இறைவனைப் பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும், ஏன்?  நிறைய சுவையான உணவு கிடைத்தால் நாம் மட்டுமா உன்ன வேண்டும்?  பசியோடு இருக்கும் பிறருக்கும் கொடுக்க வேண்டாமா?  எல்லோருக்கும் தெரியும் என்றால் ஏன் பகவான் கீதையை எடுத்துச் சொல்பவனே எனக்குப் பிரியமானவன் என்று சொல்ல வேண்டும்?   நாம் இறைவனைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம், ஏனெனில் அதுவே இறைவனுக்கு பிரியமான செயல்.

 
மேலும் சொல்வோம்..................