Wednesday, October 31, 2012

எவ்வளவு பொறுமை வேண்டும், இந்த வடிவில் மரங்களை வளர்க்க!!
கால மேலாண்மை[Time Management] : செயல் முன்னிலைப் படுத்தல்.


ஒருநாள், பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பு தொடங்கும் முன்னர், தான் கொண்டுவந்த பெரிய கண்ணாடி ஜாடியை மேஜையின் மீது வைத்தார்.  [செத்தம்டா நாம.......... என்று மாணவர்கள் நினைத்திருக்கக் கூடும்.....!!] பின்னர் தான் கொண்டுவந்திருந்த பெரிய கற்களை அதனுள் கவனமாக அடுக்கினார், ஜாடி நிரம்பிய பின்னர், மாணவர்களைப் பார்த்து கேட்டார்,

"இதுக்கு மேல இதனுள் எதையாவது நிரப்ப முடியுமா?"

"முடியாது!!"  என்றனர் மாணவர்கள்.
ஆசிரியர் புன்னகைத்தவாறே, இன்னொரு பையை எடுத்தார், அதில் இடிக்கப் பட்ட பொடிக்கல் இருந்தது, அதை அப்படியே ஜாடியின் மேல் கொட்டினார், அது பெருங் கற்களுக்கு நடுவே இருந்த இடைவெளியில் எளிதாக நுழைந்து ஜாடி முழுவதும் அடைத்துக் கொண்டது.

மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்.
 
"இப்போ இதுக்கு மேல இதனுள் எதையாவது நிரப்ப முடியுமா?"

"முடியாது!!"  என்றனர் மாணவர்கள் மீண்டும்.

முடியும் என்ற ஆசிரியர்,  இன்னொரு பையில் இருந்து மணலை எடுத்து கொட்டினார். அது முன்னர் கொட்டப் பட்ட பொடிக்கல்லுக்கு இடையே உள்ள கேப்பில் அழகாக பரவி நிரம்பியது.

இப்ப சொல்லுங்க, இதிலிருந்து நீங்க கத்துகிட்ட வாழ்க்கைப் பாடம் என்ன?

ஒரு பையன் எழுந்து நின்னு சொன்னான்,

"வாழ்க்கையில இதுக்கு மேல இடமில்லை எனத் தோன்றினாலும், மென்மேலும் தினிச்சு கிட்டே இருக்கலாம்!!"

ஆசிரியர், அதை தவறு என உட்காரச் சொல்லி பின்னர்  ஜாரில் உள்ளதை மேஜையில் கொட்டினார்.  மாணவர்களை அழைத்து மீண்டும் ஜாடியை நிரப்பச் சொன்னார், ஆனால் ஒரு கண்டிஷன், பெரிய கற்களை கடைசியாகப் போடவேண்டும்.  மாணவர்கள் முதலில் மணலையும், பின்னர் பொடிக்கற்களையும் நிரப்பி, பின்னர் பெரிய கற்களை அடுக்க முயன்றனர், ஜாடி நிரம்பியது, பாதிக்கும் மேல் பெரிய கற்கள் வெளியிலேயே இருந்தன.

பெரிய கற்களை முதலில் போடாவிட்டால், எல்லாவற்றையும் ஜாடியில் நிரப்ப முடியாது...........!!

நீதி: நீங்கள் வாழ்க்கையில் கட்டாயம் செய்ய வேண்டியவை பெரிய கற்கள், அவற்றைக் கண்டறிந்து அதற்க்கு முக்கியத்துவம் கொடுங்கள், சில்லறை விஷயங்களை அடையாளம் கண்டு அதற்க்கு மீதமுள்ள நேரத்தை ஒதுக்குங்கள்.  சில்லறை விஷயங்களில் அதிக பட்ச நேரம் செலவிட்டால் பின்னர் முக்கியமான காரியங்களை செய்து முடிக்க இயலாமல் போகும்.


Tuesday, October 30, 2012

ஆயிரம் கைகள்: காது கேளாத சீனப் பெண்களின் வியத்தகு நடனம்.

 
கீழேயுள்ள காணொளி சீனப் பெண்கள் ஆடுவது.  இதில் என்ன வியப்பு?  அவங்க யாருக்கும் காதே கேட்காது...........[அப்புறமென்ன பேசவும் முடியாது...... :( ].  இருந்தாலும் அவங்க பின்னணி இசைக்கேற்ப துல்லியமா நடனம் ஆடியிருக்காங்க.  ஆர்கெஸ்ட்ராக்களில் ஒருத்தர் கையில் பிரம்பை வைத்துக் கொண்டு  ஆட்டி கொண்டேயிருப்பதையும் அதைப் பார்த்துக் கொண்டே மற்ற நூற்றுக் கணக்கான கலைஞர்கள் தங்கள் வெவ்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதையும் நாம் பலமுறை கவனித்திருப்போம்.  அதே முறையில் இங்கே மேடையின் ஓரத்தில் சைகை முறையில் அவர்கள் வழிகாட்டப் பட்டு இயக்குவிக்கப் படுகிறார்கள், இசைக்கும் நடனத்துக்கும் அவ்வளவு பக்கா பொருத்தம், இவர்களுக்கு காது கேளாது என்று யாரும் நம்பமாட்டார்கள்!!


    


இந்த நடனத்துக்குப் பெயர்:  Thousand-Hand Guan Yin, Bodhisattva of Compassion.
இதை ஆடிய குழு: China Disabled People’s Performing Art Troupe

Guan Yin என்ற வார்த்தைக்கு புத்த மதத்தில் இரக்கத்தின் தேவதை என்று பொருள். Guan Shi Yin என்ற பெயரின் சுருக்கமே Guan Yin. Guan என்றால் கவனித்தல் என்று பொருள், Shi என்றால் உலகம்.  Yin என்றால் ஒலிகள் முக்கியமாக கஷ்டப் படுபவர்கள் எழுப்பும் ஈன ஒலி.  மொத்தத்தில் Guan Yin என்றால் கஷ்டப் படுபவர்களின் கதறலைக் கேட்டு அவர்கள் உதவிக்கு ஓடிவரும் கருணையுள்ளம் கொண்ட தேவதை என்று அர்த்தம்.

Monday, October 29, 2012

பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.


நீங்கள் ரே ஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது [கம்பியூட்டர் எல்லாம் பார்க்கிறீங்க, நீங்க எங்கே வாங்கியிருக்கப் போறீங்க..........!!] ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் கலனின் மேல் கடைக்காரர் ஒரு பெரிய புனலை வைப்பார், அதில் மண்ணெண்ணெயை ஊற்றுவார்.  அது வடியும்போது சுழன்று கொண்டே இறங்கும்!!  நீங்கள் இந்தியாவில் வசித்தால் அது வலஞ்சுழியாக [கடிகார முள் சுற்றும் திசை Clockwise] சுற்றிக் கொண்டே இறங்குவதைப் பார்க்கலாம்.  பாத்திரம் கழுவும் தொட்டிகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றிலும் அடியில் துளையிட்டு நீரை நிரப்பி நிதானமான பின்னர் திறந்துவிட்டால் கூட நீர் வலஞ்சுழியாகவே சுற்றுவதைப் பார்க்க முடியும்.  இது ஏதோ தண்ணீர் மூலக்கூறுகளுக்கிடையே ஆரம்பத்தில் உள்ள வேக வேறுபாட்டால் ஏற்படுகிறது என்று நினைத்து, நீரை நிரப்பி மூன்று நாட்கள் ஆடாமல் அசையாமல் வைத்து திறந்து பார்த்திருக்கிறார்கள், அப்பவும் அது வலஞ்சுழியாகவே சுற்றியது!!  காரணம் என்ன?

பூமியை இரண்டாகப் பிரிக்கும் பூமத்திய ரேகைக்கு வட திசையில் உள்ள எல்ல பகுதிகளிலும் மேற்சொன்ன சோதனையில்  வலஞ்சுழியாகவும், தெற்குப் பகுதியில் உள்ள பகுதிகளில் இடஞ்சுழியாகவும் மிகச் சரியாக பூமத்திய ரேகையில் எந்தப் பக்கமும் சுழலாமலும் நீர் கீழே இறங்கும்.  இந்த விளைவைக்காண பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்து சில அடி தூரம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சென்றாலே போதும். இதை பின்வரும் காணொளியில் காணலாம்.


இது எதனால் நிகழ்கிறது?  பூமி தனக்கென்று ஒரு அச்சில் தன்னைத் தானே சுழல்கிறதல்லவா?   அதற்க்கு 24 மணி நேரமும் ஆகிறது என நமக்குத் தெரியும்.  பூமத்திய ரேகையில் அதன் சுற்றளவு அதிகம், அப்படியே வடக்காகவோ தெற்காகவோகாகவோ துருவப் பகுதிகளை நோக்கி செல்லும்போது இந்தச் சுற்றளவு குறைந்து கொண்டே சென்று துருவத்தில் பூஜ்ஜியமாகிறது.  ஆனால் பூமியைப் பொறுத்தவரை ஒரு சுற்றை சுற்றி முடிக்க எல்லா வட்டத்துக்கும் அதே 24 மணி நேரம்தான் பிடிக்கும். 
பூமத்திய ரேகையிலிருந்து மேலேயோ [வட துருவம்], கீழேயோ [தென் துருவம்] 20,40,80 டிகிரி என செல்லச் செல்ல வட்டம் சிறிதாகிக் கொண்டே போகிறது.


ராட்டினங்கள் சுற்றும் போது வெளியே உள்ள பொம்மைகள் வேகமாகவும், உள்ளே செல்லச் செல்ல மெதுவாகவும் சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள்.  அதே மாதிரி அதிக சுற்றளவுள்ள பூமத்திய ரேகைப் பகுதியில் ஒரு பொருள் இருந்தால்  அதி வேகமாகவும், அதிலிருந்து  விலகிச் செல்ல செல்ல இடத்துக்கு தக்காவாறு குறைந்த வேகத்திலும் பயணிக்கும். துருவப் பகுதிக்குப் போய்விட்டால் ராட்டினத்தின் குடை மேல் வைக்கப் பட்ட பொம்மை மாதிரி தன்னைத் தானே சுற்ற வேண்டியதுதான்!!

துருவங்களை நோக்கி நகரும்போது வேகமான பயணிக்கும் இடத்தில் இருந்து குறைந்த வேகப் பகுதிக்கு செல்வதால் உங்கள் பாதை நேர்க்கோடாக இருக்காது. பூமத்திய ரேகையில் இருந்து வடபாதியில், எங்கிருந்து வேண்டுமானாலும் வட துருவத்தை நோக்கிச் சென்றால் வலப்புறமாகவும், தென் பாதியில் எங்கிருந்து தென் துருவத்தை நோக்கிச் சென்றாலும் இடப்புறமாகவும் உங்கள் பாதை வளையும் 

நீங்கள் பூமத்திய ரேகை பகுதியில் இருந்து வட பகுதியில் இருப்பதாகக் கொள்வோம். நீங்கள் பூமியின் சுழற்சி காரணமாக ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பீர்கள், அப்படியே காற்றில் எழும்பி மேலும் வடக்கு நோக்கிச் செல்வதாகக் கொள்வோம்.  வடக்கே செல்லச் செல்ல வேகம் குறைவு, வேகமான வண்டி மெதுவான வண்டியை முந்திச் செல்வது போல நீங்கள் பூமி சுற்றும் திசையில் சற்று முந்திச் செல்வீர்கள், எனவே நீங்கள் நேர்க்கோட்டில் பயணிக்க முயற்ச்சித்தாலும் வலதுபக்கம் நகர்ந்துவிடுவீர்கள்.  அதே போல அதே பகுதியில் எதிர் திசையில் வந்தால் இடது புறம் திருப்பப் படுவீர்கள்.  இதே விளைவுதான் நீங்கள் புனலில் ஊற்றப்படும் மண்ணெண்ணெயிலும் வலஞ்சுழியாக திரவம் சுற்றுவதாகப் பார்க்கிறீர்கள்.  மிதக்கும் நீர் மூலக்கூறுகள் புனலில் வடக்கு நோக்கி நகர்ந்தால் வலது புறமாகவும், வடக்கே இருந்து தெற்கு நோக்கி நகர்ந்தால் இடது புறமாகவும் திரும்பும், மொத்தத்தில் வலஞ்சுழியாக சுற்றிக் கொண்டே வடியும்.  நிலநடுக் கோட்டில் இருந்து தென்பகுதியில் இதே காரணத்தால் இடஞ்சுழியாகச் சுழன்ற வண்ணம் வடியும்.  நடுக்கோட்டி ப்ச்........ எந்தப் பக்கமும் சுழலாது!!

Saturday, October 27, 2012

வாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத சார்லி சாப்ளின் ஐம்பெரும் கிளாசிக் படங்கள்- யூடியூபில்

1. The Great Dictator (1940) 


2. The Gold Rush - Charlie Chaplin (1925) 

 

3. Modern Times (HD)


4. The Kid [HD]

5. The Circus

பெண் விடுதலை பற்றி சூப்பர் ஸ்டார்!!

சென்ற நூற்றாண்டிலிருந்து   பெண் சுதந்திரம், பெண் விடுதலை, ஆண்-பெண் சம உரிமை என பல இயக்கங்கள் கிளம்பியிருக்கின்றன.  பெண் உரிமையைப் பற்றி பெண்கள் கேட்டு போராடினா பரவாயில்லை, கூடவே குற்றவாளியான  ஆண்களும் சேர்ந்துகிட்டு இருக்காங்களே,  ஏன் என்று யோசிக்க வேண்டும்.  மேலோட்டமாகப் பார்த்தால், பெண் என்பவள் அடிமை/கொடுமைப் படுத்தப் பட்டவள்,  கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு அனுமதி இல்லை, கணவன் நல்லவனாக இருந்து விட்டால் பரவாயில்லை, கொடுமைக் காரனாகப் போய் விட்டால் முழு வாழ்க்கையுமே நரகம், பேசாமல் வெளியேறி விடுவதே நல்லது என்று இதில் பல நல்ல நோக்ககங்கள் தென்படும்.  ஆனால் இவனுங்க அதுக்காக அந்தக் கும்பலில் போய்ச் சேரவில்லை.   ஆடு நனையுதே என்று அழும் ஓநாய்கள் இவை என்பதை சற்று கூர்ந்து பார்த்தால் புரியும்.


பொதுவாக ஒரு பெண் என்பவள் தங்கம் வைரம் பிளாட்டினம் போல பொக்கிஷம் ஆவாள்.  நம்மிடம் இத்தகைய விலையுயர்ந்த பொருட்கள் இருந்தால் என்ன செய்வோம்?  வாசலில் கட்டியிருக்கும் பால் போடும் பயிலா வைப்போம்?  இல்லை, வீட்டின் முக்கிய அறையில் பாதுகாப்பான பெட்டகத்தில் தான் வைப்போம்.  அதை அடிக்கனும்னு நினைக்கிறவன் என்ன செய்வான்?  ஒன்னு அதை விட்டுட்டு நாம் எங்கேயாவது வெளியூர் போவாமா என்று பார்ப்பான், அல்லது ஏன்யா அவற்றை போட்டு போட்டு அடிமைப் படுத்துகிறாய்,  கொண்டுவந்து வாசலில்  போட்டு விட்டுப் போ என்ன ஆகிவிடப் போகிறது என்று நம்மை நம்ப வைக்க முயற்சிப்பான்.  இந்த பெண் விடுதலை இயக்கத்தில் உள்ள ஓநாய்களும் இதே நோக்கில் தான் செயல்படுகின்றார்கள்.

உங்க மனைவி பெண் விடுதலை இயக்க அமைப்பாளரா இருந்காங்கன்னுதானே சொன்னீங்க?


ஆணும் பெண்ணும் ஒருபோதும் எந்த வகையிலும் சமமாக மாட்டார்கள்.  இருவரும் மனித இனம் என்பதைத் தவிர்த்து, உடலமைப்பு, உடல் வலு, சிந்திக்கும் திறன் கோபம், பரிதாபப் படுத்தல் என எல்லா விதத்திலும் இருவருக்கும் எக்கச் சக்கமான வேறுபாடு உள்ளது.  முக்கியமாக இருவரும் உடல் ரீதியாக இணைந்தால் நஷ்டம் பெண்ணுக்கு மட்டும்தான் ஆணுக்கு ஒன்றும் ஆகாது.  பஞ்சு நெருப்பில் விழுந்தாலும், நெருப்பு பஞ்சில் வந்து விழுந்தாலும் நஷ்டம் பஞ்சுக்குத்தான்....

அவள் அப்படித்தான் -வீடியோ துண்டு-1

இந்த Liberty, Equality பத்தி எனக்கு எதுவும் தெரியாது.  பிறப்பிலும் சரி , பழக்க வழக்கத்திலும் சரி ...........[கொஞ்சம் தயங்கி] படுக்கையறையிலும் சரி, ஆணும் பொண்ணும் சத்தியமா சமமா இருக்கவே முடியாது.  முக்கியமா படுக்கையறையில சமத்துவத்துக்கு இடமே கிடையாது.

இந்த பொம்பளைங்களும் அரசியல்வாதிங்களும் ரெண்டும் ஒன்னு, அவங்க நினைச்சத அடையறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வாங்க!!  ஆனா அவங்க என்ன நினைக்கிறாங்கங்கிறது அவங்களுக்கே புரியாது!! [இதைச் சொன்னவர் சாணக்கியர்!!!]

மேற்சொன்ன வேறுபாடுகளால் ஒரு பெண் எப்போதும் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது எப்போவும் யாரோட பாதுகாப்பிலாவது  இருப்பதே அவர்களுக்கு நல்லது.  பொக்கிஷம் வங்கி லாக்கரிலோ வீட்டில் மிகப் பாதுகாப்பான இடத்திலோ தான் இருக்க வேண்டும்,  வீதிக்கு வரக் கூடாது.

அவள் அப்படித்தான் -வீடியோ துண்டு-2


Ladies are always dependent.   பொறந்தப்போ they are dependent, அப்பா அம்மா மேல.  வயசு வந்தப்போ  they are dependent,  புருஷன் மேல, வயசு போனப்போ  they are dependent, புள்ளைங்களுக்கு.  அவங்க எப்பவும் independent-ஆ இருக்க முடியாது.  [இது புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது!!]

அப்படியானால் அவர்கள் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டுமா?  இல்லவே இல்லை, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  ஆண்களைப் போல படியுங்கள், வேலைக்குச் செல்லுங்கள், எல்லா துறையிலும் சாதித்துக் காட்டுங்கள், ஆண்களுடன் நட்பாகவும் இருங்கள், ஆனால் அவர்களுடன் ஒரு எல்லையை வைத்துக் கொள்ளுங்கள்.  பெண்விடுதலைக்கு உங்களுடன் போராடும் ஓநாய்களின் நோக்கம் உங்கள் பாதுகாப்பு அரணை உடைக்க வேண்டும், நீங்கள் தெருவில் நிற்க வேண்டும், அப்படி நிற்கும் போது தான் அவனுங்க உங்களை கபளீகாரம் செய்ய முடியும்.

கணவர்களுடன் பிரச்சினை எல்லா காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது ஆனால் முன் காலத்தில் விவாகரத்து என்று கேள்விப் பட்டதாகத் தெரியவில்லை.  இன்றைக்கும் வெளிநாடுகளில் இரு நிருவணங்களுக் கிடையே  பிரிக்க முடியாத உறவு என்பதை இந்தியத் திருமணம் என்றே குறிப்பிடுகிறார்கள்.  இன்றைக்கு ஏன் விவாகரத்து எண்ணிக்கை மிரளும் அளவுக்கு புழுத்துப் போனது?  தொட்டதற்கெல்லாம் கணவனை விட்டு விலகுவது எங்கு பாரத்தாலும் நிகழ்வது ஏன்?  கணவன் சரியில்லை என்று இன்னொருத்தரைத் தேர்ந்தெடுக்கும் பொது, அவனும் சரியில்லை என்றால் என்ன ஆகும்?  எத்தனை பேரை வாழ்நாளில் மாற்ற வேண்டியிருக்கும்?  அப்படி மாற்றினால் அந்தப் பெண்ணிற்கு வழங்கப் படும் பட்டப் பெயர் என்ன?  ஆக, இந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவரத்தான் ஆண் ஓநாய்கள் சில உங்களுடன் சேர்ந்து போராடுவது போல நடிக்கின்றன.  எனவே இது நல்ல தீர்வு அல்ல, நம் முன்னோர்கள் இதே பிரச்சினையை எப்படி சமாளித்தார்கள் என்று பாருங்கள் அதையே இங்கே செயல்படுத்த முடியுமா என்றும் யோசியுங்க.  ஒநாய்களிடமிருந்து உஷாராக இருங்கள்.  

 குறிப்பு:  சினிமாப் படத்தில் வரும் வசனமெல்லாம் நடிகருக்குச் சொந்தமில்லை என்று நீங்கள் வாதிடலாம்,  'நான் எங்கே வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்திடுவேன்" என்பதெல்லாம் வசனகர்த்தாவின் சிந்தனை என நினைப்பவர்கள் இதையும் அவ்வாறே நினைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. உண்மையில் இவை சூப்பர் ஸ்டாரின் சிந்தனைகள், அவர் திரைப்படத்திற்கு வருவதற்கு முன்னர் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் இருந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்பது எனது நம்பிக்கை/கருத்து!!

அவள் அப்படித்தான் முழுப் படம்!!Friday, October 26, 2012

யாரை மெச்சுவது? படமெடுத்தவரையா, படத்துக்கு போஸ் குடுத்தவர்களையா?
நிலவின் மறுபக்கத்தை ஏன் நம்மால் காண முடிவதில்லை?


துணைக் கோள்கள் ஒரு அறிமுகம்: 

சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுக்கும் கிட்டத் தட்ட 140  சந்திரன்கள் உள்ளன. ஜுபிட்டர்-மொத்தம் 62 சந்திரன்கள், சனி-33 சந்திரன்கள்,  புதன், வெள்ளி கிரகங்களுக்கு சந்திரன்கள் இல்லை.  இவற்றில் நமது சந்திரன் அளவில் ஐந்தாவது பெரிய துணைக்கோள் ஆகும்.  மற்ற நான்கும் ஜூபிடர், சனி போன்ற பெரிய கிரகங்களைச் சுற்றுகின்றன.  கோளின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது துணைக்கோள்கள் மிகவும் குட்டியாக உள்ளன, ஒரே ஒரு விதி விளக்கு பூமியும் சந்திரனும் மட்டுமே.  பூமியின் அளவுக்கு ஒரு பந்து செய்து அதற்க்கு சந்திரனைப் போல 49 கோலிகளைப் போடலாம். பூமியை ஒரு தராசில் வைத்து அந்தப் பக்கம் 81 1/2 சந்திரன்களை வைத்தால் முள் சமாமாகக் காட்டும். நிலவின் விட்டம் 3,476 கி.மீ. சந்திரன் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது, குறைந்த பட்ச தூரம் 3,63,300 கி.மீ. பட்ச தூரம் 4,05,500  கி.மீ. பூமியை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் 29.5 நாட்கள். 

மனிதனுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து பெண்ணின் முகத்தை அவன் தவறாமல் ஒப்பிடுவது நிலவுக்குத்தான்!!  கீழே அவள் முகத்தை பாருங்கள்...........


முதல் பிறை to அமாவாசை அத்தனை நாட்களும் எடுக்கப் பட்ட நிலவின் படம்.  இதை உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு விஷயம் புரியும், நிலவு தினமும் வளர்ந்து தேய்ந்தாலும் நமக்குத் தெரிவது ஒரு முகம் மட்டுமே!! ஏன் அவள் தன்னுடை இன்னொரு முகத்தைக் கட்டுவதே இல்லை???

 நம்மால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே எப்போதும் பார்க்க முடியும், அதன் இன்னொரு பக்கத்தை பார்க்கவேமுடியாது, காரணம் என்ன?  ஒரு வேலை நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லையோ?   அதுதான் இல்லை.  நிலவு தன்னைத் தானே நிச்சயம் சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றி வருகிறது.  அப்புறம் ஏன் அதன் மறுபக்கம் நமக்குத் தெரிவதில்லை? காரணம் இருக்கிறது!! நிலவு தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கும் பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கும் ஆகும் காலம் சமமாக இருக்கிறது [29.5 நாட்கள்] ஆகையால் நாம் நிலவின் ஒருபக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


நிலா தன்னைத் தானே ஒரு முறை சுட்டிக் கொள்வதற்கும் பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கும் ஆகும் காலம் சமமாக இருக்கிறது [29 நாட்கள்] ஆகையால் நாம் நிலவின் ஒருபக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறு அல்லாது, அது தன்னைத் தானே சுற்றாமல் பூமியை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்திருந்தாலோ அல்லது ஒரு முறை பூமியை சுற்றி வருவதற்குள் அதன் தற்சுழற்சி ஒரு தடவைக்கு மேல் இருந்திருந்தாலோ அதன் மறுபக்கத்தை நிச்சயம் நம்மால் பார்த்திருக்க முடியும், ஆனால் உண்மையில் அவ்வாறில்லை என்பதை பின்வரும் காணொளி காட்டுகிறது.
அதுசரி,  பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் 365 1/4 முறை தன்னைத் தானேயும் சுற்றிக் கொள்ளும்போது,  பூமியை ஒரு முறை சுற்றி முடிக்கும் நிலவுக்கு மட்டும் அது ஏன் ஒரே ஒரு முறை?  நல்ல கேள்விதான். உண்மையில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிலவும் பூமியைப் போலவே, ஒரு சுற்று முடிப்பதற்குள், பலமுறை தற்சுழற்சியையும் முடிக்கும் வண்ணம் வேகமாக சுழன்றுகொண்டு தான் இருந்தது.  காலப் போக்கில் இந்த வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 29.5 நாட்களுக்கு வந்து Tidal Lock ஆகி எப்போதும் ஒரே முகத்தையே நமக்கு காண்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.  இதற்க்கு காரணம், சூரிய  குடும்பத்தில் எல்லா பிரச்சினைக்கும் காரணமாயிருக்கும் அதே போக்கிரி பொருளீர்ப்பு விசைதான்!!  [Gravitational force] அப்படி என்ன தான் அது செய்தது?

பூமியின் வட துருவத்துக்கு மேலே இருந்து பார்க்கும்போது,  நிலவு தன்னைத் தானே இடஞ்சுழியாகச் [Anti Clockwise] சுற்றிக் கொண்டே பூமியையும் அதே வகையில் இடஞ்சுழியாக சுற்றி வருகிறது.  ஆனாலும், நிலவு கிழக்கில் உதித்து மேற்க்கே மறைவது போலத் தோன்றுகிறது, காரணம் பூமி வேகமாகச் சுழல்வதே.  நிலவு பூமியைச் சுற்றி வர ஆகும் காலத்தில் பூமி தன்னைத் தானே 29.5 முறை சுற்றி  முடித்து விடுவதால் இவ்வாறு தோன்றுகிறது.
பொருளீர்ப்பு விசை [Gravitational Force], தொலைவு r  ஐப் பொறுத்து 1/r^2 என்ற விகிதத்தில் குறைந்துகொண்டே செல்லும்.  அதாவது தரையில் நாம் நின்று கொண்டிருந்தால், புவிஈர்ப்பு விசை நமது காலில் அதிகமாகவும், தலைப் பகுதியில் சிறிது குறைவாகவும் இருக்கும்.  ஆனால், இந்த மாற்றம் ஆறடி மனிதனுக்கு உணரத் தக்க அளவுக்கு பெரிதாக இருக்காது. ஆனால் 3,474 கி.மீ. விட்டமுள்ள நிலவு போன்ற பெரிய உருவங்களுக்கு இந்த வித்தியாசத்தை புறக்கணிக்க முடியாது.  பூமிக்கு அருகாமையில் உள்ள பக்கத்திற்கும், அதற்க்கு நேர் எதிரே உள்ள பக்கத்திற்கும் இடையே பொருளீர்ப்பு விசையில் உள்ள வேறுபாட்டால்,  நிலவின் மேற்ப்பரப்பு இருபுறமும் அரை மீட்டர் [55 செ.மீ] மேலே எழும்பி நீள்வட்ட வடிவைப் பெறுகிறது.  [மேலே உள்ள படத்தில்  நிலவின் A நிலையை கவனியுங்கள்.]   இதை ஆங்கிலத்தில் Tides என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த எழுச்சி  பூமி நிலவு இரண்டின் மையத்தையும் இணைக்கும் கோட்டைப் பொறுத்து சமச்சீராக [Symmetrical] இருக்கும்.  ஆனால், நிலவு B என்ற நிலைக்கு சற்றே நகர்ந்தால் இந்த சமச்சீர் நிலை மாறிவிடுகிறது,   அது நகர்ந்து மீன்றும் பூமி நிலவை இணைக்கும் கோட்டிற்க்கு சமச்சீராக ஆக சற்று தாமதமாகும்.  அந்த தாமதமாகும் நேரத்தில் உயர்ந்த நிலப்பரப்புகளை [நீல வண்ணத்தில் உள்ளவை] பூமி ஈர்க்கிறது, இதில் 1,2 என்ற இரண்டு பகுதிகளையும் ஈர்க்கும் பொது, அதில் 1 -ன் மீதான விசை நிலவின் தற்ச் சுழற்சிக்கு எதிர் திசையிலும் 2 ன் மீதான விசை நிலவு சுழலும் திசையிலும் இருப்பதால் இரண்டும் ஒன்றை ஒன்று சமன் செய்து விடலாம், அனால் 1 பூமிக்கு அருகில் இருப்பதால் அது ஜெயித்து, நிலவின் சுழற்சி வேகத்தை சற்றே மட்டுப் படுத்துகிறது.  மேலும் மேலெழும்பிய பரப்பு [நீல வண்ணத்தில் உள்ளது] நிலவின் சுழற்சிக்கேற்ப்ப மாறிக்கொண்டே இருப்பதால் சுழலும் ஆற்றல் வெப்பமாக மாற்றப் பட்டும் வேகம் மட்டுப் படும்.  இவ்வாறு சில நூறு கோடி ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை இழந்து சுழலும் வேகமும் குறைந்து இன்றைய வேகமான 29.3 நாட்களுக்கு ஒரு தற்சுழற்சி வந்து Tidal Lock ஆகி   விட்டது.  நிலா அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ திருப்ப முயன்றால் ஒரு இடி இடித்து அதே பக்கம் தன்னை நோக்கி இருக்குமாறு பூமியின் ஈர்ப்பு விசை செய்துவிடும்.

இது ஏதோ பூமிக்கும் நிலவுக்குமிடையே மட்டுமே நிகழ்ந்த ஒன்று என நினைக்க வேண்டாம்.  செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் இரண்டு சந்திரன்கள் [ஃபோபோஸ், டெய்மோஸ்], ஜூபிடரைச் சுற்றும்  சந்திரன்களில் டஜனுக்கும் மேற்ப்பட்டவை, சனி கிரகத்தின் பல சந்திரன்கள், யுரேனஸ், நெப்டியூன்  கிரகத்தின் எல்லா துணைக்கோள்கள் என இத்தனையும் நமது சந்திரனைப் போலவே கிராவிட்டி பிணையில் [Gravity Lock /Tidal Lock ] மாட்டிக் கொண்டு ஒரே முகத்தை மட்டுமே அவற்றின் கோள்கள் பக்கம் திரும்பிய வண்ணம் சுற்றிக் கொண்டிருக்கின்றன.  சனி கிரகத்தின் ஹைபரையான் [Hyperion]  இந்த மாதிரி கட்டுக்குள் இன்னமும் வரவில்லை என்பது ஆறுதல்!!

நாம் எப்போதும் பார்க்கும் நிலவின் முகம்.


நாம் பார்த்திராத நிலவின் முகம்.  நிலவின் மறுபக்கத்தை முதன் முதலாக ரஷ்யாவின் லூனா-3 என்ற விண்கலம் 1959 ஆம் ஆண்டு படமெடுத்தது.

 சரி பூமி மட்டும் தான் நிலவை இந்த மாதிரி முகத்தை திருப்ப விடாமல் செய்யுமா?   நிலவு பூமியின் மேல் எந்த தாக்கத்தையும்  செலுத்தாதா? ஆம், செலுத்துகிறது.  நிலவு, சூரியன் இரண்டும் சேர்ந்து பூமியின் மேல் அதிகாரம் செலுத்தத்தான் செய்கின்றன.  பூமியில் உள்ள நிலம்,நீர் மற்றும் காற்று ஆகிய மூன்றின் மேலும் இவற்றின் ஈர்ப்பு விசை செயல் பட்டு, மேலே சொன்ன அதே முறையில் பூமியில் Tides என்னும் பேரலைகளை ஏற்படுத்துகின்றன,  இவற்றில் நீரில் ஏற்ப்படும் பேரலைகளை மட்டுமே நாம் உணர முடிகிறது, மற்றவை நாம் உணரா வண்ணம் நடக்கிறது.  இவற்றின் காரணத்தால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்த வண்ணம் உள்ளது.  ஒரு நாளின் அளவு நூறு வருஷத்துக்கு 1.7 மில்லி செகண்டுகள் அதிகரிக்கும்!!  சில நூறு கோடி ஆண்டுகள் கழித்து பூமியும்  ஒரே ஒரு முகத்தை மட்டுமே நிலவுக்குக்  காண்பிக்கும்,  அப்புறம் போகப் போக பூமி சூரியனுக்கே ஒரே ஒரு முகத்தைக் காண்பிக்கும் காலம் வந்துவிடும்!!