Showing posts with label பார்த்து ரசிக்க. Show all posts
Showing posts with label பார்த்து ரசிக்க. Show all posts

Monday, April 8, 2013

நாணயங்கள்: வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இன்று வரை........


"மூன்று பைசாவுக்கு தெரு முனை கடைக்காரன் கை நிறைய அள்ளி கொடுக்கும் கொடுக்காபுளி " நன்றி:
பழைய ஞாபகந்தான் பேராண்டி

இப்படியெல்லாம் ஏங்கும் நல்ல உள்ளத்துக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.





புரட்சித் தமிழனின் யோசனையை ஏற்று அண்ணன் கவுண்டமணிக்கு ஃபோன் போட்டு வாங்கிய ஓட்டை காசு!!






Tuesday, March 5, 2013

கொடிய மிருகத்தின் தாயன்பு!!

இந்த காணொளியை என் நண்பர் ஒருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார்.  மனதைத் தொட்ட இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதால் இங்கே வெளியிடுகிறேன்.






Monday, March 4, 2013

பெங்களூரு பன்னாரகட்டா உயிரியல் பூங்கா !

அன்பு மக்காஸ்,

நேற்று பெங்களூரு பன்னாரகட்டா தேசிய உயிரியல் பூங்காவிற்குச் சென்றிருந்தோம்.  [வேறென்ன உறவினர்கள் வந்திருந்தார்கள், நாமாகப் போவோமா!!].  அங்கேயெல்லாம் உங்களையும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்று அவா, அது முடியாட்டாலும் நான் பார்த்தைதை எல்லாம் நீங்களும் பார்க்க வேண்டாமா?  அதைத்தான் என் காமிராவில் படம்பிடித்து இங்கே போட்டுள்ளேன்.  பார்த்து மகிழுங்கள்.  பெங்களூரு வந்தால் கண்டிப்பாக நீங்களும் ஒரு முறை இங்கே சென்று வாருங்கள்.  ஒரு நாள் முழுவதும் இருந்தால் தான் பார்த்த திருப்தி இருக்கும்.  பூங்கா நேரம்:  காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, வெள்ளி விடுமுறை.  நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு ரூ. 60 பூங்காவிற்கு, உள்ளே வண்டியில் சென்று சிங்கம், புலி, மான், மற்றும் பல தலைவர்கள் சுதந்திரமாக உலாத்துவதைப் பார்க்க நபர் ஒருவருக்கு 150 ரூபாய் தனிக் கட்டணம்.  மொத்தம் ரூ.210. சிறுவர்களுக்கும்[40+60= ரூ.100] முதியோருக்கும் [60+80= ரூ.140] கட்டணத்தில் சலுகைகள் உண்டு,  மேலும் "பட்டாம் பூச்சி பூங்கா" [ரூ.25] என்று தனியாகவும் உள்ளது, நாங்கள் போகவில்லை!!

சரி வாங்க பூங்காவுக்குள் நுழையலாம்.  முதலில் பொது பூங்கா.  கிளிகள் விதம் விதமாய்!!





இதுங்க ரெண்டும்  பயங்கரமான சப்தம் போட்டுக் கொண்டிருந்தன.  நாங்கள் ஏதோ குரங்குகள் தான் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு கத்துகின்றன என நினைத்தோம், பார்த்தால் கிளிகள் ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டு இருந்தன.  புருஷன் பெண்டாட்டி சண்டையோ என்னவோ தெரியவில்லை!!  அல்லது ஏன்டா எங்களை அடைச்சு வச்சு கொடுமைப் படுத்துறீங்கன்னு சப்தம் போட்டுச்சான்னும் விளங்கவில்லை.





தலைவரு ஆடாம அசையாம மணிக்கணக்கா அப்படியே படுத்திருந்தாரு!!  இவர் இயல்பும் அப்படித்தானாம், ஏதாவது இரை அதுவா போய் மாட்டினால்தான் உண்டு, இல்லாவிட்டால் அப்படியே பாத்துகிட்டு இருப்பாராம்.  முழு ஆட்டையும்/பறவைகளையும்  அப்படியே விழுங்கிடுவாரு, இறுதியில் முடி, நகம் இறகுகளை மட்டும் அப்படியே வெளியே தள்ளிடுவாரு!! கில்லாடிதான்.


இவரு நம்ம கேமராவைப் பார்த்ததும் நேரா ஓடி வந்தாரு ............கர் ..........கர் ......... அப்படின்னாரு.....

ஒழுங்கா இருன்னு மிரட்டிட்டுப் போனாரு!! 



ஆந்தையார்.

கரடியார்......ஜோடியா..........

தனியாக.........

வரிக்குதிரையார்.........

விதம் விதமான மான் கூட்டம்.


யானை தன்னுடைய கியூட் குட்டியுடன்!!

கொஞ்சம் வளர்ந்த பொடிப் பசங்க!!

அப்பப்போ குட்டிகளின் காதைப் பிடித்து பாகன் இழுத்துக் கொண்டு வருகிறார், குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் தரச்சொல்லுகிறார்.  வேற எதுக்கு ஐஞ்சோ, பத்தோ கொடுப்போமான்னுதான்..  அதைப் பார்க்க மனதுக்கு சற்று கஷ்டமாகத்தான் இருந்தது.
ஹார்ன்பில் படுத்துகிட்டு இருக்காரு!!

 விதம் விதமான ஆமைகள்:

இவர்களுக்கு சூடான பல்பு வெளிச்சம் தேவைப் படுகிறது போல!!
நட்சத்திர ஆமைகள்: எதிரெதிரே இரண்டு வண்டிகள், ம்ம்......... கிராஸ் ஆயிடுச்சு!!

இவையும் நட்சத்திர ஆமைகள்தான், ஆனால் உருவத்தில் சிறிதாக இருக்கின்றன.

முதலியார்..........  சாரி, முதலையார்!!

சிங்கமுகக் குரங்கு.........

பெரிய முதலையார்..........



நீர் யானை, புல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாங்க..........


பெலிகன் வகை மற்றும் பல வகை வெளிநாட்டு நாரைகள்.......

கலர்புல் வாத்து.........  இது ஒரு டைப்பாக இருந்தது!!

நம்மூர் மயில்கள், அசந்து போய் படுத்துட்டாங்க 

நீங்கள் போட்டிங் வேண்டுமானாலும் செல்லலாம்.  இதைப் பார்த்ததும், என் மகள், " டேய் அண்ணா, நான் இப்போ கண்டுபுடிச்சிட்டேன்டா, அது அங்க நடுவில் இருந்து கொட்டுதே அந்த தண்ணிதான் இந்த குளம் புல்லா நிரம்பிடிச்சுடா.........!!" என்று வியப்பாகச் சொன்னாள்.  ஆஹா......  நிச்சயம் பெரிய விஞ்ஞானியா வருவேடி என்று மனதுக்கு நினைத்துக் கொண்டேன்!! [கட்டணம்:நபருக்கு ரூ.50, குழந்தைகளுக்கு கட்டணமில்லை].
இதைத் தொடர்ந்து வரும் படங்கள், வேனில் SAFARI அழைத்துச் சென்றபோது எடுக்கப் பட்டவை.










பெண் சிங்கங்கள் உருவத்தில் சற்றே சிறியவை.

இதில் மொத்தம் மூன்று சிங்கங்கள் உள்ளன!! ரெண்டு தெரியும், ஒன்று ஆண்  சிங்கத்தின் அப்பால் உள்ள உள்ள பாறையின் பின்னால் உட்கார்ந்திருக்கிறது, தாடைப் பகுதி மட்டும் தெரியும்,  ஆண் சிங்கம், அதனுடன் பொய் சண்டை போட்டுவிட்டு வந்தது,  [சும்மா வாய்த் தகராறுதான்!!] அதைப் படம் பிடிக்க முடியவில்லை!!

தலைவரு வெயிளுக்கு தண்ணீரில் குளிச்சிக்கிட்டு இருந்தார்...........



அப்படியே எழுந்து ..............

...........போயிட்டாரு.  சில சமயம் இவர்கள் SAFARI வேனின் முன்னால் நிமிடக் கணக்கில் உட்கார்ந்து விடுவதும் உண்டாம்!!


வெள்ளைப் புலி.



Monday, January 7, 2013

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

இது பல ஸ்ளைடுகளைக் கொண்ட  .PPS கோப்பு, கீழே உள்ள சுட்டியில் பதிவேற்றியுள்ளேன்.  வியத்தகு பறவைகளின் படங்கள் உள்ளன.


பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

Monday, December 24, 2012

யானையைப் போல துதிக்கை வேற விலங்குகளுக்கு உண்டா?

Elephant Shrew


எலிஃபண்ட் ஷ்ரு [Elephant Shrew]


மேல படத்தில் உள்ளது தான் Elephant Shrew என்னும் ஒரு குட்டியான பாலூட்டி இனம்.  இதுக்கு ஏன் அந்த பேரு வந்துச்சுன்னு விளக்கவே தேவையில்லை, மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்!! இவை ஆப்பிரிக்காவில் மட்டுமே வாழ்கின்றன மொத்தம் 20 இனங்கள் உள்ளன.
இவற்றால் தாவரங்களையும் உண்ண முடியும், ஆனாலும் பூச்சிகளையே முடிந்த அளவுக்கு தேடித் தேடி உண்கின்றன!!

தலைவர் டயர்டு, கொட்டாவி விடுராரு!!
இவற்றை சில பாம்புகளும், பருந்துகளும் கண்டால் விருந்தாக்கி விடுவாம், ஆனால் எளிதில் சிக்காதாம்!! 
எலிஃபண்ட் ஷ்ரு காணொளி.

காண்டாமிருக வண்டு!! [Rhinoceros beetle, Oryctes Nasicorni]

உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்த உயிரினம் இந்த வண்டு தான்.  எப்படி ??  தன்னைப் போலவே 850 பங்கு எடையை இதனால் தூக்க முடியும்.  அதாவது ஒரு ஆள் ஒன்பது பெரிய ஆண் யானகளை தூக்கினா எப்படி இருக்கும்?  அதற்க்குச் சமமாம் இது!!
மேலும் அறிந்து கொள்ள சுட்டி.

Rhinoceros beetle காணொளி.







குவாக்கா, இவை ஆஸ்திரேலியாவில் காணப் படுகின்றன.  கங்காருவைப் போலவே வயிற்றில் குழந்தைகளைச் சுமக்கின்றன.

இந்த படத்துல குவாக்கா தெரியாதே, அக்காவை மட்டும்தானே தெரியும்!! வாயைத் துடச்சுக்குங்க பாஸ்.......!!




இது Leopard. இதனோட தோலை போல ஓட்டை கொண்ட ஆமை இருக்கு.


இதன் பெயர் Leopard Tortoise.  இது ஆப்பிரிக்காவில் காணப் படுகிறது.  70 செ.மீ. நீளம் வளரக்கொடியது, நடுத்தர ஆளோட எடை இருக்கும்!!  இது நல்ல ரசம் சொட்டும் புல் வகைகளை விரும்பி உண்ணும். 
Leopard Tortoise இந்த கானொளியில் இலைகளை ஒரு பிடி பிடிக்கிறார்!!

மேற்கண்ட தகவல்களைத் திரட்டும்போது, விதம் விதமான விலங்குகளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு அழகிய வலைப்பூ சிக்கியது.   நிச்சயம் உங்களுக்கு விருந்தாக அமையும், பாருங்கள்.

True Wild Life