Tuesday, November 27, 2012

என்பதுகளில் எப்படி இருந்த திரை நட்சத்திரங்கள்.......இப்படி ஆயிட்டாங்களே!!.

மறைந்த மக்கள் திலகம் டாக்டர் MGR அவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.  திரையுலகினர் சும்மா விடுவார்களா.  பாராட்டு விழா நடத்திவிட்டனர்.  அந்த சமயத்தில் தொலைகாட்சி ஒளிபரப்புகள் அவ்வளவாக தமிழகத்தில் இல்லை, சென்னையில் மட்டுமே இருந்தது.  நம்மில் பலருக்கு இதைப் பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது.

கீழே அவற்றின் காணொளிகள் உள்ளன.  இன்றைய நட்சத்திரங்கள், அவர்களது குழந்தைகளின் தற்போதைய வயதில் தோன்றுகிறார்கள்.  பாரதிராஜாவும், பாக்கியராஜும் சின்ன பசங்க மாதிரி டி-சர்ட் போட்டுக் கொண்டு வருகிறார்கள், MGR-க்கு செல்லப் பிள்ளைகள் போல இருந்திருக்கிறார்கள்.  ஷோக்காக ரஜினியும் ஸ்ரீதேவியும் தோன்றுகிறார்கள்.  ரேவதி நளினி போன்றோர் மிகவும் ஸ்லிம்மாக அழகாக உள்ளனர்.  நடிகர் திலகம் ஆரோக்கியமாகவும், பிரபு உடம்பு கச்சிதமாகவும் உள்ளனர்.  இளையராஜா, மலேசியா வாசுதேவன் போன்றோர் கச்சேரி செய்கின்றனர்.

திரையுலக நட்சத்திரங்கள், டிரக்குகளில் மவுன்ட் ரோடில்  உலா வந்து புரட்சித் தலைவருக்கு வணக்கம் செலுத்திய படியே செல்கின்றனர், அதை அவர் கையசைத்து ஏற்கிறார்.

விழாவில் நடிகர் திலகம், சிவக்குமார், ஜெமினி, ஜெயசங்கர், டி .இராஜேந்தர், விஜயகுமார், விஜயகாந்த்  உட்பட பலர் பேசுகின்றனர், இறுதியில் புரட்சித் தலைவர் பேசுகிறார்.  தற்போது போல அந்த காலகட்டத்தில் முதலமைச்சர்களை நேரிலோ தொலைக்காட்சியிலோ காணும் வாய்ப்பு கிட்டாது.  [சென்னை விதிவிலக்கு].  MGR படங்களில் நிறைய தோன்றியிருந்தாலும் அரசியல் வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் ஆவணப் படங்கள் அதிகமில்லை. அந்த வகையில் இவை அறிய காணொளிகள் தான்.



திறந்த வண்டிகளில் நடிக நடிகைகள் ஊர்வலம்.  [யாரையும் விட்டுவைக்காம வண்டியில ஏத்திட்டாங்க!!].  இளையராஜா கச்சேரியும் உண்டு!!


தமிழ்த் தாய் வாழ்த்தோடு விழா துவங்குகிறது.  ரஜினி பாக்கியராஜ் [அப்போ அவருக்கும் முக்கியத் துவம் இருந்திருக்கு!] ஆளுயர மாலை போட, சிவாஜி புரட்சித் தலைவனை கட்டிப் பிடிக்க, பாரதிராஜா பேச்சைத் துவக்குகிறார். தொடர்ந்து நம்பியார், பாலசந்தர் பேசுகின்றனர்.  இதில் ஸ்ரீதேவி-ரஜினி என்னா ஷோக்காக்கீராங்கப்பா.....!!



இதில் படு இளமையான ஜெமினி பேசுகிறார், அவர் டாகடர் என்பதற்கு ஒரு விளக்கம் தர்றார் பாருங்க, எங்கேயோ போயிட்டாரு!!  கேட்டா செத்தீங்க!!  தொடர்ந்து விஜயகுமாரி, ஜெய்சங்கர், மனோரமா, விஜயகுமார், நளினி, நாகேஷ், சிவாக்குமார் [கவிதை நடையில் பேச்சு.....  சகிச்சுக்கணும்!!], ரேவதி [ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காங்க], வினுசக்ரவத்தி [ஹா..ஹா..ஹா....],  விஜயகாந்த் [ஆனா கட் பண்ணிட்டாங்கப்பா!!], ஏவிஎம் சரவணன், பிரபு [அப்பா சிவாஜி, பெரியப்பா எம்ஜியார் என அன்போடு அழைக்கிறார்!!]



இதில் தான் ஹிட்டே!!  T . இராஜேந்தர் வெளுத்துக் கட்டுகிறார்!!  ...... தொடர்ந்து அழகான ஸ்ரீதேவி, ரஜினி [நடிகனுக்கு பெண்ணையே  குடுக்க மாட்டாங்க ஆனா எம்ஜியாருக்கு நாட்டையே குடுத்திருக்காங்க.... அப்படியே பேச்சு ஆங்கிலத்தில் போகுது],  அடுத்து கமலஹாசன் [என்னத்த சொல்ல], அப்புறம் பாக்கியராஜ்.  [ஐயோ சாமி........  ஆளை விடுங்கடா ...] 



இதில் சிவாஜி பேசுகிறார்.  [செத்தீங்கடா மவனுங்களா.......!!]  இறுதியில் புரட்சி தலைவன் பேசுகிறார்.  கேளுங்க, நான் சஸ்பென்சை உடைக்கக் கூடாது!!






இதில் பாடகர் TMS பேசுகிறார், தனது பெயருக்கு உண்டான பெருமையை வழங்கியவர் MGR  என்று சொல்கிறார்.  எல்லோருக்கும் பாடினேன், ஆனால் என்னைக் காட்டிக் கொடுத்தவர் [?!] MGR  அவர்கள் தான். சிவாஜி அவர்கள், என் பாட்டை தன் பாட்டாக மாற்றிக் கொண்டார் அதனால் எனக்குப் பெயர் கிடைக்கவில்லை!! [என் பாட்டால் தான் இவங்க ரெண்டு பேருக்குமே பேருன்னு இவர் பலமுறை சொன்னதுண்டு!!]

10 comments:

  1. புரட்சித்தலைவரின் கண்ணொளி ஒன்றை மட்டும் பார்க்க முடிந்தது... மின்வெட்டு... மற்றவை பிறகு...

    நன்றி...

    ReplyDelete
  2. ஜெயதேவரே,

    நல்ல காணோளிகளின் தொகுப்பை போட்டு நல்ல வேலையும் செய்கிறீர்.பாராட்டுக்கள்.

    இதில் இருந்து கொஞ்சம்போல கிளிப்பிங்க்ஸ் அப்போ அப்போ தொ.காவில் எம்ஜிஆர் பிறந்த நாள் போன்ற தினங்களில் முன்னர் ஓட்டுவாங்க,பார்த்திருக்கிறேன், இப்போ அந்த வேலையும் செய்யாம சினிமா பாட்டை போட்டு ஒப்பேத்துறாங்க.

    அது சரி எம்ஜிஆரு சைவமா,அசைவமான்னு ஏதும் ஆராய்ச்சி செய்யலையா :-))

    ReplyDelete
  3. சகோ தாசு,

    நல்ல காணொளி,நேற்று நடந்தது இன்று எண்ணி அகக் கண்ணில் மட்டும் பார்க்க முடிந்த சூழல் போது வரப்பிரசாத்மாய் வந்த தொழில்நுட்பம் ,புறக்கண்ணிலும் காட்டுகிறது.

    நாம் வாழும் காலம் ஆவணப் படுத்தலின் பொற்காலம் என்றால் மிகையாகாது!!!.

    அப்படி இருந்த அவர்கள்,இப்போது இப்படி.அவ்வளவுதான்!!இன்னும் சில கால்ம் கழித்து வெறும் வரலாறு மட்டுமே!!!

    சில காணொளிகள் புனித பிம்பங்களை உடைத்தெறிவதும் உண்மையே!!!


    நன்றி!!!

    ReplyDelete
  4. எங்கிருந்து பிடிச்சீங்க? கலக்கல்

    ReplyDelete
  5. எங்கிருந்து பிடிச்சீங்க பொக்கிஷத்தை?

    ReplyDelete
  6. @குட்டன்
    @மோகன் குமார்

    YouTube -ல் வேற எதையோ தேடும்போது அதிர்ஷ்டவசமா இது சிக்கிச்க்சு!!

    ReplyDelete
  7. //வாழ்க்கை என்பது ஒரு வட்டம்..........//

    நீங்க போடுற படங்களும் அருமை..அப்பப்ப மாத்திகிட்டே இருங்க..நமக்கும் ஜாலியா இருக்கும்..

    நன்றி !!!

    ReplyDelete
  8. நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அருமையான பதிவு மிகவும் ரசித்தேன் நண்பரே! நன்றி.

    ReplyDelete
  9. @ ரஹீம் கஸாலி

    பிரபல பதிவாரான நீங்க முதல் முறையா நம்ம கடைக்கு வந்திருப்பது மகிழ்சியளிக்கிறது, மிக்க நன்றி நண்பரே!!

    ReplyDelete