Wednesday, December 12, 2012

மனைவியை டி... போட்டு அழைக்கும் உரிமை இக்கால கணவனுக்கு உண்டா?

சென்ற வாரம் அந்தமான் சென்றிருந்தோம். [அந்தமான் டூர் -part 1.] சென்ற இடங்களில் எல்லாம் அழகழகான இளம் ஜோடிகளை நிறைய பார்க்க முடிந்தது.  அவர்களில் பசங்களை பார்க்கும்போது மட்டும், என் மனக்கண் முன்னால் அத்தனை பேரும் கழுத்தில் மாலை போட்டுக் கொண்ட ஆடுகளாகவே தெரிந்தார்கள்.  "எலி தானாவே போயி பொறியில தலையை விடுமாம்" என்ற பழமொழிதான் ஞாபகம் வந்தது.  திருமணமாகி ஹனிமூன் வந்திருந்த சில ஜோடிகளில் பெண்கள் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறுகளைப் பார்க்க முடிந்தது, அவ்வாறு ஒன்றிரண்டைத் தவிர மற்றதெல்லாம் காதலர்களாகத் தான் இருக்க வேண்டும் [அது அத்தனையும் கல்யாணத்தில போயி முடியுமாங்கிறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!!].  இவங்க எல்லாம் எப்படி அப்பா அம்மாவுக்கு டிமிக்கி குடுத்துட்டு ஒரு வாரம் இங்கே வர முடியுது என்று என் வீட்டுக்காரியிடம் வியந்தேன்.  அதற்க்கு அவள், இவங்க எல்லாம் கல்யாணம் செய்தவங்களாத்தான் இருப்பாங்க, அவங்க முறையில் தாலியோ மெட்டியோ இல்லாமல் இருக்கலாம், மேலும் கல்யாணம் பண்ணாத ஒருத்திக்கு டூர் போக லட்சக்கணக்கில் எவனாச்சும் செலவு பண்ணிக்கிட்டு இருப்பானா என்று கிடிக்கிப் பிடி [?!!] போட்டாள்.  அப்புறம் நான் ஒரு உடைக்க முடியாத ஒரு லாஜிக்கை எடுத்துப் போட்டேன், அவளே அசந்து போயிட்டா.  அடியேய்,  அவங்க எல்லோரையும் நல்லா கவனி, பையனுங்க முகத்தைப்  பாரு, ரொம்ப சந்தோஷமா இருக்கானுவ, அந்த பொண்ணுங்களப் பாரு, கொஞ்சி கொஞ்சி பசங்க கிட்ட பேசிகிட்டு இருக்காங்க,  கல்யாணம் ஆயிருந்தா இது இரண்டுமே சாத்தியமே இல்லையேடின்னேன்!!   இதைக் கேட்டதும் என்னை முறைத்துப் பார்த்தாள், பெண்களை மட்டம் தட்டலைன்னா  உங்களுக்குத்தான் தூக்கமே வரதே என்று பற்களை நர நரவென்று கடித்தாள்....  புறவென்ன நாம அந்த இடத்தில இருப்போமா........ எஸ்கேப்..........

கல்யாணம் பண்ணும்வரை, மானே தேனே, பொன் மானே என்பவன் அதற்க்கப்புறம் அடியே அவளே..... அடியே இவளே..... என்று அழைக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறான்.  ஆனால் எல்லோராலும் இப்படி உரிமையாய், அதுவும் இந்த காலத்தில் அழைக்க முடியாது என்பது  எனக்கு ரொம்ப நாளாய் தெரியாது.  ஒருமுறை எங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டு இரயிலில் பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தோம்.  எங்களுக்கு எதிர்த்த இருக்கைகளில் கைக்குழந்தையுடன் ஒரு இளம்பெண்ணும் அவரது கணவனும் வந்தமர்ந்தனர்.  இருவருமே நன்கு படித்தவர்கள் போல இருந்தனர், கணவர் நிச்சயம் மென்பொருள் துறையில் கைநிறைய சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்.  திருமணமாகி இரண்டு வருடம் ஆகியிருக்கலாம்.  அவர்களை அனுப்ப வந்த பெண்ணின் தந்தை பையனை தனியாக கூப்பிட்டு ஏதோ சீரியசாக பேசிக்கொண்டிருந்து விட்டு வண்டி புறப்படும்போது விடை பெற்றார்.

வண்டி பெங்களூரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.  நமக்கு இரத்த அழுத்தம் குறைவு.  அதனால நம்ம வீட்டு பாஸ், நம்மை ரொம்ப நேரம்  சாந்தமா இருக்க விடுவதில்லை.  ஏதாவது ஒரு மேட்டரை கிளப்பி BP யை எகிற வச்சிடுவார்.  கணவன் உடல் நலத்தின் மேல் அவ்வளவு அக்கரை.  அன்றைக்கும் அதே தான் நடந்தது.  வழக்கம் போலவே நம்மை ஏதோ ஒன்றுக்கு சீண்ட கோபம் நமக்கு எகிற, இது வீடு அல்ல என்பதையும் மறந்து அடியேய் அவளே ..... இவளே...........  சும்மா இருடி........  என்று டி ..... டி ..... என்று பல டி .....போட்டு விட்டேன்.  இது அடுத்தடுத்து இரண்டு முறை நடந்தது.  ஆனாலும், எதிரே ஒரு டீசன்டான ஃ பேமிலி உட்கார்ந்திருக்காங்க, அவங்க ரெண்டு பேரும் நம்மை பத்தி என்ன நினைச்சிருப்பாங்க அப்படின்னு நினைக்கும்போது மனசு கஷ்டமாயிடிச்சு.  அந்தப் பையனும் தனது மனைவியின் காதில் ஏதோ சொல்லிக் கொண்டே வந்தார்.  நம்மைத்தான் ஏதோ கேவலமா சொல்றார் போல, சே........  கொஞ்சம் வாயைக் கட்டுப் படுத்தியிருக்கலாம்னு  என்று நொந்து கொண்டே வந்தேன். 

கொஞ்ச நேரம் கழித்து, எதிர் சீட்டு பையன் எழுந்து போய் கதவோரம் நின்று கொண்டு வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தார்.  என் குழந்தைகள் போட்ட கும்மாளத்தால் தொல்லை தாங்க முடியாமல் சற்றே நிம்மதியாய் இருக்கலாம் என்று  என் வீட்டு பாஸ் எதிரே இருந்த  அந்த பெண்ணிடம் போய் உட்கார்ந்தாள்.  ரொம்ப நேரம் இருவரும் சிரித்து பேசிக் கொண்டே வந்தனர்.  அப்படியே நமக்கும் கொஞ்சம் நிம்மதியானது.  பெங்களூர் வந்ததும் அவரிடம் விடை பெற்றார் பாஸ்.  அப்புறம் வீட்டுக்கு வந்ததும், என்ன பேசினீர்கள் என்று கேட்டேன்.  தலை சுற்றியது!!

அந்த பெண் திருமணம் ஆன பின்னர் குழந்தை வயிற்றில் எட்டாவது மாதம் ஆன சமயமாம்.  ஒரு நாள் ஏதோ கோபத்தில் ஒரே ஒரு தடவை என்னடி ...  என்று டி  போட்டு இந்தப் பெண்ணை அழைத்து விட்டாராம்.  உடனே இந்தப் பெண்ணுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டதாம்.  நான் என்ன கைநாட்டா?  நானும் படிச்சவ, என்னை போயி இந்த மனுஷன் எப்படி டி .......  போட்டு கூப்பிடலாம், இனியும் உன்கூட வாழ மாட்டேன் என்று என்று கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாராம்.   பிரசவம் முடிந்து ஐந்தாறு மாதம் ஆன பின்னரும் கூட கணவன் மேல் இருந்த கோபம் தனியவில்லையாம்.  அவரும் விடாமல் யார் யாரையோ வைத்து சமாதானம் செய்து, இனி அப்படியெல்லாம் அழைக்க மாட்டேன் என்று உறுதி கொடுத்த பின்னர், "இன்னொரு தடவை அப்படி கூப்பிட்டே, செத்தேடா மவனே" என்ற கண்டிஷனோடு கணவன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.

வழியில் நான் டி ....... போட்டு கூப்பிடுவதைப் பார்த்ததும், அதை மனைவியிடம் சொல்லி பார்த்தாயா, அவர் கூப்பிடும்போது அவர் மனைவி என்ன கோபித்துக் கொண்டுவிட்டாரா, உனக்கு மட்டும் என்ன பொறுத்துக் கொள்ள முடியாதா?  ஒன்றுமில்லாததை பெரிசு பண்ணி ஊரைக் கூட்டி பஞ்சாயத்து வச்சி  என் மானத்தை வாங்கிட்டியே [டி ...  போடவில்லை!!] என்று சொல்லி, நீயும் அவங்களைப் பார்த்து புருஷன் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கத்துக்க என்றாராம்.  இதையெல்லாம் பொறுமையாய்க் கேட்ட என் வீட்டு பாஸ்,  கணவன் மனைவிக்குள்ள இதெல்லாம் சகஜம்,  நான் கூட பி.இ . கம்பியூட்டர் சயன்ஸ் தான், இந்த மனுஷன் கிட்ட மாட்டிக்கிட்டேன், இவர் பேசுவதற்க்கெல்லாம்  பொறுத்து தான் போறேன், இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள், பெரிது படுத்தாமல் அட்ஜஸ்ட் பண்ணி போங்க, என்று அறிவுறுத்தினாராம்.

அந்த நேரம் வரை மானம் போச்சே என்று குற்ற உணர்வில் துடித்துக் கொண்டிருந்த நான், சற்றே நிம்மதியானேன்.  வீட்டுக்கு வீடு வாசற்படி!!

"அது சரி உங்க வீட்டு பாஸ் உங்களை என்னென்னவெல்லாம் போட்டு கூப்பிடுவாறு?"  அப்படின்னு நீங்க கேட்கிறீங்கன்னு எனக்குப் புரியுது.  பாஸ்,  உங்களுக்கு ஒன்னே ஒன்னு மட்டும் நினைவு படுத்த ஆசைப் படுறேன்,  அது "ஐயம் யுவர் பெஸ்ட் ஃ பிரண்டு" என்பது மட்டும் தான், அத மறந்திடாதீங்க.  என் மானம் மரியாதை உங்களது மாதிரி, அதை மட்டும் ஞாபகம் வச்சிக்கோங்க!!

20 comments:

  1. இந்த காலத்துல என்ன எந்த காலத்திலயும் கணவனுக்கு உரிமை உண்டு,டீ(tea) போட்டு அழைச்சிங்கன்னா வந்து குடிச்சிட்டு உங்க தலையில ஐஸ் வச்சிட்டு போவாங்க.. அப்பதான தினம் டீ(tea) போடுவீங்க.

    ReplyDelete
    Replies
    1. @ உஷா அன்பரசு

      ஆஹா.....!! இதை வச்சே ஒரு பதிவை தேத்தியிருக்கலமேடா!! இப்பவும் ஒன்னும் கேட்டுப் போயிடல, நண்பர்களை விட்டு ஒரு மொக்கை பதிவை போட்டு விடலாம்!!

      Delete
  2. வணக்கம் சகோ தாசு,

    நல்ல மகிழ்வான ஓய்வா??

    நல்ல பதிவு. என் வீட்டில் 'டி' போட்டு அழைக்கும் வழக்கம் இல்லை. இது தவறு இல்லை என்றாலும் இது இயல்பான வழக்கமாக உள்ள குடும்பங்களில் பெரிய விடயம் இல்லை.

    இப்போது நாம் வளர்ந்த சூழலில் நம் அம்மாவை அப்பா இப்படி அழைத்தால் நாமும் ,மனைவியை அப்ப்டியே அழைப்போம் அப்படித்தான். இதில் மனைவி அவர் வளர்ந்த சூழல் பொறுத்து எப்படி எடுக்கிறார் என்பதே சிக்கல்.

    எண்ணம்,சொல்,செயலில் செயல் உத்தம‌மாக இருப்பின் சொல் பிரச்சினை இல்லை.

    சகோதரி பரவாயில்லை உம்மை பத்தி தெரிஞ்சுக்கிட்டு குப்பை கொட்டுராங்க. வாழ்த்துக்கள். நாமும் கூட உம்முடைய திட்டுகளை பெரிதாக எடுக்காமல் விடாமல் பின் தொடர்ந்து விவாதிப்பது இல்லையா!!!

    அது போல்தான் ஹி ஹி இப்ப திட்டுவீரா!!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. \\நாமும் கூட உம்முடைய திட்டுகளை பெரிதாக எடுக்காமல் விடாமல் பின் தொடர்ந்து விவாதிப்பது இல்லையா!!!\\ நான் ஏதோ வார்த்தையைத்தான் ராங்கா விட்டிருப்பேன், ஆனா நீங்க என்னைத் தாக்க [அப்படின்னு நினைச்சுகிட்டு!!] மூணு பதிவு போட்டுட்டீங்க, ஆனாலும் நான் உங்களை சிறந்த நண்பராகத்தான் கருதுகிறேன். ஏன்னா எல்லாத்தையும் விட நட்பு பெரிது!! நன்பேண்டா......!!

      Delete
  3. ///பெண்களை மட்டம் தட்டலைன்னா உங்களுக்குத்தான் தூக்கமே வரதே என்று பற்களை நர நரவென்று கடித்தாள்.... புறவென்ன நாம அந்த இடத்தில இருப்போமா........ எஸ்கேப்...////

    என்னங்க ஜெயதேவ் இந்த வரியில கொஞ்சம் எடிட் பண்ணி வெளியிட்ட மாதிரி இருக்கே .பற்களை நர நரவென்று கடித்து கொண்டே என்னை அடிபின்னி விட்டாள் என்று வந்திருக்க வேண்டுமோ.... எஸ்கேப் அடி வாங்கின அப்புறம்தானே....??

    ReplyDelete
  4. ///நான் கூட பி.இ . கம்பியூட்டர் சயன்ஸ் தான், இந்த மனுஷன் கிட்ட மாட்டிக்கிட்டேன், இவர் பேசுவதற்க்கெல்லாம் பொறுத்து தான் போறேன், இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள், பெரிது படுத்தாமல் அட்ஜஸ்ட் பண்ணி போங்க, என்று அறிவுறுத்தினாராம். ///


    பாஸ் நீங்க என்ன எப்படி உங்க மனைவியிடம் பேசுவீங்க என்று உங்க வீட்டிற்கு வெளியே இருத்து ஒற்றுக்கேட்டேன். நீங்க உங்க மனைவியை பார்த்து அம்மா நான் பண்ணிய டின்னர் நல்லா இருக்கா என்று கேட்டீங்க அதற்கு அவர் ம்ம்ம்ம்ம் ஒகே பட் அடுத்த தடவை இதோடு நல்லா செய்யனும் என்று சொல்லி பொறுத்துதான் போனர் இதில் இருந்து என்ன தெரியுது என்றால் அவர் சின்னச் சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் அட்ஜஸ்ட் பண்ணி போறாங்க என்று..... சரிதானே நண்பரே

    ReplyDelete
    Replies
    1. @ மதுரைத் தமிழன்

      சந்திரமுகியில ரஜினி வடிவேலுவைப் பிடிக்கிற மாதிரி கரெக்டா புடிக்கிறீங்களே பாஸ்!! ஒய் பிளட் சேம் பிளட்!! நானும் வடிவேலு மாதிரியே சொல்றேன், "ஐயம் யுவர் பெஸ்ட் ஃ பிரண்டு, இப்படி என்னை டேமேஜ் பண்ணலாமா? ரகசியத்தைக் காப்பாத்தி ஃபிரண்டோட மானத்தை காப்பாத்த வேணாமா?" ஹா...ஹா...ஹா... வருகைக்கும் முத்தான இரண்டு காமன்டுகளுக்கும் நன்றி!!

      Delete
  5. மனித உறவுகளில் கணவன்-மனைவி உறவு தனித்தன்மையானது. அஃதாவது அஃது எதையும் காப்பியடிக்காது. இருவருக்குமிடையில் ஒரு அந்நியத்தன்மை என்பதே கிடையாது. ஆழ்மனவுறவு. இல்லாவிட்டால் அது தாம்பத்தியமன்று. இதன்படியே அவர்களிருவருக்குமிடையிலான மொழியுறவும் பார்க்கப்படவேண்டும். ஒவ்வொரு தம்பதியருக்கும் அவர்கள் பாசை அவர்களுக்கு. அது கலாச்சாரத்தையொட்டி வந்தாலும், அவர்களுக்கிடையில் ஏற்கப்பட்டதாகவே இருக்கும். உங்கள் கலாச்சாரப்படி பேசுகிறீர்கள். வெளியாலருக்கு வியப்பு; அல்லது அருவருப்பு. ஆனால் உங்களுக்குத்தான் உங்கள் மொழியே தவர அவர்களுக்கில்லை.

    இதன்படி, டி என்றழைக்கும் கணவனும் சரி; பேர்மட்டும் சொல்லி அழைக்கும் கணவனும் சரி - எப்படி அம்மொழி அவரவர் மனைவிமார்களால் ஏற்கப்பட்டது என்பதுதான் விடை. இருவருக்குமிடையில் மூன்றாமவருக்கிடமில்லை. அவ்வுறவு அலாதி ஆனந்தமானது. பாழ்படும்போது அப்படியிருக்க வேண்டியது இப்படியாகிவிட்டதே என்ற உணர்வே கடும் வேதனைக்கு காரணமாகும்.

    எப்ப‌டி பேசுகிறீர்க‌ளோ அப்ப‌டியே பேசிவிட்டால் பிர‌ச்சினை வ‌ராது. மாறும்போது உண்மை போய் பொய் வ‌ரும்; பின்ன‌ரென்ன‌? க‌வ‌லைதான் பெண்ணைப் பொருத்த‌வ‌ரை. இய‌ற்கை ம‌னித‌ர்க‌ளாக‌ இருக்கும் வ‌ரை உண்மை. ந‌ன்று. அவ்விய‌ற்கையைச்சார்ந்த‌துவே மொழியுமாகும். உண்மையிருக்கும் வரை பிரிவில்லை.

    எஃதெப்படியிருந்தாலும், உண்மையுறவு உள்ள மொழிக்கு ஒப்பீடுகள் கிடையா. அஃது அதுவே.

    ReplyDelete
    Replies
    1. AnonymousDecember 12, 2012 8:42 PM

      வாவ்...........!! சூப்பரா சொல்லியிருக்கீங்க!! நீங்க என்னோட எல்லா பதிவுக்கும் கமண்டு போடணும்னு விருப்பம்!! வருகைக்கு நன்றி நண்பரே!!

      Delete
  6. ***மனைவியை டி... போட்டு அழைக்கும் உரிமை இக்கால கணவனுக்கு உண்டா? ***

    ஏன் இல்லை? மனைவிக்கு கணவனை "டா" போட்டு அழைக்கும் உரிமையும் உண்டு!

    இதெல்லாம் அவா அவா குடும்பப் பிரச்சினை, நமக்கேன்ண்ணா வம்பு, சொல்லுங்கோ? :)))

    ReplyDelete
    Replies
    1. பிரமனாள் பாஷை அவாளுக்கே மறந்து போயிண்டிருக்கு, நீர் இப்படி வெளுத்து வாங்கறேளே!! ரொம்ப நன்னாயிருக்கு போங்கோ!!

      Additional info:

      \\நமக்கேன்ண்ணா வம்பு\\ இந்த வாங்கோண்ணா ........ போங்கோண்ணா ......... இதெல்லாம் மனைவி கணவனை அழைக்கும் போது மட்டும் தான் பயன்படுத்துவார்கள். அப்போ நிஜ அண்ணனை எப்படி அழைப்பார்கள்? வாடா..... போடா...... தான். அப்பன் வயசே ஆயிருந்தாலும் [சொந்த அப்பன்/சித்தப்பனே ஆனாலும்....] அவன் .... இவன்....தான்.

      Delete
    2. இல்லங்க, அவா அண்ணனையும், "அண்ணா"னுதான் அழைப்பா! என்ன "அண்ணா சொன்னான்"னு சொல்லுவா! "அண்ணா சொன்னாரு"னு சொல்லமாட்டா! :)

      Delete
  7. அடிமைகளுக்கு எஜமானை சாரி எஜமானியை எப்படி கூப்பிடுவது என்று தீர்மானிக்கும் உரிமையில்லை. அது எஜமானியல்லவா முடிவு செய்ய வேண்டும் தன்னை தன் அடிமை எப்படி அழைக்க வேண்டும் என்று.

    ReplyDelete
    Replies
    1. @ அஜீம்பாஷா

      நான் கூட அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் டி போடுறேன்!! [குடிக்கிற டீதான்!!]

      Delete
  8. அழகாக இருந்தது அந்தமான்; அந்த-மான்; ஆம், அந்த இடுகையில் இருந்த அந்த-மான். நிற்க.

    இந்தியாவில் மனைவியை 'டி' யும் போடலாம்; கொளுத்தவும் செய்யலாம்! எவன் நம்ளை கேட்பதற்கு...!

    ReplyDelete
    Replies
    1. @ நம்பள்கி

      போலீஸ்காரர் கேட்பார் சார்!!

      Delete
    2. கவுரவக் கொலை என்று சொன்னால் நீதிபதியே மன்னித்து விடுவார்; நிறை முன் உதாரணகள் உண்டு...

      Delete
    3. என்ன சார் டாக்டரே இப்படி சொல்லலாமா? கடும் நோயால் பாதிக்கப் பட்டு உயிர் போவது உறுதி என்ற நிலையில் எதற்காக கஷ்டப் பட வேண்டும், கொஞ்சம் துன்பமில்லாமல் போகிறேன் என்று கெஞ்சும் நோயாளிகளுக்கு அவ்வாறு சாகும் உரிமை இல்லை, என்று இந்தியா அமேரிக்கா இரண்டு இடத்திலும் சொல்லிட்டாங்கலாமே?

      Delete
  9. Title s incorrect, I mean, the word, ''right" is inappropriate there.

    No one has any right to call another person the way he or she likes even if the other person is a loved one (close family relation). It s just custom that makes up our style of language, so v call them in certain way v r habitated with.

    In the context of this post, it s custom for the husband (Jeyadev), perhaps arisen from his family culture, or caste culture, or culture of the place, to call his wife, with dii. In reverse, it s custom of etc. to make her accept it. The acceptance is no way a self demeaning as it s custom that she inherits, so she doesn't invest or load it with any connotations. A routine s just a routine: no conditions felt.

    The way to call or address her s not a right he was given.

    If given, tell me who gave it to him? None.

    If not given, but he wants to have it, tell me whence can he ask for it or apply for it?

    All such qns r absurd.

    மனைவியை டி போட்டழைக்கும் பழக்கம் இக்கால கணவனிடம் இருக்கலாமா? என்று தலைப்பு இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. @ Anonymous December 13, 2012 10:57 PM

      நீங்க சொல்லியிருப்பது அத்தனையும் உண்மையே, எதையும் என்னால் மறுக்க முடியாது, வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி!!

      Delete