Saturday, February 16, 2013

இணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி?

வணக்கம் மக்காஸ்.

முதலில் இணையத்தில் வரும் படங்களை அப்படியே காணலாமே எதற்காக பதிவிறக்கம் [Download ] செய்ய வேண்டும் என உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்!!  இது நல்ல கேள்விதான்.  இதற்க்கு பல காரணங்கள் இருக்கிறது.

 • முதலில், சில படங்கள் ஒலி, ஒளி நல்ல தரத்துடனேயே கிடைத்தாலும் அவை தொடர்ச்சியாக ஓடுவதில்லை.   ஒவ்வொரு பத்து வினாடிக்கும் நின்று... நின்று... திரையின் மையத்தில் காத்திருக்கச் சொல்லும் வட்ட சின்னம் சுழன்று நம்மை வெறுப்பேத்தும்.

 • கணினியின் திரை சிறியது, சிலர் மட்டுமே காண முடியும், நீங்கள் படத்தை தொலைக்காட்சியின் பெரிய திரையில் பலர் அமர்ந்து சவுகரியமாகப் படத்தைக் காண விரும்பலாம்.

 • சில சமயம் படத்தின் முதல் ஐந்து நிமிடம் மட்டுமே ஓடும், அதற்க்கப்புறம் VEOH பிளேயரை நீங்க நிறுவினால் தான் மீதியைக் காணலாம் என்று கடுப்படிப்பார்கள்.

 • ஒரு முறை பார்த்த படத்தை நீங்கள் மேலும் பலமுறை பார்க்க நினைக்கலாம்.  அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கு வேறொரு நாள் போட்டுக் காட்டலாம்.

 • ஒருவேளை, இன்றைக்கு பார்க்கும் திரைப்படம் சில தினங்களுக்குப் பிறகு நீக்கப் படலாம்.  அப்போது நீங்கள் பார்க்க நினைத்தாலும் முடியாது, பதிவிறக்கம் செய்திருந்தால் பின்னர் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். 
   
 • iPhone, iPad போன்ற பல்வேறு  மின்னணு சாதனங்களில் [Electronic Gadgets] நீங்கள் படத்தை பதிவேற்ற [UPLOAD]   நினைக்கலாம்.  

  இது போன்ற பல தேவைகளுக்காக  நாம் பதிவிறக்கத்தை நாட  வேண்டியிருக்கிறது.  இதற்க்கு பல மென்பொருட்களை நண்பர்கள் பரிந்துரை செய்துள்ளனர்  அனால் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கவே செய்கிறது.  மேலும் பதிவிறக்கம், செய்தவுடன் அந்த கோப்பு [File] நேரடியாக மற்ற மின்னணு சாதங்களில் பயன்படுத்தும் வண்ணம் இராது, எனவே பதிவிறக்கம் நடைபெறும்போதே கோப்பின் வகையையும் [Extension] மாற்ற சில இணைய தளங்கள் உதவுகின்றன, ஆனால் பெரும்பாலும் அவை யாவும் நம்பகமாக இல்லை.  பல சமயம், இரண்டு மூன்று மணி நேர காத்திருத்தலுக்குப் பிறகு பெப்பே..... காட்டிவிடுகின்றன.

  சரி தற்போது பதிவிறக்கம் செய்ய என்ன வேண்டுமென்று பார்ப்போம்.  வேறொன்றும் தேவையில்லை Firefox இணைய உலாவி [Browser] இருந்தாலே போதும்[விண்டோஸ்/Linux/Mac எதுவானாலும் சரி].  இந்த தளத்திற்குச்  சென்று FlashGot என்னும் Add -ON ஐ நிறுவிக் கொள்ள வேண்டும்.


  Firefox உலவியில் இருந்து FlashGot இணைய பக்கதிற்குச் சென்று மேலே வட்டமிடப்பட்டுள்ள INSTALL மீது Click செய்தால் போதும் இந்த ADD ON உங்கள் உலவியில் நிறுவப் படும்.  நிறுவவா என்று கேட்கும் போது "ஆம்" என உங்களது சம்மதம் கேட்பது, Agree to Terms & Conditions போல சில சடங்குகள் இருக்கலாம்!!  இது உங்கள் Browser -ல் நிறுவப் படுவதாகும், எனவே Administrator கடவுச் சொல் தேவைப் படாது!!

  FlashGot நிறுவிய பின்னர் Browser ஐ Restart செய்ய வேண்டும் [கணினியை அல்ல].

  பின்னர், நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய காணொளி உள்ள இணையப் பக்கதிற்குச் சென்று காணோளியை Start பொத்தான் மேல் சொடுக்கி ஓட விட வேண்டும்.


  காணொளி ஆரம்பித்தவுடன், Browser -ன் Address Bar -க்கு சற்று இடதுபுறம் [மேலே உள்ள படத்தில் சிவப்பு வட்டம்]  FlashGot படச்சுருள் போன்ற சின்னம் தோன்றும்.  அதன் மீது mouse ஐ வைத்து RightClick செய்தால்,  அந்த வலைப்பக்கத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் எல்லா படங்களின் தகவல்களும் அவற்றின் அளவுடன் [Storage size ] வரிசையாகத் தோன்றும்.  [பச்சை வட்டம்]. உங்களுக்குத் தேவையான படத்தின் மீது Left click செய்தால் படம் Download ஆரம்பிக்கும்.   [எச்சரிக்கை:  அதன் மீது நேரடியாக Left click செய்தால் எல்லா வீடியோக்களுக்கும் பதிவிறக்கம் ஆரம்பமாகும்.  இன்னொன்று, படத்தின் ஆரம்பத்திலிருந்து ஓடவிடாமல் நடுவில் இருந்து ஓடவிட்டால் அந்த இடத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் ஆகும்.  எனவே முழுப் படத்தையும் வேண்டுவோர் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே இயங்க வைக்கவும்.].

  FlashGot மூலம் காணொளிகள் மட்டுமல்ல, பாடல்கள் .mp3  கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய முடியும். பதிவிறக்கத்தைக் காண Tools சென்று Downloads மீது சொடுக்கவும்.  Download ஆகும் கோப்பின் மீது RightClick செய்து Open  containing Folder மீது Left Click சொடுக்கினால் பதிவிறக்கம் ஆகும் Folder திறக்கும்.   பதிவிறக்கம் முடிந்தவுடன், அதிலிருந்து உங்கள் கோப்பை பெற்றுக் கொள்ளலாம்.
  மேற்கண்ட முறையில், FlashGot ஐப் பயன்படுத்தி இணையத்தில் இருந்து YouTube மட்டுமல்லாது வேறெந்த மாதிரியான Player -ல் இருந்தும் Video/Audio கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யமுடியும். மேலும், சில சமயம், சில மணி நேரங்கள் ஓடும் படங்கள் வெறும் 5 நிமிட முன்னோட்டம் மட்டுமே காண முடியும், அவற்றையும் கூட இம்முறையில் பதிவிறக்க முடியும்.  சரி, பதிவிறக்கம் முடிந்தது.  தற்போது இது .flv, .mp4 போன்ற கோப்புகளாக இருக்கக் கூடும்.  இவற்றை கணனியில் VLC Player போன்ற மென்பொருட்கள் மூலம் காணமுடியும், ஆனால் நம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண முடியாது.  இவற்றை நமது மின்னணு கருவிக்கு பொருந்தும் கோப்பாக மாற்றவேண்டும்.  இதற்க்கு, Any Video Converter என்ற கட்டணமில்லா கட்டற்ற மென்பொருள் [Open Source] உதவுகிறது. [சுட்டி]  இதை நிறுவி இயக்க Windows Xp அல்லது அதற்க்கு மேம்பட்ட Windows இயங்குதளம் வேண்டும்.


  இதன் இணைய தளத்திற்க்குச் சென்று  மேலே [பச்சை வட்டம்] காட்டியுள்ள படி, Free Download மீது சொடுக்கி பதிவிறக்கி,  உங்களது Windows இயங்குதளத்தில் நிறுவிக் கொள்ள வேண்டும்.  பின்னர், இதனை Open செய்து  நீங்கள் முன்னர் பதிவிறக்கம் செய்துள்ள கோப்பு உள்ள Folder-ல் நுழைந்து, மாற்ற வேண்டிய  கோப்பைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு வேறு எந்த Format வேண்டுமோ அதற்க்கு மாற்றிக் கொள்ளலாம்.  Customised AVI Movie (*.avi) க்கு மாற்றிக் கொண்டால் பெரும்பாலான மின்னணு கருவிகளில் படம் ஓடும். நீங்கள் ஒரே சமயத்தில் பல கோப்புகளை இணைத்து ஒன்றன் பின்னர் ஒன்றாக Format மாற்றச் செய்து, இறுதியாக அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்துக் கொள்ளவும் முடியும். இந்த கோப்பை Pen Drive/CD/DVD- யில் சேமித்து, உங்கள் தொலைகாட்சியுடன் இணைக்கப் பட்டுள்ள DVD Player மூலமாகப் பார்க்கலாம். மொபைல், iPad, iPhone போன்ற மற்ற கருவிகளுக்குத் தேவையான Format களுக்கும் இதிலிருந்து மாற்ற முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

  
  Any Video Converter முகப்பு. 
  
  
  வலது மூலையில் உள்ள Apple என பச்சை நிறத்தில் உள்ள பொத்தானை கிளிக் செய்து வரும் dropdown menu வின்  இறுதியில் சென்றால் Customised AVI Movie (*.avi) ஆப்ஷன் உள்ளது.
  
   
  பல வீடியோக்களை மாற்றினாலும் இறுதியில் வேண்டுமென்றால் ஒன்றாக இணைக்க முடியும்.
    இந்த வழிமுறையில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம்.

  மேற்கண்ட கானொளியில் YouTube பற்றி புரியவில்லை என்றால் விட்டு விடலாம்.

  இந்த இணைய தளத்திற்குச்  சென்று , நாம் மேலே சொன்னவற்றை செயல்படுத்திப் பாருங்களேன்!! 

  24 comments :

  1. விரிவான எளிமையான விளக்கம்! புக் மார்க் செய்து கொள்கிறேன்! ரொம்ப நாளாய் இதைப் பற்றி அறிய ஆசை! இன்று உங்கள் பதிவு மூலம் தீர்ந்தது! நன்றி!

   ReplyDelete
  2. அது போல திரைஅரங்குகளிலிருந்தும் படங்களை தரமாக டவுன்லோட் செய்ய வழி சொல்லுங்களேன்.

   ReplyDelete
   Replies
   1. @மதி

    http://tamilbites.com/?cat=3

    Delete
  3. பலருக்கும் பயன் தரக்கூடிய தகவல்கள்.. வாழ்த்துகள் ஜெயதேவ்...

   ReplyDelete
   Replies
   1. @ நிகழ்காலத்தில் சிவா

    ரொம்ப கோபத்தில் இருப்பீங்கன்னு பயந்துகிட்டு இருந்தேன்!! வருகைக்கு நன்றி சிவா!!

    Delete
  4. CAN YOU RECOMMEND SOME WEBSITES TO DOWNLOAD TAMIL MOVIES. THANKS

   ReplyDelete
   Replies
   1. AnonymousFebruary 16, 2013 at 9:31 PM

    \\CAN YOU RECOMMEND SOME WEBSITES TO DOWNLOAD TAMIL MOVIES. THANKS\\

    SORRY, I DON'T KNOW ANYTHING ABOUT THAT.

    Delete
  5. படத்தை டவுன்லோட் செய்ற அளவுக்கு நெட்ஸ்பீட் போதாது..சோ புரோசிங்க் சென்ரரில டவுன்லோட் செய்தாத்தான் உண்டு..தேவையேற்படும்போது அங்கிருக்கும் பி.சியில் இருந்து இதைப்பயன்படுத்துகின்றேன்

   ReplyDelete
  6. வலைச்சரத்தில் தாங்கள் கொடுத்த கமென்ட் தொடர்பாக:
   http://blogintamil.blogspot.in/2013/02/viyappupart2vijayandurairaj.html
   யார் அந்த பதிவர் மறக்காமல் பதில் சொல்லவும்

   என் இமெயில் முகவரி:vijayandurairaj30@gmail.com

   ReplyDelete
   Replies
   1. ஆஹா.. எவ்வளவு ஆர்வம்..!

    Delete
   2. @ விஜயன்

    இந்த பதிவில் வந்த ஒரு கமண்டு என்னை அவ்வாறு பின்னூட்டமிட வைத்தது.

    http://blogintamil.blogspot.in/2013/02/vijayandurai3696.html

    Delete
  7. பாகவதரே,

   உம்ம பஜனை பதிவுகளுக்கு இது எவ்வளவோ தேவலாம்,இதனையே தொடரவும். ஆனால் இதெல்லாம் ரொம்ப பழசா போச்சு,இப்போ நேரடியா ,டீவியிலேயே இணையப்படம், நெட் பார்க்க ஆரம்பிச்சுட்டாஙக, ஸ்மார்ட் டீவினு சோனி போடுது.

   அப்படி இல்லைனா எந்த டீவி யையும் ஸ்மார்ட் டீவி ஆக்கலாம், ஆண்ட்ராய்ட் டீவி பாக்ஸ்னு செல் போன் சைசில் விக்குறாங்க.சாம்சங்க்,சோனி டீவி எனில் android செல்போனை நேரடியாக DLNA செய்து நெட் வீடியோவை பார்த்துக்கலாம்.

   http://www.geniatech.com/pa/android-tv.asp

   ஈபே,ஃப்ளிப்கார்ட்னு பல தளத்தில் 2000-3000 விலையில் கிடைக்குது, அதை வாங்கி டீவிக்கூட இணைச்சு ஆன்லைன் வீடியோ, எல்லாம் டவுன் லோட் செய்யாம பார்த்துக்க வேண்டியது தான்,தேவை எனில் அதில் இருக்கும் மெமரியில் டவுன் லோடும் செய்து வைத்துக்கொள்ளலாம்,பென்டிரைவில் சேமித்துக்கொண்டு அப்படியே நேராக டிவியில் பார்க்கலாம், ஃபார்மேட் எல்லாம் மாற்றத்தேவையில்லை.

   ReplyDelete
   Replies
   1. @வவ்வால்

    நீங்கள் சொல்வது பெரிய திரையில் பார்க்கமட்டுமே உதவும், நான் சொன்ன பிற பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. நன்றி.

    Delete
  8. வலைப பக்கங்களில் உள்ள வீடியோக்களை டவுன் லோட் செய்ய ரியல் ப்ளேயர் எஸ்.பி பயன் படுத்தி வந்தேன். தற்போது அது வேலை செய்ய வில்லை. இந்த முறையை முயற்சித்துப் பார்க்கிறேன்.

   ReplyDelete
  9. hello brother...
   use "TORCH BROWSER" to download sll kinds of videos directly..
   http://www.torchbrowser.com/

   ReplyDelete
   Replies
   1. மிக்க நன்றி நண்பரே, "TORCH BROWSER"-ஐப் பயன்படுத்திப் பார்க்கிறேன்.

    Delete
  10. வலைப பக்கங்களில் உள்ள வீடியோக்களை டவுன் லோட் செய்ய freemake convertor it is best just try

   ReplyDelete
  11. flashgot நிறுவ நீங்கள் சொன்ன step by step விளக்கம் மிகவும் உதவியாக இருந்தது.
   நல்ல உபயோகமான பதிவு.
   நன்றி பகிர்விற்கு.

   ReplyDelete
   Replies
   1. வருகைக்கு மிக்க நன்றி மேடம்!!

    Delete
  12. step by step விளக்கம் மிகவும் உதவியாக இருந்தது.
   நல்ல உபயோகமான பதிவு. நன்றி.

   ReplyDelete
  13. உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

   மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

   ReplyDelete