Saturday, December 1, 2012

உடல் பருமனைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிவதேன்?

இன்னைக்கு நாட்டில ஓடிகிட்டு இருக்கும் தீராத பிரச்சினை நம்மாளுங்க பலர் வாயும் வயிறுமா இருக்கிறது தான்.  கல்யாணம் ஆகி மகப்பேறு நிலையில இருக்கும் பெண்கள் அப்படி இருந்தா பரவாயில்லை, நம்ம பயலுவளே அப்படி இருக்கலாமா?  கூடாது.

இந்த பையன் அதிர்ஷ்டம், ஒரு ஸ்லிம் ஃ பிகரை கரக்ட் பண்ணிட்டான், ஆனா அது சினிமா, நிஜத்துல இது வேலைக்காகுமா?
உடல் இளைக்கணும் டிரிம்மா, ஃபிட்டா ஆகணும் என்ற ஆசை மனசில வர்ரதில தப்பே இல்லை.  ஆனா அதுக்கு என்ன பண்ணும்னு நம்மள மாதிரி அறிவாளிங்க கிட்ட இல்ல வந்து கேட்கணும்?  அதை விட்டுட்டு உடற்பயிற்சி, ஃபிட்னஸ் கிளப் அப்படின்னு கண்ட கண்டவங்க கிட்ட போயி ஐடியா கேட்கிறாங்க,  அவங்க சொல்றதெல்லாம் லாஜிக்கே இல்லாத பேத்தல் அப்படிங்கிறத நம்மளை மாதிரியே நீங்களும் யோசிச்சு பார்த்தீங்கன்னா புரியும்.  நீங்க ஆரோக்கியமா,  ஃபிட்டா இருக்க இவங்க பொதுவா சொல்லும் யோசனைகளை என்ன?

பேத்தல் 1:  ஸ்விம்மிங் போகணும், மீன் நிறைய சாப்பிடனும்.

நம்ம தலைவர் ஒருத்தர் இருக்காரு, அவரை மாதிரி நீச்சலடிக்கிறவர் யாருமே இல்லை,  மீனும் எக்கச் சக்கமா சாப்பிடுராரு,  ஆனா அவர் ஒன்னும் ஸ்லிம் ஆனா மாதிரி தெரியலியே ராஜா.....!!


இவர்தான் நான் சொன்ன தலைவர், 24 மணி நேரமும் நீந்திகிட்டே தான் இருக்காரு, ஆயிரக்கணக்கில் மீனை உள்ளே தள்ளுறாரு, ஆனாலும் ஸ்லிம் ஆன மாதிரி தெரியலியே!!


பேத்தல் 2: ஆரோக்கியமா இருக்க நீங்க நிறைய நடக்கணும், சைக்கிள் நிறைய ஓட்டனும்.  அப்படிப் பார்த்தா, நம்மூரு போஸ்டுமேனுங்க யாரும் சாகவே கூடாது,  அவங்களை விட நடப்பவர்களும் சைக்கிள் ஓட்டுபவர்களும் யார் இருக்கா?பேத்தல் 3: நீண்ட நாள் வாழ சுறுசுறுப்பா இருக்கணும், ஓடியாடணும். 

ம்ம்....  எதையெதையோ சமாளிச்சோம் இதை சமாளிக்க மாட்டோமா!! இதுவும் சுத்த பேத்தல்.  ஏன்னா முயலைப் பாருங்க  எப்ப பார்த்தாலும் துள்ளிக் குதிச்சு ஓடிகிட்டே தான் இருக்கு, ஆனா 15 வருஷம் தான் வாழுது.


நம்ம தலைவரு ஆமை, ரொம்ப மெதுவாத்தான் நடக்கிறாரு, அல்லது எங்கேயாச்சும் படுத்து கிடக்கிறாரு.  இவரு சுருசுருப்பா இருந்ததா சரித்திரமே இல்லை.  ஆனாலும் 450 வருஷமா வாழ்ந்துகிட்டு இருக்காரு.  இதுக்கு என்ன சொல்லுவீங்க?
நீதி:  சிலர் நீங்க வைக்கும் எல்லா லாஜிக்கையும் உடைச்சு ஜெயிச்சு காட்டுவாங்க, அவங்க என்ன செய்யுறாங்க/செய்யவில்லை என்பது இரண்டாம்பட்சம்.

4 comments :

 1. ஹா... ஹா... உங்களுக்கு குறும்புகள் பருமனாகி விட்டது...

  ReplyDelete
 2. ஹா ஹா நல்ல கலகலப்பு பதிவு
  ஆமை பக்கி என்னம்மா தம் அடிக்குது

  ReplyDelete
 3. என்னங்க நீங்க நிஜமாவே எதையாச்சும் ஐடியா சொல்ல போறிங்கன்னு வந்து பார்த்தா.. ஆ.. முடியலை உங்க லொள்ளு..! நல்லா சிரிக்க வைக்கறிங்க.

  ReplyDelete
  Replies
  1. இது இணையத்தில் எழுத்தில் பார்த்தது, படத்தை சேர்த்தது மட்டும் நாம்!! நன்றி.

   Delete