Friday, November 23, 2012

காதல் சின்னமும், இந்தியாவின் பழைய அதிகார மையமும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆக்ரா சென்றிருந்தேன், அப்போது தாஜ்மஹாலையும், ஆக்ரா கோட்டையையும் சுற்றிப் பார்த்தோம், அப்போது எடுத்த சில படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

நீங்கள் தாஜ்மஹாலைப் எத்தனை சினிமாவில்,  புகைப் படங்களில், பத்திரிகைகளில் பார்த்திருந்தாலும் சரி,  நண்பர்களிடம் சொல்லக் கேட்டிருந்தாலும் சரி, தாஜ் மஹாலின்  பல்வேறு நுழைவு வாயில்களைக் கடந்து உள்ளே நுழைந்து அந்த பிரமாண்டமான பளிங்கு அற்புதத்தைப் பார்க்கிறீர்கள் அல்லவா, அந்த அனுபவத்திற்கு ஈடு இணையே கிடையாது.  பிரமிக்க வைக்கும் தோற்றம்.  பார்க்காதவர்கள் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று வரலாம்.

தாஜ்மஹாலைப் பொறுத்தவரை நிறைய காதலர்கள் அதைச் ஜோடி ஜோடியாக வெவ்வேறு 'அன்பான' போஸ்களில் நின்று படமெடுத்துக் கொள்கிறார்கள்.  இது காதலுக்கான கோவில் என்ற தீராத நம்பிக்கை இருக்கும் போல!! இதோ படங்கள்.








இவை நிஜமான கல்லறைகள் இல்லையாம், அவை இவற்றுக்கு நேர் கீழே  ஆழத்தில் பாதாள அறையில் உள்ளனவாம், இவை just symbolic!!





ஷாஜஹான்-ஔரங்கசிப் காலத்தில் அவர்கள் ராஜ்ஜியமான பரந்த இந்தியாவை ஆக்ராவில் இருந்துதான் ஆட்சி புரிந்திருக்கிறார்கள், ஒரு காலத்தில் தலைநகரமாக பரபரப்பாக இயங்கிய ஒரு கட்டிடத்திலா இன்று இவ்வளவு அமைதியாக இருக்கிறது என்ற வியப்பு மேலிட்டது.  இந்த கட்டிடங்கள் பல காலத்தால் அழிந்து போய்விட்டன.  10-20% கட்டிடங்களே எஞ்சியுள்ளனவாம்.  அதற்கே நாம் பிரமித்துப் போய் விடுகிறோம்.

சகோதரர்களை போட்டுத் தள்ளி ஆட்சியைப் பிடித்த ஔரங்கசிப் தனது தந்தையை இந்த கோட்டையில் தான் சிறை வைத்திருக்கிறார், அவர் இருக்கும் இடத்தில் இருந்து தனது பிரியமான காதலிக்கு கட்டிய தாஜ்மஹாலை பார்த்த வண்ணமே தனது மிச்ச நாட்களை கழிக்குமாறு வசதி செய்து கொடுத்திருக்கிறார்!!  எவ்வளவு நல்ல மனசு!!

இந்த இடத்தின் இன்னொரு முக்கியமான விஷயம், மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி இங்கேதான் சிறைவைக்கப் பட்டிருக்கிறார்.  இங்கிருந்துதான் பழக்கூடையில் ஒளிந்து தப்பிச் சென்று பின்னர் மாபெரும் படையைத் திரட்டி தனது எதிரிகளை மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார்!!  ஆஹா...  எப்பேர்பட்ட இடம் இது!!



இந்த அகழியில் முதலைகளை விட்டிருப்பாங்களோ !! 

இதில தாஜ்மஹாலைக் கண்டுபிடிச்சிட்டா உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுதுன்னு அர்த்தம்!!





ஒரே கல்லில் செய்யப்பட்ட தொட்டி..........



தூரத்தில் தாஜ்மஹால்...........




தாஜ்-ஆக்ரா கோட்டை பற்றி எளிய தமிழில் சுருக்கமாக பல தகவல்களை மேலும் அறிந்து கொள்ள சுட்டி.

16 comments:

  1. அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பிகு: எனக்குக் கண் நல்லாத் தெரியுது:-))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா..........ஹா.....ஹா............. உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு சார்!! அப்போ ஆன்லைன் Eye Check Up அப்படின்னு போட்டு கல்லா கட்டிடலாம்னு சொல்றீங்க!! நன்றி!!

      Delete
  2. நேரம் இருக்கும்போது இந்தச்சுட்டியில் பாருங்க. நம்ம தாஜ் விஜயம்.

    சார்/மேடம் எல்லாம் வேணுமா? துளசின்னு சொல்லுங்களேன்.

    http://thulasidhalam.blogspot.co.nz/2010/12/blog-post_23.html

    ReplyDelete
  3. ஒவ்வொருத்தருக்கும் உலகிலேயே மிகவும் பிடித்தமான வார்த்தை அவங்க பெயர்தான்னு எவனோ வெள்ளைக்காரன் சொல்லியிருக்கான் துளசி!! அது சரிதான்!!

    நீங்க கொடுத்த சுட்டியைப் பார்த்தேன், படங்கள் பளிச்சென இருக்கின்றன. 7/27/2012 12:57 AM க்கு கமன்டும் போட்டிருக்கேன். ஹா...........ஹா................ஹா.........

    உங்க பிளாக்கில் Follow பண்ணும் வசதியை நீங்கள் வைக்கவில்லையா??!!

    ReplyDelete
  4. பக்கத்து வீட்டுப்பொடிசு( வயசு ஒன்னரை)கூட ஹாய் டூல்ஸின்னுதான் கூப்பிடும். பெயர் சொல்லிக் கூப்பிடத்தானே பெயரே இருக்கு, இல்லீங்களா? இங்கெல்லாம் ஸர்நேம் பயன்படுத்திக் கூப்பிடுதல் அரிது.


    ப்ளொக்கில் எந்த வசதியும் வச்சுக்கலை. எழுதிக்கிட்டுப்போறதோடு சரி.

    நான் ஒரு க கை நா.

    ReplyDelete
  5. படங்கள் அருமை; இரண்டு வருடம் முன் சென்று வந்த ட்ரிப் பற்றி பகிர இப்போ ஆரம்பித்த ப்ளாக் உதவுது பாருங்க.

    கார்ட்டூன் கார்னரும் சுவாரஸ்யம் :)

    ReplyDelete
  6. துளசி டீச்சர் ப்ளாக் நான் தொடர்கிறேனே; என் Dashboard-ல் அவர்கள் பதிவு தெரியுமே. தொடர்வோர் பட்டை இருந்து அதில் நாம் இணைந்திருந்தால் தானே பதிவுகள் Dashboard-ல் தெரியும். எங்காவது ஒரு மூலையில் Follower விட்ஜெட் இருக்க கூடும்

    "துளசி" அப்படின்னே கூப்பிடுங்க என்று சொல்லும் நம்ம டீச்சர் தமிழின் மிக மிக மூத்த பதிவர். மனதில் மிக இளமையானவர். நூற்ற்றுக்கணக்கில் பதிவுலக நண்பர்கள் ( தொடர்வோர் அல்ல; நண்பர்கள்) கொண்டவர்; பயண கட்டுரை என்றால் டீச்சர் அவசியம் வாசித்து விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. @மோகன் குமார்

      டுல்சி ..... சாரி...... துளசி மேடத்தை பத்தின தகவல்களுக்கு நன்றி மோகன். இவங்க பதிவுகளையும் படிச்சிருக்கேன், ஆனா மறந்திட்டேன்!!

      Delete
  7. புகைப்படங்கள் அழகோ அழகு!

    ReplyDelete
    Replies
    1. @ உஷா அன்பரசு

      \\புகைப்படங்கள் அழகோ அழகு!\\ மிக்க நன்றி உஷா!! நீங்க ரியலி broadminded, Thank you!!

      Delete
  8. தாஜ்மஹால் பற்றிய ஒரு தகவல் படித்திருந்தேன் இதை கட்டிய கலைஞர்களின் பெருவிரல் வெட்டப்பட்டதாம். அதனாலேயோ என்னவோ இதன் கூரையின் ஒரு இடத்தில் சரிசெய்யமுடியாத ஒழுகள் இருக்கிறதாம்.

    ReplyDelete
    Replies
    1. @கலாகுமரன்
      இதை உறுதி படுத்த முடியவில்லை கலா குமாரன்!!

      Delete
  9. கண்கள் சரியாக தெரிவதால்... அழகான படங்கள்... நன்றி...

    ReplyDelete
  10. படங்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete
  11. படங்கள் அருமை;அருமை;அருமை;அருமை;

    ReplyDelete
  12. புதிய கோணங்களில் அழகான படங்கள். ஒரே கல்லிலான தொட்டி பிரமாண்டமாக இருக்கிறதே!
    நீர் சேகரிக்கவா?

    //தாஜ்மஹால் பற்றிய ஒரு தகவல் படித்திருந்தேன் இதை கட்டிய கலைஞர்களின் பெருவிரல் வெட்டப்பட்டதாம். அதனாலேயோ என்னவோ இதன் கூரையின் ஒரு இடத்தில் சரிசெய்யமுடியாத ஒழுகள் இருக்கிறதாம்//

    இப்படியான கதையில் நம்மாக்கள் கில்லாடிகள், இங்கு
    ஈபிள் கோபுரத்தின் அடியில் இதை நிர்மாணித்த குஸ்ரவ் ஈவிளுக்கு (Gustave Eiffel)ஒரு மார்பளவு சிலை வைத்துள்ளார்கள், அதைப் பார்த்துவிட்டு யாரோ ஒருவர், இவர் இன்னும் ஒன்றை இப்படி நிர்மாணிக்கக் கூடாதென்பதால் கைகளை வெட்டி விட்டதாக கதையைக் கற்பனை கலந்து கட்டி விட அதைப் பலர் நம்பினார்கள்.
    ஆனால் அதன் பின்பும் அவர் பல பாலங்களையும்,கட்டிடங்களையும் தேவாலயங்களையும் உலகில் பல நாடுகளுக்கு வடிவமைத்துக் கொடுத்து 91 வயது வரை வாழ்ந்துமுள்ளார்.

    ReplyDelete