Wednesday, November 21, 2012

உலகிலேயே மிகவும் அழகான வண்ண மீன்கள் பத்து.




மீன்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், அதனால் தான் வீட்டு வீட்டுக்கு தொட்டிகளில் அவற்றை வளர்க்கிறோம்.  ஆயிரக்கணக்கான மீன் வகைகள் உலகெங்கும் காணப் படுகின்றன.  அழகில் முதல் பத்து மீன்களின் படங்கள் இங்கே.  [அதுசரி இதுங்க எல்லாம் தான் இருப்பதிலேயே அழகுன்னு உலக அழகி, பிரபஞ்ச அழகின்னு யாராச்சும் போட்டி வச்சு தேர்ந்தேடுத்தாங்களா? அது எனக்குத் தெரியாது, ஆனால்  'Beauty is in the eyes of the beholder' என்ற பழமொழியை நினைத்துக் கொண்டே பார்க்கவும்!!   ஹி ....ஹி ....ஹி ....  ].

1. மாண்டரின் மீன் [Mandarin fish ]



இவை டிராகோனெட் [Dragonet]  என்ற விளங்கியல் குடும்பத்தைச் சார்ந்தவை.  அதோட உடம்பில பளிச்சிடும் வண்ணங்கள்  இருப்பதைப் பார்க்கலாம்.  இதை உங்க வீட்டில் வளர்க்கனும்னு ஆசையா?  அது உப்புத் தண்ணீர்ல மட்டும் தான் வாழும், உங்களால் அந்த வசதி செய்து குடுக்க முடியுமான்னு பார்த்துக்கோங்க!!

2. ஜுவனைல் எம்பரர் ஏஞ்சேல்  [ Juvenile Emporer Angel Fish]


 40 செ.மீ வரை வளரும் இந்த மீன்கள் பெரும்பாலும் நீலம், வெள்ளை வண்ணங்களை தங்கள் உடலில் கொண்டிருக்கும்.  இவற்றில், "யோவ் பெரிசு" என்றோ, "நீ சின்னப் பய" என்றோ அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாம்!!


3. சிங்க மீன் [?!] Lion Fish


கடலில் இவற்றைப் பார்த்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்.  [நீங்க அடிக்கடி கடலுக்கு போவீங்களா!!]  நம்மளை அட்டாக் பண்ண வர்றாண்டா என்று இதுங்க தற்காப்புக்காக நம்மை புடிச்சி கடிச்சு வச்சிடுமாம், கடிக்கும்போது உடலில் விஷத்தையும் ஏத்திடுமாம்.  இதனால் வாந்தி, தலைவலி வருமாம்.  [ஆள் சாவ மாட்டான்னு தான் நினைக்கிறேன்.  ஹி ...... ஹி ...... ]

 4. கோமாளி குதிரை மீன் [Clown Trigger Fish]


இந்த வகை மீன்கள் பாளிஸ்டிடே [Balistidae] என்ற விலங்கியல் குடும்பத்தைச் சார்ந்தவை.  இதுங்க உடம்பின் மேல் விளம்பரப் பலகையில் வரைஞ்சு வச்சா மாதிரி அழகிய வடிவங்களில் பளிச்சிடும் வண்ணங்கள் காணப் படுகின்றன. இவை வெப்ப /மித வெப்ப மண்டல கடல் பகுதிகளில் [முக்கியமாக இந்து-பசிபிக் பகுதிகளில்] வாழ்கின்றன.

5. நியூடிபிரான்ச் [Nudibranch]

இதோட உடம்பில் உள்ள வண்ணங்கள் உங்கள் கண்களைப் பறிக்கும் வெள்ளைக்காரன் இதை "sea slugs him" அப்படிங்கிறான் ஏன்னுதான் தெரியலை....!!

 6. சிம்ஃபிசோடான் [Symphysodon]


எட்டு முதல் பத்து இன்சுகள் நீளம் வரை வளரும் இவற்றின் உடலின் மேல் பழுப்பு, சிவப்பு, பச்சை, நீல வண்ணங்கள் காணப் படுகின்றன.

7. மேண்டிஸ் ஷ்ரிம்ப் [Mantis shrimp]

இதை வளர்க்கனும்னா, மீன்தொட்டியை கொஞ்சம் ஸ்ட்ராங்கா வச்சுக்கனுமாம், இல்லாட்டி ஐயா உடைச்சு போட்டுடுவாராம்!!

8. மூரிஷ் ஐடோல் [Moorish Idol]

வெள்ளை, கருப்பு, மஞ்சள் நிறங்கள் இவற்றின் உடலில் காணப்படுவதால், உங்க மீன்தொட்டியை கலர்ஃபுல்லா ஆக்கி அலங்கரிக்க இது உதவும்!!

9. கிளவுன் ஃ பிஷ்  அனிமோன்  [Clownfish Anemone ]  [இதையெல்லாம் தமிழ்ல கோமாளி மீனுன்னு எழுதினா வெவகாரமா பூடும் ஹி ...... ஹி ...... ஹி ......]


இவை உடலின் நீளத்திற்கு பெயர் போனவை.  [எம்புட்டு நீளம்னு அந்த நாதாரி சொல்லவே இல்லியே...:(  சாரிங்க....]  ஆரஞ்சு வெள்ளை நிறங்கள் இவற்றின் உடலின் மேல் காணப்படும்.  இவற்றின் உடல் நீளத்தையும் வண்ணங்களையும் பார்த்தால் Finding Nemo என்ற ஆங்கிலப் படத்தின் ஞாபகம் வந்திடுமாம்.  [ம்க்கும்......  கிழிஞ்சது, படத்து பேரைக் கூட கேட்டது இல்லை.  குஷ்டமப்பா..  சீ..கஷ்டமப்பா.....அதுசரி  நீங்க அந்தப் படத்தை பார்த்திருக்கீங்களா?]


10. வானவில் கிளி மீன்.  [Rainbow Parrot Fish]  [பச்சையப்ப முதலியார் என்பதை Green Father crocodile who அப்படின்னு எவனோ முழி.....  சாரி மொழி பெயர்த்தானாம்.  :(( ]

ஆரம்பத்தில் பழுப்பு, பச்சை, சிவப்பு நிறத்தில் தோன்றும் இவை, போகப் போக இளஞ்சிவப்பு, நீலம் பச்சை வண்ணகளில் இருக்குமாம். 
If you get it in the terminal phase, you will enjoy pink, blue and green as well. The initial phase will serve you with brown, green and red colours. This is most beautiful fish.

உலகின் மிகப் பெரிய மீன் காட்சியகம், ஜார்ஜியா.




4 comments:

  1. மீனம்மா...மீனம்மா அத்தனையும் அழகு.

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை... மிகவும் பிடித்தது : 3, 6 & 8

    ReplyDelete
  3. வாவ்! அனைத்தும் அழகு, மீன்களும் அதன் விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
  4. அழகு மீன்களின் காட்சி அருமை..!

    ReplyDelete