Friday, November 2, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் மனைவியரை பப்ளிக்காக கிஸ் பண்ணுவதன் சூட்சுமம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் போட்டி வேட்பாளருடனான நேருக்கு நேர் விவாதங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது ஒரு முக்கியமான நிகழ்வை நீங்கள் அவ்வப்போது கவனித்திருக்கலாம்.  அதிபர் வேட்பாளர் பேசுவதற்கு முன்னரோ பின்னரோ மனைவியை தொலைகாட்சி கேமராவுக்கு நன்கு தெரியும் விதத்தில் பப்ளிக்காக லிப் டு லிப் கிஸ் அடிப்பார்.  அப்புறம் அவரு போட்ட குட்டிங்க ஒன்னோ ரெண்டோ, தூர நின்னுகிட்டு இருக்கும் ஓடி வந்து அப்பாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிடும்.  இந்த மாதிரி ஒரு காட்சியை நாம் இந்தியாவில் காண முடியாது, அமெரிக்காவில் மட்டும் ஏன்?


பெண்டாட்டிஎல்லாம் வச்சு காப்பாத்தறேன் நான் பொறுப்பானவன் அதனால ஒட்டு போடுங்க.......[...........க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......................... தூ............]

இந்த சூட்சுமம் அமெரிக்காவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் நம்ம பயலுவளுக்கே தெரியாது, நாமதான் முதலில் போட்டு உடைக்கப் போகிறோம்.  ஹி .....ஹி .....ஹி ..............[இப்படியெல்லாம் ஒரு பெருமையா..........].  அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் கணவன் மனைவி குடும்ப உறவில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.  இந்தியாவில் தாலி கட்டிய பின்னர் மனைவி கணவனைப் பிரிவதில்லை, அவ்வாறு பிரிந்தால் அது அதிசயம், துரதிர்ஷ்டம்.  அமெரிக்காவில் அது தலைகீழ்.  முதல் இரண்டு மூன்று வருடத்திற்குள்ளாகவே 75% கேஸ்களில் டைவர்ஸ் ஆகிவிடும்,  ஒருத்தன் தன் பெண்டாட்டியுடன் வாழ்கிறான், குழந்தைகளை வைத்துக் காப்பாற்றுகிறான் என்றால் அது அதிசயம்.  அந்த மாதிரி அதிசய தன்மையுடன் நான் உள்ளேன், பொறுப்பானவன் பெண்டாட்டிஎல்லாம் வச்சிருக்கேன், பிள்ளைங்களை கூட வளர்த்திருக்கேன், என் பொறுப்பை மெச்சி ஒட்டு போடுங்க என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும், அதற்குத்தான் இந்த பப்ளிக் கிஸ்.  இந்தியாவில் இதைச் செய்தால் என்ன?  அட நீ என்னடா காப்பாத்திட்டே, மவுண்டு ரோட்டில் பிச்சை எடுக்கிறவன் கூட இதைச் செய்வான்டா என்று பதில் கிடைக்கும்.  அதை பெரிய ஷோ பீசாக இங்கே காட்ட முடியாது, ஆனால் அங்கே காட்ட முடியும், அதுதான் வேறுபாடு!!

18 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))

    ReplyDelete
  2. ஆஹா...ஆஹா...ஆஹா...ஆஹா...ஆஹா...ஆஹா...ஆஹா...

    ReplyDelete
  3. ஆஹா, ரகசியம் புரிஞ்சு போச்சு.

    ReplyDelete
  4. இப்ப தானே விஷயம் தெரியுது... நன்றி...

    ReplyDelete
  5. சுதந்திரத்தை தான் அதிகம் பார்கிறார்கள் தன் குழந்தைகளை விட !!!!!!!!!

    ReplyDelete
  6. நாகரிகத்தின் முன்னேற்றம்.

    ReplyDelete
  7. ****இந்தியாவில் தாலி கட்டிய பின்னர் மனைவி கணவனைப் பிரிவதில்லை, அவ்வாறு பிரிந்தால் அது அதிசயம், ****

    அட அட அட அட!

    பாவம் ஜெயவேல் இன்னும் கி மு லயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு!!! கண்ணைத் திறந்து இந்தியாவில் என்ன நடக்குது பாரோங்கோ! "கற்பனை இந்தியாவிலேயே" வாழ்ந்துகொண்டிருந்தால் எப்படி? :)))

    ReplyDelete
  8. கற்பு எல்லாம் தேவையில்ல, ஒருவனுக்கு ஒருத்தி என்பதே அசிங்கம், அனாகரீகம்னு ஆணும் பெண்ணும் கலயாணம் முன்பும், கல்யாணம் பின்பும் ஊர் மேஞ்சிக்கிட்டு திரிகிறதுதான் இன்றைய நவீன இந்தியா. குஷ்பு ஆண்ட்டில இருந்து அந்த கேஸுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் வரை அதைத்தான் நம்புறா.. நீங்க என்னத்தையோ சொல்லிக்கிட்டு...

    கொஞ்ச நாளைக்கு முன்னாலகூட நிசப்தம்னு ஒரு தளத்தில் வா மணிகண்டன் னு ஒருவர், அவர் கூட வேலை செய்யும் சச்கோதரி, விவாகரத்தை பெருமையாக கொண்டாடினார்கள்னு சொன்னாரு.

    **** எங்கள் டீமில் பணிபுரியும் பெண் நேற்று ட்ரீட் கொடுத்தாள். சிக்கன் பீஸ்களை தட்டத்தில் அடுக்கி கொண்டிருந்த போது அருகில் வந்தாள். ’எதற்காக ட்ரீட்’ என்றேன். ஏற்கனவே காரணம் தெரியும் என்றாலும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அது. சென்ற வாரத்தில் அவளுக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது. இனி தான் சுதந்திரமாவள் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டாள். அதற்கு பிறகு அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தட்டில் இருக்கும் சிக்கனுடனான எனது உரையாடலை ஆரம்பித்தேன்.

    ---
    இவள் மஹாராஷ்டிராக்காரப் பெண். என்ன காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக் கொண்டாள் என்று முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக தான் இணையத்தில் சாட்டிங் செய்வதை கணவன் அனுமதிப்பதில்லை என்றும் தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்களை அவன் கண்காணிக்கிறான் என்றும் சொல்லியிருந்தாள். இதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால் மூன்று விவாகரத்துக்களிலும் ’வெர்ச்சுவல் உலகம்’ முக்கிய பங்காற்றியிருக்கிறது.
    ****

    ஆமா உங்க பெங்களூரில்தாங்கோண்ணா! :))

    இந்தியா இந்த லட்சணத்துல இருக்கு! நம்ம ஜெய்வேல் என்னவோ கதைவிட்டுக்கிட்டு திரிகிறார் பாவம்!

    ReplyDelete
    Replies
    1. வருண் எப்பவுமே பாருங்க வெளிநாடு போயிட்டு திரும்பி வரும்போது ஏதாவது தொத்து வியாதியையும் கொண்டுவந்திடுவாங்க. உங்கள மாதிரி சில பேர் அந்த மாதிரி கொண்டு வந்து விட்ட தொத்து வியாதிதான் இது. எங்க அப்பா அம்மா காலத்தில நீங்க சொன்ன எதுவுமே இல்லை, இந்த தலைமுறையில் இது ஆரம்பிச்சிருக்கு எல்லாம் உங்களை மாதிரி இருக்க புண்ணியவானுங்க செஞ்ச வேலை. வெள்ளைக்காரன் செய்வதெல்லாம் அப்பட்டமா காப்பியடிச்சாத்தாண்டா மதிப்பு என்று நினைக்கும் சில கூமுட்டைகள் செய்யும் வேலை இது. இந்திய கலாசாரத்தை எதெதுவோ சீரழிக்க முயற்சி பண்ணிச்சு வேலைக்கே ஆகலே, இந்த TV , சினிமாங்கிற கருமாந்திரம் உள்ளே வந்து நுழைஞ்சது அத்தனையும் பாழ். இப்பவும் இந்த IT இல வேலை செய்யும் நாதாரீங்களை மட்டும் நாடு கடத்திட்டா போதும் நாடே சுத்தமாயிடும்.

      Delete
    2. இதுவேறயா? :)))இந்தமாரி ஏதாவது சொல்லுவீங்கனுதான் நான் திரும்பியே வரவில்லை. one-way ticket தான் தல. ஏதோ என்னால உங்க இந்தியாவுக்கு செய்ய முடிஞ்ச ஒரு சின்ன உதவி. :)))) அதனால என்னை கையைக் காட்டாதீங்க.

      Delete
    3. அதென்ன வருண் அப்படி சொல்லிட்டீங்க? உங்களுக்கு உண்மை தெரியுமா இல்லியா? நாட்டில் IT மக்கள் வருவதுக்கு முன்பு தேனாறும் பாலாறும் ஓடியது, லஞ்ச ஊழலே கிடையாது, ஜாதீயம் கிடையாது, பசி பட்டினி பஞ்சம் கிடையாது, குழந்தை திருமணம் கிடையாது, பெண் சிசுக் கொலை கிடையாது, கற்பழிப்பு கிடையாது இன்னும் எவ்வளவோ கிடையாது.

      இது எல்லாவற்றுக்கும் காரணம் IT மக்களும் அமெரிக்க மக்களும் தான்.

      ஜெயதேவ், அமெரிக்காவில் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்ளலாம், ஆனால் இந்தியாவில் இருப்பது போல மனைவி ஒன்று துணைவி ஒன்று வைத்துக் கொள்ள முடியாது.

      Delete
    4. @ SathyaPriyan

      \\நாட்டில் IT மக்கள் வருவதுக்கு முன்பு தேனாறும் பாலாறும் ஓடியது, லஞ்ச ஊழலே கிடையாது, ஜாதீயம் கிடையாது, பசி பட்டினி பஞ்சம் கிடையாது, குழந்தை திருமணம் கிடையாது, பெண் சிசுக் கொலை கிடையாது, கற்பழிப்பு கிடையாது இன்னும் எவ்வளவோ கிடையாது. \\ முன்னாடி அங்கொன்றும் இங்கொன்றுமாக கள்ளத் தொடர்புகள் இருந்தன, இந்த IT நாதாரிகள் வந்த பின்னர் வெளிப்படையாக பெட்டையும், ஆடவனும் கல்யாணம் பண்ணாமலேயே எல்லாம் பண்ணும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். சீக்கிரம் அமெரிக்கா ரேஞ்சுக்கு கொண்டுபோய் விடுவார்கள் என நினைக்கிறேன். வீட்டு வாடகை, வீட்டு மனை, ரியல் எஸ்டேட் ஏத்திவிட்டது இந்த நாதாரிகளால் தான். ஏனென்றால் ரெண்டு நாதாரிகளும் வேலைக்குப் போகும், புள்ள குட்டி வராது, மஜாதான் அப்புறமென்ன? கேட்கும் காசை வீசிஎரிஞ்சிட்டு போய்கிட்டே இருக்கும், பாவம் சாதா பொதுஜனம் இதைத் தாங்குமா?

      \\ஜெயதேவ், அமெரிக்காவில் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்ளலாம், ஆனால் இந்தியாவில் இருப்பது போல மனைவி ஒன்று துணைவி ஒன்று வைத்துக் கொள்ள முடியாது.\\ வேணுங்கிற வரைக்கும் எல்லாம் பண்ணிட்டு கலட்டி விட்டிட்டு போவதை விட சாகும் வரை பத்து பெண்டாட்டியை வச்சு காப்பாத்தறது எவ்வளவோ மேல்.

      Delete
  9. * ஒதுங்கிப்போடா! இது யாரு தெரியுமா? நம்ம அண்ணன் கருப்பையா வச்சிருக்காரு..

    * தீர்ந்து கட்டிக்கிட்டாளாம் அவ. நம்மாளுகள்ள எல்லாம் தீர்ந்துகட்ட மாட்டாங்க..


    இதுமாரி 1000 சொல்ல முடியும்- நான் வளர்ந்த தமிழ்நாட்டில் நான் பார்த்தது. பாவம் எதுக்கெடுத்தாலும் வெள்ளைக்காரனையே கையை காட்டுறீங்களே!

    ReplyDelete
    Replies
    1. வருண், இன்னைக்கும் விவாகரத்து செய்வதை நீங்கள் ஒரு செய்தியாய் பார்க்கறீங்க, அப்படின்னா அது ஒரு unusual ஆக இன்னும் இங்கே கருதப் படுது. அப்படின்னா பெரும்பான்மையான மக்கள் இன்னமும் திருமண பந்தத்தின் மேல் நம்பிக்கையுள்ளவர்கள் என்றே அர்த்தம்.

      நீங்க ஒரு வேலை பண்ணுங்க, திருமணமாகி ஆகும் வருடங்கள் % விவாகரத்து. எத்தனை திருமணத்துக்கு எத்தனை விவாகரத்து, இந்தியாவில் அது எத்தனை, அமரிக்காவில் எத்தனை. விவரங்களுடன் உங்க தரப்பு நியாயத்தை வைக்கவும், அதுதான் சரியாக இருக்கும். சும்மா அங்கேயும் இருக்கு, இங்கேயும்தான் இருக்கு என்று ஏதோ தப்பி தவறி நடப்பதை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்.

      Delete
  10. உண்மை தான், ஆனால் காரணம் வேறு. பொது இடங்களில் மனைவியை முத்தமிடுவது, அரசியல்வாதிகள் மட்டுமிலவே, அனைவரும் அப்படித்தான். அப்படி எனில் அனைவரும் நான் குடும்ப வாழ்க்கையில் வெற்றியைடைந்தேன் என்றா கூற முனைகின்றார்கள். மனைவியை முத்தமிடுவது அன்பானவன், மனைவிக்கு மதிப்புக் கொடுக்கின்றேன் என்று அர்த்தம். நீங்கள் நினைப்பது போல விவாகரத்து செய்யாமல் வாழ்கின்றேன் என்று அர்த்தமில்லை..

    ReplyDelete
    Replies
    1. கிஸ் பண்ணினாத்தான் உங்க மனைவியை நீங்க மதிக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்க முடியுமா? இன்னும் என்னென்னவெல்லாம் சொல்லப் போறீங்களோ தெரியலையே!! அதுசரி மத்த நாடுகளில் எல்லாம் மனைவியை மதிக்கிறதே இல்லையா? வீட்டுக்குள்ள எது நடந்தாலும் பொதுவில் கிஸ் பண்ணி ஏமாத்த முடியுமே? மனைவியை எங்கே வேண்டுமானாலும் கிஸ் பண்ணலாம் ஆனால், அதிபர் தேர்தல் உரையின் பொது எல்லோருக்கும் தெரியும்படி கிஸ் பண்ணுவதன் நோக்கம் மக்களிடம் ஷோ காண்பிக்கத்தான். இக்பால் செல்வன், அமரிக்காவைப் பொறுத்தவரை அவங்க கிஸ் பண்ணுவதன் இரகசியம் இதுதான். நீங்க ஒத்துகிட்டாலும் இல்லாட்டாலும்.

      Delete
  11. மணமான ராதையோடு கண்ணன் குழாவித் திரிந்தமை, மணத்துக்கு முன்னே கருப்பமாகி பிள்ளைப் பெற்ற குந்திதேவி, அண்ணனின் மனைவியை மணந்த சுக்ரீவன் இப்படி பற்பல எல்லாம் வெள்ளைக்காரனா கொண்டு வந்தது? இன்றைய இந்தியக் கலாச்சார ஒடுங்கல் பண்புகள் முகாலயர்களால், ஐரோப்பியர்களால் விதைக்கப்பட்டவை. பழம்சமூக இந்தியா காமசூத்திரம் எழுதிய பொன்னாடு !

    ReplyDelete
    Replies
    1. இயற்பியல் என்றால் நியூட்டன், ஐன்ஸ்டீன் சொன்னதைத்தான் கேட்டுக் கொள்ள வேண்டும், நாமாக கப்சா விடக் கூடாது. ஆன்மீகத்திலும் எக்ஸ்பெர்ட்ஸ் இருக்காங்க, அவங்க கிட்ட தத்துவ விசாரமா கேட்டு தெரிஞ்சுக்கணும். உங்க புரிதல் தவறானது. கண்ணன் ஐந்து வயதாக இருக்கும்போதே ராதையை கந்தர்வ மனம் புரிந்திருக்கிறார். குந்தி குழந்தையை ஈன்றாளும் அவளது கற்ப்பு பறிபோகாத வரத்தை சூரியன் கொடுத்திருக்கிறார். [அதெப்படி குழைந்தை பெற்றாலும் கற்ப்பு போகாதுன்னு உங்க விஞ்ஞானத்தை இங்கே வந்து புத்தக் கூடாது, அவங்களுக்கு அது சாத்தியமே.] வாலி சுக்ரீவன் மனித இனமே கிடையாது, அதுக்கு மனிதனுக்கான விதியை ஏன் புகுத்தறீங்க?

      Delete