Thursday, October 4, 2012

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள்!!

சில மாதங்களுக்கு முன்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்க்குச் சென்றபோது என் கேமராவில் சிக்கிய படங்களில் சில!!






 


சிங்கமுக குரங்குகள்
தலைவர் என்னமோ ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காரு!!
காட்டெருமை இருக்குமிடத்தில் வண்ண மயில் எப்படிய்யா வந்தது!!

மான்கள்..........  எத்தனை மான்களடி !!











காட்டாடு....!!
சிம்மக் குரலோன்......!!


எல்லாமே கோழிகள் தான்.......!!
அவரு வாக்கில தான் தலைவரு தண்ணீர் குடிக்க வந்தாரு......கேமராவின் முதல் ஃ பிளாஷ் அடிச்சது!!.

யார்ரா அவன் என்னை படம் புடிக்கிறான்னு நிமிர்ந்து வடிவேலு மாதிரி தலையை சாச்சி நக்கலா  எங்களைப் பார்த்தாரு...........

என்னங்கடா என்னை அப்படி பார்க்கிறீங்க............[லைட்டா கோபம் வந்தித்துச்சு..........]

நான் யாரு தெரியுமில்ல.......... இன்னைக்கு மட்டும் என் கையில கையில சிக்கினீங்க.......


இதுக்கப்புறமும் நாங்க அங்க நின்னுகிட்டு இருந்திருப்போம்னு நினைக்கிறீங்க........!!

ஒட்டகச் சிவிங்கிகள்...........

என்ன வேலை செஞ்சாங்களோ தெரியலை....... எல்லோரும் அசந்து படுத்திருக்காங்க............




வெள்ளை நிறத்தில் பருந்து ,அழகா இருக்கு.....!!



நீர் நாய், வீட்டுக்குள்ள இருந்து யாரோ எட்டிப் பார்க்கிறாங்க .  வீட்டுகாரம்மாவாத்தான் இருக்கணும்!!

உடும்பு!!

எல்லாம் வெளிநாட்டு நாரைகளாம்!!


சென்னைக்கு வரும் வெளியூர்க்காரர்கள் தவறாமல், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வரவும்!!




21 comments:

  1. வாவ்வ்வ்...

    அடிக்கடி போற இடம் தான் என்றாலும் நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன்னு இப்பதான் தெரியுது.. கலர் கலரா கோழி.. நான் பாத்ததே இல்ல.. இப்பதான் பாக்குறேன்..

    மான் படம் செமையா இருக்கு... காண்டாமிருகத்திற்கு கொடுத்த கமென்ஸ் ரசிச்சேன்

    ReplyDelete
  2. விலங்குகள் எல்லாம் சந்தோஷமா இருந்தா சரிதான். மனித உயிரில பூங்கா ஒண்ணு ஆரம்பிச்சு விலங்கள் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து நம்மள எல்லாம் அடச்சு வைச்சால் எப்படி இருக்கும்? :)))

    ReplyDelete
    Replies
    1. மனுஷன் தன்னோட கோண புத்தியை நம்புறான், அதுங்க இயற்கையை நம்புது, அதுங்க அப்படியே இருப்பதே சிறந்தது!!

      Delete
  3. சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் இங்கு ஒரு ரவுண்டு குடும்பத்தோடு வந்துள்ளேன்.

    படங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வெளியூர்ல இருந்து உறவினர்கள் வந்தா, அவங்க குழந்தைகளை அழைத்துச் செல்வது போல நீங்களும் விசிட் அடிங்க சுவனப் பிரியன்!!

      Delete
  4. Replies
    1. ஏய் பிசாசு, ஓட்டுப் பட்டை சரி பண்ணிட்டியா? ஏன் இன்ட்ரஸ்ட் இல்லியா? தெரியலையா? ரொம்ப ஈசி. முதலில் அதைப் பண்ணு.

      Delete
  5. அனைத்து படங்களும் மிக அருமை. கல்லூரிக் காலங்களில் வண்டலூரை வட்டம் அடித்துக் கொண்டே இருப்போம், அந்த நாட்களின் நினைவூட்டலாக இப்பதிவு அமைந்தது. மிக்க நன்றிகள் !

    ReplyDelete
    Replies
    1. @ இக்பால் செல்வன்

      சென்னையில் இருப்பவர்கள் இந்த மாதிரி இடங்களுக்குப் போவதே இல்லை, வெளியூர்க்காரர்கள் தான் அதிகம் வருகிறார்கள், அல்லவா IS?

      Delete
  6. //தலைவர் என்னமோ ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காரு!!//

    நம்ம வாரிசு அடுத்ததா என்ன பதிவு போடுவாருன்னு ஆராய்ச்சி பண்றாரு.

    ReplyDelete
    Replies
    1. @பழனி.கந்தசாமி

      சைலண்டா சிக்சர் அடிக்கிறீங்களே சார்!!

      Delete
  7. படங்களுக்கு கமெண்ட்ஸ் : கலக்கல்ஸ்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கமெண்ட்ஸ் தங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி தனபாலன்!!

      Delete
  8. நேற்றுல இருந்து ஒரு புலி கறுப்பு சட்டை போட்டு அலையுதாமே அதை புடிச்சு போடலாயா

    ReplyDelete
    Replies
    1. @ Avargal Unmaigal

      அய்யய்யோ, யாருங்க அது!!

      Delete
  9. அலோ சென்னை வந்துட்டு சென்னை பதிவர்களை பாக்காமலே போனா எப்புடி? அடுத்த தடவை இப்படி செய்ய கூடாது ஆமா !

    ReplyDelete
    Replies
    1. இது ரொம்ப பழசு மோகன், அப்போ நாம் அறிமுகமாயிருக்கவில்லை!!

      Delete
  10. ஜெய தேவ் படங்களுக்கு மிக நன்றி!
    வெள்ளைப் பருந்தை ஈழத்தில் ஆலா என்போம். மற்றும் கோழிகள் என்பவை காட்டுக் கோழி வகைகள்
    ஆமினாவுக்கு !
    இப்படங்களில் காண்டாமிருகம் இல்லை. இதில் உள்ளது நீர்யானை , இது ஒரு குட்டியே!, காண்டா மிருக முகம் சற்று நீளம், காதுகளும் பெரியவை, அத்துடன் அதன் வாய் மேல் சொண்டு சற்று கூர்வடிவானது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன்............ நான் கூட அதை காண்டா மிருகம்னுதான் நினைசுகிட்டு இருந்தேன்!!

      Delete