Saturday, November 17, 2012

கலப்புத் திருமணங்களால் மிகவும் பாதிக்கப் படுவது குழந்தைகளே- படத்துடன் நிஜக் கதை.

கலப்புத் திருமணம் செய்தால் ஜாதிகள் ஒழியும் என்பது சமுதாய சிந்தனை உள்ள எல்லா நல்ல உள்ளங்களின் எதிர்ப்பார்ப்பு.  ஆனால், அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் எல்லோருக்கும் வந்துவிட்டதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே இன்னமும் தொக்கி நிற்கிறது.  கலப்புத் திருமணம் என்பதென்னவோ சுளுவுதான், ஆனால் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி யாராவது யோசிக்கிறோமா?  யார் யோசிக்கிறாங்களோ இல்லையோ நாம் யோசிக்கிறோம்!!  அந்த மாதிரி கலப்புத் திருமணத்தில் பிறந்த ஒரு குழந்தையோட சோகத்தைத்தான் இப்போ உங்களுக்கு படத்தோட காட்டப் போறோம். 



நான் இப்போ சொல்லப் போறது ரெண்டு அப்பா அம்மா, வெவ்வேற இனத்தைச் சார்ந்தவங்க.  ஏதோ, வயசுக் கோளாறு, ஆத்திரம் அவசரத்துல ஒன்னு சேர்ந்துட்டாங்க................








.................









அவங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துச்சு....................
********************





















 அங்கதான் சோகம் ஆரம்பிச்சது..............
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



























இதுதாங்க கலப்புத் திருமணம் செய்த அந்த அப்பா அம்மாவும், அவங்களுக்குப் பிறந்த குழந்தையும்!!
 அய்யய்யோ, யாருங்க அது என்னை உதைக்க வருவது.....................


நான் எஸ்கேப்..................................

21 comments:

  1. நான்கூட அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டீங்களோன்னு நினைச்சேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா சூடா இது எங்கோ ஓடிகிட்டு இருக்கா....!! லிங்கு இருந்தா குடுங்க செங்கோவி!!

      Delete
    2. பின்னூட்டத்திலேயே சகோக்கள் காண்டாகிட்டாங்களே!

      சரி, ரொம்ப ஆசைப்படுறீங்க..இந்தாங்க:
      http://arulgreen.blogspot.com/2012/11/Vanniyar-Dharmapuri-Child-Marriage.html

      Delete
    3. நன்றி செங்கோவி, தமிழ் மணத்தில தேடி இந்தப் பதிவை கொஞ்சம் முன்னாடிதான் படித்தேன், இதுக்கு பதிலா இக்பால் செல்வனும் ஒரு பதிவு போட்டிருக்கார் போல, அதான் காண்டாகிட்டார்!!

      Delete
  2. Replies
    1. தப்பு இருந்தா மன்னிச்சுக்குங்க சார்..........



      Delete
  3. நகைச்சுவையான விடயம் இல்ல, உங்கள் பதிவு சரியல்ல.. பிடிக்கவில்லை. :(

    ReplyDelete
    Replies
    1. Sorry, இக்பால் செல்வன். நான் இதை வேறு ஒரு தளத்தில் ஆங்கிலப் பெயரோடு பார்த்தேன், எனக்கு சிரிப்பாக இருந்தது, எனவே தலைப்பை தமிழில் மொழி பெயர்த்துப் பகிர்ந்தேன். இது மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, இனி ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

      Delete
  4. ஜெயதேவ், மனது புன்படுது என்று ஒன்றுமே இல்லை; உண்மையாக. இந்தக் கருத்தை நான் நகைச்சுவையாகத் தான் ஏன் ஒரு complement- ஆக எடுத்துக் கொள்வேன்; ஆங்கிலத்தில் இதை hybrid என்றும் சொல்வார்கள். ஜாதிகள் உள்ள இந்தியாவில் மாட்டும் இது சாத்தியம்; அமெரிக்காவில் ஜாதி புண்ணாக்கு கிடையாது...இங்கு inter - racial திருமணங்கள் அதிகம்...

    நானே கலப்புத் திருமணம் செய்தவன் தான். ஒன்னும் குறைந்து போவிடவில்லை; என் இரண்டு குழந்தைகளும் - extra ordinarily brilliant. காரணம் வளர்ப்பு, சூழ்நிலை, முக்கியமாக கல்வி முறை...

    கடைசியில் கலப்பு என்பது என்று ஒன்றும் கிடையாது; அதை நிராகரிக்கிறேன்; எதோ அந்தக் காலத்து மூடர்கள் ஜாதி மதம் உண்டாக்கிவிடார்கள்.

    BTW, I like this post.

    ReplyDelete
    Replies
    1. மேலே நண்பர்கள் போட்ட பின்னூட்டத்தைப் பார்த்து Comedy எங்கே Tragedy ஆயிடுமோன்னு கவலைப் பற்றிருந்த எனக்கு உங்கள் பின்னூட்டம் நிம்மதியைத் தந்திருக்கிறது. மிக்க நன்றி சார். கலப்புத் திருமனகளில் ஆரோக்கியமான, திறமையான குழந்தைகள் பிறக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. ஆனால் அவர்கள் திருமணம் செய்யும்போது பிரச்சினை வருவதை நான் பார்த்திருக்கிறேன். முக்கியமாக கலப்புத் திருமண பெற்றோரின் பெண் குழந்தையை கிராமப் புறங்களில் திருமணம் செய்து வைக்க அவர்கள் பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
    2. எனது திருமணம் கலப்பு திருமணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் நம்பள்கி இங்கே சொன்னதைதான் நானும் சொல்லவிரும்புகிறேன்

      ஜெயதேவ், மனது புன்படுது என்று ஒன்றுமே இல்லை;

      Delete
  5. என்னமோ எதோ என்று நினைத்து வந்தேன்...

    ஹா... ஹா... நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்...

    ReplyDelete
  6. சகோ தாசு,
    நல்ல பதிவு .இபோது சூழல் சரியில்லை.மற்றபடி நல்ல விடயம்தான்.

    விலங்கு தாவர வகைகளில் இந்த ஹைப்பிரிட் என்பதும் ஒரு பரிணாம நிகழ்வே.
    பெரும்பரிணாம்த்தில் இரு பகுதிகள் உண்டு. ஒரு உயிரினம் இரு அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றின உயிரினக் குழுக்களாக பிரியும் போது
    உருமாற்றம்+இணைந்து இனவிருத்தி செய்ய இய‌லாத சிற்றினங்களாக‌ பிரிதல் என்பவை ஆகும்.

    Macro evolution=Morphological change+speciation

    உருமாற்றம் அடைந்தும் இனவிருத்தி செய்ய இயலும் சிற்றின உயிரிக்குழுக்களே இந்த ஹைப்பிரிட்.
    இந்த சுட்டி பாருங்கள்.
    http://en.wikipedia.org/wiki/Hybrid_(biology)

    நன்றி

    ReplyDelete
  7. ஏதோ சீரியாஸான பதிவு என்று படிக்க வந்தேன் கடைசியில் காமெடி பதிவா ஆக்கிட்டீங்க.

    பதிவு போட்டிங்க சரி ஆனா எதுக்கு விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்குறீங்க

    ReplyDelete
    Replies
    1. \\பதிவு போட்டிங்க சரி ஆனா எதுக்கு விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்குறீங்க\\ Dr.பழனி.கந்தசாமி ஐயா மாதிரி இருக்கிறவங்க ஒரு வார்த்தை சொன்னா அதை நாம் ஈசியா எடுத்துக்க முடியாதுங்களே!! அதான். அது மட்டுமல்ல இக்பால் செல்வன் என்ன சொல்லியிருக்கார்னு பாருங்க, ஏதோ தப்பு பண்ணிட்டோமோ என்று தோணிச்சு, அதான். நன்றி மதுரைத் தமிழன்!!

      Delete
  8. எனக்கு சிரிப்பு தான் வந்தது. வேறொன்னும் தோணலை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாய் தோணலாம்

    ReplyDelete
  9. இங்கு கழுதையையும் குதிரையையும் சேர்க்கும் பழக்கம் இன்றும் உண்டு.
    பலமான,சிறந்த சந்ததிக்கு இக்கலப்பு அவசியமெனக் கருதுகிறார்கள்.

    lion+tiger=liger என சிங்கம் புலி கலவையும் உண்டு.
    http://peperonity.com/go/sites/mview/galaxy.blue/32218808/39563118

    ReplyDelete