Monday, October 29, 2012

பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.


நீங்கள் ரே ஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது [கம்பியூட்டர் எல்லாம் பார்க்கிறீங்க, நீங்க எங்கே வாங்கியிருக்கப் போறீங்க..........!!] ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் கலனின் மேல் கடைக்காரர் ஒரு பெரிய புனலை வைப்பார், அதில் மண்ணெண்ணெயை ஊற்றுவார்.  அது வடியும்போது சுழன்று கொண்டே இறங்கும்!!  நீங்கள் இந்தியாவில் வசித்தால் அது வலஞ்சுழியாக [கடிகார முள் சுற்றும் திசை Clockwise] சுற்றிக் கொண்டே இறங்குவதைப் பார்க்கலாம்.  பாத்திரம் கழுவும் தொட்டிகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றிலும் அடியில் துளையிட்டு நீரை நிரப்பி நிதானமான பின்னர் திறந்துவிட்டால் கூட நீர் வலஞ்சுழியாகவே சுற்றுவதைப் பார்க்க முடியும்.  இது ஏதோ தண்ணீர் மூலக்கூறுகளுக்கிடையே ஆரம்பத்தில் உள்ள வேக வேறுபாட்டால் ஏற்படுகிறது என்று நினைத்து, நீரை நிரப்பி மூன்று நாட்கள் ஆடாமல் அசையாமல் வைத்து திறந்து பார்த்திருக்கிறார்கள், அப்பவும் அது வலஞ்சுழியாகவே சுற்றியது!!  காரணம் என்ன?

பூமியை இரண்டாகப் பிரிக்கும் பூமத்திய ரேகைக்கு வட திசையில் உள்ள எல்ல பகுதிகளிலும் மேற்சொன்ன சோதனையில்  வலஞ்சுழியாகவும், தெற்குப் பகுதியில் உள்ள பகுதிகளில் இடஞ்சுழியாகவும் மிகச் சரியாக பூமத்திய ரேகையில் எந்தப் பக்கமும் சுழலாமலும் நீர் கீழே இறங்கும்.  இந்த விளைவைக்காண பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்து சில அடி தூரம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சென்றாலே போதும். இதை பின்வரும் காணொளியில் காணலாம்.


இது எதனால் நிகழ்கிறது?  பூமி தனக்கென்று ஒரு அச்சில் தன்னைத் தானே சுழல்கிறதல்லவா?   அதற்க்கு 24 மணி நேரமும் ஆகிறது என நமக்குத் தெரியும்.  பூமத்திய ரேகையில் அதன் சுற்றளவு அதிகம், அப்படியே வடக்காகவோ தெற்காகவோகாகவோ துருவப் பகுதிகளை நோக்கி செல்லும்போது இந்தச் சுற்றளவு குறைந்து கொண்டே சென்று துருவத்தில் பூஜ்ஜியமாகிறது.  ஆனால் பூமியைப் பொறுத்தவரை ஒரு சுற்றை சுற்றி முடிக்க எல்லா வட்டத்துக்கும் அதே 24 மணி நேரம்தான் பிடிக்கும். 
பூமத்திய ரேகையிலிருந்து மேலேயோ [வட துருவம்], கீழேயோ [தென் துருவம்] 20,40,80 டிகிரி என செல்லச் செல்ல வட்டம் சிறிதாகிக் கொண்டே போகிறது.


ராட்டினங்கள் சுற்றும் போது வெளியே உள்ள பொம்மைகள் வேகமாகவும், உள்ளே செல்லச் செல்ல மெதுவாகவும் சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள்.  அதே மாதிரி அதிக சுற்றளவுள்ள பூமத்திய ரேகைப் பகுதியில் ஒரு பொருள் இருந்தால்  அதி வேகமாகவும், அதிலிருந்து  விலகிச் செல்ல செல்ல இடத்துக்கு தக்காவாறு குறைந்த வேகத்திலும் பயணிக்கும். துருவப் பகுதிக்குப் போய்விட்டால் ராட்டினத்தின் குடை மேல் வைக்கப் பட்ட பொம்மை மாதிரி தன்னைத் தானே சுற்ற வேண்டியதுதான்!!

துருவங்களை நோக்கி நகரும்போது வேகமான பயணிக்கும் இடத்தில் இருந்து குறைந்த வேகப் பகுதிக்கு செல்வதால் உங்கள் பாதை நேர்க்கோடாக இருக்காது. பூமத்திய ரேகையில் இருந்து வடபாதியில், எங்கிருந்து வேண்டுமானாலும் வட துருவத்தை நோக்கிச் சென்றால் வலப்புறமாகவும், தென் பாதியில் எங்கிருந்து தென் துருவத்தை நோக்கிச் சென்றாலும் இடப்புறமாகவும் உங்கள் பாதை வளையும் 

நீங்கள் பூமத்திய ரேகை பகுதியில் இருந்து வட பகுதியில் இருப்பதாகக் கொள்வோம். நீங்கள் பூமியின் சுழற்சி காரணமாக ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பீர்கள், அப்படியே காற்றில் எழும்பி மேலும் வடக்கு நோக்கிச் செல்வதாகக் கொள்வோம்.  வடக்கே செல்லச் செல்ல வேகம் குறைவு, வேகமான வண்டி மெதுவான வண்டியை முந்திச் செல்வது போல நீங்கள் பூமி சுற்றும் திசையில் சற்று முந்திச் செல்வீர்கள், எனவே நீங்கள் நேர்க்கோட்டில் பயணிக்க முயற்ச்சித்தாலும் வலதுபக்கம் நகர்ந்துவிடுவீர்கள்.  அதே போல அதே பகுதியில் எதிர் திசையில் வந்தால் இடது புறம் திருப்பப் படுவீர்கள்.  இதே விளைவுதான் நீங்கள் புனலில் ஊற்றப்படும் மண்ணெண்ணெயிலும் வலஞ்சுழியாக திரவம் சுற்றுவதாகப் பார்க்கிறீர்கள்.  மிதக்கும் நீர் மூலக்கூறுகள் புனலில் வடக்கு நோக்கி நகர்ந்தால் வலது புறமாகவும், வடக்கே இருந்து தெற்கு நோக்கி நகர்ந்தால் இடது புறமாகவும் திரும்பும், மொத்தத்தில் வலஞ்சுழியாக சுற்றிக் கொண்டே வடியும்.  நிலநடுக் கோட்டில் இருந்து தென்பகுதியில் இதே காரணத்தால் இடஞ்சுழியாகச் சுழன்ற வண்ணம் வடியும்.  நடுக்கோட்டி ப்ச்........ எந்தப் பக்கமும் சுழலாது!!

20 comments:

  1. நல்ல பதிவு எனக்கு இது புதிய தகவல் நன்றி .........................

    ReplyDelete
  2. வாவ்!புதிய தகவல் தெரிந்து கொண்டேன்.நன்றி

    ReplyDelete
  3. எனக்கு இது புதிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. புதிய தகவல்... அதிசயம்!

    ReplyDelete
  6. பயனுள்ள புதிய தகவல். அருமை.

    ReplyDelete
  7. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி...

    ReplyDelete
  8. இது ஒரு தவறான தகவல்...

    http://www.snopes.com/science/coriolis.asp

    ReplyDelete
  9. http://en.wikipedia.org/wiki/Coriolis_effect

    Draining in bathtubs and toilets
    In 1908, the Austrian physicist Ottokar Tumlirz described careful and effective experiments which demonstrated the effect of the rotation of the Earth on the outflow of water through a central aperture.[28] The subject was later popularized in a famous article in the journal Nature, which described an experiment in which all other forces to the system were removed by filling a 6-foot (1.8 m) tank with 300 US gallons (1,100 L) of water and allowing it to settle for 24 hours (to allow any movement due to filling the tank to die away), in a room where the temperature had stabilized. The drain plug was then very slowly removed, and tiny pieces of floating wood were used to observe rotation. During the first 12 to 15 minutes, no rotation was observed. Then, a vortex appeared and consistently began to rotate in a counter-clockwise direction (the experiment was performed in Boston, Massachusetts, in the Northern hemisphere). This was repeated and the results averaged to make sure the effect was real. The report noted that the vortex rotated, "about 30,000 times faster than the effective rotation of the earth in 42° North (the experiment's location)". This shows that the small initial rotation due to the earth is amplified by gravitational draining and conservation of angular momentum to become a rapid vortex and may be observed under carefully controlled laboratory conditions.[29][30]
    In contrast to the above, water rotation in home bathrooms under normal circumstances is not related to the Coriolis effect or to the rotation of the earth, and no consistent difference in rotation direction between toilets in the northern and southern hemispheres can be observed. The formation of a vortex over the plug hole may be explained by the conservation of angular momentum: The radius of rotation decreases as water approaches the plug hole so the rate of rotation increases, for the same reason that an ice skater's rate of spin increases as they pull their arms in. Any rotation around the plug hole that is initially present accelerates as water moves inward. Only if the water is so still that the effective rotation rate of the earth (once per day at the poles, once every 2 days at 30 degrees of latitude) is faster than that of the water relative to its container, and if externally applied torques (such as might be caused by flow over an uneven bottom surface) are small enough, the Coriolis effect may determine the direction of the vortex. Without such careful preparation, the Coriolis effect may be much smaller than various other influences on drain direction,[31] such as any residual rotation of the water[32] and the geometry of the container.[33] Despite this, the idea that toilets and bathtubs drain differently in the Northern and Southern Hemispheres has been popularized by several television programs, including The Simpsons episode "Bart vs. Australia" and The X-Files episode "Die Hand Die Verletzt".[34] Several science broadcasts and publications, including at least one college-level physics textbook, have also stated this.[35][36]
    [edit]Ballistic missiles and satellites

    ReplyDelete
  10. @ Anonymous October 29, 2012 11:55 PM

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. தங்கள் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம், பரவாயில்லை. By random choice என்றால் கலன்களின் வடிவங்களும் random தான், திரவத்தின் இயக்கமும் random தான் எனவே ஆவரேஜாகப் பார்த்தால், பூமியில் எந்த இடத்தில் வைத்தாலும் 50% வலஞ்சுழியாகவும் 50% இடஞ்சுழியாகவும் சுழல வேண்டும். மேலே உள்ள வீடியோவில் அந்த கைடு பத்து நிமிட இடைவெளியில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு எடுத்துச் சென்று காண்பித்தார், நீர் இடம் வலமாக, சுழன்றது, பூமத்திய ரேகையில் சுழலவே இல்லை. அந்தக் கலன் அந்த பத்து நிமிடத்தில் மூன்று விதமாக மாறிவிட்டது என்று சொல்வதற்கில்லை. இது மட்டுமல்ல, அதே கைடு ஒரு நாளைக்கு நூறு தடவை வரவங்க போறவங்களுக்கு செய்து காண்பித்துக் கொண்டே இருக்கிறார், ஓவ்வொரு தடவையும் அது சரியாக அவர் சொல்லும் திசையிலேயே சுற்றுகிறது. [அப்படி இல்லைன்னா, அந்த கைடு எப்படி பிழைப்பார்!!]. அதே சமயம் மூலக்கூறு லெவலில் கண்ட்ரோல் பண்ற மாதிரி அவர் எந்த மேஜிக்கும் செய்வதாகத் தெரியவும் இல்லை. random choice என்றால் எப்ப வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சுழல வேண்டும். எங்கோ ஏதோ உதைக்கிறது, எதற்கும் யோசியுங்கள்!!

    ReplyDelete
  11. அந்த வீடீயோவிலேயே ஒருவரின் கருத்தைக் கவனியுங்கள்...

    Great trick, he had a good knack of just slightly biasing it with the half moon 'stabilizer'. Notice how slowly and carefully he removes it on the equator itself (as if a few yards either way is ??)


    "Not quite true" Experiments have been done with very large 3-4 ft dia tub, very small externally opened drain, after filling letting set 1-2 weeks in very calm controlled area before opening drain, etc. -- which works to effectively demonstrate the Coriolis effect. Obviously such an experiment is not going to be done 30 ft, 30 miles, 300 miles, or even not likely 1000 miles from equator. For all practical purposes there is no Coriolis effect close to equator.

    -

    ReplyDelete
  12. did you paid attention at which side of the sink he poured the water into each time? ;)


    In addition to this all being down to a flick of the wrist, southern hemisphere rotation is clockwise, northern hemisphere is anticlockwise. This video even got that wrong. 

    ReplyDelete
    Replies
    1. இல்லையே வடதுருவத்தில் clockwise ஆகவும், தென் துருவத்தில் anti-clockwise ஆகவும் தானே சுழலும்? நீங்க அப்படியே வைத்துக் கொண்டாலும் பூமத்திய ரேகைப் பகுதியில் எப்படி சுழலாமலேயே நீர் இறங்கமுடியும்? அந்தப் பக்கம், இந்தப் பக்கம் சுற்ற டிரிக் பண்ணலாம் எந்தப் பக்கமும் சுற்றாமல் இறங்க எப்படி டிரிக் செய்ய முடியும்?

      எப்படியோ, இணையத்தில் தேடித் பார்த்ததில் நீங்கள் சொன்ன கருத்துக்களை பல இணைய தளங்களும் சொல்லியிருக்கின்றன. முடிவை வாசகர்கள் கைக்கே விட்டு விடுகிறேன், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே.

      Delete
  13. அருமையான விளக்கம்.

    ReplyDelete
  14. //நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது [கம்பியூட்டர் எல்லாம் பார்க்கிறீங்க, நீங்க எங்கே வாங்கியிருக்கப் போறீங்க..........!!]//

    என்னங்க இப்படிச் சொல்லிப்புட்டீங்க? நான் ரேஷன் கடையே நடத்தீருக்கேன். அது பற்றி ஒரு தனிப் பதிவு போடுகிறேன்.

    ReplyDelete
  15. நல்ல பதிவு..சே இதை நான் இவ்வளவு நாட்களாக கவனிக்கவில்லை

    ReplyDelete
  16. தினம் பாத்திரம் தேய்ச்சுட்டு ஸிங்க் தண்ணீர் திறந்து விடும்போது இதைப்பற்றி எழுதணுமுன்னு நினைச்சுக்குவேன். அப்புறம் அந்த இடம் விட்டு நகர்ந்தால் மறந்து போகும்.

    இன்னிக்கு உங்க பதிவு பார்த்ததும் நல்லதாப்போச்சுன்னு நினைச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. @துளசி கோபால்

      நன்றி நண்பரே!!

      Delete