ஒருநாள், பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பு தொடங்கும் முன்னர், தான் கொண்டுவந்த பெரிய கண்ணாடி ஜாடியை மேஜையின் மீது வைத்தார். [செத்தம்டா நாம.......... என்று மாணவர்கள் நினைத்திருக்கக் கூடும்.....!!] பின்னர் தான் கொண்டுவந்திருந்த பெரிய கற்களை அதனுள் கவனமாக அடுக்கினார், ஜாடி நிரம்பிய பின்னர், மாணவர்களைப் பார்த்து கேட்டார்,
"இதுக்கு மேல இதனுள் எதையாவது நிரப்ப முடியுமா?"
"முடியாது!!" என்றனர் மாணவர்கள்.
ஆசிரியர் புன்னகைத்தவாறே, இன்னொரு பையை எடுத்தார், அதில் இடிக்கப் பட்ட பொடிக்கல் இருந்தது, அதை அப்படியே ஜாடியின் மேல் கொட்டினார், அது பெருங் கற்களுக்கு நடுவே இருந்த இடைவெளியில் எளிதாக நுழைந்து ஜாடி முழுவதும் அடைத்துக் கொண்டது.
மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்.
"இப்போ இதுக்கு மேல இதனுள் எதையாவது நிரப்ப முடியுமா?"
"முடியாது!!" என்றனர் மாணவர்கள் மீண்டும்.
முடியும் என்ற ஆசிரியர், இன்னொரு பையில் இருந்து மணலை எடுத்து கொட்டினார். அது முன்னர் கொட்டப் பட்ட பொடிக்கல்லுக்கு இடையே உள்ள கேப்பில் அழகாக பரவி நிரம்பியது.
இப்ப சொல்லுங்க, இதிலிருந்து நீங்க கத்துகிட்ட வாழ்க்கைப் பாடம் என்ன?
ஒரு பையன் எழுந்து நின்னு சொன்னான்,
"வாழ்க்கையில இதுக்கு மேல இடமில்லை எனத் தோன்றினாலும், மென்மேலும் தினிச்சு கிட்டே இருக்கலாம்!!"
ஆசிரியர், அதை தவறு என உட்காரச் சொல்லி பின்னர் ஜாரில் உள்ளதை மேஜையில் கொட்டினார். மாணவர்களை அழைத்து மீண்டும் ஜாடியை நிரப்பச் சொன்னார், ஆனால் ஒரு கண்டிஷன், பெரிய கற்களை கடைசியாகப் போடவேண்டும். மாணவர்கள் முதலில் மணலையும், பின்னர் பொடிக்கற்களையும் நிரப்பி, பின்னர் பெரிய கற்களை அடுக்க முயன்றனர், ஜாடி நிரம்பியது, பாதிக்கும் மேல் பெரிய கற்கள் வெளியிலேயே இருந்தன.
பெரிய கற்களை முதலில் போடாவிட்டால், எல்லாவற்றையும் ஜாடியில் நிரப்ப முடியாது...........!!
நீதி: நீங்கள் வாழ்க்கையில் கட்டாயம் செய்ய வேண்டியவை பெரிய கற்கள், அவற்றைக் கண்டறிந்து அதற்க்கு முக்கியத்துவம் கொடுங்கள், சில்லறை விஷயங்களை அடையாளம் கண்டு அதற்க்கு மீதமுள்ள நேரத்தை ஒதுக்குங்கள். சில்லறை விஷயங்களில் அதிக பட்ச நேரம் செலவிட்டால் பின்னர் முக்கியமான காரியங்களை செய்து முடிக்க இயலாமல் போகும்.
அருமையான விஞ்ஞான வாழ்க்கை விளக்கம்.
ReplyDeleteஉண்மையான கருத்துக்கள்...
ReplyDelete(அவ்வப்போது இப்படி பெரிய கற்களை (பதிவுகளை) போடவும்)
நன்றி...