சென்னை கோல்டன் பீச் அருகே பிரமாண்டமான ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவில் கடந்த ஏப்ரல் 26, 2012 அன்று குடமுழுக்கு [மகா சம்ப்ரோக்ஷணம்] செய்யப் பட்டுள்ளது. [ஹெலிகாப்டரில் மலர் தூவி குடமுழுக்கு
ஹிந்து செய்தி]. இது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் [ISKCON] சார்ந்த கோவிலாகும். இந்தக் கோவிலை நாம் அக்டோபர் 15, 2012 அன்று தரிசனம் செய்தோம், பல படங்களையும் எடுத்தோம், இதோ அவை உங்கள் பார்வைக்கு!! வெளியூரில் இருந்து வரும் அன்பர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம், சென்னை நண்பர்கள் தங்கள் உறவினர்களை அழைத்துச் சென்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டிய கோவில். ஞாயிற்றுக் கிழமைகளில் காலை நிகழ்சிகள் முடிந்த பின்னர் 1:30 மணிக்கு மதிய உணவு வழங்கப் படுவதால் இவ்வளவு தூரம் வந்த பின்னர் உணவு அருந்துவது எப்படி என்ற கவலை வேண்டியதில்லை!!
|
இது கோவிலின் நுழைவு வாயில், கோல்டன் பீச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் வந்தால் ஐந்து ரூபாய் ஆகும். இங்கிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் கோவிலை அடையலாம். சில சமயம் நேரடி ஷேர் ஆட்டோக்களும் கிடைக்கும். |
|
தொலைவில் கோவில்!! |
|
சற்று அருகே!! |
| | | | | | | | | |
கோவில் வெளிச் சுவர் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ISKCON ஸ்தாபக ஆச்சாரியார் தவத்திரு AC பக்திவேதாந்த சுவாமி. |
|
கோவில் பிரதான ஹால். மூன்று விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளனர். [விபரம் கீழே] |
|
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஸ்ரீ நித்யானந்தா பிரபு |
|
ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா, லலிதா, விசாகா ஆகிய முக்கிய தோழிகளுடன், கீழே கோவர்த்தன கிரி, உற்ச்சவ விக்ரஹங்கள். |
|
ஸ்ரீ ஜகன்னாத சுவாமி [வலது], ஸ்ரீ பலதேவ் [இடது], ஸ்ரீ சுபத்ரா [மத்தியில்]- ஒரிசாவில் உள்ள பூரி ஸ்ரீ ஜகன்னாதர் ஆலயத்தில் ஸ்ரீ
கிருஷ்ணர் விந்தாவனத்தை விட்டு மதுரா, துவாரகா சென்ற பின்னர் அவரது
பிரிவால் வாடும் விருந்தாவன வாசிகள் வழிபடும் வடிவம் இது. குருக்ஷேதர
யுத்தத்தின் இடையில் ஸ்ரீ கிருஷ்ணரை விருந்தாவான பக்தர்கள் சந்தித்து மீண்டும் விருந்தாவனத்திற்க்கே அழைத்துச் செல்லும் நிகழ்வே பூரி ஸ்ரீ ஜகன்னாதர் ரத யாத்திரையாகும், இதற்க்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள் |
|
சடாரியை ஏற்றுக் கொள்ளும் பக்தர்...... |
|
கோவில் ஹாலில் உள்ள சாண்டிலியர்....... |
|
கோவில் ஹால், கண்ணாடி ஓவியங்கள், வெளியில் இருந்து வரும் வெளிச்சம் மின் விளக்கைப் போல பிரகாசிக்கச் செய்கிறது. |
|
கொஞ்சம் குளோசப்பில் கண்ணாடி ஓவியம்!! |
சுற்றுப் புறச் சுவர்களில் உள்ள கேரள முறைப் படி வரையப் பட்ட ஓவியங்கள்.
|
ஸ்ரீ கிருஷ்ணர் விருந்தாவனவாசிகளை இந்திரன் அனுப்பிய பெரும் மழையில் இருந்து காக்க கோவர்த்தன கிரியை இடது கை சுண்டு விரலால் ஏழு நாட்கள் தூக்கி நின்ற காட்சி. |
|
கம்சனின் அரண்மனை வீரவிளையாட்டு மண்டபத்தில் குவளையப்பீடா என்ற யானையை ஸ்ரீகிருஷ்ணர் சண்டையிட்டு கொல்லும் காட்சி. |
|
காலியா என்ற பாம்பின் தலைகள் மீது நடனம், அந்தப் பாம்பின் மனைவிகள் தங்கள் கணவனை மன்னித்து அருளுமாறு பிரார்த்தனை செய்கின்றனர். |
|
கோபியர்களின் உடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மரத்தின் மேலே அமர்ந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணர்!! |
|
கம்சனின் அரண்மனை மல்யுத்த வீரனை சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணர் வீழ்த்துகிறார். |
|
கம்சனின் சிறையில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவரது தாய் தந்தையர் வசுதேவரும், தேவகியும் பிரார்த்தனை செலுத்துதல். |
|
வசுதேவர் ஸ்ரீ கிருஷ்ணரை கூடையில் வைத்து கொகுலத்துக்குத் தூக்கிச் செல்லும் காட்சி, யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வழி விடுகிறது கொட்டும் மழைக்கு குடையாக ஆதிசே ஷன் பின்னால் வருகிறார் |
|
பூதனை என்னும் அரக்கி தன்னுடைய மார்பில் விஷத்தைப் பூசி ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால் புகட்ட அவர் பாலோடு அவள் உயிரும் உறிஞ்சி எடுத்து விடுகிறார். ஆனாலும், அவள் மறைந்த பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் தன்னுடைய கோலோக விருந்தாவனத்தில் தனக்குத் தாயார் அந்தஸ்தை அவருக்கு கொடுக்கிறார். |
|
வெண்ணை திருடி உண்ணும் ஸ்ரீ கிருஷ்ணர். |
|
வெண்ணெய் திருடியதற்காக தண்டிக்கும் யசோதை, மகனின் வால் தனத்தைக் கட்டுப் படுத்த உரலில் கட்டிப் போடுகிறார். |
|
நவராத்திரி கொலு தயார் செய்யும் பக்தை, தனது குழந்தைகளுக்கும் கற்றுத் தருகிறார்!! |
|
கோவிலை விட்டு வெளியே வந்து மேலும் வெவ்வேறு கோணங்களில் படமெடுத்தோம்!! |
|
சென்னையைச் சேர்ந்த அன்பர்கள், கோவிலைப் பற்றி அறிந்துகொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், தொலைபேசி எண்களுடன். |
|
இவற்றை வெளியே டேபிளில் வைத்திருந்தார்கள் பிளாக்கில் போட எடுத்து வந்துவிட்டேன் !! |
படங்களுடன் மிக விரிவான கட்டுரை. நாங்கள் இன்னும் போகலை அவசியம் சென்று வருகிறோம்.
ReplyDeleteஞாயிறு மட்டும் தான் மதிய உணவு தருகிறார்களா என்ன?
கண்டிப்பாகச் சென்று வாருங்கள் மோகன். இது மாநில அரசின் கீழ் இயங்காத தன்னாட்சி கோவில், ஆகையால் ஞாயிறு ஒரு நாள் மட்டும்தான் மதிய உணவு வழங்குகிறார்கள் என நினைக்கிறேன். அன்று ஆயிரம் பக்தர்கள் ஒன்று கூடுகிறார்கள், சிறப்பாக இருக்கும், பஜனைகள் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும், நிகழ்ச்சி முடிவில் சுவையான பிரசாதம் முழு மதிய உணவு இருக்கும். எதற்கும் கோவிலைத் தொடர்பு கொள்ளவும், மற்ற நாட்களில் கட்டண முறையில் உணவு வழங்குவார்களா என கேட்டுத் தெரிந்துகொள்ளவும். [இல்லை என்றுதான் நினைக்கிறேன்] நன்றி!!
Deleteசென்று வந்த பின்னர் உங்கள் அனுபவத்தை படங்களோடு பதிவிட வேண்டுகிறேன்!!
Deleteஎனக்குத் தேவையான பதிலை இதில் சொல்லிவிட்டீர்கள். நன்றி!
Deleteஇது என்ன சென்னையில் முதல் இஸ்கான் கோவிலா? அல்லது வேறு எதேனும் உள்ளதா? எனக்குத் தெரியாது.
Delete@குட்டிபிசாசு
Deleteசென்னையில் இது மட்டும்தான், 2002 ஆண்டு முதல் இங்கே இயங்கி வருகிறது, அதற்க்கு முன் தி.நகர் பர்கிட் ரோட்டில் பல வருடங்கள் இயங்கி வந்தது.
அடுத்த முறை சென்னை செல்லும் போது அவசியம் சென்று வர வேண்டும்... அருமையான படங்கள்...
ReplyDeleteநன்றி...
இருக்கின்ற கோயிலகள் பத்தாதா? இவ்வளவு செலவு செய்து இறைவனை வணங்க வேண்டுமா?
ReplyDeleteஜெயதேவ்,
Deleteஅண்ணன் கேட்ட கேள்விக்கு எதாவது பதில் சொல்லுங்க. இந்தியாவில் கழிப்பிடங்கள் மிகக்குறைவாக இருக்கின்றனவாம்.
@மாடல மறையோன்
Delete@குட்டிபிசாசு
பெங்களூருவில், இதை விட பெரிய கோவில் உள்ளது. அதைக் கட்டியபோது பலர் எதிர்த்தனர் தற்போது அவர்கள் Infosys நாராயணமூர்த்தி, கர்நாடக அரசு எல்லோரும் சேர்ந்து அக்ஷய பாத்ரா என்ற லாபமில்லா அமைப்பை ஏற்ப்படுத்தி 9 மாநிலங்களில் 20 நவீன சமயளைரைகளை ஏற்ப்படுத்தி 8,200 பள்ளிகளுக்கு தினமும் 13 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறார்கள். ஒரு குழந்தைக்கு 675 ரூபாய் கொடுத்தால் ஒரு வருடத்துக்கு உணவு வழங்க முடியும். நீங்க அந்த மாதிரி ஒரு குழந்தைக்காவது செலவு செய்ய முன்வருவீர்களா?
http://www.akshayapatra.org/
https://www.akshayapatra.org/onlinedonations
இந்தக் கோவிலைப் பொறுத்தவரையில், தங்களது சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு தங்களை கோவிலுக்காக அர்ப்பணித்துக் கொண்ட பக்தர்கள், மக்களிடம் சென்று தங்களது நோக்கத்தை தெரிவித்து நன்கொடை வாங்கி கட்டியிருக்கிறார்கள். எனவே, உங்களுக்கு கழிவறை வேண்டுமானால் நீங்களும் அதே மாதிரி முயற்சி செய்து உங்களை அர்ப்பணித்து முயற்சி செய்ய வேண்டும், செய்வீர்களா? தமிழக மக்கள் ரொம்ப கஷ்டப் படுறாங்க எனவே நான் சினிமா பார்க்க மாட்டேன், எங்கும் சுற்றுலா செல்ல மாட்டேன், இணையத்தைப் பார்க்க மாட்டேன், ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிடுவேன் பைக்/கார் போன்ற சொகுசான சொந்த வாகனங்களில் செல்ல மாட்டேன் மாறாக பஸ்ஸில் செல்வேன், இதிலெல்லாம் மிச்சமாகும் பணத்தோடு, எனது சொந்தப் பணமும் கொஞ்சம் போட்டு கழிப்பறை கட்ட நன்கொடையாகக் கொடுப்பேன். இந்த நிலையை தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் கழிவறை வசதி வரும் வரை தொடருவேன். இந்த மாதிரி நம்மில் யாராவது சபதம் எடுத்து நிறைவேத்தியிருப்போமா? வெறுமனே பச்சாதாபப் பட்டு எதற்குப் பிரயோஜனம்?
மக்கள் எல்லோருக்கும் கழிப்பறை வரவேண்டும், வாஸ்தவம்தான், அதற்க்கு முன்னால் அவர்களுக்கு உண்ணுவதற்கும் ஏதாவது வேண்டும் அதுவே பலருக்கு கஷ்டமான நிலைதான். ஒப்புக் கொள்கிறேன், மக்கள் என்னதான் கஷ்டப் பட்டாலும் நாம் நமது சொகுசு வாழ்க்கையை இம்மியளவேனும் குறைக்க முயற்சியாவது செய்திருப்போமா? அதுசரி, இது போன்ற வசதிகளைச் செய்து கொடுப்பது யாரோட கடமை? நாட்டை ஆளும் அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது? மக்கள் வரிப் பணமெல்லாம் எங்கேதான் போகிறது? கருப்பாக அந்நிய வங்கிகளில் கொட்டிக் கிடக்கும் இந்திய மக்கள் பணத்தை கொண்டு வந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று எத்தனையோ பேர் இணையத்தில் எடுத்துச் சொல்லிவிட்டார்கள், தேடித் பிடித்து பாருங்கள். இந்தியா பணக்கார நாடுதான் இந்தியர்கள் மட்டுமே ஏழைகள்.
மக்கள் கழிவறை வசதி இல்லாமல் தவிப்பதால் கோவில் கட்டுவது தவறு என்றால், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளையும் கட்டக் கூடாது எல்லாவற்றையும் மூடிவிட்டு கழிவறை வசதி வரும் வரை காத்திருந்து, எல்லோருக்கும் வந்த பின்னர் தான் அவற்றைத் திறக்க வேண்டும்!!
நண்பர்களே மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் தான், அதே சமயத்தில் அவர்களுக்கு இறைவனின் சேதியையும் கொண்டு சேர்க்க வேண்டும், பிரச்சினைகள் தீரும்வரை பொறுத்திருக்க முடியாது, அது ஒரு பக்கம் போகட்டும், இது இன்னொரு பக்கம் போகட்டும்.
ஜெயதேவ்,
Deleteஎன்ன நான் கேட்ட ஒரு சின்ன கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா? ஆனாலும் நீங்க நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிங்க. ஊருக்கு போகும்போது ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி நம்ம ரேஞ்சுக்கு ஒரு நாலஞ்சு பேருக்கு சட்டைதுணி, புத்தகம் வாங்கி கொடுக்கிறது. அவ்வளவு தான் என்னோட பாக்கெட்டோட சக்தி.
வாழ்க! :-)
ReplyDeleteஅடுத்த முறை சென்னை செல்லும்போது கண்டிப்பாக போய்வர முடிவு செய்துள்ளேன். படங்கள் அருமை!
ReplyDeleteThanks Vijayakumar!!
Deleteரசித்தேன். அருமையான கோவில். அதைவிட அருமையான பதிவு.
ReplyDeleteகோவில் பிரம்மாண்டமாய் இருக்கிறது! ஒருநாள் பார்த்து விடலாம். உள்ளே சென்று இப்படி போட்டோ எடுக்கலாமா?
ReplyDeleteநீங்கள் தாராளமாக எடுக்கலாம் ரிஷி,அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை!! poi வந்த பின்னர் அவற்றை போட்டு நீங்களும் ஒரு pathivu வெளியிட்டால் மேலும் பலர் தெரிந்து கொள்வார்கள் செய்வீர்களா!!!
Deleteபதிவு போட்டுடலாம். Photo gallery ஒன்னு போடலாம்னு இருக்கிறேன். அதோட கோவில் பத்தின விபரங்களும் சேர்த்து போடலாம். அதற்குத்தான் போட்டோ எடுக்க விடுவார்களா என்று கேட்டேன். நன்றி.
DeleteThey allow, no issues!! I shot these photos just this 15th Monday!!
Deleteபோட்டோ எடுக்க அனுமதிப்பது மிக்க மகிழ்ச்சி. பெங்களூர் ஆலயத்தில் கேமரா உள்ளே அனுமதிப்பதில்லை.
ReplyDeleteசிறப்பான படங்களுடன் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete