Thursday, October 25, 2012

பூமியின் மேலுள்ள ஐம்பெரும் துளைகள் [அஞ்சாவது ஒன்ன மட்டும் மிஸ் பண்ணாம பாருங்க!!]

 1. கிம்பர்லி பெருந்துளை [Kimberley Big Hole] - தென்னாப்பிரிக்கா.

மனிதன் கையால் தோண்டியதிலேயே இதுதான் மிகப் பெரும் துளையாக இருக்கும்.  கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் ஆழம்.  இதிலிருந்து மூன்று டன் வைரம் வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் கைவிடப் பட்டது.

2. குளோரி துளை, மாண்டிசெல்லோ அணை, கலிபோர்னியா.
[Glory Hole - Monticello Dam, California]


மாண்டிசெல்லோ அணையில் உள்ள இத்துளை உலகிலேயே மிகப் பெரியது, வினாடிக்கு 14,400 கன அடி தண்ணீரை விழுங்கக் கூடியது!! அணை நிரம்பிய பின்னர் நீரை வெளியேற்ற வேண்டிய போதெல்லாம் இதைப் பயன்படுத்துவார்கள்.

3. பெரும் நீலத் துளை, பெலிஸ்.
Great Blue Hole , Belize


வியப்பூட்டும் பிரமாண்டமான இந்த புவியியல் அற்புதம் பெலிஸ் மண்ணில் இருந்து அறுபது மைல்கள் தள்ளி கடலின் உள்ளே அமைந்துள்ளது. இது போன்ற துளைகள் உலகில் பல இருந்தாலும் இதன் பிரமாண்டம் வேறெதற்கும் இல்லை.

 4. வடிகால் துளை, குட்டேமலா. Sinkhole in Guatemala


பிப்ரவரி 2007 லில் உருவான துளை, இரண்டு டஜன் வீடுகளையும், குறைந்தபட்சம்மூன்று உயிர்களையும் காவு வாங்கியது.

 5. மேலே உள்ளதுல்லாம் ஜுஜுபி, அது எல்லாத்தையும் விழுங்கி ஏப்பம் விடும் ரொம்ப ஃபேமஸ் துளை இது!


ரூபாய் லட்சம் கோடிகளில் மக்கள் வரிப்பணம் இங்கே வந்து கொட்டி காணாமப் போகுது அப்புறம் என்ன ஆச்சு, எங்கே இருக்குன்னு யாருக்கும் தெரியாது!


 

17 comments:

  1. துளைகள் பற்றி எதோ கொஞ்சம் புரிஞ்சுக்க முடிந்தது.
    பகிர்விர்க்கு நன்றி சார்! tm1

    ReplyDelete
  2. @ சுடர்விழி

    நான் இயற்பியல் பத்தி எழுதினாத்தான் புரிய மாட்டேங்குதுன்னு சொன்னாங்கன்னுதான் வெறும் படத்தை மட்டும் போட்டிருக்கேன், அதுவும், ஏதோ கொஞ்சம் தான் புரிஞ்சுதா!! வருகைக்கு நன்றி சுடர்விழி!!

    ReplyDelete
  3. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று சும்மாவா சொன்னாங்க.

    ReplyDelete
  4. படங்கள் எதுவும் வரவில்லை... கவனிக்கவும்...

    எனக்கு மட்டுமா..? (Browser : Google Chrome)

    ReplyDelete
  5. இப்போ நீங்க சொன்னதுக்கபுரம் ஓபன் பண்ணி பார்த்தேன் வருகிறது, சரியாப் பாருங்க, தனபாலன்!!

    ReplyDelete
  6. சத்தியமா ஒரு படமும் எனக்கு தெரிய வில்லை .

    வாசன் ஐ கேருக்கு எப்படி போகணும் .................?

    ReplyDelete
    Replies
    1. @ அஞ்சா சிங்கம்

      நான் Firefox, IE8 ஆகிய இரண்டு பிரவுசர்களில் சோதித்துப் பார்த்தேன், எல்லா படங்களும் தெரிகின்றன. நேற்று தனபாலன் Chrome மில் தெரியவில்லை என்று சொன்னார். என்ன தவறு என்று விளங்கவில்லை. ஒருவேளை, படங்களை காபி பேஸ்ட் செய்தால் இது போல ஆகலாம் என நினைக்கிறேன். இனி இது போல நிகழாது பார்த்துக் கொள்கிறேன். தங்கள் இ-மெயில் ஐ.தியைத் தெரிவித்தால் பதிவை மெயிலுக்கு அனுப்புகிறேன். வருகைக்கு நன்றி!!

      Delete
  7. \\வாசன் ஐ கேருக்கு எப்படி போகணும் .................?
    \\

    எனக்குத் தெரிந்து சிலர் இங்கே போயி டேமேஜ் ஆகி வந்திருக்காங்க, ஜாக்கிரதையா இருங்க, உங்களுக்கோ, உங்கள் கும்பத்தினருக்கோ நிஜமாகவே ஏதாவது பிரச்சினை வந்தால், எக்மோர் அரசு மருத்துவமனைக்கோ, சங்கர நேத்ராலயாவுக்கோ செல்லுங்கள்.

    ReplyDelete
  8. www.funandfunonly.org

    என்ற தளத்தின் பெயர் இமேஜிற்கு பதிலாக தெரிகிறது ??

    ReplyDelete
  9. @ கலாகுமரன்
    @ அஞ்சா சிங்கம்

    படங்கள், Text முழுவதும் நீக்கி விட்டு புதிதாக தரவேற்றியிருக்கிறேன், தற்போது சரியாகி விட்டதா எனத் தெரிவியுங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  10. Now it's working fine. Excellent info

    ReplyDelete
  11. இப்போது தான் படங்கள் வருகின்றன...

    நன்றி...

    ReplyDelete
  12. அஞ்சா சிங்கம் வாசன் ஐ கேருக்கு போக வேண்டிய அவசியம் இல்ல :)

    ReplyDelete
  13. உலகின் ஐம்பெரும் துளைகளில் நம்துளைக்குதானே முதலிடம்...? ஹி...ஹி...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக, ஆனால் அவை டன் கணக்கில் வைரங்களைக் கொடுத்தான், மக்களுக்கு தேவை இல்லாத நீருக்கு வடிகாலாகவும் இருக்கின்றன, இந்த துளை எதற்கும் பிரயோஜமில்லாதது, நம்மை கொடுமைப் படுத்தவே உள்ளது. முதல் வருகைக்கு நன்றி மதுரகவி!!

      Delete
  14. http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_5120.html


    5th ... ரசித்தேன்.



    ReplyDelete