Sunday, October 14, 2012

மூன்றில் ஒரு பங்கு வைரத்தால் ஆன பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!!

பால்வீதி நட்சத்திர [Milky way  Galaxy] மண்டலம் ஒரு அறிமுகம்  


நாம் வசிக்கும் பூமி சூரியன் என்ற நட்சத்திரத்தைச் [star] சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.   சூரியன் பால்வீதி நட்சத்திர [Milky way  Galaxy] மண்டலத்தைச் சுற்றுகிறது,   அதில் சூரியனைப் போல முப்பதாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வீதி மண்டலத்தைப் போல இருபதாயிரம் கோடி முதல் நாற்பதாயிரம் கோடி வரை நட்சத்திர மண்டலங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன.  

 
பால்வீதி மண்டலத்தில் சூரியனின் இருப்பிடத்தைக் காட்டும் கற்பனையான படம்.  இதன் சைஸ் [diameter ] ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள். சூரியன் அதன் மையத்தில் இருந்து 27,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, ஒருமுறை நட்சத்திர மண்டலத்தைச் சூரியன் சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் பிடிக்கும்!!
வானவியலில் தூரங்களை குறிப்பிட ஒளி ஆண்டு என்ற அளவையையும் பயன்படுத்துவார்கள்.  ஆண்டு என பெயரிட்டிருப்பதால் இதன் பொருள் காலம் என்று அர்த்தமல்ல, மாறாக தூரத்தைக் குறிக்கும்.   ஒளி வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கிறது, இந்த வேகத்தில் ஒரு வருடத்தில் அது பயணிக்கும் தூரம் ஒரு ஒளி ஆண்டு ஆகும்.  

ஒளி ஆண்டு=3 லட்சம் X 365 X 24 X 60 X 60 கிலோ மீட்டர்கள்.


அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய கிரகம் 55 Cancri-e [ஓவியர் கற்பனை] கார்பனின் வெவ்வேறு வடிவங்களான வைரத்தாலும், கிராஃபைட்டாலும் ஆனது. கார்பனைத் தவிர இரும்பு, சிலிகான் கார்பைடு அப்புறம் கொஞ்சம் சிலிகேட்டுகளும் இருக்கலாம் என மதிப்பிடப் பட்டுள்ளது. இது 55 Cancri என்ற நட்சத்திரத்தை 18 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.  [பூமிக்கு 365 நாள் தேவை!!]. இதன் வெப்பநிலை 2000 டிகிரி செல்சியஸ்.

வைரத்தால் ஆன கிரகம்!!

டிவிங்கிள்   டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற குழந்தைகள் பாடல் இறுதியில்,  வானத்தில் மின்னும் வைரத்தைப் போல என்ற பொருளில் லைக் எ டைமன்ட் இன் தி ஸ்கை என்று முடியும்.  தற்போது நிஜமாகவே வைரத்தால் ஆன ஒரு கிரகத்தையே விஞ்ஞானிகள் கண்டுள்ளார்கள்.   பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் கடக ராசியில், சூரியனைப் போலவே உள்ள 55 Cancri என்ற நட்சத்திரத்தை, பூமியைப் போல இரண்டு மடங்கு விட்டமும், எட்டு மடங்கு எடையும் கொண்ட ஒரு கிரகம் 18 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருவதை அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த நிக்கு மதுசூதன்  [Nikku Madhusudhan] என்ற ஆராய்ச்சியாளரும் அவரது குழுவினரும் சேர்ந்து கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர்.  55 கேங்கரி -இ [55 Cancri e] என்று பெயரிடப்பட்டுள்ள இக்கிரகத்திற்கு சூப்பர் பூமி [Super Earth ] என்றும் செல்லப்  பெயரிட்டுள்ளனர். 

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் கடக ராசியில் அமைந்துள்ள 55 Cancri நட்சத்திரம், இதை சூப்பர் பூமி எனப்படும் 55 Cancri-e உட்பட ஐந்து கோள்கள் சுற்றுகின்றன. 

இந்த கிரகத்தின் நிறை [Mass ], சுற்று வட்டப் பாதையின் நீளம், அது சுற்றி வரும் நட்சத்திரத்தின் மூலப் பொருட்கள் ஆகியவற்றை வைத்து, அந்தக் கிரகம் பெரும்பாலும் கார்பன் வடிவங்களான கிரஃபைட்டாலும், வைரத்தாலும் ஆக்கப் பட்டுள்ளது என தற்போது கணக்கிட்டுள்ளனர்.  குறைந்த பட்சம், அதன் மொத்த எடையில் மூன்றில் ஒரு பங்காவது முற்றிலும் வைரத்தால் ஆக்கப் பட்டிருக்க வேண்டுமென்று கணித்துள்ளனர்.  அதாவது, நம் பூமியின் எடையைப் போல மூன்று மடங்கு எடையுள்ள பெரிய வைரம் அங்கே உள்ளது!!  இதன் வெப்பநிலை 2000 டிகிரி செல்சியஸ் ஆகும், கார்பனைத் தவிர இரும்பு, சிலிகான் கார்பைடு அப்புறம் கொஞ்சம் சிலிகேட்டுகளும் இருக்கலாம் என மதிப்பிடப் பட்டுள்ளது. நம் பூமி கருங்கல்லாலும், தண்ணீராலும் மூடப் பட்டுள்ளது, ஆனால், 55 கேங்கரி -இ கிராஃபைட்டாலும், வைரத்தாலும் நிரப்பப் பட்டுள்ளது.  நமது சூரியனைப் போலவே உள்ள ஒரு நட்சத்திரத்தை, மூலப் பொருட்களில்  பூமியைப் போலல்லாத ஒரு கிரகம் சுற்றிவருவதைக்  கண்டுபிடிப்பது இதுவே முதல் முறையாகும்.  


நிக்கு மதுசூதன், யேல் பலகலைக் கழகம்.


தூரத்தில் உள்ள கோள்கள் அத்தனையும் பூமியில் இருப்பதைப் போன்ற மூலப் பொருட்களையே கொண்டிருக்க வேண்டுமென்ற நினைப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்கு ஒரு உதாரணம் தான் இது!! மதுசூதனின் இந்த கண்டுபிடிப்பை Astrophysical Journal Letters என்ற வானவியல் சஞ்சிகை வெளியிட சம்மதித்துள்ளது.

 நிக்கு மதுசூதன் வலைப்பக்கம் செல்ல சொடுக்கவும்.

23 comments:

  1. இந்த வைரம் ஒரு காரட் சுமாரா என்ன விலை இருக்கும்? எனக்கு ஒரு காரட் போதும்.

    ReplyDelete
  2. என்ன சார், பூமி மாதிரி மூனுபங்கு பெரிய சைஸ் வைரத்தில் ஒரு காரட் மட்டும் போதுமா!! ஒளியின் வேகம் மணிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர். அந்த வேகத்தில அது அந்த கிரகத்துக்கு போறதுக்கு 40 ஆண்டுகள் ஆகுமாம். திரும்பிவர இன்னும் 40 வருஷம். மனுஷன் சாதாரணமா இவ்வளவு நாள் வாழவே மாட்டான்!! மேலும் நம்ம வேகமும் குறைவு. மணிக்கு 30 கி.மீ [பூமியின் வேகம்] வேகத்தில் போனா எவ்வளவு காலம் பிடிக்கும் தெரியுமுங்களா? நான்கு லட்சம் வருடங்கள்!! போயிட்டு வர எட்டு லட்சம் வருடங்க!! சரி ஏதோ மேஜிக் பண்ணி போயிட்டோம்னாலும், அங்க வெப்பநிலை எவ்வளவு தெரியுமுங்களா? இரண்டாயிரம் டிகிரி செல்சியஸ்!! 100 டிகிரி செல்சியஸ் நீரின் கொதி நிலை, பார்த்துக்கோங்க!!

    ReplyDelete
    Replies
    1. இப்போது நம்மிடம் உள்ள அதிநவீன விண்வெளி வாகனத்தை பயன்படுத்தி பிரயாணம் செய்தால் அந்த கிரகத்தை அடைய 22 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

      Delete
    2. @ Vijayakumar

      ஒரு நல்ல பாயிண்டைச் சொல்லியிருக்கீங்க!! நீங்க சொன்ன கருத்தை விவாதிக்கனும்னா அதுவே தனிப் பதிவா போயிடும் விஜயகுமார்!! நான் இது பற்றி எழுதி குழப்ப வேண்டாமென்று விட்டுவிட்டேன். 40 ஒளி ஆண்டிகள் தொலைவில் உள்ளது என்பதன் பொருள் நீங்கள் அந்த கிரகத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு தகவலை அனுப்புகிறீர்கள் என்றால், அது ஒளியின வேகத்தில் செல்வதாக வைத்துக் கொண்டால், நீங்கள் அனுப்பும் தகவல் அங்கு போய்ச் சேர 40 வருடங்கள் பிடிக்கும், அங்கிருந்து மீண்டும் பதில் உங்களுக்கு வந்து சேர இன்னமும் நாற்ப்பது வருடங்கள் ஆகும். இது மின்காந்த அலைகளை அனுப்பி திரும்பப் பெறுவதை வைத்து கணக்கிடுகிறோம். அனால் ஒரு விண்வெளி ஓடத்தில் அங்கு பயணம் செய்வதாக வைத்துக் கொண்டால், வேகமாக பயணிக்கும்போது உங்கள் காலம் மெதுவாகச் செல்லும், ஆகையால் நாற்ப்பது வருடங்கள் ஆகாது குறைவாகத்தான் ஆகும். இதை ஐன்ஸ்டீனின் கால நீட்டிப்பு [Time Dilatation] சமன்பாட்டை வைத்து கணக்கிடலாம். [பூமியில் நேரம் t=t0/sqrt[1-v^2/c^2] த ராக்கெட் நேரம் ]. ஆனாலும் ராக்கெட்டில் 10 வயதில் போனவர் திரும்பி வந்து பார்க்கும் போது, போன வேகத்தைப் பொறுத்து அவருக்கு 90 வயதுக்கு சில வருடங்கள் குறைவாகத்தான் ஆகியிருக்கும், ஆனால் பூமியில் 10 வயதாக இருந்தவர் தற்போது 90 வயதாகியிருப்பார்! இதெல்லாம் கொள்கை அளவில் தான், நடைமுறையில் இன்றைக்கு சனி கிரகத்துக்குப் போய்த் திரும்புவதே பெரிய விஷயமாகும்!!

      Delete
  3. ஏன் கரியால் (கார்பன்) ஆனதுனு சொல்லாமல் "வைரத்தால்" (இதுவும் கார்பன் தான்) ஆனதுனு சொல்றீங்க, அது ஏன்?

    கார்பனுடைய மெல்டிங் பாயிண்ட் 3500 C என்பதால் நெருப்புக்கட்டியாகத்தான் இருக்கும்!

    அங்கே போயி பூக்குளி இறங்கலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. @ வருண்

      H2O 0 Deg C யில் இருந்தால் அது ஐஸ், உருகினால் தண்ணீர், 100 C தாண்டினால் நீராவி. ஆனால் எப்போதும் அது H2O தான். அதே மாதிரி கார்பன் விறகுக் கரியிளும் இருக்கு, வைரத்திளும்தான் இருக்கு, ஆனா வைரத்துக்கு மட்டும் ஏன் அவ்வளவு விலை? அதோட படிக அமைப்பு தான் [crystallographic structure]. பூமிக்குள் கரியாக இருந்து லட்சக்கணக்கான வருடங்கள் அதி அழுத்தத்தில் உட்பட்டு பின்னர் தான் அது வைரம் ஆகும், Graphyte படிக அமைப்பும் வேறு. எல்லாம் கார்பன் தான் அவற்றின் ஒழுங்கமைவுக்கு மதிப்பு!!

      Delete
  4. ****இந்த வைரம் ஒரு காரட் சுமாரா என்ன விலை இருக்கும்? எனக்கு ஒரு காரட் போதும்.***

    காரட் என்பது ஒரு யூனிட் இல்ல சார்.

    ஒரு கிலோ வேணும்னு கேளுங்க! :)

    ReplyDelete
  5. அப்ப வருங்காலத்தில் நம்ம ஆளுங்க கடப்பாரையோட அங்கன போவாங்கனு சொல்லுங்க! விண்வெளி போகும்போது டைம் டயலேசன் வருவதை இப்போதைக்கு சினிமாவில் தான் பார்க்க முடியுது. வருங்காலங்களில் வெகுதொலைவு பயணம் செய்யும்போது முழுமையாக அறியலாம். அப்போது சோறு தண்ணியில்லாமல் ஹைபெர்னேஷன் பெட்டியில் இருக்கும் வசதியும் வந்திருக்கும்.

    ReplyDelete
  6. ஜெயதேவ்,

    என்னோட ப்ளாக் பிரச்சனை சரி ஆகிடுச்சானு தெரியலை. ஆனால் எனக்கு எல்லா இடுகையும் தெரிகிறது.

    ReplyDelete
  7. வைரத்த எடுக்கறதுக்காவது ஏதாவது வழி பண்ணனும்....

    ReplyDelete
    Replies
    1. @ Piglet Rams

      First of all try to save the earth from Ozone depletion, Greenhouse effect, Ice melting in the polar region, Continuous disappearing of species on earth which support your very existence, and then let us think of that stupid Diamond!!

      Delete
  8. அருமையான தகவல்கள். இது மாதிரி என்னும் எத்தனை வைரச் சுரங்கங்கள் வானில் உலவிக்கொண்டுள்ளனவோ!!!

    சூரியன் சுற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நட்சத்திரங்கள் கிரகங்களைப்போல சுற்றுவதில்லைதானே? தெளிவுபடுத்தவும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @ ரிஷி

      \\நட்சத்திரங்கள் கிரகங்களைப்போல சுற்றுவதில்லைதானே?\\

      பூமி சூரியனைச் சுற்றுவது நின்றால் எனாவாகும்? பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையால் விட்டில் பூச்சி நெருப்பில் விழுவது போல பூமி சூரியனில் போய் விழுந்துவிடும். அதனால்தான் சுற்றும் வரை பூமி, போராடும்வரை மனிதன் என்று கவிப் பேரரசு வைரமுத்து சொன்னார்!! சூரியனுக்கும் அதே நிலை தான், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் Milky Way யில் உள்ளன. அவை நகராமல் நிலையாக நின்றால் ஒன்றோடு ஒன்று மையத்தை நோக்கி விழுந்து ஒட்டிக் கொள்ளுமே!! ஒட்டாமல் இருப்பது எதனால்? சூரியன் பால்வீதி நட்சத்திர மணடலத்தை மையமாகக் கொண்டு சுற்றி வருவதனால் தான்!! அப்படியே தன்னுடைய குடும்பத்தோடு சுற்றி வருகிறது. மேலும் பூமியைப் போல சூரியனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும்தான் இருக்கிறது.

      முதல் வருகைக்கு நன்றி நண்பரே, தங்களை வினவு தளத்தில் சந்தித்திருக்கிறேன் என நினைக்கிறேன், சரிதானே?!!

      Delete
    2. ஆம். வினவு தளத்தில் சந்தித்திருக்கிறோம். சண்டையும் இட்டிருக்கிறோம். :-)
      கருத்தியல் ரீதியான மோதல்கள் சகஜம்தானே. அதற்கும் நட்புக்கும் சம்பந்தமில்லை என்று கருதுவதால் தங்கள் தளத்திற்கு வருகை தருவதில் எவ்வித மனத்தடையுமில்லை. முதலில் இருந்தே கவனித்து வருகிறேன். இன்றுதான் பின்னூட்டம் இட்டேன்.

      நட்சத்திரங்களும் சுற்றுகின்றன என்பது நானறியும் புதிய செய்தி. அறிவியலை நான் சரியாப் படிக்கல போலிருக்கு!

      தங்கள் வலைப்பூ சிறப்பாய் வளர வாழ்த்துக்கள்.

      Delete
    3. @ ரிஷி

      வருகைக்கு நன்றி ரிஷி!! தொடர்ந்து பதிவுகளைப் படித்து ஆதரவு தருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்!!

      Delete
  9. நம்ம அரசியல்வாதிங்க இதை கேட்டாங்கன்னா அவ்வளவுதான் உடனே கிளம்பிடுவாங்க நல்லவேளை கைக்கு எட்டியதூடத்தில் அது இல்லை இருந்திருந்தால் இன்னொரு இங்கா இனம் அழிந்திருக்கும்

    ReplyDelete
  10. அனேக தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  11. பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. @ திண்டுக்கல் தனபாலன்

      Thanks Danapalan!!

      Delete
  12. ஜெயதேவ்,
    படத்துல Cancerனு போட்டிருக்கு. அப்போ கடகராசிதானே? நீங்க விருச்சிக ராசின்னு போட்டிருக்கீங்க. ரெண்டுல எது சரி?

    ReplyDelete
    Replies
    1. அப்படியா, விருசிகம் தேள், கடகம் நண்டு......... கன்பியூஸ் ஆயிட்டேன். சரி இப்பவே மாத்திடறேன்............!!

      Delete