Saturday, October 27, 2012

பெண் விடுதலை பற்றி சூப்பர் ஸ்டார்!!

சென்ற நூற்றாண்டிலிருந்து   பெண் சுதந்திரம், பெண் விடுதலை, ஆண்-பெண் சம உரிமை என பல இயக்கங்கள் கிளம்பியிருக்கின்றன.  பெண் உரிமையைப் பற்றி பெண்கள் கேட்டு போராடினா பரவாயில்லை, கூடவே குற்றவாளியான  ஆண்களும் சேர்ந்துகிட்டு இருக்காங்களே,  ஏன் என்று யோசிக்க வேண்டும்.  மேலோட்டமாகப் பார்த்தால், பெண் என்பவள் அடிமை/கொடுமைப் படுத்தப் பட்டவள்,  கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு அனுமதி இல்லை, கணவன் நல்லவனாக இருந்து விட்டால் பரவாயில்லை, கொடுமைக் காரனாகப் போய் விட்டால் முழு வாழ்க்கையுமே நரகம், பேசாமல் வெளியேறி விடுவதே நல்லது என்று இதில் பல நல்ல நோக்ககங்கள் தென்படும்.  ஆனால் இவனுங்க அதுக்காக அந்தக் கும்பலில் போய்ச் சேரவில்லை.   ஆடு நனையுதே என்று அழும் ஓநாய்கள் இவை என்பதை சற்று கூர்ந்து பார்த்தால் புரியும்.


பொதுவாக ஒரு பெண் என்பவள் தங்கம் வைரம் பிளாட்டினம் போல பொக்கிஷம் ஆவாள்.  நம்மிடம் இத்தகைய விலையுயர்ந்த பொருட்கள் இருந்தால் என்ன செய்வோம்?  வாசலில் கட்டியிருக்கும் பால் போடும் பயிலா வைப்போம்?  இல்லை, வீட்டின் முக்கிய அறையில் பாதுகாப்பான பெட்டகத்தில் தான் வைப்போம்.  அதை அடிக்கனும்னு நினைக்கிறவன் என்ன செய்வான்?  ஒன்னு அதை விட்டுட்டு நாம் எங்கேயாவது வெளியூர் போவாமா என்று பார்ப்பான், அல்லது ஏன்யா அவற்றை போட்டு போட்டு அடிமைப் படுத்துகிறாய்,  கொண்டுவந்து வாசலில்  போட்டு விட்டுப் போ என்ன ஆகிவிடப் போகிறது என்று நம்மை நம்ப வைக்க முயற்சிப்பான்.  இந்த பெண் விடுதலை இயக்கத்தில் உள்ள ஓநாய்களும் இதே நோக்கில் தான் செயல்படுகின்றார்கள்.

உங்க மனைவி பெண் விடுதலை இயக்க அமைப்பாளரா இருந்காங்கன்னுதானே சொன்னீங்க?


ஆணும் பெண்ணும் ஒருபோதும் எந்த வகையிலும் சமமாக மாட்டார்கள்.  இருவரும் மனித இனம் என்பதைத் தவிர்த்து, உடலமைப்பு, உடல் வலு, சிந்திக்கும் திறன் கோபம், பரிதாபப் படுத்தல் என எல்லா விதத்திலும் இருவருக்கும் எக்கச் சக்கமான வேறுபாடு உள்ளது.  முக்கியமாக இருவரும் உடல் ரீதியாக இணைந்தால் நஷ்டம் பெண்ணுக்கு மட்டும்தான் ஆணுக்கு ஒன்றும் ஆகாது.  பஞ்சு நெருப்பில் விழுந்தாலும், நெருப்பு பஞ்சில் வந்து விழுந்தாலும் நஷ்டம் பஞ்சுக்குத்தான்....

அவள் அப்படித்தான் -வீடியோ துண்டு-1

இந்த Liberty, Equality பத்தி எனக்கு எதுவும் தெரியாது.  பிறப்பிலும் சரி , பழக்க வழக்கத்திலும் சரி ...........[கொஞ்சம் தயங்கி] படுக்கையறையிலும் சரி, ஆணும் பொண்ணும் சத்தியமா சமமா இருக்கவே முடியாது.  முக்கியமா படுக்கையறையில சமத்துவத்துக்கு இடமே கிடையாது.

இந்த பொம்பளைங்களும் அரசியல்வாதிங்களும் ரெண்டும் ஒன்னு, அவங்க நினைச்சத அடையறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வாங்க!!  ஆனா அவங்க என்ன நினைக்கிறாங்கங்கிறது அவங்களுக்கே புரியாது!! [இதைச் சொன்னவர் சாணக்கியர்!!!]

மேற்சொன்ன வேறுபாடுகளால் ஒரு பெண் எப்போதும் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது எப்போவும் யாரோட பாதுகாப்பிலாவது  இருப்பதே அவர்களுக்கு நல்லது.  பொக்கிஷம் வங்கி லாக்கரிலோ வீட்டில் மிகப் பாதுகாப்பான இடத்திலோ தான் இருக்க வேண்டும்,  வீதிக்கு வரக் கூடாது.

அவள் அப்படித்தான் -வீடியோ துண்டு-2


Ladies are always dependent.   பொறந்தப்போ they are dependent, அப்பா அம்மா மேல.  வயசு வந்தப்போ  they are dependent,  புருஷன் மேல, வயசு போனப்போ  they are dependent, புள்ளைங்களுக்கு.  அவங்க எப்பவும் independent-ஆ இருக்க முடியாது.  [இது புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது!!]

அப்படியானால் அவர்கள் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டுமா?  இல்லவே இல்லை, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  ஆண்களைப் போல படியுங்கள், வேலைக்குச் செல்லுங்கள், எல்லா துறையிலும் சாதித்துக் காட்டுங்கள், ஆண்களுடன் நட்பாகவும் இருங்கள், ஆனால் அவர்களுடன் ஒரு எல்லையை வைத்துக் கொள்ளுங்கள்.  பெண்விடுதலைக்கு உங்களுடன் போராடும் ஓநாய்களின் நோக்கம் உங்கள் பாதுகாப்பு அரணை உடைக்க வேண்டும், நீங்கள் தெருவில் நிற்க வேண்டும், அப்படி நிற்கும் போது தான் அவனுங்க உங்களை கபளீகாரம் செய்ய முடியும்.

கணவர்களுடன் பிரச்சினை எல்லா காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது ஆனால் முன் காலத்தில் விவாகரத்து என்று கேள்விப் பட்டதாகத் தெரியவில்லை.  இன்றைக்கும் வெளிநாடுகளில் இரு நிருவணங்களுக் கிடையே  பிரிக்க முடியாத உறவு என்பதை இந்தியத் திருமணம் என்றே குறிப்பிடுகிறார்கள்.  இன்றைக்கு ஏன் விவாகரத்து எண்ணிக்கை மிரளும் அளவுக்கு புழுத்துப் போனது?  தொட்டதற்கெல்லாம் கணவனை விட்டு விலகுவது எங்கு பாரத்தாலும் நிகழ்வது ஏன்?  கணவன் சரியில்லை என்று இன்னொருத்தரைத் தேர்ந்தெடுக்கும் பொது, அவனும் சரியில்லை என்றால் என்ன ஆகும்?  எத்தனை பேரை வாழ்நாளில் மாற்ற வேண்டியிருக்கும்?  அப்படி மாற்றினால் அந்தப் பெண்ணிற்கு வழங்கப் படும் பட்டப் பெயர் என்ன?  ஆக, இந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவரத்தான் ஆண் ஓநாய்கள் சில உங்களுடன் சேர்ந்து போராடுவது போல நடிக்கின்றன.  எனவே இது நல்ல தீர்வு அல்ல, நம் முன்னோர்கள் இதே பிரச்சினையை எப்படி சமாளித்தார்கள் என்று பாருங்கள் அதையே இங்கே செயல்படுத்த முடியுமா என்றும் யோசியுங்க.  ஒநாய்களிடமிருந்து உஷாராக இருங்கள்.  

 குறிப்பு:  சினிமாப் படத்தில் வரும் வசனமெல்லாம் நடிகருக்குச் சொந்தமில்லை என்று நீங்கள் வாதிடலாம்,  'நான் எங்கே வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்திடுவேன்" என்பதெல்லாம் வசனகர்த்தாவின் சிந்தனை என நினைப்பவர்கள் இதையும் அவ்வாறே நினைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. உண்மையில் இவை சூப்பர் ஸ்டாரின் சிந்தனைகள், அவர் திரைப்படத்திற்கு வருவதற்கு முன்னர் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் இருந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்பது எனது நம்பிக்கை/கருத்து!!

அவள் அப்படித்தான் முழுப் படம்!!



6 comments:

  1. முன்பை விட இன்றைய நிலை எவ்வளவோ பரவாயில்லை எனலாம்... இன்னும் மாற வேண்டும்... மாறியே தீரும் என்பதில் ஐயமில்லை... தீர்வு : பெண்களின் நல்ல கல்வி...

    ReplyDelete
  2. ஆண்களைப் போல படியுங்கள், வேலைக்குச் செல்லுங்கள், எல்லா
    துறையிலும் சாதித்துக் காட்டுங்கள், ஆண்களுடன் நட்பாகவும் இருங்கள், ஆனால் அவர்களுடன் ஒரு எல்லையை வைத்துக் கொள்ளுங்கள்.  ///அருமையான கருத்து! எதார்த்தமான
    உண்மை!

    tm2

    ReplyDelete
  3. நான் மனதில் நினைத்ததை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ Robin
      @ சுடர்விழி
      @ திண்டுக்கல் தனபாலன்

      என்னோட கருத்துக்களோடு நீங்களும் ஒத்துப் போனதற்கு மிக்க நன்றி!!

      Delete
  4. // ஆனால் இவனுங்க அதுக்காக அந்தக் கும்பலில் போய்ச் சேரவில்லை. ஆடு நனையுதே என்று அழும் ஓநாய்கள் இவை என்பதை சற்று கூர்ந்து பார்த்தால் புரியும்.// உண்மை.

    ReplyDelete
  5. உண்மையைச் சொன்னால் ஆணாதிக்கவாதி என்று நம்மைத் தாக்குவார்கள். பெண் தன்னை சுற்றி போட்டிருக்கும் பாதுகாப்பு வேலியைவிட்டு வெளியே வரவேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்.

    ReplyDelete