கீழேயுள்ள காணொளி சீனப் பெண்கள் ஆடுவது. இதில் என்ன வியப்பு? அவங்க யாருக்கும் காதே கேட்காது...........[அப்புறமென்ன பேசவும் முடியாது...... :( ]. இருந்தாலும் அவங்க பின்னணி இசைக்கேற்ப துல்லியமா நடனம் ஆடியிருக்காங்க. ஆர்கெஸ்ட்ராக்களில் ஒருத்தர் கையில் பிரம்பை வைத்துக் கொண்டு ஆட்டி கொண்டேயிருப்பதையும் அதைப் பார்த்துக் கொண்டே மற்ற நூற்றுக் கணக்கான கலைஞர்கள் தங்கள் வெவ்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதையும் நாம் பலமுறை கவனித்திருப்போம். அதே முறையில் இங்கே மேடையின் ஓரத்தில் சைகை முறையில் அவர்கள் வழிகாட்டப் பட்டு இயக்குவிக்கப் படுகிறார்கள், இசைக்கும் நடனத்துக்கும் அவ்வளவு பக்கா பொருத்தம், இவர்களுக்கு காது கேளாது என்று யாரும் நம்பமாட்டார்கள்!!
இந்த நடனத்துக்குப் பெயர்: Thousand-Hand Guan Yin, Bodhisattva of Compassion.
இதை ஆடிய குழு: China Disabled People’s Performing Art Troupe
Guan Yin என்ற வார்த்தைக்கு புத்த மதத்தில் இரக்கத்தின் தேவதை என்று பொருள். Guan Shi Yin என்ற பெயரின் சுருக்கமே Guan Yin. Guan என்றால் கவனித்தல் என்று பொருள், Shi என்றால் உலகம். Yin என்றால் ஒலிகள் முக்கியமாக கஷ்டப் படுபவர்கள் எழுப்பும் ஈன ஒலி. மொத்தத்தில் Guan Yin என்றால் கஷ்டப் படுபவர்களின் கதறலைக் கேட்டு அவர்கள் உதவிக்கு ஓடிவரும் கருணையுள்ளம் கொண்ட தேவதை என்று அர்த்தம்.
சிறு பிழை ஒருவர் கூட செய்யவில்லை... அட்சர சுத்தம். இவற்றிற்கு கவனிப்பும் மிகுதியான ஆர்வமுமே அசத்தலுக்கு காரணம். இசையை அவர்கள் உணர்வு பூர்வமாக உணர்கின்றனர்.
ReplyDeleteசிறு மொட்டு மலரும் ஓசை கூட
அவர்களுக்கு கேட்கும்
"எக்ஸலண்ட்"
என்னமா அசத்துறாங்க... தேவதை கருணை நிச்சயம் தேவை...
ReplyDeleteநன்றி...
பகிர்வுக்கு நன்றி சார்! நிச்சயம் அவர்களுடைய துயரங்கள் தீர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!
ReplyDeleteஆயிரம் விரல்கள் தெரியுது. ஆயிரம் கைகள் தெரியலை. :)))
ReplyDeleteThat's just to be poetic, don't take it literally.
Delete
ReplyDelete***கீழேயுள்ள காணொளி சீனப் பெண்கள் ஆடுவது. இதில் என்ன வியப்பு? அவங்க யாருக்கும் காதே கேட்காது...........[அப்புறமென்ன பேசவும் முடியாது...... :( ]. இருந்தாலும் அவங்க பின்னணி இசைக்கேற்ப துல்லியமா நடனம் ஆடியிருக்காங்க.***
நம்மளும்தான் இருக்கோம்.. கேட்டும், பார்த்தும் எந்தவிதத்திலும் சாதிக்கமுடியாமல். :(
நேர்த்தி எனில் சீனமோ?
ReplyDelete