Monday, October 8, 2012

Your copy of Windows is not Genuine செய்திக்கு தீர்வு என்ன?

விண்டோஸ்  xp மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்தும் போது சில சமயம், "நீங்க பயன்படுத்தும் மென்பொருள் போலியானது" என்ற செய்தி டெஸ்க் டாப்பில் வருவதோடு கணினித் திரையும் இருட்டகிவிடும். எந்த வால்பேப்பர் போட்டாலும் நிற்காது.  இந்த செம்பு ஓட்டல் சரவண பவனில் திருடியது என்று எழுதப் பட்ட பாத்திரம் வீட்டில் இருப்பது போல ஒரு குறு குறு ஃபீலிங் நமக்குள் ஓடும்.  இதற்க்கு தீர்வு உண்டா?  இருக்கிறது!!  முதலில்   விண்டோஸ்  xp.

Windows xp

1. முதலில் மற்ற எல்லா பயணர் கணக்கையும் Logout செய்து விட்டு Administrator ஆக நுழையவும்.

2. Windows Task Manager ஐக் கொண்டுவந்து Processes -ல் வைக்கவும்.  அது அப்படியே இருக்கட்டும்.

3. C:\Windows\System32 -க்குச் சென்று WgaTray.exe என்ற ஃபைலை கண்டுபிடிக்கவும்.

4. WgaTray.exe ஐ செலக்ட் செய்து Delete தேர்ந்தெடுக்கவும்.   Delete செய்யவா என்று உறுதிபடுத்தச் சொல்லி வரும் பெட்டியை எதுவும் செய்யாமல்  அப்படியே வைக்கவும்.  

5. Windows Task Manager சென்று  Processes -ல் Wgatray.exe -ஐத் தேர்ந்தெடுக்கவும். 

6. End Process என்பதன் மேல் கிளிக் செய்யவும். இங்கும் உறுதிப் படுத்த ஒரு பெட்டி வரும், அந்தப் பெட்டியையும் 4 -ல் Delete செய்யவா? என்று வரும் பெட்டியையும் பக்கத்து பக்கத்திலேயே வைத்துக் கொள்ளவும். 2 or 3 seconds க்கு உள்ளாக நீங்க இரண்டு வேலைகளை குயிக்கா செய்ய வேண்டும். அதுக்குத்தான் இந்த ஏற்ப்பாடு.

7. முதலில்  Task Manager -ல் (to “end the process”) ஐ அழுத்தி விட்டு, உடனடியாக 4-ல் வந்த பெட்டியில் உள்ள Delete ஐயும் உறுதி செய்யவும்.  இதை இரண்டு அல்லது மூன்று வினாடிக்குள் செய்து முடிக்க வேண்டும்.  முதல் முறை முடியாவிட்டாலும் மீண்டும் முயற்சி செய்யவும்.


8. Start -->Run சென்று regedit என்று போட்டு Enter தட்டவும்.Registry Editor திறக்கும்.


9. அதில்,
 HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\Notify க்குச் செல்லவும்.  

10. WgaLogon என்ற folder ஐ அதிலுள்ள பைல்களோடு சேர்த்து delete செய்யவும். 

11. Windows XP ஐ Reboot செய்யவும், இப்போ எல்லா Notification ம் போயிருக்கும் வால் பேப்பர் வேண்டியதை போட்டுக் கொள்ளலாம்!!.  

12. மீண்டும் இதே பிரச்சினை வராமல் இருக்க:  

 • Control Panel > Security Center > Automatic Update Settings க்குச் செல்லவும்.
 • “Notify me but don’t automatically download or install them." ஐத் தேர்ந்தெடுத்து OK ஐ அழுத்தவும். 
 • அடுத்த முறை “Windows Updates” ஐகான் system tray யில் வந்தால், அதன் மேல் கிளிக் செய்து என்னென்ன அப்டேட்கள் உள்ள எனப் பார்க்கவும்.
 • “Windows Genuine Advantage Notification Tool” என்று இருந்தால், அதை மட்டும் தவிர்த்து விட்டு [டிக் மார்க்கை நீக்க வேண்டும்], மற்ற அப்டேட்களை வேண்டுமென்றால் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளலாம்.  உங்களுக்கு வேண்டாத அப்டேட்கள் மீது ரைட் கிளிக் செய்தது "Hide these updates" ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 
 • அல்லது “Don’t notify me about these updates again”ஐத் தேர்ந்தெடுத்தால் இனி ஒருபோதும் அவை டவுன்லோடு ஆகாது.
 • ஒரு வேலை மைக்ரோசாப்ட் காரன் இதே ஐட்டத்தை வேற பேர்ல கூட விடுவான், ஒவ்வொரு முறையும் அப்டேட் டவுன்லோடு செய்யும்போது சூதனாமா இருங்க!!

   

  விண்டோஸ் 7 க்கு:


  RemoveWAT என்ற .zip  அல்லது .rar ஃபைலை கூகுள் செய்து ஏதாவது ஒரு தளத்தில்  [Click here] இருந்து தரவிறக்கி, Extract செய்து கொள்ளவும்.  அதிலுள்ள .exe ஃபைலை டபுள் கிளிக் செய்தால் போதும், பிரச்சினை ஓவர்!!  மேலும் வழிகளுக்கு:  சொடுக்கவும்.

10 comments :

 1. இந்த வம்பை சில தடவைகள் அனுபவித்து விட்டுத்தான் 5200 ரூ. தண்டத்திற்கு Win 7 Home Basic வாங்கினேன். கூட 3000 ரூ. தண்டம் அழுது MS office Home and Student Edition வாங்கினேன்.

  இப்போது Windows 8 pro ஆன் லைனில் 40 டாலருக்கு மைக்ரோசாஃப்ட் காரன் கொடுக்கிறதாச் சொல்லியிருக்கிறான். கழுதை, அதையும் வாங்கி ஒரு ஓரமாக் கட்டி வச்சுடலாம்னு இருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. @பழனி.கந்தசாமி

   எத்தனை நாளைக்குத்தான் காசையும் குடுத்திட்டு கழுதைங்கலாவே வாங்கிகிட்டு இருப்பீங்க!! இலவசமா லினக்சுன்னு அரேபியா குதிரை கிடைக்குது, வாங்கி கட்டிப் போடாதீங்க, சவாரி பண்ணுங்க!! உங்க கழுதைமாதிரியேதான் இருக்கும், அதனால பழைசை இழக்கிரோமேன்னு நினைக்க வேண்டாம். ஆனா, குதிரை மாதிரி ஓடும், எப்பூடி...........!!!

   Delete
 2. பயனுள்ள பதிவு, கூடுமான வரை ஒரிஜினலை வாங்கிப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது ... !

  ReplyDelete
 3. பலருக்கும் பயன் 'தர'லாம்...

  ReplyDelete
 4. எனக்கு ரொம்ப பயனுள்ள பதிவு சார். இதன் பிறகு win8 அப்டேட் செய்து கொள்ள முடியுமா? ஏன்னா win7 இருந்தால் சீப்பா win8 தருகிறாராம் பில்.

  ReplyDelete
  Replies
  1. @சந்தானம்

   அதுதான் நடக்காது!! இது இப்போதைய பிரச்சினையை தீர்க்க மட்டும்தான்!! அதுசரி, சந்தானம் நீங்க இதை டிரை பண்ணி பார்த்தீங்களா? வொர்க் ஆச்சான்னு சொல்லுங்க. இங்க நாங்க ரெண்டு மூனுபேரு சரி பார்த்தோம், வேலை செய்தது.

   Delete
 5. ஜெயவேல்: எனக்கு என்ன புரியலைனா, இந்த பிரச்சினை வரும் கம்யூட்டரில் அந்த விண்டோஸ் "genuine"னா இல்லையா?

  "genuine"னா இருந்தால் ஏன் இப்படி ஒரு "மெசேஜ்" வருது?

  ReplyDelete
  Replies
  1. கடைக்காரன் காசை வாங்கிகிட்டு போலியைக் குடுத்து ஏமாத்தியிருப்பான்...............

   Delete
  2. எங்க ஊர்ல இதெல்லாம் ரொம்ப கம்மிங்க. இதுபோல் செய்தால், கடைக்காரனை உடனே பிடிச்சு உள்ள போட்டுடுவானுக!

   Delete
 6. நம்ம ஊரில் பெரும்பாலும் pirated தான்,

  ReplyDelete