கவலை தோய்ந்த முகத்துடன் அந்த பெண், எதிரே அவர் வழக்கமாகச் சந்திக்கும் லேடி டாக்டர்.
"சொல்லுங்கம்மா, என்ன விஷயமா வந்திருக்கீங்க?" ஆரம்பித்தார் டாக்டரம்மா.
மேடம், எனக்கொரு சிக்கல், என்னை நீங்கதான் இதிலிருந்து எப்படியாவது காப்பாத்தணும்.
சரி, பிரச்சினை என்னன்னு சொல்லுங்க?
என்னோட முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலே, அதுக்குள்ளே திரும்பவும் நான் இப்போ உண்டாயிருக்கேன், இவ்வளவு குறைஞ்ச இடைவெளியில இன்னொரு குழந்தை வேண்டாம்னு நினைக்கிறேன்.
சரி, அதுக்கு நான் இப்போ என்ன பண்ணனும்னு சொல்றீங்க?
இத கலைச்சிடலாம்னு இருக்கேன், இதுக்கு உங்களைத்தான் மலை போல நம்பியிருக்கேன்.
டாக்டரம்மா, அப்படியே ஒரு கணம் யோசிச்சுட்டு, திரும்ப அந்த பெண்ணைப் பார்த்து, "கருக்கலைப்பு செய்தால் அது உங்க உடம்பை பாதிக்கும், அதனால உங்களுக்கு அந்த மாதிரி பாதிப்பில்லாத இன்னொரு யோசனை சொல்லட்டுமா?" என்றார்.
இதைக் கேட்டதும் அந்தப் பெண் முகத்தில் புன்னகை , எப்படியும் டாக்டரம்மா கருக் கலைப்புக்கு ஒத்துக்கத்தான் போறாங்க என நினைத்து, "சொல்லுங்க மேடம்" என்று தலையை ஆட்டினார்.
டாக்டரம்மா தொடர்ந்தார், " நீங்க எப்படியும் ஒரு குழந்தை தான் வேணும்னு முடிவு பண்ணிட்டீங்க, ஏன்னா ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்க முடியாது, கருக்கலைப்பு பண்ணின்னா நீங்க டவுன் ஆயிடுவீங்க, அதனால பேசமா இப்போ இருக்கே கைக்குழந்தை, அதைக் கொன்னுடுங்க, அடுத்த ஆறு மாசத்துக்கு எந்த குழந்தையைப் பத்தியும் நீங்க கவலையே பட வேண்டாம், உங்களுக்கும் ஒன்னும் ஆகாது, ஃ பைனலா நீங்க நினைச்ச மாதிரியே ஒரு குழந்தை தான் இருக்கும்"
இதைக் கேட்டதும் அப்பெண் வெகுண்டெழுந்தாள் : "என்னை என்ன கொலைகாரியாக்கப் பார்க்கிறீங்களா, தன்னோட குழந்தையை எந்த தாயாச்சும் கொல்லுவாளா? என்ன மாதிரி யோசனை குடுக்குறீங்க நீங்க"
டாக்டரம்மா பொறுமையை இழக்காமல் பேசினார், "எந்த அம்மாவும், தன்னோட குழந்தையை கொல்ல மாட்டாங்க தான், ஆனால் நீங்க அதுக்கும் ரெடியா இருக்கேன்னு இப்போ தானே சொன்னீங்க? என்ன ஒரு வித்தியாசம் அது வயித்துக்குள்ள இருக்கு, இது உங்க இடுப்பில இருக்கு. அதனால அது குழந்தை இல்லைன்னு ஆயிடுமா? ரெண்டுமே உங்க குழந்தைங்க தானே? ரெண்டுல ஒன்னை கொல்லனும்ன்னா உங்க கையில இருப்பதை கொல்வது தான் பெட்டர், உங்க ஆரோக்கியம் பாதிக்காது"
தற்போது அந்தப் பெண்ணுக்கு எல்லாம் உரைத்தது, அதற்குப் பின்னர் கருக்கலைப்பு பற்றி அவள் நினைக்கவும் இல்லை.
தாய் வயிற்றில் உள்ள 21 வார குழந்தை, மருத்துவரின் கையைப் பற்றுகிறது, அது குழந்தை இல்லையா? |