Wednesday, June 12, 2013

வெள்ளைச் சர்க்கரை: அனைத்து உடல் சீர்கேடுகளுக்கும் மூல காரணம்.

 Facebook -ல் படித்தது.

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

இதையும் வாசிக்கலாமே!!

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..


இப்பக்கத்தின் கீழே:  Photoon-பொருள் ஒன்று, அதன் தோற்றம் பார்ப்பவர் கோணத்தை பொறுத்து மாறும்.39 comments :

 1. நம்மவர்கள் ஒரு அறிவியல் ரீதியான விடயம் எழுதினாலும் தலபுராணம் எழுதுவது போல பாதி உண்மை பாதி பொய் என அடித்து விட்டுவிடுகிறார்கள். அதை புரிந்து கொண்டு இப்பதிவினை புனைவுகள் என்றும் லேபிள் வைத்திருக்கும் உமது சாமர்த்தியத்துக்கு ஒரு வந்தனம்.சுருக்கமாக இரண்டொரு விடயத்தை மட்டும் தொடுகிறேன்.

  //சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது//

  சல்பர்டை ஆக்சைடு ஒரு வாயு, அதன் அரை-ஆயுள் காலம் 24 மணி நேரம் மட்டுமே. இது சர்க்கரையின் சில பொருட்களுடன் வினைபுரிந்து சல்பைடாக மாறலாம். ஆனால் எழுதியவர் என்னமோ சல்பர் டை ஆக்ஸைடு ஆறுமாசம் கழித்து சயனைடு ஆகிவிடும் என்ற ரேஞ்சுக்கு பில்டப் தருகிறார்!

  //சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.//

  மனித உடம்பில் 18% கரிதான்.கரியில்லாவிடில் உயிர்களே இல்லை! சர்க்கரையில் அதிகம் இருப்பது சுக்ரோஸ் எனும் பொருள். இது பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸால் ஆனது.பிரக்டோஸ் உடம்பில் கொழுப்பாக மாற்றமுறும். குளுக்கோஸ்,சுக்ரோஸ் இதெல்லாமே கரிம வேதிபொருட்கள்தான் இதே சுக்ரோஸ்தான் வெல்லத்திலும் உள்ளது. வெல்லம் மட்டும் ஓகே என்றால் எப்படி?

  சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்பது இதுவரை நிரூபிக்க படவில்லை. பொதுவாக சர்க்கரை குறைவாக சேர்ப்பது நல்லது. ஏனெனில் அது வெட்டியான கலோரிகளை ஏற்றும். வெல்லத்தில் சில சத்துக்கள் உண்டு மற்றும் புற வேதிப்பொருட்கள் குறைவு(இதிலும் கரும்புக்கு போடும் உரமும், பூச்சிக் கொல்லியும் இருக்கும், இதையெல்லாம் ரொம்ப யோசித்தால் பட்டினிதான்!). ஆக சர்க்கரைக்கு வெல்லம் பெட்டர்தான்.சுவிட்களை நொக்காமல்,தினமும் காப்பியில் போடும் 2-3 ஸ்பூன் சர்க்கரையை உடம்பு சமாளித்துக்கொள்ளும் என நினைக்கிறேன். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே?

  ReplyDelete
  Replies
  1. @ நந்தவனத்தான்

   \\அதை புரிந்து கொண்டு இப்பதிவினை புனைவுகள் என்றும் லேபிள் வைத்திருக்கும் உமது சாமர்த்தியத்துக்கு ஒரு வந்தனம்.\\ ஹா....ஹா....ஹா.... இதை நான் நினைச்சு பார்க்கலை!! நிறைய ரீச் ஆகும்னு இந்த பிரிவையும் சேர்த்தேன்!!

   \\சல்பர்டை ஆக்சைடு ஒரு வாயு, அதன் அரை-ஆயுள் காலம் 24 மணி நேரம் மட்டுமே. இது சர்க்கரையின் சில பொருட்களுடன் வினைபுரிந்து சல்பைடாக மாறலாம். ஆனால் எழுதியவர் என்னமோ சல்பர் டை ஆக்ஸைடு ஆறுமாசம் கழித்து சயனைடு ஆகிவிடும் என்ற ரேஞ்சுக்கு பில்டப் தருகிறார்! \\ கதிரியக்கத் தனிமங்களுக்கு அரை ஆயுள் என்றால், அந்த கால இடைவெளியில் பாதி கதிரியக்கத்தை வெளியிட்டு வேறு ஒரு தனிமமாக மாறும். வேதியியலில் அரை ஆயுள் என்றால் என்ன? வினை புரிய ஆகும் காலமா? அதற்க்கு எதற்கு அரை ஆயுள்? ஒரே சமயத்தில் வினை புரியலாமே?

   \\மனித உடம்பில் 18% கரிதான்.கரியில்லாவிடில் உயிர்களே இல்லை! \\ அதற்காக அடுப்புக் கறியை சாப்பிடலாமுங்களா? சர்க்கரையில் உள்ள கரி அந்த மாதிரி கேவலமான கரியோ என்னவோ?!!

   \\சர்க்கரையில் அதிகம் இருப்பது சுக்ரோஸ் எனும் பொருள். இது பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸால் ஆனது.பிரக்டோஸ் உடம்பில் கொழுப்பாக மாற்றமுறும். குளுக்கோஸ்,சுக்ரோஸ் இதெல்லாமே கரிம வேதிபொருட்கள்தான் இதே சுக்ரோஸ்தான் வெல்லத்திலும் உள்ளது. வெல்லம் மட்டும் ஓகே என்றால் எப்படி?\\ இயற்கையில் கிடைக்கும் உணவு wholesome. வெள்ளத்தில் சர்க்கரை, அதை ஜீரணிக்கத் தேவையான விட்டமின்கள் மினரல்கள் சேர்ந்து கிடைக்கிறது. அது எந்த கெடுதியையும் விளைவிக்காது. வெள்ளைச் சர்க்கரையில் வெறும் சர்க்கரை விட்டமின்கள் மினரல்கள் மொலாசஸ் ஆக நீக்கப் பட்டு சாராயம் காய்ச்சப் போய் விடுகிறது. நீங்கள் இதை உண்டால் ஜீரணிக்கத் தேவையான விட்டமின்கள் மினரல்கள் உங்கள் உடலின் தேவைக்காக வைக்கப் பட்டுள்ள கிடங்கில் இருந்து எடுத்துக் கொள்ளப் படும், உடல் நலம் பாதிக்கும் அது எல்லா உறுப்புகளையும் தாக்கும். எனவே வெள்ளம் நல்லது வெள்ளைச் சீனி விஷம்.

   \\சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்பது இதுவரை நிரூபிக்க படவில்லை.\\ மொத்தமாகவே எல்லா உறுப்புகளும் பாதிப்படைகிறது, அதனால் இன்சுலின் சுரக்கும் பான்கிரியாசும் பாதிப்படைகிறது. நீங்க மருத்துவர்கள் அறிவியலாளர்களை முழுசா நம்பிடக் கூடாது. அவனுங்க பல உண்மைகளை மறைக்கத்தான் செய்வார்கள். ஏன்னா அதைச் சொன்னா அவனுங்களே குற்றவாளிகள் என்றாகிவிடும். அறிவியல் ரீதியான நிரூபணம் என்றால் என்ன? பத்து பேருக்கு சர்க்கரையை திங்க வச்சு எல்லோருக்கும் சர்க்கரை வியாதி வருதான்னு பார்ப்பான் நிச்சயம் வராது பார்த்தீங்களா இது ஆபத்தில்லை என்பான். அவனுங்களை நம்பினா நாம அம்போதான்.

   \\இதிலும் கரும்புக்கு போடும் உரமும், பூச்சிக் கொல்லியும் இருக்கும், இதையெல்லாம் ரொம்ப யோசித்தால் பட்டினிதான்!\\ அப்படிப் பார்த்தால் வெள்ளைச் சர்க்கரைக்குப் போகும் கரும்பிலும் அதே உரமும், பூச்சிக் கொல்லியும் இருக்கும், அதற்கும் மேல் இன்னொரு விஷம் எதற்கு?

   \\ஆக சர்க்கரைக்கு வெல்லம் பெட்டர்தான்.சுவிட்களை நொக்காமல்,தினமும் காப்பியில் போடும் 2-3 ஸ்பூன் சர்க்கரையை உடம்பு சமாளித்துக்கொள்ளும் என நினைக்கிறேன். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே?\\ அது அமிர்தத்துக்கு சொன்னது இது அமிர்தம் அல்ல விஷம்.

   சோ ராமசாமி சொல்கிறார், "மதுவிலக்கு சாத்தியமில்லை நீங்க அளவோட குடிங்க அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு நீங்க தான் கவனமா இருக்கணும்". இது மாதிரி இருக்கு நீங்க சொல்வது!! தெரிந்தே விஷத்தை உண்ணலாமா? சொல்லப் போனால் வெள்ளைச் சர்க்கரை விஷத்திலும் கொடிய நஞ்சு. மக்கள் நலத்தை பற்றி கவலைப் படாத அரசு நமக்கு எங்கே விழிப்புணர்வூட்டப் போகிறது? நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

   Delete
 2. இனிப்பு வந்து இருபது வருடம் நோக்கி பயணிப்பதால் இதைப் பற்றி நினைப்பதே (பயப்படுவதே) இல்லை... ஹிஹி...

  /// இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது... ///

  இவைகள் வருவதற்கு சர்க்கரை மட்டும் காரணமல்ல...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. @ திண்டுக்கல் தனபாலன்

   நன்றி தனபாலன் சார், நந்தவனத்தான் அவர்களுக்கு தந்த பதிலே உங்களுக்கும்.

   Delete
  2. Visit :

   http://mdrf.in/

   http://www.drmohansdiabetes.com/misc/faq.html

   Delete
  3. சுட்டிகளுக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 3. நல்லதொரு அறிவுரை....

  இந்த வெள்ளை வண்ணத்தில் இருக்கும் உணவுப்பொருள்களை குறைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாகத்தான் இருக்கும்...

  நல்லது

  ReplyDelete
 4. வேதியல் அமிலங்கள் சேர்க்கப்டுவதால் ஏற்படும் கெடுதிதான்

  ReplyDelete
 5. உங்களை உதைக்கிறதா இல்லைனா முகநூல்ல எழுதியவனை உதைக்கணுமா தெரியலை!

  என்னவோ போங்கப்பா!

  ReplyDelete
  Replies
  1. @ வருண்

   திருடனை விட்டுவிட்டு, திருடன்......... திருடன், ஓடிவாங்க ..........அப்படின்னு கத்துபவனை உதிக்கும் அலா இருப்பீங்க போலிருக்கு

   வெள்ளைச் சர்க்கரையை, உற்பத்தி பண்றவன் விற்ப்பவன் அதை அனுமதிப்பவன் இவனுங்களை பிடிச்சு உதைங்க. சில விவரங்கள் தவறாக இருந்தாலும் சொல்ல வந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை வெள்ளைச் சீனி விஷம்........விஷம்.........விஷம்.........

   Delete
 6. ***இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? **

  வருண் னு போட்டுக்கோங்க. I dont like sweets, fyki!

  ReplyDelete
 7. நல்ல ஆரோக்கியத்திற்கு ஐந்து 'வெள்ளைகளை' நீக்கவேண்டும் என்று மாற்று மருத்துவத்தில் கூறுவார்கள். அவற்றில் அரிசி, சர்க்கரை, மைதா,பால் இவையெல்லாம் அடக்கம். (அந்த இன்னொன்று என்னவென்பது சட்டென்று நினைவு வரவில்லை) சர்க்கரையிலுள்ள வேதிப்பொருட்களால் ஆபத்து வரும் என்பதுதான் காரணம். இவற்றால் எப்படியெல்லாம் தீங்கு வரும் என்று தெரிந்துகொண்டு உபயோகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான். முற்றாகத் தவிர்க்கமுடியுமா என்பது தெரியவில்லை.

  \\குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.\\

  இந்தப் பாராவில் நான்காவது வார்த்தை 'பல்சொத்தை' என்பதாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். திருத்திவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தவறை திருத்தி விட்டேன், நன்றி சார்.

   ஐந்தாவது வெள்ளை நாம் உணவில் போடும் உப்புதான்!! நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்துப்பு சரியான மாற்று
   அரிசியால் பிரச்சினை இல்லை, பாலிஷ் செய்வது தான் பிரச்சினை. கைக்குத்தல் அரிசியைப் போல வரும் சிவப்பு அரிசி நல்லது.

   Delete
 8. ஐந்தாவது உப்பு - வாகை

  ReplyDelete
  Replies
  1. @AnonymousJune 13, 2013 at 2:17 PM

   Thanks Boss............!!

   Delete
 9. இயற்கையாகவே பல பொருட்களில் சர்க்கரை உள்ளதால் நேரடியாக சர்க்கரையின் அளவை குறைப்பது நல்லதுதான். ஆனால் சர்க்கரை குறைவாக இருந்தால் டீ குடிக்க முடிவதில்லை. நாவை அடக்கினாலே பல நோய்களில் இருந்து தப்பித்து விடலாம்.
  அறுசுவைகளுமே அதிகமானால் ஆபத்துதான்

  ReplyDelete
  Replies
  1. @ T.N.MURALIDHARAN

   Natural sweet fruits, jaggery, honey are all good. What crooked man makes, that is very bad. thanks.

   Delete
 10. ***ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.***

  இது ரொம்ப தவறான வாக்கியம்ங்க, ஜெயதேவ். இதுலயும் சூக்ரோஸ்தான் இருக்கு! இதை அளவுக்கு அதிகமா சாப்பிடலாம்னு எதுக்கு சொல்றீங்க.

  இன்னும் சொல்லப்போனால், இதுலையும் அந்த வெள்ளை நிற சர்க்கரைதான் "அழுக்கா" இருக்கு! In a crude form. The sweet taste is coming from the white sucrose only.

  -----------------------

  Sugar is prepared in big industries. When you crystallizing that to get "pure white sugar" the other chemicals should stay in the mother liquor. Suppose, some of the oxidized sulfate salts (may be they are also white) co-crystallized with white sugar (it is less likely), then when you do the quality control, you could easily figure it out.

  Sugar industry can not sell/send out the sugar without doing routine analysis such as, measuring, pH, melting point of crystals and so on and so forth.

  Suppose, it has other contaminants, it will not pass the quality control test.

  If you say, our govt does not do a good job on quality control, they are corrupt, then PATRIOT like you should blame your country and your system. WHY blame the poor sugar???

  ReplyDelete
  Replies
  1. வருண்,

   சர்க்கரை, அதை ஜீரணிக்கத் தேவையான விட்டமின்கள், மினரல்கள்- இதை நீங்கள் அழுக்கு என்கிறீர்கள், நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் மேற்கண்ட இரண்டும் சேர்ந்தால் மட்டுமே அது wholesome முழுமையான உணவாகும். விட்டமின்கள், மினரல்கள் நீக்கப் பட்ட வெறும் வெள்ளைச் சர்க்கரை பேராபத்து, விஷத்தை விட கேடானது, உடல் நலத்தின் பெரிய எதிரி எல்லா சீர்கேடுகளுக்கும் காரணி ஆகும்.

   புள்ளி விவரம் கொடுக்கும் புள்ளி ராஜாக்கள் பொய்யே பேசாத உத்தமனுங்க என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. அவன் அனலைஸ் பண்ணினால், pH சரி பார்ப்பதால் சர்க்கரை உடலுக்கு நன்மை பயப்பதாகிவிடுமா என்ன? போகிற போக்கில், டெண்டுல்கர் பெப்சி குடிக்கச் சொன்னான் அது ரொம்ப நல்லது என்று சொல்வீர்கள் போல.

   Delete
  2. Your raw sugar also has "சர்க்கரை"!!!

   I am asking the SAME QUESTION to you,

   சர்க்கரை உடலுக்கு நன்மை பயப்பதாகிவிடுமா என்ன?

   What vitamins you have in Sugarcane???

   Who said the minerals and vitamins (tell me what vitamins help digesting??) HELP DIGESTING??

   Have you analyzed the "dark color" contents?

   Are you sure they are all vitamin and minerals??

   Which mineral has dark color???

   Freshly squeezed sugarcane juice.
   Nutritional value per serving
   Serving size 28.35 grams
   Energy 111.13 kJ (26.56 kcal)
   Carbohydrates 27.51 g
   - Sugars 26.98 g
   Protein 0.27 g
   Calcium 11.23 mg (1%)
   Iron 0.37 mg (3%)
   Potassium 41.96 mg (1%)
   Sodium 17.01 mg (1%)

   You have 27.51 g of sugar only in one serving of sugar cane.

   How come it does not have the color of "கருப்பட்டி" அல்லது வெல்லம்???

   It has a GREEN COLOR when you get it from sugar cane! The othe half also not brown it is rather white. உங்க ப்ரவுன் கலர் எங்கேயிருந்து வந்துச்சு??

   Delete
  3. வருண் ரொம்ப குழப்பிக்காதீங்க. சர்க்கரை தயாரிப்பின் போது

   1. மொலாசஸ் பிரிக்கப் படுவது
   2. சில வேதிப் பொருட்கள் சேர்ப்பது

   இந்த இரண்டும் உடல் நலத்துக்கு கேடு, வெள்ளைச் சீனி மனிதனின் கொடிய எதிரி. இது வெளிப்படையான எதிரி அல்ல, நண்பனைப் போல நடித்து ஏமாற்றும் எதிரி. தவிர்ப்பது நல்லது.

   Delete
  4. நீங்க, கரும்பிலிருந்து வெல்லம் எப்படி தயாரிக்கிராங்கனு சொல்லுங்க! பதனீர்ல இருந்து கருப்பட்டி எப்படி தயாரிக்கிறாங்னு, சொல்லுங்க! அதுக்கப்புறம்தான் உங்களுக்கு என்ன வேதிவினைகள் நடக்குதுனு புரியும். நீங்க சொல்றமாரி, உடல்நலம் பத்தி கவலைப்பட்டால், வைட்டமின், மினெரல்தான் முக்கியம்னா கரும்பாவே, பதனீராவே இல்லைனா கள்ளாக் குடிச்சா 1000 ஆண்டு வாழலாம். எதுக்குப் போட்டு காய்ச்சி எடுக்குறீங்கனு சொல்லுங்களேன்?

   Delete
  5. Check this out, too!

   http://www.youtube.com/watch?v=R7T-fdehdJA

   Delete
 11. \\இது ரொம்ப தவறான வாக்கியம்ங்க, ஜெயதேவ். இதுலயும் சூக்ரோஸ்தான் இருக்கு! இதை அளவுக்கு அதிகமா சாப்பிடலாம்னு எதுக்கு சொல்றீங்க.\\ It means as much as you wish. After eating a little bit you will feel satisfied and stop. It won't go on indefinitely.

  ReplyDelete
  Replies
  1. That is not what it (ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.) means!


   You misinterpret that statement as per your convenience!

   Please dont misguide ignorant people. That is more dangerous! That's all I can tell you!

   Delete
 12. //கதிரியக்கத் தனிமங்களுக்கு அரை ஆயுள் என்றால், அந்த கால இடைவெளியில் பாதி கதிரியக்கத்தை வெளியிட்டு வேறு ஒரு தனிமமாக மாறும். வேதியியலில் அரை ஆயுள் என்றால் என்ன? வினை புரிய ஆகும் காலமா? எதற்கு அரை ஆயுள்? ஒரே சமயத்தில் வினை புரியலாமே?//

  இரும்பை ஒபனாக விட்டால் கொஞ்சம் கொஞ்சமாத்தான் துரு பிடித்து இரும்பு ஆக்ஸைடாக மாறும். வைத்த அடுத்த நிமிடத்தில் எல்லாம் துரு பிடிக்குமா என்ன? நீங்க சொன்ன கதிரியக்கத் தனிமங்களுக்கு மட்டும் அரை ஆயுள் எதுக்கு அரை ஆயுள் உடனே எல்லா கதரியக்கத்தையும் விட்டு வேறுதனிமமாக மாறாலாமே. வேதி வினைகளை பல விடயங்கள் நிர்ணயிக்கின்றன, வெப்பநிலை, கூட்டு சேரும் பொருள், வினையூக்கி இப்படி. அது அல்லாமல் எல்லாப் பொருளும் உடனே அழிந்தால் இவ்வுலகமே இருக்காது.

  //இயற்கையில் கிடைக்கும் உணவு wholesome. வெள்ளத்தில் சர்க்கரை, அதை ஜீரணிக்கத் தேவையான விட்டமின்கள் மினரல்கள் சேர்ந்து கிடைக்கிறது. அது எந்த கெடுதியையும் விளைவிக்காது.//

  தெரியாத விடயத்தை பற்றி எக்ஸ்பர்ட் மாதிரி எழுதுவதை தவிர்ப்பது நல்லது. சர்க்கரையை ஜீரணிக்க பெரிய அளவில் விட்டமின்கள் மினரல்களை தேவையில்லை. சர்க்கரை மட்டும் சாப்படாமல் வேறு உணவும் சாப்பிடும் ஒருவருக்கு ஜீஜூபியாக ஜீரணிக்கலாம். வெல்லத்தில் 97% சுக்ரோஸ், 2% தண்ணீர்,1% விட்டமின்கள். சர்க்கரையில் 99.9% சுக்ரோஸ். ஆக தம்மாத்துண்டு வெல்லம் சாப்பிடுவதால் உடம்புக்கு எவ்வித விட்டமின்களும் குறிப்பிடத்தக்க அளவில் சேராது. வெல்லம் சாப்பிடுவதும் வேஸ்டுதான். காய்கறிகளும் இனிப்புக்கு பழங்களும் சாப்பிடுவது சிறப்பு, அதையும் நம் தோட்டத்தில் உரமும் பூச்சிக்கொல்லி போடமல் விளைவிப்பது மிகவும் சிறப்பு. ஆனால் அது சாத்தியமல்லாத நிலையில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையில் குடி மூழ்கிவிடாது.

  //நீங்க மருத்துவர்கள் அறிவியலாளர்களை முழுசா நம்பிடக் கூடாது.//

  நீங்கள் பேஸ்புக்கில் புரளி கிளப்புவர்களையும் மட்டுமென்ன மோடி மஸ்தானையும் சேர்த்து நம்புங்கள்,அது உமது விருப்பம். உங்களை மாதிரியே ஒரு விஞ்ஞானி குரூப் சர்க்கரை டிப்மேசன் கேஸ் போடாது என்கிற ஒரே காரணத்தினால் அதற்கு அபகீர்த்தி உண்டாக்க பல வருடமாக உழைத்தும் அதற்கும் சர்க்கரை வியாதிக்கும் உள்ள தொடர்பினை நிருபிக்க முடியவில்லை. கவனிக்க, நான் இல்லவே இல்லை என சொல்ல வில்லை நிரூபிக்க முடியல என்றுதான் சொல்கிறேன். பேஸ்புக் கட்டுரையாளர் மாதிரி அடித்துவிட விரும்பவில்லை.

  நிற்க. சர்க்கரையை கண்டு பிடித்தவர்கள் இந்தியர்தான் என்பது தெரியுமா? கிபி 300 ஆயிரத்தில் அலெக்சாண்டர் படையெடுப்பின் போது கண்டு இந்தியர்கள் தேன் அல்லாத சுவையான பொருளை உட்கொள்ளுவதாக கிரேக்கர் எழுதிவைத்துள்ளாராம். மேலும் வெல்லம் போன்ற பொருட்கள் எளிதில் கெட்டுப்போதாலும், லாஜிடிக் சிக்கல்கள் காரணமாகவே கெமிக்கல் ரீதியான சர்க்கரை உற்பத்தி தேவைப்படுகிறது. மக்கள் தொகை குறைந்தால் மட்டுமே இயற்கை சர்க்கரை எல்லாம் சாத்தியமாகும்.

  ReplyDelete
  Replies
  1. \\இரும்பை ஒபனாக விட்டால் கொஞ்சம் கொஞ்சமாத்தான் துரு பிடித்து இரும்பு ஆக்ஸைடாக மாறும். வைத்த அடுத்த நிமிடத்தில் எல்லாம் துரு பிடிக்குமா என்ன?\\ எவ்வளவு துரு பிடிக்கும் என்பது "area of exposure to air" என்பதைப் பொறுத்து பொறுத்து மாறுமா? கதிரியக்கத் தனிமங்கள் எப்படி வச்சாலும் அரை ஆயுள் மாறாது. ஒவ்வொரு அணுவையும் ஒரு கிரகத்தில் வச்சிட்டு எத்தனை disintegrate ஆகிறது என்று பார்த்தாலும் அரை ஆயுள் படி தான் disintegration எண்ணிக்கை இருக்கும்.


   \\வேதி வினைகளை பல விடயங்கள் நிர்ணயிக்கின்றன, வெப்பநிலை, கூட்டு சேரும் பொருள், வினையூக்கி இப்படி. அது அல்லாமல் எல்லாப் பொருளும் உடனே அழிந்தால் இவ்வுலகமே இருக்காது.\\ சாதகமான சூழ்நிலை உருவானாலும் இந்த அரை ஆயுள் படிதான் வினை நடக்குமா? இது கேள்விப் படாதது.

   \\தெரியாத விடயத்தை பற்றி எக்ஸ்பர்ட் மாதிரி எழுதுவதை தவிர்ப்பது நல்லது. \\ சிம்பிலாவே சொல்றேன். 100% தூய நீரை குடிப்பவன் விரைவில் மாண்டு போவான், அதில் கனிமங்களும் சேர்ந்திருந்தால் தான் அது குடிக்க உகந்தது காரணம், 100% தூய நீர் நம் உடலில் உள்ள கனிமங்களை கரைக்க ஆரம்பித்து விடும். அதே மாதிரி தான், கரும்பில் ரெண்டு சமாசாரம் இருக்கு, [no matter whatever names you give for these two] இரண்டும் சேர்த்து தான் சாப்பிடனும் அதில் ஒன்னை பிரிப்பது உடலுக்கு ஆபத்து. அந்த இல்லாத சமாச்சாரத்தை உடம்பில் இருந்து கரைக்கப் படும். அது டேஞ்சர். This is what happens in white sugar.


   \\வெல்லம் சாப்பிடுவதும் வேஸ்டுதான். \\வெறும் வெல்லத்தை உண்ணுங்கள் என்று எங்கே சொன்னேன்? சர்க்கரை விஷம். இனிப்புக்கு சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தை பயன்படுத்துவது நல்லது. அவ்வளவுதான்

   \\காய்கறிகளும் இனிப்புக்கு பழங்களும் சாப்பிடுவது சிறப்பு, அதையும் நம் தோட்டத்தில் உரமும் பூச்சிக்கொல்லி போடமல் விளைவிப்பது மிகவும் சிறப்பு. ஆனால் அது சாத்தியமல்லாத நிலையில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையில் குடி மூழ்கிவிடாது.\\ தாராளமா ஆர்கானிக் காய்கறி விளைய வையுங்க நான் வேண்டமுன்னு சொல்லவில்லை. சர்க்கரை இரண்டு spoon-டவா நிற்குது? டன் கணக்கில் ஊர் பூராவும் விற்றுத் தள்ளுகிறது. இந்த நஞ்சில் இருந்து நம் சந்ததிகளைக் காக்க வேண்டும் என்பதே நமது கவலை.

   \\நீங்கள் பேஸ்புக்கில் புரளி கிளப்புவர்களையும் மட்டுமென்ன மோடி மஸ்தானையும் சேர்த்து நம்புங்கள்,அது உமது விருப்பம்.\\ சர்க்கரையை விட கொடிய எதிரி மனிதனுக்கு வேறு ஒன்றுமில்லை நண்பரே, இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, எந்த ஐயமும் எமக்கில்லை.

   \\அதற்கு அபகீர்த்தி உண்டாக்க பல வருடமாக உழைத்தும் அதற்கும் சர்க்கரை வியாதிக்கும் உள்ள தொடர்பினை நிருபிக்க முடியவில்லை. \\ வெள்ளைச் சர்க்க்கரை உடலின் எல்லா உறுப்பையும் அடிக்கும், பான்கிரியாசையும் அடிக்கும். பாதிப்பு உண்டாவது ஆளைப் பொறுத்தது.

   \\சர்க்கரையை கண்டு பிடித்தவர்கள் இந்தியர்தான் என்பது தெரியுமா? கிபி 300 ஆயிரத்தில் அலெக்சாண்டர் படையெடுப்பின் போது கண்டு இந்தியர்கள் தேன் அல்லாத சுவையான பொருளை உட்கொள்ளுவதாக கிரேக்கர் எழுதிவைத்துள்ளாராம். \\ இது வெல்லமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.


   \\மேலும் வெல்லம் போன்ற பொருட்கள் எளிதில் கெட்டுப்போதாலும், லாஜிடிக் சிக்கல்கள் காரணமாகவே கெமிக்கல் ரீதியான சர்க்கரை உற்பத்தி தேவைப்படுகிறது. மக்கள் தொகை குறைந்தால் மட்டுமே இயற்கை சர்க்கரை எல்லாம் சாத்தியமாகும்.\\ சமீப வருடங்கள் வரையிலும் கிராமங்களில் கரும்பு பயிரிட்வோர் அவர்களே வெள்ளமும் உற்பத்தி செய்வார்கள். மனது வைத்தால் தற்போதும் இது சாத்தியமே. நமக்கு வெல்லம் கிடைக்கிறது அதை வாங்கி பயன்படுத்துவோம், உற்பத்தி எப்படி நடக்கும்னு கவலை நமக்கெதற்கு??!! வெள்ளை சர்க்கரையின் தீமையை உணர்ந்து அதை ஒதுக்கினால் வெல்லம் வேண்டிய அளவுக்கு உற்பத்தி செய்வார்கள்.

   Delete
 13. Replies
  1. BROWN SUGAR இதன் அர்த்தம் நாட்டு சர்க்கரையா? தாரளமாக பயன்படுத்துங்கள் மற்ற அர்த்தம் கொடுரத்தால்... அந்த விளையாட்டுக்கு நான் வரலை!!

   Delete
 14. நல்ல பகிர்வு... ஆனால்

  காலையிலேயே.... காபியைக்
  கசப்போடு சாப்பிட்டு கஷ்டப்படுவதை விட
  இனிபோடு சாப்பிட்டு இன்பமாக இருந்து விட்டு போவோமே....))

  ReplyDelete
  Replies
  1. @ அருணா செல்வம்

   எந்தளவுக்கு வெள்ளைச் சீனியை தவிர்க்க முடியுமோ, அந்தளவுக்கு நன்மையே. தேநீரில் பால் சேர்க்காவிட்டால், இனிப்புக்கு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம், காபிக்கும் அதே மாதிரி செய்து பாருங்களேன்!! நன்றி.

   Delete
 15. தாஸ், தூண்டி நடக்கும் வேதி வினையையும் இயற்கையாக நடக்கும் decomposition-யையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. ஐசோடோப்பின் அரை ஆயுட்காலம் என்பது அது தானகவே சிதைவதை வைத்து கணக்கிடப்படும். ஆனால் அதை தூண்டி விரைவில் நடக்கும் படி செய்ய முடியும் அல்லவா? (அணுஉலை)

  அதே மாதிரி சல்பர்டை ஆக்சைடு (so2) இயற்கை சூழ்நிலையில் பொதுவாக 6-24 மணி நேரத்தில் பாதியாக குறையும் என்கிறார்கள். இயற்கை சூழல் இடம் இடம் மாறும், சில இடத்தில் 10 நாளைக்கு தாக்கு பிடிக்கலாம். so2 காற்றில் இருக்கும் ஈரபதத்துடன் விரைவில் வினை புரிந்து சல்பூரிக் அமிலமாக மாறும். இதுவே எரிமலை குமுறலுக்கு பின் பொழியும் அமில மழைக்கு காரணி. உடனே டென்சனாக வேண்டாம். நம்முடலில் இருக்கும் பாக்டீயாவே தினமும் நாம் கொட்டிக்கொள்ளும் உணவிலிருந்து இதனை உற்பத்தி செய்யும். குறைந்த அளவில் உடம்பு சமாளிக்கும். ஆனாலும் இது விசம்தான். ஆகவே வருண் சொன்னது போல சர்க்கரை உற்பத்தி ஆன பின் பரிசோதனை அவசியம். மேலும் பழங்களை குறிப்பாக உலர்பழங்களை இதை வைத்து பதப்படுத்துகிறார்கள்.அடுத்த தடவை பாயாசத்தில் கிஸ்மிஸை மிஸ் செய்யவும்.

  ReplyDelete
 16. சர்க்கரை முக்கியமாக வெள்ளையாக இருக்கும் எல்லாம் உடம்புக்கு கெடுதல் என்று ரஜினி சொன்னார்; அதானால், நான் சர்க்கரை சேர்ப்பதில்லை; அவர் சொன்ன அது சரியாகத் தான் இருக்கும்...!

  எல்லா ஆங்கில மருந்துகளும் விஷம் தான். கொஞ்சம் அதிகாமாக எடுத்தா ஆள் காலி; எல்லாவற்றிற்கும் lethal dose இருக்கு; கோமியத்தை தவிர...! ஹி! ஹி!!

  ReplyDelete
 17. பாகவதரே,

  நாராயணசாமிக்கு அப்புறமா நாட்டில சயிண்டிஸ்டுகளே இல்லையானு கவலைப்பட்டேன்,நான் இருக்கேன்னு நீர் கிளம்பிட்டீர் :-))

  இந்த வெள்ளை சர்க்கரை கதையை ரொம்ப நாள் முன்ன குமுதம் சினேகிதியோ,அவள் விகடனோ போட்டுச்சு,அதையும் நம்ம காபி& பேஸ்ட் பதிவர்கள் போட்டாங்க, அது முகநூலுக்கு இப்போ தான் போய் இருக்கு,அதையும் நீர் முகநூலில் இருந்து காபி அடிச்சு போட்டு இருக்கீர் :-))

  சரி அந்த கதைய விடும் , இந்த கட்டுரையே ரொம்ப தத்துப்பித்து அதைப்பார்ப்போம்,

  //மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.//

  இப்படி சுகர் கிரிஸ்டல் உருவாக்கி காட்டினா உமக்கே நோபல் பரிசு :-))

  நல்லா கொதிக்க காய்ச்சிய கரும்பு ஜூசை சென்ட்ரிபிஜில பீச்சி அடிச்சா தான் " கிரிஸ்டல் சுகர்" கிடைக்கும், இது ஒரு இயற்பியல் நிகழ்வு.

  # எந்த ஒரு சுத்திக்கரிக்கப்பட்ட பொருளிலும் ரசாயனங்கள் இருக்கும், எனவே வெள்ளை சர்க்கரையிலும் இருக்கும். அதை சாப்பிடக்கூடாதுனா நீர் ரிபைண்டு எண்னையே பயன்ப்படுத்தக்கூடாது,எல்லாம் சால்வண்ட் எக்ஸ்ட்ராக்‌ஷனில் கெமிக்கள் வைத்து எடுக்கப்படும் எண்னை,நான் ஒரு உணவு பதிவில் சொல்லி இருக்கேன்.

  #//தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.//

  எவாபரேட்டரில் கொதிக்க காய்ச்சும் போது எல்லாம் ஆவியாகிடும், அப்படியே மிஞ்சி போனால் கொஞ்சம் டிரேஸஸ் தான் இருக்கும், சர்க்கரைக்கு " அலமாரி ஆயுள்" அதிகமய்யா, நம்ம வாங்கும் சர்க்கரை எல்லாமே ஆறு மாசம் அப்புறம் தான் நமக்கே வருது, எப்போதும் நிறைய சர்க்கரை ஸ்டாக் வைப்பார்கள்.

  #//. நீங்கள் இதை உண்டால் ஜீரணிக்கத் தேவையான விட்டமின்கள் மினரல்கள் உங்கள் உடலின் தேவைக்காக வைக்கப் பட்டுள்ள கிடங்கில் இருந்து எடுத்துக் கொள்ளப் படும், உடல் நலம் பாதிக்கும் அது எல்லா உறுப்புகளையும் தாக்கும். எனவே வெள்ளம் நல்லது வெள்ளைச் சீனி விஷம்.//

  இந்த நந்தவனம் நான் இப்படி சொல்லியிருந்தா இன்னேரம் 'வள்ளுனு" பாய்ஞ்சி எனக்கு பயோ கெமிஸ்ட்ரி பாடமே எடுத்திருப்பாரு :-))

  ஓய் எந்த லோகத்தில விட்டமின்களும், மினரல்களும் ஜீரணத்துக்கு பயன்படுது?

  சர்க்கரை/வெல்லம் இரண்டிலும் இருக்கும் சுக்ரோசை செரிக்க ," ஹைட்ராலிசிஸ் செய்தால் போதும்,அது நம்ம் ஜீரண மண்டலத்தில் "சுக்ரேஸ்" என்ற என்சைம் மூலம், ஹைட்ரோ குளீரிக் அமிலம் மூலம் நடக்குது.

  செரிக்க என்சைம் தான் தேவை விட்டமின்களோ,மினரல்களோ அல்ல.

  நாட்டு வெல்லம் பழுப்பா இருக்க காரணம், சர்க்கரை சாறில் வடிக்கட்டாமல் இருக்கும் குளோரோபில், மற்றும் சக்கையின் தூசிகள், சூடுப்படுத்தி காய்ச்சும் போது வறுப்பட்டு பழுப்பு நிறமாவதே, வெள்ளை மாவில் தோசை சுட்டால் சூட்டில் பழுப்பாக தோசை வருவது போல தான்.

  எனவே பழுப்பு சர்க்கரையில் தான் அதிக "கரி" இருக்கு. வேண்டுமானால் ரசாயணங்களின் எச்சம் கம்மியா இருக்கு எனலாம்.

  வெல்லம் தயாரிப்பது எப்படினு கூட சொல்வேன் ,எங்க தாத்தா எல்லாம் கொப்பரை வெல்லம் தயாரிச்சு லோடுகணக்க்கில் வித்தவர், நான் எல்லாம் கருப்பு சாறு சொம்பு கணக்கில் குடிச்சு வளர்ந்தவன் :-))

  ReplyDelete
  Replies
  1. @வவ்வால்

   வெல்லம் கிறிஸ்டல் சர்க்கரை பற்றிய விபரங்களுக்கு நன்றி.

   எந்த ஒரு சுத்திக்கரிக்கப்பட்ட பொருளிலும் ரசாயனங்கள் இருக்கும், எனவே வெள்ளை சர்க்கரையிலும் இருக்கும். அதை சாப்பிடக்கூடாதுனா நீர் ரிபைண்டு எண்னையே பயன்ப்படுத்தக்கூடாது\\ நான் ரிபைண்டு எண்னை எதுவும் பயன்படுத்துவதில்லை.

   \\ஓய் எந்த லோகத்தில விட்டமின்களும், மினரல்களும் ஜீரணத்துக்கு பயன்படுது?\\ அய்யய்யோ, எல்லாம் சொல்ல வந்த பாயிடை விட்டு விட்டு வார்த்தையைப் புடிசிகிட்டு தொங்கரீங்கலேப்பா. அந்த மொலாசஸ் பிரித்த பின்னர் கிடைக்கும் சர்க்கரை உடல் நலத்துக்கு கேடுப்பா...............

   Delete
  2. பாகவதரே,

   என்ன பாயிண்டை சொல்லிட்டீர்,விட்டுடாங்கோ?, தவறான பொருளில் சொல்லி அழுத்தமா சொல்வது போல ஏன செய்யனும்னு தான் குறிப்பிட்டுக்கேட்டேன்.

   அப்புறம் மொலாசஸ் என்பது என்னமோ மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்து போல பிரிச்சிட்டாங்க,அதனால் சர்க்கரை வேஸ்ட்னு சொல்லிக்கிட்டு, மொலாசஸ் என்பது மிக குறைவான சர்க்கரைக்கொண்ட கழிவு கரைசல்,மோந்தாலே வாந்தி வந்திடும்,அதில் சுத்திகரிப்பின் போது சேர்த்த கெமிக்கல், கரும்பு சக்கை கூழ்,கொன்சம் சர்க்கரை(1-2%) இருக்கும்,மொலாசஸ் ஒரு வேஸ்ட் பை பிராடக்ட்.

   இதில் இருந்து சர்க்கரை எடுக்க ஆகும் செலவு அதிகம் ஆகும்னு சாராயம் காய்ச்ச் மலிவு விலைக்கு கொடுத்திடுறாங்க.

   மொத்தமா கரும்பு என்ற புல்லில் அதிக ஊட்டச்சத்தேயில்லை,சர்க்கரையே அதிகம் இருக்கு, அப்படி இருக்கும் போது மொலாசஸில் எல்லாம் பூடுச்சுனா எப்பூடி.

   மொலாசஸ் விட கூடுதல் சர்க்கரை உள்ள அடர்த்தியான சர்க்கரை கூழ்மத்துக்கு பகசினு பேரு அதையே வேஸ்ட்டா தான் விடுறாங்க,பகசிய பாய்லர் எரிபொருளாகவும்,இயற்கை உரமாகவும் பயன்ப்படுத்துவாங்க.

   Delete
  3. \\அப்புறம் மொலாசஸ் என்பது என்னமோ மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்து போல பிரிச்சிட்டாங்க,அதனால் சர்க்கரை வேஸ்ட்னு சொல்லிக்கிட்டு, மொலாசஸ் என்பது மிக குறைவான சர்க்கரைக்கொண்ட கழிவு கரைசல்,மோந்தாலே வாந்தி வந்திடும்,அதில் சுத்திகரிப்பின் போது சேர்த்த கெமிக்கல், கரும்பு சக்கை கூழ்,கொன்சம் சர்க்கரை(1-2%) இருக்கும்,மொலாசஸ் ஒரு வேஸ்ட் பை பிராடக்ட்.\\அதை வேஸ்டுன்னு நாம எப்படி சொல்ல முடியும் வவ்வால்? பார்க்கிறதுக்கு அப்படியும் இப்படியும் இருப்பதால் வேஸ்டா? படைப்பில் அர்த்தமற்று எதுவும் இல்லை. உனக்கு என்னென்ன தேவையோ அது பூரணமா அதில் இருக்கும், அதை பிரிச்சு கெடுத்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

   Delete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete