Friday, May 10, 2013

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

அன்புள்ள மக்கள்ஸ்,

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

 அந்த கூட்டு பெருங்காயம் .....

 இந்த கூட்டு பெருங்காயம் .....

 

அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். 

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?

 

ஒரு வகையான அராபிய பிசின் 60%, 

மைதா 30%, 

பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% 

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ........... 

 

படத்திற்கு நன்றி: ஆயுர்வேத மருத்துவம்


இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...

பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

இதைப் பத்தி ஒரு  பதிவை பார்த்தேன், நான் ரசித்தவை லிஸ்டில் போடலாம்னு நினைச்சேன், பிரச்சினையின் தீவிரம் காரணமாக லிங்கை தனிப் பதிவாக போட முடிவு செய்தேன்.  இதை தெரிந்தவர்கள் எல்லோருடனும் மெயில் மூலமாகவோ, அல்லது வாய்மொழி மூலமாகவோ கூட பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

16 comments :

 1. காயமே.... இது பொய்யடா...........

  என்பது உண்மை ஆகிருச்சே!!!

  ReplyDelete
 2. இதை (பெருங்)"காயமே இது பொய்யடா என" ஏறத்தாழ ஆயிரம் வருடத்திற்கு முன்பே ஒரு சித்தன் பாடிவிட்டு போய்விட்டான் என்பதை அறியும் போது தமிழனின் அறிவை நினைத்து பெருமை அடையாமல் இருக்கமுடியவில்லை.

  ReplyDelete
 3. எதுதான் பெருங்காயம்? விபத்தில் ஏற்படுகிறதே அதுதானா?

  ReplyDelete
 4. எச்சரிக்கை பகிர்வு ..!

  ReplyDelete
 5. பெருங்காயம் எனக்கு பிடிக்கறதே இல்ல... உபயோகப்படுத்தறதும் இல்ல. நீங்க சொன்னது உண்மைதான்.

  ReplyDelete
 6. விழிப்பு பகிர்வு.

  எங்கள் நாட்டு சமையல்களில் பெரும்காயம் சேர்ப்பது குறைவு.

  ReplyDelete
 7. அடக் கொடுமையே! இத்தனை நாளா இது தெரியாம போச்சே! விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 8. இந்த எல் ஜி பெருங்காயம் கட்டியாத்தான் எங்கபாட்டி காலத்தில் கிடைச்சது. சுத்தியலால் தட்டி சின்னக் கட்டிகளாக்கி பாட்டிலில் போட்டு வச்சுக்குவாங்க. அந்தச் சின்னக் கட்டியை ஒரு குட்டிக்கிண்ணத்தில் த்ண்ணீர் உத்தி ஊறவச்சு அடுப்பு மேடையின் ஒருபக்கம் வச்சுட்டு அதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை சாம்பார் ரசத்தில் ஊத்துவதைப் பார்த்துருக்கேன்.

  ReplyDelete
 9. எங்கள் ஈழச் சமையலில் மாதேவி கூறுவது போல் பெரும்காயம் , மிகக் குறைவே.
  என் இளமைக்காலத்திலும் நான் பார்த்தது. துளசி அக்கா கூறுவது போல், அது உடைத்து நொருக்கிக் கரைத்து ரசத்துக்குச் சேர்ப்பார்கள்.
  அந்த போத்தல் திறக்கும் போதெல்லாம் வாசம் குப்பென்று இருக்கும்.
  இப்போ அதை உபயோகிப்பதேயில்லை என்பதால் எப்படி இருக்குமெனவும் தெரியாது.
  இப்படியான போலித் தயாரிப்பை எப்படி அனுமதிக்கிறார்கள்.

  ReplyDelete
 10. கம் அராபிகா என்பது பெருங்காயத்தில் கலக்கப்படும் கலப்பட பொருள்தான். அதாவது சொல்லாமல் கலந்து விற்பது.

  ஆனால் வீட்டு உபயோகத்திற்கு கிடைக்கும் பெருங்காயத்தில் எப்போதும் இது கலந்து விற்க்கப்படும். ஏனெனில் ஏதும் கலக்காத ஒரிஜினல் பெருங்காயம் ரொம்ப stong-ஆன பொருள், இதனால் இதை நேரடியாக உணவில் பயன்படுத்த இயலாது. ஆதலால் மாவு மற்றும் கம் அராபிகா (கட்டியாவதை தடுப்பதற்கு) கலந்துதான் விற்கப்படும். கம் அராபிகா ஒன்றும் விஷம் இல்லை. இதுவும் பெருங்காயத்தை போலவே தாவரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்தான், ஐரோப்பிய ஒன்றியம் போல மேலைநாடுக்கள் அங்கீகரித்த உணவு additive. இதனை 2000 வருடங்களுங்கு முன்பே எகிப்தியர்கள் உணவில் பயன்படுத்தியுள்ளார்கள். இதற்கு பிற பயன்பாடுகள் உண்டு, அதில் ஒன்றுதான் குவாஷ் பெயிண்டிங்களில் பயன்படும் வாட்டர் கலரை பிணைப்பான் (binder); இதை நினைத்து பயப்படவேண்டாம். பெருங்காய எசன்ஸும் பெருங்காய தாவரமான ஃபெருலாவிலிருந்து எடுக்கப்படுவதே! ராவாக பெருங்காயம் அடிக்க விரும்பும் வியாதிஸ்தர்கள் பார்த்து வாங்கனும், சாப்பாட்டு பெருங்காயத்தை வாங்கிவிட்டு குறை சொல்லக்கூடாது. எதுக்கு ரிஸ்க் என யோசிப்பவர்கள் மட்டன்/சிக்கன் குழம்பு, பிரியாணி என மிலிட்டரி ஓட்டல் ஐட்டமாக சாப்பிட்டால் பெருங்காயத்தின் தேவையே இருக்காது! ;)

  தகவல் உதவி:Handbook of Herbs and Spices: Volume 2 By K.V. Peter

  ReplyDelete
  Replies
  1. @ நந்தவனத்தான்

   Thanks for the clarification!!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. நன்றி,தாஸ். நாட்டு வைத்தியர்கள் ஒவராகவே பயம் காட்டுகிறார்கள் போல உள்ளது. ரெண்டு சைடும் நம்ம கவனமாக இருக்கவேண்டும் போல.

   முந்தய 'நன்றி'கள் வேறு ஒருவரின் அக்கவுண்டில் இருந்து வெளியாகிவிட்டது. மன்னிக்கவும்.

   Delete
 11. பெருங்காயம் குழம்பு வைகைகளுக்கு சுவை சேர்க்கும் என்று சொல்கிறார்கள். மேலும் அது போடப்படும் அளவு மிகச் சிறு அளவே. கொஞ்சம் அதிகமானாலும் சாப்பிட முடியாது.
  பயன்படுத்தக் கூடாது என்கிற அளவுக்கு மோசமானதா என்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.
  எதுக்கும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லதுதான் .

  ReplyDelete
 12. I do not even know how I ended up here, but I thought this post was great.

  I don't know who you are but definitely you're going to a famous blogger if you
  are not already ;) Cheers!

  My homepage - erectile dysfunction recovery

  ReplyDelete