Monday, May 6, 2013

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.

வணக்கம் மக்கள்ஸ்!!


எங்க அலுவலகத்தில் ஒரு மலையாளி.  தினமும் காலையில் வீட்டிலேயே சிற்றூண்டியை முடித்துவிடுவான்.  போதுமான அளவுக்கு  உண்டாலும், அலுவலகத்திற்கு வந்து கேண்டீனில் அன்றைக்கு பரோட்டாவும், கொண்டைக்கடலை குருமாவும் இருக்கிறது என்றால் போதும், அவனால் நண்பர்கள் சாப்பிடுவதை  பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, அதையும் ஒரு பிளேட் வாங்கி வெட்டுவான்.  பசிக்காக அல்ல, ருசிக்காக!!  மைதாவில் செய்யப்படும் இந்த பரோட்டாவின் ருசிக்காக  நம்மில் பலர் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.  இது மட்டுமல்ல, பேக்கரியில் தயாராகும் கேக்குகள், ப்ரெட், பிஸ்கட்டுகள் முதலான பல எண்ணற்ற அயிட்டங்களில் மைதாவே முதலிடம் வகிக்கறது.


நாட்டில் அதிக அளவு பரோட்டா சாப்பிடும் கேரளத்தில் நீரிழிவு நோயும் கோரத் தாண்டவமாடுகிறது.  இதை உணர்ந்த அவர்கள் தற்போது மைதா எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.  ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற இடங்களில் மைதா தடை செய்யப் பட்டுள்ளது.கோதுமையை அரைத்து கிடைக்கும் மாவில் செய்யும் சப்பாத்தி உடலுக்கு நல்லது, ஆனால், அதே கோதுமையில் இருந்து கிடைக்கும் மைதாவில் அப்படி என்னதான் பிரச்சினை?  முழு கோதுமையை அரைத்து மாவாக்கும் போது அதன் உமியில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கிறது,  கோதுமையின் உள்ளே இருக்கும் மாவு மேலே உமியில் உள்ள நார்ச்சத்து இரண்டும் நமக்குத் தேவை,  அதுவே  முழுமையான [wholesome food] ஆகும்.  கோதுமை உமி ஜீரணத்துக்கு நல்லது, உடல் எடை உயர அனுமதிக்காது, இன்சுலினை சுரக்க வைத்து  நீரிழிவைத் தடுக்கும், குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வராமல் காக்கும், மிகவும் நல்லது. உமியின் நார்ச்சத்தை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் மாவு மாத்திரம் உண்பது முழுமையாகாது.  அதுமட்டுமல்ல, உமியை நீக்கினாலும் கோதுமை மாவின் நிறம் வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்காது.  அவ்வாறு வெண்மையாக்க, Benzoyl peroxide என்னும் இரசாயனம் பயன்படுத்தப் படுகிறது.  இது தலைமுடிக்கு அடிக்கப் படும் ஹேர் டை யில் கலக்கப் படும் விஷமாகும். அடுத்து மாவை மிருதுவாக்க Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  ஆகியனவற்றைப் பயன்படுத்துகின்றனர்.  இதன் விளைவு என்ன?  கிட்னி அடிவாங்கும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள்  வரும்.  எனவே மைதா, அது சம்பத்தப் பட்ட பொருட்களை அறவே நீக்குவது நலம் முழு கோதுமை உணவுகளைச் சேர்த்துக் கொள்வது சிறந்தது.


மேலும் விபரங்களுக்கு:
தினகரன் செய்தி: பரோட்டாவுக்கு எதிராக பிரச்சாரம். மைதாவுக்கு மயங்காதீர்கள்.
தினகரன் செய்தி: பரோட்டா சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்? 
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? [கழுகு]
WHITE_DEAD_ON_YOUR_PLATE [பவர் பாயின்ட்]


இதற்கடுத்து நாம் தினமும் உண்ணும் அரிசியைப் பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது.  நாம்  நாவை மட்டுமல்ல கண்ணையும் திருப்திப் படுத்த உணவு உன்ன நினைக்கிறோம் விளைவு வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் அரிசி இருக்க வேண்டும் என நினைத்து அதை நன்றாகப் பாலிஷ் செய்து வாங்கி உண்கிறோம்.  உண்மையில் பிரவுன் அரிசி எனப்படும், சிவப்பு நிறத்தில் உள்ள கைக்குத்தல் அரிசியே நமக்கு நல்லது.  தற்போது மெஷீனில் அரைத்தாலும், கைக்குத்தல் அரிசியைப் போலவே சிவப்பரிசி கிடைக்கிறது.  ஆனால் ருசிக்கு மயங்கிய நாம் அதற்க்கு மாறுவதில்லை.  பாலிஷ் செய்த அரிசியும் மேலே சொன்னபடி முழுமையான உணவு இல்லை.  வெள்ளை அரிசியையே  உண்டு பழகிய நமக்கு சிவப்பரிசிக்கு மாறும் போது ஜீரணப் பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால் பழக்கிக் கொள்வது நல்லது.
எல்லாவற்றுக்கும் மேலாக மேற்ச்சொன்ன பிரச்சினைகள் எல்லாம் ஜுஜுபி என்று சொல்லுமளவுக்கு நம் உடல் நலத்தை அழிக்கும் ஒரு அரக்கன் இருக்கிறான்.  நம்மில் பலருக்கும் இவன் அரக்கன் தான் என்றே தெரியாமல் இன்னமும் இருக்கிறோம்.  உங்களால் கற்பனையும் பண்ணிப் பார்க்க முடியாது, அவன் பெயர்:  வெள்ளைச் சர்க்கரை!!  இதை மட்டும் அறவே உங்கள் உணவில் இருந்து நீக்கிவிட்டால் போதும் உங்களுக்கு வயதான காலாத்தில் வரும் பெரும்பாலான வியாதிகளைத் தவிர்க்க முடியும்.  எல்லா வயதினர் ஆரோக்கியத்துக்கும் ஊரு விளைவிக்கும் கொடிய அரக்கன் இவன்.  எப்படி?  அச்சு வெல்லத்தில், சர்க்கரையும் அதை ஜீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சேர்த்து கிடைக்கின்றன.   ஆனால், வெள்ளைச் சர்க்கரையில் சர்க்கரை மட்டுமே உள்ளது, அதைச் சீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சர்க்கரை ஆலையில் மொலாசஸ் ஆகப் பிரிக்கப் பட்டு சாராயம் காய்ச்சப் போய்விடுகிறது. நாம் சர்க்கரையை உண்ணும் பொது அதைச் சீரணிக்க நம் உடலின்  தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் ரிசர்வில் இருந்து சரக்கரையைச் சீரணிக்க செலவிடப் படுகிறது.   இவ்வாறு நாளடைவில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான விட்டமின்களும், மினரல்களும் தொடர்ந்து இழந்த பின்னர் உடல் ஆரோக்கியம் படிப்படியாகச் சரிய ஆரம்பிக்கறது, இது எல்லா உறுப்புகளையும் தாக்குகிறது.  சர்க்கரை வியாதி உட்பட எல்லாம் எளிதில் வந்து விடும்.    சர்க்கரை வியாதிக்கு சர்க்கரை உண்ணுதல் நேரடியாக காரணமாகா விட்டாலும் மறைமுகமாக காரணமாகிறது.

அப்படியென்றால் இனிப்பே இல்லாத வாழ்க்கையா?  அது தான் இல்லை, கரும்பு வெல்லம் பனை வெல்லம், தேன் போன்றவற்றை இஷ்டத்துக்கும் வெட்டலாம். தேநீர் காபி இவற்றில் பால் சேர்க்காமல் டிகாஷனுடன் வெல்லைத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.  ஆரம்பத்தில் இது கஷ்டம் தான், ஆனால் சர்க்கரையை இன்றைக்குத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் வாயைப் பூட்ட வேண்டுமா?   மேலும், சீசனில் வரும், மாம்பழம், சப்போட்டா, பலா, பேரீச்சம் பழம்  போன்றவற்றில் உள்ள இனிப்புக்கு இந்த வெள்ளைச் சர்க்கரை ஈடாகுமா என்ன?  இந்த வெள்ளை சர்க்கரை கருமத்தை நீக்கி விட்டால் மேற்கண்ட உடல் நலத்துக்குத் தேவையான பழங்களை வாழ்நாள் முழுவதும் உண்ணலாம் இல்லாவிட்டால், ஆங்கில மருத்துவன் வருவான் மேற்கண்ட பழங்களை உண்ணாதே என்பான் அந்த கூமுட்டையனுக்குத் தெரியாது இவை நமக்காகவே படைக்கப் பட்டவை என்று, அப்புறம் சர்க்கரை மாத்திரையைத் தின்னச் சொல்லுவான் அதுவும் போதாதுன்னு பென்சிலீனை ஊசியால் ஏற்றுவான், கடைசியாக கை, கால் விரல்களை வெட்டிப் போடுவான், குஷ்ட ரோகியைப் போல ஆக வேண்டும்.  தேவையா இது?!! 


28 comments :

 1. சர்கரையை வெண்மையாகவும் படிகங்களாகவும் மாற்ற சல்ப்பர் சேர்க்கப்படுகிறது சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவ்ரும் சர்க்கரை மூட்டைகளில் sulphitation என்றுதான் எழுதியிருக்கும்.

  modifications of the sequence of addition of lime and SO2 (liming first, sulphiting first, simultaneous addition of lime and gas, fractional procedures)

  ReplyDelete
 2. சர்க்கரை,அரிசி, உப்பு வெள்ளை நிறமே கொஞ்சம் டேஞ்சர்தான். நிச்சயம் குறைக்கனும். எவ்வளோ எச்சரிக்க செஞ்சி என்ன? உடனே மறந்து போயிடுதே!

  ReplyDelete
 3. இவைகள் எல்லாம் நாம் அறிவதோடு வீட்டிலும் சொல்ல வேண்டும் - குழந்தைகளுக்காவது....

  /// அதுவும் போதாதுன்னு இன்சுலினை ஊசியால்...///

  ReplyDelete
 4. அருமையான விழிப்புணர்வு பதிவு! மைதா நாங்கள் பயன்படுத்துவது இல்லை! அரிசி சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயல்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. அப்படியே வெள்ளைத்தோலையும் தவிர்த்தால் இன்னும் நல்லது...!

  ReplyDelete
 6. உண்மைதான் வெள்ளையே வேண்டாமென இருக்க வேண்டும்.இன்னும் நெடுநாள் வாழ வேண்டுமானால்

  ReplyDelete
 7. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


  தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
  அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
  அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு. அவசியமானதும்..

  ReplyDelete
 9. அரிசி உணவை குறைக்கறது ரொம்ப நல்லது. ஆனா நிறைய பேர் சாதம் நிறைய வச்சிகிட்டு காயை கொஞ்சமா சாப்பிடுவாங்க. அரிசி உணவுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம். அரிசி சாதம் நான் கொஞ்சமே கொஞ்சம்தான் சாப்பிடுவேன். கோதுமை சப்பாத்திதான் என் சாய்ஸ்! (அது மட்டும்தான் எனக்கு நல்லா சமைக்கவும் வரும்....?!) சர்க்கரை... யூஸ் பண்ணாமலே பழகிட்டேன். வீட்லயும் மத்தவங்களுக்கும் போடவே மாட்டேன்.
  இளமையிலிருந்தே வெள்ளை பொருட்களை குறைவா உபயோகிச்சா வயசான பின்னாடி நிறைய தொந்தரவை தவிர்க்கலாம்.
  நல்ல பகிர்வு. நன்றி! ஆமா நீங்க குறைவா சாப்பிடறிங்களா..?

  ReplyDelete
  Replies
  1. உஷா,

   வெள்ளைச் சர்க்கரை சேர்த்த எதையும் நான் தொடுவதில்லை, மைதாவும் Total Ban. அரிசி ஒரு வேலை என்றால் சப்பாத்தி கோதுமை ரவை, கேழ்வரகு இப்படி எதாவது ஒன்று ஒருவேளை, காலை இட்லி தோசை, பொங்கல் என ஒரு வேலை டிபன்!!

   Delete
  2. //அரிசி உணவுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம்//
   அரிசி உணவு சாப்பிடாதவங்களிலேயும் எடை போட்டவங்க இருக்கிறாங்களே!

   Delete
  3. பாலிஷ் செய்த அரிசியைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள் என நினைக்கிறேன்.

   Delete
 10. மிகவும் அருமையான பதிவு, வெள்ளை உணவுகள் தீதானவை, அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்படுவதால் தான் பல நோய்களும் வருகின்றன, கூடுமான வரை முழுமையான தானியங்களை உட்கொள்ள வேண்டும், சீனிச் சர்க்கரையை பயன்படுத்துவதை விட கருப்பட்டி, வெல்லம் போன்றவை சிறந்தது, அவற்றிலும் அளவு கூடினால் பிரச்சனையே. அதே போல எண்ணெய்யில் தாளிப்பதை விடவும், வயின் அல்லது வினிகரில் தாளிக்கலாம், பொரியல்களை விட கூட்டு, பச்சைக்காய் கறி சலாடைகள் சிறந்தவை.. ! அரிசி, கோதுமை இரண்டும் கூட முழுத் தானியங்களில் இருப்பின் சிறந்தவை. !

  தெற்காசியர்கள் மத்தியில் அதிகம் இதய நோய், நீரிழிவு நோய், உடற்பருமன் போன்றவற்றுக்கு முக்கியக் காரணமே நமது உணவுப் பழக்க வழக்கங்களில் பகுத்தறிவு குறைந்தமையே.. புரிந்துக் கொண்டு மாற்றிக் கொண்டால் நலம் !

  த,ம.. 7

  ReplyDelete
 11. இந்த வெள்ளை எப்ப வந்ததோ அப்பவே அத்தனை பணக்கார/ஏழை வியாதிகளும் உலகுக்கு அறிமுகமாச்சு...


  ReplyDelete
 12. படிக்கும் போது பயமாகத்தான உள்ளது ஆனால் நடைமுறையில் பின்பற்றுவது கடினம் பதிவு நல்லவிழிப்புணர்வு நன்றி

  ReplyDelete
 13. அவசியமான பதிவு.. நன்றி...

  ReplyDelete
 14. நல்ல கட்டுரை! எனக்கும் கொஞ்சநாளாகவே சிவப்பரிசி உணவுக்கு மாறிவிடலாம் என்ற எண்ணம் உண்டு. அரிசித் தவிட்டில் இருக்கும் ஒமேகா 3 ஆசிட் மிகப்பல நற்பலன்களைக் கொடுக்கவல்லது. சர்க்கரை வியாதிக்கு நன்மருந்து!

  ReplyDelete
  Replies
  1. பெரியவர் விந்தைமனிதன் ராஜாராமன் சார்,
   அந்த படத்தை கொஞ்சம் நீங்கின்னா ரொம்ப உதவியாயிருக்கும்.

   Delete
 15. நீங்க இப்போ அரோக்கியமான பதிவுகளை எழுதி அரோக்கியமான குடிமக்களை நாட்டில் உருவாக்க முயற்ச்சிக்கிறிங்க நல்லது.

  ReplyDelete
  Replies
  1. @ வேகநரி

   நான் பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்ப்படுத்தனும்னோ, சமூகத்தை சீர் திருத்தனும்னோ பதிவுலகிற்கு வரவில்லை. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கும் சில விஷயங்களை பதியவே எழுதுகிறேன்.

   சர்க்கரை விஷத்தை விட மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதை எங்கோ படித்தேன், அன்றைக்கே சர்க்கரை பயன்படுத்துவதை நிறுத்தினேன். என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்ப்படுத்தியிருக்கிறது.

   நாம் எழுதுவத்தால் புரட்சி நடக்கப் போகிறதா? தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர்ந்துவிடப் போகிறதா? இலங்கை பிரச்சினை தீர்ந்துவிடப் போகிறதா? நாம் எழுதாவிட்டால் உலகமே இருண்டு விடுமா? இதெல்லாம் எதுவும் இல்லை. இருப்பினும் இதைப் படித்து அதன் மூலமாக ஒருவர் பயனடைந்தாலும் அதுவே மிகப் பெரிய வெற்றி.

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 16. வணக்கம் மாப்ளே,
  நல்ல பதிவு!! வாழ்க வளமுடன்.

  நன்றி!!!

  ReplyDelete
 17. உணவைப் பற்றிய நல்ல அறிவுறுத்தல் அவுல் நல்லதா ?

  ReplyDelete
  Replies
  1. கார் அரிசி சிவப்பு அவலும் கிடைக்கிறது...........

   Delete
 18. வெள்ளையில் இத்தனை நச்சுத்தன்மையா?
  எங்கள் வீட்டில் நாங்கள் முதல் வேலையாக சர்க்கரையை குறைத்துக் கொண்டு வருகிறோம்.
  நன்றி ஜெயதேவ் சார் ஒரு விழிப்புணர்வு பதிவு பகிர்ந்துகொண்டதற்கு.

  ReplyDelete
 19. You have win...yes from today i am not going to drink / eat sugar added food beverage,
  Thanks

  ReplyDelete