Friday, June 7, 2013

பதில் சொல்ல முடியாத களவாணிப் பயலின் கேள்விகளுக்கு பதில்கள்.

வணக்கம் மக்கள்ஸ்,  
Facebook -ல் நமக்கு நண்பர்கள் அதிகமில்லை, எதையும் கஷ்டப்பட்டு எழுதுவதும் இல்லை.  சிலரது பக்கங்களை படிப்பதுண்டு.  அதில் நம்மை மிகவும் கவர்ந்தவர், களவாணி பய என்ற திருச்சிக்கார நண்பர்.   நீங்கள் கிளென் மெக்ராத், கார்டினி வால்ஸ், மால்கம் மார்ஷல், இயன் பிஷப் போன்றவர்களின் பவுலிங்கை கூட சமாளித்து விடலாம் ஆனால் இவர் போடும் பவுன்சர் கேள்விகளுக்கு பதிலே சொல்ல முடியவில்லை, பெரும்பாலும் கிளீன் போல்டுதான் ஆக வேண்டியிருக்கிறது!!  இவரது முப்பது கேள்விகளை முன்பு இந்த கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்!! என்ற பதிவாக வெளியிட்டோம், தற்போது மேலும் நாற்ப்பது கேள்விகளைக் கேட்டுள்ளார்.  அவை மொத்தமாக பதிவின் இறுதியில் உள்ளன. நீங்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, ஆனால் ஒரு கேள்வியைப் படித்தாலும் எல்லாவற்றையும் படித்து முடித்து விடுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!!
 [4,5,6 or 7 என நான்கு பகுதிகளாக வந்த கேள்விகளில் சிலவற்றுக்கு மட்டும் நாம் பதில் கண்டுபிடித்து சமாளித்துள்ளோம் முடிந்தால் நீங்களும் சிலவற்றுக்கு பதில்களை பின்னூட்டத்தில் போடலாம். 
கீழே உள்ள கேள்விகளின் முதல் நம்பர் 4,5,6 or 7 இவற்றில் எந்தப் பகுதியில் இந்தக் கேள்வி வருகிறது என்பதையும் இரண்டாம் நம்பர் அந்தப் பகுதியில் எத்தனையாவது கேள்வி என்பதயும் குறிக்கிறது!!]
4.3. காருக்கு ஒரு ஸ்டெப்னி இருக்றப்ப, அத்தன சக்கரம் இருக்ற ரயிலுக்கு ஏன் ஒரு ஸ்டெப்னி கூட இல்ல..??
பதில் 1: கார்ல ஏதாவது ஒரு டயர் பஞ்சர் ஆனாலும் கார் ரோட்டில் இருந்து விலகி ஓரத்தில் இருக்கும் மரத்திலோ, கிணற்றிலோ போய் விழுந்துவிடும். ஆனா ரயில் சக்கரத்துக்கு என்ன ஆனாலும் தண்டவாளத்தில்தான் போக முடியும்.  ஆபத்து இல்லை. அதனால ஸ்டெப்னி வைக்கவில்லை. அப்புறமா சக்கரத்தை மாத்திக்கலாம்.
 பதில் 2: காரில்  நாலு சக்கரம் தான் அதுவும் கேப் விட்டு தூரம் தூரமா இருக்கு, பஞ்சரானா சப்போர்ட் இல்லை, ஆனால் ரயிலுக்கு நிறைய சக்கராம், அத்தனை சக்கரமும் ஒரே வரிசையில் ஒன்னு பின்னாடி ஒண்ணா இருக்கு, ஒரு சக்கரம் பஞ்சரானாலும் அதுக்கு முன்னாடி இருக்கும் சக்கரமும், பின்னாடி இருக்கும் சக்கரமும் ஸ்டேஷன் போகும் வரை சமாளித்துக் கொள்ளும். 
4.4 கேமரா லென்ஸ் வட்டமா இருக்கு, ஆனா போட்டோ மட்டும் எப்படி சதுரமா வருது ?
பிலிம் சதுரமா இருக்குமோ....!! டவுட்டு..... 
5.1. ஆயிரம் ஃபிகர அசால்ட்டா சைட் அடிக்கும் போது இருக்குற சந்தோசம், ஒரே ஒருத்திய மட்டும் சின்சியரா லவ் பண்ணும் போது காணாம போயிடுதே அது ஏன் ?
கல்யாணத்த பண்ணுங்க பாஸ்,  பொண்ணுங்களைப் பத்தி பண்ணி வச்ச கற்பனை, கனவுகள் அத்தனையும் மொத்தமா  காணாம போயிடும்.
5. 2. சாமியார் அறைகளில் வீடியோ பிடிக்கும் இந்த செய்தி நிறுவனங்கள் ஏன் கடலில் மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறலை படம் பிடிக்கமுன்வரவில்லை..?
படத்தை புடிச்சது செய்தி நிறுவனம் இல்லை, சிலர் உதவியுடன் ஒரு தனி நபர்பிடித்தார். அதை காசாக்கிக் கொண்டு, படம் பிடித்தவரை கோர்ட்டு கேசுன்னு அலைய விட்டது மட்டுமே செய்தி நிறுவனம்
5.3 டாக்டர்கள் நர்சை காதலித்தால் இப்படிதான் Propose செய்வார்களோ.. I LOVE U SISTER.. ??
மருத்துவம் படிக்க சில பல கோடிகள் வேண்டும் பாஸ், அதுக்கப்புறம் நர்ஸை ஒருத்தர் கரெக்ட் பண்ணப் போனா போட்ட முதலுக்கே மோசமாயிடுமே தலைவா.
5.7 கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவானாம்,அப்போ டெய்லி ஷேவிங்பண்ண கத்தி எடுக்கும் சலூன்காரர்??
இப்போ சலூன்காரர்கள் கத்தியெல்லாம் எடுப்பதில்லையே, பிளேடு மட்டும் தானே பயன்படுத்துகிறார்கள்.  [பிளேடுன்னா இந்த கேள்வி-பதில் மாதிரி இல்ல, நல்ல பிளேடு!!]
6.5 அது எப்படி தான் மழை வர்ற அன்னைக்கு மட்டும்,கதாநாயகி வெள்ளை கலர் டிரஸ் போட்டு வர்றாங்களோ ..??
 ஏன் அருவியில ஆத்துல குளிக்கும் பொது கூட வெள்ளை கலர் டிரஸ் போட்டு வர்றாங்களே !!
6.6 “என் அப்பாவுக்கு நான் எத்தனையாவது மகன்” என்பதை என்னிடமே ஆங்கிலத்தில் எப்படி கேட்டுக்கொள்வது..?
 What is your order in your father's issues !!
6.8.குடிதண்ணீர்க் குழாய்ல பம்ப் போட்டு இழுக்கறவனுங்களை குற்றஞ் சொல்ற அரசு,இன்வர்ட்டர் விஷயத்தில் மௌனித்திருப்பது ஏன்?
இன்வர்டருக்கு கரண்டை யாரும் பம்ப் வச்சு இழுப்பதில்லை தானா வந்து நிறையுது. 
6.10 அது ஏன்யா பெட்ரோல் விலைய நல்லிரவுள்ள உயர்துறாங்க. பகல்ல உயர்துனா உயராதா?
ஒரு நாள் என்பது நள்ளிரவு 12:00 AM மில் இருந்து தான் துவங்குகிறது, ஒரு குறிப்பிட்ட தேதியில் பெட்ரோல் விலை உயர்வு என்றால், அந்த தேதி துவங்கும் நள்ளிரவு 12:00 மணிக்குத்தான் அது அமலுக்கு வரும்.  இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது கூட நள்ளிரவில் 12:00 மணிக்குத்தான்!!
 7. 2.புல்வெளியில் நடக்காதீர்.! தக்காளி போர்டை எப்படி புல்லுக்கு நடுவுல கொண்டு போயி வச்ச.?
முதலில் நிலத்தை புல் செடி எதுவும் இல்லாம கிளீன் பண்ணிட்டு, புல்வெளியில் நடக்காதீர்.! என்ற போர்டை கொண்டு போய் strong-ஆக  நட்டு வச்சிட்டு அதற்க்கப்புறம் வெளியிலேயே நின்னுகிட்டு தண்ணீர் ஊற்றி புல்லை  வளர்ப்பாங்க.
7.4 கி.மு, கி.பி அப்படீங்கறாங்களே , அப்படீன்னா டிசம்பர் 25 ஏண்டா ஆங்கில வருட பிறப்பா வைக்கலை..?
அவங்க வச்சிருப்பாங்க, ஆனா அதுக்கப்புறம் நீங்க சும்மாவா இருப்பீங்க?  ஏண்டா ஜனவரி 1 ஆம் தேதியை முதல் வருசமா வச்சிருக்கலாமே, அதென்னடா 25 ஆம் தேதி, எங்கேயிருந்து இந்த நம்பரை புடிச்சுகிட்டு வந்தீங்கன்னு கேள்வி தான் கேட்டுகிட்டு இருந்திருப்பீங்க .
7. 6. சிப்ஸூக்கு தமிழ்ல என்ன ???
Chip-சில்லு.  Silicon chip என்பதை சிலிகான் சில்லு என்று சுஜாதா எழுதியிருக்கிறாரே படித்ததில்லையா? சிப்ஸூக்கு தமிழ்ல சில்லுகள் ???
 
அனைத்து  கேள்விகளும்:
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-4)
1.ஐம்பது பைசா கிராப் ஷீட்ல அவ்வளவு பொறுமையாக கோடு போட்டது யாரு ..?

2.நமது ராணுவம் பதுங்கி இருந்து தாக்குவது எப்படி என்பதை நமது ட்ராஃபிக் போலீசிடம் ஏன் கற்றுக் கொள்ள கூடாது ..?

3.காருக்கு ஒரு ஸ்டெப்னி இருக்றப்ப, அத்தன சக்கரம் இருக்ற ரயிலுக்கு ஏன் ஒரு ஸ்டெப்னி கூட இல்ல..??

4.கேமரா லென்ஸ் வட்டமா இருக்கு ,ஆனா போட்டோ மட்டும் எப்படி சதுரமா வருது ?

5.நாங்கலாம் கற்பூரம் மாதிரி’ன்னு பெரும பேசுறவன் தலைல தீய வச்சு பாக்கனுன்னு ஆசை. கப்புன்னு புடிக்குதான்னு..யாராவது இருகங்களா...??

6.பொண்ணுங்க கிட்ட பேசும்போது , கண்ணை பார்த்து தான் பேசணுமாமே .? அப்புறம் எதுக்கு ஃபுல் மேக்கப்..?

7.பெண்கள் தங்கள் மொபைலுக்கு தாங்களாகவே ரீ-சார்ஜ் பண்ணுவதை பார்க்கும் தருணங்களில் மனது போவது எனக்கு மட்டும் தானா ..??

8.கோவில் சுவர்களில் கடவுளின் நாமத்தை விட காதலர்களின் ஹார்ட்டீன் தான் நிறையத்தேரிகிறது. இதற்குப் பெயர்தான் தெய்வீகக் காதலோ?

9.5 கிலோ மீட்டரில் இந்திய மீனவனை அடிக்கிறான் கேட்க வக்கில்ல நமக்கெதுக்கு 5000 கிமீ பாய்ந்து தாக்கும் ஏவுகணை?

10.டூத் பேஸ்டில் உப்பு இருக்கான்னு மைக்க தூக்கிட்டு வந்து கேக்குறிங்க?வாங்குறதுக்கு துப்பு இருக்கான்னு யாராவது கேக்குறிங்கள?
 

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-5)

1.ஆயிரம் ஃபிகர அசால்ட்டா சைட் அடிக்கும் போது இருக்குற சந்தோசம், ஒரே ஒருத்திய மட்டும் சின்சியரா லவ் பண்ணும் போது காணாம போயிடுதே அது ஏன் ?

2.சாமியார் அறைகளில் வீடியோ பிடிக்கும் இந்த செய்தி நிறுவனங்கள் ஏன் கடலில் மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறலை படம் பிடிக்கமுன்வரவில்லை..?

3.டாக்டர்கள் நர்சை காதலித்தால் இப்படிதான் Propose செய்வார்களோ.. I LOVE U SISTER.. ??

4.க்ரிக்கெட்ல பவர் ப்ளே பவர் ப்ளேன்றாங்களே அந்த டைம் பவர் ஸ்டார் வந்து ஆடுவாரா?

5.ஆடி மாசம் வந்தா ஆத்தாளுக்கு கூழ் ஊத்தறோம் காசு குடு என வசூலுக்கு வந்துடறாங்க.சொந்த காசை போட்டு கூழ் ஊத்தினா அருள் கிடைக்காதா?

6.எங்கள பாக்கவச்சு இசைசேனல்கள்ல காதல் SMS அனுப்புரீங்களே,பீச்சுல நீங்க டாவுகட்டும்போது நாங்க எட்டிபாத்தா ஒத்துக்குவீங்கலாடா?

7.கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவானாம்,அப்போ டெய்லி ஷேவிங்பண்ண கத்தி எடுக்கும் சலூன்காரர்??

8.ஒவ்வொரு ஆணின் கடனுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் ..இது உண்மையா..? பொய்யா ..?

9.ஒருமாதிரி இருக்குறவைங்களத்தான் மனேஜரா போடுவாய்ங்களா? இல்ல இவிங்க மனேஜரா ஆனதும் ஒரு மாதிரியா ஆயிருவாய்ங்களா?

10.மே மாதத்தில் பிறந்த குழந்தைகள் பள்ளியில் சாக்லேட் தரமுடியாமல் கவலைப்படுவதை கவனித்திருக்கிறீர்களா?
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-6)

1.அம்பது ரூபாய் கொடுத்து ஒரு லிட்டர் கூல் ட்ரிங்க்ஸ்
வாங்கி குடிச்சி ஏதோ ஒரு தனியார் நிறுவனத்துக்கு லாபம் கொடுக்கிறதவிட எழுபது ரூபாய் கொடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கி அரசாங்கத்துக்கு வருமானம் தர்றது தப்பா...?

2.உங்களை அண்ணனாதான் நினைச்சேன்னு சொல்ற பொண்ணுங்கள கேக்கறேன்... வாய தொறந்து அண்ணானு கூப்பிட்டு தொலைய வேண்டியதுதான...?

3.சூப்பிச் சூப்பிக் குடிக்கிறதாலதான் சூப்புன்னு பேரு வந்துச்சோ...??

4.நீங்க ஃபோட்டோ எடுத்ததால ஃபேஸ்புக்ல போடுறீங்களா.. இல்ல ஃபேஸ்புக்ல போடுறதுக்காகவே ஃபோட்டோ எடுக்குறீங்களா..?

5.அது எப்படி தான் மழை வர்ற அன்னைக்கு மட்டும்,கதாநாயகி வெள்ளை கலர் டிரஸ் போட்டு வர்றாங்களோ ..??

6.“என் அப்பாவுக்கு நான் எத்தனையாவது மகன்” என்பதை என்னிடமே ஆங்கிலத்தில் எப்படி கேட்டுக்கொள்வது..?

7.சமீபத்திய படங்கள்ல கரண்ட் கட் ஆகிறமாதிரி காட்சியே வரல. என்னத்த இயல்பா எடுக்குறாங்களோ..??

8.குடிதண்ணீர்க் குழாய்ல பம்ப் போட்டு இழுக்கறவனுங்களை குற்றஞ் சொல்ற அரசு,இன்வர்ட்டர் விஷயத்தில் மௌனித்திருப்பது ஏன்?

9.தரமற்ற ஒரு பொருளை ஏமாற்றி விளம்பரம் செய்தால் தண்டனை உண்டா? சினிமாவுக்கும் இது பொருந்துமா?

10.அது ஏன்யா பெட்ரோல் விலைய நல்லிரவுள்ள உயர்துறாங்க. பகல்ல உயர்துனா உயராதா?
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-7)

1."அப்ப நான் உனக்கு முக்கியமில்ல”..? எனக் கேட்காத காதலியும், “அப்படியில்ல”னு சமாளிக்காத காதலனும் எங்கேனும் இருக்கிறார்களா என்ன ..??

2.புல்வெளியில் நடக்காதீர்.! தக்காளி போர்டை எப்படி புல்லுக்கு நடுவுல கொண்டு போயி வச்ச.?

3.ஆண் கடவுள் மனிதப்பெண்களை திருமணம் செய்தது போல , பெண் கடவுளுக்கு ஆண் மனிதனை திருமணம் செய்ய அனுமதி இல்லையா..?

4.கி.மு, கி.பி அப்படீங்கறாங்களே , அப்படீன்னா டிசம்பர் 25 ஏண்டா ஆங்கில வருட பிறப்பா வைக்கலை..?

5.ஜல்லிக்கட்டு விளையாட்டை கடுமையாக எதிர்க்கிறேன்! வீடு கட்ட உதவும் ஜல்லியில் என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கிறது?

6.சிப்ஸூக்கு தமிழ்ல என்ன ???

7.சாமி படத்தில் நடிக்கும் போது விரதம் இருக்கேன்னு சொல்றாங்களே அப்போ பேய் படத்தில நடிச்சா மாமிசம் , ரத்த சூப்பெல்லாம் குடிப்பாங்களா......?

8.அறிவு கம்மியா இருக்குறவங்கள லூசு அப்படின்னு சொல்லுறோம்,அப்படின்னா அறிவு அதிகமா இருக்குறவங்கள டைட் அப்படின்னு சொல்லலாமா?

9.இந்த அதிர்ச்சி அடையும்போது சொடய்ங் சொடய்ங் னு நாலு ஏங்கிள்ல காட்டுரானுகளே சீரியல்ல.. அந்த மியூசிக்க கண்டுபுடிச்சது யாரு??

10.கோடி கணக்கான பணத்தில் எடுத்து லாபங்களை அள்ளும் படங்களுக்கு எதுக்கு வரி விலக்கு..?

12 comments :

 1. சிரிச்சு.., சிரிச்சு தாங்கலை..., எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எத்தனை சந்தேகங்கள்?!

  ReplyDelete
 2. 'டாடீ.......எனக்கொரு டவுட்டு' பார்த்தும் கேட்டும் செம எரிச்சலாகிப் போயிருந்த சமயத்தில் அதே pattern-ல் வந்தாலும் நல்லதொரு ரிலீஃப் இந்தக் கேள்விகள். ஏதோ அன்றைக்கு பாலசந்தர் படங்களில் வந்த காமெடியை ரசித்தது மாதிரி அறிவு சார்ந்த வேடிக்கைக் கேள்விகளாக இருக்கின்றன. உங்க நண்பர் 'களவாணிப் பயலுக்கு' வாழ்த்துக்கள்.
  கோவில் சுவர்களில் கடவுளின் நாமத்தை விட காதலர்களின் ஹார்ட்டீன்கள் தெரிவது இப்போதுதான். முன்பெல்லாம் பார்த்தால் எம்ஜிஆர் வாழ்க என்று எழுதியிருந்ததுதான் நிறைய இருக்கும்.
  நீங்கள் சில கேள்விகளுக்கு சீரியஸாக அறிவுபூர்வமான பதில்கள் சொல்லியிருப்பதெல்லாம் சரிதான். எதற்காக அத்தனை 'பாஸ்' (செயற்கையாகப்) போட்டிருக்கிறீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. @ Amudhavan

   \\நீங்கள் சில கேள்விகளுக்கு சீரியஸாக அறிவுபூர்வமான பதில்கள் சொல்லியிருப்பதெல்லாம் சரிதான்.\\அய்யய்யோ நான் மொக்கையா இருக்கும்னு நினைசேனே .... அறிவுப் பூர்வமா வந்துடுச்சா......... :((

   \\எதற்காக அத்தனை 'பாஸ்' (செயற்கையாகப்) போட்டிருக்கிறீர்கள்?\\vIJAY tv sUPER SINGER bLOOPERS திரும்பத் திரும்ப பார்த்த விளைவு. அதில் சிவகார்த்திகேயனை சந்தோஷ் அப்படித்தான் கூப்பிடுவார். எனக்கும் அது ஒட்டிகிச்சு முடிஞ்சவரைக்கும் பாஸ் என்ற வார்த்தையை தூக்கிட்டேன், நன்றி.

   Delete
 3. சிரிச்சு சிரிச்சு கண்களில் நீர்.

  "புல்வெளியில் நடக்காதீர்.! தக்காளி போர்டை எப்படி புல்லுக்கு நடுவுல கொண்டு போயி வச்ச.?" முடியல....

  ReplyDelete
 4. ரயில் சக்கரம் பஞ்சரா ஹா...ஹா... எனக்கொரு சந்தேகம். டயரே இல்லாத ரயிலில் நீ டு டயரில் போறயா ? திரீ டயரில் போறயானு கேட்கிறாங்களே ஏன்? Silicon chip என்பதை சிலிகான் சில்லு சரி , சாப்பிடும் சிப்ஸு "நொருக்கு சில்லு"

  ReplyDelete
 5. \\ டயரே இல்லாத ரயிலில் நீ டு டயரில் போறயா ? திரீ டயரில் போறயானு கேட்கிறாங்களே ஏன்? \\ களவாணிப் பய கேள்விகளைப் படிச்சு நீங்களும் தேறிட்டீங்க!!

  ReplyDelete
 6. //5 கிலோ மீட்டரில் இந்திய மீனவனை அடிக்கிறான் கேட்க வக்கில்ல நமக்கெதுக்கு 5000 கிமீ பாய்ந்து தாக்கும் ஏவுகணை?//

  நாங்க சீரியஸான கேள்விக்குத்தான் பதில் சொல்வோம்.

  ReplyDelete
 7. //அறிவு கம்மியா இருக்குறவங்கள லூசு அப்படின்னு சொல்லுறோம்,அப்படின்னா அறிவு அதிகமா இருக்குறவங்கள டைட் அப்படின்னு சொல்லலாமா?// சொல்லலாம்...அப்ப அறிவு அதிகமா இருக்குறவங்க ஏன் லூசா டிரஸ் பன்றாங்க ? லூசா டிரஸ் பன்றவங்க லூசா ? டைட்டா?

  ReplyDelete
 8. விக்ரம்,திரிஷா எல்லாம "சாமி" படத்துல நடிக்க முதல் விரதம் இருந்தாங்களா என்ன.
  தமிழ் சினிமாவில் தரமான படங்களா?வருசத்துக்கு ஒன்று தானே வரும்
  அறிவு அதிகமானவங்க பொதுவா உம் முன்னு டைட்டா இருக்கிறதா வேணும்னா அப்பிடி கூப்புடுங்க.அடி வாங்கினா நாம பொறுப்பில்ல

  ReplyDelete
 9. அப்ப்ப்ப்ப்ப்பா..... எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்ங்ங்ங்க....!!!

  ReplyDelete
 10. ப்ப்ப்ப்ப்ப்பா..... எப்புடி

  ReplyDelete
 11. களவாணி பயலோட சந்தேகம் எல்லாம் நல்லா சிரிக்க் வச்சுது. சில சிந்திக்கவும் வச்சுது.

  ReplyDelete