தொலைக் காட்சி விளம்பரங்கள்: என்னதான்யா சொல்ல வர்றானுங்க?
படத்தில் வலதுபுறம் இருக்கும் பெரும்புள்ளி யார்? ஒரு க்ளு: இவருக்கு சொந்த ஊர் ராமேஸ்வரம்.
அன்புள்ள மக்கள்ஸ்!!
பொருள் தரமானதா இல்லை கேவலமானதா என்பது முக்கியமில்லை, அதை நல்லா விளம்பரப் படுத்தினா போதும் ஓஹோன்னு ஓடும். விளம்பரம் இல்லையென்றால் இன்றைக்கு கிரிக்கெட்டே இல்லை. இவனுங்க ஆடி சம்பாதித்தை விட விளம்பரங்களில் நடித்து சம்பாதித்ததே அதிகம். இது கிரிக்கெட் ஆட்டக் காரர்களுக்கு மட்டுமல்ல சில நடிகை/நடிகர்களுக்கும் பொருந்தும். கிரிக்கெட் வீரர்கள் யாரும் கோலாக்களை குடிப்பதில்லை என்பதும் எல்லா ஷாம்பு, சோப்பு விளம்பரங்களில் வரும் நடிகைகள் தலைக்கு சீயக்காய் பொடியையும், உடலுக்கு கடலைமாவு+பயத்தம் மாவை மட்டுமே பூசி குளிக்கிறார்கள் என்பதும் நம்மை போன்ற பல எமாளிகளுக்குத் தெரியாது!! இப்படியெல்லாம் நம்மை முட்டாள்களாக்கும் தொலைகாட்சி விளம்பரங்களில் இருந்து நமக்கு தெரிய வரும் முக்கியமான விஷயங்கள் சிலவற்றை இன்னைக்கு பார்ப்போம்!! [நன்றி: Facebook].
1. கரீனாவுக்கு பொடுகு, கத்ரினாவுக்கு வறண்ட முடி, ஷில்பாவுக்கு முடி கொட்டுதல், பிரியங்காவுக்கு சிப்-சிப் இதெல்லாம் இவங்களுக்கு இருக்குதுன்னு நமக்கு விளம்பரங்கள் மூலமாத்தானே தெரிஞ்சது!!
3. டூத் பேஸ்ட் எதை எடுத்தாலும், அதேதான் எல்லா பல் டாக்டர்களும், DENTAL ASSOCIATION OF INDIA வும் பரிந்துரைக்கும் பிராண்டாம்.
4. பொண்ணு கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரஸ்ட் காமிக்கலைன்னா நகைக் கடைக்கோ, துணிக்கடைக்கோ கூட்டிட்டுப் போய்க் காண்பிச்சா போதும், உடனே சம்மதிச்சுடுவா பிரச்சினை ஓவர்.
5. கப்சியும், அக்காமாலாவையும் குடித்து வந்தால் போதும் கவலையெல்லாம் பறந்து போகும், சீக்கிரமே சூப்பர்மேன் ஆயிடலாம்.
6. பெரிய பெரிய நடிகர்களாக இருந்தாலும் பாவம் ஏழைப் பட்டவர்கள்,பத்து ரூபாய் கூல் டிரிங்க்ஸ்க்காக உசிரையே பணயம் வைப்பார்கள்.
7. ஷாம்பு விளம்பரத்தில் வரும் SPECIAL EFFECTS எல்லாம் அவதார் படத்தையே தூக்கி சாப்பிட்டு விடும்.
8. அமுல் கம்பனியில், பால் பொருட்கள் உற்பத்தி செய்யிறதுக்கு இருக்கும் எக்ஸ்பர்ட்சை விட கார்ட்டூன் வரையும் திறமைசாலிங்களை அதிகமாஇருப்பாங்க போலிருக்கு.
9. பைக் வாங்குவதே பொண்ணுங்களை பிக் அப் பண்ணத்தான்.
10. எந்த சோப்பை எடுத்துக் கொண்டாலும் அது 99.9% கிருமிகளை அடியோடு ஒழித்துக் கட்டுவதாகவே இருக்கும்.
11. Bacardi என்பது இசை குறுந்தகடுகளை தயார் பண்ணும் கம்பனி என்றும், Directors special/Kingfisher என்பது மினரல் வாட்டர் தயாரிக்கும் கம்பனி என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
13. குழந்தைகள் சேற்றில் விழுந்து புரண்டு வெள்ளை யூனிபார்ம் முழுசும் பழுப்பு கலரில் ஆன பின் வீட்டுக்கு வந்தா அம்மா "கரை நல்லது" ன்னு ரொம்ப சந்தோசப் படுவாங்க.
ஒன்று புரிகிறது... முகநூலில் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்று...! ஹிஹி...\\ சில பக்கங்களைப் படிப்பேன், ஆனால் எதுவும் எழுதுவதில்லை கமண்டு likes மட்டும் போடுவேன்!!
படத்தில் திரு. அ. கலாம்...? (சரியாக தெரியலே... நீங்களே சொல்லிடுங்க...) \\You are absolutely right!!
நல்லா இருக்குதுங்க.
ReplyDeleteஒன்று புரிகிறது... முகநூலில் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்று...! ஹிஹி...
ReplyDeleteபடத்தில் திரு. அ. கலாம்...? (சரியாக தெரியலே... நீங்களே சொல்லிடுங்க...)
ஒன்று புரிகிறது... முகநூலில் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்று...! ஹிஹி...\\ சில பக்கங்களைப் படிப்பேன், ஆனால் எதுவும் எழுதுவதில்லை கமண்டு likes மட்டும் போடுவேன்!!
Deleteபடத்தில் திரு. அ. கலாம்...? (சரியாக தெரியலே... நீங்களே சொல்லிடுங்க...) \\You are absolutely right!!
Supppperrrrrrrrrr...!!!
ReplyDelete@ ஜீவன்சிவம்
Deleteமிக்க நன்றி நண்பரே!!
அத்தனையும் சரிதான்.
ReplyDeleteஅதெல்லாம் விட கொடுமை 50 பைசா ஹால்ஸ் போட்டா பொண்ணு பின்னாடியே போகும்.., சானிட்டிரி நாப்கின் வாங்கி யூஸ் பண்ணா முதல் மார்க் வாங்கும்.., குளிக்காம ஒரு டியோடரண்ட் போட்டுக்கிட்டு வந்தா பொண்ணு பின்னாடியே வந்திடும்
ReplyDelete@ராஜி
Deleteநீங்களும் உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க, நன்றி ராஜி!!
அருமையான ஆக்கம் சகோ. என் மனதில் உள்ளதும் இதுவே. இன்னும் காம்பிளான் மற்றும் பூஸ்டை விட்டு வீட்டீர்களே.நட்புடன்
ReplyDeleteவிளம்பரங்களை சிறப்பாக நையாண்டி செய்துள்ளார்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete100% ன்னு போட்டால் பீஸை புடுங்கிருவானுங்களே..!!
ReplyDelete