Saturday, December 15, 2012

உலகின் மிகப் பெரிய பூ...... ஏழரை அடி உயரம்!!


பூக்களிலே மிகவும் உயரமான பூ எது தெரியுமா?

டைட்டன் ஆரம் எனப்படும் [Titan arum] கீழே படத்தில் உள்ள பூ தான்!

இதன் தாவரவியல் பெயர்: Amorphophallus titanum

இது சுமத்ரா தீவுகளைத் தாயகமாகக் கொண்டது.

சுவிட்சர்லாந்தின் பேசல் தாவரவியல் பூங்காவில் நவம்பர்  19, 2012 தேதி இது பூத்துள்ளது.  ஏழரை அடி உயரம் வளர்ந்துள்ளது, இவை பத்தடி உயரம் வரை வளரக் கூடியவை.  
"பூதான் பெரிசா இருக்கே, நம்ம ஊரு மல்லியப்பூ மாதிரி கம கம.... என்று ஆளையே தூக்கும்டா..." என்று நினைச்சுடாதீங்க, இது அழுகிய பிண நாத்தம் அடிக்குமாம்!!  [யாருக்காவது தெரியுமா அந்த நாற்றம் எப்படி இருக்கும்னு...?!!] இது என்ன நாறினாலும் பரவாயில்லை, பார்த்தே தீருவோம்னு தூரத் தொலையிலிருந்து மக்காஸ் கூட்டம் கூட்டமாய் மூக்கை பிடித்துக் கொண்டே வந்து பாத்துட்டு போறாங்களாம்.
இள மொட்டாயிருந்து.....


பூவாகி ..........



மலர்ந்து விரிய 6 வருடங்கள் ஆனாலும் இரண்டே நாளில் வாடிப் போயிடுமாம்.


மலரும் தினத்திற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு பத்து செ.மீ. வரை வளருமாம் [1 மி.மீ வளர எட்டு நிமிடங்கள்], அதை ஆன்லைனில்  இந்தம்மா கண்காணிப்பாங்களாம் !!   நீங்க மூக்கை பிடிக்காமல் ஆன்லைனிலேயே பார்க்கலாமாம்!!

அதுசரி, எதுக்கு இது இப்படி நாரனும்...  சீ.... வாசனை அடிக்கணும்?  வேறெதுக்கு மகரந்தச் சேர்க்கை நடக்க விட்டில் பூச்சிகள், மற்றும் பல பூச்சியினங்களை ஈர்க்கத்தானாம்........ நடுவில் உள்ள தண்டு ஒரே பூ இல்லை, இது தான் பூங்கொத்து.  இதில் நூற்றுக் கணக்கில் பூக்கள் உள்ளன, அவை காய்களாக மாறும்.










மகரந்தச் சேர்க்கை அடைஞ்சதுக்கப்புறம் என்ன நடக்கும்?  காயாகி பழம் பழுக்கும்.  [ஐயைய..... அத எவன் தின்பான்... உவ்வே.......] இதிலிருந்து சில மாதங்களுக்குப் பின்னர் நன்கு முதிர்ந்த விதைகள் கிடைக்குமாம்.  அதை போட்டா செடியா முளைச்சு  வரும் அதை கண்ணாடி அறையில் [Green House]  வச்சு வளர்ப்பாங்களாம், ஆறு வருஷம் கழிச்சு பூவாகுமாம் திரும்பவும் மூக்கைப் பிடித்துக் கொண்டே பார்க்க வேண்டுமாம்...  ஐயோ தாங்கலைடா சாமி..................




9 comments:

  1. ஐயையோ, என் காலம் முடியறதுக்குள்ளே பார்த்துடணுமே. எவ்வளவு செலவாகுமுங்க? காலைல போயிட்டு பொளுது சாயரதுக்குள்ள வூட்டுக்கு வந்துடலாமுங்களா?

    ReplyDelete
  2. அய்யய்யோ வேண்டாம் சார், ரொம்ப நாருமாம், இதை இப்போ இணையத்திலேயே நேரடியா போடுறாங்களாம் பார்த்திடலாம், அங்கேயெல்லாம் போகாதீங்க சார்!!

    ReplyDelete
  3. இந்தப் பூவைப்பற்றி முன்பு அறிந்திருக்கின்றேன்.

    பூக்கள் காயாகி பழுத்திருக்கும் படம் இப்போதுதான் பார்க்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி மாதேவி!!

      Delete
  4. //பூதான் பெரிசா இருக்கே, நம்ம ஊரு மல்லியப்பூ மாதிரி கம கம.... என்று ஆளையே தூக்கும்டா என்று நினைச்சுடாதீங்க, இது அழுகிய பிண நாத்தம் அடிக்குமாம்!!//

    வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோடக்கூடாது என்ற உண்மையை உணர்த்துகிறதோ!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா .......... இதிலும் ஒரு வாழ்க்கைத் தத்துவம் ஒளிஞ்சிருக்குன்னு இதை எழுதினப்ப எனக்கு சத்தியமா தெரியாது, அதை நீங்க கண்டுபுடிச்சு சொன்னதுக்கு நன்றி விஜயகுமார்!!

      Delete
  5. மலரும் தினத்திற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு பத்து செ.மீ. வரை வளருமாம் [1 மி.மீ வளர எட்டு நிமிடங்கள்], அதை ஆன்லைனில் இந்தம்மா கண்காணிப்பாங்களாம் !! நீங்க மூக்கை பிடிக்காமல் ஆன்லைனிலேயே பார்க்கலாமாம்!!..

    பூ மலருதல் மரம் துளிர்த்தல் போன்றவற்றை ஆரம்பத்தில் இருந்து வீடியோவாக டிஸ்கவரியில் பார்த்திருக்கின்றேன்...மிகவும் தரமாக இருக்கும்...இந்தப்பூ நாற்றமடிக்கும் என்பது நான் எதிர்பார்க்காதது இதைப்பற்றிக்கேள்விப்பட்டதும் ஒரு பூவைக்கொண்டுவந்து வைத்தால் வீட்டில் ரூம் ஸ்பிரே தேவையில்லை என்று நினைத்திருந்தேன் ஆப்பாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. \\இதைப்பற்றிக்கேள்விப்பட்டதும் ஒரு பூவைக்கொண்டுவந்து வைத்தால் வீட்டில் ரூம் ஸ்பிரே தேவையில்லை என்று நினைத்திருந்தேன் ஆப்பாகிவிட்டது.\\ ரசித்தேன்!!

      Delete