Tuesday, December 18, 2012

எதெல்லாம் இருந்தா சுவர்க்கம், எதெல்லாம் சேர்ந்தா நரகம்?

இது இணையத்தில் பிரபலமான ஜோக்!!  [ஒரு வேலை உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா என்னை திட்டக் கூடாதுன்னு ஒரு எஸ்கேப் ரூட்டுதான்!!  ஹி ....ஹி ....ஹி ....]  சமீபத்தில நான் ஒரு conference போயிருந்தப்போ சொல்லி கேட்டது.  [நீயெல்லாம் conference போயி.....  விளங்கிடும்...]

உலகில் சில விஷயங்கள் ஒண்ணா சேர்ந்தா அது சுவர்க்கம், அது என்னென்னன்னு பார்ப்போம்.  இது நான் சொல்லவில்லை, உலகினர் நோக்கு [view] அது!!   கீழ்க் கண்ட நாலும் இருந்தா அது சுவர்க்கமாம். [அது எப்படி ஒன்னாகும்னு அவங்க சொல்லலை, அதனால நீங்களும் கேட்கபடாது.]

1. அமேரிக்கா காரன் சம்பளம்

2. பிரிட்டிஷ் காரன் வீடு

3. சைனாக்காரன் உணவு [அய்யய்யோ பாம்புக்கால் பாயாவெல்லாம் போடுவானேடா........]

4. இந்திய பெண்மணி, மனைவியாக......... [முதலில் இந்தப் படத்தைத் தான் போட்டேன், ஏன் பத்மினி அல்லது கே.ஆர். விஜயா படம் போடவில்லை என்று செங்கோவி ஆட்சேபித்தார்.  அதெல்லாம் இணையத்திலே பார்த்துக் கொள்ளவும்னு சொல்லிட்டேன்!!]
அதையடுத்து உஷா வந்து, சினேகாவுக்கு என்ன குறைச்சல் என்றதால், இந்திய மனைவிக்கு இந்தப் படம்!!  திருப்தி தானே உஷா........!!

சரி இப்போ நரகம்னா என்னன்னு பார்த்திடுவோமா?


1. சைனா வீடு 

2. பிரிட்டிஷ் சாப்பாடு.

3.  அமெரிக்க மனைவி 

கடைசியா .........
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
:

4.  இந்தியாவில் வழக்கப் படும் சம்பளம்!!
இது உலக மக்களின் கருத்து.  நம்மூரு சம்பளத்தை கேவலபடுத்திபுட்டாய்ங்கன்னு வருத்தப் பட வேண்டாம், நம்மூரு பெண்களை அவங்க எவ்வளவு உயர்வா நினைக்கிறாங்கன்னு பாருங்க.  என்ன அப்படி சிறப்பு?  கணவனிடத்தில் அவர்கள் காட்டும் dedication.  அதையும் மேற்க்கத்திய நாகரீகத்தை கொண்டாந்து குட்டிச் சுவராக்கிகிட்டு இருக்கோம்.  அதை மாத்தி குட்டி சுவர்க்கமாக்கணும்னா, மக்காஸ்!! அது உங்க கையில் தான் இருக்கு!!  Say no to westernization of our culture!!

13 comments :

 1. ஹா ஹா ஹா !!! நல்ல பார்வை, எனக்கென்னவோ நமது பெண்களின் இடம் காலபோக்கில் மாறிவிடும் என்று நினைக்கத்தோன்றுகிறது. சில விஷயங்கள்ல அப்படிதான் தெரிகிறது. நீங்க கடைசியா சொன்ன பாயிண்ட் கூட அதுதான்.

  கலக்கல் நண்பா..

  ReplyDelete
 2. இப்படி ஸ்ரீதேவி ஸ்டில்லெல்லாம் போட்டா, வயசு தெரிஞ்சிடும் வாத்யாரே!!

  ReplyDelete
  Replies
  1. @ செங்கோவி
   பத்த வச்சிட்டியே பரட்டை!! அதுசரி, குடும்பப் பாங்கா இருக்கிற மாதிரி நமீதா போட்டோ வேணும்னா அதுக்கு நான் எங்க போறது!! அண்ணன் நீங்க பத்மினி, கே.ஆர்.விஜயான்னு போட்டு பழக்கிட்டீங்க, உங்க தம்பி நான் அதே வழியில்தானே போவேன்!! ரஜினி, ஸ்ரீதேவி இவங்கயெல்லாம் எவர்கிரீன் ஸ்டார்ஸ், எல்லாத்தையும் எப்பவும் ஈர்ப்பாங்க.

   Delete
 3. சுவாரஸ்யம். ஆமா சினேகா ஹோம்லி பெண்ணா தெரியலையா?

  ReplyDelete
  Replies
  1. உஷா, இப்படி என்னை கொக்கி போட்டு பிடிச்சிட்டீங்களே!! வக்கீலா ஆவருதுக்கான அத்தனை தகுதியும் உங்ககிட்ட இருக்கு, இதுவரை ஆகலைன்னா இப்போ மாரிக்குங்க!!

   Delete
  2. உஷா நீங்க சொன்ன மாதிரியே போட்டுட்டேன், இந்தப் படத்தை முன்னணி பதிவரின் தளத்தில் இருந்து இப்பத்தான் சுடச் சுட சுட்டேன்!! இப்ப மகிழ்ச்சிதானே!!

   Delete
 4. சைனாக்காரன் உணவு பிரமிப்பு..

  ReplyDelete
 5. சொர்க்கத்திலே ஒண்ணாவது நம்ம கிட்ட இருக்கே!மகிழ்ச்சிதான்.

  ReplyDelete
 6. சொர்க்கம் நரகம் படங்கள் சூப்பர். ஜெயதேவ்.ரூம் போட்டு யோசிப்பாங்களோ.

  ReplyDelete